அசுரன் 131

அசுரன் 131

 

வளைகாப்பு விழா கோலகாலமாக தொடங்கியது….

 

பெரிய மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அல்ல…

 

அவனது வில்லாவில்… அருகில் இருப்பவரை மட்டும் அழைத்து எளிமையாக ஆரம்பமானது.. 

 

ஏண்டா மச்சான் கல்யாணத்தை தான் ரொம்ப சிம்பிளா முடிச்சிட்ட… வளைகாப்பாவது எல்லாரையும் கூப்பிட்டு வச்சு சிறப்ப செய்யலாம்டா… என்று விக்ரம் கூற …

 

இதுக்கு முன்னாடி நடந்த வளைகாப்புல அண்ணனும் அண்ணியும் ரொம்ப கஷ்டப்பட்டாங்களே… அதனால சிம்பிளா பண்ணா போதும்னு… உன் தங்கச்சி சொல்லிட்டா… எனக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு… என்று ஆதி எடுத்துரைக்க…

 

தனக்கு அவர்கள் கொடுக்கும் முன்னிலையை எண்ணி அகம் மகிழ்ந்து போனான் விக்ரம்.

 

ஆதியின்  வீடும் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது… 

 

தங்களின் திருமண விபரம் தெரியாதவர்களை எல்லாம் அழைக்க முடிவு செய்திருந்தாள் மலர். அதில் முதலிடம் பெற்றது…

பக்கத்து வீட்டில் இருந்த அனைவரும் அழைக்கப்பட்டார்கள்…

இவங்களுக்கு தான் முதல்ல உங்களுக்கு கல்யாணம் ஆனது தெரியணும் என்றாள் மலர்.

 

தங்களது அலுவலக ஊழியர்களை… அழைத்திருந்தனர்…

இவங்களுக்கு வேற ஏதாவது பார்ட்டி வச்சுக்கலாம்.. என்று ஆதி கூற…

இவங்களத்தான் கண்டிப்பா வளைகாப்புக்கு கூப்பிடனும்… இவங்க பேசிய வதந்தி அப்படி… என்றாள்…

 

புரிந்து கொண்டான் ஆதி.. சிரித்து விட்டு கடந்து விட்டான்…

 

நெருக்கமான நண்பர்கள்.. மற்றும் மலர் வீட்டு ஆட்கள்… அவ்வளவே…

 

திருமண புடவையில்… குண்டு கன்னங்களுடன்… மேட்டிட்ட வயிற்றை தடவியபடி தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு இருந்தாள் மலர்.

 

தாய்மையின் பூரிப்பில் ஜொலிப்பவளை… கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் காதல் கணவன்… பின்னாலிருந்து அணைத்தவன் தோள்பட்டையில் நாடி பதித்து… இந்த குண்டு கன்னம் வர நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா… என்று கடிக்கத் தூண்டும் கன்னங்களை, இப்பொழுது கைகளால் மட்டுமே வருட முடிந்தது அவனால்…

 

அதான் உங்க பையன் அப்பா ஆசைப்பட்டதை நிறைவேற்றி கொடுத்துட்டானே… என்று கூறியபடியே…

பின்னாடி இருந்தவனை கை பிடித்து இழுத்து முன்னாள் வைத்து… திறந்திருந்த சட்டை பட்டனை போட்டபடி… புது மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க.. என்றாள் இரண்டு கைகளால் திருஷ்டி கழித்து… 

பட்டு வேட்டி சட்டையில்… நெத்தியில்  மனைவி ஆசையாய் வைத்துவிட்ட சந்தனக்கீற்றுடன்.. ஜொலித்தான்… தேவாதித்யன்.

 

நீயும் தாண்டி புது பொண்ணு மாதிரி இருக்க…

 

பொய்… நான் முன்னே இருந்ததை விட 10 கிலோ ஏறி இருக்கேன்… புஸ்ஸ்ஸ்ன்னு இருக்கேன் என்றாள்…

 

சரி விடு நானும் பத்து கிலோ வெயிட் போடுறேன். 

 

வேணாம்…. வேணாம்.. என்று உடனடியாக மறுத்தவள் . இந்த வெயிட்டையே என்னால தாங்க முடியல சில நேரம் மூச்சு அடைக்குது… இதுல இன்னும் வெயிட் ஏறுனா சுத்தம்… என்றாள்…

 

உதட்டுக்குள் சிரித்தவன்… செயினை புடிச்சு இழுத்து மேல போடுறதுக்கு முன்னாடி இதெல்லாம் யோசிக்கணும்… என்றான்.

