யுகம்-27

சலித்தவரை பார்த்தவள் எப்போது போகலாம் என்பது போல் இருந்தாள். தனது கையை பிடித்து காதலை சொன்ன கீர்த்தனாவை ஏதேதோ செய்ய மனம் துடித்தாலும் அதை அடக்க அவள் கையிலேயே அழுத்தத்தை கொடுத்தான் கார்த்திக். அவன் அழுத்தம் புரிய மெதுவாக தனது கையை விலக்கிக் கொண்டாள்.

மாலதி வைஷ்ணவிக்காக தான் குலாப்ஜாமூனை செய்தார். அவள் சாப்பிடாததை கண்டு கொண்டவர், “என்னமா நீ சாப்பிடலயா ?? டயட்ல இருக்கியா?” என்று நக்கலாக  கேட்க அவரை அனல் பறக்க பார்த்தவள் குலாப்ஜாமூனை எடுத்து சாப்பிட தொடங்கினாள்.

காதலின் உச்ச நிலையிலிருந்த ஆத்ரேயனுக்கோ அவள் சாப்பிடும் குலாப்ஜாமூனை சாப்பிட வேண்டுமென்கிற தாபம் எழுந்தது. கீர்த்தனா கார்த்திக் இருவரும் அங்கே இருப்பதால் எழுந்துச் செல்ல முடியாமலும் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டும் இருக்க பெரும் பாடுபட்டு போனான்.

தன்னை சமப்படுத்த அவன் ஆதியின் புதல்வனை கார்த்திகேயனிடம் இருந்து  வாங்கியவன் அவனுடனேயே நேரத்தை செலவளித்தான். வைஷ்ணவியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் கிளம்ப  போனவர்களிடம் மாலதி, “அடிக்கடி வாங்க” என்று கூறி அனுப்பினார். அப்போது கூட வைஷ்ணவியை பார்க்கவில்லை. கடுப்புடன் அவரை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் முதலில் வெளியேறினாள். பின்னால்  வந்த கார்த்திக் சிறிது தூரம் சென்றதும் கீர்த்தனாவை பார்க்க அவளுக்கோ வெட்கம் வெட்கமாக வந்தது. அவனை விலகி ஓடி வந்து வீட்டுக்குள் புகுந்துக் கொண்டாள். “நம்மள காய விடுறதுல அப்படி ஒரு சந்தோசம்” என்று சலித்தவன் தனது வீட்டுக்குச் சென்றான்.

யார் பேசாவிட்டாலும் தாங்கியவளுக்கு அக்காவின் பையனை தூக்க கை பரபரத்தது. அங்கு போய் அவமான பட விரும்பாதவள் ஆத்ரேயனுக்கு அழைத்தாள். அவன் தொலைபேசியை எடுத்ததும் என்ன பேசுவதென்று முதலில் தடுமாறியவள்,

“ஹெலோ எப்படி இருக்கீங்க?” என்று உளற சிரித்தவன்,

“இப்போ தானே பார்த்த போல இருந்ததே…” என்றான் நக்கல் தொனியில். ‘மண்டு மண்டு’ என்று தனக்கு தானே மனதுக்குள் திட்டிக் கொண்டவள், “எனக்கு அக்ஷித்தை பார்க்கணும் போல இருக்கு” என்றாள் தட்டு தடுமாறி. அக்ஷித் அவள் அக்கா மகன்…

“என் ரூமுக்கு வா” என்றவனிடம் “ஆ எதுக்கு உங்க ரூமுக்கு??? உங்க வீட்டுக்கே வரமாட்டேன்  உங்க அம்மா பேசுற பேச்சை  பார்த்தீங்க தானே” என்று கேட்டவளிடம், “நீ என்னை கல்யாணம் முடிக்க முதலே அவங்க உன் மாமியார் டி…” என்றான். அவனுக்கு உங்க அம்மா என்று அவள் சொன்னது பிடிக்கவில்லை போலும். “சரி என் மாமியார் தான். அவங்க தேவையில்லாம பேசுவாங்க நான் வரமாட்டேன்” என்று சொல்ல.

“நீ யாரையும் பார்க்காமல் நேரே என் அறைக்கு வா” என்றான்.

“முடியாது” என்றவளிடம், “அப்போ சரி உன் இஷ்டம்… உனக்காக தான் வர சொன்னேன் அக்ஷித்தை பாக்கிறதுக்காக… அப்போ நான் வைக்கிறேன்… ஐ ஹோப் நோ மோர் டு டாக்” என்று அவள் பதிலை எதிர் பாராமல் வைத்து விட்டான்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவளுக்கு மனசு குடும்பத்தை நினைத்து அலை பாய, அதுக்கு மேல் பொறுமை இல்லாதவள் கீர்த்தனாவிடம் சொல்லி விட்டு போய் ஆத்ரேயன் வீட்டை தட்டினாள்.

