அத்தியாயம் 5

 

நேரே லைப்ரரிக்கு தளர்ந்து போய் வந்து சேர்ந்திருந்தாள் நறுமுகை…அங்கு இருப்பதோ மூன்று நான்கு கணிணிகள் தான்..அனைத்திலும் சீனியர்களும் ஜூனியர்களும் வேலை பார்த்துக் கொண்டிருக்க , அவள் திரும்பி செல்லலாம் எனும் நேரம் ஒருவர் எழுந்து வெளியேறி விட்டிருந்தார்.. சரியென அங்கு சென்று அமர்ந்தவள் கம்ப்யூட்டரில் தனக்குத் தேவையானதை தேடலானாள்…  

 

அச்சமயம் ,

“என்னம்மா உங்க கைட் உன்னை தேட சொல்லிவிட்டாரா ?”

என்கிற குரலில் தலை திருப்பி பார்த்திட, சாமுவேல் தான் அமர்ந்திருந்தான்.

“ஆமாண்ணா  அஞ்சு கொஸ்டின் எழுதிக் கொடுத்து ஆன்சர் தேடி எடுத்துட்டு வர சொல்லி இருக்காரு…” என சோர்வாக கூறியதும் சாமுவேலோ கணினியில் வேலை பார்த்தவாரு,

“அவன் அப்படித்தான்மா…சரியான நச புடிச்சவன் ஏதாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பான்…வேலை சொல்லிட்டே இருப்பான் பார்த்து கவனமா இருந்துக்கோ…”

 

என அவளுக்கு ஆதரவாய் பேசியதும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.. கண்களை சிமிட்டி கண்ணீரை உள் இழுத்துக் கொண்டவள் தனக்குத் தேவையானதை தேட துவங்கிட, அவள் நேரத்திற்கு நெட்வொர்க் வேறு சரியாக கிடைக்கவில்லை.. 

தலையை தேய்ப்பதும், கைகளை பிசைவதுமாய் அமர்ந்திருந்தவளை பார்த்த சாமுவேல்,

 

“ கொஸ்டீன்ஸ் காட்டு என்னன்னு நான் பார்க்கிறேன்..” என்றதும் அவனிடம் நீட்டினாள்.  அதை முழுவதுமாய்  பார்த்த சாமுவேல்,

“ இரு நானே தேடி தரேன்..” என அவளுக்கு எளிதாக இருப்பதை  பார்த்து  பார்த்து  தந்திட, தனக்கு பதில் கிடைத்து விட்ட ஆர்வத்தில் நிரல்யாவும்  திரையில் இருப்பதை  பார்த்து  எழுத துவங்கியிருந்தாள். 

 

அவள் ஒவ்வொன்றையும் அவசர அவசரமாக  முடிக்கும்போது அடுத்தடுத்து தேடித்தந்த சாமுவேல் அவளை சற்று நெருங்கி அமர்ந்து விட்டிருந்தான்..  எதையோ ஒன்றை தேட சட்டென  அவளைத் தாண்டி மவுசை தொடும் நேரம் நறுமுகையின்   மீது அவனது பக்கவாட்டு கரம் பட்டு விட்டது.. 

 

அதில் திடுக்கிட்டு பின்வாங்கிய நறுமுகை அவனை அதிர்ந்து  பார்த்திட, ஆனால் சாமுவேலோ விழிகளை சுருக்கி அத்தனை ஆர்வமாய் பதில் தேடுவதை பார்த்ததும் ஒரு வேலை தெரியாமல் கூட தன்னை தொட்டிருக்கலாமோ என்கிற எண்ணத்தில் சற்று கவனமாய் எழுத துவங்கினாள் .. 

 

சாமுவேல் அவள் குனிந்து எழுதுவதை  பார்த்தவன்,

 

“ எழுதிட்டியா?” என அவளது காதோரம் குனிந்து  வந்து அத்தனை நெருக்கமாய் கேட்டதும் பதறிக் கொண்டு எழுந்தே விட்டிருந்தாள் நறுமுகை .. 

அவனை அழுத்தமாய் பார்த்துவிட்டு விறு விறுவென வெளியேறி விட்டாள்..  

முதல் முறை இதுபோல் நடப்பதால் கை காலெல்லாம் படபடவென நடுங்க  துவங்கி விட்டது அவளுக்கு. 

