அத்தியாயம் 12

சற்று நேரத்தில், சாந்திமுகூர்த்த நேரமும் நெருங்கி இருக்க, தனிஷாவின் கையில் பால் செம்பை கொடுத்து, நவநீதனின் அறைக்குள் அனுப்பி இருந்தார்கள்…

அவ்வளவு நேரமும் இயல்பாக இருந்த மனமோ, நவநீதனை நினைத்ததும் கடுப்பாகி விட்டது. 

அவனுமே, கட்டிலில் அமர்ந்து கொண்டே, ‘வந்து என்ன பண்ண போறாளோ?’ என்று நினைத்தபடி இருட்ன்ஹான். 

அறைக்குள் நுழைந்த தனிஷாவோ விறு விறுவென வந்து மேசையில் பால் செம்பை வைத்தவள் அங்கே கட்டிலில் அமர்ந்து இருந்த நவநீதனை ஏன் என்றும் கேட்காமல் கண்ணாடி முன்னே நின்று அப்போது தான் தலையில் வைத்த பூவை இழுத்து கழட்டினாள். 

கிளிப்பை விட்டு வரமாட்டேன் என்றது… 

ஆத்திரத்துடன் அவள் இழுத்ததில் சில முடிகளும் அறுந்தன… 

அவளை விசித்திரமாக பார்த்தப்படி அமர்ந்து இருந்த நவநீதனோ, ‘சரி பைத்தியமாயிட்டா’ என்று நினைத்தபடி எழுந்தான். 

கையை மடக்கி உடலை வளைத்து நெட்டி முறித்தவனோ, ‘இவ கூட பேசி டைம் வேஸ்ட் பண்ணாம பாலை குடிச்சிட்டு தூங்குவோம்’ என்று நினைத்தான். 

பால் செம்பு அவள் அருகே தான் இருந்தது… நடந்து சென்று கையை நீட்டி அதனை எடுக்க தான் முற்பட்டான். 

ஆனால் கண்ணாடியில் அவளுக்கே அவன் தன் மீது கையை வைக்க வருவது போல தோன்ற, மேசையில் ஆப்பிளில் குத்தி இருந்த கத்தியை உருவி வேகமாக திரும்பி அவன் கழுத்தருகே கொண்டு வர அவனுக்கோ விழிகள் பிதுங்கியே விட்டன.

“ஏய்”  என்று சொல்லிக் கொண்டே இரண்டடிகள் பின்னால் சென்றவனோ, ‘இத நம்ப முடியாது.. கழுத்துலயே சொருகிடும்… சரியான பஜாரி’ என்று நினைத்தபடி, “பால்” என்று செம்பைக் காட்டினான். 

அவளும், “ம்ம்” என்று அவனை முறைத்தபடி அதனை எடுக்கும்படி சைகை செய்தவள் மீண்டும் கத்தியை ஆப்பிளில் சொருகி வைத்ததும் தான் அவனுக்கு மூச்சே வந்தது…

அவனோ பாலை எடுத்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்து குடிக்க அவனை பார்க்க பார்க்க அவளுக்கு ஆத்திரம்…

“அசிங்கமா இல்லையா?” என்று அவனை திரும்பி பார்த்து ஆத்திரத்துடன் சீறினாள். 

“இந்த பூவை கழட்டுனதுல உன்னோட தலைமுடி கலைஞ்சு கொஞ்சூண்டு அசிங்கமா தான் இருக்க” என்று சொன்னான். 

அவளுக்கு மேலும் ஆத்திரம்… 

“அடிங்” என்று சொல்லிக் கொண்டே அவன் முன்னே வந்து நின்றவள், “எதுவுமே நடக்காத போல பாலை குடிக்க அசிங்கமா இல்லையா??” என்று கேட்டாள். 

“எங்க வீட்டு பசுமாடு கறந்த பாலை குடிக்க நான் ஏண்டி அசிங்கப்படணும்??” என்று கேட்டான். 

“ஐயோ” என்று கத்திக் கொண்டே தலையை அழுந்த பற்றியவள், “உங்க கிட்ட பேச வந்தது என் தப்பு தான்” என்று திட்டி விட்டு மீண்டும் கண்ணாடி முன்னே நின்று கையில் இருந்த வளையல்களை கழட்டினாள். 