 

அதெல்லாம் அப்போ… உங்க பையன் வரதுக்கு முன்னாடி… இப்போ ஆசையா கட்டிக்க கூட முடியல… முழுசா முத்தம் கூட கொடுக்க முடியல… என்று அவள் சலித்துக் கொள்ள…

 

அப்படியா அப்ப என் உதடுல இருக்கும் காயத்துக்கு எல்லாம் என்னடி பதில் சொல்ல போற… என்று கேட்க…

 

அது ஏதோ உணர்ச்சிவசத்துல… என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அறையின் கதவு தட்டப்பட்டது வாசுகியால்…

 

மலரை அழைத்து வந்து இருக்கையில்  அமர வைத்தனர்…

 

மலர் ஊரின் வழக்கப்படி, கணவன் மனைவி இருவரையும் அமர வைத்து நலங்கு வைத்தனர்…

 

மூதாட்டி ஒருவர் ஆரம்பித்து வைக்க… வாங்கி வைத்த வைரம் பதித்த தங்க வளையல்களை… மாமியாரிடம் கொடுத்து போட சொன்னான்.. ஆதி.

 

அர்ஜுனை பார்த்து அருகில் வா என்று அழைக்க… ஓடிப்போய் ஆதியின் பக்கத்தில் நின்று கொண்டான்… சிலர் மூவருக்கும் சந்தனம் வைத்தனர்…

 

ஆதியின் முறை வர.. சந்தனம் பூசி,   கண்ணாடி வளையல்களை அணிவித்து விட்டு கண்களை சிமிட்ட..

 

கிப்ட் வேணாமா என்றான்…

 

அதான் பெருசா கொடுத்து இருக்கீங்களே… என்றாள் தன் வயிற்றை காண்பித்து…

 

இது எனக்காக… அது உனக்காக.. என்று கூறி அவள் கையில் ஒரு ரிமோட்டை கொடுக்க…

 

குழப்பத்துடன் அதை அழுத்தியவள் கண் முன்னே… இருந்த சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மலர் தோரணங்கள் விலகின…

 

Lunar Designs & Structures 

CEO: Mrs. தேன்மலர் சந்திரன் என்ற பெயர் பலகை தெரிந்தது… அங்கிருந்து அனைவரும் கைத்தட்டி கரவொலி எழுப்பினர்….

முட்டை கண்களை விரித்தாள்… இதழ்கள் கூட o வடிவில் இருந்தன… 

 

உன்னோட ஆபீஸ்… உன் பேர்ல… என்றவன்…. புடிச்சிருக்கா?… என்றான்…

 

ம்ம்ம்… நேம் அழகா இருக்கு…  என்று கண் கலங்கியவள்…( Lunar என்றால் சந்திரன் என்று அர்த்தம்) என்னோட நேம் தேன்மலர் தேவாதித்யன்-னு போட்டு இருக்கலாமே… என்றாள்.

 

உன்னோட ஹார்ட் ஒர்க் பின்னாடி… எப்பவுமே என் மாமனார் பெயர் தான் இருக்கணும்… இது எல்லாம் அவரோட கனவு தானே…

பிரக்னன்சி ரிப்போர்ட்ல மட்டும் என் பேர் போட்டுக்கோ… அது முழுக்க முழுக்க என்னோட ஹார்ட் வொர்க்… என்றான் குறும்பாய்… அவளின் நெற்றி முட்டி… 

 

வர வர ரொம்ப லவ் பண்ண வைக்கிறீங்க… என்றவள், இப்பவே கிஸ் பண்ணனும் போல இருக்கு என்றாள்… தணிந்த குரலில்.. 

 

கொஞ்சம் பொறு விசேஷத்தை முடிச்சுக்கலாம் என்றான் ஆதி.

 

அகல்யா, நந்தினி, கவிப்பிரியா என அனைவரும் வந்து நலங்கு வைத்து சென்றனர்…

 

உஷா, ரூபா அவர்கள் வரும்பொழுது மட்டும் மலரின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை… 

சாரி மேடம்… நீங்கதான்னு தெரியாம என்னென்னமோ பேசிட்டோம் என்று குற்ற உணர்வில் அவர்கள் மலரிடம் மன்னிப்பு கேட்க…

 

இனிமேலாவது மத்தவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி பேச மாட்டீங்கன்னு நினைக்கிறேன் என்றாள் மலர்…

 

சத்தியமா இனி பேச மாட்டோம்… என்று கூறிவிட்டு,  விட்டால் போதும் என்று ஓடி விட்டனர்..