செல்பவளது  முதுகை இதழ் வளைத்து பார்த்த சாமுவேல் பின்பு அந்த கணினியை க்ளோஸ் செய்து விட்டு தனக்கான வேலையை பார்க்கத் தொடங்கி விட்டான்..  ஏற்கனவே மனம் தளர்ந்து போய் இருந்தவளுக்கு இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்திடவும் இன்னும் அழுகை அதிகமானது தான் மிச்சம்.. 

அழுதபடி அவள் படியேறி வந்திட அச்சமயம் விக்ரமும் தனது கைச்சட்டையை மடித்தவாறு கீழே இறங்கி வந்தவன் தலைகுனிந்து வந்தவளை  விழிகள் சுருக்கி பார்த்தவன்,

“ ஆன்சர் எழுதிட்டிங்களா ?”  என்கிற கேள்வியில்  பேய் அறைந்தது போல உடல் அதிர அவனைப் பார்த்த நறுமுகைக்கு தூக்கி வாரி போட்டது..  அவள்தான் எதுவும் செய்யவில்லையே

“சா.. ர்..” என்றவளை  அழுத்தமாய் பார்த்தவன் பேண்ட்  பாக்கெட்டில் இரு கரங்களையும் விட்ட  படி,

 

“ கொடுத்த கொஸ்டின்ஸ் எல்லாத்துக்கும் ஆன்சர் எழுதிட்டீங்களானு கேட்டேன் ?”  என்றதும் கைகளை பிசைந்தபடி இருந்த நறுமுகைக்கு அவனை தலை உயர்த்தி பார்க்கவே அத்தனை பயத்தை தந்தது.. 

 

அவனது ஒற்றைப் பார்வையிலேயே அவளது சர்வமும் அடங்கி ஒடுங்கி விட்டது போல உணர்ந்தவளுக்கு பதில் கூறுவதற்கு ஒரு வார்த்தையும் வெளியவே வரவில்லை. அவள் பேசாது இருப்பதை கண்டவன் தலை சாய்த்து,

 

“ உங்களை தான் கேட்கிறேன் நறுமுகை..  பதில் எழுதிட்டீங்களா?”

என்றதும்,

 

“ சார்..  அது எழுதலை “ என்றதும்,

 

“ சரி..  கொஸ்டின் பேப்பர்  எ ங்க?” என் கேட்டதும் அவளுக்கு அய்யோடா என்றானது.. 

 

சாமுவேல் அவ்வாறு நடந்து கொண்டதும் சட்டென  வந்து விட்டாள்  அல்லவா!..  இதில் எங்கனம் அவன் தந்த பேப்பரை வேறு தேடிக்கொண்டிருப்பது .. 

 

“அது சார் நான் லைப்ரரில வச்சிருக்கேன்’

 

“ அங்க வச்சுட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க நறுமுகை?” எனக் கேட்டதும்,

 

“ அது ரெஸ்ட் ரூம்காக வந்தேன் சார்” என்றவளை புரியாது பார்த்தவன்,

“ லைப்ரரிக்கு வெளியவே ரெஸ்ட் ரூம் இருக்கே ?” என்றதும் மீண்டும் அவளுக்கு என்ன பதில் கூறுவது என தெரியாததால்,

 

“ அது ரெஸ்ட் ரூம் அங்க போயிட்டு தண்ணி குடிப்பதற்காக மேல வந்தேன் சார்”  என்றவளை சலிப்பாக பார்த்தவன்,

“ என்னவோ பண்ணுங்க..   ஆனா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்க நறுமுகை..  ஒரு வேலையும் பண்ணாம எப்படித்தான் இப்படி வெட்டி முண்டமா இருக்க முடியும் தெரியல..  என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது ஈவினிங் குள்ள எனக்கு அந்த அஞ்சு கொஸ்டின்ஸ்கும் ஆன்சர் கொண்டு வரணும் புரிஞ்சுதா ?” என்று விட்டு படி இறங்கி சென்றவனை தளர்ந்து போய் பார்த்த நறுமுகைக்கு தலையை வெடித்து விடும் உணர்வு தான்… 

 

அவளும் எவ்வளவு தான் தாங்குவாள்..  ஏற்கனவே அவன் திட்டி விட்டானே என்கிற எண்ணத்தில் இருந்தாள் ..  இப்போது சாமுவேல் அவ்வாறு நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இப்போது மீண்டும் சுபாஷ் அவளிடம் பதில்களை எழுதிக் கொண்டு வருமாறு கூறியதும் மனம் நொந்து போய்விட்டாள்  நறுமுகை.. 

