“உயிர் உனக்கு அவ்வளவு ஈஸியா போயிடுச்சா …???? சொல்லுடி ….நீ முட்டாள்னு திரும்பத் திரும்ப நிரூபிச்சுகிட்டே இருக்க…முட்டாள் முட்டாள்….முட்டாள்….” என கத்தினான் அவளிடம்…
அவளோ அழுகையுடன் அவனைப் பார்த்து,
” நான் தெரியா…ம தான் விழுந்தேன்…. ” என கூறியதும் தான் தாமதம்,
” செருப்பால அடிப்பேன்… பொய் சொல்ற நீ..??? உன் மூஞ்சை பார்த்தாலே தெரியுதுடி… பச்சையா பொய் சொல்றனு…” என்றவன் இடுப்பில் கரங்கள் ஊன்றி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவனுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை…
தலையை அழுந்த கோதிக் கொண்டு அவளைப் பார்த்து,
” அப்படி என்னடி உனக்கு …. நான் திட்டினேனா உடனே போய் குதிச்சிடனுமா..??? உன்னை என்னவோ நினைச்சேன்.. ஆனா இப்படி ஒரு கோழையா இருப்பேன்னு நான் நினைக்கலை… ” என பேசும் போதே கண்கள் கலங்கிவிட்டது அவனுக்கு…
முகம் சிவந்து மூச்சு வாங்க நின்றவனுக்கு அதற்கு மேல் முடியவில்லை ..
அவள் அருகில் அமர்ந்து அவளது பின்னத்தலை பற்றி இழுத்து கழுத்து வளைவில் முகம் புதைத்து கொண்டான்… சிறிது நேரத்தில் அவன் விழிகளில் இருந்த கண்ணீர் பெண்ணவளது முதுகில் இறங்கிட ..நறுமுகைக்கு இன்னுமே அழுகை அதிகமானது…
அவனது தோளை பற்றி கொண்டவள்,
” அழாதீங்க ..விக்ரம்.. எனக்கு எதுவும் ஆகல …” என தேம்பியவாறு கூறியவளது கன்னத்தை பிடித்து தன் முகத்துக்கு நேரே வைத்தவன்,
” எப்படி உன்னால இப்படி பண்ண துணிஞ்சுது..??? என்னை பத்தி யோசிக்கவே இல்லல….??? ஜான் சொல்லும்போது எனக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சுனடீ… என் மேல உனக்கு ஏதாவது கோவம்னா அப்பவே என்னை அடிச்சிருக்க வேண்டியது தானடி… எதுக்குடி இப்படி ஒரு முடிவு எடுத்த..??” என அழுதவனை கண்ணீருடன் பார்த்த நறுமுகை,
“இப்ப கூட நீங்க என்னை புரிஞ்சிக்கவே இல்ல விக்ரம்..” என குறைபட்டுக் கொண்டவளை விழிகள் உயர்த்தி பார்த்தவன் ,
“ஆமாண்டி நான் உன்னை புரிஞ்சுக்கவே இல்ல தான்.. நீ ஒரு முட்டாள்.. உன்னை புத்திசாலின்னு கொஞ்சமா நினைச்சேன்.. ஆனா அது தப்புன்னு திரும்பத் திரும்ப புரிய வச்சுட்டு இருக்கேன் ..” என்றவனது மார்பிலேயே அடித்தவள் ,
“நான் நீங்க திட்டுனதால கீழ குதிக்கல விக்ரம்…” என்றதும் இப்போது விக்ரமின் முகமும் மாறியது …அவளையே திகைப்புடன் பார்த்தவன் அவளது விழிகளை மாறி மாறி பார்த்ததும் பின் உதிர்த்தாள் அவ்வார்த்தையை,
” சாமுவேல்…” என்று விட்டு கண்ணீருடன் அவன் மார்பிலேயே தஞ்சம் அடைந்து விட்டிருந்தாள் நறுமுகை…பெண்ணவளை தன் இரும்புக்கரம் கொண்டு வளைத்து பிடித்து இருந்தான்..
அன்று விக்ரமிடம் திட்டு வாங்கிய பின்னர் அவன் சென்றிடவும் நறுமுகை அங்கேயே சிறிது நேரம் அழுதவள் பின் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு தளர்ந்து போய் படி இறங்கி கீழே வந்தாள்…
அச்சமயம் அங்கு படி ஏறி வந்தான் சாமுவேல்… கீழிருந்து வரும்போதே சற்று கோபமான முகத்துடன் சென்ற விக்ரமை விழிகள் சுருக்கி பார்த்தவன் பின் படிகளை ஏறிட.. அப்போது தான் நறுமுகை பார்த்தான்..
மஞ்சள் வண்ண சுடிதாரில் அத்தனை அம்சமாக இருந்தாள்… பார்க்க பார்க்க அவனுக்கு என்னென்னவோ செய்தது …
அவனும் அவளை நல்விதமாகத் தான் பார்த்திருந்தான்… அனைத்தும் மாறி இருந்தது அது ஒரு நாளில் …
விக்ரமும் நறுமுகையும் பிஹெச் பார்க்கும் அறையில் முத்தமிட போன சமயம் சாமுவேல் கதவை திறந்து இருந்தான் அல்லவா .!