அவள் வரமாட்டேன் என்று சொன்னதால் அவனும் அதை பற்றி யாரிடமும் கூறாமல் குழந்தையை ஆதியிடம் கொடுத்து விட்டு குளிக்கச் சென்று விட்டான்.

தட்டியதும் திறந்தது மாலதி. அவளை கேள்வியாக பார்க்க அவரை முறைத்தபடி ஆத்ரேயன் அறைக்குச் செல்ல முனைந்தாள். அவளை கை நீட்டி தடுத்தவர், “எங்கம்மா போற??” என்று கேட்க, “ஆத்ரேயன்…” என்றவள் அவரை அழுத்தமாக பார்த்து, “என் புருஷன் அறைக்கு”  என்றாள். அவள் பதிலில் மனம் மகிழ அதை காட்டிக் கொள்ள விரும்பாதவர் அவளை போக விட்டார்.

அறைக்கு வந்ததும் தான் அவன் அங்கு இல்லாமல் குளிக்கச் சென்றதை கண்டுக் கொண்டாள். அலுப்பாக இருக்க கதவை திறந்து வெளியே வந்தவள் வர்ஷினியை தேடி போனாள். அவளோ சமையலறையில் மாலதியுடன் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தாள்.

கேரட் வெட்டிக் கொண்டு இருந்தவளிடம் கேரட்டை  பறித்தவள், “நான் வெட்டுகிறேன்” என்றபடி வெட்ட தொடங்க சிரித்தபடியே வர்ஷினி அடுத்த வேலையை பார்க்க போனாள்.

மாலதியும் வர்ஷினியும் பார்த்து சிரித்ததை கண்டுக் கொண்டவள், “என்னை பார்த்தது போதும் சமைச்சு முடிங்க ரொம்ப பசிக்குது” என்றபடி வேலையை தொடர்ந்தாள். வர்ஷினியை நோக்கி, “எங்கடி உன் சீமந்த புத்திரன்?” என்று கேட்க… அவன் ஆதியுடன் வெளியேச் சென்று இருப்பதாக கூறினாள் வர்ஷினி.

மாலதி தன்னுடன் சீண்டியதை தாங்கிக் கொண்டவளுக்கு கார்த்திகேயனின் பாராமுகம் கவலையை அளித்தது. பால்கனியில் பத்திரிக்கை படித்துக் கொண்டு இருந்த அவரை நோக்கிச் சென்றவள், “மாமா என் மேல ஏதும் கோபமா??” என்று கேட்க நிமிர்ந்து பார்த்தவர் பெரு மூச்சை விட்டு, “இல்லம்மா வருத்தம்” என்றார். அவரின் ஒதுக்கம் அவளுக்கு மேலும் அழுகையை கூட்ட அவள் கண்ணிலிருந்து கண்ணீர்  வழிந்தது. அதை கண்டு பதறியவர், “ஏன்மா இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு… நீ எப்போ என் புருஷன் அறைக்கு போறதா சொன்னியோ அப்போவே அந்த வருத்தம் கூட மறைந்து போய் விட்டது” என்றவர் கதிரையிலிருந்து எழும்பி  அவள் தலையை தடவி கொடுத்தார்.

“உங்க பாசமலர் சீன் தாங்க முடியவில்லையப்பா” என்றபடி அங்கு வந்து சேர்ந்த மாலதி அவளை அணைத்து ஒரு குலாப்ஜாமூனை அவள்  வாயில் திணித்தார்.

“அப்போ இதுக்கு பெயர் என்ன?” என்றபடி வந்த வர்ஷினியும் அவளை அணைக்க எல்லாரும் சிரித்துக் கொண்டனர்.

மாலதி சொன்னதை கேட்டு ஆத்ரேயன் அறைக்குச் சென்றவள் அப்போதும் அவன் குளித்து முடித்து வராமலிருக்க கட்டிலில் படுத்து மேசையிலிருந்த புத்தகத்தை எடுத்து மல்லாந்து படுத்து படித்துக் கொண்டிருந்தாள். அவன் குளித்து ஈரம் சொட்ட வெண்ணிற டவலை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு வந்தவனை பார்த்தவள் புத்தகத்தை மூடி பக்கத்தில் போட்டுவிட்டு பக்கவாட்டாக சாய்ந்து தலையில் ஒரு கையை முட்டு கொடுத்தபடி அவனை வைத்த  கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை அங்கு எதிர் பார்க்காதவன் அதிர்ந்தபடி, “வெளியே போடி நான் உடுப்பு மாத்தணும்” என்றான்.  “மாத்தலாமே” என்றவள் கண் மட்டும் அவனை விட்டு அகலவில்லை. “நீ செய்றதெல்லாம் பார்த்தா நீ பொம்பளையா இல்லை ஆம்பிளையா னு சந்தேகமா இருக்குடி” என்றவனை குறும்பாக பார்த்தவள், “ஏன் உங்களுக்கு தெரியதாக்கும்” என்று கூறி கண்ணடித்தாள்.

