அசுரன் 96
அருண் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான். ரதியின் அந்த நிபந்தனை அவன் காதுகளில் ரீங்காரமிட்டது. “அடுத்த ஆறு மாசம்… பெட்ரூம்ல எனக்கு ஃபுல் சாட்டிஸ்பேக்ஷன் கிடைக்கணும். அப்படி இருந்தா மட்டும் தான், நான் உனக்கு மியூச்சுவல் டைவர்ஸ் தருவேன். இல்லைன்னா, கோர்ட் கேஸ்னு இழுத்து உன்னை அசிங்கப்படுத்திடுவேன்.”
இந்த ‘டீல்’அருணுக்குத் தன்மானத்தை அடகு வைப்பது போலத் தெரிந்தது. ஆனாலும், இந்த நரகத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற இதுதான் ஒரே வழி என்று அவனுக்குப் புரிந்தது.
அவன் மெல்ல ரதியின் பக்கம் திரும்பினான். அவளது அந்தத் திமிரான பார்வை, ஒரு விலையை நிர்ணயித்துவிட்ட வியாபாரியைப் போல இருந்தது. அவன் ரசித்த அ திமிரான பார்வை, இன்று அவனைக் கேவலமாக பார்ப்பது போன்று தோன்றியது…. அருண் அவளைத் தொட்டபோது, அவனது விரல்களில் எந்த ஒரு நளினமும் இல்லை. ஒரு பாரமான கல்லைத் தூக்குவது போன்ற ஒரு வேதனைதான் அவனிடம் இருந்தது.
முன்னெல்லாம் ரதியின் கழுத்தோரத்தில் இருக்கும் அந்தச் சிறிய மச்சத்தை அணு அணுவாக முத்தமிட்டு ரசிப்பான். அவளது கூந்தல் தன் முகத்தில் படும்போது ஒருவிதமான போதையே அவனுக்குள் ஏறும். ஆனால் இப்போது, அவளது கூந்தல் அவன் முகத்தில் உரசியபோது, ஏதோ ஒரு நச்சுப்பாம்பு ஊர்வது போன்ற அருவருப்புதான் அவனுக்குள் உண்டானது.
“என்ன அருண்… ஸ்டாப் பண்ணிட்ட? உனக்கு என்னோட இந்த ‘ஸ்மெல்’ ரொம்ப பிடிக்குமே?” என்று ரதி கிண்டலாகக் கேட்டு, அவனை இன்னும் நெருக்கமாக இழுத்தாள்.
அருண் அவளைத் தள்ளிவிட்டான். “முன்னாடி பிடிச்சிருந்தது ரதி… ஏன்னா அப்போ உன்கிட்ட ஒரு மனுஷி இருந்தான்னு நினைச்சேன். ஆனா இப்போ நீ ஒரு வெறும் ஜடம் மாதிரி தான் எனக்குத் தெரியுற. உன்னோட இந்த பெர்ஃப்யூம் வாசம் கூட எனக்குத் தலைவலியைத்தான் கொடுக்குது,” என்று கசப்புடன் சொன்னான்.
அவளது மென்மையான தோள்களைத் தொட்டபோது, முன்பு பட்டுப் போலத் தெரிந்த அதே சருமம், இப்போது அவனுக்கு ஒரு சொரசொரப்பான காகிதம் போலத் தோன்றியது. அவளது இதழ்களில் அவன் முத்தமிட முயன்றபோது, அவனது மனசாட்சி அவனை ஓங்கி அறைந்தது. அந்த இதழ்களில் இருந்து வந்த மதுவின் வாசம் அவனுக்கு குமட்டலை ஏற்படுத்தியது.
“இந்த ஆறு மாசம்… உன்னைத் தொடுற ஒவ்வொரு முறையும் நான் நரகத்தை அனுபவிக்கப் போறேன். உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு இப்போ இரிடேஷனை தான் தருது.
முன்னாடி நான் ரசிச்ச உன்னோட அந்த ‘கர்வி பாடி’ இப்போ எனக்கு ஒரு வெறும் சதைப்பிண்டம் தான். அதுல எந்த உயிரும் இல்ல, எந்த உணர்ச்சியும் இல்ல,” என்று அவளது கண்களைப் பார்த்துச் சொன்னான்.
