அத்தியாயம் 30

அன்றில் இருந்து ரேவந்த் தினமும் அதிரூபனுக்கு காபியை கலந்து கொடுக்க ஆரம்பித்தான்..

 

ஏனோ அதை குடிக்க குடிக்க அதிரூபனுக்கு உடலில் ஏதோ ஒரு மாற்றம் வந்தது..

 

ரேவந்த் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல அத்தனை மென்மையான குரலில் அதிரூபனிடம் ஏதேதோ பேசிக்கொண்டே இருப்பான்..

ஏனோ அந்த நேரம் ரேவந்த் கூறுவது அனைத்தும் சரி என்று தோன்றிடும் அதிரூபனுக்கு 

 

தன்னுடைய கைப்பாவையாக ஆடும் அதிரூபனை கண்டு மர்மச் சிரிப்பு சிரித்துக் கொள்வான் ரேவந்த் ..

இதுதான் சரியான சந்தர்ப்பம் என எதிர்பார்த்து இருந்த ரேவந்த் தனது  நேரத்தை வீணாக்காது தன்னை அவமானப்படுத்திய அவந்திக்காவிற்கு தண்டனை அளிக்க வேண்டும் என முடிவு செய்து இருந்தான்…

 

 அதன்படி அன்று வீட்டிற்கு கிளம்பும் அவந்திகாவை அவளது அறைக்கே சென்று பார்த்தான் ரேவந்த்…

 

அவனைக் கண்டதும் அவந்திகா பெரியதாய் அலட்டிக் கொள்ளவில்லை… அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள்…

 

‘இப்ப எதுக்கு நீ வர..?’ என்பது போல அவனை  பார்த்து வைக்க…அவனோ நக்கலாக பார்த்துவாறு உள்ளே வந்தவன்,

 “என்ன அவந்திகா என்னோட அதிரூபனை   வெச்சு என்னென்னவோ ஆட்டம் போட்ட ..?? இப்ப என்னடானா பெட்டி பாம்பா அடங்கிட்டு இருக்கே??”  என ஒற்றைய புருவம் உயர்த்தி கேட்கவும் ஏனோ அவந்திகாவிற்கு அவனிடம் பேசுவதற்கு கூட விருப்பமில்லாததால் பதில் ஏதும் கூடாது தலையை திருப்பிக் கொண்டாள் ..

 

“ப்ச்…என்ன அவந்திகா நான் பேசுனதும் மூஞ்சியை திருப்பிக்கிற??.. இங்க பாரு நீ எவ்வளவு ஆடுனாலும் ரூபனுக்கு நான் தான் முக்கியம்..

 நீ இல்ல யார் வந்தாலும் ரூபனுக்கு நான் மட்டும் தான் எப்பவும் முக்கியம்..அது மட்டும் தான் நிஜம்…”என கூறியதும் சட்டென அவனை தலை திருப்பி விழிகளில் அனல் கக்க பார்த்து வைத்தவளை கண்டதும்,

 

“என்னம்மா விட்டா பார்வையாலே என்னை எரிச்சிடுவே போல இருக்கே…!

 

 ம்ஹூம் …உன்னோட அதிகுட்டிக்கு என் மேல எவ்வளவு மயக்கம் காதல் பாசம் அக்கறை இருக்குனு  நான் உனக்கு ப்ரூஃப் பண்ண வேணாமா..??”  என கேட்டதும் சடாரென்று அவனை அதிர்ந்து பார்த்த அவந்திகாவின் மூளையில் ஏதோ ஒரு அபாய மணி எச்சரித்தது…

 

 முகம் இறுக ரேவந்த்தை உறுத்தி பார்த்திட ..அவனும் இதழ் வளைத்து சிரித்து,

 

