அத்தியாயம் 7

அவந்திகா அவசரமாக கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

அவள் கண்களில் முதலில் பட்ட காட்சி அவளை அப்படியே உறைய வைத்தது.

ரேவந்தை இரு கரங்களாலும் இறுக்கமாக அணைத்தபடி நின்றிருந்தான் அதிரூபன்.

சாதாரணமாக நண்பர்கள் கட்டியணைப்பதை அவள் பலமுறை பார்த்திருக்கிறாள். ஆனால் இவர்கள் இருவரின் அந்த அணைப்பு… அது ஒரு வெற்றியின் மகிழ்ச்சியா, இல்லை காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் அணைத்துக் கொள்வது போலவா என்று ஒரு கணம் அவளுக்கே புரியவில்லை.

அவளது விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

அந்த நேரமே கதவு திறந்த சத்தம் கேட்டு இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.

வாசலில் சிலையாக நின்றிருந்த அவந்திகாவைக் கண்டதும், ஒரு நொடி அதிர்ந்த அதிரூபன் உடனே தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.

ரேவந்தின் தோளை தட்டியபடி உற்சாகமாக,

 

“தேங்க்ஸ், ரேவந்த்! நீ மட்டும் அந்த பேக்கப்பை சரியான நேரத்துல ரெடி பண்ணலைனா… இந்த டெண்டரை நம்ம ஜெயிச்சிருக்கவே முடியாது.”

என்று கூறிவிட்டு சிரிப்புடன் அவந்திகாவை நோக்கி வேகமாக நடந்துவந்தான்…

 

“வாங்க, அவந்திகா!”

என்று இயல்பாக அழைத்தவன், ரேவந்தை ஒரு பார்வை பார்த்து, மீண்டும் அவளை நோக்கித் திரும்பினான்.

மேலும் தொடர்ந்த அதிரூபன்,

 

“உங்களுக்குத் தெரியுமா… இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு? நம்ம உழைப்புக்கான பலன் கிடைச்சுடுச்சு.”

அவன் குரலில் இருந்த உற்சாகம் போலியானது என்று யாராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது…அந்தளவு அவனது நடிப்பு இருந்தது..

 

“உங்க ஒவ்வொருத்தருடைய உழைப்பும் இல்லாம இருந்திருந்தா, அந்த இரண்டு பெரிய கிளையன்ட்ஸையும் நம்ம கம்பெனிக்குக் கொண்டு வர முடியாது. இது என்னோட வெற்றி மட்டும் இல்ல… நம்ம எல்லாரோட வெற்றி.”

என்று மனதார பாராட்டுவது போலப் பேசினான்.

வெளியில் பார்க்கும் யாருக்கும், தனது ஊழியர்களின் உழைப்பை மதிக்கும் ஒரு தலைவன் போலவே அவன் தோன்றினான்.

ஆனால்…

அவந்திகாவின் மனதில் மட்டும் அந்த சில நொடிகளுக்கு முன் பார்த்த காட்சி இன்னும் அழியாமல் நின்றது.

‘இது நான் நினைக்கிற மாதிரியா… இல்லை நான் தேவையில்லாம யோசிக்கிறேனா…?’

என்ற குழப்பம் அவளது முகத்தில் தெளிவாகப் பிரதிபலித்தது.

அதிரூபனோ…

அவளது பார்வையில் எழுந்த சந்தேகத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக, இயல்பை விட இன்னும் அதிக உற்சாகத்துடன் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்…

பின்பு ரேவந்த்தை பார்த்து,

 

”  ஐ அம் சாரி ரேவந்த்.. சந்தோஷத்துல தான் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்..!”  என வேண்டும் என்று அவந்திகா முன்பு தன் தவறை மறைக்க முயன்று நடித்துக் கொண்டிருந்தான் அதிரூபன் ..

 

ரேவந்தும் அதிரூபனின் எண்ணம் புரிந்து,

 

” புரியுது பாஸ்…  சார் வந்து இந்த டெண்டர் பத்தி பேசும்போது இதை எப்படியாவது நீங்க ஜெயிச்சு ஆகணும்னு வொர்க் பண்ணதை கூட இருந்தேன் பார்த்தவன் நான்…

சோ இப்ப நம்ம ஜெயிச்சு இருக்கோம் இதால நீங்க எவ்வளவு சந்தோஷமா இருப்பீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது… உங்களால கண்டிப்பா சார் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார் ..” என அவன் பங்கிற்கு அவனும் எடுத்து விட்டான் …

 

அவந்திகா ரேவந்த்தின் பதிலை கண்டதும் தெளிவுற்றவள் திருப்தியாய் அதிரூபனை பார்த்தாள்…

 

அதிரூபனும் அவந்திகாவை கண்டு  விழிகள் சுருக்கி,

“நீங்க  எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க வந்திகா..??  ஏதாவது டவுட்டா ..?” என கேட்டதும்,

 

” இல்ல சார் ..

இந்த டெண்டர்காக ஸ்டாஃப்ஸ் ரொம்பவே உழைச்சிருக்காங்க.. சோ அவங்க எல்லாருக்கும் சின்னதா எதாவது கிஃப்ட் பண்ணா அவங்களை  மோட்டீவ் பண்ற மாதிரி இருக்கும் ..வொர்க் இன்னும் ஸ்பீடாவும் நடக்கும் ..!” என்றதும் அதிரூபனுக்கும் அவள் சொல்வது சரியாகப்பட்டது ..

