அத்தியாயம் 33

 

 

 

 

 

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அத்தியாத்தையும் வித்தியாசமாக தானே வைத்திருக்கும்!…

 

அது போல தான் இருந்தது நறுமுகை மற்றும் விக்ரமின் வாழ்க்கையும்…

 

பெண்ணவளின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்திருந்தது அவளது கருத்தரிப்பு ரிப்போர்ட்…

 

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அத்தனை கவனமாக இருந்தாளே!…

பாதத்தை எடுத்து தரையில் வைத்தாலே பார்த்து பார்த்து நடந்து செல்வாளே!..

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மெனக்கெட்டு நடந்து கொண்டாளே!…

 

சாதாரணமாக செய்யும் விஷயங்களை கூட மிக மிக கவனமாக செய்து வந்தாளே!…

இப்படி பார்த்து பார்த்து இருந்து விட்டு கடைசியில் அனைத்தும் வீணாகி விட்டதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…

 

மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்து முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என மருத்துவர் கூறியதுமே அவள் ஓய்ந்து போய்விட்டாள்…

 

மீண்டும் அதே வலி மிகுந்த ஊசிகள் …முட்டையை வெளியே எடுப்பது என ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கும் போது அவளது விழிகளில் இருந்து கண்ணீர் சரசரவென கீழ் இறங்கியது …

 

 

பெரும்பாலானோருக்கு சோதனைக் குழாய் குழந்தை முயற்சி செய்யும் போது முதல் முறை தோல்வியில் தான் முடியும் ..…

 

அதை கடந்து தான் குழந்தையை அவர்களும் பெற்றிருப்பார்கள் ..அந்த முதல் முறை தோல்வியை ஜீரணித்து கொள்ளத்தான் மன தைரியம் மிகவும் வேண்டும்… 

 

நறுமுகை தைரியமான பெண் தான்..! ஆனால் எப்போது அவளுக்கு பாதி கர்ப்பப்பை என அறிந்தாளோ அப்போதே அவளது ஒட்டுமொத்த தைரியமும் எங்கேயோ ஓடி ஒளிந்து விட்டது …

 

இப்போது அவளுக்கு கிடைத்த முதல் தோல்வியை ஏதோ அவள் வாழ்வே அந்த ஒற்றை காகிதத்தில் முடிந்து விட்டது போல கதறி கதறி அழுதாள்..

 

இவள் இப்படி இருந்தாள் ‌என்றால் விக்ரமின் நிலைமையை சொல்லில் அடக்க முடியாது.. 

 

தன் மனைவி கஷ்டப்பட்டாளே அதற்காகவாவது ஆண்டவன் அவளுக்கு கருணை காட்டி இருக்கலாமே என அவனது மனம் வெம்பியது…

 

மீண்டும் அவளது வயிற்றில் ஊசி போட வேண்டும் என எண்ணும் போதே அவனது மென்மையான விரல்கள் நடுக்கம் கொண்டது …

 

அவன் கரும்பலகையில் எழுதும் அந்தச் சுண்ணாம்பு துண்டின் கணத்தை விட இந்த 13 நாட்களாக அவன் கரத்தில் பிடித்த ஊசியின் கணம் மிகவும் அதிகம் …

 

அந்த கணத்தை தூக்கிட அவன் கரங்கள் படும் பாடு அவன் மட்டுமே அறிவான்..! 

