29 – விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் : 29

தான் இருக்கும்போதே, கடந்த கால கறைகளிலிருந்து தன் மகளை எப்படியாவது காப்பாற்றி, வெளிநாட்டில் ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும் என்று  தீவிரமாக மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கினாள் சரளா. ஆனால், விதி வேறு விதமான கணக்குகளை போட்டிருந்தது.

அன்று மதியம், தன் அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த ஸ்வேதாவிற்கு திடீரென உடலில் கடுமையான வலி தொடங்கியது. 

ஆரம்பத்தில் சாதாரண உடல்வலி என்று நினைத்தவளுக்கு, போக… போக கைகளும் கால்களும் பொறுக்க முடியாத அளவுக்கு தீவிரமாக வலிக்க ஆரம்பித்தன. நரம்புகள் இழுப்பது போன்ற  வேதனையில் துடித்தவள், அவசரமாக தன் தாயை கூப்பிட்டாள். 

“அம்மா… என்னென்னு  தெரியலைம்மா. வர வர என் கையும் காலும் ரொம்ப வலிக்குது. என்னால வலி தாங்க முடியலை. ஏதோ நரம்பு பிடிச்சி இருக்கிறது போல இருக்கு” என்று சொல்லி தன் கால்களை பிடித்து கொண்டே கூறினாள். ராஜகுமாரன் கொடுத்த விஷம் அவர்கள் அறியாமல் வேலை செய்ய ஆரம்பித்தது. 

அவள் கூறியதை கேட்டு பதறி போன சரளா, அவளது கால்களை அமுக்கி கொடுத்து கொண்டே, “டாக்டர் கிட்ட போகலாமா?” எனக் கேட்டாள். 

மருத்துவமனைக்கு செல்ல ஆயத்தமான போது, ஸ்வேதாவின் அலைபேசி சிணுங்கியது. 

ஒரு பிரபல தொழிலதிபரிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘இவர் அழைக்கிறார்ன்னா… ஹெட்ஹவுஸ்ஸிற்கு தானே கூப்பிடுவாரு’ என்று எண்ணியவள், ‘அழைப்பை மறுத்தால் வேற யாரையாவது அழைத்து விடுவார். இவர் கொஞ்சம் அதிகமாக பணம் கொடுப்பவர் வேற’ என்று மனதிற்குள் எண்ணியவள், உடனடியாக அழைப்பை ஏற்றாள். 

“ஹலோ ஸ்வேதா… இன்னைக்கு என்னோட ஹெட்ஹவுஸ்ஸிற்கு வர முடியுமா?” எனக் கேட்டார் அவர்.

உடலை வாட்டிய வலியையும் தாண்டி, பணத்தின் மீது கொண்டிருந்த மோகத்தால், “ஓ… ஷ்யர் சார். நான் கண்டிப்பா வந்துடுறேன். பட்… எனக்கு இப்ப… கொஞ்சம் அவசரமா அதிகமா பணம் தேவையா இருக்கு சார். இந்த தடவை எனக்கு ஒரு டென் லாக்ஸ் தர முடியுமா?” என்று எந்தவித தயக்கமும் இன்றி, துணிச்சலாக கேட்டாள்.

மறுமுனையில் இருந்த அந்த நபர் ஒரு கணம் கூட யோசிக்காமல், “ஷ்யர் ஸ்வேதா. நீ கொடுக்கிற ஒத்துழைப்புக்கு டென் லாக்ஸ் என்ன, அதுக்கும் மேலையே கூட தரலாம். கண்டிப்பா தந்துறேன். ஷார்ப்பா ஆறு மணிக்கு நீ வந்துரு” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

கைபேசியை அணைத்து மஞ்சத்தில் தூக்கி எறிந்தாள்.

அவளையே பார்த்து கொண்டிருந்த சரளா, “நீ வெளிய போறேனு சொல்ற? அப்ப… ஹாஸ்பிட்டல் எப்ப போறதும்மா?” எனக் கேட்டாள்.

“அங்க போயிட்டு வந்துட்டு போகலாம்”

“கை காலெல்லாம் வலிக்கிதுனு சொன்னீயேம்மா. எப்படி அங்க போய் சமாளிப்ப…  நீ இதையெல்லாம் விட்டிரும்மா. போதும் நாம சம்பாரிச்சது. இனி… நீயும் குடும்பம், பிள்ளைங்கனு வாழ்றதை பத்தி யோசிம்மா” என்று தன்மையாக கூறினாள்.

