அத்தியாயம் 13

அத்தியாயம் 13

“அத்த உண்மையாவா”

கண்கள் மின்ன கேட்டாள் நேத்ரா.

அழைப்பேசியின் மறுபக்கத்தில் இருந்த தேவகிக்கே விளங்கியது அவளது மகிழ்ச்சியின் அளவு.

“ஆமாடா ராசாத்தி அவரு சொன்னாரு நாளன்னைக்கே போகலாம்ன்னு அதான் உடனே உன்கிட்ட சொல்லனும்ன்னு தோணிச்சு சொல்லிப்புட்டேன் இப்போ உனக்கு சந்தோஷமா”

“ஆமாத்த கண்டிப்பா வரனும்”

அவள் கட்டளையாகக் கூற அவரும் புன்னகைத்துக் கொண்டே சரி என்றார்.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அழைப்பை துண்டித்தாள் நேத்ரா.

மனம் முழுக்க மகிழ்ச்சி.

தன்னைப் பெற்றெடுக்கா விட்டாலும் பெற்ற மகளை பார்த்துக்கொள்வதை விட அதிகப்படியான அன்பை அல்லவா தன் மேல் கொண்டுள்ளார்.

அவளது முகமே மின்னியது மகிழ்ச்சியில்.

“இப்போ என்ன பன்னலாம்”

என நினைத்தவள் வீட்டை சற்று சுத்தப்படுத்தினாள்.

கொஞ்ச நேரம் பல்கனியில் சென்று நின்றுக் கொண்டிருந்தாளஎ ஓர்கிட் மலர்களை ரசித்தவாறே..

அங்கு மேசையில் வைத்திருந்த அழைப்பேசி தனது இருப்பிடத்தை உணர்த்த சென்று கையில் எடுத்தாள்.

புதிய நம்பரில் இருந்து அழைப்பு வர யோசனையாக அதை ஏற்று காதில் வைத்தாள்.

இவள் பேசும் முன்னரே மறுபக்கத்தில் இருந்து பேசினாள் ஶ்ரீஜா.

“ஹெலோ நா ஶ்ரீஜா பேசுறேன்”

அவள் பேச இவளுக்கோ இருந்த கொஞ்சநஞ்ச மகிழ்ச்சியும் வற்றிப் போனது.

“சொல்லுங்க”

துக்கத்தைத் தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டுக் கேட்டாள்.

“இல்ல அவர்கிட்ட பேசினிங்களா என்ன சொன்னாரு”

அவள் ஆர்வமாகக் கேட்க.

“அது நாங்க இன்னும் ஒரு வருஷத்துல பிரிஞ்சிடுவோம்”

நேத்ரா உணர்ச்சித் துடைத்தக் குரலில் பேசினாள்.

“ஆஹ் ஓகே அப்போ என்னைய அவர்கூட சேர்த்தி வைப்பிங்கள்ல”

அவள் சோகமாகக் கேட்க.

“ஆமா உங்களையும் உங்க குழந்தையையும் சேர வேண்டிய இடத்துல சேர்த்து வைப்பேன்”

இவள் உறுதியாகக் கூறினாள்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க”

மகிழ்ச்சியாகக் கூறி ஃபோனை வைத்தாள்.

இவளுக்குத் தான் மகிழ்ச்சியடைய முடியவில்லை.

எதேதோ நினைத்தவள் முகத்தை மூடினாள்.

கண்கள் கலங்கியதோ என்னவோ..??

கடினப்பட்டு கலங்கிய விழிகளைத் துடைத்தாள்.

அழவிரும்பவில்லை ஆனால் அழவைத்தே அழகுப் பார்க்கின்றது இந்த வாழ்க்கை.

பின் மீண்டும் அழைப்பேசி அதிர எடுத்துப் பார்த்தாள் அவளது கணவன் தான் அழைத்திருந்தான்.

“இவங்க எதுக்கு கால் பன்னுறாங்க”

நினைத்தவள் அடுத்த ரிங்க்கில் அழைப்பேசியை எடுத்தற காதில் வைத்தாள்.

“ஹெலோ வாட்ஸஅப்ல வா”

அவன் அவசரமாகக் கூறினான்.

“ஹான்”

அவள் விழித்தாள்.

“என்ன வாய பொலந்துக்கிட்டிருக்க சொன்னத செய் அவசரமா வட்ஸ்அப்க்கு வா”

அவன் கூறியது போல் சிறு பறவைப் போல வாயைப் பிளந்துக் கொண்டு தான் இருந்தாள்.

அவன் கூறியதும் வாயை இறுக மூடிக்கொண்டாள்.

“ம்ம்”

வாயை மூடிக் கொண்டு அவள் கூற அவன் அழைப்பேசியைத் துண்டித்தான்..