” ரூபன் என்மேல் எவ்வளவு லவ் வெச்சி இருக்கான்னு  இன்னிக்கு நான்  உனக்கு லைவ்வாவே காட்டுறேன்..” என சவால் விட்டவன்  ஒரு காடை எடுத்து மேசை மீது வைத்து ஒற்றை விரலால் அதை அழுத்தி அவந்திகாவை நோக்கி நகர்த்தியவன் ,

 

“இன்னிக்கு ஈவினிங் இந்த அட்ரஸ்க்கு வா..செம பார்ட்டி நடக்கும்…உன் அதிகுட்டி எப்படி நான் சொல்றதுக்கு எல்லாம் ஆடுறான்னு நீயே பார்ப்பே…”என்று விட்டு ஒற்றை கண் அவளை பார்த்து அடித்து விட்டு அறையில் இருந்து  சென்று விட்டான்…

 

 ஏனோ அவனது பேச்சும் சிரிப்பும் பார்க்கப்  பார்க்க அவந்திகாவிற்கு பற்றி கொண்டு வந்தது..

 

 இப்போது அந்த ரேவந்த்தின் தலையை பிடித்து ஒரே திருக்கு திருகி தூக்கி எறிந்து விடலாமா எனக் கோபம் எழுந்தது அவந்திகாவிற்கு …

 

ஆனால் தன்னிடம் இந்த அளவு நம்பிக்கையாக அவன் பேசுகிறான் என்றால் மாலை ஏதோ பெரிய விடயம் நடக்கப் போகிறது என்பதை புரிந்து கொண்டவள் மேசை மீது அவன்  வைத்து சென்ற காடை எடுத்துப் பார்த்தாள்..

 

 அதில் ஏதோ பாரின விலாசம் இருக்கவும் விழிகள் சுருக்கி  யோசனையுடனே வீட்டிற்கு கிளம்பி சென்றாள்…

வீட்டிற்கு வந்த பின்னரும் அவந்திகாவிற்கு ஒருவித எரிச்சலாகவும் அழுத்தமாகவும் இருந்தது…

 

 ரேவந்த் இந்த அளவு ரூபனை பற்றி கூறுகிறான் என்றால ரூபன் அந்தளவு இறங்கி சென்று விட்டானா..?.. இருக்காது ரூபன் நிச்சயம் அந்த பாருக்கு செல்ல மாட்டான்.. அங்கு நடக்கும் பார்ட்டியில் கலந்து கொள்ள மாட்டான் என மனதின் ஓரம் இருந்த நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து ரேவந்த் வர சொல்லி இருந்த பாருக்கு கிளம்பி சென்றாள்…

அதுவரைக்குமே அதிரூபன் வீட்டிற்கு வரவில்லை…அது வேறு அவந்திகாவிற்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது…

 

பாருக்கு சென்றதும் வெளியே இருந்து பார்ப்பதற்கு அத்தனை ஆடம்பரமாக இருந்தது அந்த பார் ..உள்ளே சென்றவள் கண்டதும் முகத்தை சுழித்து விட்டாள்…

 

 இளம் வயது பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என அனைவரும் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தனர் …

 

அதுவும் எந்தவித பாரபட்சமும் இன்றி ஒருவரை ஒருவர் தழுவி என என்னென்னவோ செய்து கொண்டிருக்க பார்த்ததும் அருவருப்பாக இருந்தது அவந்திகாவிற்கு..

 

 அதே சமயம் உள்ளுக்குள் பயமும் மூண்டது… அவள் இது போன்ற இடத்திற்கு வந்தது கிடையாதே…

 

 கூட்டத்தில் மாட்டிக் கொள்ளாது ஓரமாக நின்று கொண்டு அனைவரையும் பார்த்து பார்த்து முகத்தை சுழித்தவள்,

 

‘ இந்த கன்றாவியை பார்க்க தான் இங்க வர சொன்னானா சனியன் புடிச்சவன்..!’  என முணுமுணுத்து கொண்டிருந்தவளது விழிகள் இரண்டும் ஓர் இடத்தில் நிலை குத்தி நின்றது …

 

அங்கு ரேவந்த் உடன் அதிரூபனும் வந்திருப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானாள்…

 

அதிரூபன் வரமாட்டான் என நம்பி இருந்தவழது நம்பிக்கை சுக்கு நூறாய் உடைந்து போனது..

