அத்தியாயம் 11

மதியின் மனதை திசை திருப்ப எதை பற்றியும் யோசிக்காமல் அவளை தன் ரெஸ்டாரண்ட்டிற்கு அழைத்து வந்து விட்டான் ருத்ரன் 

பைக் நின்றது கூட தெரியாமல் கண்ணை இறுக மூடி அமர்ந்து இருந்த மதியை பார்த்த ருத்ரன் “தூக்கி உட்கார வைத்த மாதிரி இறக்கி விட்டாதான் இறங்குவியோ” என்றதும் மெல்ல தன் இமை குடையை விரித்தாள்.

“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை” என அவள் சுதாரிக்கும் முன் அவள் இடுப்பை பிடித்து இழுத்து இறக்கி விட்டதில் அவன் மார்பில் மோதி நின்றவளை தள்ளி நிறுத்தி வா என்று  முன்னே நடந்து சென்றான்

திமிர் பிடிச்கவன் நான் என்ன ஆடா மாடா வான்னு கூப்பிட்டு அவன் பாட்டுக்கு போறான் “ஹலோ நான் வீட்டுக்கு போகனும் உங்க கூட இருக்க எனக்கு விருப்பம் இல்ல” என்றாள் 

அப்படியே நின்றவன் தலையை மட்டும் திருப்பி அவளை பார்த்து “உன் கூட ஊர் சுற்றனும்னு ஒன்னும் ஆசைபட்டு நான் கூட்டிட்டு வரல… எல்லாம் நர்மதா அத்தைகாக சகிச்சுக்க வேண்டியதா  இருக்கு… எல்லாம் என் தலையெழுத்து வந்து தொலை”

“அப்படி ஒன்னும் நீங்க சலிச்சுகிட்டு இருக்க தேவையில்லை நானா உங்க கூட வர்றேன்னு  சொன்னேன்…  நான் பாட்டுக்கு என் வீட்டுக்கு தானே போய்கிட்டு தானே இருந்தேன்… என்னை கடத்திட்டு வராத குறையாக தூக்கிட்டு வந்துட்டு இஷ்டம் கஷ்டம்ன்னு கடுப்பேத்திக்கிட்டு…  ச்சை ”

சரோஜா தன்னை கேவலமாக பேசியதில் மூளையில் சிறிதாக முளைத்த  கோபம் ருத்ரன் மேல் திரும்பியது

திரும்பி  நகர போனவளை இடுப்போடு தூக்கி கொண்டு ரெஸ்டாரண்டிற்குள் செல்ல போனவனை கைகாலை உதைத்து விடு என்னை  என்றவளை நிதானமாக பார்த்தவன் 

“மதிதிதி  இது ஏன் ரெஸ்டாரண்ட் தான் கொஞ்சம் அமைதியா வர்ரியா எல்லாரும் நம்மளை தான்  வேடிக்கை பாக்குறாங்க” அவள் கழுத்தருகே நன்கு குனிந்து அவள் காதில் கூறியதில் அவன் மீசை முடி அவள் மிருதுவான கண்ணத்தில்  உரசியது

“ச..ச..சரி விடுங்க” என்று தன் வயிற்றை அழுத்தி பிடித்து இருந்த அவன் கரங்களை விளக்கி அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி நிறுத்தினால் ஒரு ஆணின் ஸ்பரிசம் பட்டதும் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடாமல் ஏன் இந்த தடுமாற்றம் என்று எகிறி துடிக்கும் இதயத்தோடு மூச்சு வாங்க நின்று அவனை நிமிர்ந்து பார்த்தால் அவன்  இயல்பாக  இருப்பது போல தான் அவளுக்கு தோன்றியது 

ஒரு சில விநாடிகளே அவளை அனைத்து இருந்தாலும் அவளின் மிருதுவான கண்ணம்  நாசியில் ஏறிய அவளின் நறுமணத்தை நுகர்ந்தவனின்  மனமோ அவளை இன்னும் அனைத்து கொண்டு நிற்க சொல்லி  அடம்பிடித்தது ஒட்டி இருந்த  தட்டையான வயிறு வேறு…. முதலில் அவளுக்கு வயிறு ஒன்று உள்ளதா என்ன ருத்ரன் ரோட்டில் நின்று ஆராச்சி நடத்தி கொண்டிருக்க

“என்னை எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க வருவதுனா நீங்க மட்டும் வர வேண்டியதுதானே நான் இப்போ எப்படி வீட்டுக்கு போறது”மதியின்  குரலில் ருத்ரன் ஏதோ தூக்கத்தில் இருந்து விழிப்பது போல விழித்தவன்