ஏற்கனவே அவளில் மயங்கி இருந்தவன் அவளின் பேச்சில் தன்னை முழுமையாக  இழந்தான். அவள் இங்கே இருந்தால் ஏதும் விபரீதம் நடந்து விடும் என்று அறிந்தவன் அவளை எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று நினைத்தான். “நீ போகாவிட்டால் உன் முன்னாலேயே” என்றபடி டவலில் கை வைக்கவும் அவள் அசையவில்லை. அவள் ஓடிவிடுவாள் என்று எதிர் பார்த்தவன் அவள் அசையாமல் இருக்க கடைசியில் அவன் தான் இறங்கி வர வேண்டியதாக போய்விட்டது.  “என்னடி வேணும் உனக்கு?” என்று கேட்டவனிடம் எழுந்து அருகில் வந்தவள் அவன் நடு மார்பில் சுட்டு விரலை வைத்தாள்.

அவளை கூர்ந்து பார்த்தவன், தனது கைகளை கட்டியபடி அவளை விட்டு இரண்டடி பின்னால் நடந்தான், “சொன்னா  கேளு என்னை சீண்டாதே… பிறகு சேதாரம் உனக்கு தான்” என்றவனை நோக்கி இரண்டடி முன்னால் வந்து அவன் மூச்சு காற்று படுமளவுக்கு நெருங்கி நின்றாள்.

பொறுமை இழந்தவன் வேகமாக இழுத்து அவளை சுவருடன் சாத்தி அவள் முகத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன்  அவள் இதழ்களுக்குள் தன் இதழை ஆழமாக புதைத்துக் கொண்டான்.

நீண்ட நாள் இருவரின் சொல்லாத காதலை உணர்த்தும் பொருட்டு நீண்ட நேரம் இதழ் யுத்தத்தில் இணைந்தார்கள் அடுத்து ஆத்ரேயன் தனது  இதழ்களை அவள் கழுத்து வளைவில் புதைத்துக் கொண்டான். அவன் முத்த தாக்குதலில் உணர்ச்சியின் பிடியில் இருந்தவளின் கைகள் அவன் கேசத்திலும் வெற்று முதுகிலும் கோலம் போட்டன. மீண்டும் இதழ்களில் தேனை உறிஞ்ச உந்துதல் எழ தனது  இதழ்களை மீண்டும் அவள் இதழுடன் இணைத்துக் கொண்டான்.

இருவரும் தம்மை மறந்து அடுத்த கட்டத்துக்கு ஆத்ரேயன் கை முன்னேற இருந்த சமயம்,   எதிர் பாராத விதமாக ஆதி தனது மகனுடன் கதவை  திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்திருந்தான்.

வெளியில் மகனுடன் சுற்றி  விட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு  சமையலறையிலிருந்த  மாலதியையும் வர்ஷினியையும் மற்றும் பால்கனியிலிருந்த  கார்த்திகேயனையும் சந்திக்க கிடைக்கவில்லை.

நேரே ஆத்ரேயன் ரூமை திறந்தவனுக்கு ஆத்ரேயனின் முதுகு கண்ணில் பட,  கண்ட காட்சியில் பதறி, “சாரி” என்று கூறியபடி மறு பக்கம் திரும்பி நின்று வெளியேறினான்.

கதவு திறக்கப்பட்ட சத்தத்தில் பதறியவர்கள் இருவரும் மூச்சு வாங்கியபடி தர்ம சங்கடமாக ஒருவரை ஒருவர் விலகி நின்றனர். முழுதாக வாசலை நோக்கி திரும்பிய ஆத்ரேயன் வைஷ்ணவியை மறைத்தபடி நின்றிருந்தான். அவனுக்கு தெரியும் அவளால் விரைவில் சுதாரிக்க முடியாது என்று.

