“டேய் சரக்க கண்டெயினர்ல ஏத்தியாச்சா?” என்ற ரத்தின பாண்டியனிடம்,
“இன்னும் கொஞ்சம் தான் அண்ணன்” என்று கூறிய தன் கையாளிடம், “பசங்க ரெடியா இருக்காங்கல்ல?” என வினவினார் பாண்டியன்.
அப்பொழுது பாண்டியனிடம், “ஆமா அண்ணன்” என்று அவன் சொல்லும் பொழுதே தரையில் வழுக்கிக்கொண்டு வேகமாக வந்த காரொன்று அவர்கள் முன்னால் வந்து நிற்க,
தன் கண்கள் இடுங்க காரின் நம்பர் ப்லேட்டை பார்த்த ரத்தின பாண்டியன்,
“டேய் கேட்டை இழுத்து சாத்துங்க டா, ஒரு பையன் உசுரோட போக கூடாது” என்று தன் அடியாட்களை பார்த்து கட்டளையிட்டான்.
!!!!
வெள்ளை நிறத்திலான வேலைப்பாடுகளாலும், கலை பொருட்களாலும் அலங்கரிக்க பட்ட அந்த அறை இன்னும் அழகாக இருக்க, கண்களில் ஆர்வம் மின்ன அங்கிருந்த புகைப்படங்களையும் கலை பொருட்களையும் பார்வையிட்டு கொண்டிருந்தாள் அஜூதியா.
அப்போழுது ஒரு புகைப்படம் அவளது கவனத்தை வெகுவாக ஈர்க்க, அதன் அருகே இன்னும் நெருங்கி சென்று கூர்ந்து பார்த்தவளுக்கு ‘சீ’ என்றாகிவிட்டது. அதன் பிறகு தான் அனைத்து புகைப்படங்களையும், சிறிய சிறிய சிலை வடிவில் இருந்த கலை பொருட்களையும் கூர்ந்து பார்த்தாள். அதை பார்க்க பார்க்க பெண்ணவளுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட, முகத்தை சுளித்தவள், திரும்பி வந்து கதவை திறக்க முயற்சி செய்த பொழுது கதவு திறக்க வில்லை.
ஒரு முறையல்ல ஒன்று, இரெண்டு, மூன்று என்று அவள் “மேடம் யாரவது இருக்கீங்களா” என்று சத்தமாக அழைத்தபடி கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருக்க, “அஜூதியா” என்று அவளுக்கு பின்னால் இருந்து மிக அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவளுக்கு, நரைத்த முடியும் பெருத்த உடலுமாக தன் முன்னே வெறும் முட்டி வரை உள்ள பாத்ரோபில் நின்றிருந்த தன் கல்லூரி சேர்மென்னை பார்த்ததும் ஒருமாதிரி ஆகிவிட, வலுக்கட்டாயமாக சிரித்தவள்,
“ஹெலோ சேர் மேம் வர சொல்லிருந்தாங்களாம் அவங்கள எங்க?” என்று கேட்க,
“மேம் தானே வருவா வருவா முதல்ல நீ வா” என்றவரின் வாயில் இருந்த வெண்குழலும் இதழில் ஒட்டியிருந்த கோணல் புன்னகையும் உள்ளுக்குள் கிலியை உண்டாக்க பெண்ணவளின் மூளை அவளுக்கு விடுத்த எச்சரிக்கையில் இதயம் தடதடக்க நின்றிருந்தவள்,
“நான் போகணும் சார் கதவை திறந்துவிடுங்க” என்று கூறி அவரது முகத்தை பார்க்காது திரும்பி நின்றுகொண்டு பயத்தில் தன் உடல் நடுங்க கதவை திறக்க முயற்சி செய்துகொண்டிருக்க, சத்தமாக சிரித்த பரந்தாமன்,
“நீ என்ன செஞ்சாலும் கதவு திறக்காது அஜூ, வா வா வந்து என் பக்கத்துல உக்காரு சீக்கிரமே போய்டலாம்” என்று சொல்லி அவளை பார்த்து வஞ்சகத்துடன் சிரிக்க, தன் விழிகளில் அனல் தெறிக்க அவரை பார்த்தவள்.
“சார் உங்க பேச்சும் சரியில்ல, பார்வையும் சரி இல்லை வந்து கதவை திறந்து விடுங்க, இல்லை நான் சத்தம் போடுவேன்” என்றவள் கத்தியபடி வார்டனை அழைக்க, அவரோ காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு, ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி காரில் அமர்ந்திருந்தார்.
கதவை தட்டி தட்டி சோர்ந்து போனவளுக்கு, தான் எப்படி பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளோம் என்னும் சிந்தனை அதீத பயத்தை கொடுக்க, இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாது திணறினாள்.
அப்பொழுது தன் கரத்தில் இருந்த வெண்குழலை அஷ் ட்ரேவில் போட்டு நசுக்கிவிட்டு மெல்ல அஜூதியாவை நோக்கி அந்த பரந்தாமன் நடந்து வர, தன்னை நெருங்கி வரும் அந்த துஷ்டனின் காலடி சத்தம் பெண்ணவளின் காதில் இடியாய் முழங்க அவளது கால்கள் பயத்தில் தள்ளாடியது.