 மறுநொடியே  அவள் பின்னே தறி கெட்டு ஓடும் மனதை கேவலமாக திட்டி கொண்டு தன்  முகத்தை கடுமையாக மாற்றியவனோ “மறந்துட்டியா நீ இங்க இன்டீரியர் ஒர்க் பண்ணி  தருவதா  சொல்லி இருக்கே அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று எங்கோ பார்த்து கூறினான்

“கடத்திட்டு வந்தீங்கன்னு சொல்லுங்க”

“ஏதோ ஒன்னு வா உள்ளே போய் பேசலாம்” என்றான்

அவள் ஏதோ பேச வருவதற்குள் மீண்டும்  நர்மதாவிடம் இருந்து  மதிக்கு அழைப்பு வந்தது 

அச்சோ இந்த கருவாயனால எல்லாத்தையும் மறந்து தொலைகிறோம்  அவனை திட்டி கொண்டு போன் அழைப்பை ஏறற்றாள் 

“எங்கே போன மதி…. நீ வீட்டுக்கு வா…. நாங்க வீட்டுக்கு வந்துட்டோம்…. நீ ஃசேப்பா இருக்கியா…. இன்னும் ஏன் வீட்டீக்கு வரல வா…..இல்ல இல்ல நீ வர வேண்டாம்…. எங்கே இருக்க சொல்லு டிரைவரை அனுப்பறேன்…  ஏன் எதுவும் பேசாம இருக்க….மதி ஹலோ மதி” படபட வென பேசினாள் நர்மதா 

நர்மதாவின் அன்பில் நெகிழ்ந்தவளுக்கு சரோஜா பேசியதில் ஏற்பட்ட மனகாயம் கூட நொடியில் காணாமல் போனது போன்ற ஒரு உணர்வு  

“சித்தி ஏன் இவ்ளோ டென்ஷன் நான் இங்கே…”  இவன்  பெயர் என்ன ஏதோ ரு ல ஆரம்பிக்குமே அவன் பெயரை மறந்தவள் 

“மதி எங்கேம்மா இருக்கே ” நர்மதா கேட்டார்

” ஆங் உங்க ப்ரதரொட சன் அவர் தான் ரெஸ்டாரண்ட்டிற்கு  கூட்டிட்டு வந்தார் இப்ப அங்கே தான் சித்தி இருக்கேன்”என கூறினாள்

“ருத்ரனா….சரி பார்த்து சீக்கிரமா வீட்டுக்கு வா” என அழைப்பை துண்டித்தால் நர்மதா

அவள் பேசி கொண்டு இருக்கும் போதே அவள் கையை பிடித்து இழுத்து  தன்னறைக்கு அழைத்து சென்றவனை அவனிடம் வேலை செய்பவர்கள் வியப்போடு பார்த்தனர்

ஒரு பெண்ணுடன் வந்த முதலாளியை உலக அதியத்தை பார்ப்பது போல பார்த்தனர் ரெஸ்டாரண்டில் அவனிடம் வேலை செய்பவர்கள் எவ்வளவு பெரிய முக்கியமான வேலையாக இருந்தாலும் வீட்டில் லெப்டாப்பிலே அனைத்து வேலையும் முடிக்கும் தங்கள் முதலாளி  இன்று ஒருபெண்ணுடன் வந்து இருக்கிறாரே யார் இந்த பெண் காதலியா? இல்லை  மனைவியாக போகிறவளா? என பார்த்து கொண்டு இருக்க ருத்ரனை சைட் அடிக்க வரும் ஒரு சில பெண்கள் மதியை எரிச்சலுடனும் பொறாமையுடன் பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்

“நீயா வரமாட்டியா சும்மா உன்னை தொட வைக்கிற” தடுமாறும் மனதை அடக்க முடியாமல் அவளிடமே எரிந்து விழுந்து  வாஷ் ரூமுக்கு சென்று கை கழுவசென்றான் 

இந்த கருவயானுக்கு கொழுப்பை பார்த்தியா திமிரு புடிச்சவன் என அவனை திட்டி தீர்த்தவள் அவன் கையை துடைக்கும் வரை நிதானமாக பொறுமையை கடைப்பிடித்து நின்று 

