யுகம்-6

சிறுவர்களின் மோதல்களை பார்த்தவர்கள் ஒருவரோடு ஒருவர் இனி பேசவோ கிண்டலிடிக்கவோ கூடாது என இருவருக்கும் எச்சரிக்கை இட்டனர். அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவர்களின் சகோதரர்கள் கண்களால் பேசி பேசியே காதலை வளர்த்துக் கொண்டனர்.

வர்ஷினி படிப்பில் பின்தங்கியவள் ஆனால் கை வேலைகளில் கை தேர்ந்தவள்.   பாடசாலை கல்வியை முடித்ததும் பியூட்டிஷியன்   கோர்ஸ் செய்தவளுக்கு மலர்வேந்தன் பெரியதாக ஒரு பியூட்டி பார்லர் திறந்து கொடுத்தார். பிள்ளைகள் பிடித்ததை செய்ய வேண்டும் என்று மனநிலை உடையவர் அவர். ஆதி சிவில் இன்ஜினியரிங் படிப்பதற்காக வெளியூர் செல்ல ஆயத்தமானான். பக்கத்திலிருந்தே பார்த்து வளர்ந்த ஆதியின் பிரிவு வர்ஷினிக்கு பெரிய இடியாக இருந்தது. அங்கு போய் யாரையும் காதலித்து விடுவானோ என்ற பயமும் அவளை தூங்க விடவில்லை. போவதற்கு முதல் நாள் காதலை வெளிப்படுத்த நினைத்தவள் மாலதியின் வீட்டுக்கு வந்திருந்தாள்.

தம்பி பெல்ட்டால் அடிவாங்கியதை பார்த்த ஆதிக்கு தன் காதலை வர்ஷினியிடன் சொல்வதற்கு பயமாக இருந்தது. ‘அவளுக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியவில்லை. போய் அப்பாவிடம் சொன்னால் நம்ம பாடு திண்டாட்டம் தான்’ என்று யோசித்தவன் தன் காதலை மனதுக்குள் பூட்டியே வைத்தபடி போவதற்கு தேவையான உடமைகளை அடுக்கிக் கொண்டிருந்தான்.

மாலதியிடம் சிறிது நேரம் உரையாடியவள், “பெரிய அத்தானை பார்த்து விட்டு வர்றேன் அத்தை” என்றவள் அவர் பதிலை எதிர் பார்க்காமல் மாடிக்கு ஏறினாள். மாலதியும் நெற்றி சுருங்க அவளின் நடவடிக்கையை பார்த்தவர் சமையல் வேலையை பார்க்க போய் விட்டார்.  இளந்தாரி பையன் அறைக்கு இளம்பெண் செல்வது அவருக்கு சரியாக படவில்லை.

அறைக்குள் சென்று ஷார்ட்ஸ் அண்ட் டி ஷர்ட் உடன் தன் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்த  ஆதியின் முதுகை  வெறித்தவள், “க்கும் க்கும்…” என்று செருமினாள்.  திரும்பி பார்த்த ஆதிக்கு தன் கண்ணையே தன்னால் நம்பமுடியவில்லை. தன் தேவதை தன் அறையில் இருப்பதை பார்த்தவன், ‘ஒரு வேளை கனவா இருக்குமோ ?’ என்று கண்ணை கசக்கி பார்த்தபடி, “சொல்லு வர்ஷினி” என்று என்றான்.

“அத்தான் எப்போ பயணம் ?” என்று கேட்டவளை நோக்கி சிரித்தவன், “ஏன் உனக்கு தெரியாதா?” என்றபடி தன் வேலையை செய்ய தொடங்கினான்.

“மண்டு…. மண்டு…” என்று  தன்னை தானே கடிந்தபடி, “ஆல் தி பெஸ்ட் நல்லா படிங்க”  என்றவளை நோக்கி, “படிக்கிறதை பற்றி நீ எனக்கு சொல்லி தரும் நிலைமையில் நான் இருக்கிறேன்”  என்று கலகல வென சிரித்தான். ‘அண்ணனுக்கும் தம்பிக்கும் கிண்டலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள், “அப்போ நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டாள்.