 

தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் லைப்ரரிக்கு செல்ல அங்க நல்ல வேலை சாமுவேல் கிடையாது..  பின் மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து பார்த்திட அவள் எழுதிய பேப்பர் அங்கு இல்லை… அங்கும் இங்கும் தேடியவளை பார்த்த அங்கிருந்த நூலக காப்பாளர்,

“ என்னம்மா எதை தேடுற?”  என கேட்டதும்,

 

“ அது இங்க நான் ஒரு பேப்பர் கொண்டு வந்த..  நான் கொஸ்டின்ஸ் எழுதி இங்க தான் வச்சிருந்தேன் காணோம் “ என்றதும் 

‘அப்படியாம்மா..  இங்க ஏதும் பேப்பர் நானும் பாக்கலையே..  ஏதாவது இருந்தா கண்டிப்பா எடுத்து வச்சிருப்பாங்க பசங்க… ஆனால் ஏதும் இல்லையே..”

“இல்ல..  இங்க தான் வச்சிருந்தேன் சார்..  கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்..’  என்றவளின்  பேச்சுக்கு அவரும் ஒருமுறை தேடிப் பார்த்தவர்,

 

“ இல்லம்மா எங்குமே இல்லை .. சப்போஸ் யாராவது எடுத்து இருக்காங்களானு  கேட்டுட்டு சொல்றேன் “ என்றதும் தலையில் கை வைக்காத குறையாய் வெளிவந்தவளுக்கு வேறு வழியே இல்லை சாமுவேலிடம் தான் கேட்டாக வேண்டும்..  

 

பேப்பர் மட்டும் கிடைக்கவில்லை என்றால் இன்னும் அதிக திட்டுகளை விக்ரமிடம் வாங்க வேண்டியதாக இருக்கும் என்பதால் மனமே இல்லாது சாமுவேலை தேடிச் சென்றாள்  நறுமுகை.. 

கவிதா அவனுடன் இருப்பதை கண்டவள் சற்று ஆசுவாசமடைந்தவளாய் வேகமாக சென்று,

 

“ அண்ணா “ என்றதும் கவிதாவும் சாமுவேலும் ஒருசேர திரும்பி பார்த்தனர்..  

‘லைப்ரரில..  ‘ என பேச்சினை எடுத்ததும் சாமுவேலின் விழிகள் அவளை அழுத்தமாய் பார்த்திட, அதை அலட்சியம் செய்த நறுமுகை,

“ கொஸ்டின் எழுதி இருந்தேனே  அந்த பேப்பர் பார்த்தீர்களா?” என்றதும் அவளை முறைத்து விட்டு,

 

“ அதெல்லாம் நான் பார்க்கல..  கவிதா அதை எ டுங்க..” என குரலிலேயே அத்தனை கோபம் கொப்பளித்தது சாமுவேலிற்க்கு..  அதற்காக விட்டு சென்றிட முடியாது அல்லவா ..!

 

“அண்ணா நீங்களும் பக்கத்துல தான் இருந்தீங்க, நீங்க சொல்ல சொல்ல தான் நான் ஆன்சர் எழுதினேன் அந்த பேப்பரை பார்த்தீர்களா?” என்றதும் அவளை சலிப்பாக பார்த்தவன்,

 

“ நீ எடுத்துட்டு வந்த பேப்பரை நீ தான் பத்திரமா வச்சுக்கணும் நீ பாட்டுக்கு தூக்கி போட்டு எழுந்து போய்கிட்டே இருந்தனா நான் அந்த பேப்பரை பொறுக்கி வைக்கணுமா என்ன?”  என முகத்தில் அடித்தாற்  போல பேசிடவும் நறுமுகையின்  முகம் கருத்து விட்டது..  

