அத்தியாயம் 1

 

 

அத்தியாயம் 1 

அந்த அறை எங்கும் காதை கிழியும் அளவு ஒலி சத்தம் கேட்டது.. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது இரைச்சலாக இருக்கலாம். ஆனால், அங்கு நடனமாடி கொண்டு இருப்பவர்களுக்கு மட்டும் அது தேனிசை போல இருக்கும்.. 

 

இன்னும் சத்தம்.. இன்னும் சத்தம் வேண்டும்.. வேண்டும்.. வேண்டும் என குதித்து கொண்டு ஆடி கொண்டு இருந்தனர்..

 

வித விதமான கண்ணை கூச செய்யும் ஒளி ஆங்காங்கே சுற்றி கொண்டு இருந்தது…. ஆண் பெண் பேதமின்றி யார் வேண்டும் என்றாலும் யாருடனும் ஆடலாம் .. குடிக்கலாம்.. கூத்தடிக்கலாம்..ஏன் படுக்கை வரை கூட போகலாம் எதற்கும் அங்கு தடை என்பதே இல்லை.. 

 

கட்டுபாடுகள் ஏதும் இன்றி சுதந்திரமாய் இருக்க அங்கு தடைகள் ஏதும் இல்லை.. உள்ளே நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் வெளியே செல்லாது.. அதற்கு மட்டும்  ஏகப்பட்ட கட்டுபாடுகள் அங்கு உள்ளது…. 

 

பாதுகாவலர்கள் நிறைய பேர் அங்கு உண்டு.. ஒருவரும் அங்கு இருக்கும் விதிகளை மீறியதில்லை..மீறுவதற்கு தைரியமும் எவருக்கும் இல்லை..

 

ஒரு வேலை மீறினால் அவர்களது வீதியை மாற்றி  எழுதி விடுவான் ஒருவன்…. அவன் தான் இந்த பாருக்கு சொந்தக்காரன்.. பார் மட்டும் அல்ல.. ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது அவனுக்கு.. 

 

மிகப்பெரும் சாம்ராஜ்ஜியமே  அவனுக்கென உள்ளது.. அனைத்ததிற்க்கும்  அவன் ஒருவனே அதிபதி.. அவனே அதிரூபன்.. 

 

சிங்கம் ஒன்றிற்கு மனித உருவம் கிடைத்தால் அது எவ்வாறு கம்பீரமாக இருக்குமோ அதே போல் சிங்கமேன இருப்பான் அதிரூபன்.. 

 

நெடுநெடுவென உயரம்.. அவனுக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் அவனை நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்.. நல்ல திடகாத்திரமான கட்டுடல் மேனி அவனுக்கு.. உண்ணும் உணவு முதல் செலவு செய்யும் பணம்  வரை அனைத்தியிலும் மெனக்கெடல் சற்று அதிகமே!.. 

 

கூர் புத்தி அவனுக்கு.. திறமையானவன் .. அதனால் தான் மொத்த சாம்ராஜ்ஜியத்தையே  தன்  விரல் நுனியில் ஆட்டு விக்கிறான்….சின்ன சின்ன விஷயங்களில் கூட கருத்தாய் இருப்பான்.

உடன்பிறந்தவர்கள் என யாரும் இல்லை .. தாயும் சிறு வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார்.. தந்தை மட்டும் தான் அவர் தான் அதியமான்.. 

 

அத்தனை கெடுபிடியான ஆள் அவர்…..கோடீஸ்வரர்கள் என்பதால்  இஷ்டத்திற்கு விடுவதில்லை.. மகனை தன் கண் பார்வையிலேயே வைத்திருப்பார் அப்படிபட்ட ஆள் அவர்.. 

 

தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பதினெட்டு அல்ல இருபத்தி நாலு அடியே பாய்வானே!.. 

 

அதும் அவரது மகன் என்றால் கேட்கவும் வேண்டுமா?.. என்னதான் உலகத்திற்கு முன் திறமையானவன் .. ஒழுக்கசீலன் என காட்டி கொண்டாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவனும் சறுக்கி இருக்கிறான்.. 

 

காதலில் என்றால்.. ஆம் காதலில்.. காமத்தில் என்றால்.. ஆம் காமத்தில்.. சறுக்கிய இடம் மட்டும் தான் சற்று விவகாரமானது.. 

 

அந்த பாரில் அதிரூபனும் இருந்தான்.. கையில் இருந்த உயர்ரக மதுபானத்தை  மிடறு வைத்து குடித்தவனது கடைக்கண் யாரையோ ரகசியமாய் எதிர்பார்த்து இருந்தது.. 

 

நேரம் கடக்க கடக்க ஆட்கள் வந்து கொண்டே தான் இருந்தனர்.. ஒருத்தர் ஒருவரை அழைத்து வந்திருந்தால் கூட்டம் இருக்காது.. ஒருவருக்கு இரண்டு மூன்று பேரை அழைத்து வந்தால் கூட்டம் நிரம்பி வழிய தானே செய்யும்..!

நேரம் கடக்க தான் அமர்ந்திருந்த நிலையில் சற்றும் மாற்றம் இல்லாது இருந்த ரூபனது விழிகள் சிவந்து காணப்பட்டது.. 