‘இதுக்கு நீ வராமலே இருந்திருக்கலாம்’ என்று மனதுக்குள் நினைத்தவன், “ஸீ யூ சூன்” என்று கைகளை நீட்டினான். கைகுலுக்க கைகளை நீட்டியவளுக்கு அவனின் ஸ்பரிசம் பட்டதால் 1000 வோல்ட் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் உணர்ந்தாள். வெடுக்கென்று கையை விலக்கி விட்டு போக எத்தனித்தவளை கூர்ந்து நோக்கியவன் எங்கே சொல்ல போகும் விஷயத்தை கேட்டு அவள் தன்னை அடித்து விடுவாளோ என்று பயந்து அவள் புறம் முதுகை காட்டியபடி திரும்பி நின்று, “வர்ஷி உன் முன்னால் உள்ள மேசையில் ஒரு டைரி இருக்கும் அதனை உனக்காக தான் எழுதினேன்…” என்று சொன்னதை கேட்டவள்  ஓடிச் சென்று டைரியை பார்த்தாள். 

அதில் அவன் காதலை எழுத்து வடிவில் செதுக்கி இருந்தான். மனதில் ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட டைரியை முழுசாக வாசிக்கும் ஆர்வத்தோடு வெளியேற போனாள். அங்கே தங்கையை பார்த்ததும் வெட்கப்பட்டுக் கொண்டே வெளியேறினாள்.

அக்காவை தேடி வந்த வைஷ்ணவி, “இவ ஏன் என்ன பார்த்து இப்படி வெட்கப்படுறாள்?” என்று முணு முணுத்தவாறே உள்ளே எட்டி பார்த்தாள். அங்கே ஆதி வர்ஷினி சென்றதை அறியாமல் முதுகை காட்டியவாறு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசியது அவளுக்கு சரியாக கேட்கவில்லை. உடனே  உள்ளேச் சென்று அவன் பின்னால் கைகட்டி நின்றவாறே அவன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் பார்த்து அறையை விட்டு வெளியே வந்த ஆத்ரேயன், ‘இவ எதுக்கு ஆதி ரூமுக்கு போறா?’ என்று யோசித்தவாறே அவளுக்கு தெரியாமல் அவள் பின்னால் வந்து நின்றான்.

அந்நேரம் பார்த்து ஆதி, “உன் சின்ன வயசிலே இருந்தே உன்ன ரொம்ப பிடிக்கும்டி… நீ அவ்வளவு அழகு…உன் கொடியிடையை பார்த்து நான் எத்தனை தரம் மயங்கி இருக்கேன் தெரியுமா?” என்று கவிதை வாசித்தான்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆத்ரேயன் மனதுக்குள், ‘என்னது? இது கொடியிடையா? உன் கண்ணில தீயை வைக்க… காதலுக்கு தானேடா கண்ணில்லை…உனக்குமா கண்ணில்லை..? காதலென்றாலும் ஒரு நியாய தர்மம் வேணாமாடா ?அடப்பாவி நீ அவ அக்காக்கு ரூட் போடுறனு  நினைச்சேன். நீ ரூட் போட்டது இவளுக்கா ? இவ என் அண்ணியா? ஏன்டா உன் ரசனை இவ்வளவு மட்டமா இருக்கு? உன் காதலுக்கு முதல் எதிரி நான் தான் டா’ என்று மனதுக்குள் ஆதியை திட்டி தீர்த்தான்.

வர்ஷினியின் காதலை பற்றி ஏற்கனவே அறிந்த வைஷ்ணவி, ‘ஆஹா அத்தான் எவ்வளவு அழகா ப்ரொபோஸ் பண்ணுறார். அது தெரியாம அந்த மண்டு ஓடிடுச்சு. அவளுக்கு சம்மதம் என்று சொல்லி  ஆகணுமே!’ என்று மனதில் நினைத்தவாறே, “அத்தான் உங்க அழகிக்கும்  உங்க மேல விருப்பம்தான்” என்றாள். இதை கேட்டு கொதித்தெழுந்த ஆத்ரேயன் மனதுக்குள், ‘என்னது? உனக்கும் விருப்பமா? உன்னை நீயே அழகி என்று சொல்றியா? கண்ணாடியில் உன் உருவத்தை நீ பார்த்துருக்கியா இல்லையா? உன் மூஞ்சுக்கு என் அண்ணன்  கேக்குதா? அவன் அழகென்ன உன் அழகென்ன… வெள்ளை தோலை பார்த்ததும் மயங்கிட்டியா? இவ்வளவு நாள் உன்னை சும்மா விட்டு வைத்ததே தப்பு. விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சம் கேக்குதா? என் அண்ணா ஆணழகன் டி … உன்ன  விடமாட்டேன் டி , உங்க ரெண்டு பேரையும் பிரிக்காம விடமாட்டேன்’ என்று மனதுக்குள் கருவினான்.