அவன் தன் கையை துடைத்து முடிக்க முடிக்கவும் 

“நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு என்னை கூட்டிட்டு வந்திருக்க தேவையே இல்லை… எனக்கு இந்த வேலையே வேண்டாம்… ஆக்சுவலி  நான் நாளைக்கே மும்பைக்கு கிளம்ப போறேன்… இதை உங்க கிட்ட சொல்ல வருவதற்குள் நீங்க என்னை தரதரன்னு இழுத்துட்டு வந்துட்டீங்க” என்றதும் ருத்ரன் முறைத்தான்

கருவாயன்  ஏன் இப்படி முறைக்கிறான் மதியின் மைண்ட் வாய்ஸ்

“என்ன விளையாடுறியா ”

“இல்லயே   சீரியஸ் வெரி வெரி சீரியஸ்” என்றால் கூலாக

“ஏன் “என்று ஒற்றை புருவத்தை  தூக்கி கேட்டதும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பு இந்த கருவாயனுக்கு மதியின் மைண்ட் வாய்ஸ்  தாரளமாக அவனை திட்டியது

“அந்த ராகேஷ் நல்லவன் இல்லை ரொம்ப மோசமானவன்…. என்னை பழிவாங்க தான் உங்க பேமிலிகுள்ள நுழைந்திருக்கான்…. நான் இருப்பதால் தானே அவன் இங்கே இருக்க முடியும்…. நான் போயிட்டா அவனும் என்னை பழி வாங்கனும்னு என்னை தேடி மும்பைக்கு வந்துடுவான் ” என்றவளை  ஓங்கி அவள் கண்ணத்திலே அறைய வேண்டும் போல் இருந்தது ருத்ரனிற்கு

“உன் மனசுல என்ன பெரிய தியாகிய நினைப்பா இல்ல நீ தான் பெரிய உலக அழகி நினைப்பா” என்றவனின் முகத்தில் இலேசான கோபத்தின் சாயல்

“இரண்டும் இல்லை அவன் சரியான பொம்பள பொறுக்கி.. என்னால எந்த பிரச்சனை உங்க பேமிலில கொண்டு வர வேணாம்னு நினைக்கிறேன்” 

“பிரச்சினை வேண்டாம்னு நினைக்கிறவ இங்க வந்து இருக்கவே கூடாது…. அங்கே போனா மட்டும் உன்னை விட்டுவிடுவானா” சிடுசடுவென பேசினான்

“அதை நான் பார்த்துக்கிறேன் அது என் பிரச்சனை….அங்கே அஸ்வத்தை மீறி அவனால் என் கிட்ட வர முடியாது”

“அப்ப அந்த அஸ்வத் கூடவே இருந்து தொலைய வேண்டியது தானே” என கத்தியவன் பின் தன் தலையை அழுந்த கோதி “உன்னை நம்பி வர சொல்லி இருந்த இன்டீரியர் டிசைனரை  வேற வர வேண்டாம்னு சொல்லிட்டேன்… சோ நீ இருந்து… முடிச்சு குடுத்துட்டு…. எங்க வேணாலும் போ” கடுமையுடன்  பேசினான்

அவளை துரத்த  சபதம் எடுத்த நிகழ்வை  மூளை சரியாக நினைவுபடுத்திய மூளை வண்டியாக வண்டியாக திட்டினான் 

“இந்த ஊர்ல வேற டிசைனரே  இல்லாத மாதிரி சொல்றீங்க..” என அவள் பேச வருவதற்குள் 

“என்னடா மச்சான் வீக் எண்ட்ல  உன் பேமிலிய விட்டு வரவே மாட்டே இப்ப என்ன உலக அதிசயமா வந்து இருக்க” என கேட்டபடி உள்ள நுழைந்தான்  விஷ்ணு 

விஷ்ணு ருத்ரனின் ஆருயிர்  தோழன் 

மதி இருப்பதை பார்த்து யார் என கண்களால் வினவினான் ” இவங்க தான் வெண்மதி நியூ இன்டீரியர் டிசைனர் நம்ம ரெஸ்டாரன்ட் ஒர்க் பண்ண வந்திருக்காங்க…. அப்புறம் சேகர் மாமா பொண்ணு தான் இந்த வெண்மதி” என்றதும் 

“வாட்”என பெரிதாக அதிர்ந்தவன் “நீ எப்படி டா இங்க வேலைக்கு சேர்த்த… இந்த பெண்ணை தானே  நீ விரட்ட போறேன்னு சொன்ன” என்று  உளறி விட்டு மதி இருப்பதை பார்த்து தலையில அடித்து கொண்டான்

