அத்தியாயம் 13

உச்சபட்ச படபடப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் நறுமுகை… அவளது மூளை சாமுவேல் பக்கம் திரும்பவே திரும்பக் கூடாது என கூறிக் கொண்டே இருக்க அதை முயன்று செயல்படுத்தியவளாய் தன் வேலையில் கவனத்தை பதித்தாள்…

 

விக்ரம் கூட அன்று நறுமுகையிடம் வேண்டுமென்றே சிடுசிடுவன இருப்பது போல காட்டி கொண்டான் …

 

சரியாக அவளது இதழை நெருங்கிடும் சமயம் கதவு திறக்கும் சத்தத்தில் சட்டென விக்ரமும் நறுமுகையும் விலகி விட்டிருந்தனர்… அந்த நேரம் தான் சாமுவேல் பிஹெச் பார்ப்பதற்காக உள்ளே வந்திருந்தான் …

நறுமுகையையும் விக்ரமையும் ஒரு பார்வை பார்த்த சாமுவேல் பின் விக்ரமிடம் ,

 

“பிஹெச் செக் பண்ணி முடிச்சிட்டீங்களா..?”  என கேட்டதும் விக்ரம் கஷ்டப்பட்டு தன்னை இயல்பாக வைத்திருப்பது போல் காட்டி கொண்டவன் சாமுவேலின் முகத்தை பார்த்து,

 

” இதோ இப்ப முடிஞ்சிடும்… முடிச்சீட்டிங்களா நறுமுகை..?”  என வரவழைக்கப்பட்ட கடுமையுடன் கேட்டான் அவளிடம் …

நறுமுகையும் கைகள் நடுங்க ஏதேதோ செய்தவள் பதற்றத்தில் பி.எச் சரியாகவே பார்க்க முடியவில்லை இருந்தும் இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது என்கிற எண்ணத்தில்,

 

“முடிச்சிட்டேன் சார் …”என மெல்லிய குரலில் உரைத்தாள்…

 

“ம்ம்ம்…சீக்கிரம் வாங்க..”  என அவளை முன்னே விட்டவன் சாமுவேலை பார்த்து,

 

” சரி வரேன்…”  என்று விட்டு வெளியேறி விட்டான்…. செல்லும் இருவர்களையும் பார்த்த சாமுவேலின் இதழ்கள் நக்கலாக வளைந்தது.…

 

வெளியேறிய இருவருக்கும் சற்று பதற்றமாக தான் இருந்தது… நறுமுகையோ பயத்துடன் ,

 

“பார்த்திருப்பாரா விக்ரம்…?” அவனோ  யோசனையுடனே,

 

” பார்த்திருக்க மாட்டான்னு நம்புறேன்… இருந்தும் எதையும் காட்டிக்காத தைரியமா இரு… ஏதாவது உன்கிட்ட கேட்டானா எதுவும் இல்லனு சொல்லு.. புரிஞ்சுதா..?”  என கண்டிப்புடன் கூறியதும் சரியென மண்டையை மண்டையை ஆட்டினாலும் உள்ளுக்குள் பயமாகவே இருந்தது நறுமுகைக்கு…

 

ஏற்கனவே ஒருமுறை அவளிடம் தவறாக நடந்து கொண்டான் அல்லவா..! இப்போது விக்ரமுடன் தான் நெருக்கமாக இருப்பதை கண்டுவிட்டு தேவையில்லாமல் கல்லூரி முழுவதும் ஏடாகூடமாக கேதேனும் பரப்பி விட்டால் என்ன செய்வது என்கிற பயம் தான் அதற்கு காரணம்…

 

  கிறிஸ்டோஃபர் அவளையும் குமாரையும் வைத்து கதை கட்டி விட்டிருந்தான்‌ முன்பு… அப்போது அதற்கே கவிதா, கௌசல்யா ,அஸ்வினி என மூவரும் ஒன்று கூடி அவளை ஒரு வழி ஆக்கி விட்டிருந்தனர்..

இப்போது விக்ரமுடன் அவளை இணைத்து பேசி வேறு விதமாக சென்றுவிட்டால் நிச்சயம் அவளால் தாங்கிடவே முடியாது..

