அசுரன் 77

அசுரன் 77

தேவா… தேவா… எந்திரிங்க…  காபிய குடிங்க…  விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆச்சு பாருங்க… எழுந்து சாப்பிட்டு தூங்குங்க…  

என்று அவன் காதல் மனைவி விடியற்காலையில் தேன் குரலில் எழுப்பி கொண்டு இருக்க… அவளின் கொலுசு சத்தம் உணர்ந்தவன்.. முழிப்பு வந்தும் தூங்குவது போல் நடித்துக் கொண்டு இருந்தான்… அவள் கிட்டே வரும் சத்தம் கேட்டதும்.. கை நீட்டி இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்…

 

ஆபீஸ்ல நேத்து எவ்ளோ டென்ஷன்னு நான் சொன்னேனே நீ கவனிக்கவே இல்லையா.. ஓவர் பிரஷர்… நைட்டு தூக்கமே வரல… அப்புறம் எப்படி காலைல சீக்கிரம் எந்திரிக்கிறது.. கைகள் மெல்ல அவளின் வெற்று முதுகை வருடி முடித்து இடைக்கு பயணம் செல்ல தயாராகியது…

 

விடுங்க நீங்க… அழுக்கு பயனா இருக்கீங்க… போய் குளிச்சிட்டு வாங்க… என்று அவள் சிணுங்க…

 

நான் குளிக்கிறது இருக்கட்டும் முதல்ல நீ யாரை கேட்டு டி குளிச்ச… என்று அவளின் முன்நெற்றியில் முத்தமிட்டு உச்சி முகர்ந்தவரே கேட்டான்  ஆதி…  

 

யாரை கேட்கணும்.. முதல்ல பெட்ட விட்டு எந்திரிங்க என்று பொய்யாய் அதட்டினாள்…

 

என்ன்ன கேட்கணும் டி.. என்று ஒற்றை விரலால் தன்னை  சுட்டிக்காட்டியவன்…  என் ப்ராப்பர்ட்டி மேல நீ கை வைக்கிறதுக்கு முன்னாடி என்ன கேட்கணும்..  என்றான் அழுத்தமாய்…

 

அவன் கூறியதை கேட்டு காது மடல் சிவந்தவள் பொய்யாய் அவனை முறைத்துக் கொண்டு கட்டிலில் இருந்த பெட்ஷீட்களை சரி செய்தாள்…

 

காலையிலேயே என்னை இப்படி குறுகுறுன்னு பார்த்து… டெம்ப்ட் பண்ணாத… அப்புறம் நடக்குற விபரீதத்துக்கு நான் பொறுப்பாக முடியாது..  என்று ஆதி ஒற்றைக் கண்ணை அடித்து கூற…

 

நான் வரல சாமி இந்த விளையாட்டுக்கு எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு..  நான் போறேன்… என்று அவள் கூறிவிட்டு திரும்ப…

 

அங்கு கதவு அடைத்திருந்தது… கள்வன் தான் அவள் உள்ளே வரும்போது ரிமோட்டினால் கதவை சாத்தி இருந்தான்.. 

 

ஊப்ப்.. என்று இடுப்பில் கைவைத்தபடி வானத்தை பார்த்து ஊதியவள்.. தேவா… கதவ ஓபன் பண்ணுங்க என்று சொல்ல…

 

ஓபன் பண்ணிட்டா போச்சு… என்றபடியே தன் இருக்கைகளையும் வில்லத்தனமாய் தேய்த்துக்கொண்டு  அவளை நெருங்கினான்…

 

டைம் என்ன தெரியுமா? 11 ஓ கிளாக் ஆகுது டிபன் சாப்பிட வேணாமா? என்று அவள் கேட்க…

 

அதையே தான் நானும் கேட்கிறேன் இன்னும் டிஃப்பனே சாப்பிடாம இருக்கோம்… திரும்ப எனக்கு லஞ்ச் வேற வேணும்… இப்படியே லேட் பண்ணி லேட் பண்ணி நைட் டின்னர் சாப்பிட்டு முடிக்கும் போது கோழி கூவிடுது,. என்று பேச்சின் இடையே  அவளை பின்னால் கட்டிக் கொண்டு தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டே தாப போதையில்  கூறினான் ஆடவன்… அவன் கிறங்கிய குரல் சொல்லியது அவளுக்கு, அவன் வயிற்று பசியைப் பற்றி பேசவில்லை என்று…

 

ப்ளீஸ்… தேவா வேணாம் விடுங்க… என்று பெண் அவள் சிணுங்க ஆரம்பிக்க… 

 

அந்தக் குரலே போதும்… அவனை போதை ஏற்ற… தூக்கிக் கொண்டு சென்றான் குளியல் அறைக்கு… முதுகில் மனைவியிடம் இரண்டு மூன்று அடியை பரிசாகவும் பெற்றுக் கொண்டான்…

 

தேவா..  தேவா… என்று முனங்கியே பெண்ணவளுக்கு தொண்டை நீர் வற்றி போயிருந்தது… தண்ணீர் சத்தத்துடன் போட்டி போட்டது அவள் வளையில் சத்தம்…

தூக்கி சென்றவன் அவள் உடம்பில் இருந்த மொத்த சத்து அனைத்தையும் உறுஞ்சி தன்னுடம்பிள் உரம் ஏற்றிக் கொண்டு தான் அவளை விட்டான்.

