அத்தியாயம் 20

மறுநாள் பத்து மணி போல விக்ரம் நறுமுகையை காண வந்திருந்தான்.. வளவன் அலுவலகத்தில் முக்கியமான வேலை இருப்பதனால் அவரால் தவிர்க்க முடியவில்லை… மாலை சீக்கிரம் வருவதாக மகளிடம் கூறிச் சென்று விட்டிருந்தார்…

 

சுரைதை தான் வீட்டில் இருந்தார் ..ராகினி ரோகிணிக்கு கூட பரீட்சை நடந்து கொண்டிருந்தது.. அதனால் அவர்களாலும் நறுமுகையுடன் இருக்க முடியவில்லை..

நறுமுகை சற்று சோர்வாக மெத்தையில் படுத்து இருந்தாள்…இப்போது கூட குதித்ததை நினைத்து பார்த்தால் ஒருவித பயத்தை தான் தந்தது அவளுக்கு…

அந்நேரத்தில் ஏதோ ஒரு வேகத்தில் எதை பற்றியும் யோசிக்காது குதித்து விட்டிருந்தாள்… ஆனால் இப்போது நடந்ததை நினைத்து பார்த்தால் உடலெல்லாம் பயத்தில் நடுங்கி போனது…

கோவிலில் இருக்கும் மரத்தில் மஞ்சள் கயிற்றை கட்டி வைப்பதே போல அவளது இரு கரங்களிலும் ஏகப்பட்ட கயிறுகளை கட்டி வைத்திருந்தார்  சுரதை…

 

மகளிடம் வந்தவர்,

 

“ ஏதாவது வேணுமா முகை..?”

 

“ இல்லமா ஏதும் வேண்டாம் ..”

 

“சரி.. நான் இங்க பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போயிட்டு விளக்கேத்திட்டு வந்துடுறேன்.. பத்திரமா இரு…பாத்ரூம் ஏதாவது போனுமா..”

 

“இல்லம்மா..வரலை…”. 

 

“ம்ம்ம்…சரி கதவு அம்மா சும்மாவே சாத்திட்டு போறேன்…ஃபோனை பக்கத்துல வைச்சிக்கோ…ஏதாவதுனா கால் பண்ணு…” என்றதும் சரி என்று விட்டாள்…

சுரதை வெளியேறிய ஐந்து நிமிடத்தில் விக்ரம் வந்திருந்தான்..

 

சின்னதாய் திறந்திருந்த கதவை   தள்ளிக்கொண்டு உள்ளே சென்றிட சுற்றும் முற்றும் பார்த்தான்…

‘ம்ம்ம்…யாரும் இல்லை போல…’ என சுற்றிலும் பார்த்தவாறு இருந்தவனுக்கு ஃபேன் ஓடும் சத்தத்தில் அங்கிருந்த அறையை எட்டி பார்த்தான்…

அங்கு தொடை வர இருக்கும் குட்டி பாவாடையை போட்டவாறு மேலே டி-ஷர்ட் ஒன்றை அணிந்து கண்கள் மூடி சாய்ந்து இருந்தாள் நறுமுகை….வீட்டில் தான் இருக்கிறோம் என மெல்லிய டீஷர்ட்டை அணிந்து இருந்தாள்…

 

யாரோ வரும் ஓசையில் அன்னை தான் வந்திருக்கிறார் என அசட்டையாக கண்களைத் திறந்தவள் அங்கு விக்ரமை கண்டதும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் ,

 

“நீங்களா…?????…வா….‌ வாங்க… அது.. அம்மா ..அம்மா கோயிலுக்கு ..போயிருக்காங்க” என அவள் பாட்டிற்கு உளறிட..

விக்ரமோ அவளை மேலும் கீழும் பார்த்தவாறு, 

 

“பரவால்ல எனக்கு ஓகே தான்..”  என்றதும் அவனை ஆவென்று பார்த்த நறுமுகையை அழுத்தமாய் பார்த்தவாறு  மெத்தையை சுற்றி வந்து அவளுக்கு அருகே நெருங்கி அமர்ந்தான்..

 

காலில் போட்டிருந்த கட்டினை தொட்டுப் பார்த்த விக்ரம்,

 

” இதெல்லாம் தேவையா..?”  என கேட்டதும் சட்டென தலையை குனிந்து கொண்டாள் நறுமுகை… 

 

“அந்த பொறுக்கி அப்படி பண்ணி இருந்தானா அந்த நேரமே நீ செருப்பை கழட்டி அடிச்சிருக்கணும் ..அதை விட்டுட்டு மாடியில் இருந்து குதிச்சா சரியாயிடுமா..??”

