அசுரன் 92
அன்றுஅருண் அலுவலகத்தில் வந்து அந்த ரகளை செய்த பிறகு, ஆதியின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தாலும், மூளை அதிவேகமாக வேலை செய்தது. மலரிடம் இனி அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ நிம்மதியாய் உறங்கு என்று ஆறுதல் கூறிய அனுப்பி வைத்தவன்… மலரின் வாழ்க்கையில் இனி ஒரு சிறு கறை கூடப் படியக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அந்த உறுதியின் வெளிப்பாடு தான் இந்த அதிரடித் திருமணம்.
மலரின் அனைத்து சொந்தங்களின் தகவல்களும் அவன் கையில் இருந்ததால், முதலில் அவன் வீடியோ கால் செய்தது வாசுகிக்கு. திரையில் ஆதியின் கம்பீரமான தோற்றத்தைப் பார்த்ததும் வாசுகிக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. ஆதி நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
”அத்தை, நானும் மலரும் ஒருத்தரையொருத்தர் விரும்புறோம். அவளை என் மனைவியா ஏத்துக்க ஆசைப்படுறேன். உங்க சம்மதம் வேணும்,” என்றான் ஆதி, எந்த வித தயக்கமும் இல்லாமல்.
” அத்தையா” என்று அதிர்ச்சியாகி நெஞ்சில் கை வைத்த வாசுகி… தடுமாறிய படி… “தம்பி… இது எப்படி சாத்தியம்? ஊர் உலகம் என்ன சொல்லும்? ஏற்கனவே ஒரு முறை…” என்று இழுக்க, ஆதி குறுக்கிட்டான்.
”உலகத்தைப் பத்தி கவலைப்படாதீங்க அத்தை. மலருக்கு எந்த ஒரு கெட்ட பேரும் வராமப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, மத்த எல்லாத்தையும் நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்,” என்றான். அந்தப் பேச்சில் இருந்த Confidence
சிறிது நேரம் யோசனையில் இருந்த வாசுகி, ஆதியின் தீர்க்கமான முடிவையும் அவன் வார்த்தையில் இருந்த நம்பிக்கையும் புரிந்து கொண்டு, எங்கே தன் மகள் வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ என்ற சங்கடத்தில் வாழ்ந்து வந்தவர்க்கு… ஆதியின் நம்பிக்கை வார்த்தை தெம்பூட்டியது, அவனது முடிவுக்கு சம்மதித்தார்…
அடுத்ததாக அவன் குறி வைத்தது கவிப்ரியாவின் மாமனார் – மாமியாரை. அவர்களுக்குத் தேவை மரியாதையும், கௌரவமும் மட்டுமே என்பதை ஆதி நன்கு அறிந்திருந்தான்.
மலரின் கணவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவனிடம்… முதல் திருமணத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தையும் அவனிடம் சொல்லி புலம்பினார் கனகவல்லி…
அவ அப்படித்தான் தம்பி முடிந்து போனதை பத்தியே பேசிகிட்டு இருப்பா…. இப்ப எதுக்கு தம்பி போன் பண்ணி இருக்கீங்க… எதுவும் விஷயங்களா? என்று ரங்கசாமி நிகழ்காலத்திற்கு வர…
மலரின் தாலி எதிர்பாராத விதமாக அறுந்து விட்டதாகவும் அதனால் குருக்களிடம் ஆலோசனை கேட்கப் போய்… சொந்த பந்தங்கள் முன்னால் இந்த திருமணம் நடக்காத காரணத்தினாலும் மலரின் ஊரிலுள்ள கோவிலில் உள்ள தெய்வம் கோபமாய் இருப்பதாகவும்… அதற்கு பரிகாரமாக… அனைவரையும் அழைத்து மீண்டும் அதே கோயிலில் திருமணம் செய்தால் அனைத்து பிரச்சினைகளும் முடிந்து விடும் என்றும்.. அதை நீங்கள் தான் முன்னிலையில் இருந்து நடத்தி தர வேண்டும் என்று ஆதி வேண்டி விரும்பி கேட்க…
’முன்னாடி நின்னு நடத்தி வைக்கிறது’ என்ற வார்த்தையைக் கேட்டதும்
கனகவல்லி- ரங்கசாமி தம்பதியினர் குதூகலம் ஆகிவிட்டனர்… அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து…
இது அனைத்தையும் செய்து முடித்தவன் இது எதுவும் மலருக்கு தெரியாதவாறு பார்த்துக் கொண்டான்… காலையில் அலுவலகத்தில் மீட்டிங்கை முடித்துவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு அவளின் சொந்த ஊருக்கு செல்வதாக தான் திட்டம் தீட்டி வைத்து இருந்தான்…
ஆனால் மலர் எடுத்த மற்றொரு முடிவால் அது திசை மாறி போக இருந்ததை… தடுத்து, தான் நினைத்ததை நடத்திக் கொண்டான் தேவாதித்யன்.
