அரக்கன் 4

அப்படியே அவள் அருகில் தூக்கி போனான்,காலை அவள் எழுந்து கொள்ள முன் அவன் அவளது ஆடையை சரி செய்து விட்டு வெளியோறி விட்டான்……

அவனது கார் மீண்டும் அந்த காட்டை நோக்கி  சென்றது, காட்டில் மறைவான ஒரு இடத்தில் காரை நிறுத்தியவன், காரை விட்டு இறக்கி அடர்ந்த காட்டுப் பகுதியில் நடக்க தொடங்கினான்……

நேராக குகையின் முன் வந்து நின்று பாறையை நகட்டி உள்ளே சென்றவன் அங்கு உள்ள விளக்கை ஒளிற விட்டு அங்கு கிடந்த அவளை பார்த்தான்…

அவள் மயக்கத்தில் கிடந்தாள், அங்கு உள்ள தண்ணீரை அவள் முகத்தில் ஊற்றினான், அவள் மேல் தண்ணீரை ஊற்றவும் பதறி எழுந்தவள்…..

யார் என அவள் பார்க்க அங்கு வர்மன் நின்று கொண்டு இருந்தான்…

அவன்  அருகில் வர பெண்கள் உபயோகிக்கும் “பெர்ஃப்யூம் வாசனை” வர அவனைக் கண்டு வெறுப்பாக முகத்தை சுழித்தாள்,அதை கண்டு கொள்ளாதவன், அவளிடம் உணவு பார்சலை தூக்கி வீசினான்…..

தாராவிற்கு இரண்டு நாட்கள் சாப்பிடாதது வேறுஅவளை எதுவும் யோசிக்க விடாமல் அந்த உணவை அவசரமாக பிரித்து உணவை சாப்பிட ஆரம்பித்தாள்,…  

 அப்பொழுதுதான் உணர்ந்தாள் மிளகாய் தூளில் எண்ணெய் சேர்ந்து உணவுடன் பிரட்டி எடுத்து வந்து இருக்கிறான் என்று,வியிறு, வாய் எல்லாம் எரிய தொடங்கியது……

இரண்டு நாட்கள் உணவு எதுவும் இல்லாமல் இருந்த வயிற்றில் அதிக காரம் பட்டதால் உயிர் போகும் அளவு இருந்தது……

 அவள் துடிப்பதை ஒரு திருப்தியுடன் பார்த்தவன், அவனிடம் அவள் தண்ணீர் கேட்க இதழ் பிதுங்கி தோளை குலுக்கி இல்லை என்று விட்டான்….

தடுமாறி எழுந்தவள் எல்லா இடங்களிலும் தண்ணீரை தேடி அழைந்து பைத்தியம் போல் திரிந்து கொண்டு இருந்தவளை கண்டு குருரமாக சிரித்தான்……

“மிஸ் தாரா ” இதைத்தா தேடுரிங்கள என்று அவன் கேட்க திரும்பி பார்த்தவள் அவனிடம் ஓடிவந்து தண்ணிரை‌ வாங்க போராடினால்……

 அவளை பார்த்தவன் தன் கால்களை காட்ட அவனது காலை பிடித்துக் கொன்று கெஞ்ச ஆரம்பிக்க,போனால் போகட்டும் என்று நினைத்து தண்ணீரை குடுக்க‌ அதை வாங்கி வேகமாக குடிக்க ஆரம்பித்தாள்…..

சற்று அஸ்வாசம் ஆனாலும் இன்னும் காரமாகத்தான், இருந்தது, அவனை பார்த்தவள் தயவு செஞ்சு என்ன விட்றுங்க நான் பார்த்தத யார்கிட்டேயும் செல்ல மாட்டேன் என்று கூறினாள்……

அவள் சொல்லியாதை பெரிதாக கண்டு கொள்ளாமல் மீண்டும் வாயில் நோக்கி நடக்க தொடங்கினான்…,

தாராவோ தன்னை எண்ணி தானே அழுக தொடங்கினாள்…

வெளியே வந்தவன் குகை வாயிலை மூடிவிட்டு தனது கார் நிக்கும் இடத்திற்கு வந்தவன் காரை எடுத்து கொண்டு ஆபீஸ் நோக்கி பயணிக்க தொடங்கினான்…..

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top