என எடுத்ததும் அவன் எகிறிவிடவும் தலை கவிழ்ந்து இருந்தவளுக்கு அழுகையாக வந்தது …

அவனிடம் ஆறுதலான சில வார்த்தைகளை எதிர்பார்த்திருந்தாள்… ஆனால் அவனோ நேற்றிலிருந்து திட்டிக் கொண்டே இருக்கவும் ஒருவித வெறுமையாக உணர்ந்தாள் நறுமுகை …

 

அவள் அமைதியாக இருப்பதைக் கண்டு இன்னும் கடுப்பான விக்ரம் அவளது தாடையை பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்து ,

 

“உன் கிட்ட தான் பேசுறேன்  நறுமுகை… காதுல விழுதா இல்லையா..??? பொண்ணுங்கன்னா எப்பவும் தைரியமா இருக்கணும்.. நீ அவனை அடிச்சுட்டு வந்து இருந்தேனா உண்மையிலேயே சந்தோஷப்பட்டு இருப்பேன் ..

நீ எடுத்த முடிவு ரொம்ப ரொம்ப தப்பும் நறு…” என கோபமாய் ஆரம்பித்து கனிவாய் கூறிடவும் தன்னை பிடித்திருந்த அவனது கரத்தை தட்டிவிட்டவள்,

 

” சும்மா அதையே சொல்லாதீங்க விக்ரம் ..அந்த நேரத்துல நான் எப்படி பீல் பண்ணேனு எனக்கு தான் தெரியும் …உங்களுக்கு என்ன வந்தது..?”  என முகத்தை திருப்பிக் கொண்டுவிட..அவளது செயலில் விக்ரமுக்கு சுர் என்று கோபம் ஏறியது… 

 

“ஏண்டி அதுக்காக இப்படி தான் பண்ணுவாங்களா ..??? பைத்தியம் மாதிரி பண்ணிட்டு இருக்க… முட்டாள் …” என பல்லை கடித்து கொண்டா கத்தவும் நறுமுகையோ அவனை கோபமாக பார்த்து,

 

“ஆமா… முட்டாள் தான்… அதனால தானே என்னை அடிக்கிறீங்க.. திட்றீங்க.. ஒரே ஒரு வார்த்தை ஆறுதலா ஏதாவது பேசுறீங்களா..??? என்னை திட்டம் மட்டும் தான் உங்களுக்கு தெரியும்..”  என பேசும் போதே அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து விட்டது …

அதை கண்டதும் அவனது கோபம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியாது ..!

 

இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து அவளது கண்ணீரை துடைத்தவன் ,

 

“ப்ச்…அழாதடி …”

 

“போங்க உங்களுக்கு என் மேல அக்கறையே இல்ல.. நேத்து  என்னை அப்படி அடிச்சீங்க..??? எங்க அப்பா கூட என்னை அடிச்சதில்லை ..” என தேம்பியவாறு பேசினாள்…

 

” ஆமா இப்ப வக்கனையா பேசு… உண்மை மட்டும் உங்க அப்பாக்கு தெரியட்டும்.. உன்னை நல்லா பெல்ட்லேயே அடிப்பா…”  என்றதும் அவனை ஏகத்துக்கும் முறைத்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

 

அதை கண்டு மென்மையாய் சிரித்து  அவளது தோளில் முகம் புதைத்து கொண்டவன்,

 

“கொள்ளாத நறு… உன் நிலைமையை நான் புரிஞ்சுக்கலைன்னு நீ பேசுற.. ஆனா என் நிலைமையை யார் கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியலடி..

இப்ப வரைக்கும் என்னால் நிம்மதியா இருக்க முடியல.. ஹாஸ்பிடல் வந்த போது நீ அடிப்பட்டு கிடந்தது மட்டும் தான் கண்ணு முன்னாடி வந்து வந்து போகுது… நைட்டு எல்லாம் தூக்கமும் கிடையாது… என்னை என்னடி பண்ண சொல்ற..??”  என கரகரத்த குரலில் கூறியதும் நறுமுகைக்கு உள்ளுக்குள் குளிர்ச்சியானது …

 

அவன் தன்னை எண்ணி வருத்தப்பட்டு உள்ளான்… தனக்காக வேதனை பட்டுள்ளான் ..என்று தெரிந்ததும் அவளுக்கு உண்மையில் மகிழ்ச்சியாக விட்டது …

 

“சாரி விக்ரம் …எனக்கு அந்த நேரத்துல என்ன பண்றதுன்னு தெரியல ..அதான் அப்படி  பண்ணிட்டேன் ..இனி இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டேன்.. இன்னொரு முறை அந்த சாமுவேல் என்கிட்ட வால் ஆட்டட்டும் அப்படியே ஓங்கி மிதிக்கிறேனா இல்லையானு மட்டும் பாருங்க..”  என்றதும் அவளது தோளில் கை போட்டு தன்னோடு நெருக்கிக் கொண்டவன் ,

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நீ இனி உன் மனசுல இருந்து நடந்த எல்லாத்தையும் மொத்தமா அழிச்சு தூக்கி போட்டுடு..