 

கவிதாவோ ஒன்றும் புரியாதவளாய்  இருவரையும் மாறி மாறி பார்த்தவள் ,

“ என்னாச்சுடி முகை ?”| என்றதும் சாமுவேல் அவளிடம் திரும்பி,

“ கவிதா உங்களுக்கு இங்க வேலை நடந்துட்டு இருக்கு வெட்டியா அவ கிட்ட பேசணும்னு நினைச்சீங்கன்னா நீங்க போய் பேசிட்டு வரலாம்.. “  என்றதும் அதில் பயந்து போன கவிதா,

 

“ இல்லண்ணா ..  அதெல்லாம் ஒன்னும் இல்ல..” என நறுமுகை பார்வையாலே போவென கூறிவிட்டு தன் வேலையை பார்க்கலானாள்.. நிச்சயம் சாமுவேல் தான் அந்த பேப்பரை எடுத்து இருக்க வேண்டும் என அறிவாள் நறுமுகை..  ஆனால் அதை எப்படி விக்ரமிடம் கூற முடியும்? 

கூறி  தானே ஆகவேண்டும்..  

 

விக்ரமை  தேடி அவனிடம் எப்படியேனும் தன் நிலையை  புரிய வைத்துவிடலாம் என்கிற நப்பாசையில் அவனைத் தேடிச் சென்றாள்..  அருகில் இருக்கும் அறையில்  அவன் இருக்கிறானா என பார்த்திட , அங்கு இல்லை என்றானதும் , மீண்டும் கீழ் இறங்கி ஒவ்வொரு தளமாக தேடினாள் ..  கிட்டத்தட்ட அந்த நான்கு மாடியையும் இன்று ஒரு நாள் மட்டும் அத்தனை முறை ஏறி இறங்கி இருப்பாள் நறுமுகை..  

சோர்ந்து போய் கீழே இறங்கி வந்தவள் அங்கு சென்றிருந்த ஒருத்தரிடம், 

“ விக்ரம் சாரை  பாத்தீங்களா ?” 

“அவர்  கேண்டின்ல இருக்காரு”  என்றதும் அப்பாடா என  வேக வேகமாக கேண்டினை நோக்கி சென்றாள் ..  கேண்டீன் எனக் கூறிவிட்டான். ஆனால் அந்த பல்கலைக்கழகத்தில் தான் மூலைக்கு கேண்டின் இருக்கிறது..  அதனால்  வழக்கமாய் செல்லும் கேண்டீன் பக்கம்  சென்று பார்த்திட அங்கு அவன் இல்லை..  

கடவுளே என எண்ணியவாறு அருகே இருக்கும் மற்ற கேண்டினுக்கு சென்றிட அங்கு தன் சகாக்களுடன் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தான் விக்ரம்..  

 

அவனைப் பார்த்ததும் கைகளை பிசைந்தபடி நின்று விட்டாள்  நறுமுகை..  செல்லலாமா வேண்டாமா என்கிற தயக்கதுடன்  அவள் விக்ரமையே  பார்த்தவாறு இருப்பதை  கண்ட அவனது நண்பர்கள்,

 

“ என்ன வேணும்?”  என நறுமுகையை பார்த்து கேட்டதும் பக் என்று ஆனவள் ,இல்லை என தலையசைத்து விட்டு விக்ரமை பார்க்க, அவனும் தலை திருப்பி பார்த்தவன் நறுமுகையே அங்கே எதிர்பார்க்கவே இல்லை..  

 

அங்கேயே நின்று இருந்தவாறு  என்ன என கேட்டதும் நறுமுகை மற்றவர்களை பார்த்தவள்  விக்ரமை பார்த்து,

“ அது.. சார்.. “  என்றதும் சற்று அவளை  நெருங்கி வந்த விக்ரம்,

“ எதுக்கு இவ்வளவு தூரம் வந்திருக்க வெட்டியா தான் இருக்கியா என்ன?”  என அதற்கும் அவளை கொட்டு வைத்திட,

“ இல்ல சார்..  நீங்க எழுதி தந்த பேப்பரை மிஸ் பண்ணிட்டேன்..” என அப்பாவியாய் கூறியவளை கண்டு பல்லை  கடித்தவன் கண்களை மூடி தன் நெற்றியை அழுத்த தேய்த்துக்கொண்டு ,

“அது எப்படி ஒருவேளையும்  உன்னால உருப்படியா செய்யவே முடியாதுனு நிமிஷத்துக்கு நிமிஷம் நிரூபிச்சுக்கிட்டே இருக்க?”  என நறுக்கென்று கேட்டதும் நறுமுகைக்கு அழுகையே வந்து விடும் போலானது..  விக்ரமின் நண்பர்கள் வேறு அவர்கள் இருவரை தான் பார்த்தவாறு இருந்தனர்..  