“கிஃப்ட்லாம் வேண்டாம் ஒரு பார்ட்டியை அரேஜ் பண்ணிடலாம் …” என அசால்ட்டாக கூறியதும் விழி விரிய அவனை  பார்த்தவளை சிறு‌ புன்னகையுடன் பார்த்து,

“கமிங் சாட்டர்டே பார்ட்டினு எல்லாருக்கும் அனாவுன்ஸ் பண்ணிடுங்க…சண்டே ரெஸ்ட் எடுத்துட்டு மண்டே ஆபிஸ் வரட்டும்”என்றவனை முகம் மலர பார்த்த அவந்திகா,

“ஷ்யூர்  சார்..”  என்றவள் சிறிது நேரம் அதிரூபனிடம் பேசிவிட்டு கிளம்பி விட்டிருந்தாள்…

 

அதன் பின்னர் தான் ஆண்கள் இருவருக்கும் மூச்சே வந்தது… ஆழ்ந்த மூச்சினை இழுத்து விட்டவர்கள்,

 

“நல்ல வேலை பார்த்ததும் ஏதாவது கேட்டு வைப்பாளோ நினைச்சேன் …” என அதிரூபன் தன் டையை தளர்த்தியபடி ரேவந்த்தை பார்த்து கூறி வைத்தான் …

அவனோ அறை கதவை லாக் செய்துவிட்டு உரிமையாய் அதிரூபனின் மடியில் வந்து அமர்ந்தவன்,

 

” எனக்கும் பக்குனு ஆயிடுச்சு ரூப்… எங்க இந்த சில்வண்டு வந்து பார்த்துட்டு பெரிய சார் கிட்ட ஏதாவது போட்டு கொடுத்துடுவாளோனு…ம்ம்ம்…நல்ல காலம் சந்தேகம் எதுவும் படல ..இனி நாம ஜாக்கிரதையா இருக்கணும் ரூப்…”  என்றதும் ஆமென்று தலையசைத்த அதிரூபன் ரேவந்தின் நெற்றி முட்டி உற்சாகமாய் சிரித்து கொண்டான்…

 

அந்த வார இறுதியில் ஊழியர்கள் அனைவருக்குமான பார்ட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தான் அதிரூபன் .…

 

ஊழியர்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சியோடு அதில் கலந்து கொண்டனர் ..

 

மூச்சு மட்டுமளவு மது குடித்து காது கிழியும் வண்ணம் பாட்டுடன்   அனைவரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்…

 

அவந்திகாவும் வந்திருந்தாள்.. ஆவலுடன் சில ஆண்களும் பெண்களும் மதுவை அருந்தாது வெறும் ஜூஸினை மட்டும் குடித்துக்கொண்டு சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர் ..

 

நேரம் ஆக ஆக அவந்திகாவிற்கு தலை வலிப்பது போலானது… அவளுக்கு இது போல் இடங்கள் எல்லாம் பிடித்ததில்லை…

 

கம்பெனியில் பார்ட்டி என்றால் அவ்வப்போது அழைப்பார்கள் தான் ..ஒரு சில முறை கலந்து கொள்வாள் பெரும்பாலும் தவிர்த்து விடுவாள் …

 

இப்போது அலுவலகத்தில் சேர்ந்து முதல் பார்ட்டி இது… தவிர்த்திட முடியாததால் பெயருக்கு என்று வந்திருந்தாள்…

 

அங்கு காதை கிழியும் பாட்டில் எரிச்சல் தான் உண்டானது அவளுக்கு.. அவளுடன் இருந்தவர்களும் முகத்தை சுழித்துக் கொண்டு ,

 

“காது வலிக்குது இது மாதிரி பார்ட்டி அரேஞ்ச் பண்றதுக்கு பதிலா பேசாம ட்ரிப் ஏதாவது பாஸ் அரேஞ்ச் பண்ணி இருந்திருக்கலாம்.. ஃபேமிலியோட போயிட்டு வர நல்லா இருந்திருக்கும் ..இப்ப பாரு கல்யாணம் ஆகாதுங்க கல்யாணம் ஆனதுன்னு எல்லாம் சேர்ந்து எப்படி ஆட்டம் போடுதுங்கன்னு ..” என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்…

நேரத்தை பார்த்த அவந்திகா பெருமூச்சுடன் தான் கிளம்புவதாக கூறி விட அவளுடன் ஒரு சிலரும் வெளியேறி விட்டிருந்தனர் …

 

தன் காரினை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டினை நோக்கி செல்ல மேற்பட்டவளுக்கு அப்போது தான் ஞாபகத்திற்கு ஒரு விஷயமே வந்து தொலைத்தது.. 

அலுவலக வேலைச் சம்பந்தமான பென்ட்ரைவ் ஒன்றை அவள் அலுவலகத்திலேயே வைத்து விட்டு வந்து இருந்தாள்…

 

நாளை விடுமுறை…பெரிதாய் வீட்டில் வேலை ஏதும் இல்லாததால்  அந்த வேலையை முடித்தாக வேண்டும் …பார்ட்டியில் இருந்து அப்படியே  அலுவலகத்திற்கு சென்று பென்ட்ரைவை கொண்டு வர வேண்டும் என நினைத்து இருந்தாள்…

 

இப்போது அதை மறந்து விட்டு பாதி வழி  வரை வீட்டினை நோக்கி வந்திடவும் தான் தலையிலேயே அடித்துக் கொண்டவள் வேகமாக காரினை திருப்பி அலுவலகத்தை நோக்கி வண்டியை விட்டாள்.‌.

 

இன்று இரவு அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்து இருக்கலாம்…விதி யாரை விட்டது…அவளது தலை எழுத்தே இந்த இரவில் தான் மாறப்போகிறது என அவளுக்கு தெரியவில்லையே..!

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top