ஒன்றாக அங்கிருந்து வண்டியில் கிளம்பியவர்கள் ஒரு வழியாக சக்திவேலின் ஊரை நோக்கி புறப்பட்டு விட்டார்கள்…
இதே சமயம் சக்திவேலோ நவநீதனிடம், “தோப்பு வீடு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா?” என்று கேட்க, “ஆமாப்பா, நானும் மச்சானும் போய் எல்லாம் ரெடி பண்ணிட்டு வந்திட்டோம்” என்றான்…
“யாருக்கும் எந்த குறையும் இருக்க கூடாது. புரியுதா?” என்று கேட்டார் சக்திவேல்…
“அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்றான்.
“கல்யாண மண்டப வேலை எல்லாம் என்னாச்சு?” என்று கேட்க, “எல்லாமே பார்த்துட்டு இருக்கோம், கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்குல்ல, அதுக்குள்ள ஏதாவது மிஸ் ஆச்சுன்னா கூட பார்த்து பண்ணிடலாம்” என்றான்…
சக்திவேலோ ஏதோ சொல்ல ஆரம்பிக்க, “அப்பா, ஒரு குறையும் இல்லாம நான் பார்த்துக்கிறேன்” என்றான்…
சக்திவேலும், “சரி டா” என்று சொல்லி மென் சிரிப்புடன் தோளில் தட்டி விட்டு நகர்ந்து விட, அவனும் பெருமூச்சுடன் அறைக்குள் நுழைந்தான்…
அங்கே கட்டிலில் யோசனையுடன் அமர்ந்து இருந்தாள் தனிஷா.
“என்னடி?” என்று கேட்டபடி அவன் ஷேர்ட்டை கழட்ட, “இன்னைக்கு பீரியட் வந்திடுச்சு நவா” என்றான்.
“பச், அப்போ இன்னைக்கு நைட் வாய்ப்பில்லையா?” என்று கேட்க, அவனை முறைத்தவள், “நான் சீரியஸ் ஆஹ் பேசிட்டு இருக்கேன்” என்றாள்.
அவனோ, “சரி இப்போ என்ன?” என்று கேட்டான்.
“பிரெக்னன்சி ஏன் மிஸ் ஆகுது? ரெண்டு மாசம் ஆயிடுச்சு ல” என்றாள்.
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், “ரெண்டு மாசம் தானே ஆகி இருக்கு” என்று சொல்ல, “மாமா கிட்ட செக் பண்ணி பார்த்துடலாமா?” என்று கேட்டாள்.
“லூசா உனக்கு, இப்போவே எதுக்கு? கொஞ்ச நாள் போகட்டுமே, நம்மளும் ஜாலியா இருக்கலாம் ல” என்று சொல்லிக் கொண்டே, அவளை அணைக்க முற்பட, அவன் மார்பில் கையை வைத்து தள்ளியவள், “என் ஃபீலிங்க்ஸை புரிஞ்சுக்கோங்க நவா, எப்போ பார்த்தாலும் இது தானா?” என்று திட்ட, அவனுக்கு கடுப்பாகி விட்டது.
“அப்படி என்ன ஃபீலிங்க்ஸ் உனக்கு?” என்று கேட்டான்…
“என்னை விட சின்ன பொண்ணு ஹன்சிகாவே ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கா, கல்யாணம் கூட நடக்கல, இன்னைக்கு வீட்டுக்கு வந்த பாட்டி கூட இளைய மருமகளுக்கு விசேஷம் இல்லையான்னு கேக்கிறாங்க” என்றாள்.
சுற்றி எல்லோரும் குழந்தைகளுடன் இருப்பதால் மனதளவில் சோர்ந்து இருக்கின்றாள் என்று அவனுக்கும் புரிய, அவளுடன் சண்டை போட்டு பயன் இல்லை என்று புரிந்தது.
“சரி, கல்யாணம் முடிய, அண்ணா கிட்ட பேசலாம், அவங்க பேசுறாங்க இவங்க பேசுறாங்கன்னு ஃபீல் பண்ணாதே” என்றான்…
“நீங்க ஈஸியா சொல்வீங்க, ஆனா கேக்கிறது என் கிட்ட தானே” என்று எகிறினாள்.
அவனுக்கு மயக்கமே வந்து விட்டது…
“சரிடி நான் எதுவுமே பேசல” என்றபடி குளிக்க சென்று விட்டான்.
அவளுக்கு நிம்மதியே இல்லை.
குளித்து விட்டு வந்தவனிடம், “நமக்கு குழந்தை பிறக்காமலே போயிடுமோ?” என்று கேட்டாள்.