அதனாலேயே அன்று முழுவதும் பதற்றத்துடனே இருந்தாள் நறுமுகை… ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்பது போல சாமுவேல் கவிதாவை வேலை வாங்கியவாறு இயல்பாகவே இருந்தான்… 

 

அன்று மாலையும் விக்ரம் அவளை காரில் தான் அழைத்துக் கொண்டான்.. நிச்சயம் அவள் படபடப்பாக இருப்பாள் என தெரியும் அவளிடம் பேச வேண்டும் என்பதற்காகவே அவளை அழைத்துக்கொண்டவன் வீட்டினை நோக்கி காரினை செலுத்தாது வேறு பழியில் சென்றான்…

ஆனால் அது எல்லாம் கவனிக்கும் நிலையில் நறுமுகை இல்லை… கியரின் மீதி இருந்த அவனது கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவள் ,

 

“ரொம்பவே பயந்துட்டேன்… அவர் ஏதாவது கேட்பாரோன்னு நல்ல வேலை எதுவும் கேட்கல… உங்ககிட்ட ஏதாவது கேட்டாரா..?” என்றதும் சாலையை பார்த்தவாறு மறுப்பாக தலையசைத்த விக்ரம் ,

 

“பார்த்திருந்தா ஏதாவது கேட்டிருப்பான் இல்லனா வேற யார்கிட்டயாவது சொல்லி இருப்பான் ..என் காதுக்கும் வந்து இருக்கும்… இதுவரைக்கும் எதுவும் வரல சோ பார்க்கலைனு தான் நினைக்கிறேன்… நீ இதெல்லாம் நினைச்சு மண்டைக்குள்ள ஏத்திக்கிட்டு பயந்து சாவாதே… தைரியமா இரு ..அவன் ஏதாவது கேட்டானா என்கிட்ட வந்து சொல்லு புரிஞ்சுதா..”  என்றதும் நாலாபுரம் மண்டையை ஆட்டி வைத்தாள் நறுமுகை…

 

அதில் சற்று ஆசுவாசமடைந்த பின்னரே செல்லும் வழியை கவனித்திட திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் ,

“ஆமா நம்ம இப்ப எங்க போறோம் ..?” என பதறித் கொண்டு கேட்டதும் பக்வாட்டாய் அவளை திரும்பிப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டவன்,

 

” உன்னை கடத்திட்டு போகப்போறேன்..”  என்றதும்,

 

“ஐய… போங்க போங்க எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. கடத்திட்டு போனதும் எழுப்புங்க..”  என இருக்கையில் கண்கள் மூடி சாய்ந்து கொண்டாள்…

 

அவளை சிரிப்புடன் பார்த்த விக்ரம் காரினை நிற்பாட்டிட, மெதுவாய் கண்களில் திறந்து பார்த்தவளது விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன…

 

கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான் விக்ரம்.. கடலின் அலைகள் மேல் எழும்பி வருவதை கண்ட நறுமுகை ஆச்சரியமாய் தன்னவனை பார்த்து ,

 

“பீச்சுக்கு வந்திருக்கோம்…”

 

” ஏன் சொர்க்கத்துக்கு வந்துட்டோம்னு நினைச்சிட்டியா என்ன..?”  என கேலி செய்யவும் மீண்டும் இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டவள்,

 

“ம்ம்ம்.. இதுவும் நல்லா தான் இருக்கு.. இந்த பீச்சுக்கு முன்னாடி வந்து இருக்கீங்களா..?”  என கேட்டதும் சீட் பெல்ட்டை கழட்டியவாறு,

 

” வருவேன் ஃப்ரண்ட்ஸ் கூட… இப்ப உன் கூட வந்து இருக்கேன்.. ” என பேசியவாறு அவள் முகம் நோக்கி ஆர்வமாய் குனிந்திட, சட்டென அவன் இதழ் மீது கரம் வைத்து தடுத்திருந்தாள் நறுமுகை…

அதில் கண்களை இறுக மூடி கொண்டவனுக்கு முனுக்கென்று கோபம் வந்துவிட்டது …

அவளை அழுத்தமாக பார்த்தவாறு விலகி அமர்ந்தவன்,

 

” என்னடி…”  என அடிக்குரலில் சிறியதும் நறுமுகைக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தாலும்,

 

” விக்ரம்.‌. அதுக்குள்ளேவா…?” என்றதும் விழிகள் இடுங்க அவளை பார்த்த விக்ரம் ,

 

“சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டுட்டு இப்ப அதுக்குள்ளேவானு கேட்கிற..??? எதுக்குடி பிஹெச் பார்க்க கூப்பிட்ட..?”  என எகிறிக் கொண்டு கேட்டான்…

 

திணறிய நறுமுகைக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை,

 

“ அது.. நீங்க கோவமா இருந்தீங்க.. அதான் ..உங்களை சமாதானப்படுத்துறதுக்காக தான் கூப்பிட்டேன்…”

 

“ஆமா சமாதானப்படுத்துனியா..?”