இவள் மொபைல் டேட்டாவை ஆன் பன்னி புலனத்திற்குள் நுழையவும் அவனிடமிருந்து வீடியோ கோல் வரவும் சரியாக இருந்தது.

“அச்சோ இப்போ எடுக்கல்லன்னா திட்டுவாரே”

எண்ணியவள் அவசரமாக வீடியோ கோலை ஆன்சர் செய்தாள்.

“இவ்ளோ நேரம் ஆன்ஸர் பன்னாம என்ன பன்னிட்டிருந்த”

சிடுசிடுப்பாக அவன் கேட்க இவள் பதில் சொல்லாமல் விழித்தாள்.

“இவங்க கடைல வேல பார்க்காம எனக்கு எதுக்கு கோல் பன்னியிருக்காங்க” 

இவள் இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்க

“உன்கிட்ட டிசனிங் சாரீஸ் இருக்கா”

அவன் கேட்டான்.

“அது..இல்ல”

தயங்கிக் கொண்டேக் கூறினாள் நேத்ரா.

“ஓகே இதுல உனக்கு எந்த சாரி புடிச்சிருக்கு பார்த்து சொல்லு”

அவன் அங்கு பரப்பியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சேலைகளைக் காட்ட அதைப் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறையாகத் தான் நின்றிருந்தாள்.

“எல்லாமே முப்பது நாப்பதாயிரம் இருக்கும் போலவே”

மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

“சொல்லு என்ன கலர்ல வேணும் எந்த டிசைன் ஓகே”

அவன் மறுபக்கம் வீடியோ கோலில் கேட்க இவள் சங்கடமாக அவனைப் பார்த்தாள்.

அவளது பார்வையை உணர்ந்தவன்.

“என்ன”

என்று புருவம் உயர்த்த.

“இல்ல எனக்கு எதுக்கு என்கிட்ட இருக்கே நிறைய”

அவள் வெகுளியாகக் கூற அவனது முறைப்பின் வெப்பம் அவளுக்கு மிக அருகாமையில் அடித்தது போல் உணர்ந்தாள்.

“உன்கிட்ட வேணுமா வேணாமான்னு கேக்கல்ல எடுன்னு சொன்னேன்”

பற்களைக் கடித்துக் கொண்டுக் கூற சிறுமி போல் தலை அசைத்தாள் அவனது முறைப்புக்குப் பயந்து.

“இந்த கலர் ஓகேவா”

வெள்ளை நிற சேலையில் கறுப்பு நிறத்திலாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு சேலையைத் தூக்கிக் காட்ட.

“இது நல்லா இருக்கு”

அவள் உடனடியாகக் கூறினாள்.

“ம்ப்ச் ஒழுங்கா எல்லாத்தையும் பாரு”

எனக் கூறி அங்கிருந்த வேலையாட்களிடம் கண்களால் காட்ட அவர்கள் ஒவ்வொரு சேலையாக பொறுமையாக எடுத்துக் காட்டினார்கள்.

அவளோ அவற்றை பார்த்தாலும் அவளது கவனம் என்னவோ அவன் முதலில் தூக்கிக் காட்டிய அந்த வெள்ளை மற்றும் கறுப்பு நிற சேலையில் தான் இருந்தது.

அனைத்தையும் காட்டிய பின்னர் அவன் அவளைப் பார்க்க.

“எது நல்லாருக்கு”

அவன் கேட்க.

“அந்த ஸாரி தான்”

அவள் கைக் காட்டியது என்னவோ அவன் எடுத்துக் காட்டிய சேலையைத் தான்.

“ஓகேவா”

அவன் மீண்டும் கேட்டான் அவனது குரலிலஎ ஏதோ ஒன்று.

அதை உற்று கவனித்திருந்தால் அவளுக்குப் புரிந்திருக்குமோ என்னவோ?

“ம்ம் ஆமா அது நல்லாருக்கு எனக்குப் புடிச்சிருக்கு”

அவள் கூற மௌனமாக தலையசைத்தவன். 

வேலையாட்களிடம் அதை பெக் பன்னுமாறு கூறினான்.

“ஓகே லேட்டா பேசுறேன்”

அவளைப் பார்த்து கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“எதுக்கு எனக்கு இவர் வாங்கிக் கொடுக்கனும்”

அவள் தனக்குள் கேட்டுக் கொள்ள.

“அதான் சொல்லிட்டாரே உனக்கான கடமைகள்ல எந்த குறையும் இருக்காதுன்னு அதான்”

மனசாட்சி பதில் கூற அதை ஏற்றுக் கொண்டவளுக்கோ

“கடமைக்காகத் தான் காதல் அன்பு ஒன்னும் இல்ல”

அவளாகவேக் கூறிக் கொள்ள.