 

அவளை பூப்போல குளியல் அறையில் இருந்து தூக்கி வந்து படுக்கை அறையில் படுக்க வைத்தவன்… கிச்சன்  சென்று சத்துமாவு கஞ்சி காய்ச்சி எடுத்து வந்தான்… அவளுக்கும் ஊட்டி விட்டு தானும் குடித்து, பழங்களை நறுக்கி அவள் வாயில் ஊட்டி பின் அவன் வாய்க்கு மாற்றி.. வெட்கப்பட வைத்து, சிணுங்க வைத்து, சாப்பிட வைத்து, பின் உறங்க வைத்தான்…

 

இது அவனில் தினம் நிகழும் கனவு தான்.. அவனின் ஒவ்வொரு வேலையிலும் அவள் நிறைந்திருந்தாள்… அவன் மூச்சு விடவும் அவள் வேண்டும்…  அவனின் அனைத்திற்கும் அவள் வேண்டும்… 

 

தூக்கத்திலிருந்து கெஞ்சி கொஞ்சி எழுப்ப…

அவனுக்கு பிடித்ததை பார்த்து பார்த்து சமைக்க…

போதும் என சொன்னவனுக்கு “இன்னும் கொஞ்சம்” என்று சாப்பாடு பரிமாற…

 

சேர்ந்து அமர்ந்து சாப்பிட.. 

முதல் வாய் உணவு அவனுக்கு ஊட்டி விட.. 

பொறையேறும் பொழுது  தலையை தட்டி விட.. 

 

குழந்தையாய் அவனது காதை திருக… 

சீவிய தலையின் சிகையை கலைக்க…

 

அந்த பட்டனை கொஞ்சம் பூட்டுங்களேன்… என்று அவன் உடலை மறைக்க.. 

 

அவனின் முகம் பார்த்து என்ன ஆச்சு இன்னைக்கு என்று அவனின் கையைப் பிடித்து கேட்க..

 

அழகன் டா என்று அவனை சுற்றி திருஷ்டி கழிக்க..

 

கண்ணை பார்த்துக்கொண்டே காதல் பொய் உரைக்க…

 

அடுத்த பெண்களின் கண்ணில் அவன் படாமல் மறைக்க..

 

அவன் இல்லாத போதும் அவன் நினைவில் அவன் புகைப்படத்திற்கு முத்தம் வைக்க…

 

தூங்கும் போது அவனை குழந்தையாய் ரசிக்க..

 

அவனை முத்தம் வைத்தே முத்தம் வைத்தே கிறங்க செய்ய…

 

வாடி இருக்கும் முகம் கண்டு கையை நீட்டி வா என வாஞ்சையாய் அணைக்க…

 

அவனை உச்சி முகர..

 

அவளுக்காக சமைப்பவனின் வியர்வையை தன் சேலை முந்தியால் துடைக்க…

 

அவள் எச்சிலில் கரைய…

 

அவள் கால் விரலில் நெட்டி எடுக்க…

 

அவன் மடியில் உட்கார்ந்து தோளில் புதைய…

 

பற்றி எரியும் இளமை தீயை.. மோக போர்வையில் அணைப்பதற்கு.. 

 

காய்ச்சல் பொழுதிலும் அவனைக் கட்டி அணைத்து தூங்க…

 

கடைசி மூச்சிலும் அவனுக்கான காதல் அவள் கண்ணில் தெரிய.. 

 

இன்னும் இதுபோல் ஆயிரம் ஆசைகள்… அவளால் நிறைவேற்றப்பட வேண்டும்…

அவளின் வாசம் அந்த வீடு முழுவதும் நிரம்பி இருந்தது.. அதற்காகவே அந்த வீட்டினுள் யாரையும் அவன் அனுமதிப்பதே இல்லை…

அங்கு அவனும் அவளும் மட்டும் தான்… அவளுக்கென்று தோட்டத்தில் ஒரு மல்லிகை பந்தல் வளர்த்தான்…

மனம் சரியில்லாத பொழுது அதன் அடியில் தான் போய் படுப்பான்.

