அத்தியாயம் 37

தன் மருமகனை இறுகிய முகத்துடன் பார்த்தவாரு அமர்ந்திருந்தார் வளவன்…

 

 அலுவலக கேண்டீனில் தான் அமர்ந்திருந்தனர் இருவரும்… வியர்வையை கைகுட்டையால் துடைத்தபடி அவரை நிமிர்ந்து பார்த்தான் விக்ரம்…

 

 வளவனோ தன் மருமகனை தான் ஆராய்ந்தார்… கண்ணமெல்லாம் ஒட்டி போய் கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்து இருந்தது…

 

 என்னதான் டிப் டாப்பாக ஆடை அணிந்திருந்தாலும் பார்ப்பதற்கு சற்று பரதேசி போலத்தான் காணப்பட்டான் விக்ரம் …

 

அவனை இந்நிலையில் கண்டதும் ஒரே ஒரு நொடி மனம் சற்று இளகச் செய்தது வளவனுக்கு… ஆனால் தங்கள் கண்ணீர் நிறைந்த மகளின் முகம்  நினைவுக்கு வரவும் மீண்டும் இறுகிப்போனவர் மருமகனை வாவென்றும் கூறவில்லை எதற்கு என்னை பார்க்க வந்திருக்கிறாய் என்றும் கேட்கவில்லை… பொம்மை போல அமர்ந்திருந்தார்…

 

விக்ரமோ தயங்கிக் கொண்டு அவரைப் பார்த்தவன்,

 

” மாமா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…!”  என்றதும் விழிகள் சுருக்கி அவரைப் பார்த்த வளவன்,

 

” உங்களுடைய இரண்டாவது கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருக்கீங்களா..?”  என நறுக்கென்று கேட்டதும் விக்ரமின் முகம் செத்துப் போய்விட்டது …

 

இரு கரங்களால் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டு அவரைப் பார்த்தவன்,

 

” இ…ல்ல மாமா… நான் நறுவை பார்க்கணும்… அவ கிட்ட பேசணும் மாமா ..” என்றதும் கொஞ்சமும் மனசாட்சி இன்றி,

 

“அவ இங்க   இல்லை..!”  என திட்டவட்டமாக கூறியதும் அதிர்ந்து போனான் விக்ரம்…

 

” விளையாடாதீங்க மாமா.. நேரா வீட்டுக்கு போகணும்னு தான் நினைச்சேன் ..ஆனா நறு என்னை பார்த்து திரும்பவும் கோபப்பட்டு ஏதாவது பேசினா என்ன பண்றதுன்னு தெரியாததால் தான் நேரடியா உங்க கிட்ட பேச வந்திருக்கேன்.. ப்ளீஸ் மாமா அவளை பார்க்கணும்  பேசனும்… எனக்காக அவ கிட்ட பேசுங்க  மாமா…” என இறைஞ்சின்ன்…

 தன் மாமனார் தன்னிடம் இயல்பாகவே நன்றாக பழகக் கூடியவர் என்பதால் தனக்காக அவரது மகளிடம் பேசுவார் என எதிர்பார்த்து வந்திருந்தான் விக்ரம்…

 

 ஆனால் அவரோ கொஞ்சமும் இரக்கம் காட்டாது ,

 

“என் பொண்ணு இங்க இருந்தா தானே நீங்க பேசுறதுக்கு… அவ இங்க இல்ல.. அவளை அவளோட பாட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டாச்சு ..!”

 

“பாட்டி வீட்டுக்கா..??? சொல்லவே இல்ல..?”  என பதறியவாறு கேட்டதும் வளவன் அசரவில்லை,

 

” உங்ககிட்ட எதுக்கு சொல்லணும்..??  அதான் விவாகரத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கீங்களே இதுக்கப்புறம் அவ  எக்கேடு கெட்டாலும் உங்க கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லையே ..!” என முகத்தில் அடித்தாற் போன்று பேசியதும் தொய்ந்து போன விக்ரம்,

 

“ தயவு செஞ்சு இப்படி பேசாதீங்க மாமா…ஒரே ஒரு முறை அவகிட்ட பேசிக்கிறேன்…”

