அசுரன் 37

அசுரன் 37

தன் குழந்தை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள காலையிலேயே 
விக்ரமை அழைத்துக்கொண்டு ஆதியின் அலுவலகத்திற்கு கிளம்பி 
விட்டான் அருண். 

வாங்கடா… என்ன ரெண்டு பேரும் இந்த பக்கம் வந்து இருக்கீங்க? உங்க 
ஆபீசுக்கு போகலையா? என்று கேட்டான் ஆதி. 

இவன் வேற டா… எப்ப பாரு ஆபீஸ்… ஆபீஸ்னு அதை கட்டியே அழுகிறது… 
என்று கோட்டை ஸ்டைலாய் இழுத்து விட்டுக் கொண்டே எதிரில் இருந்த 
இருக்கையில் அமர்ந்தான் அருண். 

இல்லடா மச்சான்…. ஆபீஸ்ல வேலை இருக்கு…  அருண் தான் நம்ம 
ரெண்டு பேத்துகிட்டையும் ஏதோ பேசணும் அப்படின்னு சொல்லி இங்க 
கூட்டிட்டு வந்தான் என்றான் விக்ரம். 

சொல்லுங்கடா!… என்ன விஷயமா வந்து இருக்கீங்க?.. ரெண்டு பேரும் 
சேர்ந்து வந்து இருக்கிறத பாத்தா ரொம்ப முக்கியமான விஷயம் போல 
என்றான் ஆதி. 

இல்லடா நேத்து நைட்டு ஒரு முக்கியமான விஷயம் நடந்துச்சு அதை 
சொல்றதுக்கு தான் நான் வந்து இருக்கேன் என்று கூறிவிட்டு தனது 
கோட்டை சரி செய்தபடி மேசையின் மீது இரு கைகளையும் ஊன்றி சற்று 
முன்னே வந்தான் அருண் . 

ஆதியும் பைல்களை வைத்துவிட்டு மும்பரமாக முன்வந்து அவன் சொல்ல 
வருவதை உற்று கேட்க.. விக்ரமும் ஆர்வமாய் அவனை கவனித்தான். 

நைட்டு நான் நல்ல தூங்கிட்டு இருந்தேன் டா அப்ப திடீர்னு யாரோ என் 
முதுகை தொட்டாங்க…. என்று ஏதோ அமானுஷ்ய கதை சொல்லப் 
போவது போல் தொடங்க… 

ரதியா இருக்கும் டா!… என்றான் விக்ரம். 

இல்லடா அவ நல்லா தூங்கிட்டு இருந்தா… 

யாருன்னு எந்திரிச்சு சுத்திமுத்தி பார்த்தேன் டா யாருமே இல்ல… 

திரும்பவும் இன்னொரு தடவை அதே மாதிரி என் கையை யாரோ டச் 
பண்ண மாதிரி இருந்துச்சுடா… 

நேத்து நைட்டு என்ன சரக்கு அடிச்ச… இன்று விக்ரம் கேட்க ஒரு 
முறைப்புடன் தொடர்ந்தான் அருண். 

திரும்பிப் பார்த்தா வயித்துக்குள்ள பாப்பா டா… அது அப்படியே இந்த 
பக்கம் அந்த பக்கம் நெளியுதுடா… நான் உடனே கை வச்சா அது என்ன 
கிக் பண்ணுது டா… அது கிக் பண்ண உடனே என் உடம்பெல்லாம் 
அப்படியே ஒரு மாதிரியா ஆயிடுச்சி டா… அந்த பீலிங்க எக்ஸ்பிளைன் 
பண்ண முடியாது டா. அது இவ்ளோ ஹாப்பியா இருக்கும்னு நான் 
எதிர்பார்க்கவே இல்லை… என்று உணர்வு பூர்வமாக செய்து 
காண்பித்தான்  அருண். … 

அருணின் சந்தோசத்தை பார்த்து ஆதியும் விக்ரமும் முகம் மலர்ந்தனர். 
விக்ரமின் முகத்தில் ஒரு சிறு ஏக்கம் வந்து மறைந்தது. 

