அசுரன் 90

 அசுரன் 90 

 

தட்… தட்… என்று கதவு தட்டும் சத்தத்தில் தான்… பிரிய மனமில்லாமல் அவள் இதழை விட்டு பிரிந்தான் ஆதி …

 

அத்த… மலர் அத்த….  உங்கள எல்லாரும் அங்க தேடுறாங்க…. சீக்கிரம் வாங்க… என்று ஏதோ ஒரு சில்வண்டு சத்தமிட்டு சென்றது..  

 

ப்ளீஸ் விடுங்க… தேவா..  எல்லாரும் என்னை தேடுறாங்க… எல்லாம் வெளிய தான் இருக்காங்க… அய்யோ… இப்ப போய் நான் எப்படி அவங்க மூஞ்சில முழிக்கிறது இவங்கள பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியாது பயங்கரமா கிண்டல் பண்ணுவாங்க… என்று சிணுங்கினாள்..

 

விவரமானவடி… இவ்வளவு நேரம் கொடுக்கும் போது அமைதியா ம்ம்.. ம்.. சொல்லி வாங்கிட்டு… இப்ப நான் தான் ஏதோ வலுக்கட்டாயமா கொடுத்த மாதிரி சொல்ற…

 

உக்கும்…. என்று உதட்டை சுழித்து விட்டு அங்கிருந்து கதவின் அருகில்  சென்றாள்… எல்லாம் டைனிங் டேபிள் மேல தானே இலை விரிப்பாங்க… அது என்ன சோபால தலை வாழை இலை விரிக்கிறது… என்று தன் அதி முக்கிய சந்தேகத்தை கேட்க…

 

( சண்டாளி அவன் சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போல )

 

நீ நம்ம வீட்டுக்கு வா புரிய வைக்கிறேன் என்றான் விஷமமாக…

 

வெளியே வந்தவள் அசட்டு சிரிப்புடன் அது அவருக்கு… போர்வை தலைகாணி எல்லாம் எடுத்து கொடுத்துட்டு வந்தேன் என்று அவள் சமாளித்தபடி நடுவில் வந்து அமர..  

 

நாங்களும் புதுசா கல்யாணம் ஆனப்ப போர்வை தலைகாணி எல்லாம் எடுத்துக் கொடுத்தவங்க தான்..  வண்டி சாவியை காணோம்… குளிக்கும்போது துண்டை காணோம்… வேலைக்கு கிளம்பும் போது பர்ஸ காணோம்… எல்லாத்தையும் பாத்துட்டு தான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கோம்… அதனால நீ எடுத்துக் கொடுத்த போர்வையை பத்தி எங்களுக்கே தெரியும்… என்றனர் ஜாடை மாடையாய்…

 

அடியே கவி… மருதாணி வச்சா கை தானே செவக்கணும்..  உங்க அக்காளுக்கு மட்டும்… ஏண்டி  உதடும் கண்ணும் சிவந்து போய் இருக்கு… 

 

அது அவங்க வீட்டுக்காரர் வச்ச மருதாணியில சிவந்தது கா… என்று கிண்டல் செய்து சிரிக்க…

 

ஊருக்குள்ள திருவிழா.. 3நாள் விரதம்.. அடிக்கடி ரூமுக்குள்ள போர்வை எடுத்து கொடுக்க போகாத.. என்று ஒருத்தி கூற… 

 

ஐயோ என்றானது மலருக்கு…

 

அப்புறம் என்ன அன்றைய இரவு முழுவதும் அந்தக் கூட்டத்தின் பலியாடு மலர்தான்… அவளை வெட்கப்பட வைத்தே..  மருதாணி போடாமல் சிவக்க வைத்தனர்… 

 

ஆனால் கவிக்கோ… அக்காவிற்கு இப்படி ஒரு வாழ்வா… தன்னைவிட ஒரு மேம்பட்ட வாழ்வா… என்ற பொறாமை என்னும் மனதிற்குள் கொழுந் விட்டு எறிந்தாலும் என்ன செய்ய முடியும்..  வெளியே காட்ட முடியாதே… போன தடவை அக்காள் வரும் பொழுது… அவள் பெருமிதமாய் காட்டிய காதல் வாழ்க்கை இப்பொழுது ஆதி யின் அன்பில் கொஞ்சம் அடி பட தான் செய்கிறது… அவள் பெரிதாய் ஒன்றும் மனம் திருந்தி விடவில்லை தனது அக்காவின் கணவர் பணக்காரர் என்பதில் ஊருக்குள் ஒரு பெருமிதம் அவளுக்கு… அதனால் பாதுசாக நடந்து கொள்கிறாள்…

