அவர்களை அவ்வாறு கண்ட அடுத்த கணமே சட்டென தலை திருப்பிக் கொண்ட அவந்திகாவிற்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது…
அவள் கொஞ்ச நேரமே என்றாலும் தங்களைப் பார்த்ததும் அவளது கண்கள் கலங்கி இருப்பதை நொடியில் கண்டு கொண்டு இருந்தனர் ரேவந்தும் அதிரூபனுமே..
அதில் ரேவந்த்திற்கு குதூகலமாகிவிட்டது.. வேண்டுமென்றே அதிரூபனை தன் கைவளவில் வைத்துக் கொண்டு ,
“என்ன ரூப்.. இவ டிஸ்டர்ப் பண்றாளேனு உனக்கு எரிச்சலா இருக்கா ..??அதான் நம்ம ரெண்டு பேரோட சந்தோஷத்துக்கு எந்த களங்கமும் வந்திடக் கூடாதுங்கறதுக்காக தானே இவளை நீ கல்யாணமே பண்ணிக்கிட்ட ..
இவ இங்க இருந்தா என்ன..? இல்லாம இருந்தா என்ன.??.. நாம நம்ம வேலையை பார்ப்போம் ..” என பேசியவாறு ரேவந்த் அதிரூபனை நெருங்கிட..
ஆனால் அதிரூபனால் ஒன்ற முடியவில்லை ரேவந்த்துடன்…
“ரேவந்த் போதும்…” என்றவனது பேச்சை கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாது இன்னும் அவனை நெருங்க முயன்றவனது தோள்களைப் பிடித்து தள்ளி நிறுத்திய அதிரூபன் வாசலில் தங்களுக்கு முதுகு காட்டி நின்றிருப்பவளை ஒரு கணம் பார்த்துவிட்டு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன் ரேவந்த்தை அழுத்தமாக பார்த்து ,
“இப்ப இது வேண்டாம் ரேவந்த்…” என அவன் முகத்திற்கு நேராக கூறியதும் முகம் செத்துவிட்டது ரேவந்த்திற்கு …
பல்லை கடித்த படி அதிரூபனை பார்த்தவன் ,
“புரிஞ்சுதான் பேசுறியா ரூபன்..?? என்ன கல்யாணம் பண்ணதும் பொண்டாட்டி பக்கம் சாய்ந்துவிட்டாயா???” என நக்கலாக கேட்டதும் தனது தலையை அழுந்த கோதிக்கொண்ட ரூபன்,
” அப்படிலாம் எதுவுமில்லை.. உன் மேல இருக்கிற எதுவும் எனக்கு குறையலை… ஆனா இது இப்ப வேண்டாம்னு தோணுது ..” என்றதும் அதற்கு மேல் அங்கு நின்று அசிங்கப்பட அவனது தன்மானம் இடம் தரவில்லை ..
அதிரூபனை முறைத்து விட்டு சட்டென அங்கிருந்து சென்று விட்டான் ரேவந்த் ..
அவந்திகாவை தாண்டி செல்லும் கணம் நின்று அவளைப் பார்த்தவன்,
” வேணும்னே எங்க சந்தோஷத்தை கெடுக்கிறல..?? ஒரு நாள் உனக்கு இருக்குடி..” என அவளை எச்சரிக்கவும் தவறவில்லை ..
அவந்திகாவிற்கு தன் நிலையை எண்ணி கோபமாக வந்தாலும் கொஞ்சமும் அசராது திடமாகவே அங்க நின்று இருந்தாள்…
அதிரூபன் மெல்ல அடி எடுத்து அவனை நோக்கி வந்தவன்,
” அது.. நீ நினைக்கிற மாதிரி..” என ஏதோ பேச வந்தவனை சடாரென்று தலை திருப்பி பார்த்த அவந்திகா ,
“சோ நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் செலிப்ரேட் பண்றதுக்கு நான் ஊறுகாயா வந்து நிக்கிறேன்.. கரெக்ட் தானே ..??” என தலை சாய்த்து கேட்டதும் அதிரூபனுக்கு ஐயோடா என்றானது …
“அப்படி இல்லா அவந்திகா ..” என தன் புற விளக்கத்தை அவன் கூற முயல ..ஆனால் அவந்திகா விடவில்லை …
“போதும்.. என்னை பார்த்தா உனக்கும் அவனுக்கும் கேனச்சி மாதிரி தெரியுதா ..?? உங்க ரெண்டு பேரையும் விட மாட்டேன்..!” என ஆவேசமாக உரைத்தவளை அதிர்ந்து போய் பார்த்த அதிரூபன் ,
“ஏய் நாங்க சும்மா பேசிகிட்டு தான் இருந்தோம் ..சடனா …”
“பேசிக்கிட்டே இருக்கும்போதே சடனா அப்படியே ரெண்டு பேருக்கும் பத்திகிச்சா என்ன..??” என எள்ளலாக கேட்டவள் சட்டென அவன் முன்பு வந்து நின்று,
” உங்ககிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு சத்தியம் கேட்டிருந்தேன் ஞாபகம் இருக்கா ரூபன்..??” என்றதும் அதிரூபனுக்கு எச்சரிக்கை மணி அடித்தது..
மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு தலை சாய்த்து அவனைப் பார்த்த அவந்திகா ,
“நான் கேட்டதுக்காக சத்தியம் பண்ணி தந்தீங்களே…இப்ப எனக்கு என்ன வேணும்னு நான் சொல்றேன் ..” என பேசியவாறு அடிமேல் அடி எடுத்து வைத்து அதிரூபனை சுற்றி நடந்து வந்தவள் அவனது முகத்திற்கு நேரே அழுத்தமாக பார்த்து,
” இனி உங்க வாழ்க்கையில ரேவந்த் கிடையாது அதிரூபன்..” என்றதும் அவளது கூற்றில் அதிரூபனின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன …
அதை உள்ளுக்குள் ரசித்தவள்,
” என் வாழ்க்கையை எப்படி வாழவே விடாம இரண்டு பேரும் சதி பண்ணிங்களோ அதே மாதிரி உங்க ரெண்டு பேரையும் என்னிக்கும் நான் நிம்மதியாக இருக்க விட மாட்டேன்.. உங்க ரெண்டு பேர் சந்தோஷத்துக்காக தானே என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ..இனி நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சந்தோஷமாக இருக்க கூடாது.. அதையும் மீறி நீங்க இப்படித்தான் இருப்பீங்கன்னு என்னை பிளாக்மெயில் பண்ணீங்கன்னா ஒன்னும் பண்ண மாட்டேன்..” என நக்கலாக அவனைப் பார்த்து சிரித்தவள் மெல்ல பின்னோக்கி நகர்ந்தவாறு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அதிரூபனை தைரியமாக எதிர் கொண்ட அவந்திகா ,
“நான் சூசைட் அட்டென்ட் பண்ணுவேன் அதிரூபன் ..” என நிதானமாக அவனது தலையில் இடியே இறக்கி இருந்தாள் அவந்திகா…
“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? சூசைட் பண்ணா யாருக்கு நஷ்டம் உனக்கு தானே நஷ்டம்… புத்திசாலித்தனமா நடந்துப்பேனு பார்த்தா முட்டாள் மாதிரி நடந்துக்கிற??” என அதிரூபன் என்னதான் கோபம் போல அவளிடம் எகிறினாலும் அவள் தற்கொலை என்றதும் உள்ளுக்குள் சற்று பதறத்தான் செய்தான்…
அவனை அலட்சியமாக பார்த்த அவந்திகா,
” யார் நான் புத்திசாலித்தனமா நடந்துக்கலையா..??? இப்பதான் புத்திசாலித்தனமாவே நடந்துக்கிறேன் அதி குட்டி… இந்த நிமிஷம் நான் சூசைட் பண்ணிக்கிட்டா அந்த நியூஸ் வெளியே வரும் ..இதனால யாருக்கு நஷ்டம் ..?? உங்களுடைய இமேஜ் எல்லாமே டோட்டலா காலி ஆயிடும்.. அதோட உங்க அப்பா அதியமான் இந்த விஷயம் தெரிஞ்சா ஏன் எதுக்குன்னு உங்கள கேள்வி மேல கேள்வி கேட்டு குடைஞ்சி எடுத்துடுவாரு..
என்கிட்டயும் என்ன ஏதுன்னு கேட்பாரு அப்ப நான் கொஞ்சமும் பயப்படாம உங்களையும் என்னோட சக்காளத்தனையும் சத்தம் இல்லாமல் போட்டு கொடுத்திடுவேன்..!” என்ற கணம் அதிரூபனின் இதயம் நின்று துடித்தது
…
வேகமாக அவள் முன்பு வந்து நின்று ,
“என்ன பேசுறேன்னு யோசிச்சு தான் பேசுறியா ..?? இஷ்டத்துக்கு வார்த்தை விடாதே அவந்திகா ..” என அவளை எச்சரிக்க முயன்றிட.. ஆனால் பெண்ணவளோ கைகளை கோர்த்து தலை சாய்த்து அவனைப் பார்த்தவள்,
” நான் எல்லாமே யோசிச்சு தான் பண்றேன் அதிரூபன்.. இத்தனை நாளா நான் தானே உங்க கையில கிடைச்ச பொம்மைனு நினைச்சுக்கிட்டீங்க..
இனி என்னோட ட்ரங்க் கார்டே நீங்க தான் அதி குட்டி… உங்களை வச்சு அந்த ரேவந்த்தை என்னலாம் பண்ண போறேன் மட்டும் பாருங்க..” என கண்கள் மின்ன பற்களை கடித்துக்கொண்டு வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அடிக்குரலில் கூறியவளைக் கண்டு அதிரூபன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டிருந்தான்..
அவள் இது போல் ஒரு திட்டத்தில் இருப்பாள் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவன் ..
தன்னிடம் விவாகரத்து கேட்பாள்.. இல்லையா பெரும் தொகையைக் கேட்பாள்.. வெளிநாடு எங்கேனும் செல்ல வேண்டும் என்பாள் என்று தான் எண்ணி இருந்தான்..
மிஞ்சி மிஞ்சிப் போனால் ரேவந்த்தையும் தன்னையும் வைத்து திட்டுவாள் ..அழுவாள் என எதிர்பார்த்திருக்க ஆனால் அவனையே ஆச்சரியப்படும் வகையில் திட்டம் தீட்டியதோடு மட்டுமல்லாமல் அவனையே பகடைக்காயாய் வைத்து விளையாட போவதாக கூறியதைக் கேட்டதும் வாழ்க்கையில் முதல் முறை பயத்தை அப்பட்டமாக உணர்ந்தான் அதிரூபன்…
அவனை அவ்வாறு உணர வைத்து இருந்தாள் அவந்திகா…
படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏 ❤️ ❤️