அத்தியாயம் 17
கார்க் கண்ணாடி தட்டப்படும் சத்தத்தில் தான் தன்னிலை அடைந்தாள் நேத்ரா.
திரு விழாவில் தொலைந்த குழந்தையைப் போல விழித்துக் கொண்டு இருக்க.
“இறங்கு”
அவன் கூற தலை தானாக ஆடியது.
இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
பொம்மை போல் காரை விட்டு இறங்கியவள் அவனைப் பார்க்க அவனோ அவளது கையைப் பிடித்துக் கொண்டுச் சென்றான்.
வீட்டிற்குள் வந்ததும் தான் கையை விட்டான்.
அவனோ சட்டையின் முதல் இரு பட்டன்களையும் திறந்து விட்டு ஸோபாவில் அமர்ந்து காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தான்.
அவன் அமர்ந்த தோரணை கூட அவளுக்கு பயத்தையே வரவழைத்தது.
“என்னமோ கேக்கனும்ன்னு நினைக்குற போல கேளு”
அவன் கூறவே எச்சில் விழுங்கியவள்.
“எதுக்கு அப்பிடி பன்னினிங்க”
தொண்டைக் குழியிலிருந்து வார்த்தை வர மறுத்தது
“எப்பிடி”
புருவம் உயர்த்தினான்.
“அந்த அவ.. அவரோட கை”
“ப்ப்ச்ச் அதுவா”
நெற்றியை நீவி விட்டுக் கொண்டான்.
அவளோ அவனது பதிலை கேட்க ஆர்வமாக அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க அக்ஷரன் தீவிரமாக யோசித்துக் கொண்டே..
“சும்மா”
தோளை உலுக்கி கண்ணடிக்க ‘ஙே’ என விழித்தாள் அவள்.
“சும்மா ஒருத்தரோட கைய உடைக்கலாமா”
அவள் கேட்க
“அதான் ஒடச்சனே”
கூறி விட்டு எழுந்து நின்றான்.
“தப்பு தானே”
குரல் உள்ளே சென்றது.
அதற்கு உதட்டை பிதுக்கி விட்டு அறைக்குள் சென்றான்.
“இவங்க தெரிஞ்சா பன்றாங்க”
அவள் இவ்வாறு நினைத்துக் கொண்டு வந்த களைப்புக்கு ஸோபாவில் அமர்ந்தாள்.
ஒரு பத்து நிமிடங்கள் கழிய அறையில் இருந்து வெளியே வந்தான் அக்ஷரன் ஷோர்ட்ஸ் மட்டும் அணிந்திருந்தான்.
உடற்பயிற்சியினால் உரமேறிய திரண்ட மார்பும் தட்டையான வயிறும் என பார்ப்பதற்கு பட ஹீரோ போல் இருப்பவனைப் பார்க்காமல் தலையைக் குனித்துக் கொண்டாள் நேத்ரா.
அவன் சமயலறைக்குள் நுழைய
“எனக்கு பசிக்கல்ல”
அவள் இங்கிருந்தே குரல் கொடுத்தாள்.
அவன் எதுவும் பேசவில்லை
சிறிது நேரத்தில் இரண்டு பால் கிளாசுடன் வந்தவன் ஒன்றை அவளிடம் நீட்ட மறுக்காமல் பெற்றுக் கொண்டாள்.
அவனும் அமைதியாக அமர்ந்து பாலைக் குடிக்க இவளோ நொடிக்கொரு தரம் அவனை பார்வையால் தழுவியபடி பாலைக் குடித்தாள்.
“இப்போ எதுக்கு என்னைய பாக்குற”
அவன் கேட்க பார்க்க வந்தவள் தலையை குனித்துக் கொண்டாள்.
“இல்ல சும்மா”
“சும்மா பாக்குறதுக்கு என்னோட மூஞ்சில என்ன திருவிழா நடக்குதா”
அவன் புருவம் உயர்த்தி நக்கலாகக் கேட்டான்.
“ம்ஹூம்”
பால் அவளது இதழில் ஓரங்களில் பூசியிருக்க அதை நாவால் சுத்தப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தாள் நேத்ரா.
