அசுரன் 85

அசுரன் 85

 

 

காலையில் வீட்டிலேயே… வேக்கப் கிஸ், ப்ரேக்பாஸ்ட் கிஸ், சென்ட் ஆப் கிஸ்… என்று பல பெயர்களில் அவள் இதழை மென்று தின்று வந்தவன்.. அலுவலகத்தில் அதீத சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டு இருந்தான்…

 

அவனுக்கு ஈடு கொடுக்க முடியாமல், உடன் வேலை செய்யும் ரவி தான் திணறிவிட்டார்.. 

மனுஷன் காலையில என்ன சாப்பிட்டு வந்தார்ன்னு தெரியல இப்படி பம்பரமா சுத்துறாரு… 

 

அடிக்கடி அந்த கழுத்தில் கட்டி இருக்கும் டையை லூசாக்கும் பொழுது… காலையில் பெண்ணவள் டை கட்டி விட்ட ஞாபகம் வந்தது.. அப்படியே என் கழுத்துல நேரா கட்டு என்று அடம் பிடித்தவன்… இரண்டு கைகளையும் அவள் இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டு… தன்னால் சிவந்த உதடை மோகப் பார்வை பார்த்துக் கொண்டே… கட்டச் சொல்லி வெக்கப்பட வைத்து சிவக்க வைத்து… ஐயோ… ஐயோ…☺️😚

 

உண்மையில் அவன் மனது… குசேலன் பட வடிவேல் போல்… இது நான் தானா நான் தானா… நான் பாக்குறது நீதானா நீதானா… இது நிஜமாலுமே என்னோட வாழ்க்கை தானா… என்று தலைகால் புரியாமல்… மகிழ்ச்சியில் சுத்தி கொண்டு இருக்க… டோப்பமைனின் அதீத உற்பத்தியில்… சோர்வில்லாமல் பறந்து பறந்து வேலை செய்து கொண்டிருந்தான்…

அவ வர்றதுக்குள்ள எல்லா வேலையும் முடிச்சிடனும்…

 

( எம்டி வர்றதுக்குள்ள பிஏ தான் வேலையை முடிக்கணும்… இங்க பிஏ வரதுக்குள்ள எம்டி வேலையை முடிக்க போறார் 😆)

 

அவ வந்த உடனே அதை பண்ணனும் இதை பண்ணனும் என்று அவன் மனதில் காதல் கோட்டைகளை எழுப்பி கொண்டிருந்தான்…

 

ஆவலாய் மலருக்காக காத்துக் கொண்டிருக்க… சரியாக அந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர் அருணும் விக்ரமும்..

 

வாங்கடா உக்காருங்க… என்ன விஷயம் ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க…

 

தெரியல டா மச்சான் காலையிலேயே கோவமா இருந்தான். உன்ன பாக்கணும்னு இழுத்துட்டு வந்துட்டான்..

 

என்ன என்பது போல் ஆதி அருணின் முகத்தை பார்க்க…

 

என்னோட கல்யாணத்துக்கு முன்னாடியே ரதிய உனக்கு தெரியுமா என்று கேட்டான்… அருண்.

 

தெரியும்…

 

உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணாளா…

 

ஆமா…

 

இதை ஏன் என்கிட்ட இருந்து மறச்ச.. என்றான் கடுகடுப்பாய்…

 

என்கிட்ட ப்ரொபோஸ் பண்ண பொண்ண நீ இதுவரைக்கும் லவ் பண்ணதே இல்லையா என்று ஆதி கேட்க…

 

லவ் அக்செப்ட் பண்ணி இருக்கேன் ஆனா மேரேஜ் பண்ணல இல்ல…

 

இரண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி… ஒரு நாள் ரதி  ப்ரொபோஸ் பண்ண ட்ரை பண்ணா..  நான் ஸ்டாப் பண்ணிட்டு நாட் இன்ட்ரஸ்ட் அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டேன்… சொல்லப்போனா எனக்கு ரதி முகம் கூட ஞாபகம் இல்லை… இப்போ இதுல என்ன தப்பு இருக்கு.. 

 

ரதியோட கேரக்டர் பற்றி உனக்கு தெரியுமா என்றான்…

 

தெரியும்..  கேள்விப்பட்டிருக்கேன்… ஈகோ புடிச்ச பொண்ணு… பாஸ்ட்ல டூ லவ் பிரேக் அப் ஆகி இருக்கு…

 

அது தெரிஞ்சும் நீ எப்படிடா எனக்கு துரோகம் பண்ண…

 

வார்த்தையை அளந்து பேசு அருண்…

 

என்னத்தடா அளந்து பேச…

நீ உண்மையான நண்பனா இருந்தா… நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் அப்படின்னு தெரிஞ்ச உடனே இந்த விஷயத்தை எல்லாம் நீ எனக்கு முதல்ல சொல்லி இருக்கணும்… நா அவளை கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்….