 

இரவு காலதாமதமாக தூங்கினாலும்… திருவிழா கொண்டாட்டம் என்பதால் விடியற்காலையிலேயே ஒலிபெருக்கி சத்தம் பெண்கள் கூட்டம் கூட்டமாய் அமர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தனர் பெரியவர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள் ஊரே ஒரு கலை கட்டியது…

 

தாவணியில் அடுத்த பெண்களை ரசித்ததை பொறுக்க முடியாதவள்… இன்று தாவணியில் தயாராகி இருந்தாள்… 

 

சேலையில் அடக்கமாக இருந்த வனப்புகள் எல்லாம் தாவணியில் தறி கெட்டு தெரிந்தது… 

 

மருதாணி வைத்த கை நிறைய கண்ணாடி வளையலை போட்டுக் கொண்டவள்… ஒற்றைக் கையால் பாவாடையை பிடித்துக் கொண்டு… பட்டாம்பூச்சி போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தாள்…

 

அவனுக்கு சாப்பாடு கொடுக்க உள்ளே தனியே வந்து மாட்டிக் கொண்டது கோழி…

 

அவளின் இரண்டு கையையும் ஒரு சேர்த்து அதில் தனது முகத்தை புதைத்து ஆழ்ந்து நுகர்ந்து பார்த்தவன் ஸ்மெல் நல்லா இருக்கு என்றான்.. 

 

அப்படியே இரண்டு கையையும் சேர்த்து ஒரு சேர தன் பக்கம் இழுத்தவன்… இதழில் முத்தமிடப் போக… வாயை கையை வைத்து மறைத்துக் கொண்டாள்…

 

ப்ளீஸ்பா… எல்லாரும் லிப்ஸ் கலர் வச்சு கண்டுபிடிச்சுடுறாங்க… 

எனக்கு ஒரே ஷேமா போயிடுது.. என்றாள் கெஞ்சுதலாக…

 

அவனும் புரிந்து கொண்டான்… இரவு பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததை அவனும் கேட்டான் தானே… அடேங்கப்பா நாசா விஞ்ஞானி கண்ணுல இருந்து கூட தப்பிச்சிடலாம் இவங்க கண்ணுல இருந்து தப்பிக்க முடியாது போலவே என்று நினைத்தான்…

 

ஆனாலும் அவனை மயக்குவதற்கே தாவணிக்கட்டி கும்முனு இருப்பவளை அப்படியே விட்டுவிட மனம் வரவில்லை… தாவணியை விலக்கி மேலாடையை எச்சில் செய்த விதத்தில்… கண் சொருகி… கால் விரல்களை இறுக்கி…. வேர்த்து விறுவிறுத்தது பெண்ணவளுக்கு…  இதுக்கு நீங்க கிஸ்ஸே பண்ணி இருக்கலாம்… என்று அலுத்து  கொண்டாள்…

 

ஏண்டி நான் பாக்கணும்னு தானடி தாவணி கட்டிட்டு வந்த அப்புறம் பாக்க விட மாட்டேங்குற என்றான் குறும்பாக…

 

அது தாவணியோட பாக்கணும் தாவணி இல்லாம பார்க்க கூடாது… கூறிவிட்டு முறைத்து விட்டு சென்றாள் மலர்…

 

தட்டை கழுவி வைத்துவிட்டு திரும்ப… 

 

பெண்கள் கூட்டம் அங்கே தான் நின்று இருந்தது… என்னடி மலர் இன்னைக்கு தாவணி கட்டியிருக்க …

 

அது புதுசுக்கா கட்டாமலே வச்சிருந்தேன் அதனால இன்னைக்கு ஒரு நாள் கட்டிடலாமேன்னு கட்டினேன்…

 

ஏண்டி மலரு… அடுப்படில ரொம்ப வெக்கையோ…

 

ஆமாக்கா இந்த வெயிலுக்கு கொஞ்சம் வெக்கையா தான் இருக்கு…

 

வெக்க அதிகம்னு ஒன்ன பாத்தாலே தெரியுதுடி உன்னோட ப்ளவுஸ்ல முன்னாடி மட்டும் வேர்த்து இருக்கு போய் கண்ணாடில பாரு… என்று கிளுக்கி சிரித்து விட்டு நகர்ந்து சென்றனர்.. 