இவனோ அவளது இதழையும் நாவையுமே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் பிடறியை தடவி விட்டுக் கொண்டே எச்சில் விழுங்கினான்.
“நீங்க எதுக்கு அப்பிடி சொன்னிங்க”
“என்ன சொன்னேன்”
“இல்ல ரிசப்ஷன் வைக்குறன்னு எதுக்கு அவங்ககிட்ட சொல்லனும்”
“ரிசப்ஷன் வைக்குறதால”
அவன் கூற அவனை முறைக்க தைரியமின்றி அப்பாவியாகப் பார்த்தாள்.
“இல்ல ஶ்ரீஜாக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க”
நேத்ராக் கூற அவ்வளவு நேரமும் இருந்த இலகுத்தன்மை முகத்தில் தொலைந்து இறுக்கம் குடிக் கொண்டது.
“அவ நினைக்குறத பத்தி நா எதுக்கு கவலப்படனும்”
கூறியவன் எழுந்து சென்றான்.
“இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்பிடி கோவிச்சிக்கிட்டு போறாரு அவரோட காதலி தப்பா நினைப்பாங்கன்னு தானே சொன்னேன்”
அவள் பால் கிளாசுடன் விழித்தாள்.
அறைக்குள் வந்தவன் தலை முடியை அழுந்த கோதி இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து மேலே பார்த்து உதட்டைக் குவித்து ஊதினான்.
“உஃப்”
புருவத்தை பெருவிரலால் நீவி விட்டான்.
உணர்ச்சிகளினிடையே சிக்கித் தவிக்கும் போது தன்னைக் கட்டுப்படுத்த அவன் செய்யும் ஓர் செயலே இது..!!
*****
கதிரவன் கதிர்களினால் பாரினை பரமாறிக்க ஓடோடி வந்திருக்க கீச் கீச் என்ற குருவிகளின் ஓசையில் ரம்மியமாகவேத் திகழ்ந்தது அக்தாலை வேளை.
அகஷரன் டீவியின் முன்னால் அமர்ந்திருந்தான்.
அப்பொழுது தான் வாக்கிங் சென்று வந்துள்ளான் போலும் வியர்வைத் துளிகள் முகத்தில் முத்து முத்தாக பூத்திருக்க அவற்றை துவாலையால் துவட்டியவாறே டீவி ரிமோட்டினால் வல்யூமை ஏற்றினான்.
டீவியில் பட்டத்து யானைப் படத்தில் இருந்து பாட்டு ஓடியது.
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற தாமர அவ தான்
கதையில் கேக்குற தேவத அவ தான்
என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒரு முற திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒண்ணாக்கத் தானே
மறுபடி அவள கேட்டேனே
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
ராகு காலத்தில நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் mass’ah
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
Bp ஏறுது சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ…
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ…
ஹோ தில்லை நகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டுச் சேல
வாங்கித் தருவேன்
வெக்கப் பட்டு எனை தேடு
ஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல
நம்ம ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்குடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
Bp ஏறுது சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு… அழகியடா
கண்ண விட்டு… விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ…
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ…
ஹஹ… கிறுக்குபய புள்ள
அப்பாடல் வீட்டினையே அதிர வைக்க சமயல்கட்டில் காஃபி போட கப்பைக் கைக்கு எடுத்சவளுக்கோ நேற்று இரவு நடைப்பெற்ற நிகழ்வு அநாவசியமாக நினைவில் வந்து தொலைக்க காஃபி கப்பை இறுகப் பற்றி இதழ் கடித்தாள்.
பாலைக் குடித்து விட்டு அவன் ஃபோனில் மூழ்கிவிட இவள் அறைக்குள் சென்றாள் ஆடை மாற்றுவதற்காக.
சேலையை கலற்றியவள் அப்பொழுது தான் உணர்ந்தாள் கப்போர்டிலிருந்து சுடிதாரை எடுக்க மறந்ததை.
சேலையை மேலில் போட்டுக் கொண்டவள் சென்று சுடிதாரை எடுத்துக் கொண்டு திரும்பவும் கதவைத் திறந்து கொண்டு அக்ஷரன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அந்நேரம் பார்த்து அவள் மேலிருந்த சேலை தரையைத் தொட்டது.
