அசுரன் 61
இரு வகையான குரலைக் கேட்டு மலரு திடுக்கிட்டு நிமிர்த்து பார்க்க அங்கே..
டன் கணக்காய் முகத்தில் கடுப்புடன் ஆதியும், டன் கணக்காய் முகத்தில் புன்னகையுடன் அருணும்… அருகருகே அமர்ந்திருந்தனர்.
மலர், கண்களால் இது என்ன என்பது போல் ஆதியின் முகத்தை பார்த்து கேட்க…
ஆதியும் கண்ணை மூடி திறந்து, “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பது போல் உறுதி அளித்தான். உங்களுக்கான வேலையை நந்தினி கிட்ட குடுத்து இருக்கேன் மலர்… டூடேஸ் ல உங்களுக்கு ஒரு பிரசன்டேஷன் ஒன்னு இருக்கும் அதுக்காக போய் நீங்க ப்ரிப்பேர் ஆகுங்க… என்று கூறி உடனே நந்தினி இடம் அனுப்பி வைத்தான் ஆதி.
ரவி, மலர் உன்னோட பிஏ ன்னு சொன்னான்… இதுதான அவ கேபின்… எதுக்கு அவளை வெளியே அனுப்பி வைக்கிற… என்று அருண் ஆதங்கமாய் வினவ…
அவளுக்கு இன்னும் ட்ரெய்னிங் முடியல போய் நந்தினி கிட்ட டிரெய்னிங் எடுத்துட்டு வரட்டும்… என்று அவன் கடுப்புடன் பதில் அளித்தான்..
தனது தனி அறைக்குள் நுழைந்த ஆதி… விக்ரமிற்கு ஃபோன் செய்தான்..
நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது இன்னும் பத்து நிமிஷத்துல என் ஆபீஸ்ல நீ இருக்கணும்…
டேய் எனக்கு முக்கியமான ஒர்க் இருக்குடா அதனால என் ஆபீஸ்க்கு வந்து இருக்கேன்…
நீ அங்க புடுங்குனது எல்லாம் போதும் இவனை இங்கு அனுப்பி வச்சிட்டு நீ என்ன அங்க பண்ணிட்டு இருக்க… மரியாதையா நீ இப்ப வர்ற… அருண் ஆபீஸ்ல இருக்கிற வரைக்கும் நீ என்னோட ஆஃபீஸ்ல தான் இருக்குற… இல்லனா மவனே நடக்கிறதே வேற… என்று உறுமினான் ஆதி…
போன் செய்துவிட்டு அறைக்குள்ளையே அங்கிட்டு இங்கிட்டுமாய், கையில் போனை தட்டியபடியே நடந்து கொண்டிருந்தான் ஆதி.
ரொம்ப பேசுவானே… அதைக் கேட்டு இன்னைக்கு அவன் வாய நான் உடைக்காம இருக்கணும் கடவுளே…
என் ஆபீஸ்ல எனக்கு முன்னாடி வந்து உக்காந்து இருக்கான்..
இவன் கிட்ட இருந்து மலர காப்பாற்றுவதே எனக்கு ஃபுல் டூட்டியா இருக்கும் போல… இந்த ஐடியாவை கொடுத்த அந்த விக்ரம் பரதேசி மட்டும் வரட்டும் வச்சிக்கிறேன்… இன்று மனதிற்குள்ளே கருவிக்கொண்டான்.
ஆம்… அதிகாலையில் புத்துணர்வுடன் கிளம்பி அலுவலகம் வந்த ஆதி தனது அறைக்குள் நுழையும் போது… அருண் படு ஸ்மார்ட் ஆக கிளம்பி வந்து அங்கே அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்தவுடன் முகம் மாறி…
வாடா… என்ன காலையிலேயே இந்த பக்கம் வந்து இருக்க…
நேத்து தான் விக்ரம் சொன்னானே… கொஞ்ச நாளைக்கு உன்னோட ஆபீசுக்கு வர சொல்லி… சோ இன்னைல இருந்து டெய்லி நா உன்னோட ஆஃபீஸ்க்கு தான் வரப்போறேன்… இங்க நம்ம ப்ராஜெக்ட் இருக்கு இல்லையா அத நான் பாத்துக்குறேன்… என்று கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து லேப்டாப்பில் அவன் வேலையை தொடங்கினான் அருண்…
மலரின் வரவை எதிர்பார்த்து பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அருணின் கண்கள்… வாயில் கதவை தொட்டு மீண்டது. அதைக் கண்ட ஆதிக்கு… ரத்தம் உயர் கொதிநிலையை கண்டது. பின் மலரின் குரலைக் கேட்டு அமைதியானான்…
சிறிது நேரத்தில் விக்ரம் விரு விருவென ஆதியின் அறைக்குள் நுழைந்தான்.
