இப்படியே நாட்கள் வேகமாக நகர,
தனேஸ்வர் மற்றும் ஹன்சிகாவின் திருமண நாளும் நெருங்கி இருந்தது…
சிங்கப்பூர் எயார் போர்ட்டில் தான் இரு குடும்பங்களும் நின்று இருந்தார்கள்…
வீரராகவனும் நெடுஞ்செழியனும் காஃபி அருந்தியபடி பேசிக் கொண்டு இருக்க, கீர்த்தனாவும் அக்ஷயாவும் ஹன்சிகாவும் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள்…
அக்ஷயாவோ, “வாந்தி எல்லாம் ஓகே யா ஹன்சா?’ என்று கேட்க, “ஓகே அத்தை. கொஞ்சம் தலை தான் சுத்திட்டே இருக்கு” என்றாள்.
“ட்ராவல் பண்ண எல்லாம் சரின்னு தானே மாமா சொன்னார்?” என்று அக்ஷயா கேட்க, “ஆமா, ட்ராவலிங் நோ ப்ராப்லம்னு சொல்லிட்டார்” என்றார் கீர்த்தனா…
சிங்கப்பூர் வந்ததில் இருந்தே, ஹன்சிகாவும் தனேஷ்வரும் நேரில் பார்த்துக் கொள்ளவே இல்லை…
வீட்டினரிடம் கேட்க தயக்கத்தில் அலைபேசியில் தான் பேசிக் கொண்டு இருந்தார்கள்…
தனேஷ்வரோ ஆரம் கட் மற்றும் த்ரீ குவாட்டர் தான் அணிந்து இருந்தான்…
கையில் போடப்பட்டு இருந்த டாட்டூ அப்பட்டமாக தெரிந்தது…
கழுத்தில் ஹெட் ஃபோன் இருக்க, ஓரமாக இருந்த இருக்கையில் தனியாக தான் அமர்ந்து இருந்தான்.
கண்ணில் சன் க்ளாஸ் இருந்தது…
பார்க்கவே ஈர்க்கும் தோற்றம்…
அவன் விழிகள் சன்க்ளாஸை தாண்டி ஹன்சிகாவை நோக்க, அவளும் அடிக்கடி அவனைப் பார்த்துக் கொண்டாள்.
இருவருக்குமே நெருங்கி இருந்து பேச ஆசை தான்…
ஆனால் ஏற்கனவே கர்ப்பமான விஷயத்தால் கொஞ்சம் சங்கடத்தில் இருந்தார்கள்…
அதனாலேயே திருமணம் வரை தள்ளி இருக்க நினைத்து விட்டார்கள்…
பெற்றோர் முன்னே நெருங்கி இருக்கவும் ஒரு மாதிரியான உணர்வாக இருந்தது…
உண்மையை சொல்லப் போனால் இந்த பிரச்சனையின் முன்னர் இருந்தளவு நெருக்கம் இருவருக்குமே இல்லை.
அவனும் வேலைப்பளுவில் அகப்பட்டுக் கொள்ள, வீட்டுக்கு தாமதமாக தான் வந்து சேர்வான்…
அவளுடன் பேசவே நேரம் இருக்காது, “குட் நைட்”, “சாப்பிட்டியா?”, “டாக்டர் கிட்ட போனியா?” , “ஹெல்த் எப்படி இருக்கு?” போன்ற கேள்விகள் தான் அவனிடம் இருந்து வரும்…
அவளுமே அவனது அந்த நெருக்கமான பேச்சை எதிர்பார்த்து களைத்துப் போய் விட்டாள்.
அவனது சங்கடம் புரிந்தது…
வேலைப்பளுவில் இருக்கின்றான் என்றும் தெரிந்தது…
அதனால் தான் அவளும் மௌனமாகி விட்டாள்.
அவளோ லெக்கின்ஸ் மற்றும் டீ ஷேர்ட் அணிந்து இருக்க, முடியை விரித்து விட்டு இருந்தாள்.
அவள் தலையில் சன் க்ளாஸ் இருந்தது…
அவனுக்கு நிகரான தோற்றம் தான் அவளுக்கும்…
ஈர்த்து விடும் பதுமை அவள்…
அதில் தான் அவனும் விழுந்து விட்டானோ என்னவோ…
அவளை ரசனையாக பார்த்துக் கொண்டே, திரும்பியவன் அருகே வந்து ஒரு இளம்பெண் அமர்ந்து கொண்டே, “ஹாய்” என்றாள்.
