வைஷ்ணவி ஓரளவுக்கு வேலையை முடித்திருந்தாள். சாப்பிடாமல் இருந்ததால் கொஞ்சம் தலை சுற்றலாக இருந்தது… காலை சாப்பிட்ட பழமும் கிரீன் டீயும் இவ்வளவு நேரம் தாக்குபிடித்ததே பெரிய விஷயம். “ரொம்ப பசிக்குதே… சாப்பிடாம உனக்கு என்ன வேலை வேண்டி கிடக்கு” என்று தன்னை தானே திட்டியவாறு ஆத்ரேயனின் அறைக்குள் நுழைந்தாள்.
சென்றதும் தான் அவளின் பசி பல மடங்கு பெருகியது.
ஆத்ரேயன் KFC chicken ஆர்டர் பண்ணி அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் சாப்பிடுவதை பார்த்தவளுக்கு வாயில் எச்சில் ஊறியது .
அவன் சாப்பிடுவதை கண் வெட்டாமல் பார்த்துக கொண்டிருந்ததை கவனித்த ஆத்ரேயன், “என்னுடைய சாப்பாட்டில் கண் வைத்தது போதும் வந்த விஷயத்தை சொல்” என்றான் அப்போது தான் அவளுக்கு தான் வாய் பார்த்துக் கொண்டு இருந்ததை நினைத்து வெட்கம் பிடுங்கி தின்றது.
உடனே சுதாரித்துக் கொண்டு தன்னுடைய டிசைனை காட்டினாள். உடனே அவன் நேரத்தை பார்த்தான்.
மணி 9 ஐ காட்டியது.
“நாட் பேட் மேசையில் வைத்து விட்டு போ” என்றபடி சாப்பிட தொடங்கினான். தனது டிசைனை அவன் பார்க்கவில்லை என்றதும் கோவம் சுர் என்று அவளுக்கு எகிற, “சார் நான் கஷ்டப்பட்டு செய்திருக்கேன்… நீங்க இப்படி நடந்துக்குறது நல்லா இல்லை” என்றாள்.
அவன் அப்போது தான் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்தான். “சோ வாட்?” என்றவன் ஒரு நொடி தாமதிக்காது டிசைனை பிடுங்கி கிழித்து எறிந்து, “ரீ டூ” என்றான்.
அவளுக்கு அதுக்கு மேல் பொறுமை காற்றில் பறந்து போய் விட்டது.
கண்ணில் கண்ணீர் வழிய ருத்ரமூர்த்தியாக நின்று இருந்தவளை பார்த்து அவனுக்கே ஒரு நொடி பயம் வந்து போனது. “லூசா நீ எவ்வளவு கஷ்டப்பட்டு நான் இதை செய்தேன் தெரியுமா?” என்று கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் பொரிந்து தள்ளினாள். சி. இ.ஓ என்ற மரியாதையை அவன் ஒரு நொடியில் இழந்தான்.
மேலும் இவனுக்கு கீழ் வேலை பார்ப்பதை விட பிச்சை எடுப்பது மேல் என்று நினைத்தவளால் அவன் மரியாதை அதள பாதாளத்துக்குள் சென்றது. வேலை போனாலும் பரவாயில்லை இவனை நாக்கை புடுங்குவது போல் நான்கு கேள்வி கேட்டுவிட்டு ராஜினாமா கடிதத்தை கொடுக்கணும் என்று நினைத்தவளின் வாய் மேலும் பொரிய தொடங்கியது.
“நான் தப்பு பண்ணினதுக்கு என்ன தண்டிக்கிறத நான் ஏற்றுக்கொள்ளுவேன்… செய்யாத தப்புக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். நீயெல்லாம் மனுஷன் இல்ல ராட்சசன்.” என்று திட்டி விட்டு நின்றுக் கொண்டே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியவளை அதிர்ச்சியுடன் இமைக்காது பார்த்தான்.