 

” அதான் படுத்தினேனே… நீங்க கூட எனக்கு …கி…ஸ்.. பண்ணீங்களே…”  என உள்ளே போன குரலில் கூறியதும் ,

 

“ம்ம்ம்…ஆமா பெருசா கிஸ் பண்ணிட்டேன்.. அதுக்குள்ள தான் கரடி மாதிரி அந்த சாமுவேல் வந்துட்டானே..”  என கடுப்புடன் கூறியவன் அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டு,

” நிஜமா என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல.. வெட்கத்தை விட்டு சொல்றேன்..”  என்றதும் சட்டென நறுமுகைக்கு ஒரு மாதிரியாகிவிட்டது..

ஆண்மகன் அவன் இத்தனை வெளிப்படையாக பேசியதும் அவளுக்குள் ஏதேதோ செய்தது…

கரத்தைப் பிடித்தபடி இருந்தவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தன்னிலை இழக்க ஆரம்பித்து விட நெற்றியை நீவியபடி தன்னை சுதாரித்துக் கொள்ள முற்பட்டவன் ,

 

“சரி வா கொஞ்ச நேரம் வெளியே நடந்து வரலாம்..”  என்றதும் அவளுக்கும் அப்பாடா என்றானது …

 

பின் இருவரும்

ஒருவரை ஒருவர் உரசியபடி கடலலை அருகே சென்று நின்றனர்.. கடலழகி ஓடி வந்து இவர்களது பாதத்தை தொட்டு சென்றிட, அதை சிரிப்புடன் பார்த்தவாரு நின்று இருந்த நறுமுகை  அவனை திரும்பி பார்த்து அழகாய் சிரித்திட, விக்ரமும் இதழ் பிரிக்காது சிரித்துக்கொண்டான் …

அதே நேரத்தில் இருவருவது கரங்களும் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டது…

 

சில்லென்ற காற்றும்,  கடல் அலை பட்டதால் ஈரப்பதமான கால்களும் ,கோர்த்திருந்த கரங்களும், அவர்களை புதுவித உலகத்திற்கு அழைத்துச் சென்றது போல் இருந்தது …

 

என்ன தான் விக்ரம் நண்பர்கள் இடத்தில் கலகலப்பானவனாக இருந்தாலும் பெண்கள் என வந்தால் ஒரு எல்லையுடனே பழகிடுவான்..

அது அவன் அன்னை சிறு வயதிலிருந்து சொல்லிக் கொடுத்தே வளர்த்து இருந்தார்…

 

ஒற்றை மகன் செல்லம் கொடுத்து ஒழுக்கம் தவறினால் பின் அவனுக்கு தானே அவமானம் என்பதால் சொல்லிச் சொல்லி வளர்த்திருந்தார் …

 

நறுமுகையை கூட உறுதி செய்த பின்னர் எட்ட நின்று தான் இருந்தான்.. அவள் விரலில் மோதிரம் அணிவித்த பின்னர் இனி இவள் தன்னவள் என்கிற உரிமையில் தான் இவ்வளவு தூரம் அவளுடன் நெருங்கி பழகுகிறான்..

எட்ட நின்றே இருக்கலாம் என்றாலும் அவன் வயதும் அவன் மனமும் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை ..

இவள் தனக்கு மட்டுமே என்கிற நினைப்பு அவனுக்குள் ஆழப் பதிந்து விட்டது ..அதற்காக எல்லை மீறிடுவான் என்றெல்லாம் கிடையாது.. அவளது அருகாமை வேண்டும், அவரை முத்தமிட வேண்டும்.. என ஆண்களுக்கே உரித்தான சில பல உரசல்களும் தீண்டல்களுக்குமான நினைப்பு மட்டும் தான் அவனுக்கு…

கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்திருந்தனர்… நறுமுகை தான்,

 

” மாமன் நகைக்கடை வச்சிருக்காங்க தானே..?” என கேட்டதும் விக்ரமும் ,

 

“ம்ம்ம்…ஆமா தாத்தா ஆரம்பிச்ச கடை… அப்போ சின்னதா தான் இருந்துச்சு ..அப்பாவும் ஒரே பிள்ளை அவர் பொறுப்பை கையில் எடுத்துக்கிட்டதும் பெருசா ஆக்கிட்டாரு..