தன் திருமணம் எந்தவித தடங்களும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டுதலாக திருவிழாவின் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும்… அனைவருக்கும் திருமண விருந்து மற்றும் தாம்பூலம் அனைத்தையும் ரங்கசாமி அவர்களையே ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தான்.
உண்மையில் ஊருக்கும் ஒரு நல்லது நடக்கின்ற திருப்தியில் அகமகிழ்ந்தனர் தம்பதியினர்.
சொந்த பந்தங்கள் அனைவரும் திருவிழாவிற்கு அழைப்பது போல் அழைக்கப்பட்டனர்… திருமண நடக்கப் போவதை கடைசிவரை மலருக்கு தெரியாமல் மறைத்து வைத்தனர்.. தன்னவளுக்கான திருமண சேலையை தானே தேடி வாங்கியவன் மற்றவர்களுக்கு ஆடை எடுக்கும் இடைவெளியில் சென்று தாலி,மெட்டி, மலருக்கு நகைகள், குழந்தைக்கு செயின் போன்றவற்றை வாங்கி வந்தான்.
அன்றே விக்ரம், சக்ரவர்த்தி, ராஜேஷ் போன்றவற்றை அவர்களுக்கு அழைத்து, திருமண அழைப்பை கூறி, அதிகாலையில் கோவிலில் வந்து இறங்குமாறு அன்பு கட்டளை பிறப்பித்தான். ராஜேஷ் விமானத்தில் வரவழைக்கப்பட்டான்.
அனைவரும் சரியான நேரத்திற்கு அவரவர் காரில் வந்து சேர நினைத்தது போல் திருமணம் பரிபூரணமாக நடந்தேறியது…
கனகவல்லி கேள்விக்கு திருதிருவன முழித்துக் கொண்டிருந்த மலரை பார்த்து சிறு புன்னகைத்தவன் அவர் கேள்விக்கு ஏற்ற பதிலை கூறி சமாளித்தான் ஆதி..
பின் மலரின் வீட்டுக்கு சென்று அனைவரிடமும் விடைபெற்று… கல்யாண ஆடைகளை கலைந்து இலகுவான ஆடைக்கு மாறி விட்டு… விருந்து உண்டு முடித்தவுடன்… மற்றவர்கள் அனைவரும் அவர்கள் காரில் முன்னே சென்றுவிட… மணமக்கள் சிறிது நேரம் இருந்து சொந்த பந்தங்களை பார்த்துவிட்டு தங்களது காரில் கிளம்பினர்.
என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள மலர் ஆதியை நச்சரிக்க அனைத்தையும் காரை ஓட்டியபடியே விவரித்துக் கொண்டே வந்தான்…
அன்னைக்கு, நான் உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு எடுத்தால், நீ காலையில பஸ்ட் நைட் வச்சுக்கலாம்ன்னு முடிவு எடுத்திருக்க அப்படித்தானே என்றான் கிண்டலாக…
தேவா ப்ளீஸ் அதையே திரும்பத் திரும்ப சொல்லாதீங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு… என்று அவள் தலை குனிய..
நீ இப்படி எல்லாம் வெக்கப்படாதடி அப்புறம் எனக்கு ஒரு மாதிரி இருக்கு..
அம்மா வீட்ல ரெண்டு நாள் இருந்துட்டு வந்து இருக்கலாம் இல்ல.. எதுக்கு இப்படி அவசரமா கூட்டிட்டு வாரீங்க ஆபீஸ்ல அர்ஜென்ட் ஒர்க் இருக்கா…
ஆபீஸ்ல அர்ஜென்ட் ஒர்க் இல்லடி நம்ம பெட்ரூம்ல அர்ஜென்ட் ஒர்க் இருக்கு… என்னோட பெட் ரூம்ல தான் நம்மளோட ஃபர்ஸ்ட் நைட் நடக்கணும்ங்கறது என்னோட ட்ரீம் என்றான்..
ச்சி… இதெல்லாம் மா ட்ரீம்… என்று அவள் சினுங்களுடன் கேட்க…
ஆக்சுவலி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா… இப்போ நீ தங்கி இருக்கிற ரூம் என்னோட மாஸ்டர் பெட்ரூம்… அந்த ரூம்ல தான் நீ டெய்லி என் கனவுல வருவ… டெய்லி நமக்குள்ள எல்லாம் நடக்கும்… அதனால தாண்டி அஞ்சு குழந்தைங்க பிறந்தாங்க… பின்ன சும்மாவா வருவாங்க… ஆல் ஆர் மை ஹார்ட் வொர்க் இன் ட்ரீம்… என்று அவனின் கடின உழைப்பைப் பற்றி பெருமிதமாக அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டு சொல்ல…
ஐயோ… எது…உங்களுக்கும் கனவு வந்துச்சா?…
அது என்ன உங்களுக்குமா?… அப்போ உனக்கும் வந்துச்சா…
ஆமாம் என்று தலையசைத்தவள்…
எப்போ?
