“அத்தியாயம் 01”
அந்த இடமே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.
அங்கிருந்தவர்கள் எச்சில் விழுங்கிக் கொண்டிருந்தனர்.
புயல் என உள்ளே நுழைந்தான் ஒருவன்.
அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொருவன் அவனுக்கு அருகே அவசரமாக வந்து நின்றான்.
“குட் மார்னிங் ஸர்”
என இளிக்க அவனைப் பார்த்து ஒரு தலையசைப்பை கொடுத்தவன் சுற்றும் நோட்டம் விட்டான்.
அங்கிருந்த ஒரு இருக்கையில் ஒருவன் அமர்ந்திருக்க அவனுக்குப் பக்கத்தில் ஒருவன் அவனுக்கு விசிறிக் கொண்டிருந்தான்.
அவன் அமர்ந்திருப்பவனை அழுத்தமாகப் பார்த்து விட்டு பக்கத்தில் இருப்பவனை முறைத்துப் பார்க்க அவனது பார்வையில் உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் வெளியேக் காட்டிக் கொள்ளாமல்.
“இல்ல ஸர் இப்போ தான் ஒரு டேக் போனோம் அதான் குட்டி ப்ரேக் ஒன்னு”
என இழுக்க அவனை அழுத்தமாகப் பார்த்தவன்.
“பார்க்குற நேரமெல்லாம் ப்ரேக்ல தான் இருக்காங்க இன்னும் ஒரு மாசத்துல படத்த முடிச்சிக் குடுக்க முடியும்ன்னா சொல்லுங்க இல்லன்னா”
எனக் கூற
“இல்ல ஸர் இப்போவே முக்கால்வாசி ஷூட்டிங் முடிஞ்சிருச்சி இன்னும் ஒரு ஃபைட் சீனும் ஐட்டம் ஸாங் ஒன்னும் இருக்கு அதோட முடிஞ்சிரும்”
அவசரமாக கூறினான் எங்கே படத்தயாரிப்பிலிருந்து விலகிவிடுவானோ என்ற அச்சமே!
“ம்ம் ஐட்டம் ஸாங் அளவுக்கதிகமா கிளாமர் இல்லாம இருக்கட்டும்”
எனக் கூறி அழைப்பேசியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்றதன் பின்னர் தான் அங்கிருந்தவர்களால் சீராக மூச்சு விடமுடிந்தது.
நெஞ்சை நீவி விட்டுக் கொண்ட இயக்குனர் ராகவ்.
“ஐட்டம் ஸாங்ன்னாவே கிளாமர் தானே இருக்கும் இதுல எப்பிடி கிளாமர குறைக்க முடியும்”
என நினைத்துக் கொண்டான்.
நினைக்க மாத்திரமே முடிந்தது அவனால் அவனிடம் கூற முடியாதே கூறினால் அவனது கடித்துக் குதறும் வார்த்தைகளை நினைத்தால் நெஞ்சில் ஈரம் வற்றிப் போகும்.
அங்கிருந்தவர்களைப் பார்த்தவன்.
“என்ன நின்னுக்கிட்டிருக்கிங்க அடுத்த டேக் எடுக்கனும் ரெடியாகுங்க”
அவனின் மேல் இருக்கும் கோவத்தை அங்குள்ளவர்களிடம் காட்டினான்.
“என்னடா இவ்ளோ நேரம் பம்மினாரே இப்போ எரிஞ்சி விழுறாரு”
என அங்கிருந்த எடுபுடி வேலை புரிபவன் தனது சகத் தோழனிடம் கேட்க.
“எங்ககிட்ட மட்டும் தான் இவர் பம்முவாரு அவர்கிட்ட அடங்கி தான் போகனும் யேன்னா அவர் தான் இந்த படத்தோட ப்ரடீயூசர் அடங்கிப் போகத்தானே வேணும்”
எனக் கூறினான்.
இங்கு காரை ஓட்டிக் கொண்டிருந்தவனது முகமே காட்டிக் கொடுத்தது ஏதோ சரியில்லை என்று.
“எதுக்கு இவ்ளோ நேவர்ஸா இருக்கேன் என்னாச்சு”
என நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன் தனது அழைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
“அங்க எல்லாம் ஓகேயா நதிங் சீரியஸ்”
என அவனே கேள்வி கேட்டு அவனே பதிலைக் கூற மறுபக்கத்தில் கூறிய பதிலில் உச்சக்கட்ட அழுத்தம் கூடியது.