 

இடியட் மாதிரி பேசாத அருண்… அவ ஒன்னும் நீ வீட்ல பார்த்து கல்யாணம் பண்ண பொண்ணு இல்ல நீ வேணாம்னு ரிஜெக்ட் பண்றதுக்கு… நீ லவ் பண்ணி பிரக்னன்ட் ஆகி குழந்தைக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்படிங்கறத மறந்துடாத…

 

என்கிட்ட கேட்டா ரதியை லவ் பண்ண நான் இந்த விஷயத்தை பத்தி உன்கிட்ட சொல்றதுக்கு…. குழந்தையோட வந்து கல்யாணம் பண்ண போறேன் அநௌன்ஸ்மெண்ட் தானடா குடுத்த நீ யார்கிட்டயும் கருத்து கேக்கல… சொல்லியிருந்தாலும் அப்ப இருந்து சூழ்நிலையில உன்னால ஒன்னும் பண்ணிருக்க முடியாது… யூ ஆர் லாக்டு…

 

ஆதி சொல்றதும் சரிதானடா… நீ ரதிய கல்யாணம் பண்ணதுக்கு.. அவன் என்ன பண்ணுவான்…

 

உனக்கு தெரியாது விக்ரம்… நான் ரதிய கல்யாணம் பண்ணா தான் இவன் என்று ஆள்காட்டி விரலால் ஆதியின் நெஞ்சை தொட்டவன்… மலர கரெக்ட் பண்ண முடியும்… அதுக்காக தான் ரதிய பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் கல்யாணம் பண்றத அவன் தடுக்கவே இல்லை… என்றான் இளக்காரமாய்…

 

வேண்டாம் அருண்.. எல்ல மீறி பேசுற… என்று தலையை திருப்பி பல்லை கடித்தான் ஆதி.

 

டேய் அந்த பொண்ணு கூட ஏன்டா சேர்த்து வச்சு பேசுற… அவ பாவம் இப்பதான் நிம்மதியா இருக்கா.. அது உனக்கு பொறுக்கலையா… என்றான் விக்ரம்…

 

சரியாய் அந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மலர்.

 

இதோ மேடமே வந்துட்டாங்க… கேட்டுப்பாரு இவங்க ரெண்டு பேத்துக்கும் நடுவுல என்ன இருக்குன்னு.. எதுவும் இல்லன்னு சொல்லிட்டா சத்தமே இல்லாம இப்பவே நான் வெளியே போறேன்…

 

என்ன நடக்கிறது என்று புரியாமல் திரு திருவென முழித்துக் கொண்டு நின்றிருந்தாள் மலர்.

 

அவ கிட்ட பேசுறதுக்கு ஒன்னும் இல்ல..  எதுனாலும் என்கிட்ட கேளு நான் சொல்றேன்… என்றான் ஆதி.

 

ஓஹோ மேடம் கிட்ட நாங்க பேசக்கூட கூடாதா… எனக்கு செய்றேன் எனக்கு செய்றேன்னு சொல்லிட்டு… என்னை வச்சு செஞ்சுட்டடா… கோபத்திலும் விரக்தியிலும் கத்தினான்..

 

என்னடா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல என்று மண்டை குழம்பினான் விக்ரம்.

 

உனக்கு புரியாது மச்சான்…. சார் இன்னைக்கு டை கட்டிட்டு வந்திருக்காரு பாத்தியா… “டை கட்டிட்டு வரலன்னா இன்டர்னல் மார்க் குறைப்பேன் சொன்ன ப்ரொபசர் மூஞ்சில நோட்டை தூக்கி எறிஞ்சிட்டு வந்தவரு”… இன்னைக்கு எவ்வளவு பொறுப்பா கட்டிட்டு வந்து இருக்காரு… விக்ரமும் கவனித்தான்…

 

எல்ல்லாம் மேடம் ஓட கவனிப்புதான் என்று கூறியபடி இரு கைகளையும் மலரை நோக்கி காண்பித்தான்…

 

அருண் என்ன பத்தி என்ன வேணா பேசு அவளை பத்தி பேசாத… என்று உறுமினான் ஆதி..