இன்னும் அவள் கோபம் அடங்கவில்லை… அவனைப் பார்க்க பார்க்க கோபம் கூடியது. 

அவன் முன்னே மீண்டும் வந்து நின்றவள், “ஏதாவது பேச வேண்டியது தானே… வாய்க்குள்ள என்ன??” என்றாள் ஆத்திரத்துடன்… “பால்”  என்று ஒற்றை வரியில் கிண்டலாக பதில் வந்தது அவனிடம் இருந்து.

“நான் சீரியஸ் ஆஹ் பேசிட்டு இருக்கேன் மஜ்னு” என்றாள்…

சட்டென கோபத்தில் மஜ்னு என்று தான் வாயில் வந்தது…

அவன் சிரித்துக் கொண்டே, அவளை ஏறிட்டுப் பார்க்க, “ஐயோ ஐயோ ஐயோ” என்று நெற்றியில் வெளிப்படையாக அடித்து விட்டு, விறு விறுவென சென்று அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்…

“சாப்பிடலையா நீ?” என்று கேட்டான்…

“ஒன்னும் வேணாம்” என்று அதற்கும் அதட்டலாக பதில் வர, தோள்களை உலுக்கியவன், அவள் அருகே வந்து படுத்து விட்டான்.

அடுத்த நாள் அவன் எழுந்த நேரம் அவள் அங்கே இல்லை. 

நேரத்துக்கே எழுந்து குளித்து விட்டு,  ஹாலுக்குள் வந்து விட்டாள்…

‘இவ ஓவர் பேர்ஃபேக்ட் ஆஹ் இருக்காளே, வாழ்க்கை முழுக்க வச்சு செய்ய போறா’ என்று நினைத்தபடி வெளியே வர, அவளோ துளசியுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்…

மடியில் வந்தனாவின் குழந்தை இருந்தது…

அவளை ஆழமாக அவனுக்கு தெரியாது…

இப்போது, இன்னும் பிடித்தம் அதிகரித்தது…

இப்படி வீட்டினருடன் அவள் ஒன்றுவது அவனுக்கு ஆச்சரியம் தான்…

அவளைப் பார்த்துக் கொண்டே அங்கே அமர்ந்து யாழினியன் மற்றும் குழலினியனுடன் பேச ஆரம்பித்து விட்டான். 

இதே சமயம், வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து இருந்தார்  சக்திவேல்… 

உள்ளே வந்ததுமே, துளசியோ, “டீ போட்டு தர்றேன் மச்சான்” என்று சொல்லிக் கொண்டே எழ முற்பட, “மாமாவுக்கு நான் டீ போட்டு கொண்டு வர்றேன் அத்தை” என்று பவ்வியமாக சொல்லிக் கொண்டே சமயலறைக்குள் நுழைந்த தனிஷாவை புருவம் சுருக்கிப் பார்த்தான் நவநீதன்… 

‘இந்த டாடீஸ் லிட்டில் பிரின்செசுக்கு சுடு தண்ணியே வைக்க தெரியாதே’ என்று நினைத்தபடி எழுந்து சமையலறைக்குள் சென்றான். 

அவள் மட்டும் தான் நின்று இருந்தாள். 

“ரெண்டு ஸ்பூன் ஷுகர் ஆஹ் இல்ல ஒரு ஸ்பூன் ஷுகர் ஆஹ்??” என்று யோசித்துக் கொண்டே நீரை கொதிக்க வைக்க, “டீ போட தெரியுமா??” என்று கேட்டான். 

திரும்பி பார்த்து ஒரு முறைப்பு மட்டுமே… 

“ஹெல்ப் பண்ணட்டுமா??” என்று கேட்டான். 

“செருப்பு பிஞ்சிடும்” என்று பதில் வந்தது…

“ஓஹோ” என்று சொல்லிக் கொண்டே , நீரை எடுத்து அவன் அங்கேயே நின்று அருந்தினான். 

அவள் டீ போடுவதை எட்டிப் பார்த்தவன், ‘அட நல்லா போடுறாளே’ என்று நினைக்க அவளும் டீயை போட்டு முடித்து கரண்டியால் எடுத்து வாயில் வைத்துப் பார்த்தாள்.