 

 ரேவந்தும் அந்த கூட்டத்தில் அவந்திகாவை தேடியவன் அவள் ஓரமாய் நிற்பதை பார்த்ததும் எள்ளலாக சிரித்து விட்டு ரூபனுடன் மிகவும் நெருக்கமாக நின்று அவனுடன் தடனம் ஆட ஆரம்பித்தான் …

அவந்திகாவால் அவள் கண்களால் பார்ப்பதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை ..அதற்காக நம்பாதும் இருக்க முடியவும் இல்லை..

 

 அதிரூபனோ ஒருவித மயக்கத்தில் இருப்பது போல இருந்தான்… ரேவந்த் அவனை தன் இஷ்டத்திற்கு ஆட்டி வைத்துக் கொண்டு இருந்தான்..

 

 ஏனோ அதை காணக்காண அவந்திகா கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து போனாள்…

 

ஆனால் அதையும் மீறி கோபம் வீறு கொண்டு எழுந்தது.. கண்கள் சிவக்க தன்னை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் அந்த ஆண்கள் இருவரையும் வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

 

அப்போது தான் அதிரூபனை சற்று உற்று நோக்கியவளுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.. அவன் இயல்பாக இல்லை என்பதை கண்டு கொண்டவளுக்கு ஏதோ தவறு என மனம் உணர்த்திட.. அச்சமயம் ரேவந்த் ரூபனை அங்கிருந்து தனியே அழைத்துக் கொண்டு எங்கேயோ போனான்…

 

 ஒரு வளைவில் செல்லும் போது தங்களையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவை ஒற்றை விரல் நீட்டி வாவென விரல் அசைத்து விட்டு அதிரூபனின் இடையை  பிடித்துக் கொண்டு திரும்பி விட.. அவந்திகா அனைவரையும் விளக்கிக் கொண்டு ரேவந்த்தின் கட்டளைக்கு கட்டுப்பட்டது போல அவர்களை பின் தொடர்ந்து சென்றாள் …

செல்லும் வழி எங்கும் ரேவந்த் அதிரூபனை உரசிக்கொண்டும் கைகளைப் பிடித்துக் கொண்டும் அவனிடம் காதோரம் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டும் அழைத்துக் கொண்டு சென்றான்…

 அதைக் கண்ணார பார்த்த அவந்திக்காவிற்கு உள்ளுக்குள் திக் திக் என ஒரு பயம் சூழ்ந்து கொள்ள.. உடலில் ஒரு வித நடுக்கம் ஒட்டிக்கொண்டது…

 

 தனது கைப்பையை இறுகப்பற்றிக் கொண்டு அவர்களையே பின் தொடர்ந்து சென்றிட ..அப்போது வழக்கமாய் இங்கே வரும் சமயம் அவர்கள் இருவரும் உபயோகிக்கும் அந்த அறை அங்கு தான் இருந்தது..

 அந்த அறைக்கு முன்பு சென்றதும் ரேவந்த் சற்றும் தாமதிக்காது அந்த அறை கதவை நன்றாக திறந்து வைத்து விட்டு தலை திருப்பி அவந்திகாவை பார்த்துக் கொண்டே அதிரூபனின் சட்டை காலரை பிடித்து உள்ளே இழுத்துச் சென்று விட்டான்..

 

 அவ்வளவு தான் அவந்திகாவின் மனமும் உள்ளமும் பரபரப்பாகி விட.. வேகமாக  அந்த அறையை நெருங்கி உள்ளே எட்டி பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்…ரேவந்த் தன் சட்டையை கழட்டி விட்டு அதிரூபனை நெருங்குவதை பார்த்து‌‌.…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top