அசுரன் 121
அருண் விக்ரமும் நேராக வந்த இடம் ஆதியின் வீடு…
அங்கே தலைவன்… மிக முக்கியமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்… நண்பர்கள் இருவரும் அவன் செய்யும் வேலையை தான் வாயில் கை வைத்து ஆவென்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள்…
அவர்களே வியக்கும் அளவுக்கு என்ன பண்ணினானாம்?…
சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் 😆 ( நீங்க வேற ஏதும் எதிர்பார்த்தீர்களா என்ன)
அதில் சோக கீதம் வேறு…
குயில் பிடிச்சு கூண்டில் அடைச்சு பாட சொல்லுகிற உலகம்…
அருணை ஹாலில் சென்று அயர்வாய் உட்கார… கிச்சனில் வந்து பார்த்த விக்ரம்.. அதிர்ச்சியாகி போனான்… இப்பொழுது தான் சமையல் கட்டை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்…
ஒரு தோசை கல் அடுப்பில் இருக்க…
தோசை வார்க்கப்பட வேண்டிய மாவோ… கீழே சிதறி கிடந்தது… சமையல் மேடையில் கொட்டிய மாவில் பெண்ணவளின் உள்ளங்கை தடங்கள் அழுத்தமாய் கோலம் போட்டு இருக்க… கீழே சிதறி இருந்த மாவில்… இருவரின் கால் தடங்கள் போட்டி போட்டு அலங்கரித்து இருந்தன… அதன் பின்பு மாவில் நனைந்த ஆதியின் கால்கள் வீடு முழுவதும் அச்சுகளை பதித்து இருந்தது. ஆதியின் முன்பக்கம் பின்பக்கம் என மாவு தடங்கள் அங்கங்கே ஒட்டி இருந்தன…
விக்ரமின் பார்வையை பார்த்ததும்… ஆதிக்கு சங்கடமான ஒரு நிலை… நடந்ததை கண்டுபிடித்து விடுவானோ என்று…
ஏன்டா மாவு, சட்னி எல்லாம் கீழே கொட்டி கிடக்கு… என்று விக்ரம் வெகுளியாய் கேட்க…
இப்பல்லாம் வரவர உன் தங்கச்சி அதிகமாக பிகு பன்றாடா… அதான் கொடுத்தேன் ஒன்னு.. அதுக்கு போய் இது எல்லாத்தையும் தட்டி விட்டுட்டு போயிட்டா மச்சான்… என்று ஏதோ இருவருக்கும் சண்டை என்ற தோரணையில் விக்ரம் நம்பும்படியாய் இரு பொருள் காரணத்தை கூறினான்…
என்னது மலர அடிச்சியா… இப்போ மலர் எங்கடா, உடம்புக்கு முடியாத நீயேன் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க… வொர்க்கர்ஸ் யாரையாவது பண்ண சொல்லு என்றான் விக்ரம்…
குளிச்சிட்டு இருக்காடா வந்துருவா… காபி போடவா உனக்கு? என்றான் பேச்சை மாற்றும் பொருட்டு…
இல்ல மலர் வந்து போடட்டும்… மச்சான்… இன்னைக்கு நான் நல்ல காப்பி குடிக்கிற மூடுல இருக்கேன்… என்றவன் தரையில் இருந்த கால் தடங்களை பார்த்து கொண்டே…
ஏன்டா மச்சான் நீ மாவ மிதிச்சு வீடு முழுக்க கால் தடம் ஆகிட்ட… ஆனா என் தங்கச்சியை பாத்தியா… ஒரு அச்சு கூட தரையில படாம அழுக்காகாம ரூமுக்குள்ள போய் இருக்கு… How talent she is… என்றான் ஆச்சரியமாய்…
அப்பாடா…. நீண்ட நிம்மதி மூச்சு உடன் வஞ்சப்புகழ்ச்சியாய்.. ஆம் என்று தலையாட்டினான் ஆதி…