ஆத்ரேயன் கோபக்காரன் தான் ஆனால் கோபத்தை கூட நிதானமாக காட்டுபவன். சாப்பிட்ட சாப்பாட்டை கீழே வைத்தவன், மேசையிலிருந்த டிஷ்யூ பேப்பரினால் கைகளை துடைத்துவிட்டு அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கி வந்தவனை, ‘ரொம்பதான் ஓவரா பேசிட்டமோ’ என்று மனதில் நினைத்தவாறு கண்களில் மிரட்சியுடன் பார்த்தாள்.
அருகில் நெருங்கி வந்தவன் அவள் கண்களில் வழிந்த கண்ணீரை தன் வலது பெருவிரலால் துடைத்தபடி, “இப்போ எதுக்கு அழுகிறாய்… இப்போ பேசினதுக்கு இனி தான் நீ அழ வேண்டி வரும்” என்று சிரித்தவாறே உரைத்தவன் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டியபடி நின்று முகத்தை கடினமாக்கி, “நீங்க ரிசைன் பண்ணலாம் என்ற தைரியத்தில் தானே இப்படியெல்லாம் பேசுறீங்க மேடம்… உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? நீ ரிசைன் பண்ணினாலும் உனக்கு சர்வீஸ் லெட்டர் நான் தான் சைன் பண்ணி தரணும். நான் எழுதப்போறத வச்சு தான் உனக்கு அடுத்த வேலை கிடைக்கும். அது கூட தெரியாத முட்டளா நீ? உன் முட்டாள் தனமான பேச்சை வேற யார்கிட்டயும் வச்சுக்கோ… நான் நினைத்தால் உன் எதிர் காலத்தையே அழித்து விட முடியும்… வாய பொத்திட்டு இருக்க முடியுமென்றால் இங்கே இரு இல்லாட்டி இப்போவே வெளியில் போ… ஆனால் அதுதான் நீ வேலைக்கு செல்லும் கடைசி நாளாக இருக்கும்…” என்றவன் ஆங்கிலத்தில் சில கெட்ட வார்த்தைகளையும் அவளை நோக்கிச் சொன்னான் அவளை பதிலுக்கு காயப்படுத்தி விடும் நோக்கத்தில்.
அவன் பேசுவதை கேட்டவளின் மூளை வேலை நிறுத்தம் செய்தது. ‘இந்த ராட்சசனுக்கு கீழேவா நான் வேலை செய்ய வேண்டும்? என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டான்’ என்று வலியுடன் நினைத்தவளின் கண்களிலும் அந்த வலி பிரதிபலித்தது.
அவளும் கெட்ட வார்த்தையில் மனதுக்குள் திட்டுவாள் தான் அனால் இப்படி யாரையும் நோகடிக்கும் நோக்கத்துடன் திட்டியதில்லை. தன்னை வெறித்து கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவளின் முன்னே சொடக்கு போட்டு அவளை சுய நினைவுக்கு கொண்டு வந்தான்.
“சார்… ” என்றபடி கண் கலங்க பார்த்தவளுக்கு அடுத்த வார்த்தை வராமல் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
பலமாக சிரித்தபடி, “இப்போ தான் நான் உனக்கு சார் ஆக தெரியுறேனா?” என்றவனின் மேல் அவள் மயக்கமுற்று தொய்ந்து விழுந்தாள். சாப்பிடாமல் இருந்ததாலும் அதிர்ச்சியான விஷயங்களை கேட்டதாலும் அவள் கண் சொருக மயக்கமுற்றிருந்தாள். அவள் மயக்கத்தில் அவனும் சற்று ஆடி தான் போனான். தோள்களில் கைகளை வைத்து அவளை நிலைபடுத்தியவன், அவளை அணைத்தபடி தூக்கிக் கொண்டு அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்தான்.
‘என்ன ரொம்ப படுத்துறடி நீ’ என்று மனதுக்குள் நினைத்தவன், “இவளெல்லாம் வேலை செய்யலனு யாரழுதா?” என முணுமுணுத்துவிட்டு, “வைஷ்ணவி… வைஷ்ணவி…” என்று கன்னத்தில் தட்டினான். அவள் எழவில்லை என்றதும் தன்னுடைய தண்ணீர் பாட்டிலை மேசையிலிருந்து எடுத்து வந்தவன், அவள் முகத்தில் தெளித்தான்.