 

அனைவரையும் உண்ண உணவருந்த அனுப்பி வைத்துவிட்டு,

தோட்டத்தில் இருக்கையில் அருணும் விக்ரமும் அமர்ந்திருக்க…

 

அங்கு கீழே விழுந்து அழுது கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையை கை தூக்கி விட்டு… அவள் கால்களில் இருந்த மண்ணை எல்லாம் தட்டி விட்டு… அழாதீங்க குட்டி… என்று கண்ணை துடைத்து விட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தான் அர்ஜுன் குழந்தையை சமாதானப்படுத்தும் நோக்குடன்…

 

அவனை பொறுமையாய் அழைத்து…  அர்ஜுன்… பொண்ணு பாப்பா கன்னத்துல முத்தம் கொடுக்கக் கூடாது… என்று தன்மையாய் கூற…

 

நான் என் அம்மாவுக்கு அப்படி கொடுத்து தானே சமாதானப்படுத்துவேன்… என்று அர்ஜுன் கூற… 

 

அந்த பாப்பாக்கு நீ முத்தம் கொடுத்தது தெரிஞ்சா உங்க அம்மா திட்டப் போறா..

 

வாயில் கை வைத்து கிளுக்கி சிரித்தவன்… இது தெரிஞ்சா அம்மா என்ன திட்ட மாட்டாங்க உங்களைத்தான் திட்டுவாங்க என்றான் ரகசியம் போல்…

 

என்ன எதுக்குடா திட்றா? நான் என்ன பண்ணேன்…

 

நீங்க வேணா சொல்லி பாருங்களேன்… என்று கூறிவிட்டு அர்ஜுன் ஓடிவிட்டான்…

 

என்ன சொல்வாள் என்று பார்க்க அருணுக்கும் ஆர்வம் வந்தது… கடந்து போகும் நந்தினியை அழைத்து, குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்ததை கூற…

 

போகுது பாரு புத்தி அப்டியே அவங்க அப்பன மாதிரி என்று அருணை ஒரு பார்வை பார்த்து விட்டு… எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டான்… ராஸ்கல்… என்று புலம்பி விட்டு தன் முன் தலையை தட்டி விட்டு சென்றாள்…

 

ஆ… என விழித்தான் அருண்…

 

பின்னாலிருந்து அருணின் முன்னாள் வந்தான் அர்ஜுன்..  

சொல்லிட்டீங்களா?.. என்றான் சிரித்தபடி…

 

என்னடா என்ன திட்டிட்டு போறா… ஒரு நியாயம் வேண்டாமாடா..  என்று மகனிடம் தீர்ப்பு கேட்க.. 

 

அருணின் கையில் இருந்த வாட்சைக் காட்டிய அர்ஜுன்… இந்த வாட்ச் சரியா ஓடலைனா யாரை திட்டுவீங்க… என்றான் இடுப்பில் கைவைத்து பெரிய மனுஷன் தோரணையில்…

 

இத தயாரிச்ச கம்பெனிய…

 

எஸ்..  எங்க அம்மாவும் அதைத்தான் செஞ்சாங்க என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்…

 

அர்ஜுனின் பதிலை கேட்ட விக்ரம் குலுங்கி குலுங்கி சிரித்தான்…

 

டேய் மச்சான்… உனக்கு இப்படி ஒரு புத்திசாலி புள்ளையாடா… என் மருமகன் எவ்வளவு விவரமா சொல்லிட்டு போறான்… 

 

மலரை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்தது…

 

இங்கேயே இருக்கட்டும் அத்த….. நான் பாத்துக்குறேன்… என்று வாசுகி இடம் எவ்வளவோ கூறிவிட்டான்…

 

ஒரு மாசமாவது நான் வச்சு பார்த்து அனுப்புறேன் மாப்ள… இல்லனா எனக்கும் மனசுக்குள்ள குற்ற உணர்வா இருக்கும்… என்று கூறிவிட…

 

நீயாவது உங்க அம்மா கிட்ட சொல்லுடி… என்று மலரிடம் முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தான்…

