அத்தியாயம் 5

அத்தியாயம் 5

அவனோ பெருமூச்சுடன், “சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்லை, அம்மா அப்பா இல்லை, அனாதையா தான் இருந்தோம் நானும் ஜெகனும்… இந்த ரோட் ல தான் திரிவோம், அப்போ ராஜதுரை ஐயா தான், எங்களை எடுத்து கொண்டு போய் வளர்த்தார்… அவர் வீட்ல தான் வளர்ந்தோம்… காலேஜுக்கு எல்லாம் அனுப்பி படிக்க வச்சார், அவரோட ஃபேக்டரி, வயல் எல்லாம் பார்த்துக்கிட்டோம்… உண்மைய சொல்ல போனா பொறுப்பை விட அடிதடி தான் அதிகமா இருக்கும்… கட்டப்பஞ்சாயத்து தொடக்கம் எல்லாமே இருக்கும்… ஒரு வயசுக்கு அப்புறம், ஐயா எனக்கு இந்த வீட்டையும் ஜெகனுக்கு அந்த வீட்டையும் எழுதி கொடுத்தார்… அவர் எங்களுக்கு சாமி மாதிரி…  காந்தா கோவில் ல பூ விக்கிற பொண்ணு, ஜெகனுக்கு பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டான்… எனக்கு பெருசா கல்யாணத்துல இஷ்டம் இல்லை… கடைசியா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஐயா கேட்டார்… சரின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இவ்ளோ தான் என்னோட கதை” என்றான்.

அவனையே பார்த்து இருந்தவள், “அப்போ என்னை பிடிக்கலையா?” என்று நேரடியாக கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன், “இப்போ பிடிச்சிருக்கு” என்று மட்டும் சொன்னான்.

சட்டென பெண்ணவள் கன்னங்கள் சிவந்து போக, தலையை தாழ்த்திக் கொண்டாள்…

அவளை பார்த்துக் கொண்டே, சற்று எம்பியவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை, அடுத்த கணமே, அவள் முகத்தை தாங்கிக் கொண்டான்… 

அவள் தலை இன்னுமே தயக்கத்துடன் தாழ்த்தி இருக்க, மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தினான்…

அவளும் மெதுவாக முகத்தை நிமிர்த்திக் கொண்டே விழிகளை மூடிக் கொள்ள, அவள் முகத்தை சற்று நேரம் பார்த்து இருந்தவன் இதழ்கள் முதலில் அவள் நெற்றியை தீண்டின…

அவளிடம் மெல்லிய உஷ்ண பெருமூச்சு…

விழிகளை பெண்ணவள் திறக்கவே இல்லை…

அப்படியே அவள் விழிகளில் முத்தமிட்டான்…

விழிகளில் இருந்து நெகிழ்ச்சியில் மெல்லிய நீர் கசிவு அவளிடம்…

அதனை பெருவிரல்களால் துடைத்து விட்டவன், விழிகள் அவளது சிவந்த அதரங்களில் படிய, அதனை ஒரு கணம் பார்த்து விட்டு, அவள் இதழ்களில் தன்னிதழ்களை பொருத்தி இருந்தான் இந்த ராவணன்…

அவள் விழிகள் மூடி இருக்க, தனது அதரங்களை மெதுவாக திறந்து அவன் முத்தத்துக்கு வழி செய்து கொடுத்தாள்.

மேல் அதரங்கள் கீழ் அதரங்கள் என்று பாகுபாடு இன்றி அவள் இதழ்களை கவ்வி கவிபாடியவன், அத்துடன் நிறுத்தவில்லை, பெண்ணவளை தனது இரும்பு கரங்களில் ஏந்திக் கொள்ள, “ஐயோ” என்று பதறிக் கொண்டே, அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் பெண்ணவள்…

அவனுக்கோ மோகம் அடங்கிய பாடு இல்லை, அவள் இதழ்களில் முத்தமிட்டுக் கொண்டே அவளை படுக்கை அறைக்குள் தூக்கி சென்றவன், கதவை காலினால் அடித்து மூடி விட்டு, அவளை கட்டிலில் படுக்க வைத்தான்.

அவளோ சற்று மிரட்சியும் ஆர்வமுமாக அவனை பார்க்க, அவளை பார்த்தபடி ஷேர்ட்டை கழட்டிய ராவணனோ, “பயபடாதே,சாஃப்ட் ஆஹ் தான் ஹாண்டில் பண்ணுவேன்” என்று சொன்னபடி அவளது இரு பக்கமும் கையை ஊன்றி அவளை நோக்கி குனிய, அவள் வெட்கத்துடன் தலையை தாழ்த்திக் கொண்டாள்.

