அசுரன் 65
மீட்டிங் காலில் அனைவரும் கூடியிருந்தனர். விக்ரம் அருண் இருவரும் இருக்கையின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்… மலர் கடைசியில் வந்து தனது நண்பர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
மலர் உடன் சேர்ந்து இன்னும் இரண்டு பேர் இன்று பிரசன்டேஷன் செய்கிறார்கள்…. மற்ற இருவரும் அனுபவசாலிகள் மலர் மட்டுமே புதியவள். அதனால் கொஞ்சம் படபடப்பாய் இருந்தாள்.
மலரை பார்த்த அவளது நண்பர்கள், ஏய் இந்த லுக் உனக்கு சூப்பரா இருக்கு… நைஸ் சாய்ஸ் என்று பாராட்டினர்…
அதுவே அவளுக்கு ஒரு புத்துணர்வை தந்தது.
அருணின் பக்கத்தில் இருந்த இருக்கை காலியாகவே இருந்தது அதை அவளும் கவனித்தால் அது ஆதியின் இருக்கை… சார் இன்னும் வரலையா… அய்யய்யோ மீட்டிங் ஸ்டார்ட் ஆக போகுதே… என்று படபடத்தவள் வேகமாக அவனுக்கு மெசேஜ் தட்டி விட்டாள்… பதில் இல்லை…
இந்த பிரசன்டேஷன் அவங்க கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ண நந்தினி ஓட டீம்ல இருந்து… மிஸ். தேன்மலர் சந்திரன்… வராங்க என்று அறிவித்துவிட்டு அறிவிப்பாளர் பெண் கீழே இறங்கி விட்டாள்..
பெயரைக் கேட்ட அருண் சலித்துக் கொண்டான்… ஏண்டா வருஷம் வருஷம் இப்படி ஏதாவது ஒரு ஆன்ட்டியை ஏத்தி விட்டு பேச விடுறிங்களே உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா என்றான் விக்ரமை பார்த்து….
அதிர்ந்து விழித்தான் விக்ரம்… என்னடா சொல்ற…. அது யாருன்னு உனக்கு தெரியாதா?…
யாரு போன வருஷம்… சால்ட் அண்ட் பேப்பர் லுக்குல ஒரு ஆன்ட்டி வந்தாங்களே அவங்களா… என்று அருண் கேட்க….
( இதில் ஆக சிறந்த விஷயம் என்னவென்றால் மலரின் முழு பெயர் அருணுக்கு இதுவரையும் தெரியாது… எல்லோரும் கூப்பிடுவதை வைத்து அவளின் பெயர் மலர் என்பது வரை தெரிந்து வைத்திருந்தான்.)
இப்ப ஸ்டேஜ்க்கு வருவாங்க நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ…. என்றான் விக்ரம் கடுப்பாக…
சக ஊழியர்களின் கைத்தட்டலுக்கு நடுவே மேடை ஏறினாள் மலர்.
மலரை பார்த்து வாயை பிளந்தான் அருண்… என்னடா இவ வந்து இருக்கா…
என்னோட தங்கச்சி பேரு தான் மிஸ்ஸ்ஸ்.தேன்மலர் சந்திரன் அந்த “மிஸ்”ஸில் அழுத்தம் கொடுத்து சொன்னான்… விக்ரம்.
யாராவது பிரஷரை போய் பிரசன்டேஷன் பண்ண அனுப்புவாங்கலடா… அவமானப்பட்டு வரப்போறா… என்று மலருக்காய் அனுதாபப்பட்டான் அருண்.
அத பிரசன்டேஷன் முடிச்சதுக்கு அப்புறம் சொல்லு… என்று பேச்சை நிறுத்தினான் விக்ரம்.
