அத்தியாயம் 37
அக்ஷரன் விழித்தான்.
“சொன்னா புரியாதா நீங்க போய் அங்க இருங்க”
அவள் விழிகளை உருட்டி மிரட்டினாள்.
இவனுக்குத் தான் அவளது புது அவதாரத்தில் சிரிப்பு வந்தது.
“என்ன பாக்குறிங்க”
“என்ன புதுசா மெரட்டுற”
அவன் புருவம் உயர்த்த.
“அது.. நீங்க போங்க நா பார்த்துக்குறேன்”
அவனுக்குப் பின்னால் இருந்த அப்பெண்ணை முறைத்துக் கொண்டு சொல்ல அப்பெண் எங்கு இவளைப் பார்த்தாள்.
அவள் தான் விழிகளை அகற்றாமல் அக்ஷரனையேப் பார்த்துக் கொண்டிருக்க கடுப்பாகியது நேத்ராவிற்கு.
இவன் புருவம் இடுங்க திரும்பிப் பார்க்க அப்பெண்ணோ முப்பத்திரண்டு பற்களும் வெளியே தெரியுமளவு இளித்துப் பார்த்தாள் அக்ஷரனை.
யோசனையாக திரும்பி நேத்ராவைப் பார்க்க அவள் இன்னும் அப்பெண்ணைத் தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஹோய்..”
மனைவியினது முகத்திற்கு முன்னால் சொடக்கிட்டு அழைக்க
“என்ன”
கடுப்பாகத் தான் வெளி வந்தது வார்த்தையும்.
“அப்போ ஓகே நீயே செலக்ட் பன்னு”
அவன் தோளைக் குளுக்கி விட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து காலுக்கு மேல் கால் போட்டு அழைப்பேசியை பார்க்க ஆரம்பித்தான்.
இவள் தான் அப்பெண்ணை முறைத்துப் பார்த்து விட்டு கழுத்தில் மீண்டும் ஒரு முறை அந்த நெக்லசை போட்டுப் பார்த்தாள்.
“இது கொஞ்சம் டிசைன் அதிகமா இருக்கு கொஞ்சம் டிசைன் குறைவானது இருந்தா காண்பிங்க”.
அங்கிருந்த பணிப்பெண்ணிடம் கூற அவளும் அவள் கூறியதற்கமைய அழகான நெக்லசை ஒன்றை எடுத்துக் காண்பித்தாள்.
இவள் அதை கழுத்தில் வைத்து கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
அழகாகத் தான் இருந்தது.
“ அவங்ககிட்ட காட்டலாம்”
நினைத்துக் கொண்டுத் திரும்ப அங்கு அவளது கணவனோ அவனை பார்த்து இளித்த பெண்ணிடம் கதைத்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்தவளுக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
“இவருக்கு அந்த பொண்ணுக்கிட்ட என்ன பேச்சு வேண்டிக் கிடக்குது”
நெக்லசை அங்கு வைத்தவள் விறுவிறுவென கணவனை நெருங்கினாள்.
இவள் அவர்களை நெருங்கும் சமயம் அப்பெண்ணோ புன்னகைத்துக் கொண்டே,
“யூ ஆர் ஹன்ட்ஸம் ஸேர்”
கூற அக்ஷரனோ என்றும் போல் இருபக்கம் தலையாட்டி வசீகரமாகப் புன்னகைத்தான்.
அப்பெண் கூறியது நேத்ராவிற்கும் நன்றாகக் கேட்டது.
“இங்க என்ன பன்னிட்டிருக்கிங்க”
நேத்ராவினது குரல் பின்னால் கேட்க.
நிதானமாகப் பின்னால் திரும்பிப் பார்த்தான் அக்ஷரன்.
“நீ தானே சொன்ன நீயே செலக்ட் பன்னுறன்னு”
அவன் அமைதியாகக் கூற.
“நா தான் சொன்னேன் உங்கள அங்க இருக்க சொல்லி”
அவள் மூக்கு விடைக்கக் கூற பற்களால் உதட்டைக் கடித்து அவளைப் பார்த்தவனோ சிரிப்பைக் கட்டுப்படுத்த கடினப்படுவது விளங்கியது.
“யாரு ஸேர் இவங்க உங்களோட..”