 

அவர்கள் தான் அப்படி என்றால் இரு வீட்டு பெரியவர்களுக்கும் மிகவும் வேதனையாகி விட்டது விஷயம் கேள்விப்பட்டதும்…

 

அத்தோடு சுகன்யாவிற்கு பெரும் பயம் மனதை சூழ ஆரம்பித்தது…

மகனது வாழ்வு இத்தோடு முடிந்து விடுமோ..?  தன் மகனுக்கு என்று வாரிசு உண்டாகாமல் போய்விடுமோ?.. என்கிற பெரும் அச்சம் அவரை பயமுறுத்த செய்தது …

 

தன் கணவரிடம் சொல்லி சொல்லி பாவம் அவரும் சோர்ந்து போய்விட்டார்.. தேசிங்கன் கூட மகன் மருமகளை எண்ணி மிகவும் வருத்தமாக இருந்தது…

அதனாலே தன் மனைவியிடம் கூட அவர் ,

 

“நீ எதுவும் கேட்டு வைக்காத சுகன்… பாவம் அவங்களே ரொம்ப கஷ்டத்துல இருப்பாங்க.. நாமளும் ஏதும் பேசி அவங்களை வேதனைப்படுத்த வேண்டாம்..”  என்றதும் தண்ணீருடன் தன் கணவரை நிமிர்ந்து பார்த்த சுகன்யா,

 

” எப்படிங்க விட முடியும்..??  என் பையனுக்கு குழந்தையே இல்லாம போயிடுமோனு பயமா இருக்குங்க ..”என்றதும் தேசிங்கனுக்கு  பதில் கூற முடியவில்லை…

 

அனைத்து தாய்மார்களுக்கும் இருக்கும் பொதுவான ஆசை தானே அதில் அவரையும் குறை கூறிட முடியாதே …!

 

பெருமூச்சு விட்டவர்,

 

“ டாக்டர் தான் ரெண்டு மாசம் கழிச்சு திரும்பவும் முதல்ல இருந்து ட்ரை பண்ணலாம்னு சொல்லி இருக்காங்களே பார்ப்போம் ..கண்டிப்பா எல்லாம் சரியாகும் …”

 

“என்னவோ சொல்றீங்க… ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. ஆசையா பெத்த ஒரே பையன் அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும் குழந்தை குட்டி குடும்பமா சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் நினைச்சேன்..

 

ஆனா இப்படி ஒரு குழந்தைக்கே அவன் இவ்வளவு கஷ்டப்படுறானே… பார்த்தீங்களா அவன் எப்படி இருக்கான்னு..??

சரியா ஷேவ் கூட எடுக்கிறது இல்ல ..கண்ணெல்லாம் உள்ள போயிடுச்சு.. என் பையனுக்கு தப்பான ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துட்டேனோ……”என மேற்கொண்டு பேச வரும் முன் தேசிங்கன் அவசரமாய்,

 

” சுகன்யாஆஆஆ…” என கத்தியை விட்டிருந்தார்..

 

சுகன்யாவும்,

 

” என்னால முடியல..”  என முகத்தை மூடி அழுதவரை பெருமூச்சுடன் பார்த்தார் தேசிங்கன் …

 

இங்கு இவர்கள் அவர்களது மகனை எண்ணி வேதனைப்படுவது போல நறுமுகையின் வீட்டில் அவளை எண்ணி வேதனைப்பட்டனர் …

 

சுரதை நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்..

 

” பத்திரமா தானே நான் இருந்தேன்.. பார்த்து பார்த்து அவளுக்காக சாப்பிட்டேனே.. என்ன தப்பு பண்ணேனோ அவளுக்கு ஆண்டவன் இப்படி ஒரு குறைய வச்சுட்டானே… கடவுளே…!!.. ஏன் என் பிள்ளையை சோதிக்கிற..??? அவளுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காம எல்லா கஷ்டத்தையும் எனக்கு கொடு.. எப்படியாவது என் பொண்ணு வயத்துல ஒரு குழந்தையை உண்டாக்கு..”  என கதறிய மனையாளை கண்கள் கலங்க பார்த்தார் வளவன்..

அவர்களுக்கும் நறுமுகை ஒற்றை மகள் தானே ..!