கண் திறந்து பார்த்தவள் கண்ணில் வலி அப்பட்டமாய் தெரிந்தது. முதல் முறை அவளின் வலி அவனுக்கும் வலியை உருவாக்கியது.
“சாப்பிட்டு வேலை பார்க்க வேண்டியது தானே… இது மட்டும் தான் இருக்கு சாப்பிடு.” என்றவன் தான் கடித்த சிக்கன் துண்டை அவள் முன் நீட்டினான்.
அவள் தயங்கியபடி பார்க்க, “ஒரு நாள் சாப்பிட்டா ஒன்றும் நீ குண்டாகிடமாட்டாய்” என்றான்.
அவள் மீண்டும் தயங்கி, “அது நீங்க சாப்பிட்டது சார்” என்றாள். அவள் சொல்லுவதை உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் கையில் சிக்கன் பீஸை திணித்து அனல் பறக்கும் முகத்துடன், “ரொம்ப படம் காட்டாதே, என் எச்சில் உனக்கென்ன புதுசா…” என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவன் வார்த்தைகளை முழுங்கிவிட்டு விறு விறுவென்று அறையை விட்டு வெளியேறினான்.
அவனுக்கு அவனை சமன்படுத்த நேரம் தேவைப்பட்டது.
வாசலில் வந்து நின்றவன் சிகரெட்டை எடுத்து ஒரு கையால் புகைத்தபடி ஒற்றை கையை பாண்ட் பாக்கெட்டுக்குள் விட்டு தன் கோபங்களை கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தான். அவனின் வார்த்தைகள் அவளுக்கும் கோபத்தை தூண்டியது போலும், தன் கோபம் முழுவதையும் சாப்பாட்டை சாப்பிடும் வேகத்தில் காட்டினாள். விரைவாக சாப்பிட்டவள், தண்ணீரை அருந்திவிட்டு சோபாவிலேயே சற்று நேரம் கண் மூடி அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்தவன் அவள் கண் மூடி அமர்ந்த்திருப்பதை பார்த்து சொடக்கு போட்டு அவளை எழுப்பினான்.
“இது என்ன உன் வீடா ? இங்கயே தூங்கி விட முடிவெடுத்து விட்டாயா?” என்றுரைத்தவன் வைத்த கண் வாங்காமல் அவளை கூர்ந்து நோக்கினான்.
‘மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிட்டு போல… ஆஞ்சநேயா எனக்கேன் இந்த சோதனை?’ என்று மனதுக்குள் மறுகியவள், “இல்ல சார் தனியா தூரம் போகணும்” என்றவாறே கைகளை பிசைந்துக் கொண்டிருந்தாள்.
இருந்த படியே பேசியவளை கண்டவன், “உனக்கு மரியாதை என்றாலே என்ன வென்று தெரியாதா? நீ பேசிய பேச்சுக்கு நான் உன்ன ட்ரோப் பண்ணனும் என்ற நினைப்பு வேற இருக்கு… எல்லாம் என் தலைவிதி.” என்று தலையில் அடித்து கொண்டவன், “சரி வந்து தொலை” என்றவாறு முன்னோக்கி நடந்தான்.
அப்போது தான் இருந்தபடி அவனிடம் கதைத்து வைஷ்ணவிக்கு உறைத்தது. “சரியான லூசுடி நீ…” என்று தன்னை தானே கடிந்தவள் கைப்பையை தனது அறைக்குள் சென்று எடுத்தபடி அவன் பின்னால் ஓடினாள்.
வண்டியை எடுத்துக் கொண்டு வந்ததும் அதிலே பின்னால் ஏறி அமர்ந்தவள், “அம்மணிக்கு நான் டிரைவர் ஆக இருக்க வேண்டும் என்று ஆச வேற இருக்கா?” என்று கேட்டான்.
உடனே முன்னுக்கு வந்து எறியவளை பார்த்து, “ஓஹோ எனக்கு ஜோடியாக பக்கத்துல இருக்க ரொம்ப ஆசை போல” என்றான் அவளை சீண்டுவதற்காக.