“அம்மா பத்து லட்சம் தர்றேனு சொல்றாரு போகாமல் இருக்க சொல்றீயா?” என்று ஸ்வேதா  கேட்க,

பத்து லட்சம் என்றதும், சரளா கொஞ்சம் யோசித்தவாறு முகத்தை வைத்திருந்தாள்.

“நான் அங்க போயிட்டு ஒரு மணி நேரத்துல திரும்பி வந்திருவேன். நீங்க ரெடியா இருங்க. நான் வந்ததும், நாம ஹாஸ்பிட்டல் போகலாம்” எனக் கூறிவிட்டு, தூக்க மாத்திரையை போட்டு படுத்து கொண்டாள். “அஞ்சு மணிக்கு வந்து என்னை எழுப்புங்க” என்று சொல்லிவிட்டு கண்ணயர்ந்தாள்.

தூங்கும் மகளை சற்று கவலையோடு பார்த்தாள் சரளா. ‘இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள்.

மாலை ஐந்து மணி…

நன்றாக உறங்கி கொண்டிருந்த ஸ்வேதாவை வந்து எழுப்பிவிட்டாள் சரளா. 

துயில் கலைந்து எழுந்த ஸ்வேதா தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, சாப்பிட்டுவிட்டு, தன்னை அலங்காரம் செய்து கொண்டு கிளம்பினாள்.

ஒரு ஆட்டோ பிடித்து அந்த ஹெட்ஹவுஸ்ஸை அடைந்தாள்.

அந்த தொழிலதிபர் முன்னமே வந்து ஸ்வேதாவிற்கா காத்திருப்பார் போல, அவள்  வந்ததும், ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவளை அணைத்து, முத்தம் கொடுக்க தொடங்கினார்.

“டுடே யூ ஆர் ஸோ செக்ஸி…” என்று சொல்லி அவளது காதுமடலை கொஞ்சியவர், அவளது உடைகளுக்கு விடுதலை கொடுக்க தொடங்கினார்.

அவள் உடலிலிருந்து உடைகள் குறைந்து கொண்டே வர, அவரின் முன்பு உடையில்லாது இருப்பதற்கு, ஏதோ வெட்கப்படுவது போல நடித்தவள், தன் கைகளால் தன்னை மறைத்தவாறு நின்று கொண்டு, “நீங்க ரொம்பத்தான் என்னை ரசிக்கிறிங்க சார் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்று சொல்லி சிணுங்கினாள்.

அவளின் வார்த்தையில் சிரித்து கொண்டவர், அவளோடு மஞ்சத்தில் சரிந்து, அவள் தன்னை மறைக்க முயன்ற கைகளை விலக்கி, அவளுக்கு முத்தம் வைத்து கொண்டே…. ஊடலில் ஈடுபட ஆரம்பித்தார்.

ஸ்வேதாவிற்கோ அவரது பாரத்தை தாங்க முடியாது உடலெங்கும் வலி எடுக்க ஆரம்பித்தது. திடீரென அவளது வாய், அவரை பற்றியிருந்த ஒரு கை மற்றும் ஒரு காலும் இழுத்து கொண்டது.  

அதை கண்ட அவர், அவளிடமிருந்து சட்டென்று விலகி, “ஸ்வேதா… ஸ்வேதா” என்று கத்தினார்.

“ஹாஸ்பிட்டல் போகணும் அம்மா கால் பண்ணுங்க” என்று வாய் குளறிய படி கூறினாள்.

அதை புரிந்து கொண்டவர், அவளது போனில் சரளாவை அழைத்து விபரத்தை கூறிவிட்டு, ஸ்வேதாவை வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினார்.

சரளாவோ பதியபடித்து கொண்டு அவர் கூறிய முகவரிக்கு உடனை ஓடி வந்தாள். 

அங்கு, ஆடையில்லாத மகளை பார்த்து மிகுந்த வருத்ததுடன் அவளுக்கு உடை அணித்துவிட்டாள். 

