அன்று இரவு, “ஹாய் லைலா” என்று மெசேஜ் அனுப்பினான்…
அவளும், மெசேஜைப் பார்த்தவள், ‘சரியான கடலை பார்டியா இருக்கான்’ என்று நினைத்துக் கொண்டே, “ஹாய்” என்று அனுப்பினாள்.
“என்ன பண்ணுற?” என்று அனுப்பினான்…
“பிஞ்ச செருப்ப தச்சிட்டு இருக்கேன்” என்று சிரித்துக் கொண்டே பதில் அனுப்ப, அவனும் சத்தமாக சிரித்தபடி, ‘சரியான அராத்து’ என்று நினைத்தவன், “என் செருப்பும் பிஞ்சு போச்சு, தச்சு கொடுக்கிறியா?” என்று கேட்டான்.
“பணம் கொடுப்பீங்களா?” என்று கேட்டாள்.
“என் பிச்சைக்கார அண்ணன் கிட்ட ஆட்டைய போட்டாவது கொடுப்பேன்” என்றான் அவன்.
அவள் இதழ்களில் புன்னகை வேறு…
“அவர் பாவம் இல்லையா?” என்று கேட்க, “தம்பிக்கு செய்ய தானே வேணும்” என்றான் அவன்…
இப்படியே சிறிது நேரம் கிண்டலாக பேசி விட்டு தூங்கி விட்டார்கள்…
அடுத்த நாள் மீண்டும் கேன்டீனில் சந்தித்தார்கள்…
அங்கே மட்டும் தான் அவர்கள் சந்திப்பு…
இரவில் கொஞ்ச நேரம் சாட்டிங்… அவ்வளவு தான்….
இப்படியே ஒரு மாதம் கடந்து இருக்கும்…
அன்று கேன்டீனுக்கு வந்தவன், “சூப்பர் ஸ்டார் படம் வந்திருக்கு லைலா, பார்க்க போகலாமா?” என்று கேட்டான்.
அவளும், “எதுல போறது? பஸ்னா லேட் ஆகும்” என்றாள்…
“டேக்சி” என்றான் அவன்…
“நான் ரொம்ப கஷ்டப்பட்ட பொண்ணு மஜ்னு” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டே…
“அது சரி, என் கிட்டயும் தான் பணம் இல்ல” என்று சொல்லி விட்டு வந்தவன், அன்று இரவே அர்ஜுனுக்கு தான் அழைத்து இருந்தான்.
அர்ஜுனின் அலைபேசி அலறியது. எடுத்து காதில் வைத்தான்.
நவநீதன் தான் எடுத்து இருந்தான்.
எடுத்ததுமே ஹெலோ கூட சொல்லவில்லை.
“மச்சான் எனக்கு ஒரு பைக் வேணும்” என்றான்.
“எத பைக்கா??” என்று அர்ஜுன் அதிர, “ஆமா பைக் வேணும்” என்றான்.
“உன் அண்ணனுங்க கிட்ட கேளு, இல்ல அப்பா கிட்ட கேளு” என்றான்.
“வாங்கி கொடுக்க மாட்டாங்கன்னு உங்களுக்கே தெரியும்… அப்புறம் என்ன??” என்றான்.
“டேய் அங்கே படிக்க தானே டா போன ?? இப்போ என்ன பைக்??” என்றான் அர்ஜுன்.
“எனக்கு பைக் இருந்தா தான் வசதி” என்றான்.
“ஏன் யாரையும் கரெக்ட் பண்ணி இருக்கியா?” என்று அர்ஜுன் கேட்க, “அப்படியே உங்க மச்சான் கிட்ட போட்டு கொடுத்து எனக்கு ரெண்டு அப்பு வாங்கி கொடுக்கிறதுன்னு பிளான் பண்ணுறீங்களா?” என்று கேட்டான் நவநீதன்.
“நான் அப்படி பண்ணுவேனாடா ??” என்று அர்ஜூன் கேட்க, “பண்ணுவீங்க” என்றான் நவநீதன்.