 

தன்னை ஒரு முறை கீழே குனிந்து பார்த்து விட்டு, கண்ணை மூடி திறந்து , டேய் தேவா… உன்னால என் மானமே போகுதுடா..  என்று மனதுக்குள் புலம்பியவள்… ரெண்டு கைகளையும் இருக்க மூடி பல்லை கடித்து… காலை உதைத்து விட்டு வேகமாய் அவள் அறைக்கு தான் சென்றாள்.

 

தேவா…. என்ன பண்ணி வச்சிருக்கன்னு பாரு… எல்லாம் என்ன கிண்டல் பண்ணிட்டு போறாங்க தெரியுமா..  என்றாள் உதட்டைப் பிதுக்கி  சிணுங்களாக… 

 

ஐயையோ செல்லம்… இப்படி ஆகும்னு எனக்கு தெரியலையே உச் உச்… என்று போலியாய் உச்சுகொட்டியவன் நீ வேணா பிளவுஸ்அ கழட்டி கொடு நான் பேன் காத்துல காயவைத்து கொடுக்கிறேன் என்றான்…

 

அவனைத் தீயாய் முறைத்தாள்…

 

சரி விடு நீ பிளவுஸ் கூட கழட்ட வேண்டாம் நான் உனக்கு வேற ஒரு நல்ல ஐடியா சொல்றேன் இப்படி வந்து மாமா மடியில படுத்துக்கோ… நான் ஊப்ப்… ஊப்ப்னு வாயிலேயே ஊதி காயவைத்து கொடுக்கிறேன்.. 

என்று சொன்னவனை வெட்டவா குத்தவா என்று முறைத்தவள்… புஸ்… புஸ்..   என்று மூச்சு வாங்க… எல்லாரும் என்ன கிண்டல் பண்ணாங்க இல்ல… அதுக்கு பனிஷ்மென்ட் இன்னைக்கு முழுக்க நீங்க கிட்டயே வரக்கூடாது என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்…

 

அன்று மாலை ஆதியையும் மலரையும் அழைத்துக் கொண்டு திருவிழாவிற்கு புது துணி வாங்குவதற்காக கடைக்கு சென்றனர்…

 

கவிப்பிரியாவின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு திரிந்தாள் மலர்… அதில் ஒரு காரண காரியம் உண்டு… தேவாவின் கையில் தான் மாட்டாமல் இருப்பதற்கு கேடயம் இந்த குழந்தை.

 

பாதகமான விஷயத்தை சாதகமாக மாற்றிக் கொள்வதால் தானே அவன் பெரிய தொழிலதிபன்…

 

குழந்தையை கொஞ்சம் சாக்கில், தூணின் மறுபக்கத்தில் நின்றவளின் கிட்ட வந்து “ஹாய் பாப்ஸ் எப்படி இருக்கீங்க.  ஐ மிஸ் யூ ” என்று… அவளின் வலது தோளில் இருந்த குழந்தையை கை கொடுத்து தூக்க போக குழந்தை வரவில்லை… ஆனால் குழந்தையை தூக்கி வைத்திருந்தவள் பல்லை கடித்துக் கொண்டு… தீயாய் முறைத்தாள்…  

 

என்னடி அப்படி பாக்குற… 

 

என்னது இது… குழந்தை இந்த பக்கம் இருக்கா…

 

அவனுடைய கை இடப்பக்கத்தினூடே  தாவணிக்கு உள்ளிருந்தது… நான் இந்த பாப்பாவ கொஞ்சலையே..  குறும்பாக ஒற்றை கண் அடித்து “bye பாப்ஸ்” என்று,  அவள் மென்மைகளை கிள்ளி விட்டு சிரித்து சென்றான் மாயக்கண்ணன்…

 

வலித்த இடத்தை கைகளால் தேய்க்க கூட முடியாத கையறு  நிலையில் நின்றிருந்தால் பாவை… 

 

அங்கிருந்து அனைத்து பெண்களையும் மிஞ்சி ஆதி தான் புடவையை வளைத்து போட்டு தேடிக் கொண்டு இருந்தான்..  அவளுக்கான புடவையை அவனே தேர்ந்தெடுக்கட்டும் என்று விட்டுவிட்டாள்..