அன்னைக்கு காய்ச்சல் வந்தப்போ..
என்று இழுக்க…
ஹா.. ஹா… என்று சிரித்தவன்… தலையை ஒரு கையால் கோதி கொண்டே… அப்போ நீ பார்த்து பயந்த பேய் நான்தானா? அதனாலதான் அன்னைக்கு சோபால படு என்று சொன்னதற்கு வேணான்னு சொல்லிட்டு உள்ள ஓடினயா… என்று கேட்டான்.
சிரித்துக்கொண்டே ஆமாம் என்றாள்..
அப்ப மட்டும் தான் வந்துச்சா இல்ல அதுக்கு அப்புறமும்…. என்று வாக்கியத்தை முடிக்காமல் இழுக்க…
புரிந்து கொண்டால் மங்கை, அதுக்கப்புறம் அப்பப்ப வருவீங்க…
ஆஹா… குட்… வந்து என்னடி பண்ணுவேன்? என்றான் குரலில் ஒரு குழைவுடன்…
எல்ல் ல் லாமே…
என்று சொல்லிவிட்டு நாணத்தில் முகத்தை இரு கையால் மூடிக்கொள்ள…
சிட்டு கையை எடு அந்த முகத்தை நான் பாக்கணும்… கைய எடுடி.. என்று கூறிக்கொண்டே.. ஒரு கையால் மூடி இருந்த அவளின் கையை விளக்கப் போக… ஒரு கணத்தில் எதிரே வந்த லாரியை கவனித்தவன் வேகமாய் வண்டியை சுழற்ற அது தனது கட்டுப்பாட்டை மீறி ரோட்டை கடந்து தடதடவெனஅருகே இருந்த புதருக்குள் நுழைந்து…. பள்ளத்தில் விரைந்து இழுத்துச் சென்ற வாகனம் ஓர் இடத்தில் மரத்தில் மோதி நின்றது.
ஆபத்து நேரத்தில் சரியாய் வெளியே வந்த ஏர் பேக் இருவருக்கும் எந்த வித அடியும் படாமல் காப்பாற்றி இருந்தது.
இருவரும் தலையை உலுக்கி நினைவுக்கு வந்தனர்… இருவரும் தெளிவான நிலைக்கு வர சில நிமிடங்கள் எடுத்தது… ஒருவரை ஒருவர் அக்கறையாய் ஆராய்ந்தனர்… ஆதி சீக்கிரம் தெளிந்து விட்டான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க ஆரம்பித்து விட்டான்.. ஆனால் மலரின் மனதில் குழப்பங்கள் சூழ்ந்தது..
படபடக்கும் இதயத்தில் கையை வைத்துக்கொண்டு… ஜஸ்ட் மிஸ்ங்க… நல்ல வேலை ஏதாவது ஆயிருந்தா என்ன பண்றது… என்று மலர் படபடப்பில் புலம்ப…
சரி விடு வாழ்க்கையில எல்லாம் நடக்கிறது தான் என்று அவளுக்கு ஆறுதல் உரைத்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்து பார்த்தான்… கார் ஸ்டார்ட் ஆகவில்லை… சிலமுறை முயற்சிக்கு பின் பேட்டரியின் நிலை கருதி முயற்சியை நிறுத்திவிட்டு,
போனை எடுத்து வெளியே வந்தவன் சுற்று மற்றும் பார்க்க அது ஒரு அடர்ந்த காடாக இருந்தது அவனது சிக்னல் இல்லாமல் இருந்ததால் சிறிது தூரம் நடந்து சென்று கிடைத்த சிக்னலை வைத்து ரவிக்கு தகவல் சொன்னான் தங்கள் இருக்கும் லொகேஷனை அனுப்பி வைத்தான் பின் காரின் நிலையை சுற்றி சுற்றி பார்க்க முன் டயர்கள் பஞ்சராகி இருந்தது… கார் தற்போதைக்கு ஸ்டார்ட் ஆகவில்லை… காரின் முன் பக்கத்தை அவன் ஆராய்ந்து கொண்டிருப்பதை மலரும் அருகில் வந்து பார்த்தாள்… சிறிது நேரத்தில் காடு என்பதால் தூரல் மழை பெய்தது… அது பெருமழையாக உருவெடுப்பதற்கு முன் இருவரும் உள்ளே வந்து அமர்ந்து விட்டனர் ஆனால் அதற்குள் ஓரளவு நனைந்து விட்டனர்…
என்னங்க இப்படி வந்து மாட்டிக்கிட்டோம்… என்று காட்டை பார்த்து மருண்டு முழித்தாள் மலர்…
ரவிக்கு இன்பார்ம் பண்ணி இருக்கேன், வெளில வேலை விஷயமா போய் இருக்கான் கொஞ்ச நேரத்துல காரை எடுத்துட்டு இங்க வந்துருவான் கிளம்பிறலாம்…
அதுவரைக்கும் இங்கே இருக்கிறதா…
காரை விட்டு வெளியே போறது சேஃப் இல்ல டி… அனிமல்ஸ் எதாவது நடமாடும்… காருக்குள்ள இருக்கிறது தான் நல்லது.. உனக்கு என்ன வேணும்…. தண்ணி இருக்கு பசிச்சா சாப்பிட ஸ்னாக்ஸ் இருக்கு… துணைக்கு நான் இருக்கேன் அப்புறம் என்ன… என்றான்.