அப்பெண் அடுத்து என்னவோ கூற வர,
“அவரோட பொண்டாட்டி”
உரிமையாக உறுதியாக அவள் கூற அப்பெண்ணினது முகத்திலோ ஒரு நொடி ஏமாற்ற உணர்வு இழையோடியது.
நேத்ரா அப்பெண்ணைப் பார்த்து புன்னகைத்து விட்டு தனது கணவனையும் பார்த்து புன்னகைத்தாள்.
அப்பெண்ணினது முகத்தில் இழையோடிய ஏமாற்றம் இவளுக்கு அலாதித் திருப்தியைக் கொடுத்தது என்னவோ உண்மை.
“போலாமா”
அவள் புன்னகைத்துக் கொண்டு கேட்க அவனும் தலையசைத்து விட்டு அப்பெண்ணிடமும் தலையசைத்துக் கொண்டு மனைவியுடன் அங்கிருந்து சென்றான்.
பின் அவள் எடுத்து வைத்திருந்த நெக்லசை போட்டு காண்பிக்க.
“உனக்கு ஓகேன்னா ஓகே”
அவனும் சம்மதமாகக் கூற.
“உங்க லவ்வர்க்கு தானே நீங்க தான் சொல்லனும்”
அவள் உதட்டை சுழித்து விட்டுக் கூற.
“ஆமா என்னோட லவ்வர் போட்டா இன்னும் இந்த நெக்லஸ் அழகா மாறிடும்”
அவனும் கூற இவள் முறைக்க முடியாமல் அவனைப் பார்த்து முறைத்தாள்.
பின் அக்ஷரன் அழகிய வளையல்கள் செட் ஒன்றை எடுத்தான்.
அதுவும் வைரத்திலாலானது.
“இதுவும் உங்க லவ்வர்க்கா”
கண்கள் கூசாத அளவுக்கும் அதே நேரம் கண்ணுக்கு குளுமைத் தரக் கூடிய அந்த வளையல்களில் ஏக்கமாகப் படிந்து மீண்டது நேத்ராவினது பார்வை.
அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“ஆமா”
அழுத்தம் திருத்தமாக அவன் கூறிட முகம் சுருங்கியது.
பின் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
“அவங்க மத்த பொண்ணுங்ககிட்ட பேசினா உனக்கென்ன”
மனசாட்சி சரியான இடத்தில் கேள்வி கேட்க இவள் பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.
இல்லை பதில் தெரியாமல் விழித்தாள்.
அவளுக்கும் அந்த கேள்விக்கான பதில் தெரியவில்லையே.
“அது.. சும்மா எல்லாப் பொண்ணுங்களும் இப்பிடி பார்க்கக் கூடாதுல”
மனசாட்சியிடம் மழுப்ப,
“அதான் அவரே ஒன்னும் சொல்லல்ல உனக்கு எங்க வலிக்குது”
மீண்டும் மனசாட்சிக் கேட்க.
என் காது கேட்காது என்ற ரீதியில் அமைதியாகி விட்டாள் நேத்ரா.
இருவரும் போகும் வழியில் தர்ஷனிற்கும் அழைப்பிதழைக் கொடுத்து அழைப்பு விடுத்தனர்.
***
மறுநாளும் ஷூட்டிங் இல்லை என்பதால் ட்ரைவிங் வகுப்புக்கு கொண்டு போய் விட்டான்.
முதலில் ஜீன்ஸ் மற்றும் சட்டை அணியத் தயங்கியவள் அவனது முறைப்பில் வாய்க்குள்ளால் முனகிக் கொண்டே சென்று அணிந்து கொண்டு வந்தாள்.
“ட்ரைவிங்க ஒழுங்கா கத்துக்க எனக்கே டேய்லி உனக்கு ட்ரைவர் வேலப் பார்க்க முடியாது”
போகும் போது மனைவிக்கு ஒரு குட்டை வைத்து விட்டுச் செல்ல அவனை முறைத்துப் பார்த்தவள் உறுதியாக இருந்தாள் இந்த ட்ரைவிங்கைக் கற்பதில், முதலில் ஏனோ தானோவென இருந்தவள் இவனது இப்பேச்சில்,
“நான் காத்துக்கிட்டு காட்டுறேன்”
மனதால் அவனுடன் சபதம் எடுத்தாள்.