 

அவனைப் பொறுத்தவரை அவள் ஒரு வினைத்தொகை… வாழ்ந்தான்… வாழ்கிறான்… வாழ்வான்… அவளுடன் அவன் வாழ அவளே தேவையில்லை அவள் நினைவுகளை போதும்… 

 

ஆதியின் விபத்து நடந்து பின் ஒரு வாரத்திற்கு முழங்காலுக்கு கட்டாய ஓய்வு விடுக்கும்படி மருத்துவர் பரிந்துரைக்க… நண்பர்களின் கட்டாயத்தால் படுக்கையில் இருக்க வேண்டிய நிலைமை… அதுவே அவன் வாழ்க்கைக்கு இம்சையாய் போனது… கண்ணை மூடினால் அவளின் முகம் தான் தோன்றி இம்சை செய்தது. ஒரு வாரத்தில் மனதிற்குள் அசைக்க முடியாதபடி சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டாள் பெண்ணவள்… ஒருவேளை அடுத்த நாளிலிருந்து அவன் மற்ற பணிகளை பார்த்திருந்தால் கூட ஓரளவு அவளை மறக்க சந்தர்ப்பங்கள் அமைந்திருக்கும்… வேலையில் மூழ்கி இருப்பான்… இப்பொழுதோ 24 மணி நேரமும் அவளைப் பற்றியே சிந்திக்க வேண்டிய சூழல்…

 

பேர கூட கேட்காம வந்துட்டோமே… ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல… எந்த காலேஜ்ல படிப்பா… ஷி இஸ் லுக் அ லைக் மை மாம்… என்று சிந்திக்க ஆரம்பித்தவன்…

 

அவள் நினைவுகளிலேயே அவளுடன் வாழ ஆரம்பித்து விட்டான்.

 

தன் கால் முதலில் சரியானதும் அவன் தேடி சென்றது விபத்து நடந்த இடத்திற்கு தான்… பெயர் தெரியாத ஒருவளை எங்கு தேடுவது… அவளின் மதிமுகம் மனதிற்குள் மட்டுமே இருக்க… பித்து பிடித்தது ஆடவனுக்கு… அந்த ஏரியாவில் வசிக்கும் பெண் இல்லை அவள்… ஏரியா பெண்களின் தோழியும் அல்ல… எதற்காக வந்தாள் என்றும் தெரியவில்லை…. மீண்டும் அவள் வருகிறாளா என்று பார்ப்பதற்கே அங்கு சம்பளத்திற்கு ஒருவனை நியமித்திருந்தான்… தேன்விழி அழகியை தேடிப்போன பயணம் எங்கும் முட்டுக்கட்டை… அருகில் இருந்த சில கல்லூரி கல்லூரிகளில் கூட தேடினான். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் தேடினான்… ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் எந்த தடயமும் கிடைக்கவில்லை….

 

குறைந்தபட்சம் பெயர், ஊர் ஏதாவது ஒன்று தெரிந்திருந்தால் கூட கண்டு பிடித்து இருப்பானோ என்னவோ…

 

தேடினான்.. தேடினான்… அவளுடன் வாழ்ந்து கொண்டே தேடினான்…

மனம் தளரவில்லை…

 

முதலில் ஒரு மகன் பிறந்தான்… இரண்டாவது மகள்… மூன்றாவது இரட்டையர்கள்… என்று நீண்டு கொண்டே சென்றது அவனது காதல் பயணம்…

 

இதோ இந்த படுக்கையில் அவளுடன் கூடி கழிக்காத நாளே இல்லை… அவனுடைய தலையணைக்கு உயிர் இருந்தால் அதுவும் நான்கு குட்டி போட்டிருக்கும்…. 

அவனுடைய படுக்கையும், போர்வையும்… பெயர் தெரியாத அந்தப் பெண் மேல் இரக்கப்படும்… “உன்ன நெனச்சிட்டு எங்களவே இந்த பாடு படுத்துறானே..  நீ மட்டும் கைல கெடச்ச… “

அவளுடன் பகிர்ந்து கொள்ளாத அந்தரங்க விஷயங்களை இல்லை… விடிந்ததும் அவள் முகம் தெரியும்.. இரவில் அவன் தூக்க கலக்கத்தில் கண்ணை மூடும் போதும் அவளின் முகம் தான் தெரியும்..  அது போதும் அவனுக்கு…

 

அவன் படித்த அத்தனை கவிதைகளும் அவளுக்கே சமர்ப்பணம்..  