அவர் அவளை நெருங்கி அவளது கரத்தை பிடிப்பதற்குள் விலகியவள்,
“சார் என்ன இது? உங்க மேல அவ்வளவு மரியாதை வச்சிருக்கேன். என்ன பண்றீங்க? என்னை போக விடுங்க இல்லை நடக்குறதே வேற” என்று மிரட்டியவளை பார்த்து அலட்சியமாக சிரித்தவன்,
“அட என்ன மா நீ? பயப்படாத நூறு சதவீத எண்டெர்டெயின்மெண்ட்டுக்கு நான் உத்தரவாதம் தரேன்.கொஞ்சம் நேரம் சத்தம் போடாம, அமைதியா அடம் பண்ணாம இருந்தீன்னா சொர்க்கத்தை காட்டுறேன்” என்று கூற, அவனை அருவருப்பாக பார்த்தவள்,
“சீ பொறுக்கி” என்றுவிட்டு மீண்டும் கதவை திறக்க முயற்சி செய்ய,
“என்னடி சொன்ன?” என்று தன் பற்களை கடித்தவர், அவளது கரத்தை வந்து பிடிக்கவும், பரந்தாமனை பிடித்து அஜூதியா தள்ளிவிட, கீழே விழாமல் தன்னை சமாளித்து கொண்டு கட்டிலை பிடித்து எழுந்தவர் ஆத்திரத்தில்,
“ஹவ் டேர் யு” என்று கத்தியபடி அஜூத்தியாவின் கன்னத்தில் ஓங்கி அறைய, சுவற்றில் மோதி கீழே விழுந்தவளுக்கு ஏற்கனவே இருந்த மனஅழுத்ததில் தலை சுற்றி மயக்கம் வருவது போலவும் இருக்க, மிகவும் சிரமப்பட்டு தன் தலையை இடவலமாக அசைத்து, தன்னை நிலைப்படுத்தி கொண்டு சுவற்றை பிடித்தபடி எழுந்து நின்றவள் மீண்டும் கதவை தட்ட போகவும்,
“வா டி” என்று அவளை பிடித்து படுக்கையில் தள்ளிய அந்த காமுகன், அவளது அலறலை ரசித்தபடி அவளை நெருங்கிவர, தன் காலால் அவனை எட்டி உதைத்தபடி வேகமாக எழுந்தவள் மீண்டும் கதவை நோக்கி செல்லவும், அவளது ஆடையை பிடித்து அந்த பரந்தாமன் இழுக்க, அவள் அணிந்திருந்த ஆடை கிழியப்பட்டு ஒரு பகுதி அவன் கரத்தோடு சென்றுவிட, தன் இழிநிலையை எண்ணி கண்ணீர் வடித்த பாவையவள், அவன் பார்க்காது தன் உடலை மறைத்து திரும்பி நின்று, தன் மனதில் தோன்றிய தெய்வங்களையெல்லாம் தன் மானத்தை காக்கும் படி வேண்டிக்கொண்டாள்.
ஏனோ அவளால தனக்கு நடக்கும் இந்த அவலத்தை எதிர்கொண்டு போராட முடியவில்லை, தனக்கு என்ன ஆகும் என்ற பயம் அவளை முழுவதும் கவ்விக்கொள்ள, தன் உடலில் உள்ள சக்தியெல்லாம் வடிந்தது போல தேகம் நடுங்க நின்றவள்,
“ப்ளீஸ் சார் விட்ருங்க” என அவனை கரம் கூப்பி மன்றாடியபடி தரையில் மடிந்தமர்ந்து கெஞ்ச,
“இப்படி கெஞ்சிறதுக்கு என்னை கொஞ்சினா உனக்கு சேதாரமாவது குறையும்” என்றவனின் கரம் அவளிடம் அத்துமீற வரவும், இந்த ராட்சசனிடம் கெஞ்சி பயனில்லை என்னும் நிலையில் வெகுண்டெழுந்தவள் “தள்ளி போடா” என்று பயங்கரமாக கத்தியபடி அவனை கீழே தள்ளி தற்சமயம் இவனிடம் தப்பித்தால் போதும் என்கிற நிலையில் சுற்றி சுற்றி பார்த்தவள் அவன் தட்டு தடுமாறி எழுந்து வருவதற்குள் ஓடி சென்று பாத்ரூம் அறையின் கதவை திறந்து கொண்டு மூச்சு வாங்க உள்ளே சென்று வெகேமாக கதவுக்கு தாளிட்டாள்.
!!!!
கரங்களில் கூர்மையான ஆயுதத்துடன் கர்ஜித்தபடி ரத்தின பாண்டியனின் அடியாட்கள் தங்களின் முன்னே நின்றிருந்த காரை நோக்கி படையெடுத்த அதே நேரம்,
பரந்தாமனின் காவலாளர்கள் கண்ணிமைக்கும் நொடியில் தாக்கப்பட்டு துப்பாக்கி முனையில் சிறைவைக்க பட்டிருக்க, “டமார் டமார்” என்ற தொடர் சத்தத்தை தொடர்ந்து பரந்தாமனின் அறையின் கதவு அதிரடியாக திறக்கப்படவும், குளியலறையின் கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்த மனித உருவத்தில் இருந்த அந்த மிருகம் வாசலை அதிர்ந்து பார்க்க, தன் வலதுகர முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக்கொண்டே மிக மிக நிதானமாக தன் பார்வையை பரந்தாமன் மீது ஆழமாக பதித்தபடி சந்த்ருவுடன் உள்ளே நுழைந்தான் ராவணன்.
சிறையெடுப்பானா?