லூசா நீ? என்பது போல் அவனை பார்த்து, “அப்போ நான் டிக்கியில் போய் உட்காரவா?” என்று கேட்டாள் . அதனை கேட்டு பெரு மூச்சு ஒன்றை விட்டவன், “என் கார் டிக்கியில் உட்கார கூட உனக்கு தகுதி இல்லை” என்றான் அவளை காயப்படுத்துவதற்காக, ஆனால் அவளோ அதை சட்டை செய்யாது, “உங்க கார் டிக்கியில் உட்கார என்ன குவாலிஃபிகேஷன் இருக்கணும் சார்?” என்று பாவமாக வினவினாள்.
‘நான் பேசுறது இவளுக்கு உண்மையாவே புரியலையா?இல்லை புரியாத போல நடிக்கிறாளா ?’ என்று அவன் சிந்திக்க, முடிந்தால் என்னை அழ வைத்துப்பார் என்ற தோரணையில் அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன், “கொழுப்புடி உனக்கு உடம்பெல்லாம் கொழுப்பு…. உன் வாயை கொஞ்சம் மூடிட்டு வாரியா?” என்று எரிச்சலாக மொழிந்தான்.
“ஓகே சார்…” என்று தாழ்மையாக உரைத்தவள் இருகைகளாலும் வாயை பொத்தியபடி வந்தாள். இதை பார்த்தவனுக்கு எங்கேயாவது தலையை முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.
“நீ எத்தனை கிலோ?” என்று கேட்டான் அங்கிருக்கும் மௌனத்தை கலைக்கும் பொருட்டு… அதற்கு அவள் பதில் சொல்லாமல் வாயை பொத்தியபடி இருந்தாள். அவளுக்கு தான் யார் மேலும் பயமில்லையே. தனக்கு பிடித்ததை செய்யும் சுதந்திரமான பெண்ணவள். அவன் கேட்டதற்கு சைகையால் ஏதோ காட்டினாள். பொறுமை இழந்தவன், “வாய்க்குள்ள என்ன கொழுக்கட்டையா? வாய தொறந்தா உன் பல்லு கொட்டிருமோ?” என்று கோபத்தில் சீறினான்.
“நீங்க தானே வாயை மூடிட்டு வர சொன்னீங்க… வாயை தொறந்தாலும் குற்றம் வாயை தொறக்கவிட்டாலும் குற்றமா? பெருமாளே எனக்கேன் இப்படி ஒரு சோதனை? உங்களை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை சார்” என்றாள்.
“உன்னை போல இருப்பவர்களுக்கு எதுவும் புரியாது” என்றான் குரல்களில் வருத்தத்தை தேக்கி.
அதில் ஒரு கணம் மௌனம் காத்தவள் உடனே சுதாரித்துக் கொண்டு, “என்னை போல என்று எதை சொல்றீங்க சார் ?” என்றாள் .
“உன்கிட்ட இப்போ பேசிட்டு இருக்கேன் பாரு என்னை செருப்பால அடிக்கணும்…” என்று கோபமாக உரைத்தவன் அதற்கு பிறகு மறந்தும் வாயை திறக்கவில்லை. அவள் தங்கி இருக்கும் இடத்தை பற்றி ஒரு கேள்வி கூட கேட்காமல் அவள் பிளாட் முன்னாடி கார் நின்றது.
“என் பிளாட் உங்களுக்கெப்படி தெரியும் சார்?” என்றாள் கண்களில் கேள்வியுடன்… “உனக்கு கேள்வி கேட்காமலே இருக்க முடியாதா ? அப்பப்பா என்ன வாய் உனக்கு… நீ பேசும் அந்த வாயை எப்படி அடைப்பது என்று எனக்கு தெரியல…” என்றவனின் பார்வை ஒரு கணம் அவள் உதட்டில் நிலைத்து நின்றது. “ஓகே சார் நான் கிளம்புறேன். தேங்க் யூ போர் யுவர் ஹெல்ப்” என்று ஓட முயன்றவளை நோக்கி, “கொஞ்சம் பொறு காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்றவன் அவள் ஏதோ சொல்ல முயலும் முன் காரை கிளப்பி இருந்தான்.