வைஷ்ணவியின் குரலை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பிய ஆதி வைஷ்ணவிக்கு பின்னால் ஆத்ரேயன் நின்றதை பார்த்து, “நீ எங்கடா இங்கே?” என்று நெற்றியை சுருக்கி  வினவினான்.

“ஏன் நான் நிக்கிறது உங்க ரெண்டு பேருக்கும்  இடைஞ்சலா இருக்கா?” என்று கோபமாக கேட்டுவிட்டு வெளியேறினான்.  இவன் என்ன லூசா? என்று வைஷ்ணவியும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவன் சென்றதும் வைஷ்ணவி  வெட்கப்பட்டுக் கொண்டே வர்ஷினி மனதிலிருந்ததை கூறினாள். அதை கேட்ட ஆதி சந்தோஷத்தில் மிதந்தான். மேசையில் டைரி இல்லாததை பார்த்தவனுக்கு தலை கால் புரியவில்லை இப்படியொரு இன்ப அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவில்லை. “தேங்க் யூ வைஷு தேங்க் யூ” என்றவன் அவள் தோளை பிடித்து குலுக்கினான்.

ரூமுக்குள் சென்ற ஆத்ரேயனுக்கு தலை வலிக்க தொடங்கியது. கீழே தைலம் எடுக்க ஆதியின் அறையை தாண்டிச் சென்றவன் திறந்திருந்த அறைக்குள் தன் பார்வையை கட்டுப்படுத்த முடியாமல் செலுத்தினான். அவள் தோளை பிடித்தபடி முகம் நிறைய  சந்தோஷத்துடன் நின்றவனை பார்த்தவனுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. ‘இன்னும் நல்லா கட்டி பிடிச்சு கொஞ்சிக்கலாமே’  என்று மனதுக்குள் வன்மமாய் உரைத்தவன் விறு விறுவென்று கீழே இறங்கினான்.

சிறிது நேரம் கழித்து வைஷ்ணவியை கீழே கூட்டி வந்த ஆதி, “அம்மா உனக்கு பிடித்த குலாப்ஜாமூன் செஞ்சிருக்காங்க  சாப்பிடுறியா?” என்று கேட்டான்.  சாப்பாடு என்றால் தான் அவளுக்கு இம்மையும் தெரியாது மறுமையும்  தெரியாது. “ஆமா அத்தான்  ரொம்ப பசிக்குது…” என்றவளை அவ்விடத்தில் தலையை பிடித்தபடி  இருந்த ஆத்ரேயன் அவளை பார்த்து உதட்டை சுளித்தபடி, “உன் கொடியிடை காதலிக்கு இனிப்பு  கொடுக்க போறியா?” என்று ஆதியிடம் கேட்டான்.

ஆதியோ தான் வர்ஷினிக்கு குலாப்ஜாமூன் கொடுத்து அனுப்ப நினைத்ததை கண்டுபிடித்து விட்டான் என்று யூகித்து, “ஆமாடா இத இப்போதைக்கு அம்மா அப்பாட்ட சொல்லாதே படிச்சு முடிச்சதும் நானே சொல்லி கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான். இதெல்லாம் கவனிக்காமல் வைஷ்ணவியோ குலாப்ஜாமூனை முடிப்பதில் கவனமாக இருந்தாள்.

அவள் சாப்பிடுவதை பார்த்த ஆத்ரேயன்,  “உன் விதி” என்று கூறி கை இரண்டையும் வானத்தை நோக்கி காட்டிவிட்டு  தலைவலி தைலத்தை எடுத்தபடி தன்னறைக்குச் சென்றான்.

ஆதிக்கோ தன்னை காதலிக்கும் வர்ஷினியை பார்க்க ஆவலாக இருந்தது. “அம்மா நான் கோகிலா அத்தைக்கு குலாப்ஜாமூன் கொடுத்து விட்டு அப்படியே ஆசீர்வாதம் வாங்கி வருகிறேன்” என்று வைஷ்ணவியுடன் நடையை கட்டியவனை விசித்திரமாக பார்த்தார் மாலதி…

கோகிலா அமைதியான சுபாவம் உடையவர்… யாருடனும் நெருங்கி பழகியது கிடையாது… மகன்களின் நெருக்கம் மலர்வேந்தனுடன் முடிந்துவிடும்.  “என்னடா அத்தை மேலே பாசம் பொங்குது?” என்று கேட்ட மாலதிக்கு புன்னகையை விடையாக கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

வீட்டுக்குச் சென்ற வர்ஷினி அவனின் டயரியை பிரித்தவள் அதில் அவன் தன்னை  வர்ணித்ததை பார்த்து வெட்கம் வந்து அவள் கன்னங்களில் குடிக் கொண்டது…

மயில் பாவை நீயோ

மாசிலா வாசம் நீயோ…

வான்முகில் வண்ணம் நீயோ…

வாளிப்பான செழுமை நீயோ…

என்று சென்றுக் கொண்டிருந்த கவிதையை வாசித்தவள்  வெட்கப்பட்டு சிரித்துக்   கொண்டாள்.