மேடைக்கு வந்தவள் லேப்டாப்பை ஆன் செய்து ப்ரொஜெக்டரை ஸ்கிரீனிங் சரி செய்து கொண்டு இருந்தாள்… ஆனால் அவளின் கண்கள் வாசலையும் ஆதியின் இருக்கையையும் அவளுடைய போனையும் ஒவ்வொரு நொடியும் ஏக்க மூச்சு உடன் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது… முன்னெடுப்புகளை சரியாய் முடித்த அவளின் முகம் மட்டும் மூஞ்சூறு போல் இருந்தது…. சட்டென அவள் போனில் வெளிச்சம் பரவ எடுத்துப் பார்த்தாள்… ஆதி தான் மெசேஜ் செய்திருந்தான்… let’s start…. you can do it… இதை படித்தவுடன் இதழில் புன்முறுவல் பூத்தது… அப்படியே குறுநகையுடன் அவளுடைய உரையை ஆரம்பித்தாள்…. அனைவரையும் நேராய் நிமிர்ந்து பார்த்து அவளது பிரசன்டேஷனை அழகாய் நேர்த்தியாய் வழங்கி கொண்டிருந்தாள்… ஆதிக்காக காத்திருந்த வெற்று இருக்கையே அவனுடைய இருப்பை மலருக்கு உணர்த்தியது.

அவளின் ஆங்கில புலமை கண்டு, உச்சரிப்பின் தெளிவு கண்டும்… அதிசயத்துப் போனான் அருண்.
அருகில் இருந்த விக்ரமிடம், என்னடா இந்த போடு போடுறா என்னடா படிச்சிருக்கா… என்று கேட்க
அருணை ஒரு மார்க்கமாய் பார்த்தவன்…
பி. இ. ஆர்க்கிடெக்சரள் இன்ஜினியரிங் என்று கூறி ஒரு நிமிடம் நிறுத்தி… ஐஐடி மெட்ராஸ்… என்று பார்வையை பிரசன்டேஷனில் வைத்து விட்டு முகத்தை மட்டும் பக்கவாட்டில் திருப்பி கூற…
தூக்கி வாரி போட்டது அருணுக்கு…. ஏனென்றால் அந்த காலேஜில் சீட்டு கிடைக்க நுழைவுதேர்வு எழுதி தோற்றவர்களில் விக்ரமும் அருணும் முதலிடம்… ஆதிக்கு மட்டுமே இடம் கிடைத்தது அவனும் நண்பர்கள் இல்லா இடத்தில் படிக்க விருப்பம் இல்லாமல் அதை தவிர்த்து விட்டான்…
இவ எப்படி டா என்ட்ரன்ஸ் பாஸ் பண்ணா… மலர் 12 ல டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்… எனக் கூற…
அருணுக்கு புரை ஏறியது… தனது அருகில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தான்…
அப்போ எதுக்குடா அவளை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல வேலைக்கு சேர்த்து விட்டிருந்தாங்க…
அவங்க அப்பா இறந்து போனதினால லாஸ்ட் செமஸ்டர் அவளால படிக்க முடியல… டிகிரி இல்லாம பக்கத்துல கிடைச்ச வேலைக்கு போய் இருக்கா…
அப்புறம் எதுக்குடா நம்ம வீட்ல வேலைக்காரியா வச்சிருந்தீங்க… என்று அருண் ஓர் ஆர்வத்தில் கேட்க…
மீட்டிங் நடக்கும்போது செருப்பை கழட்டி அடிக்க மாட்டேன் நெனச்சிட்டு பேசாத… மூடிக்கிட்டு மீட்டிங்க கவனி… என்றான் விக்ரம் எரிச்சலின் உச்ச கட்டத்தில்…
மலர், அருண் மற்றும் விக்ரமை கவனிக்கவே இல்லை… நினைவுகள் முழுதும் ஆதியே நிரம்பி இருந்தான்.