அச்சமயம் அவர்களின் அருகில் வந்த அந்த பணக்காரரோ, ஸ்வேதா கேட்ட பத்து லட்சம் பணத்திற்கான செக்கை நீட்டி, “ஆம்புலன்ஸ்ஸை வர சொல்லிருக்கேன் நீங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க” எனக் கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

சரளாவிற்கோ மகளின் நிலையை பார்த்து பயமாக இருந்தது. 

பத்து நிமிடத்தில் அவர் அழைத்திருந்த அவசர ஊர்தி வந்துவிட, ஸ்வேதாவின் அருகில் இருந்த மதுகோப்பையும், துண்டு சிகரெட்டையும் பார்த்துவிட்டு அவர்களை ஏளனமாய் பார்த்தபடி 

ஸ்வேதாவை அவசர ஊர்தியில் ஏற்றினார்கள்.

“ஒரு நல்ல பெரிய ஹாஸ்பிட்டல்லா போப்பா” எனக் கூறிவிட்டு வண்டியினுள் ஏறி அமர்ந்தாள் சரளா.

“அம்மா…” என்று வாய் குளறி அழைத்தாள் ஸ்வேதா.

“என்னம்மா… உனக்கு என்னாச்சி?” என்று கண்களில் கண்ணீர் அரும்ப கேட்டாள்.

“உடம்பு வலி ரொம்ப” என்று கூறிவிட்டு அவளும் கண்கள் கலங்கினாள்.

மகளின் முகத்தில் கண்ணீரை கண்டதும் பெரிதும் துடித்து போன சரளா, “அதான் நான் முதல்லையே போகாதனு சொன்னேன் கேட்டீயா?” என்று சொல்லி அழுதாள்.

“அம்…மா அழாத”

“முடியலைம்மா..  இந்த நிலைமையில உன்னை பார்க்க முடியலை” என்று சொல்லி கதறினாள்.

அவசர ஊர்தியில் இருந்த செவிலிப்பெண்ணோ, “அம்மா நீங்களே அழுதா உங்க பொண்ணை யாரும்மா தைரியபடுத்துறது. அழாதீங்கம்மா உங்க பொண்ணுக்கு எல்லாம் சரியாகிரும்”

“என் பொண்ணு எப்படி இருந்தவ? இப்ப… இப்படி கை கால் வாய் இழுத்து கிடக்கிறாளே” என்று தலையில் அடித்து கொண்டு அழுதாள்.

“சொல்றேனேனு தப்பா எடுத்துக்காதிங்க. ட்ரிங், சிகரெட், ட்ரக்ஸ் எடுக்கிற பழக்கம் உங்க பொண்ணுக்கு இருக்கா?” எனக் கேட்டாள்.

ஆமாம் என்று மெல்ல தலையாட்டினாள் சரளா.

“இதைலாம் யூஸ் பண்ணா கை கால் இழுதுக்கத்தான் செய்யும்” என்று சடைத்தவாறு கூறினாள்.

“அய்யோ..  அய்யோ இப்ப எப்படி என் மகளை சரிபடுத்துறது”

“அவங்க இதலாம் யூஸ் பண்றாங்கனு தெரிஞ்சிருந்தும் நீங்க பெரியவங்க தான, உங்க பொண்ணுக்கு எடுத்து சொல்லி அவங்களை ஆரம்பத்துலையே திருத்திருக்கலாமே?” என்று, செருப்பால அடிச்ச மாதிரி ஒரு கேள்வி கேட்டாள் செவிலிப்பெண்.

சரளா அமைதியாக இருக்க, “நாங்க இது மாதிரி நிறைய கேஸ் பார்த்திருக்கோம். இந்த மாதிரி பெண்களோட வீட்டுல, அந்த வீட்டு பெரியவங்க கண்டுகிறதுமில்லை. கண்டிக்கிறதுமில்லை. எதாவது பாதிப்பு வந்த பின்னாடித்தான் அழுது புலம்புவாங்க” என்றாள் சடைத்தவாறு.

அச்சமயம் மருத்துவமனை வந்திவிட, அவசர ஊர்தியில் இருந்து அவளை இறக்கி தீவிர சிகிச்சை பிரிவில் ஸ்வேதாவை அனுமதித்தனர்.

மருத்துவரும் அவள் போதை பொருட்கள் எடுப்பாளா? அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிடுவாளா? என்று விசாரித்தார்.