அவனும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டே, “ஹாய்” என்றான்…
அந்த பெண்ணும் சகஜமாக பேச ஆரம்பித்து விட, அவனும் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டான்…
ஹன்சிகாவுக்கு வயிறு எரிவதே இதனால் தான்…
ஸ்கூல், காலேஜ் என்று எல்லா இடமும் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள்…
அவன் தோற்றம் அதற்கு முக்கிய காரணம்…
ஹன்சிகா அவசரப்பட்டதும் அதனால் தான்…
இப்போதும் கடுப்பாகி விட்டாள்.
எழுந்து சென்று கேட்கவும் முடியாது…
நெருப்பில் அமர்ந்து இருக்கும் உணர்வு…
அந்த பெண்ணோ, அவன் டாட்டூவை பற்றி பேசிக் கொண்டு இருந்தாள்.
அவன் மேனியில் அவள் விழிகள் படிவதை பார்த்தவளோ, ‘கண்ணை நோண்டிடுவேன்டி, அது என் ஆள், பார்க்க வேற அந்த பொண்ணு ஆப்பிள் போல இருக்காளே’ என்று நினைத்தவள் அந்த பெண்ணை ஆழ்ந்து பார்த்தாள்.
கை இல்லாத டீ ஷேர்ட் அணிந்து இருந்தாள்.
அங்க வனப்புகள் பாதி தெரியும் அளவுக்கு பெரிய கழுத்து வேறு…
குட்டி ஷார்ட்ஸ் அணிந்து இருந்தாள். கால்கள் வேறு வள வளப்பாக இருந்தன…
‘செக்சியா வேற இருக்கா. இந்த படுபாவி சங்கிளாஸை போட்டுட்டு எத எல்லாம் பார்க்கிறான்னு வேற தெரியல, எனக்கே அவ மேல இருந்து கண்ணை எடுக்க முடியல, அவன் வேற ஆம்பிளை… சும்மா இருப்பானா?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருக்க, தனேஸ்வரனுக்கு தெரியும் அவள் தன்னை தான் பார்த்துக் கொண்டு இருப்பாள் என்று…
பார்த்தும் பார்க்காத போல இதழ்களுக்குள் சிரித்தபடி அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்தான்…
அவன் அவளை மிஞ்சிய திருடன் என்று அவன் மட்டுமே அறிந்த ரகசியம்…
அவனுக்கு ஒன்றும் ஏனைய பெண்கள் மீது பெரிய ஈடுபாடு எல்லாம் இல்லை…
ஹன்சிகாவை சின்ன வயதில் இருந்தே பிடிக்கும்…
அவளை வெறுப்பற்றவே பெண்களிடம் பேசுவான்…
அவளும் அதனை நம்பி, அவனை நெருங்கி, இப்போது அவன் குழந்தையை சுமக்கும் நிலையில் வந்து நிற்கின்றாள்…
ஒரு கட்டத்துக்கு மேல் ஹன்சிகாவினால் முடியவில்லை…
“அத்தை” என்றாள் அக்ஷயாவை பார்த்து…
“என்னம்மா?” என்று அக்ஷயா கேட்க, “உங்க பையனை பாருங்க, அந்த பொண்ணு கூட எப்படி பேசிட்டு இருக்காருன்னு” என்றாள்.
அக்ஷயாவும், “அதுல என்ன இருக்கு? யாரும் ஃப்ரெண்ட் போல” என்றார்.
“அந்த பொண்ணோட ட்ரெஸ்ஸை பாருங்க எல்லாமே தெரியுது” என்றாள்.
கீர்த்தனவோ, “என்ன இவ்ளோ பொசெசிவ் ஆஹ் இருக்க?” என்று கேட்க, ஹன்சிகாவோ, “என்ன பண்ணுறது? இவ்ளோ அழகா ஒரு பையனை பெத்து வச்சு இருக்காங்களே” என்று அக்ஷயாவுக்கு திட்டு விழுந்தது…
அவள் சீரியஸ் ஆக தான் பேசிக் கொண்டு இருந்தாள்.