அருணின் கண்கள் மலரை தான் நோட்டமிட்டு கொண்டிருந்தன… நம்ம வீட்ல இருக்கும் போது இவ்வளவு அழகா தெரியலையே…. இப்போ என்ன அநியாயத்துக்கு அழகா தெரிகிறா… என்று அருண் யோசித்துக் கொண்டு இருக்கையில்… அது பெண்ணவளின் தன்னம்பிக்கையையும், தைரியத்திலும் வந்த ஒளி வட்டம் என்று அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது… அவன் வீட்டில் இருக்கும் பொழுது அவளை தாழ்வு மனப்பான்மையில் உடைத்தல்லவா போட்டு வைத்திருந்தான் மூலையில்…
டேய் என் வீட்ல இருக்கும் போது இவன் இப்படி எல்லாம் டிரஸ் பண்ண மாட்டாடா எப்ப பாரு ஒரு அழுக்கு சேலை… ஏத்தி போட்ட கொண்ட… எண்ண வடிச்சு மூஞ்சி இப்படிதாண்டா இருப்பா…
ஓரக்கண்ணில் அவனை மேலும் கீழும் பார்த்த விக்ரம்… என்ன அசிங்கமா கேட்க வைக்காத டா மச்சான்…. சமையல் கட்டுல எல்லா பெண்களும் அப்படித்தான்டா நிப்பாங்க பின்ன ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட் போட்டா வந்து நிக்க முடியும்… என்றான் ஏக கடுப்பாய்….. அப்புறம் அவளுக்கு நீ இதுவரைக்கும் எத்தனை டிரஸ் எடுத்து கொடுத்து இருக்க…. உன்கிட்ட விதவிதமா போட்டு காமிக்க…
நினைத்துப் பார்த்தான்…. அவளுக்கென்று ஒரு கர்ச்சிப் கூட அவன் செலவில் வாங்கி தந்ததில்லை…
அவ படிச்சிருக்கானு எனக்கு தெரியாதுடா… சொல்லியிருந்தா அப்பவே… அருண் ஏதோ சொல்ல வர…
ஆபீஸ்ல ஆயா வேலை போட்டு கொடுத்திருப்ப… என்று வார்த்தையை முடித்து வைத்தான் விக்ரம்.
இத்தனை நாள் நம்ம வீட்ல இருந்து இருக்கா… ஒரு நாள் கூட அவ படிச்சத கண்டு பிடிக்க்கவே முடியல பாரேன்… என்றான் அருண் ஆதங்கமாய்…
அதை ஏண்டா நீ கண்டுபிடிக்கணும் அவகிட்ட கேட்டு இருந்தா அவளே சொல்லி இருப்பாளே… என்றான் விக்ரம் கேலியாய்…
அதுவும் சரிதான்… நான் இதுவரைக்கும் அவ கிட்ட பேரே கேட்டதில்லை… இது எங்க கேக்க போறேன்.. என்று புலம்பினான்…
ஒரு கையினால் தனது வாயை மறைத்துக் கொண்டு அருண் பக்கமாக திரும்பி அருணின் முகத்தைப் பார்த்து “த்து” என துப்பினான் விக்ரம்.
எதுக்குடா இவ்வளவு கேவலமா துப்புற….
அந்த பொண்ணோட பேரு கூட தெரிஞ்சுக்காம தான் காதலிக்கிறேன் பொண்டாட்டி, காதலி அப்படின்னு சொல்லிக்கிட்டு திரியிறியா நீ… மரியாதையா நாளையிலிருந்து நீ உன் ஆபீஸ்க்கு போற இனிமேல் மலர் பின்னாடி சுத்துறத பார்த்தேன் நானே போலீஸ்ல போய் கம்ப்ளைன்ட் பண்ணுவேன் என்றான் விக்ரம்.