‘ஆமாம்’ என்பது போல தலையாட்டிய சரளாவை, கேவலமாய் ஒரு பார்த்துவிட்டு, “உங்க பொண்ணை உடனே பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியாதும்மா. கொஞ்சநாள் எடுக்கலாம் இல்லை வருடம் கூட ஆகலாம். ஆனா… அவங்க ட்ரீட்மென்ட்டை நிறுத்தினாங்கன்னா இந்த நிலைமை தீவிரமாகிரும்” எனக் கூறிவிட்டு சென்றார்.

சரளாவோ மகளின் நிலைமையை எண்ணி தன் முந்தானை சேலை சிறிது நனையுமளவிற்கு அழுதாள். பின்னர், ‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவியாக யாருமில்லையே? எப்படி தனியாக மகளை கவனித்து கொள்வது? நாங்கள் தனி மரமாகிவிட்டோம்’ என்று மனதிற்குள் வருந்தினாள்.

அடுத்தடுத்த நாட்களில் ஸ்வேதாவிற்கு முழு பரிசோதனை முடிந்து தீவிரமாக  மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

ஒரு கால் நடக்க முடியாமல் தடுமாறியவளை தாங்கி பிடித்து  இயற்கை உபாதைக்கு செல்ல அழைத்து சென்றாள் சரளா. 

எப்படி ஒரு கையால் தன்னை சுத்தப்படுத்தி கொள்வது என்று தங்கிய ஸ்வேதா, மனதை கல்லாக்கிக் கொண்டு தன் அன்னையைத்தான் அழைத்தாள். 

சரளாவோ அவளை தடுத்து, அவளே… அவளை சுத்தப்படுத்திவிட்டு குளிர்க்க வைத்து படுக்க வைத்தாள். இதுவே தினமும் நடக்க ஆரம்பித்தது.

எதாவது சாப்பாடு வாங்கவோ, இல்லை மருத்துவமனையில் இல்லாத மருந்து வாங்கவோ, அவளுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களில் ஒருசிலருக்கு அழைப்பு விடுவிக்க, ஸ்வேதாவின் நிலைமையை கேள்விப்பட்டதும் எதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டி கழித்தனர். அதனால் ஒற்றை ஆளாக சரளாவே அனைத்தையும் செய்யும்படியாகிவிட்டது.

“ம்மா உன்கூட இருக்க ஒரு பொம்பளை வேலைக்கு போட்டுக்க. நீயே எல்லாத்தையும் பண்ண முடியாது” என்று கோணலான வாய்யை வைத்து கொண்டு, திக்கி திக்கி சொல்ல வந்ததை சிரமப்பட்டு கூறினாள் ஸ்வேதா.

அதனால் மருத்துவமனையில் சொல்லி, செவிலிப்பெண் மூலமாக ஒரு பெண்மணியை வேலைக்கு சேர்த்தனர். 

அந்த பெண்மணி வந்ததும் இரண்டு நாளுக்கு ஒரு முறை தங்கள் வீட்டிற்கு சென்று உறங்கிவிட்டு வந்தாள் சரளா. ஏனெனில் கண் விழித்து ஸ்வேதாவை பார்த்தது அவளுக்கும் உடம்பு முடியாமல் போனது. 

மறுபக்கம்…. பத்திரிக்கை வந்ததும், தங்களது குல தெய்வ கோவிலில் பொங்கல் வைக்கும் ஏற்பாட்டை செய்திருந்தான் ராஜகுமாரன். 

அதற்காக தேவயானி அப்பா அம்மாவை அழைத்து வர வாகனத்தை அனுப்பி வைத்திருந்தான். குமார்தான் அவர்களை அழைக்க வந்திருந்தான்.

அவனை தேவயானி அன்போடு வீட்டிற்குள் அழைத்து தண்ணீர் கொடுக்க, “வீட்டிலிருந்து வந்ததை விட கொஞ்சம் மெலிஞ்ச மாதிரி தெரியுறிங்க சிஸ்டர். சாப்பிடுறிங்களா என்ன?” என்று அக்கறையோடு கேட்டான்.