 

மனையாளின் தோளில் கை வைத்த சுரதை,

 

” நீயே அழுதா எப்படி சுரதை… டாக்டர் தான் சொல்லி இருக்காங்கல ஃபர்ஸ்ட் டைம்ங்கிறதால நிறைய பேருக்கு இப்படி தான் ஆகும்னு.. சும்மா அதையே நினைச்சு வருத்த பட்டுட்டு இருக்காத..”  என கரகரத்த குரலில் கூறிய கணவனை தேம்பலுடன் பார்த்த சுரதை,

 

“என்னால முடியலையே … என் பொண்ணு அங்க கஷ்டப்பட்டு இருக்காளே …

அவளால பாவம்  மாப்பிள்ளையும் கூட சேர்ந்து தானே கஷ்டப்படுறாரு.. அவங்களுக்கும் அவர் ஒரே பிள்ளை தானே.. அவங்க மனசு எவ்வளவு வேதனைப்படும்…

 

ஒரு வேலை சம்பந்தி மாப்பிள்ளைக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணனும்னு ஏதாவது சொல்லிட்டாங்கன்னா என்னங்க பண்றது?”  என பெரிய குண்டினை தூக்கி போட்டு விட..

 

அதிர்ந்து போய் பார்த்த வளவன்,

 

” சும்மா இரு சுரதை… நீயா ஏதாவது பேசி வைக்காத… அப்படி எல்லாம் எதுவும் பேச்சு வராது …மாப்பிள்ளை விட மாட்டாங்க நம்ம பொண்ணை…

 

ஏன் எல்லாரும் எடுத்ததும் ஐவிஎஃப்ல குழந்தை பெத்துக்கறாங்களா..??  ஒரு சில பேரு நாலு அஞ்சு அட்டம்ட் கூட அட்டென்ட் பண்ணிதான் பெத்துக்குறாங்க… நாம வெயிட் பண்ணுவோம்… கடவுள் கண்டிப்பா நம்ம பொண்ணு மேல கண்ண தொறப்பாரு ..” என மனைவிக்கு ஆறுதல் கூறுவது போல தனக்கும் சேர்த்து ஆறுதல் அளித்துக் கொண்டார் வளவன்…

கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் முடிந்து விட்டிருந்தது… அவளுக்கு இரண்டாவது மாதவிடாயும் வந்து விட்டிருந்தது…

 

பொறுத்து பொறுத்து பார்த்த விக்ரம் என்ன நினைத்தானோ மனையாளை அழைத்துக் கொண்டு மலைகளின் இளவரசியான ஊட்டிக்கு சென்று விட்டான்…

 

நல்ல மலை உச்சி பகுதியில் ஆங்காங்கே சின்ன சின்னதாய் குட்டி குட்டி குடில் போல போடப்பட்டிருந்தது…

 

வெளியே இருந்து பார்ப்பதற்கும் அழகாக இருந்தது.. உள்ளே சென்றால் அனைத்து வசதிகளும் இருந்தது..

 

தேனிலவிற்கு என வரும் ஜோடிகளுக்கு ஏற்றது போல கட்டி இருந்தனர் …அதிலிருந்து ஒரு குடிலில் தான் விக்ரமும் நறுமுகையும் இருந்தனர் …

 

சோகமே உருவாய் இருந்த மனையாளை கண்டவன் அவள் போக்கில் விட்டு விட்டான்.. முதல் இரு நாட்கள் சும்மாவேணும் வெளியே சுற்றிப் பார்த்து வந்தனர்..

விக்ரம் தான் பெரும்பாலும் பேசிடுவான் ..நறுமுகை அமைதியாகவே இருந்தாள்..

இதற்கு மேலும் இவள் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது மன அழுத்தத்தில் புதைந்து விடுவாள் என கண்டுகொண்ட விக்ரம் அவளது மனதை திசை திருப்ப வேண்டும் என முடிவு எடுத்தான்…

 

  மறுநாள் காலையில் ஜன்னலின் ஓரம் உள்ள சாய்வு நாற்காலியில் கால்களை கட்டியபடி சாய்ந்து படுத்து இருந்தாள் நறுமுகை…

 

வெளியே தெரிந்த பனி புகையை பார்த்தவாரு இருந்தவளது கருவிழிகள் கூட உணர்வின்றி வெறித்தன..