 

அவள பத்தி நம்ம மச்சான் தெரிஞ்சுக்கட்டும் டா…

இவ இங்கு ஆபீஸ்ல வேலை செய்ற வரைக்கும் தானே உனக்கு தெரியும்…

சாரோட வீட்ல எக்ஸ்ட்ரா டியூட்டி வேலை செய்வது உனக்கு தெரியாதே…. ரெண்டு பேரும் லிவிங்ல இருக்காங்களாமா… 

 

உன் தங்கச்சி… தங்கச்சினு தலைல தூக்கி வெச்ச ஆடினியே… ஆதியோட அங்க அடையாளங்கள் வரைக்கும் அக்கக்கா சொல்றாளாமா…

 

ஸ்டாப் இட் அருண்… என்று டேபிளை தட்டிய ஆதி… யு க்ராஸிங் யுவர் லிமிட்ஸ்…  என்று விரல் நீட்டி எச்சரித்தான்…

 

அருணின் வார்த்தைகளால் உடைந்து கூனி குறுகி நின்று இருந்தாள் மலர்..

 

நீ சொல்றது எதுவும் நம்புற மாதிரி இல்ல அருண்… உன் மனதை யாரும் தேவையில்லாம கொழப்பி விட்டு இருக்காங்க… நம்ம ஆதி டா அவன போய் தப்பா பேச உனக்கு எப்படி மனசு வந்துச்சு… என்று விக்ரம் எடுத்துச் சொல்ல.. 

 

நம்ம ஆதி தான்..  அவன் எனக்கு பண்ண துரோகத்தை நீ பார்க்க வேண்டாம்… பாரு… தனது போனில் நேத்து இருவரும் முத்தமிட்ட காட்சியை புகைப்படமாக காட்டினான் விக்ரமிடம்… 

பாரு நல்லா பாரு பார்த்தாவது ரெண்டு பேர பத்தி புரிஞ்சுக்க..  என்னா.. கிஸ்ஸு… என்னா போஸு… வாரே வா.. என்று கைகளை தட்டி சிரித்தான்..

 

என்னடா இது என்பது போல் ஆதியையும் மலரையும் மாறி மாறி பார்த்தான் விக்ரம்… சொல்றேன் பொறு எனும் விதமாக கண் ஜாடை காட்டினான் ஆதி..

 

சைத்ரா சொல்ற விஷயம் எல்லாம், என்னால காது கொடுத்து கேட்க கூட முடியல…

 

டேய் அவ சொல்றதெல்லாம் நம்பிகிட்டு.. என்றான் விக்ரம்

 

நானும் முதல்ல நம்பல..  அப்புறம் தான் இந்த முத்த காட்சியை நானே என் கண்ணால பார்த்தேன்.  இந்த போட்டோ நான் தான்டா எடுத்தேன்.

 

இப்ப எனக்கு இருக்கிற சந்தேகம் எல்லாம் ஒன்னே ஒன்னு தான்… இப்பதான் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கீங்களா இல்ல என் வீட்ல இருக்கும்போதே என்னை ஏமாத்திட்டு… என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னே “பளார்” என்று அருண் கன்னத்தில் விழுந்தது ஆதியின் அறை.. என்ன வார்த்தை பேசி விட்டான்… என்னுடைய இத்தனை வருட ஒழுக்கத்தை சந்தேகப்பட்டு விட்டானே…  கொச்சைப்படுத்தி விட்டான்… என்ற கோபம் தலைக்கேறியது…

 

டேய் ஆதி… என்னடா பண்ற… என்று கத்தினான் விக்ரம் 

 

அருணின் உதடு கிழிந்து ரத்தம் வந்ததில்… அதை ஒரு விரலால் துடைத்துக் கொண்டே… என்னடா உண்மைய கண்டுபிடிச்சிட்டான் என்று கோவம் வருதா… அவளுக்கு முன்னாடி என்ன அடிச்சிட்ட இல்ல… 

 

அருண் நீ பொறுமையா உட்காரு நான் உனக்கு எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்றேன்..  கண்டபடி பேசி என்கிட்ட அடி வாங்கி சாகாத… கண்கள் சிவந்து நரம்புகள் புடைக்க அடக்கப்பட்ட பொறுமையுடன் கூறினான்… ஆதி.

 

ஓஹோ அவளுக்காக என்ன கொல்ற வரைக்கும் போவியா..  அவ்ளோ மயக்கி வச்சிருக்காளா என்ன.. 