வர்ஷினி வீட்டை வந்தடைந்தவன் கோகிலாவிடம் குலாப்ஜாமூனை கொடுத்துவிட்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.

‘அத்தான் ரொம்ப ஓவரா தான் பெர்பார்மன்ஸ் கொடுக்கிறார்’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் வைஷ்ணவி.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “வர்ஷினி எங்கே அத்தை? சொல்லிவிட்டு வருகிறேன்”  என்றவனை விசித்திரமாக பார்த்தவர்,

“இப்போ தானே உங்களை பார்க்க வந்தாள்?” என்றார். ‘மாட்டிக்கிட்டியேடா ஆதி’ என்று தன்னை தானே கடிந்தவன்,

 “இல்லை அத்தை … அது வந்து…” என்று தடுமாறினான்.

அவனை பார்க்க வைஷ்ணவிக்கு பாவமாக இருந்தது போலும். உடனே அன்னையிடம், “அத்தான் வெளியில் சென்று இப்போ தான் வந்தார்”  என்றாள்.

“ஓ…  நில்லுங்க வர சொல்லுறேன்” என்றவரிடம்,

 “இல்லை அத்தை நான் போய் பார்த்துக்கிறேன்”  என்று மாடி ஏற போனவனை தடுத்து நிறுத்தினார்.

“உங்களுக்கெதுக்கு சிரமம்..? இதோ வந்து விடுவாள்” என்றபடி மகளை அழைக்க மாடி ஏறி விட்டார். அவருக்கும் வயசு பையனை மகளின் அறைக்கு அனுப்ப விருப்பமில்லை போலும்.

இதை பார்த்தவன் வைஷ்ணவியின் காதில்,

“உங்கம்மா தான் எனக்கு நந்தி” என்றான்.வைஷ்ணவியும் சிரித்து விட்டு அவன் கொண்டுவந்து கொடுத்த குலாப்ஜாமூனை வாய்க்குள் போட்டாள்.அவள் சாப்பிடுவதை ஆச்சரியமாக பார்த்தவன். அவளை ‘சாப்பாடு ராமி’ என்று மனதில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் நினைவுக்கு தடை போடுபவளாக வெட்கத்தில் சிவந்த முகத்துடன் வர்ஷினி மாடியிலிருந்து இறங்கி வந்தாள். அவளை பார்த்தவனுக்கு கற்பனைகள் தறி கெட்டு ஓட ஆரம்பித்தன. அவைகளுக்கு கடிவாளமிட்டவன் அப்போதும் விலகி செல்லாத கோகிலா அத்தையிடம், “அத்தை தண்ணி கிடைக்குமா??” என்றான்.

அவர் தண்ணி எடுக்க போன நேரம் பார்த்து தன்னை அடக்க முடியாதவன் அருகில் அவசரமாக நெருங்கி அவள் கன்னத்தில் தன் முதல் முத்தத்தை பதித்து, “நான் நாளைக்கு போறேன் வர்ஷி… என்ன மறந்துடாதே” என்றான். அவன் முத்தத்தில் முதலில் திகைத்தவள் தன்னை சுதாரித்துக்கொண்டு, “நான் மறக்க மாட்டேன் நீங்க மறக்காம இருந்தால் சரி” என்றாள் அவன் கண்களை ஊடுருவ பார்த்தவாறு.

அவனும் அவள் கண்களுடன் தன் கண்களை கலந்தவன், அவள் விழியில் தெரிந்த காதலை கண்டு சொக்கி போய் விட்டான். கோகிலா வரும் அரவம் கேட்டு விலகி நின்றவனுக்கு அப்போது தான் வைஷ்ணவியின் நினைவு வந்தது. அவளை சடாரென திரும்பி பார்த்தான். அவளோ நடந்தது எதையும் கவனிக்காமல் குலாப்ஜாமூனை வாய்க்குள் தள்ளுவதில் மும்முரமாக இருந்தாள்.