மலர் பர்சன்டேஷனை வெற்றிகரமாக முடிக்க… பலர் தங்கள் கைகளில் உயர்த்தி நிறைய சந்தேகங்கள் கேட்க, எளிய எடுத்துக்காட்டுகளுடன் அழகாய் விளக்கினாள்… தேங்க்யூ எனக் கூறி அவள் மேடையில் நிற்க… ஒரு கண அமைதிக்குப் பின்…
விக்ரம் முதற்கொண்டு அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்… அவ்வளவு நேர்த்தியாய் இருந்தது அவளின் பிரசன்டேஷன்…
ஆர்ப்பரிக்கும் கைத்தட்டலுக்கு நடுவில் உண்மையில் மலர்க்கு இது மிக நெகிழ்வான தருணம்…. உணர்ச்சியின் விளிம்பில் உதட்டை கடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்… பார்வையிலும் தீண்டலிலும் தான் காதல் தோன்றுமா?.. இதோ எந்தப் பிரதிபலனும் இல்லாமல் என்னை வெற்றி பெற வைத்து அழகு பார்த்து இருக்கிறானே… இப்பொழுது காதல் தோன்றாமல் பின் எப்பொழுது தோன்றுவது…. கனவுகளையும் ஆசைகளையும் தொலைத்து முடங்கிப் போனவளை முன்னேற்றி காட்டி இருக்கிறான்…. இதற்கு மேல் ஒரு ஆணிற்கு என்ன தகுதி வேண்டும் வாழ்க்கை துணையாய் வருவதற்கு…. அவள் வாழ்க்கையில் கண்ட முதல் ஆண்மையின் அழகன் அவன் தான்… ஏச்சுப் பேச்சுகளுக்கு இடையே தன்னுடைய வாழ்க்கை அப்படியே சிதைந்து போய்விடும் என்று எண்ணி இருக்க…. இதோ அவளின் திறமை தெரிந்து அதை மெருகேற்றி மேடை ஏற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்தவனை உடனே தேடி சென்று கட்டிக் கொள்ள ஆசை வந்தது. இக்கணம் முடிவெடுத்தாள் ஒரு நொடியினும் இனி அவனுடன் தான் தன் வாழ்க்கை என…. காதல் தோன்றிய நேரமோ என்னமோ… அவள் கண்ணில் கண்ணீரும் தோன்றியது… ஆம் ஆனந்த கண்ணீர்… அவளை ஆட்டுவித்த கவலையில் எல்லாம் வராத கண்ணீர்… தாள முடியாத நெகிழ்ச்சி தருணத்தில் எட்டிப் பார்த்தது… ஒரு துளி தான்… கண்ணில் ஈரத்தை உணர்ந்தவள் ஆச்சரியப்பட்டாள்…
அனைவரும் தெரிவித்த பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டு நெஞ்சில் கை வைத்த படி நன்றி தெரிவித்தவள்… தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு… கலங்கிய கண்ணை துடைத்த படி, வேகமாய் ஆதியின் அறை நோக்கி சென்றாள்….
கதவை திறந்து உள்ளே நுழைய அங்கே ஆதி லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டு இருந்தான்…
ஆனால் அறையில் இருந்து கொண்டு தன்னைப் பார்க்க வராதவன் மேல் கோபம் வந்தது அவளுக்கு…. மூச்சிரைக்க ஓடி வந்தவள்… அவன் சாதுவாய் அமர்ந்திருப்பதை பார்த்து… கோபம் கொண்டு, சார் நீங்க வந்துட்டீங்களா? அப்புறம் ஏன் மீட்டிங் வரல…. நான் உங்களை கடைசி வரைக்கும் எவ்வளவு எதிர்பார்த்தேன் தெரியுமா… என மூக்கை விடைத்தாள்… நீங்க இருந்தா எனக்கு கொஞ்சம் தைரியமா இருந்திருக்கும் என்று நினைத்தேன். நான் பிரசண்ட் பண்றத பாக்குறதுக்கு உங்களுக்கு விருப்பம் இல்லையா?…. இதுக்கு நீங்க என்கிட்ட காலையிலேயே சொல்லி இருக்கலாமே…
நான் உங்களை எதிர்பார்த்திருக்கவே மாட்டேன்…..யூ ஹர்ட் மி… என்று கூறிவிட்டு…. ஸ்கூல் ஆனுவல் டே ஃபங்ஷனுக்கு தந்தை வருவதை எதிர்பார்த்து ஏமாந்த சிறுமி போல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு…. விரக்தியாய் வெளியேற போனவளை தடுத்து நிறுத்தியது…. லேப்டாப்பில் ஓடிய அவளது காணொளி….