அக்ஷயாவுக்கும் கீர்த்தனாவுக்கும் சிரிப்பும் வந்து விட்டது…
அக்ஷயாவோ, “சரி டென்ஷன் ஆகாதே, அவனை கூப்பிடுறேன்” என்று சொன்னவளோ, “தனா” என்று அழைக்க, அவனும், “ஓகே நைஸ் டு மீட் யூ” என்று சொல்லி கையை அந்த பெண்ணுடன் குலுக்கி விட்டு, எழுந்து கொண்டே, அக்ஷயா அருகே வந்தான்…
“இங்க இருடா” என்று சொல்லி தனக்கு அருகே இருந்த இருக்கையை காட்டினாள்.
அவனும் அமர்ந்து கொண்டே, “என்னம்மா?” என்று கேட்க, “நீ பாட்டுக்கு தனியா இருக்க, அது தான் கூப்பிட்டேன்” என்று சொல்ல, அவனோ எட்டி ஹன்சிகாவை பார்த்தவன், “நீங்களா கூப்பிட்டிங்களா? இல்லை கூப்பிட சொல்லி மேடம் சொன்னாங்களா?” என்று கேட்டான்.
கீர்த்தனாவோ, “ரொம்ப படுத்துறான்னா விட்ருடா, எனக்கே எரிச்சலா இருக்கு” என்றார் கிண்டலாக…
“அம்மா” என்று கீர்த்தனாவை பார்த்து ஹன்சிகா சிணுங்கிக் கொண்டே எழ, “எங்கடி போக போற?” என்று கேட்டார் கீர்த்தனா…
“கடையை சுத்தி பார்த்துட்டு வர்றேன், இங்க இருந்தாலே எனக்கு கடுப்பா வருது” என்று சொன்னபடி செல்ல, அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த தனேஷ்வரும், எழுந்தவன், “நானும் கடையை சுத்திட்டு வர்றேன்” என்று சொன்னபடி அவளை பின் தொடர்ந்தான்…
அவளும் கடுப்பாக ஒரு கடைக்குள் சென்றவள், என்ன வாங்குவது என்று தெரியாமல் அங்கும் இங்கும் நடக்க, “என்னடி வேணும்” என்று கேட்டபடி அவள் பின்னே வந்து நின்றான் தனேஷ்வர்.
அவனை திரும்பிப் பார்த்து முறைத்தவள், “அந்த பொண்ணுக்கு கையெல்லாம் கொடுக்கிற அளவுக்கு போயிடுச்சு என?” என்று கேட்டாள்.
“அவளுக்கு கை தான் டி கொடுத்து இருக்கேன், உனக்கு பிள்ளையே கொடுத்து இருக்கேன், அப்புறம் என்ன?” என்று ஒற்றைக் கண்ணை சிமிட்டி கேட்க, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று அவனுக்கு திட்டிக் கொண்டே, நடக்க, அவனும் சிரித்துக் கொண்டே பின்னால் நடந்தான்.
கொஞ்ச தூரம் சென்றவள். “எதுக்கு பின்னாடி வர்றீங்க?” என்று தலையை திருப்பிக் கேட்டாள்.
அவளையே ரசனையாக பார்த்தவன், “லைட்டா பேபி பம்ப் தெரியுது” என்றான் அவளது குட்டி வயிற்றை கண்களால் காட்டிக் கொண்டே…
அவளோ, “உள்ள உங்க குழந்தை தான் இருக்கு” என்று சொன்னவளுக்கு அவனை பார்த்ததுமே கோபத்தையும் இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
என்னென்ன மாயங்கள் செய்து அவளை மயக்கி வைத்து இருக்கின்றானோ தெரியவில்லை…
“இந்த முகத்தை பார்த்தா கோபம் கூட வர மாட்டேங்குது” என்றாள்.
அவள் இடையை பற்றி தன்னுடன் நெருக்கிக் கொண்டவன், இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, “சரி என்ன வேணுமோ கேளு, கொடுக்கிறேன்” என்றான்.
“நான் கேட்பேன், அப்புறம் உங்களால கொடுக்க முடியாது” என்றாள்.
அவனுக்கு புரிந்து விட்டது.
