அசுரன் 119

அசுரன் 119

 

இடுப்பில் டவலுடன்.. இருவருக்கும் சூடாய் பாதாம் பால் கலந்து எடுத்து வந்தான்… 

 

மார்பு வரை வெள்ளை போர்வையுடன் எழுந்து அமர்ந்தவள்…  அவன் கொடுத்த பாலை கையில் வாங்கி… 

அவனைப் பார்த்தபடி அதை குடிக்க…

 

என்னடி… புதுசா பாக்குற மாதிரி பாக்குற…

 

பர்த்டே பார்ட்டிக்கு போகணும் சொன்னீங்க…

 

மெலிதாய் சிரித்தவன்… ரொம்ப சீக்கிரம் கேட்ட… என்றான்.

 

நீங்க எங்க என்ன கேக்க வீட்டீங்க…

 

என் புள்ளைக்கு பிறந்தநாள் கொண்டாடமா நா எங்கையும் போக போறது இல்ல.. என்றான்… குறும்பாய்..

 

செல்ல முறைப்பு முறைத்தவளின் 

குடித்து முடித்த காலி கோப்பையை வாங்கியவன்… ஓரம் வைத்து விட்டு…

போர்வைக்குள் நுழைந்து பூனை போல் பதுங்கி வந்து அவளை முதுகு புறம் இருந்து அணைத்தான்… 

 

கைகளுக்கு எடுப்பாய் கிடைத்த பொருளை வைத்து விளையாட… 

 

கைகளில் பட் என்று ஒரு அடி போட்டு… மச்… சும்மா இருங்க… என்று சிணுங்கினாள்.

 

காது மடலில் இதழால் வருடியபடி ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கா… என்று வினவினான்.

 

விவரமான கள்ளியோ… இருந்தது, இப்போ இல்ல….. என்றாள்…

 

அப்போ ஒன்ஸ்மோர் போலாமா டி…  திஸ் டைம் போர் மீ..   என்றான் பின் கழுத்தில் புதைந்த படி…

 

விழி விரித்தவள்… அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. தூக்கம் வருது என்றாள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசினாள்…

 

ஐயோ… சுத்தமா பத்தல டி… ப்ளீஸ் டி.. செல்ல குட்டி.. நீ இந்த பக்கம் திரும்பு நா என் பாப்ஸ் கிட்ட பேசிக்கிறேன்.. அவங்க தான் என்கிட்டே உண்மைய சொல்லுவாங்க… என்று அவன் அப்பாவி போல் இறங்கி வந்து கெஞ்ச…

 

வெட்க சிரிப்பிலே சம்மதம் தந்தாள்…

 

ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு… அவன் தேவைக்கு, அவளுக்கு கண்டிஷன் அஹம்…

 

என்ன… என்பதை போல் பார்க்க..

 

என்ன ஆனாலும் கண்ண மட்டும் மூட கூடாது… என்னய பார்த்துகிட்டே இருக்கணும்… என்றான்..

 

இதெல்லாம் ஒரு கண்டிஷனா என்று நினைத்தவளுக்கு… அது எவ்வளவு பெரிய சவால் என்று புரிய வைத்தான் கள்வன்… கண்கள் கிறங்கும் நிலையிலும்..  கன்னம் தட்டி  “என்ன பாருடி” என்று தெளிய வைத்தான். முதல் தடவை கையாண்ட மென்மை எங்கே போனது என்று தெரியவில்லை… அவள் முட்டைக்கண்ணை விரித்து மலங்க மலங்க விழிக்க… அதை பார்த்து அவனின் வேகம் கூடி கொண்டே சென்றது… முத்தத்தில் ஆரம்பித்து முக்தி பெறும் வரை அனைத்தும் வன்மைதான்… 

 

அவனின் கூர் மூக்கை பார்த்தே… காதல் மயக்கம் அதிகரித்தது பெண் அவளுக்கு…

 

வியர்த்து விறுவிறுத்து … முகம் சிவந்து, தன் மேல் ஊசல் ஆடும் ஆருயிர் கணவனை பார்க்கையிலே… நாணம் தான் வராமல் இருக்குமா… நாணம் கொண்டு பார்வையை கீழே இறக்க…

 

என்ன பாருடி சிட்டு… என்று முன் பல்லை கடித்துக் கொண்டு, இயங்கிக் கொண்டே அவன் அழுத்தமாய்  கூற… 

 

ஐயோ என்று ஆனது பெண்ணுக்கு… 

தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறது இதுதானோ… இன்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மலர்.