ஆம் அவள் அங்கு பிரசன்ட் செய்து கொண்டிருந்ததை தனது அறையில் உட்கார்ந்து லேப்டாப்பில் முழுவதும் கண்டுகளித்தான் ஆதி.
இவ்வளவு நேரமும் அவள் கோவமாக பேசுவதை கைகட்டி அமைதியாக, மேசையின் மேல் சாய்ந்து ஒரு காலின் மேல் மறு காலை ஊன்றி நின்று சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
லைவ் ரிலே… கொஞ்சம் டிலே… என்றான் என்ன பார்க்கிற என்பது போல் அவனது இரு புருவதையும் தூக்கி கேட்க… இப்போது
மலரின் உலகம் அந்த இரு காந்த புருவத்தின் மத்தியில் சிறை ஆனது…
நீ யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுன்னு தான்… வேலைக்கு வந்து இருக்க… இங்க வந்து என்ன சார்ந்து நீ இருக்கக் போறியா… காலம் ஃபுல்லா உனக்கு தைரியம் கொடுக்க நான் வர முடியாது மலர்… உனக்கு எப்பவுமே நீ தான் தைரியம் கொடுத்துக்கணும்… ட்ரெஸ்ட் யுவர் செல்ப்… ஒருவேளை நான் மீட்டிங் வந்து இருந்தா… நான் சொல்லிக் கொடுத்த மாதிரி சரியா பண்றியா அப்படின்னு உனக்குள்ளேயே ஒரு சந்தேகம் வரும்…. ஒரு சிறு தவறு செய்தாலும் என்னைய பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு தடுமாற்றம் வரும்… அதுக்காகத்தான் ரூம்லயே இருந்துட்டேன் பட் உன்னோட ஃபுல் பிரசன்டேஷன் நான் பார்த்தேன் குட் ஜாப்… என்றான் மெல்லிய கைத்தட்டலுடன்…
அவ்வளவுதானா!…என்பது போல் அவள் பார்க்க…
நான்தான் காலையிலேயே சொல்லிட்டேனே நீ எப்படி பிரசண்ட் பண்ணுவ அப்படின்னு… என கூறிவிட்டு கண்களால் அவள் கையில் கட்டி இருக்கும் வாட்ச்சை காண்பிக்க… தேங்க் யூ என்றாள் சிரித்தபடி…. ஆனால் அவள் அதை எதிர்பார்க்கவில்லையே…
ஒரு மிதமான அணைப்பு… ஒரு சிறு கைகுலுக்கல்… எதுவுமே கிடையாதா?… என்ன தோன்றியது பெண்ணிற்கு… அப்ப நீ இதெல்லாம் எதிர்பார்த்து தான் வந்தியா… என்று அவளின் மனசாட்சி கழுவி ஊற்றியது…
அவனைத்தான் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் மலர். ஏற்கனவே துளிர்விட்ட காதல்… ஆலமரம் போல் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது… இன்று அவனின் இந்த பதிலை கேட்டதும்… ஆடவன் முழுதாய் ஆக்கிரமித்து விட்டான் பெண்ணின் மனதை…
அவனுடைய ஒவ்வொரு செயலிலும் அவள் மீதான அக்கறை… அவளை இந்த பூமியில் ஒரு தேவதையாய் உணர வைக்கிறது… 😇 இக்கணம் பூமியில் ஒரு தேவதையை உருவாக்கிய தேவன் அவன். அவளின் காதல் தேவன் இந்த தேவாதித்யன்…❤️
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️