“சரி கேளு” என்றான்…
“கிஸ் அடிக்க முடியுமா?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“இது சிங்கப்பூர் எயார்போர்ட் மேடம்” என்றான் கிண்டலாக…
அவளோ சத்தமாக சிரித்துக் கொண்டே, “ஐ க்னோ… சும்மா கேட்டேன்” என்று சொல்ல, “தாலி கட்டிட்டு எல்லாமே பண்ணிடுறேன்” என்று சொன்னான் அவளையே மோகமாக பார்த்துக் கொண்டே.
“சார் நமக்கு ஃபெர்ஸ்ட் நைட் எல்லாம் அரேன்ஜ் பண்ணுவாங்களா என்ன?” என்று கேட்க, “அவங்க பண்ணலேன்னா என்ன? நான் உன்ன தூக்கிட்டு போயிடுறேன்” என்று கண் சிமிட்டி சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டே, அவனுடன் நடக்க ஆரம்பித்து விட்டாள்.
அதனை தொடர்ந்து விமானம் புறப்படும் நேரமும் வந்து விட்டது.
பிசினஸ் க்ளாஸ் டிக்கெட் தான் எல்லோருக்கும் புக் செய்து இருந்தார்கள்…
எல்லோரும் பேசிக் கொண்டே, விமானத்திலும் ஏறி விட, விமான பணிப்பெண் கூட தனேஷ்வருடன், “சார்” என்று பேச ஆரம்பித்து விட்டாள்.
ஹன்சிகாவோ வழக்கம் போல கடுப்பாகி விட்டு, கண்களை மூடி தூங்க ஆரம்பித்து விட்டாள்.
கிட்டத்தட்ட நான்கரை மணி நேர பயணத்தை தொடர்ந்து, இந்தியாவை வந்து அடைந்து இருந்தார்கள்…
ஹன்சிகாவோ, “நான் வாஷ் ரூம் போயிட்டு வர்றேன், இப்போ எல்லாம் அடிக்கடி வருது” என்று சொல்ல, அக்ஷயாவோ, “அது சகஜம் தானே, குழந்தை இன்னும் வளர, இன்னுமே அடிக்கடி வரும்” என்றாள்.
“முடியல அத்தை” என்று சலித்துக் கொண்டே, அவள் செல்ல, தனேஷ்வரனோ, “நீங்க போங்க, நான் அழைச்சிட்டு வர்றேன்” என்றான்…
நெடுஞ்செழியனும் வீரராகவனும் முன்னால் சென்று இருக்க, அக்ஷயாவும் கீர்த்தனாவும் பேசிக் கொண்டே, பின்னால் சென்று இருந்தார்கள்…
தனேஸ்வரோ, அங்கே இருந்த தூணில் சாய்ந்து நின்று இருந்தான்…
சற்று நேரத்தில் கழிப்பறையில் இருந்து வெளியே வந்த ஹன்சிகா, விழிகளை சுழற்றி தேட, தனேஸ்வர் கையை காட்டினான்.
“எல்லோரும் எங்க போய்ட்டாங்க தனா” என்று அவள் கேட்டு முடிக்க முதல், சுற்றும் முற்றும் பார்த்தவன், அவளை இழுத்து மறைவிடத்துக்கு கொண்டு வந்தான்… அவளோ, “தனா” என்று பேச முதலே அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கி அவள் இதழ்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் கவ்விக் கொண்டான்…
மிக மிக ஆழமான முத்தம்…
கண நேரத்திலேயே அவள் மேனி மொத்தமாக உருகி விடும் அளவுக்கு ஆழமான முத்தம்…
முத்தமிட்டு விலகியவன், அவள் மூடி இருந்த விழிகளை பார்த்துக் கொண்டே, “கண்ணை திறடி” என்றான்…
மெதுவாக கண்களை அவள் திறந்தாள்.
வெட்கத்தில் சிவந்து விட்டாள்.
“கேட்டதை கொடுத்துட்டேன் ல” என்றான்.
அவளோ சிணுங்களாக, அவன் தோளில் தட்டி விட்டு, “கிளம்பலாம் வாங்க” என்று சொல்ல, அவனுமே சிரித்தபடி அவள் கையை பற்றி நடக்க ஆரம்பித்து இருந்தான்.