இங்கு வெளிநாட்டில்…..
ஏற்கனவே இரும்பு போல் இறுகிக் கிடந்த கைகளை மேலும் உறுதியாக
பஞ்சிங் பேக்கை வெறியுடன் குத்திக் கொண்டிருந்தான் ஆதி… வியர்வைத் துளிகள்
உடல் எங்கும் பரவி கிடந்தது. நெற்றியில் ஊற்றெடுத்த வியர்வை நேராக வழிந்து
அவன் கூர் நாசியின் நுனியில் பனித்துளி போல் நின்று கொண்டிருக்க, அதை
வேகமாக தனது இரும்பு தோளினால் துடைத்துவிட்டு, அடக்க முடியாத கோவத்தை
குறைக்க தன் கை நரம்புகள் புடைக்க வேக வேகமாக அந்த பஞ்சிங் பேக்கை
குத்தினான்.
என்ன செய்தும் மனதை அமைதி நிலைக்கு கொண்டு வரவே முடியவில்லை
அவனால்….
அப்பொழுது அவனது போன் அடித்தது..
சொல்லுங்க சார்லஸ்… (ஆதியின் வெளிநாட்டு அலுவலகத்தின் காரியதரிசி)
சார்… இன்னைக்கு 11:00 ஓ கிளாக் மீட்டிங்கு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்காங்க
ஷெடுல் பண்ணவா சார்…
பண்ணிடுங்க.. வந்துடுறேன்.
குளித்து முடித்து, கோர்ட் சர்ட் சகிதம் அலுவலகத்திற்கு கிளம்பினான் ஆதி.
அவன் மனதில் இருக்கும் வெறுமையை போக்கிக் கொள்ளவே உடற்பயிற்சியிலும்
வேலையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்கிறான்… இல்லையென்றால்
இது வேறுவிதமான போதைப் பழக்கத்திற்கு மனதை அடிமை ஆக்கிவிடும் என்று
அவன் நன்கு அறிவான்.
இங்கு மீட்டிங் ஹாலில், தனக்காக காத்துக் கொண்டிருந்த கிளைண்டுடன்.. பெரிய
டீலிங்கை வெற்றிகரமாக பேசி முடித்தான்.
ஆனால் அதன் மகிழ்ச்சி அவன் முகத்தில் கிஞ்சித்தும் இல்லை. மனம் எதையோ
நினைத்து ஆர்ப்பரிக்கிறது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் வழிதான் தெரியாமல்
அல்லாடுகிறான்.
மீட்டிங்கை முடித்து விட்டு, தன் அலுவலக அறைனுள், நுழைந்தவனை வரவேற்க
காத்திருந்தாள் சைத்ரா.
ஹாய்… சைத்ரா… என்ன இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க ஏதாவது பெரிய பிசினஸ்
டீலிங் அஹ…
நத்திங் ஆதி… இட்ஸ் ஜஸ்ட் ஃபார் யூ…
பட்… வொய்… ஃபோன்லையே சொல்லி இருக்கலாமே…
உங்ககிட்ட நேர்ல பார்த்து சொல்லனும்னு நெனச்சேன்….