அப்போது இருவரையும் அத்தனை நெருக்கமாக அவன் எதிர்பார்க்கவே இல்லை.. இப்போது தான் அதிர்ச்சி பட்டால் விக்ரம் இதற்கு ஏதேனும் விளக்கம் அளிப்பான் என்பதால் தான் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது தான் எதையும் பார்க்காதது போல விக்ரமிடம் இயல்பாக பேசி இருந்தான் சாமுவேல்…
கிறிஸ்டோபர் நறுமுகையும் குமாரும் விரும்புவதாக கூறிய போது அதை நம்பி இருந்தான்.. ஆனால் ஜானும் குமாரும் நேரே வந்து அதை இல்லை என நிரூபித்திடவும் தான் அவளை தவறாக நினைத்து விட்டோம் என எண்ணி கொண்டான்..
இப்போது விக்ரமுடன் வேறு நெருக்கமாக இருந்திடவும் அவனது பார்வையில் நறுமுகை கீழாகப்பட்டாள்…
அவனுக்குத் தெரியும் விக்ரம் எப்படிப்பட்டவன் என்று.. அத்தனை கண்ணியமான ஆண்மகனையே இப்படி மயக்கி இருக்கிறாளே..! சரியான தில்லாலங்கடியாக இருப்பாள் என கணித்திருந்தான் சாமுவேல்…
அவனது எண்ணத்திற்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாய் அமைந்தது இன்னொரு நிகழ்வு…
அன்று மொட்டை மாடியில் விக்ரமும் நறுமுகையும் இதழ் முத்தத்தை பரிமாறிக் கொண்டார்களே.. அன்று சாமுவேலும் ,
“அதான் யாருமே இல்லையே பேசாம மாடிக்கு போய் ஒரு தம்மை போட்டுட்டு வரலாம்..” என எண்ணி படியேறி வந்தவன் கண்டது நறுமுகையின் கழுத்தை வளைத்து இதழோடு இதழ் பொருத்தி முத்தம் தந்து கொண்டிருந்த விக்ரம் தான்…
அவனது கரங்களும் பெண்ணவளின் மேனியில் தடையின்றி உலா வந்திட.. அதை கண்ட சாமுவேல் உச்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளானான் எனலாம் …
விக்ரம் எத்தனை கண்ணியமானவன்.. கட்டுப்பாடு உடையவன்.. ஏதேனும் ஒரு பெண்ணுடன் சேர்த்து ஒரு முறை கூட தவறாக ஒந்த வதந்தியும் பரவியதில்லை …அப்படிப்பட்ட ஒழுக்க சீலன் அவன் ..
அவனே நறுமுகையிடம் இப்படி விழுந்து கிடக்கிறானே..! அப்படி என்றால் நறுமுகை கை தேர்ந்தவள்.. மற்றவர்கள் முன் பவ்யமாக இருப்பது போல் நடித்து ..யாருமில்லாத நேரத்தில் பெரிய ஆளாய் பார்த்து வளைத்து போடுகிறாள் என இன்னும் அவளை மட்டமாக எண்ணினான் ..
அப்போதே அவனுக்கும் ஒரு எண்ணம் உதித்தது… ஆளாளுக்கு அவளை வளைக்கிறார்கள்.. தானும் ஏன் அவளை தன் பக்கம் வளைக்கக்கூடாது.. அவளிடம் எல்லை மீறக் கூடாது என எண்ணியவன் அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்…
அப்படித்தான் அன்று அவளை கண்டது… அதற்கு முந்திய நாள் இரவு தான் நண்பனுடைய பிறந்தநாள் என்று சற்று மதுவை ஏற்றி இருந்தான்…
காலையில் கூட அவனுக்கு போதை தெரியவில்லை.. அதனாலேயே கவிதாவிடம் கூட அன்று அவ்வளவாய் வேலையை கூட சொல்லாது அங்கும் இங்கும் சும்மாவே சுற்றிக்கொண்டு திரிந்தான் ..
இப்போது நறுமுகை தனியாக அதுவும் அம்சமாக வேறு இருக்கவும் அவனால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை. …மெல்ல அவளை நெருங்கி ,
“என்னாச்சு நறுமுகை…. முகம் ஒரு மாதிரியா இருக்கு ..?” என இயல்பாகவே கேட்டான்…
நறுமுகைக்கு சாமுவேலின் குரலில் அதிர்ந்து போனவள் அவனது முகத்தை நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்து விட்டு தலையை தாழ்த்திக் கொண்டவள்,
“அ..அது.. ஒன்னும்.. இல்லைண்ணா… சும்மாதான்..” என்று விட்டு நகர போனவளிடம்,
“ விக்ரம் ரொம்ப கோவமா போனான்…என்னன்னு தெரியல..”