“என்னடா சொல்ற இப்போ சொல்ற இடியட் ஓகே நாளை காலைல அங்க இருப்பேன்”
எனக் கூறியவன் அழைப்பைத் துண்டித்தான்.
அழைப்பைத் துண்டித்தாலும் அவனது முகமே உணர்த்தியது அவனது கோவத்தின் அளவை.
நெற்றியை தேய்த்துக் கொண்டவன் தலை முடியையும் கோதிக் கொண்டான்.
இருந்தும் அவனது கோவம் அடங்கவில்லை.
கார் இருக்கையில் சாய்ந்தமர்ந்தவன் விழிகளை மூடிக் கொண்டான்.
மூடிய விழிகளில் மின்னி மறைந்தாள் அவள்.
கண்சிமிட்டி சிரித்த அவளது சிரிப்பு இவனையும் ஒட்டிக் கொள்ள மெதுவாக விரிந்தது அவனது அழுத்தமாக மூடப்பட்டிருந்த இதழ்கள்.
பின் விழிகளைத் திறந்தவன் அழுத்தமாக மூகத்தை கைளால் தேய்த்துக் கொண்டு நிமிந்து அமர்ந்தவன்.
“உன்ன விடமாட்டேன்டி”
என வன்மமாக உரைத்தவன் வண்டியை எடுத்தான்.
சீறிப்பாய்ந்தது வண்டியும் அவனது சீற்றத்தின் அளவை பறைசாற்றும் விதமாக.
இங்கு அவனது எண்ணங்களுக்கு சொந்தக்காரியோ.
ஓடிக் கொண்டிருக்கும் மேகங்களுக்கு நடுவே கண்ணாம்பூச்சி ஆடி விளையாடும் நிலாவைப் பார்த்தவள் பெருமூச்சொன்றை விட்டு கண்களை துடைத்துக் கொண்டாள்.
“இன்னும் ஏன் நா உயிரோட இருக்கேன்”
என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால் எதுவும் செய்ய முடியாத தனது கைய்யறு நிலையை எண்ணி அழ மட்டுமே முடிந்தது அவளால்.
******
அந்த திருமண மண்டமே அல்லோலப்பட்டுக் கிடந்தது.
அனைவரது முகத்திலும் பதட்டம் மாத்திரமே!!
பதட்டத்தை உண்டாக்கியவனோ எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி மணமகன் அமர வேண்டிய இடத்தில் அமர்ந்து அங்கிருந்த தனது பெற்றோரை முறைத்துப் பார்த்தான்.
அவனது முறைப்புக்கு அர்த்தம் அறியாமல் அவனையே முறைத்துப் பார்த்தார்கள் அவனைப் பெற்றவர்கள்.
அங்கு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த இன்னுமொருவன் மணமகன் இடத்தில் அமர்ந்திருப்பவனை கொலைவெறியாக முறைத்துத் தள்ளினான்.
ஆனால் அது எதற்கும் அசராதவனாக தனது பக்கத்தில் கோழிக்குஞ்சாக பயந்து ஒடுங்கி அமர்ந்திருப்பவளை முறைத்தான்.
“நேக்கு நாழியாகுது”
என ஐயர் எச்சில் விழுங்க அவரைத் திரும்பிப் பார்த்தவன் ஒரு நொடி விழிகளை மூடி யோசித்து விட்டு.
அங்கு வைக்கப்பட்டிருந்த தாலியை எடுத்து மணமகளாக அமர்ந்திருந்தவளின் கழுத்தில் மூன்று முடிச்சுக்களை இட்டு தனது சரிபாதி மட்டுமன்றி தனது மனைவியாகவும் ஏற்றுக் கொண்டான்.
அவனால் தாலி வரம் பெற்றவளோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று அவனை அடிப்பட்ட பார்வைப் பார்த்தாள்.
“அக்ஷராஆஆ”
என அவனது தந்தை அதிர்ந்து போய் அழைப்பதை ஒரு பொருட்டாக மதியாதவன் அவளது கையை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.
“இவ இனி என் பொண்டாட்டி”
என அம்மண்டபம் முழுவதும் கேட்கும்படி கர்ஜித்துக் கூறியவன் அவளைக் கைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.