“என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட…” என்ற அர்ஜுனிடம், “உங்கள பத்தி எனக்கு தெரியும்… என்னை பத்தி உங்களுக்கு தெரியும்… அப்புறம் என்ன?? சரி உங்களுக்கு பைக் வாங்கி கொடுக்க இஷ்டம் இல்ல போல…நான் வச்சிடுறேன்” என்றான்.
“ஏய் ஏய் இரு… நீ என்ன இப்படி என்னை விட மோசமா கோச்சுக்கிற?” என்று கேட்ட அர்ஜுனோ, “என்ன பைக் வேணும்??” என்று கேட்டான்.
“றோயல் என் ஃபீல்ட்” என்றான் அவன்…
“ஏன் இந்த ஸ்கூட்டி எல்லாம் சார் ஓட மாட்டிங்களா??” என்று அர்ஜூன் கிண்டலாக கேட்க, “அது உங்கள போல ஓல்ட் பீப்பிள் ஓடுறது… ஐ ஆம் யங்” என்றான் நவநீதன்.
“செருப்பு பிஞ்சுடும்… உன்ன விட நாலைஞ்சு வயசு தான் அதிகம்… அதுக்குள்ள என்னை கிழவன் லிஸ்ட் ல சேர்த்துட்டியா ??” என்று கேட்டான்.
நவநீதன் சத்தமாக சிரித்துக் கொள்ள, “சிரிக்காதே. காசு போடுறேன் வாங்கிக்கோ.. கவனமா ட்ரைவ் பண்ணு… நீ அங்கே ஏதும் குளறுபடி பண்ணுனா உன் அப்பாவும் அண்ணனும் பைக் வாங்கி கொடுத்ததுக்கு என்னை துவைச்சு எடுப்பாங்க… புரியுதா??” என்றான் அர்ஜுன்…
“பிலீவ் மீ… ஐ ஆம் எ குட் ட்ரைவர்” என்று நவநீதன் சொல்ல, “அது தான் ஊருக்கே தெரியுமே” என்றான் அர்ஜுன்…
“இப்ப நல்லா ஓட்டுவேன் மச்சான். குருநாதர் உங்களுக்கே இந்த சிஷ்யன் மேல நம்பிக்கை இல்லையா??” என்று நவநீதன் கேட்க, “ம்ம், அந்த நம்பிக்கைல தான் வாங்கி கொடுக்கிறேன்… உன் அண்ணா என்னன்னா பிள்ளையா பெத்து தள்ளி சீர் செய்ய வச்சு என்னை இன்டைரக்ட் ஆஹ் ஓட்டாண்டி ஆக்குறார். நீ என்னன்னா நான் உன் பொண்டாட்டி மாதிரி வரதட்சணை கேக்கிற போல எல்லாம் கேட்கிற… உங்க குடும்பத்துல பொண்ணு எடுத்தது ஒரு குத்தமா?” என்று கேட்டான்.
“ஒரு சின்ன திருத்தம். பொண்ண எடுத்தது இல்ல பொண்ண கடத்துனது” என்றான் நவநீதன்.
அர்ஜுனோ, “நீ எல்லாம் காலாய்க்கிற பார்த்தியா? எப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிட்டீங்களே டவ்” என்று சொல்ல நவநீதன் சத்தமாக சிரித்துக் கொண்டான்…
“சிரிக்காம அங்க யூஸ் பண்ணுற அக்கவுன்ட் நம்பரை அனுப்பு, பணம் போட்டு விடுறேன்” என்று சொல்லி விட்டு வைத்தான் அர்ஜுன்…
நவநீதனும் அக்கவுன்ட் நம்பரை அனுப்பி இருக்க, அவனுக்கு அடுத்த கணமே பணத்தை போட்டு விட்டான்…
பணம் உடனே அக்கவுண்டில் விழுந்ததைப் பார்த்த நவநீதனோ, “மச்சான்னா மச்சான் தான்” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டான்.
இதே சமயம் அர்ஜுனுக்கோ கஜனிடம் இதனை சொல்லாமல் செய்வது ஒரு மாதிரி ஆகி விட்டது…
நவநீதன் சின்ன குளறுபடி செய்தாலும் அவன் கழுத்தை அல்லவா பிடித்து விடுவார்கள்…
ஏற்கனவே வீட்டிற்கு தெரியாமல் தான் இன்டர்நஷனல் லைசென்ஸ் எடுத்து கொடுத்து இருந்தான்.
