அத்தியாயம் 15

அத்தியாயம் 15

அமைதியாக சென்றமர்ந்தாள் காரின் முன்னிருக்கையில்.

அவனும் எதுவும் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்தான்.

அவனது முகமோ சற்று தெளிவாகக் காணப்பட்டது.

 

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி

ஒ… ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே

 

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி

நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

 

இதுவரை எங்கிருந்தாய்

இதயமும் உன்னை கேட்கிறதே

பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்

என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்

 

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்

உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்

உன்னை உனக்கே தெரியலையா

இன்னும் என்னை புரியலையா

 

நான் சிரித்து மகிழ்ந்து

சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்

நான் நினைத்து நினைத்து

ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்

 

எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்

எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

 

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி

ஒ… ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

 

என் அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே

 

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி

நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

 

உன்னுடன் இருக்கையிலே

நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே

இதுவரை நானும் பார்த்த நிலவா

இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா

 

உன்னுடன் நடக்கையிலே

என் நிழல் வண்ணமாய் மாறியதே

முன்னே முன்னே நம் நிழல்கள்

ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே

 

நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்

உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

 

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி

நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

 

உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறதே

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறதே

 

ஒ… ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே

 

எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்

எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

 

நான் வாழ்ந்த ஞாபகம்…

கார் ப்ளேயரில் பாட்டு ஓட ஸ்டிரியங்கில் அவனது விரல் தாளம் போட்டது.

“இவங்களுக்கு பாட்டு எல்லாம் புடிக்காது தானே.. ஆனா ரசிச்சுக் கேக்குறாங்க”

அவன் ரசித்துக் கேட்பதை பார்த்து இவள் பிரம்மித்தாள்.

ஏனென்றால் அவனுக்கு சிறு வயதில் இருந்து பாட்டு பிடிக்காது.

ஆனால் அவளுக்குப் பிடிக்கும்.

இவளோ மறுபக்கம் திரும்பிக் கொண்டு இருக்க அவளது முகத்திற்கு நேராக ஒரு சிறிய பெட்டி ஒன்றை நீட்டினான்.

இவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“பிரிச்சுப் பாரு”

அவன் கூற யோசனையாக அதை வாங்கியவள் அதன் உள்ளே இருப்பதைப் பார்த்து மகிழ்ந்து தான் போனாள்.

உள்ளே குங்குமச்சிமிழ் இருந்தது.

“ரொம்ப நன்றி!!”

அவள் புன்னகைத்துக் கொண்டேக் கூற அவன் எதுவும் பேசவில்லை.

அவள்  குங்குமச்சிமிழை அவனிடம் நீட்டினாள்.

புருவம் சுருக்கி அவளைப் பார்த்தான் அவன்.

“இல்ல புருஷன் கையால தான் பொண்டாட்டிக்கு குங்குமம் வெச்சி விடனும்ன்னு அத்த சொன்னாங்க அதான்!!”

மெதுவான குரலில் அவள் கூற அவளை அழுத்தமாகப் பார்த்தவன்.

ஒரு கையால் ஸ்டிரீங்கயரைப் பிடித்துக் கொண்டு மறு கையின் பெருவிரலால் குங்குமத்தை எடுத்து அவளது நெற்றி வகுட்டில் வைத்து விட்டான்.

இவளோ விழிகளை இறுக்கமாக மூடியிருந்தாள்.

மனதில் முழுக்க முழுக்க நிம்மதி மாத்திரமே பரவியிருந்தது.

பின் விழிகளைத் திறந்து அவனைப் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரே ஒரு நொடி இருவரது பார்வைகளும் ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ள அக்ஷரன் முன்னால் திரும்பிக் கொண்டான்.

இவளும் அமைதியாக தலையை குனித்துக் கொண்டாள்.

“நா குங்குமம் வைக்கல்லன்னு அவருக்கு எப்பிடி தெரியும்!! அவர்கிட்ட கேட்க தயக்கமா இருந்துச்சு ஆனா அவரே கொண்டு வந்து கொடுத்திருக்காரு..!! எப்பிடி”

அவளது மனதிலோ இவை தான் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு இருபது இருபத்தைந்து நிமிடங்களில் கார் ஓர் இடத்தில் வந்து நின்றது.

இவள் அவ்விடத்தை விழி விரித்துத் தான் பார்த்தாள்.

மிகப்பெரிய மண்டபம் ஒன்று அது.

ஆயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் இருக்கக் கூடிய இடம் அது.

வெளிப்புறத் தோற்றமோ சொல்லில் அடங்கா..!!

வெள்ளை நிறத்திலான அந்த கட்டிடம் நவீனயுக அலங்காரத்தில் ஜொலித்தது.