கை வச்ச உடனே என்னோட லிட்டில் சாம்போட லவ்வ நான் பீல் 
பண்ணினேன்டா அதே மாதிரி என்னோட பேபியும் என்னை பீல் பண்ணி 
இருக்கோம்ல….  இட்ஸ் வெரி ஸ்பெஷல் ஃபார் மீ…. அந்த நிமிஷமே நான் 
முடிவு பண்ணிட்டேன் டா என்னோட குழந்தைக்கு நான் ஒரு நல்ல 
அப்பாவா இருக்கணும் அப்படின்னு… 

ம்ம்… குட்… டிசிஷன் என்றான் ஆதி…. 

ஏண்டா இப்படி ஒரே நாள் ஒரே உதையில திருந்துறாவேனா நீ… உங்க 
அப்பா நீ எய்த் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது உன்னோட 
கிளாஸ்மெட்டுக்கு லவ் லெட்டர் கொடுத்தேன்னு சொல்லி தூக்கி போட்டு 
மிதி மிதின்னு மிதிச்சாரே… அப்ப கூட நீ திருந்தலையே மச்சான்… அடுத்த 
நாள் வேற லெட்டர் எழுதி அந்த பொண்ணோட தங்கச்சிக்கு  கொண்டு 
போய் கொடுத்தாயே டா…. 

இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா அஞ்சு வருஷத்துக்கு 
முன்னாடியே உனக்கு கல்யாணம் பண்ணி உன் குழந்தைய உதைக்க 
சொல்லிருப்போமே … நீயும் திருந்தி இந்நேரம் நல்ல மனுஷனா நல்ல 
அப்பாவா இருந்திருப்ப… 

ரொம்ப திருந்திடாதடா மச்சான். நம்ம மூணு பேரும் ஃபேமிலியா கெஸ்ட் 
ஹவுஸ் போயி என்ஜாய் பண்ணனும்னு எனக்கு ஒரு மிகப்பெரிய கனவு 
இருக்குடா மச்சான்…  என்றான் விக்ரம். 

நான் எப்படா உன் கிட்ட குடிக்க மாட்டேன்னு சொன்னேன்….. என் 
குழந்தையை நல்லா பார்த்துக்கிற அன்பான அப்பாவா இருக்கப் 
போறேன்னு  தான் சொன்னேன் என்றான் அருண். 

அது சரி… என்று தலையசைத்தான் விக்ரம். 
இதை போன்ல  சொல்லி இருக்கலாமே டா இதுக்காகவா ஆபீஸ்க்கு 
நேரடியா வந்த என்று ஆதி சொல்ல… இல்லடா உன்ன பாக்கணும் போல 
இருந்துச்சு…. இப்பல்லாம்  நீ வீட்டுக்கு கூட வர்றது இல்ல… அதான் உன்ன 
பாத்துட்டு சொல்லிட்டு போலாம்னு வந்தேன்… என்று கூறிவிட்டு ரதியின் 
வளைகாப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்து விட்டு,, “மரியாதையா வந்து 
சேரு” என்று கூறிவிட்டு, கிளம்பினார்கள் அருண்  விக்ரமும். 

சம்மதமாய் தலையசைத்து வழி அனுப்பி வைத்தான் ஆதி. 

ரதியின் வளைகாப்பு வைபோகம் ரதியின் விருப்பப்படி அமோகமாய் 
தொடங்கியது… 

பெரிய மண்டபத்தில் ஆயிரம் பேரை அழைத்து அறுசுவை உணவுடன்… 

புதிதாய் நெய்யப்பட்ட பட்டு சேலையில் அழகோவியமாய் 
அமர்ந்திருந்தாள் ரதி. அருகில் அருண், பட்டு வேட்டி சட்டையில் 
ஆண்அழகின் இலக்கணமாய் இருந்தான். இன்னும் சிறிது நாளில் தனது 
குழந்தையை பார்க்க போகும் மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. 
சக்கரவர்த்தி மற்றும் ருத்ராதேவி வருகை புரிந்து இருந்த அனைவரையும் 
உபசரித்து கொண்டு இருந்தனர். ஆதியும் அவன் தொழில் நட்பு 
வட்டாரங்களை உபசரித்துக் கொண்டிருந்தான். 