“அப்போ காதல் அன்பு எல்லாம் இருந்தா நீ ஏத்துப்பியா”

விடை அறிந்தும் வினா எழுப்பியது மனசாட்சி.

“சத்தியமா இல்ல அவர் இன்னொருத்தருக்கானவரு எனக்கானவரு இல்ல அதோட அவரோட அன்புக்கு எந்தவிதத்துலையும் நா தகுதியில்ல”

மனசாட்சிக்கு பதிலடிக் கொடுத்தவள் இச்சிந்தனையையே தனக்குள் பதிய வைக்க முயற்ச்சித்தாள் போலும்..!!

அறைக்குள் சென்றவள் அவனது அழுக்கு ஆடைகளையும் தனது ஆடைகளையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

“அவரோட கடமைய அவர் செய்றாருன்னா நா என்னோட கடமைய செய்யனும்”

அவளாக பேசிக் கொண்டு அவனது துணிகளையும் தனது துணிகளையும் கழுவி விட்டு குளித்துக் கொண்டு வெளிவர காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

“வந்துட்டாரு போல”

எண்ணியவள் கதவைத் திறக்க சிரித்துக் கொண்டிருந்தாள் தேவிப்பிரியா.

“உள்ள வா”

இவளும் புன்னகைத்துக் கொண்டுக் கூற

“நா இன்னைக்கு உள்ள வரப்போறதில்ல நீ இன்னைக்கு வெளிய வா எப்போப் பாரு வீட்டுக்குள்ளயே இருக்குற காட்டுப்பூச்சி”

அவள் திட்ட.

“அது.. நா எப்பிடி”

“ஏன் ஏன் உனக்கு வெளில வரமுடியதா”

“இல்ல எனக்கு இங்க யாரையுமே தெரில அதான்”

“நீ வேற போடி எல்லாரையும் தெரிஞ்சிக்கிட்டா பொறக்குறோம் பொறந்ததுக்கப்புறம் தானே தெரிஞ்சிக்குறோம் அது போல தான் கொஞ்சம் வெளில வா இந்த அப்பார்ட்மென்ட்க்துள்ளையே ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்”

அவள் வம்படியாகக் கையைப் பிடித்து இழுக்க.

“இல்ல அவர்கிட்ட கேட்கனும்”

“அடி யார்டா இவ எந்த காலத்துல இருக்குற இன்னும் புருஷன்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு இருக்க அவ அவ உலகத்தையே சுத்திக்கிட்டு இருக்காளுங்க நீ என்ன உலகத்த சுத்தவா போற இந்த அப்பார்ட்மென்ட்ட சுத்த தானே”

தேவிப்பிரியா சலித்துக் கொள்ள இவள் புன்னகைத்துக் கொண்டே.

“நா உலகத்த சுத்தனும்ன்னாலும் என் புருஷனோட அனுமதி வேணும்”

கூறினாள் 

“சரி சரி போய் பர்மிஷன் கேட்டுட்டு வா புருஷப்பத்தினி”

அவள் கைக்கூப்பிக் கூற புன்னகைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் அவள்.

அவனுக்குத் தானாக அழைக்கத் தயக்கமாக இருந்தாலும்.

அழைக்க வேண்டிய காட்டயம் உள்ளதே ஏனெனில் அவளது கணவன் தான் கட்டாயப்படுத்திக் கூறியிருந்தானே.

“எங்க போறன்னாலும் சொல்லிட்டுப் போகனும்”

கோவமாக அவன் முறைத்துக் கொண்டுக் கூறினாலும் அதுவும் அவன் அன்பின் வெளிப்பாடு தான் போலும்..!!

அழைப்பேசியை எடுத்து கணவனது நம்பருக்கு அழைக்க ஒரு ரிங்கிலே அழைப்பு ஏற்கப்பட்டது.

“என்ன விஷயம்”

அவனது குரலில் ஏதோ பதட்டம் இருந்ததோ அவள் ஆராய்ச்சி செய்யப் பார்க்கும் நேரம் அவளது கணவனது குரல் செவிப்பறையை கிழித்தது.

“உன்ன தான் லைன்ல தான் இருக்கியா என்ன விஷயம்”

அவனது குரலில் தனது சிந்தனையை கை விட்டவள்.

“அது தேவிப்பிரியா வெளில போகக் கூப்ட்றா இங்க தான் இந்த அப்பார்ட்மென்ட்ட சுத்திப் பார்க்க தான் போகவா”

கிளி மொழியில் மெதுவாகக் கூற மறுபக்கத்தில் ஓர் நொடி அமைதி.

“ம்ம் போய்ட்டு வா பட் ஃபோன எடுத்துக்கிட்டு போ”

அவன் அனுமதிக்கவே மகிழ்ச்சியாக தலையசைத்தாள்.