போயிட்டு ஒரு வாரத்துல வந்துடுறேங்க… நான் இங்க இருந்தா நீங்க ஆபீஸ்சே போறதில்ல சரியா சாப்பிட கூட மாட்றீங்க… கண்ட நேரத்தில் தூங்கி கண்ட நேரத்தில் எந்திரிக்கிறீங்க… நீங்க ஒரு வாரம் ரெஸ்ட் எடுங்க… எனக்கும் அம்மாகூட இருக்கணும் போல இருக்கு என்று அவள் கூறி விட… அவள் ஆசையை நிறைவேற்றுவதை விட அவனுக்கு என்ன வேலை…

 

சரி போயிட்டு வா… டெய்லி வீடியோ கால் பண்ணுடி.. குட்டிக்கு 100 முத்தம்… மங்கைக்கு இன்னும் எண்ணிக்கை முடியவில்லை… மனதில்லாமல் வழி அனுப்பி வைத்தான்…

 

இதோ மலர் சென்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது…

 

கிறுக்கு தான் பிடிக்கவில்லை அவனுக்கு… அம்மாவுடன் இருக்க ஆசை என்று கூறி விட்டாளே… கர்ப்பவதியின் ஆசையை நிறைவேற்ற… தனிமையில் அல்லோல் பட்டு கொண்டு இருக்கிறான் தலைவன்… போயிட்டு என் கூட சரியா போன் கூட பேசலையே… நான்தான் ஒருவேளை இத்தனை நாள் அவளை கட்டிப்போட்டு வச்சுட்டேனோ… என்று மனதிற்குள் ஆயிரம் சந்தேகங்கள்…

 

இரவு வீட்டுக்கு வந்தவனுக்கு,

அவள் இல்லாத அறைக்குள்… செல்லவே மனமில்லை… மனம் நொந்து புறங்கையால் கண்ணை மறைத்தபடி மெத்தையில் படுத்திருக்க… போன் ஒலித்தது…

 

மலர் தான் அழைத்திருந்தாள் வேகமாய் அட்டென்ட் செய்தான்…

தேவா… என்ற ஒரு அழைப்புடன் நிறுத்திக் கொண்டாள்…

 

குரலில் மாற்றம் கண்டு திடுக்கிட்டு, ஏய்..  சிட்டு என்னடி ஆச்சு… 

 

அந்தப் பக்கம் தேம்புவது தெரிந்தது…

 

என்னம்மா…

 

நான் போகணும்னு சொன்ன என்ன விட்டுடுவியா தேவா… என்று அவள் குரல் சிறுபிள்ளையாய் தழுதழுக்க…

அவள் உதட்டைப் இருக்கி அழும் தோரணை கண்முன் வந்து சென்றது…

சென்ற முதல் நாள், சுற்றி சொந்தங்கள் வந்து போய்க் கொண்டு இருக்க… சரியாய் கணவனிடம் போன் கூட பேச முடியவில்லை அவளால்… மனம் எங்கும் அவன் நினைவுகள் தான் சாப்பிட்டாரோ ஆபீஸ் போய் இருப்பாரா என்ன பண்றார்னு தெரியலையே அப்படியே அம்போன்னு விட்டுட்டு வந்துட்டோமே… என்று மனம் நிலை கொள்ளவில்லை… இன்றும் பகல் முழுதும் ஆட்கள் இருந்தாலும்…  திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் அவன் இல்லா கூட்டத்தை அந்நியமாய் உணர்ந்தவள்… இரவில் தனிமையில் இதோ தலைவனின் ஞாபகம் மனதை கொய்ய அழைத்து விட்டாள் அழுது கொண்டே… 

 

நீதானடி அம்மா கூட இருக்கணும்  ஆசைப்பட்ட… 

 

அப்போ என்ன பாக்க வரமாட்டியா தேவா… என்று அவள் ஏக்கமாய் கேட்க…

 

நாளைக்கு வரேன் டி..