விழாவிற்கு ராஜேஷும் வந்திருந்தான்… அங்கிருந்த 
பாட்டிகளையெல்லாம் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தான். 

“என்ன மங்களம் வர வர அழகு ஆயிட்டே போற…, ” 

“டேய் கிறுக்கு பயலே முதல்ல, வயசு இருக்கும் போதே கல்யாணம் 
பண்ணி தொலடா…. எங்கள சைட் அடிச்சு உயிரை வாங்குற ” என்று ஒரு 
பாட்டி கேட்க…. 

ஒரு பொண்ணும் மனசுக்கு புடிக்கல உன்னை தான் பிடிச்சிருக்கு…. நீ 
வேணும்னா என்ன கல்யாணம் பண்ணிக்க… என்று பாட்டி தோளில் 
கையை போட்டபடி கேட்க… 

” உன்னை கட்டிக்கிட்டு போயிட்டா என் புருஷனுக்கு யாரு பதில் 
சொல்றது ” 

“அவருக்கு வேற ஒரு நல்ல பொண்ணா பாத்து என் தலைமையில நானே 
கல்யாணம் பண்ணி வைக்கிற மங்களம்”. 

உனக்கு பார்க்கவே உனக்கு துப்பு இல்ல நீ ஏன் புருஷனுக்கு பாக்குறியா… 
மஹூம்… என்று தாடையை தோளில் இடித்து கொண்டு சென்ற படி அந்த 
இடத்தை விட்டு நகர்ந்தது அந்த பாட்டி. 

திருமணமான சில மாதங்களிலேயே வளைகாப்பு நிகழ்வு வைத்ததைப் 
பற்றி பல பேர் தங்களுக்குள்ளேயே கிசுகிசுத்து சிரித்துக் கொண்டனர். 

 மண்டபத்தின் விருந்தினர் அறைக்குள்… அகல்யா தரையை 
வெறித்தபடி  அமர்ந்திருந்தாள். 

அருகில் அவள் கையைப் பற்றிய படி அமர்ந்திருந்தான் விக்ரம். 

இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் டி உக்கார போற எல்லாரும் நம்மள 
கேப்பாங்க… அங்கிள்,ஆன்ட்டி நம்மள தேடுவாங்க… சீக்கிரம் வா கீழே 
போகலாம்… என்று அழைத்துக் கொண்டு இருந்தான். 

இல்ல விக்கி… நான் வரல நீ மட்டும் போயேன்.. என்று கெஞ்சிக் கொண்டு 
இருந்தாள் அகல்யா. 

ஏய்!… என்ன விளையாடுறியா… நீ இல்லாம நான் எப்படி கீழே போக 
முடியும்… இப்ப எதுக்கு இப்படி உக்காந்து இருக்க அதையாவது சொல்லு…. 
இந்த ரூம்ல உட்கார்ந்து இருக்குறதுக்கா தேடித்தேடி புடவை எடுத்து 
டிசைன் பண்ணி பிளவுஸ் தைச்சு போட்டு, மேக்கப் போட்டு 
உட்கார்ந்திருக்க… 

இல்ல விக்கி கீழ வரவே எனக்கு இஷ்டம் இல்ல… ரொம்ப கஷ்டமா 
இருக்கு… எல்லாரும் குழந்தையை பத்தி என்கிட்ட கேப்பாங்க… 