இவளோ ரவிக்கையும் பாவடையுடன் அவனுக்கு காட்சி தந்தாள்.
சேலை தன்னை விட்ட நீங்கியதும் அதிர்ந்தவள்.
என்ன செய்வதென்றுத் தெரியவில்லை.
அதிர்ச்சியில் எச்சில் விழுங்கிக் கொண்டே அவனைப் பார்க்க அவனுக்கோ அப்படி எந்தவித பதட்டமும் இருக்கவில்லை போலும் நிதானமாக நடந்து வந்தவன் அவளைக் கடந்து சென்று கப்போர்டில் இருந்த தனது மடிக்கணிணியை எடுத்துக் கொண்டு சென்றான்.
கதவு வரை சென்றவன் தலையை மட்டும் திருப்பி அவளை மேலிருந்து கீழ் வரை நிதானமாகப் பார்க்க இவளுக்குத் தான் வயிற்றுக்குள் ஏதோ குறுகுறுத்தது.
“கதவ லோக் பன்னிட்டு ட்ரஸ் சேன்ஜ் பன்னு”
கூறி விட்டு அவன் சென்றான்.
இவளுக்குத் தான் வெட்கம் பிடுங்கித் தின்றது.
“ஐயோஓஓ”
தலையில் கை வைத்தவள் கட்டிலின் மேல் அமர்ந்தாள்.
அத்தையின் முன் கூட இப்படி அரைகுறை ஆடையுடன் இருந்ததில்லையே
“என்ன நெனச்சிருப்பாரு கடவுளே அவசரமா சாரிய எடுத்து போர்த்திருக்க வேண்டியது தானே அப்பிடியே நின்னுட்டனே.. கடவுளே”
எவ்வளவு பொலம்பினாலும் நடந்ததை மாற்ற முடியாதல்லவா??
அதன் பின் அவசர அவசரமாக ஆடையை மாற்றியவள் போர்வையை தரையில் போட்டு படுத்து விட்டாள்.
கண்களை இறுக மூடியவள் அவன் வந்ததுக்கான அரவம் கேட்டும் கண்களைத் திறக்கவே இல்லை.
அப்படியே கண்களை மூடிக் கொண்டவள் உறங்கியும் விட்டாள்.
காலை அவன் எழுவதற்கு முன்னராகவே எழுந்தும் விட்டாள்.
அவன் எழுந்து வாக்கிங் போகும் வரை பல்கணியை விட்டு வெளியே வரவே இல்லை.
இப்பொழுது கூட காஃபியை போட்டு விட்டாள் எப்படி அவனிடம் குடுப்பது எனத் தெரியாமல் தான் விழித்துக் கொண்டிருந்தாள்.
முதுகை துளைப்பது போல் உணர்வில் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
சமையலறை வாசலில் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு ஆளை துளையிடும் பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தான் அக்ஷரன்.
அதிரவில்லை ஆனாலும் அவனது பார்வையைத் தாங்க முடியாமல் தலையைக் குனித்துக் கொண்டாள்.
“காஃபி இப்போ கிடைக்குமா இல்ல ராத்திரி வரைக்கும் காத்திருக்கனுமா”
புருவம் உயர்த்தி நக்கலாக வினவ காஃபி கப்பை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
ஒரு மிடர் காஃபி அருந்தியவன் அவளை பார்த்து
“குட்”
தலையசைத்துக் கூறியவன் அவளை மேலிருந்து கீழ் வரைப் பார்த்து விட்டு திரும்பிப் போனான்.
ஒரு அடி எடுத்து வைத்தவன் நின்று.
“வெளில போகனும் கெட் ரெடி”
கூறி விட்டுச் சென்றான்.
இவளோ செந்தணலாக சிவந்து போன முகத்தை அதற்கு மேல் மறைக்க முடியாமல் முகத்தை மூடினாள்.
என்ன மாதிரியான உணர்வு இது..!!
புதிதாக இருந்தது..!!
இல்லை புதிதாக உணர்ந்தாள்..!!
அவன் சமைக்க வர இவள் விலகிச் சென்று பல்கணியில் இருந்தாள்.
