இதயம் 1

சென்னையில் ராஜிவ் காந்தி சாலையில், பல நவீன கட்டிடங்களுக்கு மத்தியில் மிகவும் பிரம்பாண்டமாய் அமைந்திருக்கும் ‘தி க்ளாஸிக் மீடியா பிரைவேட் லிமிடெட்’ இந்தியாவிலே தலை சிறந்த விளம்பரப்படங்களைத் தயாரிக்கும் முதல் ஐந்து நிறுவனங்களில், கடந்த இரெண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்த நிறுவனமாகும்.

மயக்கம் கொண்ட சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்த அந்த ரம்மியமான மாலை பொழுதிலும், க்ளாஸிக் மீடியா பிரைவேட் லிமிடெட் மட்டும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.

குளிருட்டப்பட்டிருந்த பிரம்பாண்ட அறையில், பணியாளர்கள் சிலர் குழு குழுவாகப் பிரிந்து குறுக்கும் நெடுக்கும் நடந்த படியும், சிலர் மடிக்கணினியில் எதையோ ஆராய்ந்த படியும், தங்களின் பணியில் தீவிரமாய் மூழ்கிருந்தனர்.

அவர்களது சிந்தனையைக் கலைக்கும் விதமாய் கதவை திறந்துகொண்டு ஆறடி உயரத்தில், அகண்ட தோள்களுடன், அளவான மீசையும், நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் அழகு சேர்க்க, ஆளுமையோடு கூடிய நடையோடு அனைவரையும் பார்த்தபடி உள்ளே நுழைந்த அர்ஜுனை பார்த்து அனைவரும் எழுந்து நிற்க அளவான புன்னகையோடு தன் விழிகளினாலே அவர்களை அமர சொன்னவன் அவர்களுக்கு நடுவே உள்ள இருக்கையில் தானும் வந்து அமர்ந்து கொண்டான்.

பின்பு அனைவரையும் பார்த்து,”ஹவ் ஆர் யு கைஸ்” என்றான் புன்னகைத்தபடி.

“வீ ஆர் ஃபயின் சார்” சோர்வை மறைத்துக்கொண்டு அனைவரும் உற்சாகமாய் கூறினர்.

தன் இதழ் ஓரம் புன்னகைத்தபடி தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்,

” கைஸ் என்னால நல்லாவே புரிஞ்சிக்க முடியுது வீகெண்ட்ல ஆபிஸ் டைம் தாண்டி வேலை பார்க்கிறது ரொம்பக் கஷ்டம் தான், பட் நாம பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பெரிய பலன் வரப்போகுதுன்னு நினைச்சு பாருங்க கஷ்டம் கஷ்டமா இருக்காது

இன்னும் டூ வீக்ஸ் டைம் இருக்குன்னு நினைக்காதீங்க கம்மிங் சண்டே குள்ள ப்ரசெண்டேஷன் ரெடியா இருக்கணும் உங்களை நிரூபிக்கிறதுக்கான ஒரு நல்ல சந்தர்ப்பமா நினைச்சி பண்ணுங்க, முழு உழைப்பையும் முழுத் திறமையையும் குடுங்க இந்தக் காண்ட்ராக்ட் நமக்குக் கிடைச்சா அதுக்கான முழு க்ரிடிட்ஸ்சும் உங்களைத் தான் சேரும். உங்களுடைய இத்தனை நாள் உழைப்பு வீணாகக் கூடாது. டூ யுவர் பெஸ்ட், திங்க் பெட்டர் உங்களால இன்னும் பெட்டரா பண்ண முடியும்” ஊக்கப்படுத்தினான்.

“கண்டிப்பா இந்தக் கான்ராக்ட் நமக்குத் தான் சார்” நம்பிக்கையோடு உறுதி அளித்தனர்.

புன்னகையுடன் அவர்களுக்கு நன்றி கூறியவன் அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் நேரம் அங்கிருந்த ஒரு பணியாளரை தனியே அழைத்து,

“MR விஷ்ணு எங்க? KR கம்பெனியோட ப்ரசெண்டேஷன் ரெடியாகிட்டா இல்லையா?” மெதுவான குரலில் மிதமான கோபத்தோடு கேட்டான்.

“சார் அது”

“கம் ஆன் சூர்யா விஷ்ணு உங்க டீம் தானே, KR கம்பெனியோட ப்ரசெண்டேஷன் உங்க டீமுக்கு தானே அசையின் பண்ணிருந்தேன். ஒரு டீம் லீடரா ப்ரசெண்டேஷன் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூடவா தெரிஞ்சிக்காம இருப்பீங்க” புருவம் உயர்த்தினான்.