ஏண்டி… யாரோ நாலு பேரு உன்கிட்ட ஏதோ ஒரு கேள்வி கேப்பாங்க 
அப்படிங்கிறதுக்காக… நம்ம வீட்டு விசேஷத்தில் நம்ம கலந்துக்காம 
இருக்க முடியுமா?… அருண் என்ன நினைப்பான். அவனோட குழந்தைக்கு 
நம்ம பிளஸ்ஸிங்ஸ் வேண்டாமா?.. 
சரி கீழே வா… நான் உன் கூடவே இருக்கேன் உன்கிட்ட யாரு என்ன கேள்வி 
கேட்டாலும் அதுக்கு நான் பதில் சொல்றேன்… 

அவள் அமைதியாய் அமர்ந்திருக்க… 

அடாவடி… 

ம்ம்… 

என்ன பாரு…. அவன் ஒரு கையால் அகல்யாவின் நாடியைப் பிடித்தவன். 
தன் பக்கம் திருப்பி… 
கீழ போய் உன் கூடவே இருக்கேன்… கொஞ்ச நேரம் கீழே இரு… உனக்கு 
பிடிக்கலைன்னா திரும்ப மேல வந்திடலாம்… இப்ப வா… என்று கூறிவிட்டு 
அவள் இதழில் சிறிதாய் முத்தம் ஒன்றை வைத்து அழைத்துச் சென்றான் 
விக்ரம். 

தயங்கி படியே விக்ரமுடன் நடந்து வந்தாள் அகல்யா.. இதயம் 
படபடவென்று அடித்துக் கொண்டது. 

அதற்குள் அவர்களை தேடி, இரு உறவுக்கார பெண்கள் மேலே வந்தனர். 

எதிரில் தென்பட்ட விக்ரம் மற்றும் அகல்யாவை பார்த்து… 

அகல்யா அக்கா உங்கள கீழ எல்லாரும் கூப்பிடுறாங்க… உங்கள தான் 
துணைப்பொண்ணுக்கு உட்கார வைக்கணும்னு தேடிக்கிட்டு 
இருக்காங்க…. என்று கூறி கையைப் பிடித்து இழுத்து சென்றனர். 

இல்ல நான் வரல… என்று அகல்யா தயங்கியபடியே விக்ரமை 
பார்த்துக்கொண்டு அவர்களுடன் சென்றாள். 

அகல்யாவை அழைத்துச் சென்று ரதியின் அருகில் ஒரு இருக்கையில் 
அமர வைத்து, வளைகாப்பு விழா தொடங்கியது. 

முதல் நலங்கை வயதில் மூத்த பெண்மணி தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து அனைவரும் நலங்கு வைக்க…. 

அருண் ரதிக்கு நலங்கு வைக்க வந்தான்… அருகில் இருந்த பெண் சொல்ல 
சொல்ல நலங்கு வைத்தவன்… சிறிது சந்தனத்தை எடுத்து அவள் 
வயிற்றிலும் தடவி விட்டான். “திஸ் இஸ் ஃபார் மை லிட்டில் சாம்ப்”… அவன் 
வாங்கி வைத்த வைர வளையல்களை அவள் கையில் அணிவித்து… 
கையில் முத்தமிட்டான். அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு “யூ ஆர் 
லூக்கிங் சோ பியூட்டிஃபுல்” என்ற ஆத்மார்த்தமாக அவள் கண்ணை 
பார்த்து கூறினான்… 

ஆர் யூ ஜோக்கிங்…. இப்படி புஸ்ஸுன்னு கன்னம் வீங்கி… இடுப்பு எல்லாம் 
வீங்கி உட்கார்ந்து இருக்கேன் இப்ப அழகா இருக்கேன்னு சொல்ற… ஐ 
ஃபீல் ஏஜ்டு… என்று கூறும்போது அவளின் கண்கள், எதிரே இருக்கையில் 
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஆதியின் மேல் ஒரு கணம் பட்டு 
மீண்டது. ஆனா… உன்ன பாரு நீ கல்யாணத்துக்கு முன்னாடி இருந்ததை 
விட இப்பதான் ஹாண்ட்ஸாமா… இருக்க…. 