பின் அவன் வந்து சாப்பிட அழைக்க என்றும் போல் இருவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
எதுவும் பேசிக்கொள்ளாமல்.
“ரெடியாகு”
கூறி விட்டு அவன் எழுந்து செல்ல தலையை ஆட்டியவள் அறைக்குள் சென்றாள் தயாராவதற்கு.
அவள் தயாராகி வர அவன் வரவேற்பறையில் காத்திருந்தாள்.
அவன் அவளைப் பார்க்க அவளும் அவனைப் பார்த்துக் கொண்டே துப்பட்டாவை சரி செய்தாள்.
“போலாம்”
தலையசைக்கவே அவனுடன் சேர்ந்து நடந்தாள் அவள்.
*******
கார் சென்று நின்ற இடத்தைப் பார்த்ததும் யோசனையில் முடிச்சிட்டது நேத்ராவின் புருவங்கள்.
திரும்பி அவனைப் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இறங்கு”
தலையசைத்துக் கூறி அவன் இறங்க அவளும் இறங்கினாள் அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு.
அது ஒரு மினி பங்களா.
கவலாளி இவனைப் பார்த்து புன்னகைக்க இவனும் தலையசைத்து புன்னகைத்தான்.
இவளோ “யாரோட வீடு இது”
என நினைத்துக் கொண்டு அவனைப் பார்க்க அவனோ உள்ளே நுழைந்தான்.
இவளும் அவனுக்குப் பின்னால் சென்றாள்.
“வாங்க வாங்க மிஸ்டர் அக்ஷரன்”
ஆர்ப்பாட்டமாக ஒரு குரல் வரவேற்றது.
குரல் வந்த திசையைப் பார்த்தாள்.
அங்கு வெள்ளை வேஷ்டி சட்டையில் அறுபது வயது கடந்த மூக்குக் கண்ணாடி அணிந்த ஒருவர் புன்னகைத்துக் கொண்டிருக்க அக்ஷரனும் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.
“ப்ரடீயூஸர் ஸேர கைல பிடிக்கவே முடியல ”
அவர் புன்னகைத்துக் கொண்டு அவனுடன் கை குலுக்க.
“புது படம் அதுக்கான வேலைல பிசியாகிட்டேன்”
“புது டைரக்டர்ன்னு கேள்விப்பட்டேன்”
“எஸ்.. புதியவங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கனும்ல”
அவன் கூற அவரும் தலையசைத்து விட்டு நேத்ராவைப் பார்க்க.
“நா சொன்னேன்ல”
அக்ஷரன் கூறினான்.
“ஆஹ்.. யாஹ்.. யாஹ் வணக்கம்மா”
நேத்ராவைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு கை கூப்ப அவளும் வணக்கம் வைத்தாள்.
“என்ன அக்ஷரன் நா யாருன்னு சொல்லல்ல போல”
அக்ஷரனிடம் கூறினார் அவர்.
அக்ஷரன் நேத்ராவின் பக்கம் திரும்பி.
“இவர் தான் டைரக்டர் தயாளன்”
நேத்ராவிடம் அறிமுகப்படுத்த அவள் தலையசைத்தாள்.
“ஷீ ஈஸ் மை வைஃப் நேத்ரா”
தயாளனிடமும் அறிமுகப்படுத்தினான் அவளை.
“ஓகே உட்காருங்க”
அங்கிருந்த ஸோபாவைக் கை காட்டி விட்டு அவர் அமர அக்ஷரனும் அமர்ந்தான் அவனுக்கு ஒரு அடி இடைவெளியில் அமர்ந்தாள் நேத்ரா.
“சரி என்கிட்ட அஸிஸ்டன்ட் டைரக்டரா என்னோட பையன் வேர்க் பன்றான் அதனால அவனுக்கு அஸிஸ்ட்டன்டா உங்க வைஃப் நேத்ரா இருக்கட்டும்”
தயாளன் கூற அக்ஷரன் தலையசைத்தான்.
“பட் அவ எல்லாம் கத்துக்கனும் இட்ஸ் மஸ்ட்”
உறுதியாக வெளி வந்தது அவன் குரல்.