உன் கான்சன்ட்ரேஷன் முழுக்க நம்ம பண்ண போற ப்ராஜக்ட்ல மட்டும் தான் இருக்கணும்.. புரிஞ்சுதா..?”

 

சரியென தலை அசைத்தவளது கன்னத்தைப் பிடித்து இழுத்தவன் அவளது பஞ்சு போன்ற கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து விலகி அவளை ஆழ்ந்து பார்த்தான்..

 

நறுமுகையும் இதழ் விரிய புன்னகையுடன் அவனை பார்த்து விட ..அவ்வளவுதான் அவளது பார்வைக்காகவே காத்திருந்தது போல இதழோடு இதழ் சேர்த்துக் கொண்டான் சற்று வன்மையாக …

 

மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் மாறி மாறி கடித்து இழுத்து அவளது நெற்றியோடு நெற்றி முட்டியவன் பின் அழுத்தமாய் அவளது இதழ்களுக்குள் மூழ்கத் துவங்கினான் விக்ரம்..

தன் கரத்தால் அவனது பின்னந்தலையை தாங்கி பதில் முத்தம் தந்து கொண்டு இருந்தாள் நறுமுகை..

 

இருவரும் தங்களை மறந்து முத்தமிட்டு கொண்டிருந்தனர்…

மூச்சு வாங்க அவளிடம் இருந்து விலகியவன்,

 

” நான் கொடுக்கிற முத்தம் மட்டும் தாண்டி உன் நெஞ்சில் எப்போவும் இருக்கணும் ..கண்ட குப்பை எல்லாம் எப்போவும் ஞாபகத்துக்கு வரக்கூடாது..”  என அழுத்தம் திருத்தமாய் கூறியதும் விழி மூடி கிடந்த நறுமுகையின் விழிகளில் இருந்து மீண்டும் கண்ணீர் அரும்பியது…

 

” அருவருப்பா இருந்துச்சு விக்ரம்… அந்த நொடியை நினச்சா இப்ப கூட உடம்பெல்லாம் புழு ஊறுர  மாதிரி இருக்கு…”  என தவிப்புடன் பேசியவளது கன்னங்களையும் தாங்கிப் பிடித்துக் கொண்டவன் ,

 

“உனக்கு இனி அந்த நினைப்பு வரவே கூடாது ….அதை பத்தி பேசாத …நான் தரப்போற முத்தம் மட்டும் தான் உனக்கு எப்போதுப் ஞாபகத்துல இருக்கணும்.. நினைப்புல வச்சுக்கோ ..” என்றவன் இம்முறை அவளை சற்று வன்மையாகவே முத்தமிடலானான்…

 

அவனது வன்மையில் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னிலை மறந்தவள் முற்றிலும் துவண்டு போய் விட்டிருந்தாள்…

அச்சமயம் முகை என்கிற அழைப்புவுடன் கதவை திறந்து உள்ளே வந்தார் சுரதை.. அச்சத்தத்தில் சட்டென இருவரும் விலகி அமர்ந்திட.. வேகமாக எழந்தவன் இயல்பாக செல்வதே போல அறைகதவைத் தாண்டி ஹாலிற்குள் சென்று,

 

” வாங்க அத்தை..”  என்றதும் அந்த நேரத்தில் விக்ரமை எதிர்பாராத சுரதை,

 

“வாங்க…வாங்க… எப்ப வந்தீங்க..?” 

 

“இப்பதான் வந்தேன்.. நீங்களும் வந்துட்டீங்க ‌.” என அவருக்கு  தேவையில்லாத சங்கடம் தர அவன் விரும்பவில்லை …

 

அவன் கூறிய கூற்றில் சுரதைக்கு நிம்மதியானது…

 

“ வரன்னு சொல்லி இருந்தா நான் இருந்திருப்பேனே.. கோயிலுக்கு இப்ப தான்பா போயிட்டு வந்தேன் ..”

 

“ஓஓ… நறுமுகையை பாக்கலாம்னு வந்தேன்.. நீங்க கோயிலுக்கு போய் இருக்கிறதா சொல்லிட்டு இருந்தா அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க..”  என்றதும் அவசரமாய் தனது மருமகனுக்கு கோவில் பிரசாதத்தை தந்தவர் பின் மகளுக்கும் நொற்றியில் வைத்து விட்டார்…

 

பிறகு காபியினை போட்டு கொண்டு வந்து கையில் கொடுத்தார் விக்ரமிடம்…அதை வாங்கி குடித்தவன் பின் பொதுப்படையாக அவரிடம் பேசிவிட்டு நறுமுகையிடம் சிறு தலையசைப்புடன் வீட்டிலிருந்து வெளியேறியவனின் கால்கள் அடுத்த அடியை எடுத்து வைக்காது அப்படியே நின்று விட்டது…