பசிக்கு தோசை வார்க்க வந்தவளை… பின்னோடு இருந்து வந்து சில்மிஷம் செய்து… அவள் மறுக்க மறுக்க மங்கை அவளை சமையல் திட்டின் மேலே ஏற்றி… சரசம் செய்து, உணர்ச்சி வேகத்தில் இருவரும் ஒரு கிண்ணம் மாவை கீழே தட்டிவிட்டு…. அதைக் கூட உணர முடியாமல்… இதழ் முத்தத்தில் லயித்து… இயக்கத்தில் முழுமை பெறாமல் அவளை இடுப்பில் கட்டிக்கொண்டு… வசதியான இடம் தேடி அலைந்து பின் படுக்கை அறையில் உள்ள ஒற்றை சோபாவின் வளைவான பெரிய குஷன் கைப்பிடியில்… தான் தேடிய வசதி கிடைத்துவிட தலைவன் காட்டிய வேகத்தில்… இதற்கு மேலும் என்னால் சிணுங்க முடியாது என்று அவள் கால் கொலுசு அறுந்து விழுந்து மாண்டது தரையில்… இறுதியில் முகம் முழுதும் வியர்த்து முற்று பெற்று அவள் தோளில் முகம் புதைத்து களைப்படைந்தவன்… அவளை அப்படியே குளியல் அறையில் இறக்கிவிட்டு, தன்னை சுத்தப்படுத்திவிட்டு வெளியே வந்தான்… காதல் மயக்கத்தில் இடுப்பில் இருந்தவளின் கால் தடம் எங்கனம் தரையில் பதியும்…
அவனால் அலங்கோலமாகிய சமையலறையை அவனையே சுத்தம் செய்ய சொல்லி அனுப்பி வைத்தாள் மலர்.. அதனால்தான் சோக கீதத்துடன் நம் சிங்கம் சமையலறையை பவ்யமாக சுத்தம் செய்து கொண்டு இருக்கிறது…
இது தெரியாத அண்ணன்காரனோ… தங்கையின் தனி திறமையை கண்டு சிலாகிக்கலானான்.
தலைக்கு குளித்து முடித்து, ஹாலில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு சென்றாள் மலர்.
நடந்ததை விவரித்து ஆதியிடம் கூறியிருந்தனர்.. இதை சமையலறையில் இருந்து மலரும் கேட்டாள்… “ஐயோ” என வாயில் கை வைத்தவள்… தான் அங்கு இருந்தால் அருண் சங்கடமாக உணரக்கூடும் என்று எண்ணி.. படுக்கையறைக்குள் சென்று விட்டாள்.
மூன்று ஆண்களும் ஆழ்ந்த சிந்தனையில் அமைதியாக இருந்தனர்..
ஆதி!.. எனக்கு கண்டிப்பா என்னோட ரித்து வேணும் என்றான் அருண்.
அவன் இவ்வளவு நாளும் ரதியை பொறுத்துக் கொண்டு இருந்தது ரித்துவிற்காக தானே… அதனால் அடுத்தவன் குழந்தை என்றாலும் ரித்துவை விட்டுக் கொடுக்க அருணுக்கு மனம் வரவில்லை… சொல்லப்போனால் அடுத்தவனின் குழந்தை என்று அவன் நினைத்துக் கூட பார்க்க தயாராக இல்லை…
ஒருவேளை மிதுன் குழந்தையாக இருந்தால்… மிதுனிடம் குழந்தையை ஒப்படைப்பதே சரி என்று தோன்றியது ஆதிக்கு.. ஆனால் அதை இப்பொழுது அருண் ஏற்கும் மனநிலையில் இல்லை.. அதனால்… பேசி பார்க்கலாம் டா… என்றான் ஆதி.
இதுல பேசுறதுக்கு என்னடா இருக்கு.. நாளைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பாப்போம்… ஒருவேளை உன் குழந்தையா இருந்தா எந்த பிரச்சினையும் இல்லையே என்றான் விக்ரம்.
மிதுனையும், ரித்துவையும் ஒண்ணா பார்த்த பின்னாடியும் அவன் என் குழந்தையா இருப்பான் அப்படின்னு நீ நினைக்கிறாயா மச்சான் என்றான் அருண் விரக்தியாய்…
இத பத்தி நம்ம ரதி கிட்ட கேப்போம் டா…
வேண்டாம் என்ற தலையசைத்தவன்… அவ என்ன விட்டுப் போனதே பெரும் பாக்கியமா நான் நினைக்கிறேன்… திரும்பவும் எதுக்காகவும் அவகிட்ட போய் நான் நிக்க விரும்பல…
ஆதி நீ மிதுன் கிட்ட பேசி பாரு டா குழந்தை நம்ம கிட்ட தான் இருப்பான் அதை யாராலும் மாற்ற முடியாது என்ன வந்தாலும் பாத்துக்கலாம் என்று… அடம் பிடித்துக் கொண்டு இருந்தான் அருண்…
சரி கிளம்பு நம்ம ஒரு இடத்துக்கு போகலாம் என்று இருவரையும் அழைத்துக் கொண்டு, ஆதி வந்து அடைந்தது சைலஜா மருத்துவமனை.