“கண்டிப்பா அக்ஷரன்”
“அவ ஸ்டப் பை ஸ்டப்பா தான் எல்லாம் கத்துக்கனும்ங்குறதால தான் உங்ககிட்ட அஸிஸ்டன்ட்டா சேர்த்தினேன்”
அக்ஷரன் கூற தயாளனும் சரி எனக் கூறினார்.
நேத்ராவிற்குத் தான் என்ன நடக்கிறது இங்கே எனப் புரியவில்லை.
“வேணும்ன்னா அவங்க எழுதின கதை எதாச்சும் இருந்தா பார்க்கலாம்”
தயாளன் கூற அக்ஷரன் தலையசைத்தான் இன்னும் வேறு ஏதோ பேச இவளுக்குத் தான் அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை பேந்த பேந்த விழித்தாள்.
சிறிது நேரத்தில் தயாளனிடம் விடைப்பெற்றுக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.
நேத்ராவிற்குத் தான் தலை வெடிக்கும் போல் இருந்தது.
அவனாகக் கூறுவான் என அவனது முகத்தைப் பார்க்க அவன் கூறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை போல்.
கார்க்கதவைத் திறந்து விட இவள் அமைதியாக சென்றமர்ந்தாள் அவனும் வந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான்.
கார் சிறிது தூரம் செல்ல தாங்காமல் அவனது முகத்தைத் திரும்பிப் பார்த்தாள்.
“எதுக்கு அங்க போனோம்”
அவனிடம் கேட்டாள்.
“பரவல்லயே இவ்ளோ சீக்கிரம் கேக்கனும்ன்னு தோணிச்சே”
இதழ் வளைத்து அவன் நக்கலாகக் கூறினான்.
இவளோ எதுவும் பேசவில்லை “ஏன்” என்ற கேள்வியை முகத்தில் தாங்கி அவனைப் பார்த்தாள்.
“அவர் தான் டைரக்டர் தயாளன் அவரோட பையன் தர்ஷன் தான் அவரோட அஸிஸ்டன்ட் இனி நீ அவங்ககிட்ட தான் வேல பார்க்கனும்”
அவன் அமைதியாகக் கூற இவள் அதிர்ந்தாள்.
“என்ன நானா என்னால முடியாது”
ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவசரமாக மறுத்தாள் நேத்ரா.
அமைதியாக அவளைத் திரும்பி பார்த்தவன்.
“என்ன முடியாது”
புருவம் உயர்த்தினான்.
“அது.. என்னால ஒன்னுமே முடியாது”
குரல் உள்ளே சென்றது.
“யாரு சொன்னாங்க”
“யாரு சொல்லனும் எனக்கே தெரியுமே.. ஸ்கூல் போற காலத்துல கூட நா எந்த போட்டிலையும் கலந்துக்கிட்டது கிடையாது.. ஏன் எந்த பரீட்சைலயும் நல்ல மார்க் வாங்கினது கிடையாது.. நான் எந்த வேலைக்கும் லாயக்கில்ல”
விரக்தியாகக் கூறினாள் அவள்.
கண்கள் வேறு கலங்கியது.
“ஆஹான்.. நீயே உனக்கு சர்ட்பிகேட் குடுத்துக்கிட்ட போல அதுவும் சரி தான்.. ஆனா உன்னால முடியுமா முடியாதான்னு தெரிஞ்சிக்க நீ எத்தன தடவ முயற்சி பன்னி பாத்திருப்ப”
அவன் கேட்க அவள் அமைதியாகி விட்டாள்.
“நீ தண்டமா உட்கார்ந்து என் வீட்ல சாப்ட்றியா இல்ல நா சேர்த்து விட்ட வேலைக்கு சேர்ந்து மரியாதையோட வாழ்றியான்னு நீயே முடிவு பன்னு”
அவன் காரை ஓட்டிக் கொண்டு அவளிடம் கூற பட்டென தலை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
“தண்டச் சோறு சாப்ட்றேன்னு சொல்றிங்களா”
கோவமாகக் கேட்டாள்.
அவளது கோவத்தில் மின்னியது அவளது மூக்கு மட்டுமல்ல மூக்கில் மேல் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் மூக்குத்தியும் கூட.