 ஆனால் வளவன் கொஞ்சமும் தன் பிடியில் இருந்து இறங்காது,

 

” முடியவே முடியாது…”  என்று விட்டார்…

 

 ஏனோ விக்ரமின் மீது அவர் வைத்து இருந்த நம்பிக்கை மொத்தமும் துடைத்து எரியப்பட்டு விட்டது …

அவரை இப்போது தான் உடல்நிலை சற்று சரியாகி உள்ளார்…நன்றாக நடக்க முடியவில்லை என்றாலும் ஸ்டிக்கின் உதவியோடு  அலுவலகத்திற்கு வந்திருந்தார்… 

 

அதில் விக்ரம் வேறு வந்து தொல்லை செய்யவும் கோபம் தான் வந்தது அவருக்கு.. பெற்ற மகளை வேண்டாம் என தூக்கி எறிவார்களாம்..பின் பேச வேண்டும் என வந்து நிற்பார்களாம்.. என்ன மனிதர்களோ என்று தான் அவருக்கு எண்ண தோன்றியது…. 

 

விக்ரம் மிகவும் உடைந்து போய்விட்டான்… தன்னவள் தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டாள் என்பதை அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை…

 அவன் இதழ்களோ கசந்த முறுவலை சிந்தியது.. தன்னையே இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள் என சொன்னவள் தானே அவள்… அப்படிப்பட்டவள் தன்னை விட்டு தூரப் போவது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என எண்ணிக்கொண்டான்… 

 

இருந்தும் ஏதோ ஒரு நம்பிக்கையில் மீண்டும் தன்னவளுக்கு அழைப்பு விடுத்தான்…உபயோகத்தில் இல்லை என்கிற பதிலே வந்தது…

 

கைபேசியை உபயோகப்படுத்த கூடாது என சுரதை கூறிவிட்டதால் அவரே அதை அணைத்து ஓரம் வைத்து விட்டிருந்தார் …

 

 புத்தகங்கள் படித்து மனதை அமைதியாக வைத்துக்கொள் என மகளை அறிவுறுத்திக் கொண்டே இருப்பதால் நறுமுகையும் தாயிடம் கைப்பேசியை கேட்பதில்லை.. இருந்தும் மனம் கேட்காது ஒரு முறை.. ஒரே ஒருமுறை தன்னவனுக்கு அழைத்து விஷயத்தை கூறி விடலாமா என்று கூட நினைப்பாள்…

 

 ஆனால் மூளையோ அவன் உனக்கு செய்வதை மறந்து விட்டாயா என பழையதை நினைவு படுத்தவும் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொள்வாள் …

 

நாட்கள் மாதங்களாகிய தற்போது நறுமுகைக்கு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது …

விவாகரத்து பத்திரத்தை அனுப்பி விட்ட பின் நறுமுகையிடம் இருந்து எந்த பதிலும் வராது போகவும் சுகன்யாவும் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது இருந்தார்…

 

 விக்ரம் நாளுக்கு நாள் ஆளே மாறிக்கொண்டே போவதால் இன்னும் விவாகரத்து என பிரச்சனையை இழுத்தால் மகன் இன்னும் உடைந்து போய் விடுவானோ என்கிற பயத்தில் அமைதி காத்தார்…

 

 ஒருமுறை அவரும் தேசிங்கனும் கூட வீடு தேடி சென்று நறுமுகை வீட்டாரிடம் பேச முனைந்தனர்…. நல்ல வேலை அப்போது நறுமுகையை அழைத்துக் கொண்டு சுரதையும் வளவனும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றிருந்தனர்…

 

 வீடு பூட்டப்பட்டு இருக்க  பக்கத்து வீட்டிலிருந்த வித்யா தான் இவர்களைக் கண்டதும் தன் வீட்டிற்குள்  அமர வைத்தார்…

 

” வீடு பூட்டி இருக்கே எங்க போயிருக்காங்க ..!” எனக்கேட்ட சுகன்யாவிடம்,

 