 

வாசல் வரை தன் வருங்கால  மருமகனை வழி அனுப்ப வந்த சுரதை அங்கு கேட்டினை திறந்து கொண்டு உள்ளே வந்த கவிதாவையும் அவளது அன்னையையும் கண்டு விழி விரிய நின்று விட்டார் …

கவிதாவும் அங்கு நின்றிருந்த விக்ரமை கண்டதும் பேய் அறைந்தது போல உறைந்து போய் நின்று விட்டாள்…

 

சுரைதை தான்,

 

” வாங்க கவிதா.. வாங்கம்மா…”  என படி இறங்கி அவர்களை சென்று வரவேற்றிட.. கவிதாவின் அம்மா வேம்பு தான்,

 

” நறுமுகைக்கு எப்படி இருக்கு..?? கீழே விழுந்துட்டான்னு கவிதா சொன்னா..”  என கேட்டவாறு வந்திட ..

 

“இப்ப பரவாயில்ல.. உள்ள வாங்க நீங்க..”  என உள்ளே அழைத்துச் சென்று விட்டார்….கவிதாவையும் அழைத்திட தவறவில்லை…

கவிதா தான் அங்கு நின்றிருந்த விக்ரமை கண்டு அதிர்ச்சியில் நின்றவள் பின் தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை நோக்கி சென்றிட… அச்சமயம் சுரதையும் கவிதாவின் அன்னையிடமும் விக்ரமை காட்டி ,

 

“நறுமுகையை கல்யாணம் பண்ணிக்க போறாங்க.. இப்பதான் வந்தாங்க.. ”  என்றதும் வேம்பவும் விக்ரமைப்பார்த்து மென்மையாய் சிரித்து வைத்தார் ..

பதிலுக்காக சிறு தலைசைப்பை தந்தவன் கவிதாவை பார்த்தவாறு இறங்ங.. அதற்குள் பெரியவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர் …

 

கவிதா சுரதை கூறிய விஷயத்தில் உச்சபட்ச அதிர்ச்சியுடன் விக்ரமையே வாயை பிளந்தபடி பார்த்தவாறு இருந்தாள்…

 

விக்ரம் அலட்டிக்கொள்ளவில்லை.. தனது அழுத்தமான காலடி சத்தத்துடன் அவளை நோக்கி சென்றவன் வீட்டினுள் ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு கவிதாவிடம் ,

 

“இந்த விஷயம் உன்னை தாண்டி வேற யாருக்கும் தெரிய கூடாது …புரிஞ்சுதா ..?” என்றதும் கவிதாவின் தலை நாளா புறமும் ஆடியது…

 

பெருமூச்சு விட்ட விக்ரம்,

 

” போய் பாரு.”  என்று விட்டு வெளியேறி விட்டான் ..

சுரதையும் வேம்பவும் நறுமுகையின் அறையில் தான் இருந்தனர்… கவிதாவிற்கும் உள்ளம் கொதித்தது …ஒருவித ஏமாற்றத்தின் வலி அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது …

 

ஒரு வார்த்தை …ஒரே ஒரு வார்த்தை கூட தன்னிடம் அவள் இதைப் பற்றி பேசிடவில்லையே என எண்ணியவாறு அறைக்குள் நுழைந்திட… கவிதாவின் அன்னையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த நறுமுகையின் புன்னகை அவளையே அழுத்தமாறு பார்த்தவாறு உள்ளே வந்த கவிதாவின் முகத்தை கண்டதும் துணி கொண்டு துடைத்தது போல ஆகிவிட்டது…

கவிதாவை பார்த்ததுமே தெரிந்து விட்டது விக்ரமை பார்த்திருப்பாள் விஷயம் தெரிந்திருக்கும் என்று… போதாத குறைக்கு சுரதை வேறு,

 

” பையன் எப்படி இருக்கான்பா..?”  என வேம்புவிடம் கேட்டிட ..அவரும்,

 

“ ரொம்ப நல்லா இருக்கான்.. என்ன பண்ணிட்டு இருக்கான்..??”

 

” இதோ இவ படிக்கிற காலேஜ்ல தான் படிச்சிட்டு இருக்கான் ..இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் அங்கேயே போஸ்டிங்கும் கிடைச்சிருமாம்… நல்ல வரன் ..வீட்டுக்கு ஒரே பையன் ..அதான்  அவங்க அப்பா பேசி முடிச்சிட்டாங்க..”  என்றதும் அதை கேட்ட கவிதா நறுமுகையை அடிபட்ட பார்வையை பார்த்து வைத்தாள்…

அப்பார்வையில் பாவம் நறுமுகைக்குத்தான் குற்ற உணர்வு ஆகிவிட்டது…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top