நன்றாக இருந்தது… 

‘ஆஹ் நல்லா இருக்கு’ என்று நினைத்தபடி சீனிப் பாட்டிலை இருந்த இடத்தில் வைக்க போக,  ஹாலில்.அவள் வைத்து விட்டு வந்த அலைபேசி அலறியது. ‘அப்பா எடுக்கிறார் போல… லேட்டா எடுக்கிறேன்னு சொல்லிடுவோம்… இல்லன்னா யோசிப்பார்’ என்று நினைத்துக் கொண்டே அவள் அலைபேசியை எடுக்க ஹாலுக்குள் சென்று விட்டாள்… நவநீதனோ டீயை சுட்டு விரலால் தொட்டு நக்கி பார்த்தான். 

‘நல்லா இருக்கே. விடக் கூடாது, அப்புறம் திமிர் கூடிடும்’ என்று நினைத்தவன் அங்கே இருந்த உப்பை அள்ளி அதற்குள் போட்டு கலந்து விட்டு , மீண்டும் ஹாலுக்குள் சென்று இருந்தான். 

அவன் வெளியேறிய நேரம் அவனை மிடுக்காக பார்த்துக் கொண்டே தனிஷா சமையலறைக்குள் செல்ல, ‘போடி போ’ என்று முணுமுணுத்தபடி மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டான். 

அவளும் டீ கப்பை கொண்டு வந்து சக்திவேலிடம், “எதுக்கும்மா நீ இதெல்லாம் பண்ணுற??” என்று கேட்டபடி சக்திவேல் டீயை குடித்த அடுத்த கணமே, விசிறியடித்துக் கொண்டே வாய்க்குள் போன டீ வெளியே வந்தது… 

தனிஷாவோ அதிர்ந்து சக்திவேலைப் பார்க்க , நவநீதனோ வாயில் கையை வைத்து சத்தம் வராமல் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

சக்திவேலோ இருமிக் கொண்டே, “டீ நல்லா தான் இருக்கு, எனக்கு தான் உடம்பு சரி இல்ல, சாரிம்மா அப்புறம் குடிச்சுக்கிறேன்” என்று சொன்னவர், துளசியிடம், “உப்பு சக்கரை எல்லாம் எங்க இருக்குன்னு மருமகளுக்கு கொஞ்சம் சொல்லி கொடு செல்லம்மா” என்று துளசியிடம் சொல்லி விட்டு, டீயை வைத்து அங்கேயே விட்டு எழுந்து உள்ளே சென்று விட்டார்.

தனிஷாவோ அங்கே சிரித்துக் கொண்டு இருந்த நவநீதனை யோசனையாக பார்த்தபடி, டீயை எடுத்தபடி சமையலறைக்குள் சென்றாள்…

‘நல்லா தானே இருந்திச்சு’ என்று யோசித்துக் கொண்டே, ஒற்றை விரலால் அதனை எடுத்து வாய்க்குள் வைத்தவளுக்கு வாந்தி வராத குறை தான்…

‘என்ன இப்படி உப்பா இருக்கு?’ என்று நினைத்தவளுக்கு சக்திவேலை நினைத்து ஆச்சரியம் தான்… 

ஒரு வார்த்தை காயப்படுத்தி பேசவில்லையே….

அவள் முகம் கோணக் கூடாது என்று டீ கூட நன்றாக இருப்பதாக தானே கூறினார்…

சக்திவேலை நினைத்து பிரம்மிப்பாக இருந்த அதே சமயம் நவநீதன் மேல் கோபம் வந்தது.

அவன் தான் இதனை செய்து இருப்பான் என்று அவள் யூகித்த சமயம், “என்ன லைலா டீ ல உப்பு கம்மியா?” என்று கிண்டலாக கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் நவநீதன்….