 

தன்னவனின் மென்மையை விட… வன்மையிலேயே அதிகம் அடைக்கலம் ஆனாள் மடந்தை. அந்த ரகசியத்தை அவனும் கண்டு கொண்டான்… அவன் முகத்திலும் பரவசம்…

 

அவள் மெய்யில் முதலில் எழுதிய மெல்லினம் அவளுக்காக… 

இரண்டாவது எழுதப்பட்ட வல்லினம் அவனுக்காக…

மூன்றாவதாக எழுதி கொண்டிருக்கும்  இடையினம் இருவருக்கும் இலவச இணைப்பாக…

 

மூன்று வகையும் முப்பாலில் கலந்து…  பாதாம் பாலுடன் இரவு முழுவதும் அவள் தேகத்தில் கவிதை எழுதிய பின்னும்  தீர்ந்த பாடு இல்லை தேவனின் ஆண்மை எழுச்சி… காதல் மனைவியின் கண்ணில் களைப்பை கண்ட பின்பு… தொந்தரவு தர மனமில்லாமல்… மார்பில் இட்டு தட்டி கொடுத்து உறங்க வைத்தான்…

 

***********

 

இவ்வளவு நாள்… விக்ரமின் வீட்டில் இருந்த அருண்..  அவ்வப்போது ரித்துவை பார்ப்பதற்கு மட்டும் தன் வீட்டிற்கு சென்று வந்தான்… பெரும்பாலும் ரதி இல்லாத நேரத்தை தேர்ந்தெடுத்ததால் ரதியும் அருணும் சந்திக்க வாய்ப்பு கிட்ட வில்லை…

 

ஆனால் இன்று இருவரும் சந்திக்க நேரிட்டது…

 

அவளைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற அருணை சீண்டி பார்க்க நினைத்தாள் ரதி.

 

என்ன அருண்… ரொம்ப குஷியா இருக்கீங்க போல… முன்னாள் பொண்டாட்டியோட வீட்டுக்கு போயிட்டு வந்து இருக்கீங்க… நல்ல கவனிப்பு போல… எப்படி இருக்காங்க உங்களுடைய எக்ஸ் ஒய்ஃப்… என்றாள் நக்கல் கலந்த  குரோதத்துடன்…

 

பைத்தியம் ஏதோ உளறுகிறது என்று நினைத்து கடக்க முற்பட்டவனை…

 

நீங்க மூணு பேரும் ஒரே வீட்ல இருந்தீங்களா..  இல்ல ஒரே ரூம்ல இருந்தீங்களா… என்று கொச்சையாய் வினாவ…

 

கோபம் மண்டைக்கு ஏறியது இருப்பினும் ஒரு நிமிடம் நின்று அவளை அழுத்தமாய் பார்த்தவன்…

 

என் நண்பனோட வீட்டுக்கு போயிட்டு வந்தேன் அவனும் அவனோட பொண்டாட்டியும் என்ன ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டாங்க…  அப்புறம் என்ன கேட்ட… என்று நெற்றியை நீவியவன்… ரதியின் கன்னத்திலேயே “பொளீர்” என்று ஒரு அறை வைத்தான்..

 

கன்னத்தில் கை வைத்து… ஆவென்று.. கோபத்தில் சிவந்த முகத்துடன் எதிர்த்துப் முறைத்தாள் ரதி. யூ… யூ… இடியட்… *&%@# சில கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டாள்… என்னைய வா அடிக்கிற… உன்னை என்ன செய்கிறேன் என்று பாரு என்று… அவள் அடிக்க கை ஓங்க… 

 