மின் குமிழ்கள் அனைத்தும் அவ்விடத்தை அலங்கரித்திருந்தது.

இவனது கார் போய் நிற்கவும் காவலர் அவசரமாக வந்து கார்க் கதவைத் திறந்து விட்டான்.

இவன் காரைத் திறந்து இறங்க இவள் இன்னும் உள்ளே தான் நின்றிருந்தாள் அவ்விடத்தின் பிரம்மிப்பைப் பார்த்து பிரம்மித்துத் தான் போனாள்.

காவலாளி மறுபக்கம் வந்து கார் கதவைத் திறந்து விடப் பார்க்க தலையசைத்து வேண்டாம் எனக் கூறி அக்ஷரனே அவளது கார்க்கதவைத் திறந்து விட இவள் கார்த் திறக்கப்பட்ட சத்தத்தில் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“இறங்கு”

அவன் மெதுவாக அவளுக்கு அருகில் குனிந்துக் கூற இவளுக்கு அவனது அருகாமை வேறு அவஸ்தையாகிப் போனது..!!

“ம்ம்”

தலையை சம்மதமாக ஆட்டி விட்டு இறங்கப் பார்க்க அவளால் சேலையை அணிந்துக் கொண்டு அவசரமாக இறங்கக் கஷ்டமாக இருந்தது.

அதைப் புரிந்தவன் அவளது கையைப் பிடித்து மெதுவாக இறக்கி விட்டான்.

கையைப் பிடித்தான் என்பதை விட தூக்கினான் என்பதே சாலச் சிறந்தது.

ஆனால் அதை அவள் மட்டும் தான் உணர்ந்தாள் மற்றையவர்களுக்கு அது கையைப் பிடித்தது போல் தான் இருந்தது.

“இப்போ தூக்கினாங்களா”

அவள் திகைத்துப் போய் அவனது முகத்தைப் பார்க்க அவனது முகம் என்றும் போல் சாதாரணமாகத் தான் இருந்தது.

“ம்ம் வா”

காவலாளியிடம் கார் சாவியைக் கொடுத்தவன் அவளுடன் மிக மிக மெதுவாக நடந்தான் அவளது நடையின் வேகத்தை அறிந்து.

சுற்றியிருந்தவர்களைப் பார்த்து இவள் விழித்தாள்.

ஏனெனில் அனைவரும் மோர்டன் என்ற பெயரில் மார்புக்கு சற்றுக் கீழும் தொடைக்கு சற்று மேலும் உள்ள இறுகிய ஆடைகளையே அணிந்திருந்தனர்.

சுற்றியிருந்தவர்களோ அதற்கு மேல் போய் நேத்ராவை விழியெடுக்காமல் பார்த்தாள்.

அங்கு சேலை அணிந்து அங்கங்களை மூடி தமிழ்க் கலாச்சாரத்திற்குக் கட்டுப்பட்டு அழகிய பதுமையாக வந்திருந்தவள் இவள் ஒருத்தி மட்டுமே.

சிலரது பார்வை ரசனையாகவும் சிலரது பார்வை கேலியாகவும் என அவளை சுற்றியே அனைவரது பார்வையும் இருந்தது.

அதை உணர்ந்தவள் அவளறியாமலே அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவன் திரும்பி அவளைப் பார்க்க அவள் எங்கு தலையை நிமிர்த்தியிருந்தாள். குனித்துக் கொண்டு அவனை ஒட்டியே நடந்தாள் நேத்ரா.

“ஹெலோ வாங்க ஸர்”

பல் இளித்துக் கொண்டே அக்ஷரனை வரவேற்றான் இயக்குனர் ராகவ்.

“ம்ம்.. எல்லாம் ரெடியா”

இவன் சுற்றும் முற்றும் பார்வையால் அளந்தபடி கேட்கா.

“ஆமா ஸர்”

அவனது கேள்விக்கு பதில் கூறினாலும் பயந்து கோழிக் குஞ்சு போல் அவனை ஒட்டியிருக்கும் நேத்ராவையே பார்த்தான் ராகவ்.

“என்ன ராகவ்”

அவனது பார்வை தன்னவளைத் தழுவுவதைப் பார்த்தவன் பற்களைக் கடித்துக் கொண்டு அவனிடம் கேட்க அவனது குரலில் உள்ள பேதத்தை உணர்ந்தவன்.

“இல்ல ஸர் மேடம் உங்க ரிலேட்டிவ்வா”

வார்த்தைகள் தடுமாறியது.

“ ஷீ ஈஸ் மை வைஃப்”

அழுத்திக் கூறினான். கை விரல்கள் வேறு அவளது கை விரலை அழுத்திப் பிடித்திருந்தன.

இவளோ மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவளுக்குத் தெரியும் தான் அவன் கூறியதன் அர்த்தம்.