அதிர்ந்து போனவள் சாமுவேல் தங்களை கவனித்து விட்டாரோ என நடுங்கியவளாய் தனது பதற்றத்தை மறைத்துக் கொண்டு ,
“அது.. அவர் சொன்ன வேலையை ..நான் தப்பா பண்ணிட்டேன்ண்ணா… அதான்..” என மழுப்பியவளை கீழ் உதட்டை கடித்து கொண்டு மார்க்கமாக பார்த்தவாறு சற்று நெருங்கி வந்தவன்,
” நான் வேணா அவன் பண்ண சொன்ன வேலையா சரியா பண்ண சொல்லி கத்து தரட்டுமா..?” என கிறக்கமான குரலில் கூறியதும் அதில் தெரிந்த வித்தியாசத்தில் விலேக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் ஏதோ சரியில்லை என்று அவனை விட்டு நகரும் நேரம் அவளது கரங்களைப் பிடித்து இழுத்து அருகே பழைய நாற்காலிகள் மேசைகள் போட்டு வைக்கும் அறைக்கு இழுத்துச் சென்றவன் அவளை அணைக்க முயன்றான்…
நறுமுகைக்கு உடல் எங்கும் வெடவெடத்து போனது..
” வேண்டாம்… ப்ளீஸ்.. நான்.. என்னை விட்ருங்கண்ணா….” என கதறியவளை பல்லை கடித்துப் பார்த்தவன்,
” அண்ணாவா….???? அவனை சார் சார்னு சொல்லிட்டு.. நல்லா முத்தம் கொடுத்து கட்டிப்பிடிச்சுக்கிட்டு.. விட்டா கிளாஸ் ரூம்லேயே குடும்பம் நடத்துவீங்க போலயே …உன்னை என்னவோ நினைச்சேன்டீ… ஆனா சரியானவ தான் நீ… அவனுக்கு வளைஞ்சு கொடுக்கிறல எனக்கும் ஒரு பத்து நிமிஷம் வளைஞ்சு கொடு… உன்னை பார்த்தாலே மூடு ஏறுது..” என்றவன் பேச்சில் அதிர்ந்து போன நறுமுகை,
” தேவையில்லாம பேசாதீங்க…. நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க.. என்னை விடுங்க.. விடுங்க..” என்றவளது கரங்களைப் பிடித்து தன் கரங்களுக்குள் அடக்கியவன் சற்றும் தாமதிக்காது அவளை சுவற்றில் சாய்த்து இதழோடு இதழ் பொருத்திக் கொண்டான்..
அவ்வளவு தான் தனது ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவனை தள்ளி விட்டவள் அவன் ச சுதாகரிப்பதற்குள் அறையில் இருந்து வெளியேறி குடுகுடுவென படி ஏறி கீழே இறங்கி வந்தவளுக்கு உடல் எல்லாம் திபு திபுவென கொழுந்து விட்டு எரிந்தது…
தன்னவன் மட்டுமே தொட்டு இருந்த மேனியை.. அவன் இதழ்கள் பதித்த தன் இதழில் இன்னொரு ஆடவனின் ஸ்பரிசத்தை அவளால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
தான் ஏதோ களங்கப்பட்டு விட்டது போல எண்ணியவள் இனி தான் எவ்வாறு விக்ரமின் முகத்தில் முழிப்பது என நொடியில் என்னென்னவோ எண்ணங்கள் அவளது ஒட்டுமொத்த தைரியத்தையும் சிதைக்க வைத்தது ..
விளைவு நொடி கூட யோசிக்காது நான்காம் தளத்திலிருந்து கீழ இறங்கி வந்த நறுமுகையின் கண்ணில் பட்டது காலியாக திறந்திருந்த ஒரு பெரிய வகுப்பறை தான்..
வேகமாக ஓடியவள் அங்கு இருந்த பெரிய ஜன்னலில் இருந்து கீழே குதித்து விட்டிருந்தாள்..
நல்ல வேலை அங்கு ஏகப்பட்ட மரங்கள் இருக்கும் அதில் தட்டு தடுமாறி கீழே விழுந்தவளுக்கு கால் முறிவு மட்டும் தான் ஏற்பட்டது …
முகத்திலும் கை காலிலும் ஆங்காங்கே சிராய்ப்புகள்.. மற்றபடி பெரிதாய் வேறு எந்த அடியும் இல்லை …
குதித்த பின்னர் கூட அவளது மனம் ஆறவில்லை.. இறந்துவிட்டால் தேவலாம் என்று தான் தோன்றியது அவளுக்கு…
ஆனால் அதற்குள் ஆட்கள் சேர்ந்திட அவளை அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர்…
அனைத்தையும் ஒன்று விடாது கூறி கதறி இருந்த நறுமுகையின் கண்ணீர் ஆணவனின் மார்புச் சட்டையை நனைத்து இருந்தது…அவனது முகமோ நன்றாக சிவந்து போயிருந்தது….விழிகளோ கோபத்தை அப்பட்டமாய் கொப்பளித்தது…