அவளை அழுத்தமாக அவன் பார்க்க அவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் அவள் விடும் உஷ்ணமூச்சுக்காற்றே உணர்த்தியது அவள் கோவமாக உள்ளாள் என்று
அவனது இதழில் ஒரு நொடி மின்னி மறைந்தது ஓர் புன்னகை.
அவளது கோவத்தில் அவனுக்கு சிரிப்பு வந்ததோ என்னவோ??
அவன் அமைதியாகி விட இவள் தான் துப்பட்டா நுனியை திருகிக் கொண்டு வாய்க்குள்ளால் எதையோ முனகினாள்.
“அப்போ நா ஊருக்குப் போறேன்”
அவனிடம் கூறினாள்.
“ஏன் அங்க போய் வேல பார்க்க போறியா”
நக்கலுக்குக் குறைவில்லை அவனது குரலில்.
அமைதியாகி விட்டாள் அவள்.
உண்மை தானே அவள் தண்டமாகத் தானே இருக்கிறாள் இங்கும் சரி அங்கும் சரி.
பிறந்ததில் இருந்து இதோ இந்நொடி வரை அத்தை மாமா இப்பொழுது அக்ஷரனது தயவில் தானே வாழ்கிறாள்.
அவன் கூறுவதும் சரி தானே இன்னும் ஒரு வருடத்தில் அவனை விட்டு பிரிய வேண்டும் அதன் பிறகு தன் வாழ்க்கை கேள்விக்குறி தான்??
“ம்ம் சரி அவங்ககிட்ட வேலைக்கு போறேன்”
அவனிடம் கூற அவன் தலையசைத்தான்.
வீட்டிற்கு வந்ததும் கோவமாகத் தான் இருந்தாள்.
அவன் வழமை போல் சமைத்து விட்டு இவளை அழைக்க மறுத்தாள் சாப்பிடுவதற்கு
அவன் ஒரு பார்வைப் பார்க்க அதன் பிறகு மறுக்க முடியவில்லை அவளால்.
அன்றைய நாள் அப்படியே செல்ல மறுநாள்க் காலை சூரியனும் தனது பணிக்கு வரும் முன் அக்ஷரனது வீட்டின் அழைப்பு மணி அடித்தது
நேத்ரா தான் கண்ணைக் கசக்கிக் கொண்டு சென்று கதவைத் திறந்தாள்.
முன்னால் அவளது அத்தை தேவகியும் மாமா ஞானவேலும் தான் புன்னகை முகமாக நின்றுக் கொண்டிருந்தார்கள்
“அத்த மாமா”
கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது.
“என்ன ராசாத்தி உள்ள கூப்ட மாட்டேங்குற”
தேவகிக் கூற.
“உள்ள வாங்க வாங்க”
அவள் அவர்களை உள்ளே அழைத்தாள்.
அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர்.
“எங்கடா இன்னுமா அவன் எழும்பல்ல”
ஞானவேல் மீசையை முறுக்கிக் கொண்டேக் கேட்க.
“இல்ல இல்ல இருங்க மாமா நா போய் அவர எழுப்புறேன்”
அவசரமாக உள்ளே ஓடினாள்.
இடது கையை தலைக்கு கீழ் வைத்து வலது கையை வயிற்றில் வைத்து அவன் உறங்கியுள்ள விதம் நின்று ரசிக்கத் தோன்றும் ஆனாலும் இப்பொழுது நேரமில்லையே அவனை நெருங்கித் தோளைத் தட்டினாள்
“என்னங்க எழும்புங்க அத்த மாமா வந்திருக்காங்க”
அவள் தோளைத் தட்டி எழுப்ப கண்களை சுருக்கி திறந்தான்.
“அத்த மாமா வந்திருக்காங்க”
அவள் மீண்டும் கூற.
தூக்க கலக்கம் இன்னும் நீங்காததால் கண்களை அழுத்த துடைத்துக் கொண்டவன்.
“ம்ம்”
எனக் கூறிக் கொண்டே எழுந்தமர்ந்தான்.
இவளோ அவசரமாக கீழேப் போட்டிருந்த போர்வையை எடுத்து கட்டிலில் போட்டு விட்டு வெளியே ஓடினாள்.