ரதி அவன் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்தாள். “பரவாயில்ல அருண்… நீ வெறுத்தாலும் பரவாயில்லை. ஆனா எனக்குத் தேவையானது உன்கிட்ட இருந்து கிடைக்கணும். உன்னோட அந்த ‘ஹீட்’ எனக்கு வேணும்,” என்று அவனது சட்டையை ஆவேசமாகப் பிடித்து இழுத்தாள்.
அருண் ஒரு இயந்திரத்தைப் போலச் செயல்படத் தொடங்கினான். அவளது மார்பில் அவன் முகம் புதைத்தபோது, முன்பு அங்கிருந்த கதகதப்பு இப்போது அவனுக்கு ஒரு நெருப்புப் பிழம்பாகத் தெரிந்தது. அவளது ஒவ்வொரு தொடுதலும் அவனது நரம்புகளை முறுக்கேற்றினாலும், அது இன்பத்தால் அல்ல, ஆத்திரத்தால் விளைந்தது. ரதி அவனிடம் இருந்து ஒரு ஆக்ரோஷமான கூடலை எதிர்பார்த்தாள், அருண் அதைக் கொடுத்தான்—ஆனால் அதில் ஒரு துளி கூட அன்பு, ரசனை எதுவும் இல்லை.
முதுகில் நகைக்கிரல்கள் விழ போதை ஏற்றுவதற்கு பதிலாக மிகுந்த எரிச்சலை தந்தது… ரதி இனிமேல் நகத்தை வெட்டு என்றான் எரிச்சலாக…
முன்பெல்லாம் கூடலுக்குப் பின் அவளை அணைத்துக் கொண்டு தூங்குவான். ஆனால் இன்று, காரியம் முடிந்த அடுத்த நொடியே, அவளைத் தொடக் கூடப் பிடிக்காமல் மெத்தையின் மறுமுனைக்குச் சென்று விழுந்தான்.
“இன்னைக்கு ஒரு நாள் முடிஞ்சுது. இன்னும் 179 நாள் தான் பாக்கி, இப்படியே கண்ண மூடிக்கிட்டு செஞ்சி இவ்ளோ அனுப்பி வெச்சிடனும்…” என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான். அவனது உடம்பில் ஒட்டியிருந்த ரதியின் வாசம் அவனுக்கு ஒரு தீராத எரிச்சலைய்யும், ஒரு வித ஒவ்வாமையும் தந்தது. விவாகரத்துக்காகத் தன் ரசனையையே கொன்றுவிட்டு, ஒரு ஜடமாக அவளிடம் வீழ்ந்த அந்த இரவு, அருணுக்குத் தன் வாழ்க்கையிலேயே மிகக் கேவலமான இரவாகத் தோன்றியது.
அவனின் வாழ்நாளில் அழகிகளை தேடி தேடி ரசித்து ரசித்து செய்த செயலை, இன்று ஒரு ஒவ்வாமையுடன் செய்யும் நிலைக்கு ஆளாகினான்…
உடம்பு சரியில்லாத நேரங்களில் கூட ரதி கூடலுக்கு அழைத்த போது… அவன் உடல் மயங்கி தான் நிற்கும்… அவன் ஒருபோதும் இதற்கு தடை விதித்ததில்லை… தன்னவள் தனக்கானவள் அவள் தேவையை நிறைவேற்றுவது என் பொறுப்பு என்று பலவித எண்ணங்கள் அவன் மனதிற்குள் இருக்கும்… அதனாலயே எந்தவிதமான சண்டையாக இருந்தாலும் இருவரும் அதை படுக்கையில் காட்டிக் கொள்வதில்லை… இன்று தான் அவன் உணர்ந்தான் தனக்கானவள் அவள் அல்ல…. அவளின் அடிமைதான் நான்… ரதியின் கையில் சிக்கிய பாலியல் அடிமை போல தோன்றியது அவனுக்கு…..
************
முதல் இரவு மாப்பிள்ளை காலையில், நேரம் கழித்து கண் விழித்தான்… நெற்றியை சுருக்கி மெல்லமாய் கண்ணை விழித்தவன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் தன்னை கீழே குனிந்து பார்த்தான்… நேத்து அணிந்திருந்த அதே பட்டு வேஷ்டி சட்டை.. களையாமல் இருந்தது… அச்சச்சோ.. அப்ப ஒண்ணுமே நடக்கலையா… தூங்கிட்டேனா… எப்படி தூங்கினேன்…. அது எப்படி தூங்கி இருப்பேன்… ஒருவேளை ஓவர் ஹேப்பி நஸ்ல மயங்கி விழுந்துட்டனா?… இன்று தனக்குள்ளேயே பலவாறு கேள்விகளை கேட்டபடி குழப்பத்தில் எழுந்து இரு கைகளையும் தலையை பிடித்தபடி உட்கார்ந்திருந்தான் தேவா…
அவனது மனைவி காபி உள்ளே நுழைந்தாள்… அவனது பார்வை அவளை தான் தொடர்ந்தது குளித்து முடித்து அழகாக சேலை கட்டி அலுவலகத்திற்கு தயாராகி வந்தாள்..