என்னையும் வந்து பார்க்க சொல்வாரு எனக்கு அதெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல.. அதான் இந்த ஃபீல்டுக்கு வந்துட்டேன்..”  என்றதும் சரி என தலையசித்து வைத்தாள்..

 

அதன் பின் சிறிது நேரம் பேசி விட்டு நடந்தவாரே கார் அருகே வந்து விட்டனர்… ஓட்டுநர் இருக்கையின் அருகே நின்ற விக்ரம் அவளையே பார்த்தவாறு பின் எட்டுகளை எடுத்து வைத்து பின்பக்க கதவருகே சென்று நின்றான்..

நறுமுகைக்கு சட்டென மூச்சடைத்து விட்டது ..

இருவரது கரங்களும் கோர்த்து தான் இருந்தது.. அவள் கரத்தை பிடித்தபடி அவனும் பின் இருக்கை அருகே நின்று இருக்க ,‌இவளோ டிரைவர் இருக்கையின் அருகே நின்று கொண்டிருந்தாள்…

அவனது விழிகளை மாறி மாறி பார்த்த நறுமுகை தைரியம் வரப்பெற்றவளாய் இரண்டடி எடுத்து வைத்து அவனை நெருங்கிட, வெற்றி புன்னகையுடன் அவளை பார்த்த விக்ரம் மறுக்கரத்தால் பின் இருக்கை கதவைத் திறந்து உள்ளே சென்று அமர்ந்தான்…

நறுமுகையோ ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தானும் உள்ளே சென்று அமர்ந்தவள்  நிமிரவே இல்லை.. குனிந்த தலையுடன் அமர்ந்தவளை காணக்கான விக்ரமிற்கு ஹார்மோன்களெல்லாம் ஏகத்துக்கும் சுரந்து அவனை இம்சை செய்ய ஆரம்பித்தன…

 

கோர்த்திருந்த அவளது கரத்தை எடுத்து தன் கன்னம் மீது வைத்துக் கொண்டவன்,

 

“ஓய்….என்ன அமைதியா இருக்க..?” என கிசுகிசுப்பாக கேட்டதும் நறுமுகைக்கு உடல் உஷ்ணம் பெற்றது.…

 

அவள் அமைதியாகவே இருக்க…விக்ரம் அவளது தோளில் கரம் போட்டு தன்னோடு நெருக்கியவன் குனிந்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்…

 

“விக்…ரம்ம்ம்….”என ராகமாய் இழுத்திட,அதில் வேகமாய் மற்றொரு கன்னத்திற்கு முத்தமிட்டவன் அவளது இதழை தான் மோகமாய் பார்த்து வைத்தான்…

 

அவன் அமைதியாய் இருப்பதை உணர்ந்து மெல்ல  தலை உயர்த்தி பார்த்திட அதற்காகவே காத்திருந்தது போல ,தோளை பற்றி இருந்த கரத்தால் அவளது பின்னங்கழத்தை வளைத்து தன் இதழோடு இதழ் கோர்த்துக் கொண்டான் வேகமாக… 

முதலில் அழுத்தமாய் ஒற்றி மட்டும் எடுத்தவன்…பின் விலகி மீண்டும் ஒற்றி கீழ் உதட்டை கடித்து இழுத்தான்..மேல் உதட்டையும் விட்டு வைக்கவில்லை.…

 

பிறகு சற்றும் அவளை விலக்காது அடுத்த மொழி முத்தத்திற்கு தாவி இருந்தான்…பாவம் நறுமுகை தான் அவனது முத்தத்தில் நிலைகுலைந்து போய் விட்டாள்…

 

ஆராய்ச்சியாளன் அவன் அவளது இதழில் மிக முக்கிய ஆராய்ச்சியை நடத்திட,

அவனது‌ முத்தத்தில் மூச்சடைத்து போய் இருந்தாள் நறுமுகை

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top