ஆனா என்னோட கண்ணுக்கு மொத விட இப்பதான் நீ ரொம்ப அழகா 
இருக்க ரதி… இட்ஸ் ப்ராமிஸ்… 

மச்… ஏதோ என்னை சமாதானப்படுத்துறதுக்கு சொல்ற என்று சலித்துக் 
கொண்டாள். 

“உங்க ரொமான்ஸ் வீட்ல போய் வச்சுக்கங்க இப்ப எல்லாரும் நலங்கு 
வைக்கணும்” என்று அருகில் இருந்தவர்கள் கிண்டல் அடித்து சிரித்துக் 
கொண்டார்கள்…. 

அடுத்தடுத்து வந்திருந்த உறவினர்கள் அனைவரும் நலங்கு வைக்க 
ஆரம்பித்தனர். 

நலங்கு வைக்க வந்த சிலர்… 
ரதிக்கு நலங்க வைக்க வரும் பொழுது… 
“கல்யாணம் ஆகி நாலு மாசத்துல ஏழு மாசமா வந்து உட்கார்ந்திருக்க ” 

” ஏண்டியம்மா கல்யாணத்துக்கு முன்னாடி பழகுவதற்கு ஒரு வரைமுறை 
இல்லையா… ” 

” நல்ல ஆம்பள புள்ளையா பெத்து போடு ” 

” இந்த காலத்துப் பிள்ளைங்க கிட்ட  கொஞ்சம் கூட ஒழுக்கம்ன்றதே 
இருக்கிறது இல்ல ” 

என்று கூறிக்கொண்டே நலங்கை வைத்து சென்றனர். 

அகல்யாவிடம் அவர்கள் நலங்கு வைக்க வரும்பொழுது… 

” இந்த வருஷமாவது உனக்கு புள்ள பாக்கியம் கிடைக்கனும்னு 
வேண்டிக்கிட்டு உட்காருமா, ” 

” உங்க அண்ணிய பாரு கல்யாணமாகி வந்த நாலு மாசத்துல 
வளைகாப்பு போட்டாச்சு….” 

” உனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் இனிமேலாவது கடவுளோட அருள் 
கிடைக்கட்டும் ,,, ” 

ஏதோ அகல்யா உலகில் உள்ள அத்தனை பாவங்களையும் செய்து விட்டு 
அவர்கள் முன்னே அமர்ந்திருப்பது போல்… ஏதாவது ஒன்றை சொல்லி 
அவளுள் கூனி குறுக வைத்தார்கள். 

ஆக மொத்தம் இந்த உலகத்தை பொறுத்தவரையில் குழந்தை சீக்கிரம் 
பிறந்தாலும் குற்றம்தான் சொல்வார்கள்…. குழந்தை பிறக்க  கால 
தாமதம் ஆனாலும் குறை தான் சொல்வார்கள்… 
எல்லாம் அவர்கள் குறித்த நேரத்தில் அவர்கள் விருப்பப்படி 
அடுத்தவர்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டும். 
இந்த நிதர்சனம் அகல்யாவிற்கு புரிந்தாலும், அவளுடைய 
தன்னம்பிக்கை என்னும் கோட்டையை… வார்த்தை என்னும் வெடிகுண்டு 
வைத்து சிறிது சிறிதாக தகர்த்து கொண்டே இருந்தார்கள். 

சிறிது நேரத்தில் அகல்யாவின் முக மாறுதலை பார்த்த விக்ரம், 
அகல்யாவை அறைக்கு அழைத்து சென்று விட்டான். 

அறைக்கு அழைத்து செல்ல செல்லவே விக்ரமிற்கு அகல்யாவை எப்படி 
சமாதானம் செய்வது என்று யோசித்துக் கொண்டே சென்றான். 

அறைக்குள் நுழைந்த அகல்யா தன்னை சுத்தம் செய்து கொண்டு 
அமைதியாக படுத்து விட்டாள். 

அந்த அமைதி தான் விக்ரமை மேலும் பயமுறுத்தியது. 
 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top