‘இவன் கூட சேர்ந்து என் க்ரைம் ரேட்டும் கூடிட்டே போகுது, சொல்லிடுவோம்’ என்று நினைத்துக் கொண்டே கஜனுக்கு அழைக்க, அவன் அப்போது தான் ஹாஸ்பிடலில் இருந்து திரும்பிக் கொண்டு இருந்தான்.
வண்டியில் இருக்கும் ப்ளூ டூத் ஸ்பீக்கரை ஆன் செய்த கஜனோ, “சொல்லுடா” என்று சொல்லிக் கொண்டே வண்டியை செலுத்தினான்.
“நவா எடுத்தான்” என்றான் அர்ஜுன் தயக்கமாக.
“என்ன வாங்கி தர சொல்லி கேட்டான்?” என்று நேரடியாக கஜனே விடயத்துக்கு வந்து விட, ‘ரொம்ப தான் ஷார்ப்’ என்று வாய்க்குள் முணுமுணுத்த அர்ஜுனும், “பைக்” என்றான்.
“லைசன்ஸ்?” என்கின்ற கேள்வி கஜனிடம் இருந்து…
“இண்டர்நஷனல் லைசன்ஸ் வச்சு இருக்கான்” என்று பதில் வந்தது…
“நீ தான் எடுத்து கொடுத்தியா?” என்று கேட்க, “ம்ம்” என்றான்.
இதழ் குவித்து ஊதிய கஜனோ, “சரி, எவ்ளோன்னு சொல்லு, பணத்தை நான் போட்டு விடுறேன்” என்றான்.
“இல்ல தேவல” என்று அர்ஜுன் சொல்ல, “காசு ரொம்ப கொட்டிச்சுன்னா எனக்கு கொஞ்சம் கொடு, என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்துட்டு இருக்கிற?” என்றான் கஜன் சற்று கடுப்பாக…
அர்ஜுனோ, “கேக்கும் போது எப்படி இல்லன்னு சொல்றது?” என்று கேட்டான்…
“அவனுக்கு ரொம்ப இடம் கொடுத்து கெடுக்கிற அர்ஜுன்” என்று சற்று ஆதங்கமாக சொல்ல, “ஆசைப்படுறான்” என்று சொன்னான் அர்ஜுன்…
“நான் என்ன சொன்னாலும் நீ விட்டு கொடுக்க போறது இல்லை, அவனுக்கு பொறுப்பும் இந்த காலத்துல வரப் போறதும் இல்ல… சரி வை” என்று கஜன் அலைபேசியை வைத்து விட்டு, பெருமூச்சுடன் கஜன் வண்டியை செலுத்தினான்…
அர்ஜுனோ, “அவன் ஒரு பக்கம், இவர் ஒரு பக்கம், இடைல என் தலையை உருட்டுறாங்க” என்று முணுமுணுக்க, “அப்பா கதை சொல்லுங்க” என்று சொல்லிக் கொண்டே, அவன் காலைக் கட்டிக் கொண்டான் ஆரண்யன்…
“டேய் நீயுமாடா?” என்று கேட்டபடி, அவனை தூக்கிய அர்ஜுன் அறைக்குள் நுழைய, அங்கே அவன் மகளை தொட்டிலில் தூங்க வைத்து இருந்தாள் ராகவி…
அவளை பார்த்துக் கொண்டே, குரலை செருமிய அர்ஜுனோ, “தாத்தா கத சொல்லுவார் அவர் கூட தூங்குறியா?” என்று கேட்க, “ஆஹ் அஸ்கு புஸ்கு. என்ன அனுப்பிட்டு அம்மாவை நீங்க கட்டி பிடிச்சு படுக்கலாம்னு பார்க்கிறீங்களா? விட மாட்டேன்” என்றான். ராகவி இதழ்களுக்குள் சிரித்தபடி அவனை கடந்து சென்றாள்.