தன் இரும்பு கையால் பிடித்து நிறுத்தினான் அருண். அவளை ஏளனமாய் பார்த்துக் கொண்டே… ஒரு பொண்ணு எந்த சூழ்நிலையிலயும் கை நீட்டி அடிக்க கூடாதுன்னு இத்தனை நாள் பேசாம இருந்தேன்… ஆனால் இது என் பிரண்டோட பொண்டாட்டிய தப்பா பேசினதுக்கு… நானா இருக்கறதுனால ஒரு அடியோட விட்டுட்டு போறேன்… ஆதியா இருந்தா…. உன் நாக்கை வெட்டிட்டு தான் போவான்.. பார்ட்டில மலர் கிட்ட வம்பு பண்ணா உன் பிரண்ட்ஸோட விரல் எங்கன்னு கேட்டியா… கேட்கலைன்னா கேட்டு தெரிஞ்சுட்டு அதுக்கப்புறம் வந்து பேசு… என்று எச்சரித்து விட்டு சென்றான்…

 

அவன் பின்னாடியே கால் அதிர டங் டங் என்று நடந்து வந்தவள்…

“என்ன அருண் ஓவர் திமிரா நடந்துக்கிற… உன்னோட பிசினஸ் ஷேர் என்கிட்ட இருக்கின்றத மறந்துடாத..”  என்று அருணை மடக்க பார்க்க…

 

என்னோட ஷேர் ஆதிக்கு எழுதி வச்சுட்டேன்… நீ எதனாலும் அவன் கிட்ட டீல் பண்ணிக்கோ… எனக்கும் அந்த பிசினஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..  என்று அசால்ட்டாய் கூறிவிட்டான்…

 

அந்த வில்லங்கம் புடிச்சவன் கிட்ட ஏன்டா என்னை மாட்டி விட்ட எனும்படி பார்த்து வைத்தாள் ரதி.

 

அப்போ..  உனக்கு ம்யூச்சுவல் டிவோர்ஸ் வேணாமா… என்று அடுத்த ஆயுதத்தை கையில் எடுக்க…

 

என்ன கேட்காம கர்ப்பப்பை ஆபரேஷன் பண்ணது… உனக்கு அடுத்த குழந்தை பெத்துக்கறதுக்கு தகுதி இல்ல அப்படிங்கிற ஒரே காரணத்தை வச்சி, மியூச்சுவல் டிவோர்ஸ் வாங்க முடியும்னு வக்கீல் சொல்லிட்டார்… சோ நோ இஸ்யூஸ்… என்றான் மிக நிதானமாய்…

 

அப்போ ரித்து மேல உனக்கு எந்த பாசமும் இல்லை… நான் தூக்கிட்டு போனா உனக்கு ஓகே அப்படித்தானே… 

 

அவனுக்காக தான் இத்தனை நாளும் உன்னை பொறுத்துக்கிட்டேன் ரதி… இனிமேலும் என்னால முடியாது… ரித்து விஷயத்துல கோர்ட் என்ன சொல்லுதோ அதை நான் கேட்க மனசளவுல நான் ரெடி ஆயிட்டேன்… என்றான் அருண்.

 

“நீ என்னை இன்சல்ட் பண்ற… என்ன ஆனாலும் உனக்கு டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் அருண்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே… ரதியின் தந்தையிடம் இருந்து ரதிக்கு அழைப்பு வந்தது.

 

டாட்… சொல்லுங்க… 

 

ரதி நீ அருண் ஓட டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டு உடனே கிளம்பி நம்ம வீட்டுக்கு வா… என்று கட்டளை இட்டார்…

 

Why? டாட்… எனிதிங் சீரியஸ்…

 

Yea… நம்ம ஸ்டீல் ஃபேக்டரியில் நடந்த ஆக்சிடென்ட்ல பைவ் லேபர்ஸ் இறந்தாங்கல்ல… அதுக்கான எவிடென்ஸ் இப்போ ஆதி கிட்ட இருக்கு… என்று சொல்லிவிட்டு அமைதியாய் இருக்க புரிந்து கொண்டாள் ரதி. 

 

Ok… Dad… ஐ வில் come.. என்று கூறி போனை அணைத்தாள்…

 

அருணை பார்த்து எதுவும் பேசாமல் டிராவில் இருந்த விவாகரத்து பத்திரத்தை எடுத்து கையெழுத்து இட்டு விட்டு அருணின் முன் நீட்டியவள்… ஆதி கூட சேர்ந்து  பிளான் பண்ணி எக்ஸிகியூட் பண்றீங்க… குட்… என்று மெச்சிதலாய் தலையத்தவள்… 

“பட் வாழ்க்கையில என்ன மாதிரி ஒரு பொண்ண இழந்ததற்கு நீ ரொம்ப வருத்தப்படுவ அருண் “

என்று மனமார சாபம் கொடுத்து விட்டு… ( தலை போகும் பிரச்சினையிலும் இந்த வார்த்தையை கேட்டவுடன் அருணுக்கு சிரிப்பு முட்டி கொண்டு வந்தது, கஷ்டப்பட்டு அடக்கி கொண்டான் )

தன் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானாள் ரதி.