” நறுமுகை இங்க இல்ல… வெளியே  தங்கி இருக்கா அவளை பார்க்கறதுக்காக போயிருக்காங்க எல்லாரும்..”  என பட்டும் படாது பதில் அளிக்கவும் பெற்றவர்கள் இருவரும் மிகவும் வேதனை பட்டனர் …

 

“விக்ரம் ரொம்பவே மாறிட்டு வரான் …எங்க யார்கிட்டயும் பேசறது இல்ல.. சரியா சாப்பிடறது இல்ல.. தூங்குவதில்லை.. ஆளும் ரொம்பவே உடைஞ்சிட்டான்…ஒரே ஒரு முறை நறுமுகையை மட்டும் பார்த்தா  எல்லாம் சரியாயிடும்..”  என மகனுக்காக கிட்டத்தட்ட பெற்றவர்களும் இறைஞ்சி கேட்டுக் கொண்டனர்…

 

 அதைக் கேட்டதும் வித்யா தடுமாறு விட்டார் …

 

“எதுவா இருந்தாலும் அவங்க வந்த அப்புறம் தான்  முடிவு பண்ண முடியும்.‌.. என்கிட்ட எதுவும் பதில் இல்லை..”  என்றதும் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்…

 

 வித்யாவிற்கு தான் மனம் பிசைந்தது… ஏனெனில் முன்பு அவர்கள் பேசியதற்கும் இப்போது அவர்கள் பேசுவதை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது…

 அவர்கள் கண்களில் உண்மையான வலி தெரிந்தது.. ஆனால் இருந்தும் இப்போது கூட அவர்கள் மகனைப் பற்றித்தான் நினைத்தார்களே ஒழிய மருமகளை பற்றி யோசிக்கவில்லையே என ஒரு பக்க மனம் முரண்டு பிடித்தது… 

 

இதற்கிடையில் விக்ரம் ஓரிரண்டு முறை வளவனிடம் கூட பேசிப் பார்த்தான் எந்த பலனும் இல்லை.. பின் சற்று தொலைவில் இருந்து வீட்டை கூட நோட்டம் விட்டான்… நறுமுகை எங்கேனும் வெளி வருகிறாளா என்று ..ஆனால் கால் கடுக்க நின்றது தான் மிச்சம்.. அவள் வெளிவரவே இல்லை…

 

 ஆக வளவன் கூறியது போல அவள் வெளியூருக்கு தான் சென்று விட்டாள் என உறுதிப்படுத்திக் கொண்ட விக்ரம் ஏமாற்றம் அடைந்து போய் விட்டான் …

 

வீட்டிற்கு வந்த சுகன்யாவும் தேசங்கனும் மனம் கேட்காது மகனிடம் விஷயத்தை கூறிட… கேட்ட விக்ரமோ கசந்த முறுவலை சிந்தி  விட்டு தன் அறைக்குச் சென்றவன் விழிகள் மூடி மெத்தையில் சாய்ந்தான்..

 

 இந்த ஐந்து மாதங்களில் நரகம் என்றால் என்னவென்று முற்றும் முழுதாக உணர்ந்து விட்டான்…

 

 தன்னவளை ஒருமுறையேனும் பார்த்து பேசினால் போதும் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என அவனது உள் மனம் கூறிக் கொண்டே இருக்க தனது கைபேசியை எடுத்து அவளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தவனது மூலையில் பளிச்சென ஒரு யோசனை வந்தது …

 

சட்டென்று தனது காண்டாக்ட் லிஸ்ட்டை தேடிட அதில் ரோகினியின் எண் இருக்கவும் வேகமாக எழுந்து அமர்ந்தவன் அடுத்த கணம் ரோகிணிக்கு தான் அழைப்பு விடுத்தான். ..

 

முழுதாய் ஒரு ரிங் அடித்து அடங்கி விட்டது… கடுப்பாக இருந்தாலும் இன்னொரு ஒரு முறை முயற்சி செய்தான்…

 

 இரண்டாவது ரிங்கிலேயே அழைப்பை ஏற்று இருந்தாள் ரோகிணி …

 

“ஹலோ ரோகினி….”