 

“இல்ல சார் நான் லைப்ரரில எடுத்துட்டு போய் எழுதலாம்னு தான் போன சாமுவேல் தான்..”  என அவள் மேற்கொண்டு என்ன பேச வருகிறாள் என்பதை கூட கேட்டுடாது ,

 

“என்ன சாமுவேல் ?.. ஏன் உனக்கு எதையும் சர்ச் பண்ணி எழுத கூடவா தெரியாது? அதுக்கும் ஒரு ஆள் வேணுமா உனக்கு?” என கேட்டதும் நறுமுகையின்  மொத்த தெம்பும் உறிஞ்சி விட்டது போல் உணர்ந்தவள் தலை தொங்க நின்று விட்டாள்..  இதற்கு மேல் அவளிடம் விளக்கம் கொடுத்து போராட மனதிலும் சரி உடம்பிலும் சரி தெம்பே இல்லை …

 

ஒரு கரத்தை பேண்டில் நுழைத்திருந்தவன் மற்றொரு கரத்தை அவள் முன்பு விரல் நீட்டி எச்சரித்து,

“ லுக் நறுமுகை.. உங்களுக்கு இங்க ப்ராஜெக்ட் பண்ண இஷ்டம் இல்லனா தாராளமா நீங்க போய்க்கிட்டே இருக்கலாம்..  ஸ்ட்ரைட்டா நாகராஜன் சார் கிட்ட போய் சொல்லிடுங்க..  நான் இங்க ஆட்டம் போட மட்டும் தான் வந்து இருக்கேன்..  எனக்கு ப்ராஜெக்ட் பண்ண இஷ்டம் இல்ல அப்படின்னு..  பணம் ஏதாவது கொடுத்துக் கூட பாஸ் பண்ணிக்கோங்க..  என் தாலியை  வந்த அறுக்காதீங்க..!” என வார்த்தைகளை கடித்து துப்பவியன்,

 

“ போய் வீட்டுக்கு கிளம்பி போங்க”  என்று விட்டு சென்று விட்டான்..  

செல்பவனது முதுகை கூட நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாதவளாய் தடுமாறி நடந்து சென்றாள் நறுமுகை..  

அவன் நண்பர்களும்,

“ என்னடா அந்த பொண்ணை  புடிச்சு திட்டிக்கொண்டு இருக்க?” என கேட்டதும் கடுப்பாய் நண்பன் கையில் இருந்த டீயை வாங்கி குடித்தவன் ,

 

“எரிச்சல் ம** இருக்குடா..  ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது அந்த பொண்ணுக்கு..  எம்எஸ்சி  பைனல் ப்ராஜெக்ட் ஒழுங்கா பண்ணனும்ங்குற எண்ணமே கிடையாது..  வெட்டியா நல்லா அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்குது..  அந்த பொண்ணுலாம் எதுக்கு தான் காலேஜ் வருதுனே தெரியலமா..  பெத்ததுங்க ஒழுங்கா வளர்க்கணும் அவங்க ஒழுங்கா வளக்காம விட்டுட்டு இப்படி அனுப்பி விட்டுட்டு நம்ம உயிரை தான் வாங்குதுங்க..’ 

என நண்பனது கோப முகத்தை கண்டவர்கள்,

“ டேய் விடுடா .. அந்த பொண்ண பார்த்தாலே பாவமா இருக்கு அதை போய் புடிச்சுட்டு திட்டிட்டே   இருக்க? எல்லாரும் இன்டலிஜெண்ட்டாவே இருப்பாங்களா என்ன..  ?” என்றதும் சலிப்பாக தலையாட்டியவன் ,

“ எண்ணமோ சரியான கழுத்தறுக்கிற கேசா இருக்குது..  தீசஸ் முடிச்சோமா போனமானு இருக்கலாம் பார்த்தா..  எல்லாம் இந்த நாகராஜன் சார் சொல்லணும்..  அவருக்காக தான் எதுவும் பண்ண முடியாம இருக்கேன் ..”என்றவனை நண்பர்கள் தான் திசை திருப்பி இருந்தனர்.. 

 

படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் .. நன்றி !

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top