இவனோ சிறு பிள்ளை போல் ஓடும் அவளைப் பார்த்துக் கொண்டே எழுந்து வெளியே வந்தான்.
“என்னடா இப்போவா எழும்புற”
தேவகி அவனது கன்னத்தை வருடிக் கொண்டே கேட்டார்.
ஞானவேலோ அவனை முறைத்துத் தள்ளினார்.
“ஆமாம்மா எப்போ வந்திங்க”
தாயை ஸோபாவில் அமர வைத்தவன் அவரது மடியில் படுத்துக் கொண்டு அவரது கையை எடுத்து தனது தலை முடிக்குள் விட அவரோ புன்னகைத்துக் கொண்டே அவனது தலை முடியை கோதிக் கொடுத்துக் கொண்டே அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறினார்.
“ஆமாம்ப்பா காலங்காத்தாலையே வந்துட்டோம் எப்பிடி இருக்க ராசாத்தி”
மகனிடம் பதில் கூறியவர் மருமகளிடம் கேள்வி கேட்டார்.
அவளோ முகம்கொள்ளா புன்னகையுடன்.
“நா ரொம்ப நல்லா இருக்கேன் அத்த நீங்களும் மாமாவும் எப்பிடி இருக்கிங்க”
“எங்களுக்கென்ன கண்ணு ரொம்ப நல்லா இருக்கோம் இவன் உன்ன நல்லா பார்த்துக்குறான்ல”
ஞானவேல் தான் மகனை முறைத்துக் கொண்டு கேட்டார்.
அக்ஷரன் விழியைத் திறந்து அவளைப் பார்க்க அவளும் அவனைப் பார்த்துக் கொண்டே.
“ஆமா மாமா நல்லா பார்த்துக்குறாரு இருங்க நா போய் காஃபி போட்டுட்டு வாரேன்”
எனக் கூறி சமயலறைக்குள் ஓடினாள்.
தேவகிக்கோ கண்கள் கலங்கியது ஆனந்தமாக தனது மகனும் மருமகளும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணி.
ஞானவேலும் அக்ஷரனும் பேசிக் கொள்ளவில்லை.
இருவருக்கும் வெவ்வேறு கோவங்கள் ஆனால் இரண்டுமே நேத்ராவை சுற்றியே.
நேத்ரா ஐந்து நிமிடங்களில் நால்வருக்கும் சேர்த்து காஃபி போட்டுக் கொண்டு வந்து மூவரிடம் கொடுத்து விட்டு அவளும் அருந்தினாள்.
தேவகி காஃபி அருந்திவிட்டு தனது பைக்குள் இருந்த ஒரு டப்பாவை எடுத்தார்.
“கண்ணு உனக்கு ரொம்ப புடிச்ச ஒரு விஷயம் கொண்டு வந்திருக்கேன் என்னன்னு சொல்லு பாக்கலாம்”
தேவகிக் கூற யோசனையாக அவரைப் பார்த்தாள் நேத்ரா.
“என்ன அத்த”
அவள் அவரிடமே கேட்க தேவகி டப்பாவைத் திறந்து அவளிடம் நீ்ட்டினார்.
அதைப் பார்த்தவளது கண்களோ அகல விரிந்தது.
“ஐய் மருதாணி”
துள்ளிக் குதிக்காதது மாத்திரம் தான் குறை அவ்வளவு மகிழ்ச்சி அவளது குரலிலும் சரி முகத்திலும் சரி.
அத்தையிடம் இருந்து வாங்கியவள் மூக்கின் அருகே கொண்டு போய் அதை நுகர்ந்து நுரையீரலுக்கு அதன் நறுமணத்தை அனுப்பினாள் போலும்.
“ரொம்ப நன்றி அத்த எனக்கே உங்ககிட்ட கேட்க மறந்துடுச்சு நீங்க யாபகத்தோட கொண்டு வந்து தந்திங்க ரொம்ப நன்றி”
அதை நுகர்ந்து கொண்டேக் கூற தேவகியோ நேத்ராவைப் பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பி அக்ஷரனைப் பார்த்தார் அர்த்தமாக.
அவனோ காஃபியை நிதானமாக அருந்திக் கொண்டே நேத்ராவை விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
******
தொடரும்..❤
💜அஷு💜