காரை பார்க் பண்ணி விட்டு கையில் திறப்பை சுழற்றியபடி அவளை நோக்கி வந்தவன், “வா போகலாம்” என்றான்.
“சார் என்ன பண்ணிட்டு வந்திருக்கீங்க… இது இங்கே இருப்பவர்கள் பார்க் பண்ணும் இடம்… நீங்க இப்படி பார்க் பண்ணினா எங்களை தான் கேள்வி கேட்பாங்க.. நான் ஒன்றும் குழந்தை இல்லை… எனக்கு போக தெரியும்… சொன்னா கேளுங்க எதுக்கு இப்படி என் பின்னால் வந்து உயிரை எடுக்குறீங்க?” என்று மூச்சு விடாமல் பேசியவளை கூர்மையாக பார்த்தவன், “பேசாம வாயை மூடிட்டு வாடி…” என்றபடி முன்னோக்கி தாவி நடந்தான்.
அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னால் ஓடி வந்தவள், “இப்போ எதுக்கு சார் முன்னால வரீங்க? யாரும் பார்த்தா உங்களை கேள்வி கேக்கமாட்டாங்க எங்களை தான் கேட்பாங்க… நாங்க இங்கே மானம் மரியாதையோட இருக்கிறோம் சார்… நீங்க என்னோட இந்த நேரத்தில என் பிளாட்க்கு வர்றது சரியில்லை சார்” என்று புலம்பியபடி அவனுடன் லிப்ட் இல் நுழைந்தாள்.
“சார் இப்போ வெளியே போகப்போறீங்களா இல்லையா?” என்று அவள் கூற,அவனுக்கு பொறுமை காற்றில் பறந்தது.
“வேணும்னா நீ வெளியே போடி” என்று கர்ஜித்தவன் அவளை வெளியில் தள்ளினான். எதிர் பார்க்காத தாக்குதலில் வெளியில் விழுந்தவள்,
அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் . அவளை சட்டை செய்யாமல் விசிலடித்தபடி லிஃப்டை மூடினான். கண்களில் கோர்த்திருந்த நீர் வழிய அவள் நிற்கும் போது லிப்ட் திறந்தது.
“கம் இன்” என்றான்.
“நான் வரமாட்டேன்” என்று விம்மியபடி குழந்தை போல நின்றவளை பார்த்து லிஃப்டை ஹோல்டில் போட்டு விட்டு கைகளை பாக்கெட்டுக்குள் வைத்தபடி, “யுவர் விஷ்… பட் நான் ஒன்றும் உன்னை கொண்டு விடுவதற்கு இங்கே வரல… அதற்கு நீ ஒர்த் உம் இல்லை. ஐ ஹவ் மை ஓன் பிளாட் ஹியர்… உன் வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளி 3D ல தான் நான் இருக்கிறேன்… ஓவராக கற்பனை பண்ணாமல் வேலையை பாரு… இருந்தாலும் உனக்கு ஓவர் கான்பிடென்ஸ் தான்…” என்றபடி லிப்ட் ஐ மூடி புறப்பட்டான் தனது தளத்தை நோக்கி.
அவளுக்கு ஒரு பக்கம் அவமானமாகவும் வேதனையாகவும் இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. கீர்த்தனா பார்த்தால் கேள்வி கேட்டு குடைவாள் என்ற பயத்தில் டிஷ்யூ பேப்பரினால் கண்களை துடைத்தவள் மன சுமையுடன் தன் அறையை நோக்கி நடந்தாள்.
ஆத்ரேயன் மனம் வேதனையில் உழன்றுக் கொண்டிருந்தது. தான் ஏன் அவளை காயப்படுத்துகிறோம் என்று அவனுக்கு விளங்கவில்லை. இனி அவளுடன் பேசுவதில்லை என்று முடிவெடுத்தபடி கோட்டை கழட்டி சோபாவில் போட்டவன் உடை மாற்றாமல் அப்படியே கட்டிலில் தொப்பென்று விழுந்து உறங்கிவிட்டான்.