 

நிஜமா?… 

 

ம்ம்ம்… எனக்கு தூக்கம் வருது போனை வைக்கிறேன் ..  கூறிவிட்டு..  காரை ஸ்டார்ட் செய்தான் தலைவன்…

 

அடுத்த சில மணி நேரத்தில் அவர்களது வீட்டை அடைந்திருக்க… மலரின் போன் எடுக்காமல் வாசுகி போன் செய்து கதவை திறக்க கோரி அவர் பதறி எழுந்து என்னமோ ஏதோ என்று வந்து நிற்க… அது ஆபீஸ் சம்பந்தமா மலர் கிட்ட கையெழுத்து வாங்கணும்… ஏதோ ஒரு பொய் காரணத்தை சமாளிப்பாய் கூறி விட்டு, வீட்டினுள் நுழைந்தான்…

 

அப்பொழுதுதான் கண் அயர்ந்த  அவள் ஆள் அரவம் கேட்டு விழித்தாள். அவனது சட்டையை தான் அணிந்து படுத்திருந்தாள்…

 

அவனை கண்டும் காணாதது போல் படுத்துக் கொண்டாள்.. கனவு என்று நினைத்து விட்டால் போலும்…

 

படுக்கையில் பின்னாடி இருந்து அணைக்க… அப்பொழுதுதான் சுயம் உணர்ந்து திரும்பியவள்… தேவா… என்று முகத்தை நெஞ்சில் புதைத்து கொள்ள… தனிய விட்டு சென்ற அவளுக்கு… இதழ் தடிக்கும் தண்டனை வழங்கப்பட்டது… 

 

இரண்டு நாள் அவன் அனுபவித்த துன்பத்தை எப்படி அவளுக்கு உணர்த்துவது… 

 

கூடலின் மூலம் உணர்த்த முடிவெடுத்து விட்டான்… தான் அருகில் இருக்க தனது சட்டை எதற்கு… அகற்றி விட்டான் உடனே…

தாய்மையின் பூரிப்பில் கனிந்திருந்த நெஞ்சாம் பழம் அவன் கண்களுக்கு விருந்தாக… கைகளால் அள்ளிப் பருகிட ஆசை கொண்டான்… 

 

மோகத்தையும் வேகத்தையும் பார்த்தவள், இப்போ எப்படி தைரியம் வந்துச்சு கிட்ட வர…

 

நேத்துதான் சைலஜா உண்மை சொன்னா… 

 

நான் சொல்லும்போது நம்பல…

 

கேள்வி கேட்காதடி… வேலைய பாக்க விடு…

 

அவனின் மோகத்தை கண்டு பயம் இல்லை ஆனால் வேகத்தில் கொஞ்சம் பயம் தான்… 

 

ஆனால் ஆடவனோ மிக நிதானமாய் கையாண்டான் அவளை.. 

 

காலையில் கைகளால் வருடப்பட்ட கன்னங்கள்.. பல்இடுக்கில் சிக்கிக் கொண்டன… 

 

ரொம்ப சாஃப்ட் ஆயிட்ட டி… தொடவே பயமா இருக்கு…

பஞ்சு மாதிரி இருந்த என்னோட பாப்ஸ் ரெண்டு பேரும் என் கை படாம கனம் ஆயிட்டாங்க டி…

 

வானிலை அறிக்கை போல்… அவளின் உடலின் நிலவரத்தை அங்கங்கமாக வர்ணித்துக் கொண்டே தனது செயலைத் தொடர்ந்தான்… 

 

அவள் தொடைகளில் முகத்தை புதைத்தவன்… நாளெல்லாம் இங்கே படுத்திருக்கலாம் போல இருக்கு… அவ்வளவு இதம்…

 

கொலுசு சத்தமும்  உறுமல் சத்தமும் ஒரு சேர காதில் கேட்டு பல மாதங்கள் ஆகின..  இப்பொழுது மீண்டும் கேட்க வாடி இருந்த செல்கள் எல்லாம் புத்துயிர் பெற்றது… 

 

தேன்மலராய் இருந்தவள் அன்னிச்சம் மலராய் மாற… கூடலின் போது வரும் முனங்கள் சத்தம் வலியிலா அல்லது சுகத்திலா என்று அவனால் பிரித்து அறிய முடியவில்லை…. அவளின் முகம் பார்த்து முகம் பார்த்து சேவை செய்ய வேண்டிய கட்டாயம்… 

வசதியான இடமில்லை எனினும் வசதியை ஏற்படுத்திக் கொண்டான்… 

 

தேவை முடிந்து இருவரும் தூங்க வெகு நேரம் எடுத்தாலும்…. நெஞ்சில் இருந்த பாரங்கள் குறைந்து இருந்தன.. 

 

காலையில் முதல் வேலையாய் தனது பையுடன் தன் வீட்டுக்கு செல்ல தயாரானாள் மலர்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top