எங்கடி கிளம்பிட்ட…
ஆபீஸ்க்கு..
என்ன விளையாடுறியா… ஒன் வீக் நம்ம இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக போறது இல்ல… நெக்ஸ்ட் வீக் ஹனிமூன் போறோம்… நெக்ஸ்ட் மந்த் தான் ஆபீஸ் போறோம்… என்று படுக்கையில் சாய்ந்த வாரே பாற்கடலில் பள்ளி கொண்டவர் போல் ஒரு கையை தலைக்கு கொடுத்து படுத்த படி … ஆதி கூற…
ஆஹா… ஆசைதான்… பகல்ல நமக்கு இங்க என்ன வேலை… மூன்று நாள் லீவ் போட்டதுல ஆபீஸ் வொர்க் நிறைய இருக்கும் இன்னைக்கு போய் எல்லாம் கம்ப்ளீட் பண்ணுவோம்… வேக் அப்… அண்ட் கேட் ரெடி…
பகல்ல என்ன வேலையா?… நான் நைட்டே எந்த வேலையும் பாக்கலையே டி… ஆமா நான் எப்படி தூங்கினேன்…
என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்… கழுத்துல கிஸ் பண்ணிக்கிட்டு இருக்கும்போதே தூங்கிட்டீங்க… என்றாள்.. காபியை அவனிடம் கொடுத்து விட்டு, அவனது பக்கத்தில் அமர்ந்து..
சேம்.. சேம்… பப்பி ஷேம்… டேய் ஆதி என்னடா பண்ணி இருக்க… தூங்குற நேரமாடா அது… மத்த நாள் எல்லாம் விடிய விடிய உக்காந்து பேய் மாதிரி வேலை பாப்பியே… வேலை பார்க்க வேண்டிய நாள்ல இப்படியாடா தூங்கி விழுந்து மானத்தை வாங்குவ… என்று வெளிப்படையாகவே தன்னைத் தானே நொந்து கொண்டான்…
எப்படியாவது மலரை சரிகட்டி முதல் பகலை முடித்து விடலாம் என்று எண்ணியவனுக்கு… ஏமாற்றமே மிஞ்சியது… அவனை பொறுப்பாக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு… வீட்டிலிருந்தாள் மலர்… ஏனோ இன்று ஒரு முத்தத்திற்கு கூட.. வழி கிடைக்கவில்லை ஆடவனுக்கு…
ஏனோ இதயம் எல்லாம் படபடவென அடித்தது மலருக்கு…
ஆதி அலுவலகம் கிளம்பியவுடன்…
அந்த மர்ம எண்ணிலிருந்து அழைப்பு வர… வேகமாய் எடுத்தாள்…
என்ன உன் புருஷன் ஆபீஸ் போயிட்டான் போல…
ம்ம்….
நீ ஆபீஸ் போகலையா…
கிளம்ப போறேன்…
நீ என்ன சொன்னாலும் நம்புறான்… Fool… உன் மேல கொஞ்சம் கூட சந்தேகமே படல…
சொன்ன மாதிரியே முதலிரவு நடக்க விடாம பண்ணிட்ட… இனிமேல் இந்த ஹக்கிங்… கிஸ்ஸிங்… எதுவும் இருக்க கூடாது…
ம்ம்… இருக்காது…
அவனை எப்படி சமாளிப்ப… கட்டுக்கடங்க மாட்டான் போல..
அது என்னோட பிரச்சனை…
வீடியோ கால் வா…
என்னோட போன்ல ரெண்டு கேமராவும் ரிப்பேர்…
அது மறுபக்கம் இருப்பவனுக்கும் தெரிந்திருக்க வேண்டும்… அதனால் அந்த காரணத்தை உடனே ஏற்றுக் கொண்டான்.