அவளை பார்த்துக் கொண்டே, அவளது ஆடைகளுக்கு விடுதலை அளித்தான்…

அவள் வெட்கத்துடன் தன்னை மறைத்துக் கொள்ள, “இப்படியே இருந்தா எதுவும் பண்ண வேணாமா?” என்று அவள் மேல் படர்ந்தபடி கேட்க, “கூச்சமா இருக்கு” என்றாள் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டான்.

“இந்த வெட்கம் மானம், கூச்சம் எல்லாம் பெட் ரூம் ல மட்டும் புடவையோட சேர்த்து கழட்டி வச்சிடு” என்றவன், அவள் கரத்தை பற்றி அகற்றி, அதனுடன் தனது விரல்களை கோர்த்துக் கொண்டபடி, அவள் கழுத்துக்குள் முகம் புதைத்து அவளை களவாட ஆரம்பித்து விட்டான்.

அவளோ, முனகலுடன் விழிகளை மூடிக் கொண்டவள் அவனை பார்க்கவே இல்லை…

வாக்கு கொடுத்த போல, மென்மையாக, மிக மிக மென்மையாக தான் அவளை கையாண்டான் ராவணன்… 

மனோகரிக்கு ஒரு கட்டத்துக்கு மேல், மேனியில் தோன்றும் உணர்வுகளை தாங்க முடியாமல், அவனை இறுக அணைத்துக் கொண்டாள்…

அவனது முதுகில் அவளது நகக் கண்கள் பதிய, அவனது ஒவ்வொரு அசைவுக்கும், மயங்கி மீண்டாள் பெண்ணவள்… 

அவளை மொத்தமாக ஆட்கொண்டு, மெதுவாக விலக, அவளோ கூச்சத்துடன், புடவையால் தன்னை மூடிக் கொண்டே, அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“முகத்தை பார்க்க மாட்டியா?” என்று கேட்டான்.

“இல்ல மாமா” என்றாள்.

இன்று தான் மாமா என்று அழைகின்றாள்.

அழைக்கும் அளவுக்கு கூட அவள் பேசியது இல்லை…

அவனோ சிரித்துக் கொண்டே, “மாமான்னு கூப்பிடவே இவ்ளோ நாள் ஆச்சா?” என்று கேட்க, அதற்கும் வெட்க புன்னகை தான்…

“உனக்கு கோபமே வராதா?” என்று கேட்டான்.

அதற்கும் புன்னகை தான் பதில்… 

அவனோ, “ஜெகனை பார்த்ததுல இருந்து பொண்டாட்டின்னாலே வேணாம்னு இருந்தேன், உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சு இருந்தா, எப்போவோ பண்ணி இருப்பேன், எனக்கு உன் கிட்ட பிடிச்சதே, இந்த கூச்சமும், மென்மையும் தான் டி” என்றான்.

அதற்கும் புன்னகை மட்டும் தான் அவளிடம் இருந்து…

அடுத்த நாள் காலையில், அவளை முத்தமிட்டு விட்டு தான், வெளியே கிளம்பி இருந்தான் ராவணன்…

தினமும் மல்லிகை பூ, அல்வா என்று வீட்டுக்கு வந்து விடுவான்… 

அவளுடன் இன்னுமே நெருங்கி போனான்.

தினமும் அவளை கொள்ளையிடாமல் அவனுக்கு தூக்கம் வருவதே இல்லை…

இதனிடையே காந்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்க, அவளை பார்க்க தான் ராவணன் மற்றும் மனோகரி சென்று இருந்தார்கள்…

ஜெகனோ, “என்னடா மொத்தமா பொண்டாட்டி தாசனா மாறிட்ட போல?” என்று கேட்க, அவனோ, “அதுல என்னடா தப்பு இருக்கு?” என்றான் கண்களை சிமிட்டி…

“டேய் கொஞ்சம் கிள்ளுடா, நம்பவே முடியல” என்று ஜெகன் கலாய்க்க, “சும்மா இரு டா” என்று சொல்லிக் கொண்டான் அவன்…

மனோகரி அருகே வந்த மீனாட்சியோ, “அடிதடின்னு இருந்தவனை, பெட்டி பாம்பா அடக்கி வச்சு இருக்கம்மா, இதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றது” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டவர், “நீ எப்போ நல்ல சேதி சொல்ல போற?” என்று கேட்க, அங்கே நின்ற ராவணனை பார்த்தாள்.