அவன் இழுத்த இழுப்பிற்கு இழுப்பட்டுச் சென்றாள் அவள்.
அவன் வாசல் வரைக் கூட சென்றிருக்க மாட்டான்.
மண்டபத்தில் ஒவ்வொரு குரலாக உயர ஆரம்பித்திருந்தது.
“பார்த்தியாடி அந்த கறுத்தக் குட்டிக்கு வந்த வாழ்வ ம்ஹும்”
என நாடி மீது கை வைத்து அங்கிருந்த ஒரு பெண்மனி இன்னொருத்தியிடம் கூற அதைக் கேட்ட அப்பெண்மனியும் அவளுக்கு ஒத்து ஊதினாள்.
இவர்களது சம்பாஷனையில் வாசலை நெருங்கியிருந்தவன் திரும்பி அவர்களை ருத்ரமூர்த்தியாக முறைக்க அவனது புதுப் பொண்டாட்டியோ இதை நான் எதிர்ப்பார்த்தேன் என்பது போல் விழிகளை மூடித் திறந்தாள்.
விழிகளைத் திறந்து தனது கையைப் பிடித்திருக்கும் அவனது கையையும் தனது கையையும் மாறி மாறிப் பார்த்தாள்.
பாலுக்கு அருகில் தேனை வைத்தது போல் இருந்தது இருவரது நிறங்களும்.
அவளோ இதழ்க்கடித்து அழுகையை அடக்க அவளது கணவனோ அவளை இழுத்துக் கொண்டு சென்று தனது காரின் முன் இருக்கையில் இட்டவன் சென்று ட்ரைவர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான்.
அவனது கோவத்தை பிரதிபலிக்கும் விதமாக அவனது கைகளில் அக்கார் சீறிப்பாய்ந்தது.
*****
இங்கு மண்டபத்தில் அவனது பெற்றோர் அனைவரிடமும் மன்னிப்பை கேட்டு விட்டு மாப்பிள்ளை வீட்டாரிடமும் மன்னிப்பை இறைஞ்சி விட்டு செலவு முழுவதையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாகக் கூறி விட்டு அரக்கப்பறக்க ஓடினர் தங்கள் தவப்புதல்வனைத் தேடி!!
புதுக் கணவனாக பதவி ஏற்றிருக்கும் அவனது பெயர் அக்ஷரன் அவனால் தாலி வரம் பெறப்பட்டவள் நேத்ரா என்பவளாகும்.
சக்ஷரேத்ரனின் தந்தையின் பெயர் ஞானவேல் தாயின் பெயர் தேவகி
ஞானவேலும் தேவகியும் தங்களது வீட்டிற்குள் சென்றார்கள்.
அங்கு ஸோபாவில் காலுக்கு மேல் கால் போட்டு தொடையை இடது கையால் தட்டிக் கொண்டு வலது கையை நாடியில் வைத்து தனக்கு நேரெதிரே நின்று கொண்டிருக்கும் தனது மனைவியையே அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது மனைவியோ தலையைக் குனித்து தவறு செய்த பிள்ளை போல் நின்றுக் கொண்டிருந்தாள்.
“எலேய் என்னல பன்னிவெச்சிருக்க”
என ஞானவேல் உறுமிக் கொண்டு உள்ளே வர அவரை முறைத்துப் பார்த்தான்.
“இங்க பாருங்க தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாதிங்க சொல்லிட்டேன்”
என அவன் அவரிற்கு மேலாக உறுமினான்.
அவனது குரலில் அவளுக்குத் தான் நடுக்கம் பிடித்தது.
“ஓஹ் அப்பிடியால அப்போ சரி தொர பெரியவராகிட்டிங்க அப்போ நீங்க வெளில போகலாம்”
என வெளியே கை காட்ட அவனோ எந்தவித சலனமுமின்றி அமைதியாக எழுந்து நின்றான்.
“நா ஒன்னும் இங்க தங்க வரல்ல போறோம்”
எனக் கூறியவன் தனது மனைவியைப் பார்க்க அவளோ இன்னும் தலையை நிமிர்த்தவே இல்லை.
“ஏய் அங்க நின்னுட்டு பொதையல் தேட்றியா என்ன போய் உன்னோட லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு வா ம்ம்ம் நோ தேவையில்ல நீ வா”
என அவளைப் பிடித்துக் கொண்டு வெளியேற.