“புது ப்ரசெண்டேஷன்ல வொர்க் பண்ணிட்டு இருந்தனால”

“பழசை மறந்துடீங்க” கோபத்தை உள்ளடக்கி அசட்டையாகப் புன்னகைத்தான்.

“———————” தலைகவிழ்ந்து நின்றான்.

“சாரி எதாவது சொன்னீங்களா, எனக்குக் கேக்கலை” வேண்டுமென்றே கேட்டான்.

“சாரி சார்” என்று தயங்கியபடி நின்றவனின் முகத்தை ஆழ்ந்து ஆராய்ந்தவன்.

“போங்க சூர்யா வேலைய பாருங்க, இனிமேல் இப்படி நடக்க கூடாது” என்று எச்சரித்து,

“விஷ்ணு எங்க இருந்தாலும் அவரை உடனே வந்து என்னை பார்க்க சொல்லுங்க” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் நுழையும் நேரம் பார்த்து காரிடாருக்கு அருகே இருக்கும் ஸ்டோர் ரூமில் இருந்து இருந்து வந்த குரலில்,

“இவங்க ஏன் இப்படி கத்திட்டு இருக்காங்க” என்றவன், சில நொடிகள் யோசித்த பின்பு அங்கே சென்று பார்த்தான்.

பதற்றமாக நின்றிருந்த ரிசெப்ஷனிஸ்ட் ரீமாவின் கரத்தை உறுதியாக பிடித்தபடி விஷ்ணு நின்றிருக்க, ஒரு ஐம்பது வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் அவர்களை தாறுமாறாக திட்டிக்கொண்டிருந்தார். ‘வேலைநேரத்தில் ஸ்டார் ரூமில் காதல்’ பார்த்ததுமே அர்ஜுனுக்கு அனைத்தும் புரிந்துவிட நெற்றியை நீவியபடி நடப்பதை மவுனமாய் கவனித்தான்.

“லெட்டர்ல சையின் பண்ணிட்டு ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று இறுகிய குரலில் கூறியவர் அவர்கள் மீதுள்ள தன் பார்வையை அகற்றாது அலைபேசியை எடுத்து தன் காதுக்குக் கொடுத்து,

“மாறன் காரிடருக்கு வாங்க” என்றார் கட்டளையாக.

“மஹிமா மேம் இந்த ஒரு தடவை எங்களை மன்னிச்சிடுங்க மேம், என்னை வேணும்ன்னா வேலைய விட்டு அனுப்புங்க விஷ்ணுவை அனுப்பாதீங்க ப்ளீஸ்”

“ரீமாவை நான் தான் கூப்பிட்டேன் அவ மேல தப்பில்லை நான் வேணும்ன்னா போறேன் மேம் ப்ளீஸ், ஒரு சண்டை அதான் பேச கூப்பிட்டேன், வெறி சாரி ஒர்க் டைம்ல நான் இப்படி பண்ணிருக்க கூடாது மன்னிச்சிடுங்க மேம்” என்று இருவரும் ஒருவருக்காக ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, கம்பெனியின் மனேஜர் வெற்றிமாறன் அர்ஜுனை மரியாதை நிமித்தமாய் வணங்கிவிட்டு , “மேடம்” என்றபடி மஹிமாவின் எதிரே வந்து நின்றார்.

மஹிமாவோ,”இவங்க அக்கௌன்ட்டை செட்டில் பண்ணி அனுப்பிருங்க” என்று கட்டளையாக கூற, மாறனோ காரணம் அறியாவிட்டாலும்,

“எஸ் மேம்” என்றார் வேகமாக.

அதை கேட்டதும்,”மஹிமா மேம் ப்ளீஸ் இந்த ஒருதடவ மட்டும்” என்று கிட்டத்தட்ட விஷ்ணுவும் ரீமாவும் கெஞ்ச, ஆனால் மஹிமாவோ,”அவுட்” என்று சத்தமாக கூறிய மறுநொடி,

“விஷ்ணு KR கம்பெனி டாக்யூமென்ட்ஸ் எடுத்துட்டு என்னை வந்து பாருங்க” என்ற அர்ஜுன், ரீமாவை பார்த்து,”ஒரு ப்ளாக் காஃபி கொண்டுவாங்க” என்று கூற, விஷ்ணு மற்றும் ரீமாவோ முறைக்கும் மஹிமாவையே பயத்துடன் பார்க்க,

“இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீறீங்க சீக்கிரம் டாக்யூமென்ட் எடுத்துட்டு என் கேபினுக்கு வாங்க, ரீமா போங்க நான் சொன்னதை செய்ங்க ரைட் நவ்” என்று அழுத்தமாக அர்ஜுன் கூறியதும் விஷ்ணு மற்றும் ரீமா இருவரும் அவன் சொன்னதை நிறைவேற்ற சென்றுவிட, அர்ஜுனோ ஒருகணம் மஹிமாவை பார்த்தவன் எதுவும் சொல்லாது வேகமாக தன் அறைக்குள் நுழைந்துவிட, அர்ஜுனின் செயலில் ஆத்திரமடைந்த மஹிமாவின் வதனம் அவமானத்தில் கன்றி சிவந்துவிட்டது. மாறனும் எதுவும் சொல்லாது அங்கிருந்து அகன்றுவிட, மஹிமாவோ அர்ஜுனின் அறையை கடுங்கோபத்துடன் பார்த்தவர் விறுவிறுவென ஆபிசில் இருந்து கிளம்பிவிட்டார்.

தனது அறையில், “மெயில் பண்ணிருக்கேன் செக் பண்ணிருங்க” என்றபடி நிமிர்ந்த அர்ஜுன் ஏதோ ஒரு யோசனையில் இருந்த வெற்றிமாறனிடம்,

“அங்கிள் மெயில் பண்ணிருக்கேன்னு சொன்னேன்” என்றான்.

“ஹான் செக் பண்றேன்” என்றபடி தன் நினைவில் இருந்து வெளியே வந்தவரிடம்,

“நீங்க எதுவும் சொல்ல நினைக்கிறீங்களா” என்று கேட்டான் அர்ஜுன்.

அப்பொழுது அவரோ, “அதுவந்து அர்ஜுன் தம்பி நீங்க மஹிமா மேம் கிட்ட பேசிட்டு முடிவெடுத்திருக்கலாமே, மஹிமா மேம் இப்போ கோபமா கிளம்பிட்டாங்க”

“அவங்க என்கிட்ட பொறுமையா பேசுவாங்கன்னு நினைக்கிறீங்க” என்ற அவனது கேள்விக்கு மாறன் பதில் சொல்ல முடியாது நிற்க, அவனோ,

“அவங்க கோபத்தெல்லாம் பார்த்தா முடியுமா அங்கிள், அவங்க ரெண்டு பேரும் வொர்ஸ்ட் எம்பலாயிஸ் ஓன்னும் கிடையாதே, வார்னிங்கோட முடிக்க வேண்டிய விஷயத்தை இவ்வளவு பெருசா ஆக்கிருக்க வேண்டாம். ஒர்க் டைம்ல அவங்க பண்ணினது தப்பு தான் அதான் அவ்வளவு மன்னிப்பு கேக்குறாங்கல்ல சான்ஸ் கொடுக்குறதுல தப்பில்லையே. என்னை கேட்டா எவ்ரி ஒன் டிசெர்வ் செகண்ட் சான்ஸ் அங்கிள்” என்றவனை பார்த்து மென்மையாக சிரித்தவர்,

“நீங்க சொன்னா சரிதான் பா, தேவையில்லாம உங்களுக்குள்ள சண்டை வருமேன்னு தான் சொன்னேன் மத்தபடி, எப்பொழுதும் போல நீங்க எடுத்த முடிவு தான் சரி” என்க,

அதற்கு விரக்தியாக சிரித்தவன், “எல்லா நேரமும் நம்மளால சரியான முடிவை எடுக்க முடியிறது இல்லை அங்கிள்” என்று கூறினான்.

அதற்கு அவரோ, “அப்போ மறுபடியும் உங்களுக்கு பிடிச்ச போல முடிவெடுங்க தம்பி” என்றார்.

“கையவிட்டு போனதுக்கு அப்புறம் முடிவை மாத்தி எந்த பயனும் இல்லை அங்கிள்” வலியோடு கூறினான்.

“கையவிட்டு போனா திரும்ப வராதுன்னு ஏதும் இருக்கா என்ன, உங்களுக்குன்னு இருந்தா அது திரும்பவும் உங்ககிட்ட தான் வரும்” என்றவர், இரவு மீட்டிங்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு தகவல் சொல்லவதாக கூற, அவனோ, “சரி அங்கிள்” என்க, அவர் விடைபெற்றுக்கொண்டு சென்றதும், கடந்த கால நிகழ்வுகள் தன்னை தீண்டிச்செல்ல தன் இமைகளை மூடியபடி அப்படியே அமர்ந்திருந்தான் அர்ஜுன் ராஜ்குமார்.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top