ஆதி வெளியே போகும் போது,

“கதவை தாழ்ப்பாள் போட்டுக்கோ” என்றுரைக்க இருவருக்கும் வெட்கம் பிடுங்கி தின்றது. கதவை சாத்தி விட்டு அவன் சென்றதும் வெட்கத்தில் குனிந்திருந்த அவளை திரும்பி பார்த்தவன் அவளின் தர்மசங்கடத்தை அறிந்தபடி உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் உடை மாற்ற.

இனியும் அங்கு இருந்தால் வெளியில் இருப்பவர்கள் தவறாக நினைக்ககூடும் என்று தர்மசங்கடமாக சமையலறையை நோக்கிச் சென்றாள். மறந்தும் ஹாலில் மகனுடன் அமர்ந்திருந்த ஆதியை நிமிர்ந்து பார்க்கவில்லை.

உடை மாற்றி விட்டு வந்த  ஆத்ரேயன் ஆதியிடமிருந்து  குழந்தையை வாங்கிக் கொண்டு வைஷ்ணவியிடம் சென்றான்.

அவனருகில் போய் குழந்தையை வாங்கச் சென்ற வைஷ்ணவியை பார்த்த குழந்தை மருட்சியுடன் ஆத்ரேயனை கட்டி பிடித்தது. அந்த செய்கையை பார்த்து மனம் பதைக்க, அப்போது தான் விளங்கியது குடும்பத்தை விட்டு முழுதாக தள்ளி இருந்ததன் தாக்கம். அவள் வலியை அவள் கண்ணில் கண்டுக் கொண்டவன், “இங்க பாருப்பா  சித்தி வந்திருக்காங்க” என்று காட்ட குழந்தை தயங்கி தயங்கி திரும்பி பார்த்தது.

அவன் சொன்னதை கேட்டு திரும்பி பார்த்த குழந்தை மெல்ல மெல்ல அவளுடன் ஒட்டிக் கொண்டான். அவளிடம் குழந்தையை கொடுத்து விட்டு ஆதி அருகில் போய் சங்கடத்துடன் இருந்தவனை இயல்புக்கு கொண்டு வரும் பொருட்டு தொழில் சம்பந்தமாக பேச தொடங்கினான் ஆதி. ஆத்ரேயனும் தொழில் பேச்சில் அனைத்தையும் மறந்து போனான்.

சாப்பிட உட்கார்ந்தவர்கள் ஆத்ரேயனுக்கு முன் வைஷ்ணவி உக்காந்திருக்க அவளுக்கு பக்கத்தில் மாலதி உட்கார்ந்திருந்தார். அவளை முத்தமிட்டதில் இருந்து அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் நினைப்பாகவே இருந்தது.   ஆனால் ஆதி பார்த்ததால் இனி கவனமாக நடக்க வேண்டும் என்று பெண் மனம் யோசித்தது. சாப்பிட்டபடியே தனது காலால் வைஷ்ணவியின் காலை வருடினான். அதிர்ச்சியுடன் நிமிர்ந்து ஆத்ரேயனை பார்க்க அவனோ அவளை விழுங்குவது போல் பார்த்தான். அவன்  வருடலில் தர்ம சங்கடப்பட்டவள் காலை நன்றாக உள் இழுத்துக்  கொண்டாள்.எது நடந்தாலும் அவன் முகத்தில் காதலை தவிர வேறு எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை.

காலை நன்றாக போட்டு தேடியவன் காலுக்கு மறுபடி ஒரு கால் அகப்பட்டது.  அது மாலதியின் பாதம் என்று அறியாமல் அதை வருட சங்கடப்பட்டபடி மாலதி அவனை முறைத்து பார்த்தார். ‘அம்மா எதுக்கு இப்படி முறைக்கிறாங்க?’ என்று யோசித்தவன் அவரை கேள்வியாக பார்க்க பொறுமை இழந்த மாலதி, “நீ வருடுவது என்னோட கால்” என்றார். சபையில் சடாரென தன் காலை உள்ளே இழுத்தவனுக்கு வெட்கம் வெட்கமாக வந்தது. அவரின் கூற்றில் எல்லாரும் சிரிக்க அவனும் வெட்கப்பட்டு வைஷ்ணவியை பார்த்தான். அவளும் குனிந்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடிந்ததும் மாலதி அவளை தங்களுடன் நிற்க சொல்ல, கீர்த்தனா தனியாக இருப்பதாக சாட்டு சொன்னவள் கிளம்ப போனாள். அவள் தன்னுடன் நிற்க வேண்டும் என எதிர் பார்த்த ஆத்ரேயனுக்கு அவளின் செய்கை ஏமாற்றமாக போக அவளை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் பயத்தில் அவள் எச்சிலை விழுங்கியபடி வெளியேறினாள்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top