ஒன்று இரெண்டு நிமிடங்கள் அமைதியாக அவளை கவனித்த திலிப் வேணி எதுவும் பேசாமலே தலை கவிழ்ந்த நிலையிலே அமர்ந்திருக்கவும், சிறு புன்னகையுடன்
“என்ன புடிச்சிருக்கா” என்று வினவினான். ஆணவன் திடிரென்று இவ்வாறு கேட்கவும் ஒருவித படபடப்புடன் நிமிர்ந்து பார்த்த பெண்ணவள் அவனது ஊடுறுவும் பார்வையில் முகம் சிவக்க குனிந்து விட,
“நீங்க தான் அழகுன்னு பார்த்த உங்க வெட்கம் அதை விட அழகா இருக்கே” என்று குறும்பாக சிரிக்க, வேணிக்கு ஒன்றுமே ஓட வில்லை. எங்கையாவது சென்று ஒளிந்து கொள்ளலாம் போல இருக்க, முகம் நன்கு சிவந்து விட்டது. “எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு, உங்களுக்கும் என்னை புடிக்கும்ன்னு நினைச்சு தான் வந்தேன் ஆனா நீங்க பதில் சொல்லாமல் இருக்கிறதை பார்த்தா உங்களுக்கு என்னை பிடிக்கலை போல, சரிங்க நான் கிளம்புறேன்”என திலீப் வேண்டுமென்றே தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள,
“அச்சோ புடிச்சிருக்குங்க”என்று வேணி பதற்றத்தில் சொல்லிவிட, தன் கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு அவளை அழுத்தமாக பார்த்த திலிப்,
“ம்ம் உங்களை பேச வைக்க ஏதாவது ஷாக் ட்ரீட்மெண்ட் தேவை படுது” என்று சொல்லி சிரிக்க இப்பொழுது வேணியும் சிரித்தாள். பெண்ணவளை சில நொடிகள் இமை தட்டாமல் பார்த்தவன்,
“அழகா இருக்கீங்க வேணி, வெட்கப்படும் பொழுது, சிரிக்கும் பொழுது, இதோ இப்படி பார்க்கும் பொழுது கூட அவ்வளவு அழகா இருக்கீங்க. வேணி யு ஆர் டம் கார்ஸியஸ்” மனம் உருகி கூறினான். ஆணவனின் கவிதை பேச்சில் பெண்ணவளும் மயங்கினாள்! இப்பொழுது அவளது மென்கரங்களை மென்மையாக பற்றி தன் கரங்களுக்குள் வைத்து கொண்டவன், பெண்ணவள் அதிர்ந்து தன் கரத்தை எடுத்து கொள்ளும் முன்பே,
“இனிமே உங்களுக்காக யார் இருக்காங்கன்னு நீங்க நினைக்காதீங்க, நான் இருக்கேன். சகலமுமா நான் இருக்கேன் வேணி கண்ணுல வச்சி பார்த்துகிறேன். ஐ லவ் யு வேணி” என்று அவள் முன்பு மண்டியிட்டு சொல்ல, அவளது விழிகளின் ஓரம் துளிர்த்த கண்ணீர் அவளது மனப்போராட்டத்தை சொல்ல அதை துடைத்துவிட்டவன்,
“இனிமே இந்த கண்ணீரை நான் பார்க்கவே கூடாது” என்றான். ஆக ஆணவனின் உருக்கமான காதல் பேச்சில் முதலில் சிந்தனை இழந்தாள்! அவன் கரங்களுக்குள் தன் கரம் சிறைப்பட்டிருப்பதை மறந்தாள்! பின் தன்னையே மறந்தாள்! இறுதியில் காதலில் விழுந்தாள்!
“இதோ வேணியும் திலீப்பும் வந்துட்டாங்க” என்ற திலீப்பின் தாய் மகேஷ்வரி, “அப்புறம் நாங்க கிளம்புறோம் மா வீட்டுக்கு போய்ட்டு பெரியவங்க கிட்ட பேசிட்டு என்னைக்கு நிச்சயம் வச்சிக்கலாம்ன்னு சொல்றோம்” என்று ஜானகியிடம் கூறியவர், “வேணி கிளம்புறேன் மா” என்றவர் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து செல்ல, அவரை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த ஜானகிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
“நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி வேணி நல்லா இடம் அமைஞ்சிருக்கு எப்பவும் சந்தோஷமா இருக்கனும்” என்றவர்,
“அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் நல்லா வரன் வந்துருச்சுன்னா நான் ரெண்டு வருஷத்துக்கு நிம்மதியா இருப்பேன்” என்று அஜூதியாவையும் இந்திராவையும் பார்த்து சொல்ல,
“என்னது கல்யாணமா ஆள விடுங்க, இன்னைக்கு நைட் பாம்பே கிளம்புறேன் இந்த இன்டெர்வியூவ் மட்டும் ஓகே ஆச்சு உங்க யார் கண்ணுலையும் நான் படவே மாட்டேன்.” என்ற இந்திரா வழக்கம் போல துடுக்காக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, ஒரு பெருமூச்சுடன் அஜூதியாவை பார்த்த ஜானகி,
“நீ என்ன முழிக்கிற அவளை மாதிரி நீயும் ஏதாவது சாக்கு சொல்ல போறியா”
“கல்யாணம் இப்போ வேண்டாம் மா நான் பெரிய டான்சர் ஆகணும்னு இருக்கேன்” என்று சொல்ல,
“டான்ஸ்க்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் அது ஒருபக்கம் நடக்கட்டும். ஆன கல்யாணம் பண்ணியே ஆகணும் உனக்குன்னு ஒருத்தன் வந்தா அவன் உன்னை பார்த்துக்க போறான்.”