அவனும் காதலுடன் அவளையே பார்த்திருக்க, “சீக்கிரமே” என்று சொன்னாள் அவள்… 

ஜெகனின் குழந்தையை ஆசையாக தூக்கிக் கொண்டாள்.

அவளில் இருந்து ராவணன் விழிகளை அக்கற்றவே இல்லை. 

இப்படி ஒருத்தியை விழுந்து விழுந்து காதலிப்பான் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை அவன்… 

கோபப்படவும் மறந்து போனான் அவன் இப்போதெல்லாம்…

ஆம் அவளை உருகி உருகி காதலிக்க ஆரம்பித்து விட்டான்.

அன்று நிறைவாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்…

இப்படியே சந்தோஷமான அவர்கள் வாழ்க்கையில் அடுத்த சந்தோசம் வந்து சேர்ந்தது… 

இப்படியான ஒரு நாள், பெண்ணவள் கர்ப்பம் தரித்து விட்டாள்.

அவனுக்கோ ரெட்டை சந்தோசம்…

தனது கருவை அவள் சுமக்கின்றாள் என்று சொன்னதும் அவள் மீது காதல் இன்னுமே கூடியது தவிர குறையவில்லை…

மனோகரியை பார்த்து விட்டு செல்ல எல்லாருமே வந்திருந்தார்கள்… 

விசாலாட்சி, அவளுக்கு பக்கம் பக்கமாக அறிவுரை வழங்கி இருந்தார்… 

ராவணனோ விசாலாட்சியிடம், “அத்தை நீங்க இங்கேயே இருக்கலாமே, மனோகரிக்கு ஒத்தாசையா இருக்கும்” என்றான்.

“ஊர்ல ஒரு கல்யாணம் இருக்கு மாப்பிள்ளை, போயிட்டு சீக்கிரம் வந்திடுறேன்” என்றார் விசாலாட்சி…

அன்று இரவு, அவள் மடியில் தலை வைத்து, படுத்து இருந்தான் ராவணன்…

பெண்ணவளோ, “ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்ல, அவனும், “ம்ம், ரொம்ப ரொம்ப” என்றான்.

மனோகரியும், “நான் ஒன்னு கேக்கிறேன் தப்பா நினைக்க மாட்டிங்களா?” என்று கேட்க, “கேளுடி” என்றான் அவன்…

“என் கிட்ட எல்லாமே சொல்லி இருக்கீங்களா?” என்று கேட்டாள்.

“ம்ம், அதிகமா எல்லாம் சொல்லி இருக்கேன்” என்று சொல்ல, “அடிதடி பத்தி எதுவும் சொன்னது இல்லையே, நீங்க அடிச்சு யாரும் ஹாஸ்பிடல் ல படுத்து இருக்காங்களா?” என்று கேட்க, அவனோ, ஒரு பெருமூச்சுடன், “அத பத்தி சொல்லி என்ன ஆக போகுது, பயந்துட்டா என்ன பண்ணுறதுன்னு சொல்லாம இருந்தேன்” என்றான்… 

அவளும், “நான் எதுக்கு பயப்பட போறேன், நீங்க கொலையே பண்ணி இருந்தா கூட சொல்லுங்க, உங்க பக்கம் தான் நான் இருப்பேன்” என்று சொல்லி, குனிந்து அவன் நெற்றியில் முத்தம் பதிக்க, “நிஜமா தான் சொல்றியா இல்லை விளையாட்டுக்கு சொல்றியா?” என்று கேட்டான்.

“நிஜமா தான் சொல்றேன், நீங்க கொலை பண்ணுனா கூட அதுல நியாயம் இருக்கும்” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஒரே ஒரு கொலை பண்ணி இருக்கேன்” என்றான்.

அவளோ, அவனை இமைக்காமல் பார்க்க, பெருமூச்சுடன், “உன் கிட்ட சொல்லாம இருக்கிறது எனக்கும் உறுத்தலா இருக்கு, சொன்னா மனசு நிம்மதியா இருக்கும்னு தோணுது.., அவன் சாக வேண்டிவன் தான், இந்த ஊர்ல ஒரு போலீஸ்காரன் இருந்தான் வெற்றி, அவனை என் கையாலேயே கொன்னு எரிச்சேன், எந்த சாட்சியும் இல்லை… போலீசுக்கு கண்டு பிடிக்க முடியல… முட்டாள் போலீஸ் டிபார்ட்மென்ட்…” என்று சொல்ல, அவளோ, “நிஜமா தான் சொல்றீங்களா? கேட்க பயமா இருக்கே” என்று சொல்ல, “இது தான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்” என்றான் அவள் கன்னம் வருடி… “சரி இனி கொலை பண்ண மாட்டிங்க தானே” என்று கேட்டாள்.