 

சாவடிச்சிடுவேன் டா உன்னைய… என்று ஆதி, அருணின் சட்டையை பிடிக்க… நண்பனோட பொண்டாட்டின்னு கூட பாக்கல இல்ல நீ… என்று அவன் கேட்ட நொடி.. பொறுமை இழந்து வாயிலேயே குத்தினான் ஆதி… 

 

ஒரு நிமிடத்தில் ஒரு வார்த்தையில்… தன்னுடைய ஆத்மார்த்தமான காதலை… கள்ளக்காதலுடன் சேர்த்து விட்டானே என்ற கோபம்… கண்மூடித்தனமான வெறி…

 

டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்… என்று கூறியபடியே விக்ரம் சட்டையை பிடித்துக் கொண்டிருந்த  இருவரையும் பிரித்து விட்டான்…

 

விக்ரமைப் பார்த்து, சொல்லிருடா.. இனிமேல் அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… இந்த மாதிரி ஒரு துரோகி கூட இத்தனை நாள் பழகினத நினைச்சு எனக்கே வெக்கமா இருக்கு… என் மூஞ்சிலேயே முழிக்க வேணாம்னு சொல்லிரு… எல்லாரும் என்னைய ஏமாத்திரிங்கள… என்று கூறியபடி தனது வாயில் இருந்த ரத்தத்தை துப்பி விட்டு நகர்ந்த அருண்… 

 

தலையை குனிந்த படி தரையை வெறுத்து பார்த்தபடி நின்று இருந்தாள் மலர்…

 

முதல்ல நான்..  அடுத்து ராஜேஷ்… இப்போ இவன்..  இன்னும் எத்தனை பேர் டி உனக்கு வேணும்… ரதியால முடியல… சைத்ராவால முடியல… அப்படி என்னடி இருக்கு உங்க கிட்ட… வந்த கொஞ்ச நாள்ல அவனை மயக்கிட்ட… வார்த்தைகளில் விஷத்தை தடவி கொட்டினான்…. சின்ன வயசுல இருந்து என்னை பார்த்து கிட்டவன் கையாலையே என்ன அடிக்க வச்சுட்ட இல்ல..  என்ற வெறுப்பை உமிழ்ந்து விட்டு வெளியே சென்று விட்டான் அருண்..

 

தனக்கு கிடைக்காத பொருளை யாருக்கும் கிடைக்காமல் உடைத்து போடும் குழந்தையின் யுக்தி…

 

என்னடா ஆதி இதெல்லாம்… என்கிட்ட கூட இதுவரைக்கும் எதுவுமே சொல்லல… என்னடா நடக்குது உங்களுக்குள்ள… என்று ஆதியிடம், குழப்பமான மனநிலையில் விக்ரம் கேட்க….

 

குடிச்சிருக்கான்… அடி வாங்கிட்டு கோவமா போறான்… கார வேகமா ஓட்டி எங்கேயாவது போய் விழுந்து தொலைக்க போறான்… முதல்ல போயி அவனை என்னன்னு பாரு… இது எல்லாத்தையும் பின்னாடி உனக்கு விளக்கமா சொல்றேன்… என்று விக்ரமை அருணை நோக்கி அனுப்பி வைத்தான் ஆதி..

 

வெளியில் செல்லப் போன விக்ரம் மலரின் அருகில் வந்து…

இத்தனை வருஷம் எங்களுக்குள்ள சண்டையே வந்ததில்ல மலர்… அருண் என்ன கேட்டாலும் ஆதி விட்டு கொடுத்திடுவான்… ஆதிக்கு வேணும்னு தெரிஞ்சா அருண் கேட்கவே மாட்டான்… எங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணுன்னா முதல் அடி ஆதியோட தான் இருக்கும்…

எங்களை எப்படி எல்லாமோ பிரிக்க பார்த்தாங்க… கொலிக்ஸ்,  லவ்வர்ஸ்,  எனிமிஸ்… ஆனா யாராலயும் முடியல… ருத்ரா ஆண்ட்டி கூட நிறைய தடவை ட்ரை பண்ணிட்டு பின் வாங்கிட்டாங்க…. ஆனா இன்னைக்கு உன்னால நாங்க பிரிவோம்னு நான் கனவுல கூட நினைக்கல… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மலர்… என்று இத்தனை வருட நட்பு பிரிந்து விட்டதே என்ற மனவேதனையில் விரக்தியுடன் பேசிவிட்டு அறையை விட்டு “அருண் நில்ரா” என்று கத்தி கொண்டே அருணின் பின்னால் ஓடினான் விக்ரம்.

 

அருணின் விஷ வார்த்தைகளால்… இதயம் கூராய் கிழிக்கப்பட்டு நின்று இருந்தவள்… விக்ரமின் வார்த்தைகளால் முற்றிலும் உடைந்து சிதைந்து போனாள் மலர் எனும் மெல்லிய பெண்ணவள்… 

 

அருணுக்கு புரிய வைப்பதா இல்லை விக்ரமுக்கு புரிய வைப்பதா இல்லை உடைந்து நிற்கும் மலரை சமாதானப்படுத்துவதா? என்று எதுவும் புரியாமல்… நின்றிருந்தான் ஆதி.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top