அப்படி என்ன முக்கியமான விஷயம்…
இட்ஸ் அபௌட் அவர் லவ், டேட் அண்ட் மேரேஜ்…
பட்… அப்படி எதுவுமே நமக்குள்ள இல்லையே…
இனிமேல் டெவலப் பண்ணிக்கலாம், ஆதி…
பட்… ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட்…
அதான் ஏன்னு கேக்குறேன்… நான் அழகா இல்லையா, இல்ல இக்குவல் ஸ்டேட்டஸ்
இல்லையா, என்ன என்கிட்ட குறையா இருக்கு… ஏன் என்ன ரிஜெக்ட் பண்றீங்க…
ஆதி… நான் பிராங்க்கா சொல்றேன்.. நான் உங்க மேல பைத்தியமா இருக்கேன்…
நம்ம கொஞ்ச நாள் பழகி பார்க்கலாம்.. ஈவன் எனக்கு லிவிங் டுகெதர் கூட ஓகே…
சைத்ரா!….ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மீ.. உங்கள ரிஜெக்ட் பண்ண எந்த ரீசனும் இல்ல…
எனக்கு லவ் அண்ட் மேரேஜ் மேல இன்ட்ரெஸ்ட் இல்லை…
ஆதி…ஃபைனலி… கண்ணை மூடி யோசித்து விட்டு, எனக்கு “ஒன் நைட் ஸ்டேண்ட் ”
கூட ஓகே…
அவளை ஆழ்ந்து பார்த்த ஆதி… ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு,
தென்… ஓகே சைத்ரா… டுடே நைட் ட்ரை பண்ணி பார்க்கலாம்… நைட் ஹோட்டல், ரூம்
நம்பர் மெசேஜ் பண்றேன் வந்துருங்க…
பெண்கள் விஷயத்தில் ஆதி என்றும் கண்ணியம் காப்பவனே அவன் வெளிநாட்டில்
படித்து தொழில் செய்தாலும் எந்த ஒரு பெண்ணையும்
அணுகியதில்லை, பெண்களை நெருங்கவும் விட்டதில்லை… ஆனால் இன்று தன்
மனதை சாந்தப்படுத்த வேறு வழி தெரியவில்லை…
சைத்ராவிடம் சொல்லி விட்டான் தான்… ஆனால் மனம் ஒரு நிலையில் இல்லை தனது
சுழல் நாற்காலியில், உட்கார்ந்து கொண்டு அரை வட்டமாக சுற்றிக் கொண்டே
நாடியில் கையொன்றி யோசித்துக் கொண்டே இருந்தான் தான் செய்வது சரியா?
தவறா? என்று…
முடிவில் ஹோட்டல் ரூம் போக தீர்மானித்து விட்டான்…
வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு விட்டு குளித்து முடித்து வைட் கலர் ஷர்ட் அண்ட்
பேண்ட் அணிந்து, முன்னால் இரண்டு பட்டன்களை திறந்து விட்டிருந்தான் அதன்
வழியே அவன் புஜங்கள் புடைத்துக் கொண்டு இருந்தன… அதில் மெல்லிய
பிளாட்டினம் செயின் மின்னியது… தனது அலைபாயும் கேசத்தை ஜெல் வைத்து
அடக்கி இருந்தான். அவன் நரம்போடிய கையில் பிளாட்டினம் காப்பு
அணிந்திருந்தான். கண்ணில் கூலர்சை மாட்டிக் கொண்டு ஸ்டைலாக கிளம்பியவன்.
தன் கை வைத்து தனது மார்பை மெதுவாக தட்டி கொடுத்து, டுடே யூ நீட் இட்… என்று,
தனது மனதை தயார்படுத்தி விட்டு, சைத்ராவிற்கு மெசேஜ் செய்துவிட்டு ஹோட்டல்
ரூமை நோக்கி புறப்பட்டான்..
ஹோட்டல் வரவேற்பறையில் சைத்ரா, கையில்லாத சிங்கிள் ரெட் ஷார்ட் கவுன்
மட்டும் அணிந்து பேரழகியாய் காத்துக் கொண்டிருந்தாள்.
தனது கருப்பு நிற ரூல்ஸ் ராயல்ஸ் காரில் ஸ்டைலாக வந்திறங்கினான் ஆதி..
அதைக் கண்ட சைத்ராவின் மனம் ஆர்ப்பரித்தது இன்று அவனை அடையப் போவதை
எண்ணி,
ஹாய்..ஆதி… என்று அணைத்து விலகியவள். அவனை கண்களால் களவாடி பின்..
ரியலி… யூ லுக் வெரி மேன்லி… என்றாள்.
அவளை முழுதாக ஒரு தடவை அளந்து பின்… யூ டு கார்ஜியஸ் என்றான் ஆதி…
இருவரும் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்தனர்.
அறையினுள் வந்த ஆதியின் இதயம் அதிவேகமாக துடித்தது… தன் இரு கைகளையும்
கோர்த்து, முழங்கைகளை தொடையில் ஊன்றி கண்ணை மூடி படுக்கையில்
யோசனையில் மூழ்கினான்…
அவன் யோசனையை கண்ட, சைத்ராவின் கைகள் மெல்ல அவனது காது மடலை
வருடி கழுத்தில் ஊர்ந்து மெதுவாக அவனது புஜத்தை நோக்கி நகர்ந்தது.