 

என்னக்கா மாமா புடவையை இப்படி செலக்ட் பண்றாரு ஏற்கனவே நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்குமோ… என்று கேலி செய்யும் பாணியில் சந்தேகத்தை விதைத்து விடலாம் என்ற எண்ணம்…

 

கடையில் பொம்மையை குழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கொண்டு இருந்தவளிடம்… சேல்ஸ் கேர்ள் கிட்ட எப்படி சிரிச்சு சிரிச்சு பேசுறாரு பாருக்கா… காலையில நம்ம சித்தி புள்ளைங்க கிட்ட கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தாரு.. இப்படியே லூசுல விட்டு வைக்காத அக்கா அப்புறம் நீ தான் கஷ்டப்படணும் கொஞ்சம் கண்டித்து வை..  நான் சொன்னா பிரபு நில்லுனா நிப்பாரு உட்கார நான் உட்காருவாரு… அது மாறி வச்சுக்கோ… என்று தனக்குத் தெரிந்த இல்லற ஆலோசனைகளை வழங்குவதாய் நினைத்துக் கொண்டு அவள் பாட்டுக்கு இரண்டு மூன்று பிட்டுகளை சேர்த்து போட்டு விட..

 

கவி சொல்லும் பொய்களால் அவள் எண்ணத்தை புரிந்த மலர்  ஒரு பெரு மூச்சு உடன்.. ( இவகிட்ட எல்லாம் என்னோட தேவாவோட ஒழுக்கத்தை பத்தி நான் புரிய வைக்கணும்னு அவசியம் இல்ல, இதெல்லாம் இந்த ஜென்மத்துல  திருந்தாது என்ற எண்ணத்தில்)

“வீட்ல போயி அவர கவனிச்சுக்கிறேன் கவி “என்றாள்.

 

அப்பாடா எப்படியோ சொன்ன பொய்கள் வேலை செய்தால் சரி… என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்…

 

நான்கு புடவைகளை எடுத்து வைத்து… ஆதி, மலரை அருகில் அழைத்து காண்பிக்க…. எடுத்த அத்தனை புடவைகளும் அற்புதம்.. அதில் ஒரு கரும்பு பச்சை நிற புடவையை மலர் தொட்டுப் பார்க்க வேகமாய் அதை கையில் எடுத்த கவிப்பிரியா மாமா இதை நான் எடுத்துக்கவா என்று கேட்டாள்…

 

மலரின் முகத்தைப் பார்த்தவன் அந்த புடவையை வாங்கி சுற்றி முற்றி நான்கு போட்டோக்கள் எடுத்துக் கொண்டு..  அதை கவியிடம் திருப்பி கொடுத்தவன் உனக்கு பிடிச்சா எடுத்துக்கோ கவி என்று பதில் கூறினான் ஆதி.. 

 

தேங்க்ஸ் மாமா என்று சந்தோசப்பட்டவள் மலரை ஏளனமாய் பார்க்க தவறவில்லை…

 

நீங்க கேட்ட ஸ்பெஷல் கலர் புடவை இப்பதான் தறியிலிருந்து கொண்டு வந்திருக்கோம் சார்… என்று ஒரு புடவையை அவர்கள் நீட்ட…

 

அனைத்து பெண்களின் கண்ணும் ஆ… என விரிந்தது… அவ்வளவு அழகு அந்த புடவை… நேவி ப்ளூ கலர் புடவையில் பச்சை நிற பார்டர் வைத்து… தங்க ஜரிகளால் மயில் இறகு போல் வடிவமைப்பிக்கப்பட்டு இருந்தது.. 