கேர் டேக்கர் உடன் ரித்துவும் மருத்துவமனை வரவழைக்கப்பட்டவன்.
இருவருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது…
முடிவு அவனுக்கு தெரியும் என்றாலும் ஒரு வித படபடப்புடன் இருந்தான் அருண். நாளை தான் ரிசல்ட் வரும் என்பதால், மூவரும் தங்கள் வீடு நோக்கி கிளம்பி சென்றனர்.
இரவு முழுவதும் ரித்துவை மார்பில் போட்டுக் கொண்டே படுத்திருந்தான் அருண்.. குழந்தைக்காக தான் திருமணம் செய்தான் குழந்தைக்காக தான் ரதியின் தொந்தரவுகளை சகித்து கொண்டான்… ரித்துவின் முகத்தை பார்க்கும் பொழுதெல்லாம் ஏனோ மிதுனில் முகம் தான் ஞாபகம் வந்தது… அந்நியனாய் இருந்திருந்தால் ஒருவேளை சொல்லி இருப்பான்… “அப்படியே உங்க அப்பா மாதிரி ” என்று. ஏனோ மார்பின் மீது ரித்து படுத்திருக்க தான் ஏமாற்றப்பட்ட துரோகத்தின் வலியினால் நெஞ்சில் பாரம் கூடி இருந்தது. காலையில் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு, இரவில் மற்றொரு பெண்ணுடன் உறவு கொண்ட தனக்கும்… காலையில் ஒருவனுடன் சல்லாபித்துவிட்டு, இரவு கோவத்தில் தன்னை நாடிய ரதிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை.. என்றோ ஒரு நாள் அவன் விதைத்ததை இன்று அறுவடை செய்தது போன்ற ஒரு உணர்வு… துரோகத்தின் வழியைக் காட்டிலும் ரித்துவின் மேல் வைத்த பாசத்தினால் கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்தது… எனக்கு இது தேவை தான் என்று நினைத்துக் கொண்டான்…வழியும் கண்ணீரை துடைத்தபடியே நாளை என்ன நடக்கப்போகிறதோ என்ற சிந்தனையில் உறங்காமல் படுத்திருந்தான் அருண்.
யார் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நான் என் கடமையை சரிவர செய்வேன் என்று காலை அழகாக புலர்ந்தது…
இரவு முழுவதும் தூங்காததால் காலையில் சீக்கிரமே எழுந்து கிளம்பி இருந்தான் அருண்… திகில் படத்தின் இறுதி காட்சி போல மனம் எங்கும் அதீத படபடப்பு… குழந்தையை தயார்படுத்தி… ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை தூக்கி முத்தமிட்டு கொண்டான்… கட்டி அணைத்தான்… காலை பத்து மணிக்கு மருத்துவமனை வர சொல்லி இருந்தான் மிதுன்.. செல்ல விருப்பமில்லை.. அமைதியாய் அறைகுள்ளையே அடைந்து கொண்டான்…. ஆனால் போலீசுடன் வந்து மான பிரச்சனையாகி விடுமோ என்று தயக்கத்துடனே அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான்…
மதிய வேளையில் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது … இதயத்துடிப்பு எகிறியது அருணுக்கு… நண்பர்கள் தான் வந்திருந்தனர்… அவர்களை கண்டதும் ஒரு நிம்மதி… ஆதியை பார்த்து “என்னடா மிதுன் கிட்ட பேசிட்டயா ஓகே சொல்லிட்டானா” என்று ஆர்வமாய் கேட்டான் அருண்.
பேசிட்டேன் டா… என்றவனை ஆரத்தழுவி கொண்டான் அருண்… எனக்கு தெரியும்டா எப்படியும் இந்த பிரச்சனையை நீ சால்வ் பண்ணி தருவேன்னு… லவ் யூ டா ஆதி என்றான்.
கொஞ்சம் பொறுடா… நீ என் கூட ரித்துவ கூட்டிட்டு ஒரு இடத்துக்கு வரணும்…
எங்கடா கேட்டவனுக்கு பதில் கூறாமல் அழைத்து வந்தான் ஆதி.
அவர்கள் வந்து நின்ற இடம் ஒரு கலை நயம் மிக்க வீட்டின் முன்…
யார் வீடு டா இது… இங்கே ஏன் வந்திருக்கோம்… என்று கேட்டுக் கொண்டே ரித்துடன் இறங்கினான் அருண்.
அருணின் கையை இறுக்கப்பற்றி அழைத்து சென்றான் வீட்டிற்குள்…
உள்ளே அவர்களை சில பெண்கள் வரவேற்றனர்… அங்கு சோபாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஆண்களுக்கு மிதுனின் நண்பர்கள் என்று அறிமுகமும் படுத்தி வைத்தனர்… அப்பொழுதுதான் அருணுக்கு புரிந்தது இது மீதுனின் வீடு என்று..
இங்க எதுக்குடா ஆதி கூட்டிட்டு வந்திருக்க என்றான் கடுப்பாய்…
கொஞ்சம் பொறுடா சொல்றேன்…
ஆடவர்கள் மூவரையும் சோபாவில் அமர வைத்து அவ் வீட்டுப் பெண்கள் நன்றாக உபசரித்தனர்… அருணின் கையில் இருந்த கொழுக் மொழுக் பையன் ரித்துவை… அங்கிருந்த இளம்பெண்கள் தூக்கிக் கொண்டனர்…
அண்ணா உங்க பையனா அழகா இருக்கான்… நேம் என்ன?
இந்தக் கேள்விக்கு இந்த இடத்தில் உரிமையாய் பதில் சொல்ல முடியவில்லை… அமைதியாய் இருந்தான் அருண்.
டேய் வாடா வாடா வாடா குட்டி… கையை நீட்டி அழைக்க வாயெல்லாம் புன்னகையுடன் தொத்திக் கொண்டது அந்த குட்டி… அருணால், தாவி செல்லும் குழந்தையை கையில் அடக்க முடியவில்லை…
குழந்தை அனைவர் கையிலும் மாறி மாறி சென்றது அனைவரும் தூக்கி முத்தமிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்… அவர்கள் பேசியதில் அருணுக்கு ஒன்று புரிந்தது… அந்த குழந்தை யார் என்று அவர்களுக்கு இதுவரையிலும் தெரியாது… வீட்டின் பெரியவர்கள் குழந்தையின் வயிற்றை தொட்டு தொட்டு பார்த்து… குழந்தையின் பசி அறிந்து, குழந்தைக்கு உணவு ஊட்ட ஆரம்பித்தனர் அருணை கூட கேட்கவில்லை… பொதுவாகவே அடிக்கடி புதிதாக வேலைக்கு வரும் கேர் டேக்கர்களால் ரித்து வளர்க்கப்படுவதால், புதிய மனிதர்களுடன் எளிதில் பழகி விடுவான்.
சிறிது நேரத்தில் அங்கு மிதுன் அவசர அவசரமாக படி இறங்கி வந்தான் குளித்து முடித்து உடைமாற்றி வந்திருப்பான் போலும்..
வேகமாய் வந்து இருவருக்கும் எதிர் பக்கத்தில் உட்கார்ந்தவன்.. திரு திருவென விழித்தான்…
பின் எதிரில் இருப்பவர்களை பார்த்து குனிந்து “ரித்து யாருன்னு அவங்களுக்கு தெரியாது ப்ரோ நான் ரதிய லவ் பண்ண வரைக்கும் தான் அவங்களுக்கு தெரியும்.. லிவிங் எல்லாம் எங்க வீட்ல அலோவ்டு இல்ல… தெரிஞ்சா செருப்பால அடிப்பாங்க..” என்று கிசுகிசுத்த நேரம்.
இந்த குட்டி பாக்குறதுக்கு நம்ம மிதுன் போலவே இருக்கான்ல… என்று ஒருவர் கூற… அடுத்தடுத்து அது பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்தன.. முடியும் கலர், கண் மூக்கு காது என ஒப்பீடு தொடர்ந்தது..
இந்த பேச்சினால் அதிர்ந்தது அருண் மிதுன் இருவருமே..
எப்படி உண்மையை சொல்ல போகிறோம் என்று மிதுனும்…
எங்கே உண்மையை சொல்லி விடுவானோ என்று அருணும்…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️