 

அவளின் மனநிலை அறிய தயங்கியபடியே ” ரித்து ” என்றான் அருண்.

 

அருணை திரும்பி ஒரு நிமிடம் பார்த்தவள்… நான் எங்க இருந்தாலும் அவ என்னோட பையன் தான் அதை யாராலயும் மாற்ற முடியாது… சோ… அவன் உன்கிட்டையே வளரட்டும்… எனக்கு நோ இஸ்யூஸ்… ஐ வில் டேக் கேர் ஆஃப்டர் 18… என்று தனது பொறுப்பை உடனே உதறிவிட்டு செல்ல ஆயத்தமானாள்…

 

டைவர்ஸ் பேப்பரையும் கையில் கொடுத்துவிட்டு ரித்துவையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு ஒரேடியாக கிளம்பி விட்டாள் ரதி…

 

திரும்பி செல்லும் அவளையே கையை கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தான் அருண்..

 

அவள் காரில் ஏறி அந்த கார் வீட்டு வாசலை மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன்… அவள் மறைந்த பின்பு…

 

இரு பக்க இடுப்பிலும் கை ஊன்றி “ஊப்ப்” என்று நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டான். கண்கள் மெல்ல கலங்கவே செய்தது சந்தோஷத்தில்…. ஏதோ பெரிய தண்டனையிலிருந்து தப்பித்தது போல் ஒரு நிம்மதி… ஓடி சென்று மகனை தூக்கி முத்தமிட்டவன்… மனதளவில் இருந்த மகிழ்ச்சியை நடு ரோட்டில் டப்பாங்குத்து ஆடி தீர்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது…

 

தன் அனைத்து பிரச்சனைகளையும், உட்கார்ந்த இடத்திலிருந்து தீர்த்து வைத்த, தன் நண்பனை கட்டி அணைத்து முத்தமிட தோன்றியது…

 

தேங்க்ஸ் டா ஆதி… உம்மா… இன்று இதழ் குறித்து காற்றில் பறக்கும் முத்தம் ஒன்றை தெறிக்க விட்டான்  அருண்.

 

நடந்த நிகழ்வுகளை நண்பனிடம் பகிர வேண்டும் என்று நினைத்து ஆதிக்கு போன் அடிக்க… 

 

ஆதியோ போனை எடுக்கவில்லை… உடனடியாக தந்தை ஆகும் முயற்சியாய்…  தலைவன் அங்கு, மலரின் தேகத்தில் படம் வரைந்து பாகம் குறித்து கொண்டு இருந்தான் மும்பரமாய்…

 

நடந்த விஷயத்தை விக்ரமிடம் தெரிவித்துவிட்டு.. மகனை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தான் அருண்…

 

ரித்து குட்டி… நம்மள யாரும் பிரிக்க முடியாது… இனி நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்… என்று அவனை தூக்கி விட்டத்தை பார்த்தபடி சுற்றிக்கொண்டு இருக்க… குழந்தையோ தந்தையின் பாசத்தில் கிக்கி கிக்கி என்று சிரித்துக் கொண்டிருந்தது…

 

அவர்களின் மகிழ்வுக்கு தடையாய், சரியாய் அழைத்தது அருணின் தொலைபேசி…

 

அழைப்பை எடுத்து பேசியவனின் மனம்… இடி இறங்கியது போல் ஆனது.. இலகுவாய் இருந்த மனம் நொடியில் இடிந்து உடைந்து… நொறுங்கிப் போனது… கண்கள் சிவந்து… கண்ணீருடன் அலைபேசியை தவற விட்டு இருந்தான் அருண்.

 

மெல்ல அவனது தலை ரித்துவை நோக்கி திரும்ப… அவனோ தந்தையின் நிலை புரியாமல் வாய்விட்டு சிரித்துக் கொண்டு இருந்தான்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top