வீட்டுக்கு வந்ததும் தான் வைஷ்ணவி கவனித்தாள் கீர்த்தனா இருட்டில் அமர்ந்திருந்ததை. லைட்டை போட்டு பார்த்ததும் தான் விளங்கியது கீர்த்தனாவின் அழுத முகம். ‘நமக்கு போட்டியா அழுதிருக்கிறாள் போல’ என்று வைஷ்ணவியின் குறும்பு மனம் நினைத்துக்கொண்டது.
“என்னடி ஆச்சு? ஏன் இப்படி முகம் வீங்கி இருக்கு அழுதியா?” என்று கேட்டதுக்கு கீர்த்தனா, “ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்று கத்தியபடி கட்டிலில் விழுந்து படுத்துவிட்டாள். “எனக்கு இன்னைக்கு நாளே சரி இல்லை… அவங்கவங்க பிரச்சனைக்கு நம்ம தல உருளுது” என்று புலம்பியபடி குளிக்கச் சென்றாள்.
எதனையும் இலகுவாக எடுத்துக் கொண்டு உடனே இயல்புக்கு திரும்பி விடும் வைஷ்ணவிக்கே இன்று எல்லாம் யோசித்து கொஞ்சம் தலை வலிப்பது போல் இருந்தது. மாத்திரையை போட்டவள் கேமை விளையாடிக் கொண்டு படுக்கையில் சரிந்தாள்.
அடுத்தநாள் எல்லாருக்கும் பாரமான மனதுடன் விடிந்தது. கார்த்திக்குக்கு தயக்கமாக இருந்தது கீர்த்தனாவின் முகத்தில் முழிப்பதற்கு. கீர்த்தனாவுக்கு கார்த்திக்குடன் செல்வது பிடிக்கவே இல்லை. நண்பியிடம் சொன்னால் துருவி துருவி கேட்பாள் என்ற காரணத்துக்காக எதுவும் சொல்லாமல் இருந்தாள். அவள் முகம் சந்தோஷத்தை தொலைத்திருந்தது.
அடுத்த நாள் காலையில் கார்த்திக் தயக்கத்துடன் வைஷ்ணவி மற்றும் கீர்த்தனாவின் வாசலில் நின்றிருந்தான்.
அவனுக்கு தெரியும் காலிங் பெல் அடித்தால் திறக்க போவது கீர்த்தனா தான் என்று. அதனால் சத்தம் போடாமல் கதவு பக்கம் முதுகு காட்டி தொலைபேசியை நோண்டியபடி நின்றிருந்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் மனது தாறுமாறாக அடித்துக் கொண்டது.
இயல்பு நிலைக்கு மாறிய வைஷ்ணவி தனது குறும்புத்தனத்தை தொடங்கிவிட்டாள். முதுகு காட்டியபடியே முன்னால் உள்ள லிப்ட் ஐ நோக்கி நடந்தவனை பார்த்து, “என்ன சார் முதுகு பாபா போல நாங்க உங்க முதுகை தான் பார்த்திட்டு நடக்கணுமா ?” என்றபடி கலகலவென சிரித்தாள். யாரும் சிரிக்காததை கண்டு, ‘ரொம்ப மொக்கையா ஜோக் சொல்லிடமோ ?’ என்று தனக்கு தானே யோசித்துக்கொண்டிருந்தாள்.
லிஃப்டுக்காக காத்திருக்கும் போது தான் ஆத்ரேயனும் அவ்விடத்தை அடைந்தான். அவனை கண்ட கார்த்திக், “சார் இங்கேயா நீங்க இருக்கிறீங்க?” என்று கேட்டான். “எஸ்” என்று சினேகமாக கீர்த்தனாவையும் கார்த்திக்கையும் பார்த்து புன்னகைத்தவன், வைஷ்ணவி இருப்பதை கண்டுக்கவே இல்லை. ‘என்ன கொடுமைடா இது? நாம யார் கண்ணுக்கும் தெரியறதுமும் இல்லை நாம பேசினால் யாருக்கும் கேக்குறதும் இல்லை’ என்று சலித்தபடி லிஃப்டுக்குள் ஏறினாள்.