“ம்ம் சரிங்க”

அழைப்பேசியை துண்டித்து விட்டு வெளியே வந்தாள்.

“என்ன புருஷப்பத்தினி புருஷன் கிட்ட அனுமதி வாங்கிட்டிங்களா போகலாமா”

தேவிப்பிரியா நக்கலாகக் கூற.

“ம்ம் சரி கொஞ்சம் இரு துப்பட்டாவ போட்டுட்டு வாரேன்”

“அச்சோ அது தேவல்ல இந்த வெயில்ல நெருப்புல போட்டது போல வேகுறோம் துப்பட்டாத் தேவல்ல வா போய்ட்டு வரலாம் வா”

“இல்ல..”

“அட வாம்மா”

கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல அவளும் கதவை ஒழுங்காக மூடி விட்டு தேவிப்பிரியாவுடன் சேர்ந்து நடந்தாள்.

“நீ கல்யாணம் பன்னி எத்தன வருஷமாகுது”

நேத்ரா கேட்க அவளைப் பார்த்து புன்னகைத்தவள்.

“இந்த வருஷத்துக்கு நாலு வருஷமாகுது”

“ஆஹ்”

நேத்ரா அமைதியாகிவிட தேவிப்பிரியை பேசினாள்.

“நாங்க ரெண்டு பேரும் லவ் பன்னி தான் கல்யாணம் பன்னிக்கிட்டோம். எங்களோட லவ்க்கு அக்ஷரன் அண்ணா ரொம்ப ஹெல்ப் பன்னியிருக்காரு.  அபியும் அண்ணாவும் திக் ஃப்ரன்ட்ஸ்.இவங்க வீட்ல முதல்ல சம்மதிக்கல்ல ஏன்னா நா ஒரு அனாத. சொல்லிக்க யாருமே இல்ல.அண்ணா தான் இவ என்னோட தங்கச்சி அவளோட அண்ணா தான் நான் அவளுக்காக நா எப்பவும் இருப்பேன். அப்பிடின்னு சொல்லி தான் அவங்கள கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சாரு.”

“அப்போ எதுக்கு இப்போ ரெண்டு பேரும் பேசாம இருக்காங்க”

நேத்ரா கேள்வியாக அவளைப் பார்க்க.

“தெரியலையே அவங்ககுள்ள எதாச்சும் பிரச்சினையா இருக்கும் கேட்டதுக்கு ரெண்டு பேரும் எதுவும் பேசல்ல நானும் போங்கடா போறதுக்குன்னு விட்டுட்டேன்”

அவள் கூறிய விதத்தில் நேத்ரா புன்னகைத்தாள்.

இருவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தனர்.

“கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்துட்டு போவோம்”

மூச்சு வாங்க வயிற்றைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த கற்களாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கையில் அமர்ந்தாள்.

“அதான் இந்த நேரத்துல ஓய்வுல இருக்கனும்”

அவளது தோளைப் பிடித்து அமர்த்தியபடி நேத்ரா அவளைக் கடிந்துக் கொண்டாள்.

“போடி எவ்ளோ நாளைக்குத் தான் வீட்டுக்குள்ளையே அடஞ்சிட்டிருக்குறது நீ வந்ததால உன்னோட வீட்டுக்கு வாரேன் இல்லன்னா இப்பிடி தான் கொஞ்ச நேரம் நடப்பேன் அப்புறம் வீட்டுக்குள்ள சிறைவாசம் தான்”

சலித்துக் கொண்டாள் தேவிப்பிரியா.

“பாப்பா என்ன சொல்லுது”

நேத்ரா கேட்க வயிற்றைத் தடவியவாறு புன்னகைத்தாள்.

அவளது புன்னகையைப் பார்த்ததும் இவளது பார்வையும் ஆசையாக வருடியது அவளது சற்று மேடிட்ட வயிற்றை.

தானும் கருவுற்றால் எவ்வாறு இருக்கும்.

நினைக்கையில் இனித்தது.

அவள் சற்று மேடிட்ட தனது வயிற்றைப் பிடித்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டு இருக்க  அவளது பக்கத்தில் அவளது தோளை ஆதரவாகப் பிடித்து அவளை அணைத்தவாறு அக்ஷரன் நின்றுக் கொண்டிருந்தான்.

சட்டென தலையை உலுக்கி அவ்வெண்ணத்தையே கை விட்டாள்.

என்ன மாதிரியான நினைப்பு இது.

அதுவும் அவர் கூட நினைக்கையில் இனித்தது தான் ஆனால் நடைபெறாதே.

எதுக்கு இப்பிடி ஒரு நினைவு வரனும்.

அவளது முகம் கூட வியர்த்தது.

*******

தொடரும்..❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top