வந்தவன் நேராக அருணிடம்…
நீ என்னடா இங்க வந்து இருக்க உன்னோட ஆஃபீஸ்க்கு போலயா ?
நீதானடா மச்சான் கொஞ்ச நாளைக்கு ஆதி ஆஃபீஸ்க்கு வர சொன்ன… என்றான் கூலாய்..
அது நீ குடிச்சிட்டு குப்புற படுத்து கிடந்த பாரு அதனால சொன்னேன்? இப்ப தான் நீ தெளிவாயிட்டியே? ஒரு தடவை மலர் கிட்ட பேசணும்னு சொன்ன? மலர்கிட்ட பேசிட்டே இல்ல அப்புறம் என்ன?…
அது பேசிட்டேன் என் மேல ரொம்ப கோவமா இருக்கா… கொஞ்ச நாள் இங்க இருந்து அவளை சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்… என்று அருண் கூற…
ம்… நொட்டுவ… கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டிய கூட்டிட்டு போற மாதிரி சொல்ற… அந்தப் பிள்ளையை திரும்ப உங்க வீட்டு கூட்டிட்டு போனா… உன் பொண்டாட்டி உன்னை செருப்பால அடிப்பா… “நீ எல்லாம் ஒரு அண்ணனான்னு” என் பொண்டாட்டி என்ன செருப்பால அடிப்பா… என்றான் விக்ரம்.
விடுடா வாங்கிக்கலாம்.. என்றான் அசால்டாய்…
அவன் சொன்ன பதிலைக் கேட்டு மண்டை சூடு ஏறிய விக்ரம்… அருகில் இருந்த தண்ணீரை எடுத்து மடக் மடக் என்று குடித்தான்.
நேத்து நீ மலர் கிட்ட என்ன பேசின… என்று கேட்டான் விக்ரம்…
தாலி கட்டி, தனி வீட்ல போய் வாழலாம்ன்னு சொன்னேன்…
அடப்பாவி… என்று வாயில் கையை வைத்தவன்… அதுக்கு அவ என்னடா சொன்னா…
இனிமேல் இப்படி பேசினா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன் சொன்னா.. நம்ம பாக்காத போலீசா… பாவம் புள்ளைக்கு அது கூட தெரியல… என்று அருண் அசராமல் கூற…
அப்பாடா… என்று நெஞ்சில் கை வைத்து தன்னை சமன் படுத்திக் கொண்டவன்…. அப்படி மட்டும் மலர் போலீஸ் கேஸ்னு போனா மலர் கூட போய் சாட்சி கையெழுத்து போடுவதே நானா தான்டா இருப்பேன்…. என்றான் விக்ரம்.
இது எல்லாம் ரதிக்கு தெரிஞ்ச என்ன ஆகும்னு நினைச்சியா…
அவ நேத்தே நாங்க பேசினத பாத்துட்டு போனா… ஆனா என்கிட்ட ஒன்னும் கேட்கல… நானும் அவகிட்ட ஒன்னு சொல்லல…
ரதி ஏதாவது சொல்லி இருந்தா கூட பிரச்சனை முடிஞ்சது மச்சான்… உனக்கு குடைச்சல் கொடுத்தா கூட பரவாயில்லை… பாவம் மலருக்கு ஏதாவது குடைச்சல் கொடுக்கப் போகுது… உன்னால என்னைக்குமே மலருக்கு பிரச்சனை மட்டும்தான் டா… எங்க போனாலும் அந்த பிள்ளையை நீ நிம்மதியா வாழ விட மாட்ட போல… முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு…
முன் வச்ச கால பின் வைக்க மாட்டேன் மச்சான்…. அவளை கூட்டிட்டு தான் நான் இங்கிருந்து போவேன் என்று அவன் உறுதியாய் கூற.
உன்னோட பெரிய ரோதனையா இருக்குடா…என்று அருணை நொடிந்து கொண்டான் விக்ரம்.
இங்கு நாளை மறுநாள் நடக்கவிருக்கும் மீட்டிங்கிற்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டிருந்தாள் மலர்.