அவளே அறியாமல் அவளது தயக்கங்கள் தகர ஆரம்பித்திருந்தது..!!
முதலில் ஸ்கூட்டியின் ஒவ்வொரு பாகத்தையும் சொல்லிக் கொடுத்தனர்.
ப்ரேக் முதல் கண்ணாடியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என சொல்லிக் கொடுக்க அனைத்தையும் ஆர்வமாகக் கேட்டுத் தனக்குள் பதிய வைத்துக் கொண்டாள்.
ட்ரைவிங் வகுப்பு முடியவும் அவள் அறியத் தர முன்னரே அக்ஷரன் வந்திருந்தான்.
“அவ்ளோ கஷ்டமா இருந்தா எனக்கு ட்ரைவர் வேல பார்க்க வேண்டிய அவசியமில்ல”
அவனது காதில் விழுமளவு வாய்க்குள்ளால் முணுமுணுக்க அவனோ கேட்டும் கேட்காதது போல் காரை செலுத்தினான்.
அக்ஷரன்,நேத்ராவினது வரவேற்பு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஞானவேலும் தேவகியும் வந்திருந்தனர்.
“என்ன கண்ணு இது.. முடி இவ்ளோ கொட்டிருச்சு தலைக்கு எண்ண வெச்சி குளிக்கனும்ல”
ஏதோ வருடக் கணக்குப் பிரிந்திருந்தது போல் அவளது தலையை வருடிக் கொண்டு தேவகிக் கூறினார் என்றால்,ஞானவேலோ.
“என்ன இவ்ளோ ஒல்லியா இருக்க என்னடா சாப்ட போடமாட்டியா”
மகனிடம் காய்ந்தார்.
அக்ஷரனோ தந்தை தாய் இருவரையும் முறைத்துப் பார்த்து விட்டு இறுதியாக மனைவியையும் முறைத்து விட்டு அறைக்குள் நுழைந்தாள்.
நேத்ரா தலையைக் குனித்துக் கொண்டாள் அவனது முறைப்பில்.
“இங்க பாரு உனக்கு மருதாணி கொண்டு வந்திருக்கேன் நா வெச்சி விட்றேன்”
தேவகிக் கூற அவளது முகம் மலர்ந்தது.
“சரி அத்த”
அவள் ஆர்வமாகக் கூற.
“இது வேணாம்.. இப்போ ரெண்டு பேரு வருவாங்க வெச்சி விட்றதுக்கு”
அங்கு வரவேற்பறையில் அழைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்த அக்ஷரன் குரல் கொடுத்தான்.
“இல்ல எனக்கு இது தான் புடிச்சிருக்கு நா இத வெச்சிக்குறேன்”
உரிமையாக அவனிடம் கூற அவனோ தோளைக் குளுக்கிக் கொண்டான்.
தேவகிக்குத் தான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது மகன் மற்றும் மருமகளது இந்த உரிமையான பேச்சில்.
முதல்த் தடவை வந்திருந்த போது இருவருக்குமிடையில் ஏதோ ஒட்டாதத் தன்மை இருப்பதாக தாம்பத்ய வாழ்க்கையில் முப்பது வருட அனுபவம் உள்ள அவருக்குப் புரிய வருத்தமாகத் தான் இருந்தது.
ஆனால் இப்பொழுது இருவரும் சற்று அந்நியோன்யமாக இருப்பது போல் தோன்ற மகிழ்ச்சித் தாங்கவில்லை.
“கடவுளே.. என்னோட பசங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்.. அடுத்த வருஷம் என்னோட பேரப்புள்ளய நா கொஞ்சனும்”
கடவுளிடம் அவசர வேண்டுதல் ஒன்றையும் வைத்தார்.
கடவுளிடம் போய் சேர்ந்ததா அல்லது நிலுவையில் உள்ளதா என்பதை அந்த கடவுளே அறிவார்..!!
தேவகியே நேத்ராவினது இரண்டு கைகளுக்கும் அரைத்த மருதாணியை வைத்து விட்டார்.
“ரொம்ப அழகா இருக்கடா”
அவர் திருஷ்டி கழிக்க கபடமின்றி சிரித்தாள் பேதை.
“அத்த உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்”
அவள் தேவகியைத் தயக்கமாகப் பார்த்துக் கொண்டுக் கேட்க.