“கல்யாணம் முடிவானதுல இருந்து கொஞ்சம் டென்ஷனாவே இருக்குதுண்ணா. சாப்பாடு சாப்பிட பிடிக்கலை  ராத்திரி தூக்கமே வர மாட்டிங்கிது. அதான் மெலிஞ்சிட்டேன் போல” என்று தேவயானி கூற,

“நாங்களும் சொல்லிட்டோம் தம்பி. இனி மாப்பிள்ளைகிட்டத்தட்டத்தான்  சொல்லி இவளை சத்தம் போடணும்” என்றாள் கற்பகம்.

“நேராமச்சி. வாங்கம்மா… வாங்கப்பா கார்ல ஏறுங்க. பத்து மணிக்குள்ள பூஜையை முடிக்கணும்னு சொன்னாங்க” என்று குமார் கூற, இருவரும் பெருமையாக வாகனத்தினுள் அமர்ந்து கொண்டார்கள்.

அவர்கள் வசிக்கும் தெருவில் ஓரிரு பேர் அவர்களை பார்த்து பொறாமையுடன், “புது பணக்காரவங்களாகிட்டாங்க” என்று கிசுகிசுத்து கொண்டனர்.

கோவிலை அடைந்தவுடன், மாலாவும், கற்பகமும் பொங்கல் வைக்க ஆரம்பிக்க, 

ஐயரோ… சுவாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு, ராஜகுமாரன் கொடுத்த பட்டு உடைகளை சுவாமி சிலைகளுக்கு மாற்றிவிட்டார். அதற்குள் பொங்கல் தயாரானது.

உடனே பூஜையை ஆரம்பித்த ஐயர், கல்யாண பத்திரிக்கையை சுவாமியின் பாதத்தில் வைத்துவிட்டு, அனைவரின் பெயரை கேட்டு அர்ச்சனை செய்து பூஜை நிறைவு செய்தார்.

“என்னம்மா பொண்ணு எப்படியிருக்கா?” என்று வெங்கடேசன் அன்பாக கேட்க,

“அவள் கல்யாணம் முடிவானதுல இருந்து சரியா சாப்பிட மாட்டின்கிற. சாப்பாடு ஏறங்கலைனு சொல்றா. தூங்கவும் மாட்டின்கிறா. அதனால மெலிஞ்சு போயிட்டா” என்றாள் கற்பகம் 

அது ராஜகுமாரன் காதில் விழுந்ததும், ‘அவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்?’ என்று யோசித்தான்.

“அவள் சாப்பிட பிடிக்கலைன்னா ஊட்டி விடுங்க. என்ன செய்ய என் பொண்ணுக்கும் அப்படித்தான் ஊட்டிவிட்டு கல்யாணத்துக்குள்ள அவளை தேத்துனேன். சில பிள்ளைங்கள் கல்யாணம்னதும் பூரிப்புல சத்து போட்டிரும்ங்க. சிலர் தெரிஞ்சி போயிருவாங்க” என்றாள் மாலா.

“இனி அப்படித்தான் பண்ணணும்” என்றாள் கற்பகம்.

“மாமா…” என்று பாஸ்கரை ராஜகுமாரன் அழைத்ததும், மகிழ்ந்து போனார்.

“சொல்லுங்க தம்பி” 

“உங்களுக்கு தேவையான பத்திரிக்கையை எடுத்துக்குங்க..”

“சரிங்க தம்பி” என்றவர் அவருக்கு தேவையான பத்திரிக்கையை எண்ணி எடுத்து கொண்டார்.

“அப்ப கிளம்பலாமா மாமா” என்று வெங்கடேசனை பார்த்து ராஜகுமாரன் கேட்க,

“போகலாம்ப்பா” என்றார் வெங்கடேசன்.

ஒரு வாகனத்தில் ராஜகுமாரனுடன் வெங்கடேசன் தம்பதி அமர்ந்து கொள்ள, மற்றொரு வாகனத்தில் குமாருடன் பாஸ்கர் தம்பதி அமர்ந்து கொண்டனர்.

பாஸ்கர் தம்பதி வீட்டை அடைந்ததும், பிரம்மாண்டமாக இருந்த பத்திரிக்கையை பார்த்து மகிழ்ந்தாள் தேவயானி. “ஒரு பத்திரிக்கை எப்படியும் நூறு ரூபா இருக்கும் போல” என்று அவர்களுக்குள் பேசி கொண்டார்கள்.

இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன் 

சாய்லஷ்மி.

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top