அவள் தனது செய்கையை  பார்க்கவில்லை என்று திருப்தியடைந்தவன் தண்ணீரை வாங்கி குடித்து விட்டு, “நன்றி அத்தை” என்றவாறு தனது வீடு நோக்கி நடந்தான்.

தன் அறைக்குள் சென்றதும் அலுப்பாக இருந்தது ஆத்ரேயனுக்கு. அவனுக்கு இருப்பும் கொள்ளவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்க மறுபடி இறங்கி வந்தவனிடம் தாய் சொன்ன செய்தி அவ்வளவு உவப்பாக இல்லை. “இவன் எதுக்கு ஒரே நாளில் இவ்வளவு பெர்பார்மன்ஸ் கொடுக்கிறான்?  இங்கே பண்ணின ரொமான்ஸ் பத்தாதா அவனுக்கு?” என்று முணுமுணுத்தபடி அவனுக்காக காத்திருந்தான்.

வீட்டுக்கு வந்த ஆதி ஹாலில் சோபாவில் காலை நீட்டி படுத்து இருந்த ஆத்ரேயனை நோக்கி வெட்கப்பட்டு சிரித்தான்.

“தயவு செய்து இப்படி சிரிக்காதே சகிக்கல.” என்றவன் மேலும்,

 “உன் ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டான். அவனை பார்த்து கண்ணை சிமிட்டியவன் தன்னறைக்குள் புகுந்துவிட்டான். 

தலையில் அடித்துக் கொண்ட ஆத்ரேயன், “இந்த கன்றாவியெல்லாம்  பார்க்க வேண்டிய தலையெழுத்து” என்றபடி அவன் அறைக்குள்  தஞ்சம் புகுந்தான்.

அடுத்தநாள் கல்லூரிக்குச் செல்ல புறப்பட்ட ஆதியும்  வர்ஷினியும் கண்களால் பேசி விடைபெற்றனர். ஆதியை கட்டியணைத்த ஆத்ரேயன் வைஷ்ணவியை நோக்கினான். கண் கலங்க நின்றவளை பார்த்தவன் ‘நீ பெரிய நடிகைடி’ என்று மனதுக்குள் அவளை அர்ச்சித்தான்.

அண்ணனின் காதலை பிரிக்க முதலில் எண்ணியவன் அதன் பின்னர் வைஷுவின் குணத்தை பற்றி சற்று நடுநிலையாக  சிந்தித்து பார்த்தான். வைஷ்ணவி தனக்கு தான்  எதிரி என்றாலும் அடுத்தவர்களுக்கு அவள் நல்லவள் பாசமானவள். குணத்தில் ஆதிக்கு பொருத்தமானவள் என்று தீர்மானித்தவன் ஆதிக்கு தன்னால் எந்த மன கஷ்டமும் வரக்கூடாது என்று முடிவெடுத்து அவளுடன் எந்த வம்பும்  வைக்கவில்லை. 

அவளை பார்க்கும் போது சினேகமாக புன்னகைக்க வேற செய்தான். அவளுக்கும் அது புதிதாக இருந்தது. ஆனால் அவள் யாரிடமும் கோபம் பாராட்டாதவள் என்பதால் அவளும் சினேகமாக புன்னகைத்து வைத்தாள்.

அதன் பிறகு வைஷ்ணவியும் ஆத்ரேயனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் விதி யாரை விட்டது? அங்குச் சென்று  அடுத்த வருடம் ஆதி காதலர் தினத்துக்கு முதல் நாள் ஆத்ரேயனுக்கு கால் எடுத்தவன், “உன் அண்ணிக்கு காதலர் தினத்துக்கு எதுவும் வாங்கவில்லைடா… தயவு செய்து ஒரு ரோஜாபூங்கொத்தும், சாக்லேட்டும், ஒரு கார்டும் வாங்கி நான் அனுப்பியதாக சொல்லி கொடுத்து விடு ப்ளீஸ் டா… அவ ரொம்ப எதிர்பார்ப்பா” என்று கெஞ்சியவனை பார்த்து கோபம் வந்தாலும், “செய்து தொலைக்கிறேன்” என்றவன்,

“குண்டச்சிக்கு எதிர் பார்ப்பு வேறயா?” என்று மனதுக்குள்  முணுமுணுத்தபடி கடைக்குச் சென்று அவன் சொன்னதெல்லாம் வாங்கிக் கொண்டு போய் கொடுப்பதற்கு  ஆயத்தமானான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top