அதற்கு மேலும் அவளது கைகள் முன்னேறாமல் தன் கைகளை வைத்து தடுத்தவன்,
வேகமாக எழுந்து திரும்பி நின்றான். அவனுக்குள் என்ன நடக்கிறது என்று அவன்
மட்டுமே அறிவான்.
சைத்ரா தனது மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடையுடன், அவனை பின்புறம்
இருந்து கட்டி அணைத்தாள்…
சுவர் பக்கம் திரும்பி நின்றிருந்தவன், தனது பின்னந்தலையை தட்டிக் கொண்டே
கமான்… ஆதி… கமான்.. யு கேன் டு இட்…. என்று அவனுக்கு… அவனே
முணுமுணுப்பாக சொல்லிக் கொண்டு இருந்தவனின் தோளில் தனது கையை வைத்து
“ஆதி ஆர் யூ ஓகே” என்று கேட்டாள், சைத்ரா..
எஸ், ஐ அம் டெபினன்ட்லி ஓகே… என்று சொல்லிவிட்டு வேகமாக திரும்பி… அவளது
இரண்டு கன்னங்களையும் தனது இரு கைகளால் பிடித்து, ஒரு நிமிடம் அவள்
கண்களைப் பார்த்தான், மோகம் ததும்பி வழிந்தது… போதை ஏற்றும் கண்கள் தான்
ஆனால் அவனுக்கு போதை ஏறியதா? என்று கேட்டால் அது அவனுக்கு மட்டுமே
தெரியும். மெல்ல அவள் இதழ்களை நோக்கி குனிந்தான் ஆதி…
கண்ணை மூடியபடி தாடையை உயர்த்தி அவனின் ஆழ்ந்த முத்தத்திற்கு
தயாரானாள் சைத்ரா…
அவளது இதழை ஒரு நிமிடம் கண்ணீமைக்காமல் பார்த்தான்… சிவப்பு உதட்டு சாயம்
பூசிய, தடித்த பெரிய இதழ்கள் மின்னியது… பார்த்தவுடன் கடித்து மென்று தின்ன
தோணும்.. ஆனால் ஆதிக்கு என்ன தோன்றியதோ…. டூ யிட்… ஆதி… டூயட்…என்று
சொல்லிக் கொண்டே மேலும் நெருங்கினான்… முத்தத்திற்கு தயார்படுத்த தனது
இதழை நாவால் ஈரமாக்கி கொண்டான். இதழும் இதழும் நூளவு இடைவெளியில்,
ஒன்றை, ஒன்று உரசிக்கொள்ளும் கண நேரத்தில் இதயம் துடிப்பை அதிக
படுத்தியது… என்ன நினைத்தானோ, வேகமாக அவளை உதறிவிட்டு
விலகியவன்… சுவர் பக்கம் திரும்பி நின்று,
சாரி சைத்ரா…. ரியலி சாரி…. ஐ காண்ட்.. டு….இட்…. என்று கூறிவிட்டு…. அந்த
ஹோட்டல் அறையை விட்டு விறுவிறு என்று வெளியேறி வேகமாக சென்று தன்
காரில் ஏறிக்கொண்டான்.
அவன் வந்து இறங்கிய ஸ்டைல் என்ன… இப்பொழுது ஓடும் வேகம் என்ன.. என்று
எண்ண தோன்றியது.
ஆதியின் செயலில் அதிர்ச்சி அடைந்த சைத்ரா… ஆதி….ஆதி…. வாட்ஸ் ஹேப்பெனிங்
ஹியர்… ஒய் ஆர் யூ லிவிங் மீ….. என்று கத்தினாள், அந்த சத்தத்தை கேட்க அவன்
அங்கு இருந்தால் தானே…
யூ…பிளடி இடியட்… என்று கத்திக்கொண்டே தனது காலை இருமுறை தரையில்
உதைத்துக் கொண்டாள் சைத்ரா.. கோபமாக படுக்கையில் அமர்ந்தவள், தன்
இருக்கைகளாலும் தலையை பிடித்துக் கொண்டே பற்களைக் கடித்துக் கொண்டு
வன்மத்துடன் டெபினன்ட்லி யூ பே பார் திஸ்… என்றாள் கோபமாக..