“நமக்கு பிறக்க போற குழந்தை மேல சத்தியமா பண்ண மாட்டேன், இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை, எல்லாமே உன் கிட்ட சொல்லிட்டேன், ரொம்ப நிம்மதியா இருக்கு” என்றான்… காதல் ஒருவனை இந்தளவு பித்தாக்கும் என்று அவன் கனவில் கூட நினைத்தது இல்லை… 

அவன் சொன்னதை கேட்டு விட்டு, “அப்போ நான் தூங்கட்டுமா?” என்று பெண்ணவள் கேட்க, “ம்ம் தூங்கு” என்று அவளை அணைத்துக் கொண்டே படுத்தான்…

அடுத்த நாள் காலையில் விடிந்தது…

நேரத்துக்கே எழுந்த ராவணனுக்கு யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்க, அவனும் சென்று கதவை திறந்தான்.

அங்கே நின்றது என்னவோ போலீஸ்காரர்கள் தான்.

அவர்களை ஆழ்ந்து பார்த்தவன், “என்ன விஷயம்?” என்று கேட்க, முன்னால் நின்றவனோ, “உங்கள வெற்றி கேஸ் ல அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்” என்றான்…

“அது முடிஞ்சு போன கேஸ், இப்போ எதுக்கு அரெஸ்ட்?” என்று கேட்க, “என்னாச்சு” என்றபடி அங்கே சக்கர நாற்காலியில் வந்தாள் மனோகரி… 

“ஒன்னும் இல்ல, நீ பயப்படாதே” என்று சொன்ன ராவணனோ, “வர முடியாது” என்றான்.

அவனுக்கு தெரியும், அழைத்து சென்றால் அவனை ஒரு வழி செய்து விடுவார்கள் என்று…

அதனாலேயே முடியாது என்று சொல்ல, போலீஸ்காரனோ, “அரெஸ்ட் பண்ணாம போக மாட்டோம்” என்றபடி அவன் மீது கையை வைக்க, அவனை கேட்கவும் வேண்டுமா? போலீஸ்காரன் என்று கூட பார்க்காமல், முகத்தில் ஓங்கி குத்தி இருந்தான்.

போலீஸ்காரன், கீழே கொண்டு விழுந்து இருக்க, அங்கே நின்ற போலீஸ்காரர்களை பார்த்தவன், “எவன் பக்கத்தில வந்தாலும் சாவடிச்சிடுவேன்” என்று சொன்ன அடுத்த கணம், ராவணன், வாசலில் குப்பற விழுந்தான்…

அவன் சுதாரிக்க முதலே, அவன் மீது பாய்ந்து ஏறி அவன் தலையில் துப்பாக்கியை வைத்து இருந்தது யாருமல்ல மனோகரி தான்… நடக்க முடியாது என்று சொல்லிக் கொண்டு இருந்த காலாலேயே எட்டி உதைத்து இருந்தாள்…

அவனோ தலையை திருப்பி அவளை அதிரந்து பார்க்க, “என்னது சாவடிப்பியா?  போலீஸ்க்காரனையே போட்டு தள்ளிட்டு என் கிட்டயே கதை சொல்றியா? இந்த வீட்ல எல்லா ரூம்லயும் கேமெரா பொருத்தி வச்சு இருந்தேன்… எப்போடா வாக்கு மூலம் கொடுப்பேன்னு காத்துட்டு இருந்தேன், நேத்து கொடுத்த, விடுவேன்னு நினைச்சியா? உன்னை அரெஸ்ட் பண்ணனும் என்கிறதுக்காக என்னையே கொடுத்து இருக்கேன்” என்று சீறிக் கொண்டே, கையை நீட்டி, அவள் கையில் விலங்கை வைத்தது வேறு யாருமல்ல விசாலாட்சி தான்…

அவரும் போலீஸ் தான்…

அந்த விலங்கை அப்படியே ராவணனின் கையை பின்னால் பற்றி போட்டு அவனை கைது செய்து இருந்தாள்.

அவன் திமிரவில்லை, போராடவில்லை…

ஏன் என்றால் மனதளவில் மரித்து போயிருந்தான்…

❤️ Loading reactions...
3 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top