“எனக்கு நீ தான் டா முதல் எதிரி, என் அவஸ்தை உனக்கு எங்க புரிய போகுது, சரி விடு, கதை சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டே, கட்டிலில் அவனை அணைத்துக் கொண்டே படுத்தவன் கதை சொல்ல ஆரம்பிக்க, ராகவியும் லைட்டை அணைத்து விட்டு, ஆரண்யனுக்கு அடுத்த பக்கம் வந்து படுத்துக் கொண்டாள்…
அர்ஜுனோ பெருமூச்சுடன், கதை சொல்லிக் கொண்டே இருக்க ஆரண்யன் தூங்கி விட்டான்.
ராகவியும் தூங்கி விட்டாள் என்று அறிந்து கொண்டான்…
‘இவ ஒரு கும்பகர்ணி’ என்று திட்டிக் கொண்டே, மகனை தூக்கிக் கொண்டு பைரவி மற்றும் பார்த்தீபன் அறைக்குள் படுக்க வைத்து விட்டு, மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டான்…
கதவை தாழிட்டு விட்டு, ராகவியை பின்னால் இருந்து அணைத்து கழுத்துக்குள் முகம் புதைக்க, “ஆரு குட்டி” என்று சொல்லிக் கொண்டே, அவன் பக்கம் திரும்பினாள்.
குழந்தை அணைக்கின்றது என்று நினைத்து விட்டாள் போலும்…
“நான் உன் புருஷன் டி” என்று அவன் சொன்னதுமே சட்டென எழுந்து அமர்ந்தவள், “ஆரண்யன் எங்க?” என்று கேட்க, “அம்மா கிட்ட” என்றான் அவன்…
“ஒரே கொண்டு போய் கொடுத்தா என்ன நினைப்பாங்க அர்ஜுன்?” என்று அவள் கேட்க, “அதெல்லாம் எனக்கு தெரியாது” என்று சொல்லிக் கொண்ட, அவளை இழுத்து அணைத்து இதழில் இதழ் பொருத்தி இருந்தான்…
கொஞ்ச நேரம் தான் கடந்து இருக்கும், அகல்யா வீறிட்டு அழுதாள்.
தனக்கு மேல படர்ந்து இருந்தவனை தள்ளி விட்டு எழுந்தவள், “பாலுக்கு அழுறா, விடுங்க” என்று சொல்லிக் கொண்டே, அகல்யாவை தூக்க, அவனோ பெருமூச்சுடன், “இது எப்படி இருக்கு தெரியுமா? பிரியாணியை கண் முன்னாடி வச்சுட்டு சாப்பிடாதேன்னு சொல்ற போல இருக்கு, உன் தம்பி ஒரு பக்கம், உன் அண்ணன் இன்னொரு பக்கம் என் தலையை உருட்டுறாங்க்ன்னு பார்த்தா, உனக்கு கிஸ் கூட நிம்மதியா அடிக்க விடாம எனக்கு பிறந்த ரெண்டும் வச்சு செய்யுதுங்க, நான் பேசாம இமையமலைக்கு போறேன்” என்று சொல்லிக் கொண்டே, குப்பற படுக்க,
“இமய மலைக்கு போற மூஞ்ச பாருங்க” என்று சிரித்தபடி சொன்ன ராகவி குழந்தையின் பசியை ஆற்றி இருந்தாள்.
அதனை தொடர்ந்து, அவள் படுக்க வந்த நேரம், அவனோ தூங்கி இருந்தான்…
லைட்டை அணைத்து, விட்டு, அவன் அணைப்புக்குள் புகுந்து கொண்டவள், “அர்ஜுன்” என்றாள் அவன் காதினுள் கிசு கிசுப்பாக…
“என்னடி?” என்றான் தூக்க கலக்கத்தில்…
“அவ்ளோ தானா?” என்று கேட்டாள்…
“உன் வில்லன் எந்திரிச்சு வருவான் இப்ப, பேசாம ரெண்டு பேரும் எங்கயாச்சும் ஓடி போகலாம் வர்றியா?” என்று கேட்க,
அவள் சிரித்துக் கொண்டே, அவன் இதழில் இதழ் பதிக்க, ஒரு உஷ்ண பெருமூச்சுடன், அவளை தூக்கி மீண்டும் கீழே போட்டவன் மேலே படர்ந்து விட்டான்.
இந்த முறை அவர்களது அதிஷ்டத்துக்கு எந்த கரடியும் வரவில்லை…