“அட அறிவு கெட்டவனே கொஞ்சமாச்சும் கூறு இருக்கா உன் நாக்கை நரபலி கொடுக்க… இப்ப வந்து உன்கிட்ட யாரு கேட்டா… போடா போய்  ஏதாவது குடிக்க எடுத்துட்டு வா எருமை” என விஷ்ணுவை  கோபத்தில் மானகேடாக திட்டினான் ருத்ரன்  

மதியிடம் “சாரி சிஸ்டர் ….நான் வந்து… என் பெயர் விஷ்ணு…நீங்க பேசிட்டு இருங்க நான் போய் உங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வர்றேன்” நண்பன் முறைத்த முறைப்பில் தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டான்

குரலை செருமி”மதி… “என அழைத்தான்  ருத்ரன்

“பரவாயில்லை என்னால புரிந்து கொள்ள முடியாது…. அதனால தான் சொல்றேன் நான் இங்கே இருப்பது நல்லது இல்லைன்னு என்னால…”

“ஸ்டாப் இட் மதி….என்ன உளறிட்டு இருக்க நான் ஒன்னும் சமதானபடுத்த  பேச வரலை  அதை ஃபர்ஸ்ட் புரிந்து கோ… நீ இங்கே வேலை பார்கிறதா கமிட்டாகி இருக்க…. வேலைய தாண்டி  உனக்கு எந்த சிந்தனையும் வர வேண்டாம் ”

“அதோட அந்த ராஜேஸா அவன் பேர் என்ன ராகேஷ் ரைட் அவனுக்காக  நீ பயந்து ஓட வேண்டிது இல்லை என் பேமிலிய பத்திரமா பார்த்துக்க எனக்கு தெரியும்..”  உனக்கு நாங்க இருக்கோம் என பேச நினைத்த நாவை கட்டுபடுத்தி  கணிணியில் பார்வை பதித்தான்

விஷ்ணு பழசாறுடன் உள்ளே வந்ததும் “இவன் என் க்ளோஸ் ப்ரெண்ட் விஷ்ணு  நானும் இவனும் தான் ரெஸ்டாரண்ட்டை பார்த்துகறோம் என்று விஷ்ணுவிடம் திரும்பி “விஷ்ணு மதிக்கு நம்ம ரெஸ்டாரண்ட் பற்றி சொல்லி எல்லாருக்கும் இன்ரோ குடுத்துரு” மடமடவென பேசி கொண்டே போனான் 

“இவன் இப்படி தான்மா  ஓவர் ஸ்பீடா போவான் நீ அதையேல்லாம் கண்டுகாத” என மதியை அழைத்து சென்றான் விஷ்ணு 

ருத்ரனிற்கு தான்  ஏன்  காயபட்ட அவள் மனதை இலகுவாக்க வம்படியாக இங்கு அழைத்து வந்தோம் …..  போகிகிறேன் என்பவளை ஏன் இழுத்து பிடித்து நிறுத்தி வைக்க வேண்டும் சரிதான் போடினு விட்டு தொலையாம  

இவ ஒரு மாய மந்திரம் தெரிந்த பிசாசாக  தான் இருக்க வேண்டும்  அதான் என்னை ஏதோ பண்ணிட்டா தானே ஒரு காரணத்தை உருவாக்கி அவளையே குற்றம் சாட்டினான் 

ரெஸ்டாரண்டை சுற்றி பார்த்தவள் “ஓகே கொஞ்சம் இல்ல நிறைய சேன்ஞ் பண்ணனும் நான்  போட்டோ எடுத்துகறேன்  நாளைக்கு என்ன பண்றது நல்ல ப்ளானிங் டிசைனோட வர்றேன் என்று தேவையான புகைபடங்ளை எடுத்து கொண்ட இருக்க அப்போது அவளை அழைத்து செல்ல வந்த ருத்ரன் 

கிளம்பலாமா என்று கேட்க அவளும் விஷ்ணுவிடம் விடைபெற்று ருத்ரன் பைக்கில் பின்னால் ஏறி அமர்ந்தால் அவர்களுடன் வெளியே வந்த விஷ்ணு குறுகுறுவென ருத்ரனையே பார்த்தான்

பையன் சரியில்லையே ஷிவாணி மகிழினிய கூட பைக்ல ஏற்றி கொள்ளாதவன் இந்த பெண்ணை மட்டும் எப்படி விட்டான் என்ன தான் நடக்குது பார்ப்போம் என சிரித்து கொண்டான்

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top