 

” சொல்லுங்க மாமா ..”என்றதும் தன் எண் அவளிடம் உள்ளது என அறிந்து நிம்மதி அடைந்தவன்,

 

” ரோகினி அது.. நறு.. உங்க அக்கா நறு எங்க இருக்கான்னு தெரியுமா..??  ப்ளீஸ் ரோகிணி …சொல்லேன்..

நான் அவளை பார்க்கணும்.. ஒரே ஒரு முறை பார்க்கணும்.. ப்ளீஸ் …உன் வீட்டில் யாரை கேட்டாலும் அவள் வெளியூர்ல இருக்கான்னு சொல்றாங்க..

 

 நானும் எத்தனையோ முறை உங்க வீட்டு கிட்ட வந்து நின்னு பார்த்தேன்… நறு ஒரு முறை கூட வெளியே வீட்டை விட்டு வெளியவே வரல …ப்ளீஸ் ரோகிணி ..அவ எங்க இருக்கான்னு மட்டும் சொல்லேன்.. நான் போய் பார்க்கிறேன் …ப்ளீஸ்… ப்ளீஸ்..”  என இறைஞ்சினான்…

 

  மறுபுறத்தில் இருந்த ரோகிணிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை…

 

” மாமா வீட்ல யாரும் எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காங்க மாமா ..” என்றதும் சட்டென துணுக்குற்ற விக்ரம்,

 

” சொல்லக்கூடாதுனா புரியலை…!” என்றவன் நெற்றி நீவியபடி யோசித்தான்..

 

” இந்த விவாகரத்து நோட்டீஸை பத்தி யோசிக்கிறியா..??  எனக்கு புரியுது ரோகிணி சத்தியமா நான் அனுப்பல.. எங்க அம்மா தான் அனுப்பி இருக்காங்க ரோகினி. …நான் எப்படி என்னோட நறுவை விட்டுட்டு இருப்பேன்.. எனக்கும் அவளுக்கும் ஆயிரம் இருக்கும் ஆனா ஒருமுறை கூட அவளை பிரியனும்னு நான் நினைச்சதே இல்ல ரோகினி…”  என பேசும் போதே குரல் தழுதழுத்தது…

 

 எப்போதும் கம்பீரமாகவே பார்த்து வியந்த தன் மாமனை இப்போது தழுதழுத்த குரலில் பேசிடவும் மனம் இளகிய ரோகிணி பெருமூச்சு ஒன்று விட்டு கூறினாள் உண்மையை…

 

” அக்கா எங்கேயும் போகல மாமா..!”  என்றதும் உள்ளுக்குள் புது ரத்தம் பாய்ந்தது விக்ரமிற்க்கு…

 

 பரபரப்பானது அவனது மூளை…

 

“ என்ன சொல்ற..??? எங்கேயும் போகலைன்னா அப்ப எங்க இருக்காங்க..???”

 

” அது வீட்ல தான் இருக்கா மாமா ..!” என்றதும் அப்படியே தொய்ந்து போய் மெத்தையில் சாய்ந்து கண்கள் மூடியவனது விழிகளில் இருந்து கண்ணீர் அரும்பியது…

 

” ஆனா நான் அவளை பார்க்கவே இல்லையே ரோகிணி..”  என உள்ளே போன குரலில் கேட்டதும்,

 

” ப்ளீஸ் மாமா இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க.. நீங்களே நேரில் வந்து பார்த்துக்கோங்க மாமா… நான் இப்ப ஆபீஸ்ல இருக்கேன்… மீட்டிங் இருக்கு நான் அப்புறம் பேசுறேன் மாமா..”  என அழைப்பை துண்டித்து இருந்தாள் ரோகிணி…

 

 வீட்டில் வைத்துக் கொண்டே தன்னவளை வெளியூருக்கு அனுப்பி விட்டதாக கூறிய வளவன் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது விக்ரமிற்க்கு…

 

 சட்டையை மடித்து விட்டபடி வேக வேகமாக தனது காரினை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு சென்று விட்டான்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top