ஆனால் நிரந்தமற்றதே மனதில் ஊசி போல் உண்மை குத்த மெதுவாகக் கைகளை அவனிடம் இருந்து விலக்கப் பார்க்க அவன் எங்கு விட்டான் அவளது கையை.

அழுத்தி இறுக்கமாக அல்லவா பிடித்திருந்தான்.

பின் சுற்றம் உணர்ந்து அமைதியாக கையை அவனது கைக்குள்ளே விட்டு விட்டாள்.

“ஓகே ஸர் வெல்கம் மேடம்”

ராகவ் புன்னகைக்க இவள் இதழ் விரித்து புன்னகைத்தாள்.

“ஓகே மத்தவங்க வந்தாச்சா”

“ஆமா ஸர் ப்ரொக்ரெம் ஸ்டார்ட் பன்னலாம்”

“ம்ம்”

இவன் பேசிக் கொண்டிருக்க 

“ஹாய் ஹாய்”

எனக் கத்திக் கொண்டு ஒரு இளம்பெண் ஓடி வந்து நெருங்கி அவனை அணைத்துக் கொண்டாள்.

கிட்டத்தட்ட அவனது மேலில் விழுந்தாள்.

நேத்ராவோ அப்பெண்ணை புரியாமல் பார்த்தாள்.

அக்ஷரனோ அவளை அலட்சியமாகப் பார்த்தானே தவிர எதையும் பேசவில்லை.

“ஹேய் எப்பிடி இருக்கிங்க ஸோ ஹோட்”

அப்பெண் கிறக்கமாகக் கூறினாள்.

ரகாவ்வோ பல்லைக் கடித்தான்.

“ஏன்மா நீ”

அவன் கூற.

“ப்பச்ச்”

அவனைப் பார்த்து அலட்சியமாக வாயை சுளித்தவள்.

“இது யாரு”

பக்கத்தில் இருந்த நேத்ராவைப் பார்த்து அஷ்டகோணலாக முகத்தை வைத்துக் கொண்டுக் கேட்க.

“அவரோட வைஃப்”

கூறியது வேறு யாருமல்ல நேத்ரா தான்.

அக்ஷரனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு வார்த்தை பேசவில்லை.

“ஓஹ்..”

முகம் கூம்பியது அப்பெண்ணுடையது.

“ஓகே லெட்ஸ் gகோ ஸர்”

இயக்குனர் ராகவ் கூற அனைவவும் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே போகும் வரையிலும் சுற்றியும் புகைப்படக்கருவிகளால் புகைப்படம் எடுத்துத் தள்ளினர்.

நேத்ராவிற்கோ இது அனைத்தும் புதிது. 

பிரம்மித்துத் தான் போனாள்.

அங்கு ஒரு படத்தின் பெயருடன் மாபெரும் நடிகர் மற்றும் நடிகைகளின் புகைப்படங்கள் இருந்தது.

அக்ஷரன் நேத்ராவினது கையைப் பிடித்துக் கொண்டு போய் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான் அவளும் அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தாள்.

வரும் வழி முழுதாக அனைவரும் இவனுக்கு மரியாதை நிமித்தமாக பேச இவனோ தலையசைப்புடன் அல்லவா அவற்றை கடந்து வந்தான்.

இப்பொழுதும் மிடுக்காக காலுக்கு மேல் கால் போட்டு தொடையில் இடது கையால் தாளமிட்டுக் கொண்டிருந்தான்.

அவனது அழகும் கம்பீரத்திற்கும் முன்னால் தான் வெறும் கால் தூசு தான் என எண்ணி அவனை வியப்பாகவே பார்த்தாள் நேத்ரா.

சற்று முன் அந்த பெண்ணிடம் தான் இவரது மனைவி எனக் கூறிய வார்த்தை இவளறியாமல் வாய் வழியாக வந்தது.

அந்நேரத்தில் வந்த கோவமும் பொறாமையும் அப்பெண் அவனுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததும் நெஞ்சே அடைத்ததே.அதன் வெளிப்பாடு தான் அந்த வார்த்தையாக இருக்கலாம்.

அது இசை வெளியீட்டு நிகழ்ச்சி.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அப்பெரிய மேடை.

இவனுக்கு அருகில் வந்து ஒவ்வொருவராக பேசி விட்டுச் செல்ல இவன் ஓகே,ம்ம் என்ற வார்த்தையுடன் தலையசைப்பு மாத்திரம் தான் அவனது பதில்.

சற்று நேரத்தில் அங்கே புகைப்படத்தில் இருந்த மாபெரும் நடிகர் அங்கு வந்தார்.

வந்தவர் நேராக இவனிடம் வர இவன் எழுந்து நின்று அந்நடிகருடன் கை குலுக்கினான்.