 

இந்தா இந்தப் புடவையை நீ நாளைக்கு திருவிழாவுக்கு கட்டிக்கோ என்றான் ஆதி…

 

திருவிழாவுக்கு எதுக்கு இவ்வளவு கிராண்டா எடுக்கணும்…

 

கட்டிக்கோ… என்றான் அழுத்தமாய்… 

 

நீங்க மத்த எல்லாருக்கும் டிரஸ் பாருங்க அதுக்குள்ள நான் ஆபீஸ் போன் கால் பேசிட்டு வரேன் என்று கூறி அந்த இடத்தை விட்டு  நகர்ந்து சென்றான் ஆதி… 

 

அனைவருக்கும் ஆடைகள் எடுக்க சில மணி நேரங்கள் ஆனது…

 

அனைவருக்கும் ஆடைகள் எடுத்த பணத்தை வாசகி கொடுக்கப் போக அதை வாங்கி ஆதி கொடுத்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு… அனைவரும் காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்… இது எல்லாம் ஆதிக்கு புது அனுபவமாய் அமைந்தது. 

 

பொறுப்பான மருமகனாய் ஆதி நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் பொழுது உண்மையிலேயே மலருக்கு உள்ளம் பூரித்து போனது… எந்த இடத்திலும் முகம் சுளிக்காமல்..  “இந்த மாதிரி இடத்துல எல்லாம் நான் தங்க முடியாது ” என்று தனது பண திமிரை காட்டாமல்.. 

உண்மையில் நேற்று இரவு ஆதி தூங்கவே இல்லை… ஏசியிலேயே தூக்கி பழக்கப்பட்டவன்… அந்த அறை தோதுபடவில்லை… ஆனாலும் அந்த முகத்தில் சிறு சுணக்கம் கூட அவன் மலரிடமோ வேற யாரிடமும் காட்டவில்லை.. ஹோட்டலில் குட்டிப் பாப்பாவிற்கு சாதம் ஊட்டும் வரையில் பொறுமையாய் காத்திருக்கிறான்… அடிக்கடி போனை பார்த்துக்கொண்டு ” உச்” என்று சலித்துக் கொள்ளவில்லை… என்னோட டைம் ஓட வால்யூ தெரியுமா… என்று கர்ஜிக்கவில்லை…

 

சொன்ன இடத்தில் தூங்கினான்… கொடுத்த உணவை சாப்பிட்டான்…  அவனது தொழில் வட்டாரத்தினால் “ஓவர் ஆட்டிட்யூட்” என்று பெயர் வாங்கியவன்… இவ்வளவு இலகுவாக வாழ முடியுமா… பணத்திமிர் இல்லாத ஒரு பணக்காரனா?…. இதையெல்லாம் மலருக்காக கஷ்டப்பட்டு பொறுத்துக் கொண்டானா என்றால் இல்லை… அவன் இயல்பாய் இருக்கிறான்…  அதனால் ஒரேடியாக எல்லோரிடமும் வளைந்து குலைந்து பேசுவதில்லை… ஆனால் முகத்திற்கு நேராக பேசுபவர்களிடம் பொறுமையாக பதில் சொல்லிவிட்டு செல்கிறான்…

 

உண்மையில் அவளுக்காக தோன்றிய ஆண் தேவதையாக தான் தெரிந்தான் அவளின் தேவா…

 

அடுத்த நாள் காலையில் அனைவரும் சீரும் சிறப்புமாக கிளம்பி… நல்ல நேரம் பார்த்து கோவிலுக்கு சென்றனர் பொங்கல் வைக்க… ஊர் மக்கள் அனைவரும் கூடி இருக்க…

 

மலர் கண்ணை மூடி தெய்வத்தை மனமுருக வேண்டி கொண்டு இருந்தாள்… “என்னையும் என்னோட தேவாவையும் நீ தான் எந்த பிரச்சனையும் இல்லாம  சேர்த்து வைக்கணும்” என்று வேண்டி முடித்து கண்ணை திறக்க… 

 

அவள் கழுத்தில் மாலையைப் போட்டான் அவளின் தேவா…

 

மாப்ள மாலை போட்டுட்டார்…

பொண்ணு, இந்தாங்கோ… மாப்பிள்ளை கழுத்துல மாலை போடுங்கோ… என்று மாலையை மலர் கையில் ஐயர் கொடுக்க… 

 

அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் உறைந்து நின்றாள் மலர்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top