“அட என்னடா கண்ணு கேளு”
அவர் கூறினார்.
“அது.. இல்ல இவரு ஸ்கூல் போற நேரத்துல இவருக்கும் மாமாக்கும் இடைல ஏதோ பிரச்சினையாகிருச்சே அது என்ன”
தயக்கமாகக் கேட்க புருவத்தை சுருக்கி யோசித்த தேவகியோ.
“அது இப்போ எதுக்கு கண்ணு”
சோகமாகப் பெருமூச்சு விட்டார்.
“இல்ல அத்த சொல்லுங்களே”
எதையோ தெரிந்துக் கொள்ள வேண்டிய ஆர்வத்தில் அத்தையிடம் கெஞ்சினாள்.
“அது.. யாரோ மாமாக்கு தெரிஞ்ச ஒருத்தங்க சொல்லிருக்காரு உங்க பையன் ஸ்கூலுக்கு போற வழில மறஞ்சி நின்னுக்கிட்டு தம்மடிச்சுறத பார்த்தேன்னு.. மாமாவும் அத நம்பிப் போய் இவன்கிட்ட கேட்க இவனும் தெனாவட்டா ஆமா தம்மடிச்சேன்னு சொன்னான்… அதுக்கப்புறம் மாமாவ கேக்கவா வேணும் அவனுக்கு அடி பின்னிட்டாரு.. ரெண்டு நாள் படுத்த படுக்கைல இருந்தான்.. அப்புறம் பார்த்தா தான் தெரியுது அந்த மனிஷன் வேற யாரோப் பார்த்துட்டுத் தான் வந்து மாமாக்கிட்ட சொல்லியிருக்காருன்னு.. மாமா ரொம்ப வருத்தப்பட்டாரு.. இவன் அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் மாமாகூட பேசவேயில்லயே.. மாமாவே போய் மன்னிப்புக் கேட்டாலும் பேசமாட்டான்.. அப்பாக் கூட பேசுப்பான்னு நா சொன்னா கூட.. அவரு என்னைய நம்பாம தானே என்கிட்ட கேட்டாரு இப்போ நா அவருகூட பேசினா என்ன பேசல்லன்னா என்ன அப்பிடின்னு கோவமா சொல்லுவான்.. ரெண்டு வருஷம் கழிச்சி தான் பேசினான்..”
அவர் வேதனையாகக் கூறினார்.
“அவ்ளோ அழுத்தக்காரரா அத்த”
இவள் விழி விரித்துக் கேட்டாள்.
“ஆமா கண்ணு ரொம்ப அழுத்தக் காரன் தான்.. மாமா அதுக்கப்புறம் அவன ரொம்ப நம்பினாரு.. அதான் திடுதிப்புன்னு மண்டபத்துல வந்து உன் கழுத்துல தாலியக் கட்டினதும் கூட அவன நம்பினாரு..ஏதாச்சும் காரணம் இருக்கும்ன்னு இல்லன்னா தானே உன்ன ஊருக்குக்குக் கூட்டிட்டுப் போய் இருப்பாரு”
தேவகிக் கூற
“ம்க்கும் காரணம் இல்லாமலா அதான் அம்புட்டு சொத்து இருக்குல்ல.. ஆனாலும் அவங்ககிட்டயே அளவுக்கதிகமா பணம் இருக்கே எதுக்குத் தான் அந்த சொத்துக்காக வேண்டி என்னக் கட்டிக்கிட்டாரோ.. ரெண்டு மெரட்டு மெரட்டியிருந்தா நானே கொடுத்திருப்பேனே.. அட மெரட்டக் கூடத் தேவையில்ல அந்த சொத்த என் பேருக்கு மாத்திக் கொடுன்னு சொன்னா கொடுத்துடப் போறேன்”
இவள் என்றும் போல் தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
“அவன நம்பாம அவன்கிட்ட கேட்டா அவனும் தெனாவட்டா ஆமா நா அப்பிடி தான்னு சொல்லுவான்.. இது அவனோட குணமும் கூட”
தேவகிக் கூறினார்.
நேத்ராவிற்கோ ஏதோ ஒன்றை உணர்த்தியது தேவகியின் இக்கூற்று.
*****
தொடரும்..❤
💜அஷு💜