கைக்குள்ளேயே வைத்திருந்தவளின் முகம் காணாமல்… ஆதி தான் வாடி போனான்… அவ்வப்போது சிசிடிவியில் முகத்தை பார்த்துக் கொள்வான்… மலரை, அவன் அறைக்குள் நுழைய விட வில்லை.. அருணையும் அறையை விட்டு வெளியே அனுப்புவதில்லை.. ஆனாலும் வெகு நாட்களுக்குப் பின் நண்பர்களுடன் இருந்தது மனதுக்கு இதமாய் இருந்தது.
ஆதி , மலரின் முகத்தை கேமராவில் கண்டு கொண்டான்… ஆனால் மலர், அவளையும் அறியாமல் நொடிக்கு ஒருமுறை ஆதியின் அறைக்கதவை பார்க்க தவறவில்லை… ஆனால் தலைவனின் தரிசனம் தான் கிட்டவில்லை…
வேலை முடிந்து மலர் ஹாஸ்டல் கிளம்பி சென்றாள்.
அங்கு அவளுக்காகவே காத்திருந்தது போல் வார்டன் வாசலிலேயே நின்றிருந்தார்…
மிஸ். மலர்… நீங்க ஹாஸ்டல்ல வெகேட் பண்ணிக்கோங்க…
ஏன் மேடம்…
இல்லமா உங்க மேல எங்களுக்கு நிறைய கம்ப்ளைன்ட் வருது… அது இந்த ஹாஸ்டலுக்கு சரிப்பட்டு வராது… அதனால நீங்க ஹாஸ்டல்ல காலி பண்ணி போய் வேற பக்கம் பாத்துக்கோங்க… என்று அவர் கூற…
என்ன கம்ப்ளைன்ட் நான் யார்கிட்டயும் எந்த பிரச்சனையும் பண்ணலையே… யார் உங்க கிட்ட என்ன பத்தி கம்ப்ளைன்ட் பண்ணது என்று மலர் கேட்க…
அதெல்லாம் சொல்ல முடியாதுமா புடிக்கலான காலி பண்ணிக்கோங்க அவ்வளவுதான்… என்று அவர் கராறாய் மொழிய….
அது எப்படி மேடம் சரியாக எந்த ரீசனுமே இல்லாம உடனே காலி பண்ணுங்க ன்னு சொன்னா காலி பண்ண முடியுமா… ஐ நீட் வேலிட் ரீசன்… என்று மலர் அழுத்தமாய் கேட்க வேறு வழியில்லாமல்…
வார்டன் ஒரு பெரு மூச்சை விட்டு… உனக்கு இங்க ஹாஸ்டல் கொடுக்க கூடாதுன்னு சொல்லி மேல் இடத்துல யாரோ பிரஷர் பண்ணி இருக்காங்க… அதனால நான் உடனே ஹாஸ்டல்ல காலி பண்ண சொல்லி இருக்காங்க… எனக்கு இது மட்டும் தான் மா தெரியும்… இப்போ நீ காலி பண்ணலன்னா என்னோட வேலை தான் பாதிக்கும்… என்று அவர் உண்மையை கூற..
அப்பொழுதுதான் அருணும் மலரும் பேசிக்கொண்டு இருந்ததை ரதி பார்த்து விட்டு சென்றது ஞாபகம் வந்தது…
நான் புள்ள குட்டிகாரி… மா நீயே எந்த பிரச்சனையும் பண்ணாம இந்த ஹாஸ்டல்ல காலி பண்ணிட்டா ரொம்ப நல்லது என்று அவர் கையெடுத்து கும்பிட…
ப்ளீஸ் வார்டன் நானே போயிடுறேன்… என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்று தனது உடமைகளை பேக் செய்தாள் மலர்…
இது இந்த ஹாஸ்டலுடன் நிற்க போவதில்லை… அவள் போகும் ஹாஸ்டலுக்கு எல்லாம் அருண் பின் தொடர்வான் என்றும் அறிவாள் அதனால் ரதி இந்தப் பிரச்சினையை தொடர்வாள் என்றும் அவள் அறிவாள்.. இப்பொழுது இந்த இரவில் எங்கு செல்வது.. என்று பல தரப்பட்ட யோசனைகளுடன்… மலர் தனது உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டு ஹாஸ்டல் வாசலை வந்தடைந்தாள்.
இப்பொழுது என்ன செய்யலாம் ஆதிக்கு அழைக்கலாமா? என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கையில்… ஆதியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்..