 

சில நிமிடங்களில் அவன் உடலில் ஒரு அதிர்வு !.. நாசியில் ஒரு வாசம்.. அவன் நுகர துடிக்கும் அவ்வாசம் மூளை நரம்புகள்  பளிச் என்று கண்டுகொண்டதும் உடல் நரம்புகளில் புது ரத்தம் பாய்ந்து ஓடியது….கரங்களோ வாசத்திற்க்கு சொந்தக்காரரை ஸ்பரிசித்திட துடிதுடித்தது.. 

 

சட்டென அமர்ந்திருந்த இடத்தில்     இருந்து மெல்ல எழுந்தவனுக்கு இப்போதே அனைவரையும் தள்ளி விட்டு சென்று தனக்கு சொந்தமானதை அள்ளி கொள்ள மாட்டோமா என உடல் அனல் காய்ச்சல் கொண்டது.. 

 

தன் உணர்வுகளை வெளிக்காட்டி கொண்டால் அது ரூபன் இல்லையே!.. 

வெறும் வாயை மென்றவாறு மெல்ல நடை போட்டு தனக்கு சற்று தள்ளி முன்னே செல்லும் உருவத்தை கூட்டத்தோடு  கலந்து பின் தொடர்ந்தான்…. 

 

யாரும் நுழைய கூடாத இடத்திற்க்கு செல்ல அவனும் பின்னாடியே சென்றான்..  அங்கு அவனை தடுக்க யாரும் இல்லை.. 

 

சொல்லப்போனால் அவ்விடத்திற்க்கு அவர்கள் இருவரை தவிர யாருக்கும் அனுமதி கிடையாது எனலாம்.. அவர்களுக்கு மட்டுமேயான தனிப்பட்ட இடம் அது.. 

 

சிசிடீவி ஏதும் அங்கு கிடையாது…இவ்விடயம் அவனது தந்தை மட்டும் அல்ல வேறு யாருக்கும் தெரியாது பார்த்து கொள்கிறான்.. 

 

இரைச்சல் சத்தம் முற்றிலும் குறைந்து விட்டிருந்தது.. கீழே செல்லும் படிக்கட்டில் வேக வேகமாக தன் நீண்ட கால்களால் எட்டு வைத்து  சென்றான்.. 

 

இருள் நன்றாக சூழ்ந்து இருந்தாலும் மெல்லிய மஞ்சள் விளக்கின் வெளிச்சம் அவ்விடத்திற்கு ஒரு வித அமைதியையும் இதமானான சூழலையும் தந்தது.. 

இதற்கு மேல் முடியாது என்பது போல் அவ்வுருவத்தை  இரண்டே எட்டில் பிடித்து நிற்பாட்டியவன் சட்டென தன்னை  நோக்கி ஒரு முறை இழுத்திட அவன் மேல் வந்து மோதிய உருவத்தின் கன்னத்தோடு பின்னங்கழுத்தை சேர்த்து  உடும்பு பிடி பிடித்தவன் நொடி கூட வீணாக்காது இதழை அழுத்தமாய் கவ்வி கொண்டான்.. 

 

 

அவனுக்கு சிறிதும் குறையாது அவ்வுருவமும் பதில் முத்தம் கொடுத்திட .. இருவரும் வேகமாய் வழக்கமாய் செல்லும் அறைக்குள் நுழைந்தது தான் தாமதம் இருவரிடத்திலும் பொறுமை என்பது துளி அளவும் இல்லை .. 

.அத்தனை  வேகம்.. வேகம் .. வேகம் மட்டுமே.. 

 

ஆடைகள் சுதந்திரம் பெற்று தரையை வந்தடைந்தன.. இருவரது மேனியும் பசை போட்டது போல அழுத்தமாக ஒட்டி கொண்டன..

 

இதழ்களோ  இறுக்கமாய் கவ்வி இருந்தது.. கரங்கள் ஒருவரை ஒருவர் தழுவி இருக்க.. ஒரு முறை கூடல் முடிந்த பின்னும் அவர்களது மோகம் முற்று பெற வில்லை.. 

 

நள்ளிரவு வரை நீண்டு கொண்டே சென்றது.. யார் வென்றனர் ? யார் தோற்றனர் ? என்பது அவர்கள்  அறிந்த ரகசியம் !.. 

 

ஒரு வழியாய் மோகம் முற்று பெற்று மூச்சு வாங்க அருகருகே படுத்து கொண்டனர் .. ரூபன் தனக்கருக்கே இருந்த உருவத்தை  விழிகளில் காதல் போங்க பார்த்தவன் ,

“லவ் யூ ரே !..” என்றதும் அவனுக்கு அருகே படுத்து இருந்த ரூபனின் ‘ரே’ எனும் ரேவந்த் முத்து பார்கள் தெரிய சிரித்து ,

 

“லவ் யூ டூ ரூப்” என்றான் பதிலுக்கு.. 

ஆம் அதிரூபன்  இவ்வளவு நேரமும் சல்லாபித்து        இருந்தது அவனுக்கு கீழ் வேலை பார்ப்பவனும் அவனுடன் ஒன்றாக கல்லூரியில் படித்தவனுமாகிய ரேவந்த் தான் …

 

படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏 🙏 🙏 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top