சைத்ராவிற்கு எப்போதும் தன் அழகின் மேல் ஒரு கர்வம் உண்டு. ஆண்களை தன்
பின்னால் சுற்ற வைத்து தான் அவளுக்கு பழக்கம். ராஜ்காந்த் வம்சத்தின் ஒரே வாரிசு.
தான், நினைப்பதை நினைத்த இடத்தில் முடிப்பவள். அப்படிப்பட்டவள் இன்று தானே
அவளை கொடுப்பதற்கு முன் வந்தும் தன்னை இந்த நிலையில் பார்த்தும்
வேண்டாம்… என்று உதறிவிட்டு செல்பவனை அவளால் மன்னிக்கவே
முடியவில்லை…
ஆதியை விட பல மடங்கு வசதியான அழகான ஆண் மகன்கள் எல்லாம் சைத்ராவை
சுற்றி வளம் வரும் போது, தன்னை துளியும் மதிக்காமல் ஆண்மை திமிரோடு வலம்
வரும் ஆதியின் மேல் எப்போதும் சைத்ராவிற்கு ஒரு தீரா மயக்கம்..
இன்று ஆதியுடன் ஒன்று கூடி இந்த நாளை வைத்து,ஆதியை அடைந்து விடலாம் என்று
மனதிற்குள் பல கணக்குகள் போட்டு வைத்திருந்தாள்.
ஆதிக்கு போனில் அழைத்துப் பார்த்தால்… ஆனால் அவன் எடுக்கவில்லை… கட்
பண்ணிவிட்டான். மேலும் மேலும் அழைக்க போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது,
உடனே ஆத்திரம் தாங்காமல் தன் வாட்ஸ் அப்பில் இருந்து, ஆதி, “யூ ஆர் இன்செல்டிங்
மீ” நவ் ஐ ஹவ் எ டவுட்… “ஆர் யூ இம்போட்டண்ட்?” என்று மெசேஜ் அனுப்பினாள்…
ஆதியின் பணம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை தான், தன் அழகை
மதிக்காதவனை அடைந்தே ஆக வேண்டும் என்ற வெறி. அந்த ஆசை நிராசை
ஆகிப்போனதில் வந்த ஏமாற்றம்.
ஹோட்டலை விட்டு காரை வேகமாக இயக்கிக் கொண்டிருந்த ஆதி, ஒரு ஆள்
அரவமற்ற சாலையின் ஓரமாய் வண்டியை நிறுத்தினான். தன் கோபம் போகும் வரை
ஸ்டேரிங்கில் வேகவேகமாக குத்தினான்.
என்ன ஆதி…. என்னடா பண்ற நீ… உனக்குள்ள என்னதான் நடக்குது…
உன்ன பத்தி அவ என்னடா நினைச்சிருப்பா… யூ ப்** பி* பா**** என்று அவன் தன்னைத்
தானே ஆங்கில கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டான்.
அவன் இதயம் படபடப்பை நிறுத்த சிறிது நேரம் தேவைப்பட்டது.. அதன் பின்பு காரை
எடுத்துக் கொண்டு தனது அறைக்கு சென்றான்.
ஹோட்டல் அறையில் தனது ஆடையை அணிந்து கொண்டு மதுவை ஆர்டர் செய்து
பருகிய படியே வேற எந்த வழியில் ஆதியை அடையலாம் என்று யோசித்துக்
கொண்டிருந்தாள் சைத்ரா.
“இதுக்கு மேலயும் உனக்கு அவன் வேணுமா” என்று மனதிற்குள் அவளை அவளையே
கேட்டுக் கொண்டாள்.
கண்டிப்பா வேணும்…. என்று அவளது மனசாட்சியிடம் சொல்லி அனுப்பினாள்.
ஆதி நீ எனக்குத்தான்…. எனக்கு மட்டும்தான்…. என்று வன்மத்துடன் பல்லை கடித்து
சொல்லி கொண்டாள். ஒருவேளை நீ எனக்கு கிடைக்கலன்னா, உன்ன யாருக்கும்
கிடைக்க விட மாட்டேன் இன்று வன்மத்தை வளர்த்துக் கொண்டாள்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!
———————