சொல்லுங்க சார்…
காலையில உங்க கிட்ட நந்தினி ஒரு பைல் கொடுத்து இருப்பாங்களே அது எங்க வச்சீங்க? என்று கேட்க…
அவள் அதைப் பற்றி விபரம் கூறினாள்…
ஏன் குரல் ரொம்ப டல்லா இருக்கு எதுவும் பிரச்சனையா? என்று ஆதி கேட்க…
ஒரு ஆழ்ந்த மூச்சு உடன்… ம்ம்ம்.. ஹாஸ்டல்ல வெக்கேட் பண்ண சொல்லிட்டாங்க… என்ன பண்றதுன்னு தெரியல.. என்று அவள் கூற..
இப்போ எங்க இருக்க?
ஹாஸ்டல் வாசல்ல…
அங்கேயே இரு பத்து நிமிஷத்துல நான் வந்துருவேன்… என்று கூறிவிட்டு போனை வைத்தவன் ஐந்து நிமிடத்தில் வந்திருந்தான்.
என்ன பிரச்சனை? வா போய் என்னன்னு கேட்கலாம்?… என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க… என்று அவன் சண்டையிடும் தோரனையில் சட்டையை மடித்து விட்டு சிலுப்பிக்கொண்டு முன்னே செல்ல…
ஐயோ சார், வேணாம்… வேணாம்… அதை யாரோ மேல் இடத்துல பிரஷர் பண்ணாங்கலாமா… அதுக்கு இங்க இருக்கிற வார்டன் என்ன பண்ணுவாங்க அவங்க பாவம்…
சரி இப்ப என்ன பண்ணலாம்… என்று ஆதி நிதானத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க..
இருவரும் காரில் ஏறி அமர்ந்தார்கள்… சரி இப்ப சொல்லு… ஏற்கனவே எல்லா ஹாஸ்டலும் ஃபுல் ஆயிடுச்சு அதனால தான் இந்த ஹாஸ்டல்ல ஜாயின் பண்ணோம்… திரும்ப போய் எல்லா ஹாஸ்டல்லையும் செக் பண்ணி பாப்போமா? என்று கேட்டான் ஆதி…
இல்ல சார் வேணாம்… என்றாள் மலர்
அப்போ உன்னோட ப்ரெண்ட்ஸ் வீடு இங்க ஏதாவது இருந்தா சொல்லு அங்க போய் இறக்கி விடுறேன்… என்று ஆதி சொல்ல…
இல்லை என தலையசைத்தாள் மலர்…
ஒரு பிரண்ட் கூடவா உனக்கு இங்க தெரியாது… என்று ஆதி கேட்க…
“டிங்” என்ற மணி அடித்தது மலரின் மண்டையில்… தெரியும் சார்… ஆனா என்ன அவங்க வீட்ல சேர்ந்துபாங்களான்னு தெரியவில்லை….
பிரண்டுன்னு சொல்லி இருக்க அப்புறம் உன்னை விட்டுக்குள்ள எப்படி சேர்க்காம இருப்பாங்க… இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கூட உதவாம இருப்பாங்களா? என்று ஆதி கேட்க… அவங்ககிட்ட நான் பேசுறேன்…
அப்போ நேரா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருங்க… என்று மலர் கூற…
ஆதியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய… மனமோ நடுரோட்டில் இறங்கி “டப்பாங்குத்து” ஆடியது.
எனக்கு இப்போதைக்கு இந்த ஊர்ல தெரிந்த ஒரே பிரண்டு நீங்க தான்… நம்ம வேற எங்கேயும் தேட வேண்டாம்.. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கலைன்னா நாம உங்க வீட்டுக்கு போயிறலாம்… என்று மலர் உறுதியாய் கூற..
அது… வீட்ல நான் மட்டும் தான் தனியா தங்கி இருக்கேன்… வேற யாரும் இருக்க மாட்டாங்க… என்று தயங்கிய படி விளக்கி பின் ஒரு கணம் அமைதியாகி…
ஆர் யூ சுயர்… என்று சந்தேகமாய் அவளைப் பார்த்து தலையசைத்து கேட்க…
அவன் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்தவள்… 100% சுயர் சார்.. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… என்று கண் சிமிட்டினாள் மலர்.
ஆனா என் மேல எனக்கு நம்பிக்கை இல்லையே… என்று ஆழ்ந்த மூச்சுடன் தலையசைத்து விட்டு,
ஆதியின் வீட்டை நோக்கி கார் பயணப்பட்டது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️