“ஏய் உனக்கே உனக்காக ஒருத்தன் வேணும் அவன் உனக்காக எதை வேணும்ன்னாலும் செய்யணும் உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும் இப்படியெல்லாம் உனக்கு ஆசையே இல்லையா அஜூ” என்று வேணியும் ஜானகியுடன் இணைத்துக்கொண்டு சொல்ல,
‘உனக்கே உனக்காக ஒருத்தன் வேணும் அவன் உனக்காக எதை வேணும்ன்னாலும் செய்யணும்’ என்று வேணியின் சொற்களை கேட்ட மறுநொடி பெண்ணவளின் மனதிற்குள் ராவணனின் இறுகிய முகம் மின்னலை போல சட்டென்று வந்து மறைய அஜூதியா அதிர்ந்துவிட்டாள்.
“அப்படி தான், நல்லா சொல்லு வேணி, நீ தான் இந்திராவுக்கும் அஜூதியாவுக்கும் எடுத்து சொல்லணும்” என்ற ஜானகி அஜூதியாவின் தலையை வாஞ்சையுடன் தடவி,
“உனக்கும் இது போல எல்லாம் நடக்கணும்ன்னு எனக்கும் ஆசை இருக்கும்ல” என்று சொல்ல, அஜூதியா மீண்டும் அதிர்ந்தாள், அவளின் அவன் அவள் கண்முன்னே நின்று கொண்டு வசீகரமாய் சிரிக்க, சட்டென்று பெண்ணவள் கண்களை மூடிக்கொள்ள, இப்பொழுது அவளது மனக்கண்ணிலும் அவளின் மாயவனே! ஒற்றை கண்ணடித்து அழகாய் சிரித்தான்! அஜித்தியா அசந்துவிட்டாள்.
“அஜூ நான் சொல்றது புரியுதா?”இரெண்டு மூன்று முறை ஜானகி உலுக்கவும், “ஹான்” மாயவன் காட்டிய மாயாஜாலத்தில் இருந்து விழித்து கொண்டவள் மலங்க விழிக்க,
“அதான் இதுவரை இரெண்டு மூண்டு சம்பந்தம் வந்துச்சு நீ வேண்டாம்ன்னு சொன்னதுனால உன்னை கட்டாயப்படுத்த விரும்பாம நான் விட்டுட்டேன் ஆனா இனிமே அப்படி இல்லை நல்லா சம்பந்தம் வந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும் ஓகேவா. வேலை கூட எப்பவும் கிடைக்கும் ஆனா கல்யாணம் அப்படி கிடையாது” என்று இன்னும் பல ஜானகி பேசிக்கொண்டே இருக்க எங்கே அது அஜூதியாவின் காதில் விழுந்தால் தானே அவள் தான் ஜானகியின் பின்னால் நின்று கொண்டு தன்னை கொஞ்சம் கொஞ்சமாய் சிறையெடுத்து கொண்டிருக்கும் தன் மாயவனை அல்லவா தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தாள்.
விட்டால் போதும் என தான் இருக்கும் அறைக்குள் வந்து கதவுக்கு தாளிட்டவளுக்கு, எதை பற்றியும் சிந்திக்காது அந்த பரந்தாமனிடம் இருந்து தன்னை கம்பிரத்துடன் காப்பற்றி சென்றது, தன் தேவையை புரிந்து தனக்காக ஆடை வாங்கி கொடுத்தது என அன்று ராவணன் செய்த ஒவ்வொன்றும் இன்று இந்த நொடி நினைக்க நினைக்க ஆணவனின் நிமிர்வு பெண்ணவளை பயங்கரமாக ஈர்த்தது.