அவன் ரசித்த காதல் பாடல்களின் மொத்த அர்த்தமும் அவள்தான்…

அவனைத் தேடி வந்து காதல் சொன்ன அத்தனை பெண்களின் முகத்திலும் அவளை தான் தேடினான்… 

திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை எந்த பெண் தூக்கினாலும் முகத்தை உத்து.. உத்து.. பார்த்து தன் தாயை தேடுவது போல்.. அவன் தேடல் முழுதும் அவள் தான்… வேற எந்த பெண்ணிடமும் மனம் லயிக்கவில்லை… அப்படி என்ன செய்து விட்டாள் அவள்.. அதுவும் ஒரே நாளில்… இந்தக் கேள்விக்கு பதில் அவனுக்கும் தெரியவில்லை…

 

ஆகமொத்தம்  அவன் தேடியது.. தாரத்தின் வடிவில் ஒரு தாய்மை..  அவனின் 

காமம், காதல், மோகம், தாபம் , தாகம் எல்லாம் அவள்தான்…

 

பெயர் தெரியாத ஒருவளுக்கு… அடுத்த பெண்ணின் பெயரை வைத்து அழைக்க மனம் வரவில்லை… என்னவளின் பெயர் எனக்கு சிறப்பு..  அப்பொழுது அவன் மனதில் ஞாபகம் வந்தது சிட்டுக்குருவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கண்கள்… சிட்டு என்று அழைத்தான்…

அவனுக்கு பெயரே தேவையில்லை…

 

“இங்க வாடி”… என்று அந்த டி யில் ஒரு அழுத்தம் கொடுத்து அழைப்பதே… அவனுக்கு ஒரு போதை மயக்கம்… அவன் உரிமையை நிலை நாட்டுவதாய் ஒரு எண்ணம்.

 

அவன் ஒரு பெண்ணை தேடுவது எதுவும் அவனது நண்பர்களுக்கு தெரியாது…

 

கிடைத்த பின் அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்திருந்தான்…

என்னவென்று சொல்வது முகம் தெரியாத ஒருத்தியை பத்தி…

 

கனவில் வந்து குடும்பம் நடத்துபவளிடமே கேட்பான்… “என்ன விட்டுட்டு எங்கடி இருக்க” என்று இதழோடு இதழ் வைத்து முத்தமிட்டு சிரித்துவிட்டு சென்றுவிடுவாள் பாவி…

 

வருடங்கள் கடந்தது… ஆனாலும் தேடும் முயற்சியை கைவிடவில்லை… 

 

சில நேரம் அவன் மனமே அவனிடம் கேட்கும்… ஒருவேளை அவள் திருமணம் ஆகி சென்று இருந்தாள் என்ன செய்வாய் என்று…

செவ்வாய் கிரகமே சென்றாலும் தூக்கி வருவேன்… முதலில் என்னுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு பதில் கூறு… என் 5 பிள்ளைகளின் நிலையை பற்றி எடுத்துக் கூறுவேன்… விட்டு விட்டு செல்ல அவளுக்கு மனம் வருமா… என்று அவனே பதில் நியாயம் சொல்லிக் கொள்வான்… இதை மூன்றாவது நபர் யாராவது கேட்டால்… தொழிலதிபனை உடனே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள்…

 

முதலில் கனவில் மட்டும் தெரிந்தவள் இப்பொழுது கண்ணுக்கும் தெரிகிறாள்… 

வேறென்ன “முத்திடுச்சு” எனும் நிலைமை தான்…

 

மருத்துவரிடம் செல்லலாம் என்று நினைப்பவன்… அவள் நினைவு இல்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியுமா என்று யோசித்தான்… சிரமம் மிக சிரமம்… ஒரு பொழுது அவளின் ஞாபகம் வந்தால் பரவாயில்லை ஒவ்வொரு பொழுதும் அவள் ஞாபகத்தில் தான் கழிகிறது…

 

சில நேரங்களில் நிதானமாய்  யோசிப்பவன்… மருத்துவரிடம் சென்று வந்தான்… அவனின் இந்த நிலைக்குப் பெயர்  லிமரன்ஸ் (Limerence)…. இது சரியாக ஒன்று உங்கள் நினைவில் இருப்பவர் நேரில் வர வேண்டும்… இல்லையென்றால் ஒரு வருடம் தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுத்தால்… சரியாக வாய்ப்பு உண்டு… என்று ஆலோசனை வழங்க… அவள் நினைவு இல்லாத  வாழ்க்கையில் என்ன பெரிதாக வாழ்ந்து விடப் போகிறோம்..  இப்படியே இருந்து விடலாம் என்று தேடிக் கொண்டே வாழ்ந்தான்…

 

ஆனால் அவன் கனவிலும் அறியாத… புரட்டிப் போட போகும்  ஒரு உண்மை, அவள்… அவன் நண்பனின் மனைவியாய் வரப்போவது.. 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top