காலையில உன் புருஷன் ஒரு முத்தம் வேணும்னு ரொம்ப டென்ஷன் ஆனான் கொடுக்காமல் அனுப்பி வச்சுட்டே… பாவம் ரொம்ப வருத்தப்படுவான்…
இப்ப நீ என்ன பண்ற…
அவனுக்கு கொடுக்க வேண்டிய அத்தனை முத்தத்தையும் எனக்கு கொடுக்கிற… கமான்… ஸ்டார்ட்..
ஐயோ அதெல்லாம் என்னால முடியாது… ப்ளீஸ் இது மட்டும் வேணாமே….
ஓஹோ போன்ல கொடுக்க விருப்பம் இல்லனா நான் வேணா நேர்ல வரட்டுமா… என்று கேட்க…
தூக்கி வாரி போட்டது மலருக்கு…
இல்ல… வேணாம்.. வேணாம்…
நான் போன்லயே கொடுக்கிறேன்…
இச்… இச்… இச்…
என்ன ஏதோ வேண்டா வெறுப்பா கொடுக்கிற மாதிரி இருக்கு… நல்லா அழுத்தமா கொடு… என்று கேட்க…
இஇ..ச்ச்..ச் சு…
போன்ல வாங்கும் போதே இவ்வளவு கிக்கா இருக்கே… நேர்ல வாங்குனா… எப்படி இருக்கும்…
நாசமா போச்சு…
என்ன?…
ஈரம் பட்டு என்னோட போன் நாசமா போச்சு…
என்னோட வாழ்க்கையும் அப்படித்தான் நாசமா போச்சு உங்களால…
இப்ப கூட உங்க ரெண்டு பேரோட கல்யாண வீடியோ தான் பாத்துட்டு இருக்கேன்…. அடடடடா… என்னா லவ்வு என்ன லவ்வு… பார்க்கும்போதே சும்மா மெய் சிலிர்க்குது… நீ இப்படி எனக்கு போன்ல ரசிச்சு முத்தம் கொடுத்தேனு தெரிஞ்சா அவனுக்கு எப்படி இருக்கும்…
ப்ளீஸ்… அப்படி எதுவும் பண்ணிடாதீங்க… இந்த விஷயம் தேவாவுக்கு எப்பவுமே தெரியக்கூடாது… அவர் தாங்க மாட்டார்…
தெரியக்கூடாதா… சரி விடு தெரியாம வச்சுக்குவோம்.. உன்னை நான் முழுசா எடுத்ததுக்கு அப்புறம் தெரியட்டும்… அந்த ஏமாற்றம்தான் நான் அவனுக்கு கொடுக்கிற பெரிய வலி… என்று அந்த நபர் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்…
கருப்பு கலர் டிரஸ்ல நிஜமாவே ரொம்ப அழகா இருக்க…
யாரு நானா?
எஸ்.. நீயே தான்…
அதுவும் அந்த ஒயின் கலர்ல சிவந்து இருக்கிற லிப்ஸ் “வாவ் “… என்ன சொக்கி இழுக்குது… கடிச்சு வைக்க தோணுது…
ஐயோ… கேக்கவே கொடுமையா இருக்கு..
இப்பொழுது கெட் டுகெதர் பார்ட்டியில் அவர்கள் ஆடிய நடன காட்சி புகைப்படமாக அவன் கையில் இருந்தது அதில் மலரின் முகத்தை மட்டும் ஜூம் செய்து பார்த்துக் கொண்டே இருந்தான்…
நான் ஆபீஸ் கிளம்பட்டுமா?.. நான் போகலைன்னா சந்தேகம் வரும்… என்ற மலர் கூற..
கல்யாணத்துக்கு முன்னாடி நீ பேசினதை விட கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட குரல் ரொம்ப இனிமையா இருக்கு… ஐ லைக் இட்…
நிஜமாவா?..
இந்த குரலுக்காக என்னோட சொத்தையே எழுதி வைப்பேன்…
ஹா… ஹா…
சிரிக்காதே மலர் சிம்பனி மாதிரி இருக்கு…
எனக்காக ஒரு ஐ லவ் யூ மட்டும் சொல்லிட்டு நீ ஆபீஸ்க்கு கிளம்பு என்றான்…
சிறிது நேரம் அமைதிக்கு பின்…
ஐ…. லவ்… யூ… என்று உரைத்தாள்..
மறுபக்கத்தில் இருந்தவன் இறக்கை இல்லாமல் வானத்தில் பறந்தான்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️