பரந்தாமனை அனல் தெறிக்க பார்த்தபடி துப்பாக்கியால் சுட்டது அன்று பயத்தை கொடுத்தது ஆனால் இப்பொழுது பிடித்தது. கொலை செய்வது பாவம் என தெரிந்தும் பிடித்தது. அந்த பாவத்தை செய்தவனை மிகவும் பிடித்தது. அதுவும் தனக்காக, தனக்காக மட்டுமே செய்தவனை இதோ அளவுக்கு அதிகமாக பிடிக்கிறது.
தன்னை அழுத்தமாக பார்த்த அந்த கனல் விழிகள் அன்று அச்சத்தை கொடுத்தது ஆனால் இன்று இந்த நொடி பெண்ணவளை ஏதோ செய்து திக்குமுக்காட வைத்தது. ஆக அவன் கழுத்தில் இருந்த சர்ப்ப வடிவு டாட்டூ துவங்கி அவன் முதுகில் பாதி தெரிந்த ராஜாளியின் ரெக்கை போன்ற வடிவு கொண்ட டாட்டூ என அவன் தொடர்புடைய அனைத்தும் அவளது நினைவுகளை நிறைத்து முதல் முதலாக பெண்ணவளுள் என்னென்னவோ செய்தது.
விழி மூடினால் விழி திறந்தால் என தன்னை விடமால் துரத்தும் ராவணனையும் அவனது நினைவுகளையும், அவனின் கம்பீரம் நிறைந்த முகத்தையும் விரட்ட முயன்று, வெற்றிகண்டவள் ‘தேவையில்லாததை யோசிக்க கூடாது அஜூ, இது சரியில்லை’ என தன்னை தானே திட்டிக்கொண்டு கண்களை மூடியவள் சில மணிநேரத்தில் உறங்கினாள்.
பாழடைந்த கட்டிட்டம்! அதில் இருக்கும் அழுக்கு படிந்த சுவர்கள்! அந்த இரவு நேரத்தில் தனிமையில் அங்கு நின்றிருந்த அஜூதியாவுக்கு பயத்தில் உடல்லெல்லாம் வியர்வையில் குளித்திருக்க, அங்கிருந்து தப்பிக்கும் வழி தெரியாது தவிக்கிறாள். அப்பொழுது, “தப்பிக்கலாம்ன்னு நினைக்கிறியா அது நடக்காது உன்னால முடியாது” என்று கேட்ட பரந்தாமனின் குரலில் சர்வமும் அடங்கி போக,
‘நீயா நோ யாரவது வாங்க காப்பாத்துங்க’ என கத்திக்கொண்டு ஓடுகிறாள் அவன் எக்காளமாய் சிரித்தபடி அவளை விடாமல் துரத்துகிறான். அவளும் விடாமல் ஓடுகிறாள் ஒருகட்டத்தில் தடுக்கி கீழே விழுகிறாள். அவன் மெல்ல மெல்ல நிதானமாய் அவளை நெருங்கி வர,
“காப்பாத்துங்க” என வாய்விட்டு கத்தியபடி அஜூதியா கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள். பெண்ணவள் அச்சத்துடன் கண்விழித்தாள். அங்கே பரந்தாமனுக்கு இல்லை, பழைய கட்டிடமும் இல்லை. வழக்கமாக அவளும் இந்திராவும் உறங்கும் அறையில் இந்திரா இன்டெர்வியுவிற்காக மும்பை கிளம்பியிருந்ததால் அவள் மட்டும் இருந்தாள்.
அந்த சம்பவத்திற்கு பிறகு இது போல அடிக்கடி வரும் கனவு தான் ஆனால் துணைக்கு இந்திரா இருந்ததால் , அவள் சமாதானம் செய்து பார்த்துக்கொள்ள அஜூதியா கொஞ்ச தைரியமாக இருப்பாள். ஆனால் இப்பொழுது மிகவும் பயமாக இருந்தது. ‘இந்த பாதிப்பில் இருந்து எப்பொழுது தான் தனக்கு விடுதலை கிடைக்கும்’ என்று எண்ணியவுளுக்கு இப்பொழுது தான் இருக்கும் அறையே பயத்தை கொடுக்க ஒருவித அச்சத்துடன் அமர்ந்திருந்தவளுக்கு காற்றில் ஜன்னல் படபடவென அடிக்கும் சத்தம் கூட நடுக்கத்தை கொடுக்கவும், எழுந்து ஜன்னலை மூடியவளின் கண்களில் டேபிளில் மடித்து வைக்கப்பட்ட துணிகள் பட மெல்ல நடந்து அங்கே சென்றவள் ஒருகணம் தன் விழிகளை மூடி திறந்து அங்கே இருந்த ராவணனின் கருப்பு நிற சட்டையை சில நொடிகள் தயக்கத்திற்கு பிற தன் கரத்தில் எடுத்து தன் நெஞ்சோடு அழுத்தி பிடித்துக்கொண்டாள்.