“ஐயோ சொல்றத கேளுய்யா ராசா நில்லுய்யா”
என தேவகி அழுதுக் கொண்டே அவனைப் பின்த்தொடர்ந்தார்.
“இல்லம்மா நாங்க போறோம் எனக்கு வர்க் இருக்கு”
எனத் தனது தாயிடம் கூறியவன் வெளியேற.
“நீ போ அவள எதுக்குக் கூட்டிட்டுப் போற”
ஞானவேல் கேட்க.
“பொண்டாட்டிய எதுக்குக் கூட்டிட்டுப் போகனும் குடும்பம் நடத்தத்தான் அது மட்டுமில்லாம இனி உங்க யாரையும் நம்பி இவள இங்க விட்டுட்டுப் போகப் போறதில்ல”
எனக் கூறியவன் அவளை முன்பு போலவே அழைத்துச் சென்று முன்னிருக்கையில் விட்டு விட்டு தான் சென்று ட்ரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியைக் கிளப்பினான்.
“ஏன்ங்க இப்பிடி பன்னிங்க காலைல வந்ததுல இருந்து அவன் இன்னும் பச்சத்தண்ணிக் கூட வாய்ல வைக்கல்ல வந்ததும் வராததுமா இப்பிடி தொறத்தி விட்டிங்களே”
என தேவகிப் பொலம்ப ஞானவேலோ யோசனையாக நின்றிருந்தார்.
“இவனுக்கு அவள புடிக்காதுல அப்புறம் எதுக்குல அவள கட்டிக்கிட்டான்”
என மனைவியைப் பார்த்து கேட்க அவருக்கும் அதற்கான பதில் தெரியாதல்லவா?
இனி எங்கனம் பதில் சொல்வது.
****
இங்கு காரில் அவளோ பயந்து போய் கார்க்கதவுடன் ஒன்றி அமர்ந்திருக்க இவனோ இறுகிப் போன முகத்துடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“ரொம்ப லவ்வோ”
என இளக்காரமான குரலில் அவன் கேட்க இவளோ புரியாமலே அவனைப் பார்த்தாள்.
“என்னடி புரியாத மாதிரி பாக்குற அதான் உனக்கு பேசியிருந்ச மாப்ள மேல ரொம்ப லவ்வோ”
எனக் கேட்க இவள் எதுவும் பேசவில்லை.
அமைதியாக முன்னாடி திரும்பிக் கொண்டாள்.
சடன் ப்ரேக் போட்டு கார் நின்றது.
“ஹேய் நா பேசிட்டு இருக்கேன் நீ என்ன அமைதியா இருக்க சொல்லுடி ரொம்ப லவ் பன்னிங்களோ”
நெருங்கி அவளது தாடையை இறுகப் பற்றிக் கேட்க அவனது பிடி அவளுக்கு வலியைக் கொடுத்தது கண்கள் வேற கலங்கியது ஆனால் எதுவும் பேசவில்லை அழுத்தமாக வாயை மூடிக் கொண்டாள்.
அவளது கண்களை பார்த்தவன் என்ன நினைத்தானோ அவனது பிடியை விட்டான் ஆனால் தள்ளி அமரவில்லை.
“இங்க பாரு இனி நீ என்னோட பொண்டாட்டி அவன காதலிச்சிருந்தாலும் நோ ப்ரொப்ளம் அவன மறந்துடு”
அவளது விழிகளைப் பார்த்து கட்டளையாக கூறிவிட்டு காரை மீண்டும் ஸ்டார்ட் செய்தான்.
மீண்டும் காரில் அமைதி.
காரோ சீறிப் பாய்ந்தது அந்த பாதையில்.
****
போட்டிக்காக எழுதுற கதைன்னு சொல்லிட்டேன் தங்கம்ஸ் ப்ளீஸ் சப்போர்ட் மீ😊
உங்களுக்கு புடிக்குமான்னு தெரியல பட் என்னோட மைன்ட்ல ரொம்ப நாளா இல்ல இல்ல ரொம்ப வருஷமா ஓடிட்டு இருந்த கத அதான் எழுதுறேன் முடிஞ்சளவு உங்க எல்லாருக்கும் புடிச்ச மாதிரி கதைய கொடுக்க முயற்சி பன்றேன்..
💜அஷு💜