காருக்குள்ளேயே எவ்வளவு நேரம் உட்காருவது போரடிக்குமே என்றாள்…
அந்த சீட்டில உட்கார்ந்தா போர் அடிக்கும்… என்னோட மடில உக்காந்தா எவ்வளவு நேரம் ஆனாலும் என்னோட செல்லத்தை போரடிக்காம பாத்துக்குவேன்… எப்படி வசதி என்றான் இரு புருவத்தையும் உயர்த்தி…
ஒரு வெட்க முறைப்புடன்… உக்கும்… அதெல்லாம் ஒன்னும் வேணாம்… நா இங்கயே இருக்கேன்… என்றாள்…
அவளின் பயந்த முகத்தையும் படபடப்பையும் கண்டவன் பேச்சை மாற்றும் பொருட்டு,
சரி சொல்லு… கனவுல வந்து என்ன செய்வேன்…
ஐயோ விடமாட்டார் போலயே… என்று நினைத்தவள்… நான் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தவளிடம்…
ஆழ்ந்த முத்தத்தில் ஆரம்பித்த யுத்தம்… கர்ஜனையில் முடியும் வரை அனைத்தையும் மாய கள்வன் ஒன்று விடாமல் கூற..
தப்பித்துப் போக வழி இன்றி… தேவா போதும்… ப்ளீஸ் ஸ்டாப் பண்ணுங்க.. நான் கேட்க மாட்டேன்… என்று கண்ணை மூடி பாதம் கூசி காதுகளை தனது விரல்களால் அடைத்தவள்… உடல்சிவக்க கேட்டுக் கொண்டிருந்தாள் அவன் உணர்ச்சியுடன் கூறும் கதையை…
அதுவும் அந்த லாஸ்ட்டா குடுக்குற சவுண்ட் எப்படி இருக்கும் சிம்பா பட சீன் மாதிரி இருக்குதா உனக்கு… என்று அவன் ஒரு ரகசியத்தை கூற அய்யோ என்றானது அவளுக்கு…
அதிசயமாய்… இது உங்களுக்கு எப்படி தெரியும் என்றாள்…
உடனே தனது கைபேசியை எடுத்தவன் அன்று அவள் சைத்ராவிடம் பேசியதை ரெக்கார்ட் செய்து வைத்திருந்தால் அதை பிளே செய்தான்…
அது என்னடி அவர் அந்த விஷயத்தில்… ம்ம்… ம்ம்..னு நிறுத்தாம இழுக்குற…
நான் கூட உன்னை அமைதி பூனை அப்படின்னு நினைச்சேன்… நீ பேசுன பேச்ச கேட்டு சைத்ரா 50% தான் ஷாக் ஆனா நான் தாண்டி 100% ஷாக் ஆனேன்…
அப்பட்டமாய் அவனிடம் மாட்டிக் கொண்டவள்… வெட்கத்தில் நாணி கோணி நெளிந்து கொண்டு இருந்தாள்…
அன்று மலர் பேசியதை போனில் கேட்க கேட்க… அவளின் ஒவ்வொரு பதிலுக்கும் கேலி வார்த்தைகள் பேசி அவளை சிரிக்க வைத்தும் வெட்கப்பட வைத்துக் கொண்டு இருந்தான் அவளவன்.
இவ்வளவு பேசுவானா தன்னவன் என்ற ஆச்சரியம் வேறு பெண்ணாவளுக்கு..
விளையாட்டாய் பேச ஆரம்பித்தது செயலில் முடிந்தது… ஆதியின் பார்வையில் மோகத்தீ பற்றி கொண்டது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️