இவளோ விழி விரித்து இவனைப் பார்த்தாள்.

இன்னும் அவன் யார் என்று அவளுக்குத் தெரியவில்லை.

அந்நடிகர் பேசி விட்டுச் சென்றதும் நடிகை வந்து அவனிடம் பேசி விட்டுச் சென்றார்.

கை கூட குலுக்கவில்லை.

பின் மீண்டும் அவளுக்குப் பக்கத்தில்  காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தான்.

“நீங்க சினிமா நடிகரா”

அவள் விழி விரித்து மெதுவாக அவனது காதுக்கு அருகில் கிசுகிசுவெனக் கேடக திரும்பி அவனை அழுத்தமாகப் பார்த்தவன் மறுப்பாக தலையசைத்தான்.

“அப்போ நீங்க ஜவுளிக்கட செய்றல்லையா”

அவள் மீண்டும் கேட்டாள்.

“அதுவும் என்னோடது தான்”

அவன் கூறினான்.

“அப்போ இங்க எதுக்கு வந்திருக்கோம்”

மீண்டும் கேட்டாள்.

“ம்ம் ஜவுளிக்கடைக்கு மெட்டீரியல் பார்க்குறதுக்கு”

அவளிடம் கூற இவள் விழித்தாள்.

மீண்டும் எதுவும் கேட்கவில்லை அவள்.

அமைதியாகிவிட்டாள்.

அங்கு வந்த அனைவரும் நூனிநாக்கு ஆங்கிலம் தான்.

இவளுக்கும் ஓரளவு ஆங்கிலம் வரும் ஆனால் அவ்வளவு எளிதாக அவளால் ஆங்கிலம் சரளமாக பேச முடியாது.

தயக்கம் ஒன்று இருந்து கொண்டு தான் இருக்கும்.

 

சிறிது நேரத்தின் பின்னர் அந்த அரங்கமே இருளில் மூழ்கியது.

இவள் அவனது கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள்.

அவனும் அவளது கையைத் தனக்குள் அழுத்திக் கொண்டான்.

மேடையில் திடீரென வெளிச்சம் பரவியது.

நடுவில் இருந்து ஒரு பெண் இடுப்பை வளைத்து ஆடிக் கொண்டு மேடையின் முன்னால் வந்து நின்றாள்.

அப்பெண் வேறு யாருமில்லை சற்று முன்னர் அக்ஷரனுடைய மேலே வந்து விழுந்த பெண் தான்.

அப்பெண்ணுக்கு பின்னால் நடனக்குழு இவளது நடனத்திற்கேற்ப ஆட இவளும் வளைந்து நெளிந்து ஆடினாள்.

அங்குள்ளவர்கள் அவளது நடனத்திற்கு “ஓஓ” எனக் கத்தி உற்சாகப்படுத்தினர்.

“இவங்களும் நடிகையா”

அவள் மெதுவாக அவனிடம் கேட்டாள்.

“ம்ம்”

அப்பெண்ணை ஏற்கனவே எங்கோ பார்த்தது போல் இருந்தது யோசித்துப் பார்த்தாள்.

பல ஐட்டம் ஸோங்களில் நடனம் ஆடுவதைப் பார்த்திருக்கிறாள்.

பின் அவளது நடனம் முடிந்ததும்.

அரங்கம் முழுக்க வெளிச்சமாகியது.

மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வந்து பேசினார்கள்.

இவளோ விழி விரித்து தான் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏனென்றால் இவ்வாறான நிகழ்ச்சிகளை நேரலையாகக் கூட தொலைக்காட்சியில் பார்க்காதவள் இன்று நேரடியாகப் பார்க்கிறாள்.

பின் ஒவ்வொரு நிகழ்ச்சியாக ஆரம்பித்தது.

இசை நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகின.

“ஓகே இப்போ இந்த படத்தோட இசை வெளியீடப் போறோம். அதுக்கு இந்த படத்தோட தயாரிப்பாளர் மிஸ்டர் அக்ஷரன இந்த மேடைக்கு அழைக்குறோம்”

எனக் கூற இவள் விழி விரித்து அவனைப் பார்த்தாள்.

அக்ஷரனோ தனது முழு உயரத்திற்கும் எழுந்து நின்று கோர்ட்டை சரி செய்தவன் தனது நீண்ட கால்களை எடுத்து வைத்து வேக எட்டுக்களால் மேடை ஏறினான்.

அங்கு நேத்ரா தான் இமைக்க மறந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

*********

தொடரும்..❤

உங்க கருத்த சொல்லுங்க வாசிக்குறவங்க ஒரு சின்ன கமன்ட்டையாச்சும் தட்டிவிடுங்கப்பா..ப்ளீஸ் 😊❤

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top