காட்சியே உள்வாங்கி கொள்ளவில்லை… 

 

மெல்ல உறக்கம் கலைந்து எழுந்த 

விக்ரம் முதலில் தன்னவளை தான் தேடினான்…

 

அவளோ சாய்வு நாற்காலியில் சாய்ந்து இருந்தாள்…பார்ப்பதற்கு ஏதோ ஓவியம் போல காட்சியளித்தாள் அவனது மனையாள்…

அவளை மெத்தையில் இருந்தவாறு அமைதியாய் பார்த்தவன் பின்  மெல்ல எழுந்து குளியலறைகள் புகுந்து கொண்டான்…

 

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளிவந்திட…முகத்தை துடைத்தவாறு அலைப்பேசியை எடுத்து காபியை ஆர்டர் செய்து விட்டிருந்தான்…

 

சிறிது நேரத்தில் இருவருக்குமான காபி வந்ததும் முதல் கப்பினை எடுத்து மனைவியிடம் தான் நீட்டி இருந்தான் விக்ரம்…

மறுக்காது வாங்கிக் கொண்ட முகை அப்போது கூட தன் மன்னவனின் முகம் காணாது காபியை மெல்ல உறிஞ்சியவாறு வெளியே தான் வேடிக்கை பார்த்து இருந்தாளே ஒழிய தன் கணவனிடம்  ஒரா வார்த்தை கூட எதுவும் பேசவில்லை…

 

அவளையே விழி அகலாது பார்த்த விக்ரம் தானும் மெதுவாக காபியை உறிஞ்சி குடித்து முடித்தவன் பின் டீப்பாயின் காபி கோப்பையை வைத்துவிட்டு நின்று நறுமுகையை  ஒரே ஒரு பார்வை ஆழ்ந்து பார்த்தான்…

 

   பிறகு டவலினை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் …

சிறிது நேரத்தில் இடையில் கட்டிய டவளுடன்  வெளிவந்தவன் பெண்ணவள் அருகே வந்து நின்று ,

 

“இன்னும் எவ்வளவு நேரம் உட்கார்ந்துட்டு இருக்க போற நறு…??”  என அழுத்தமாய் கேட்டதும் நிதானமாக தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தவள்,

 

” வேறு என்ன பண்ண சொல்றீங்க விக்ரம் ..?? எனக்கு எதிலும் இன்ட்ரெஸ்ட் இல்ல.. நீங்க வேணா வெளியே எங்கேயாவது போயிட்டு வாங்க..”  என விட்டேத்தியாக கூறியதும் அதில் அவனது முகம் சட்டென மாறிவிட்டது…

 

அழுந்த தலையை கோதிக் கொண்டவன் பின் யோசிக்கவே இல்லை… அவளை இரு கரங்களில் அள்ளிக் கொண்டு நேரே குளியல் அறைக்குள் புகுந்திட .. அவளும் அவனது செயலில் அதிர்ந்தவளாய்,

 

” என்ன பண்றீங்க விக்ரம்..??? விடுங்க ….ப்ச்…நான் கொஞ்ச நேரம் கழிச்சு குளிக்கிறேன்..”  என அவனிடம் இருந்து திமிறியவளது‌  பேச்சினை காதில் வாங்கிக் கொள்ளாது குளியலறை காலால் திறந்து உள்ளே நுழைந்தவன் பட்டென்று கதவை அடித்து சாய்த்து இருந்தான்…

 

“ஏன் விக்ரம் இப்படி பண்றீங்க…??? என்னை நீங்களும் கஷ்டப்படுத்தாதீங்க விக்ரம்…ப்ளீஸ்…”என கரகரத்த குரலில் கூறியவளை நிதானமாக கீழே இறக்கியவன் அவளை ஆடையில் கை வைத்தான்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top