அவனை முறைத்துக் கொண்டே டீயை சிங்கில் ஊற்றியவள், “கொஞ்சமாவது புத்தி இருக்கா?” என்று அவனுக்கு திட்டி விட்டு வெளியேறி இருந்தாள்…

அவள் வெளியே வந்த சமயம், அங்கே ராகவியும் அர்ஜுனும் குழந்தைகளுடன் தோப்பு வீட்டில் இருந்து வந்து இருந்தார்கள்…

தனிஷாவும் மெலிதாக புன்னகைத்துக் கொள்ள, “எல்லாரும் வேலைக்கு கிளம்பிட்டாங்க போல” என்று கேட்டுக் கொண்டே அமர்ந்தாள் ராகவி…

அவள் அருகே வந்து அமர்ந்த தனிஷாவும் பேசிக் கொண்டு இருக்க, நவநீதனோ வெளியே அலைபேசியில் பேசிக் கொண்டு நின்ற அர்ஜுனைப் பார்த்து விட்டு, “குட்டி சாப்பிட்டீங்களா?” என்று அகல்யாவிடம் பேசிக் கொண்டே அங்கே அமர்ந்து விட்டான். 

நவநீதனை ஒரு கணம் பார்த்த தனிஷாவோ, ‘இருடா உனக்கு வைக்கிறேன் ஆப்பு’ என்று நினைத்தபடி, “அண்ணி” என்று அழைத்தாள் தனிஷா… ராகவியும் திரும்பிப் பார்க்க, “அண்ணனுக்கு கலெக்ஷன் எப்படி??” என்று கேட்டாள்.

அதனைக் கேட்டதுமே அங்கே அமர்ந்து நீரைக் குடித்துக் கொண்டு இருந்த நவநீதனுக்கு புரையேறியது… 

இருமிக் கொண்டே தலையில் தட்டியவன் அவளை அதிர்ந்து பார்க்க, அவளோ அவனைப் பார்க்காமல் , “நிறைய பொறுக்குவாராமே” என்றாள். 

ராகவிக்கு எதுவும் புரியவே இல்லை… 

“என்ன பொறுக்குவார் ?? என்ன கலெக்ஷன் ??” என்று புரியாமல் கேட்க, “நவா தான் சொன்னார்” என்று அவனை சிக்க வைத்து இருந்தாள். 

“என்னடா சொன்ன??” என்று ராகவி அவனிடம் கேட்க, “ஆஹ் அது” என்று தடுமாறிக் கொண்டே, “சூப்பர் மார்க்கெட் சேல்ஸ் பத்தி சொன்னேன்” என்றான்.

“அவர் அங்க என்ன பொறுக்கிறார் ??” என்று அடுத்த கேள்வி ராகவியிடமிருந்து… 

தனிஷா அடக்கப்பட்ட சிரிப்புடன் அவனைப் பார்க்க அவளை முறைத்து விட்டு, “அதெல்லாம் ஒன்னும் இல்ல… இவ ஏதோ உளருறா” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று விட்டான். அப்போது அங்கே வந்த அர்ஜுனோ, “யாரு என்ன பொறுக்கிறா??” என்று கேட்டுக் கொண்டே அமர, அறைக்குள் இருந்த நவநீதனின் விழிகள் பிதுங்கின… 

‘உளறிடுவா இவ’ என்று நினைக்கும் போதே, அவளும், “அது வந்து அண்ணா” என்று ஆரம்பிக்க, “தனிஷா” என்று அறைக்குள் இருந்து அழைத்தான் நவநீதன்… 

“இருங்க அண்ணன் கூட பேசிட்டு வரேன்” என்று கிண்டலாக சொன்னவளோ, “அது வந்து அண்ணா” என்று ஆரம்பிக்க, “என்னோட பிங்க் கலர்  ஜட்டிய எங்க ஒளிச்சு வச்சு இருக்க??” என்று கேட்டானே பார்க்கலாம். 

விழி பிதுங்கிப் போனாள் அவள்… அர்ஜுனுக்கு சிரிப்பு வர அவன் அடக்கிக் கொண்டே அமர்ந்து இருக்க, ராகவியோ அவளை யோசனையாக பார்க்க, “ஐயோ அண்ணி நான் ஒன்னும் ஒளிச்சு வைக்கல” என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென அறையை நோக்கி சென்றாள். 

‘மானத்தை வாங்குறான் பைத்தியக்காரப்பய’ என்று அவள் இதழ்கள்  திட்டிக் கொண்டது.

ராகவியோ அர்ஜுனிடம், “விவஸ்தை கெட்டவன், அந்த பொண்ணு பாவம்” என்று சிரித்தபடி சொல்ல, அர்ஜுனோ, “இவன் கிட்ட போய் இந்த பொண்ணு சிக்கி இருக்காளே” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top