லிஃப்ட்டில் ஏற்கனவே ஆட்கள் இருந்ததால் இடம் கொஞ்சம் நெருக்கடியாக இருந்தது. கீர்த்தனாவும் கார்த்திக்கும் நெருங்கி நிற்க வேண்டி ஏற்பட்டது. நேருக்கு நேர் நின்றபோதும் கூட அவன் முகத்தை பார்க்காமல் தலை குனிந்தபடி நின்றவளின் நெற்றியில் பட்ட அவன் மூச்சுக்காற்று முதல் நாள் நடந்ததை நினைவுபடுத்தியது. பதறியபடி மற்றப்பக்கம் திரும்பி நின்றாள். அவனும் அதே தான் நினைத்தானோ தெரியவில்லை அவனும் மற்றைய பக்கம் திரும்பினான்.
திரும்பியதும் தான் கவனித்தான் தனக்கு மிக நெருக்கத்தில் ஆத்ரேயன் முகம் இருந்ததை. “இதென்ன கஷ்டகாலமப்பா…” என்று முணுமுணுத்தவாறே தலையை எல்லா பக்கமும் சுழற்றினான். “என்ன கார்த்திக் இன்று தான் லிப்ட் ஐ புதுசா பார்க்குறீங்க போல” என்று கிண்டலடித்தவாறே ஆத்ரேயன் லிஃப்ட்டில் இருந்து வெளியேறினான். “ஹி ஹி…” என்றவாறு கார்த்திக்கும் சிரித்தவாறே சமாளித்தான். ‘இந்த நெட்டையனின் மொக்கை ஜோக்குக்கு மட்டும் பல்லை காட்டுறதை பாரு’ என்று மனதுக்குள் கார்த்திக்கை திட்டி தீர்த்தாள் வைஷ்ணவி . அவள் ஜோக்குக்கு அவன் சிரிக்கவில்லை என்ற ஆதங்கம் அவளுக்கு.
வழமையாக முன்னுக்கு ஏறும் கீர்த்தனா பின்னுக்கு ஏறினாள். வைஷ்ணவியும் எதுவும் கேட்காமல் முன்னுக்கு ஏறினாள். “ஏன் டி உனக்கு என் மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கா?” என்றவாறு திரும்பி கீர்த்தனாவை பார்த்தவள், “கீத்து என்ன இது? உதட்டில் காயமா இருக்கு? என்னாச்சு? யாராவது கடிச்சிட்டாங்களா?” என்று கேலியும் அக்கறையும் கலந்து வினவினாள். காரை ஸ்டார்ட் பண்ண போன கார்த்திக்கின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றது. கண்ணாடி மூலம் அவளுதட்டை பார்த்தவன் மிருகத்தனமான தன் செயலை நினைத்து தன்னை தானே கடிந்துக் கொண்டான்.
கண்ணாடி ஊடாக முறைத்த கீர்த்தனாவினை பார்த்து பயந்து தலையை குனிந்துக் கொண்டான்.
‘இந்த வைஷ்ணவிக்கு எப்போ என்ன பேசுறதென்றே தெரியல… புதுசு புதுசா பிரச்சனையை கொண்டு வருகிறாள்’ என்று மனதுக்குள் கடிந்தவாறே காரை ஓட்ட தொடங்கினான். நடந்ததை சரியாக கணித்த தோழியை வெற்று பார்வை பார்த்தவள், “ஆமாடி கரப்பான் கடித்துவிட்டது” என்றாள் சிரிக்காமல்.
‘என்னை பார்த்தால் கரப்பான் போலவா இருக்கு’ என்று வெளியில் கேட்கமுடியாத கேள்வியை மனதுக்குள் கேட்டுக் கொண்டான் கார்த்திக். “என்னவோ போ” என்று சலித்தபடி வைஷ்ணவி தொலைபேசியை நோண்ட தொடங்கிவிட்டாள்.