அவனுக்கு எங்கேயாவது முட்டி கொள்ளலாம் என்கின்ற எண்ணம் தான்…
“யப்பா சாமி, நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு வெளியே வந்தவன், அவளிடம் மீண்டும் வரவே இல்லை…
வழக்கமாக அவளை தேடி வருபவன், இன்று வரவில்லை. அதற்கு ஏற்ற போல அவனுக்கு வேறு நிறைய வேலைகள் தலைக்கு மேல் இருந்தன…
வீரராகவன் குடும்பமும் வந்து சேர, அன்று மாலை போல அறைக்குள் வந்தவன், “தனிஷா, உன் அப்பாவை பார்க்க கிளம்பலாமே” என்றான்.
அவளும் சோர்வாகவே கிளம்பி இருந்தாள்.
சந்தோஷப்பட முடியவில்லை…
அவளை அவன் ஜீப்பில் தோப்பு வீட்டுக்கு அழைத்து செல்ல, அவளோ வீரராகவனைக் கண்டதுமே, ஓடி வந்து அணைத்துக் கொண்டே விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்.
நவநீதனோ மனதுக்குள், ‘இவ அழுறதை பார்த்தா, நான் ஏதோ கட்டி வச்சு கொடுமை படுத்துறேன்னு நினைச்சுட போறார் அவங்க அப்பா’ என்று நினைத்துக் கொண்டே வீரராகவனை நோக்கி வர, அவனோ, “ஏன் மா அழுற?” என்று கேட்டுக் கொண்டே, அவள் கண்ணீரை துடைத்தவர், “மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க?” என்று கேட்டு நவநீதனை அணைத்து விடுவிக்க, அவனும் சிரித்துக் கொண்டே, நலமா விசாரித்தவன், நெடுஞ்செழியன் மற்றும் தனேஷ்வரையும் அணைத்து விடுவித்து இருந்தான்.
அதனை தொடர்ந்து, எல்லோரும் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்…
ஹன்சிகாவிடம், “லைட்டா வயிறு தெரியுது ஹன்சா” என்று தனிஷா சிரித்துக் கொண்டே சொல்ல, “கல்யாண சாரிக்கு தெரியாத வரைக்கும் ஓகே அண்ணி” என்றாள்.
இதனிடையே கீர்த்தனாவோ, “நீ எப்போம்மா நல்ல செய்தி சொல்ல போற?” என்று கேட்டு விட, சட்டென தனிஷாவின் முகம் இறுகியது…
உணர்வை முகத்தில் காட்டாமல் அடக்கிக் கொண்டே, “சீக்கிரம் அத்தை” என்று சொன்னவளுக்கு இன்னுமே குழந்தையின் எண்ணம் தான்…
இதற்கு திருமணமாகி இரு மாதங்கள் தான் கடந்து இருக்கும்…
அதற்கே சோர்ந்து விட்டாள்.
ஒரு வித அழுத்தம் அவளிடம் வந்து சேர்ந்து இருந்தது…
அவர்களிடம் பேசி விட்டு, “அப்போ நான் கிளம்புறேன்” என்று அவளே சீக்கிரம் கிளம்பி விட, “என்னம்மா அவசரம்?” என்று அக்ஷயா கேட்டார்.
“வீட்ல கொஞ்சம் வேலை இருக்கும்மா, நாளைக்கு வர்றேன்” என்று சொன்னாள்.
நவநீதனுக்கே அதிர்ச்சி தான்…
இவ்வளவு அவசரமாக கிளம்புகிறேன் என்கின்றாளே.
சரியென்று அவளை ஏற்றிக் கொண்டே கிளம்ப, “மாமா கிட்ட போகலாமா?” என்று கேட்டாள்.
” என்னடி அவசரம் இப்போ?” என்று அவன் எகிற, “இல்ல நான் போகணும்” என்றாள்.
கோபம் வந்து விட்டது அவனுக்கு…
எரிச்சலாக வேறு இருந்தது…
எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கின்றாளே.
அழைத்துக் கொண்டே கஜனிடம் சென்றான்…
உள்ளே வந்தவர்களை அவனே அதிர்ந்து தான் பார்த்தவன், “என்னை ஹாஸ்பிடல் ல தேடி வந்து இருக்கீங்கன்னா ஏதாவது?” என்று இழுக்க, “ஐயோ அண்ணா நீங்க வேற” என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தவனோ அருகே அமர்ந்த தனிஷாவிடம், “நீயே சொல்லு” என்றான்…
அவளோ கஜனை தயக்கத்துடன் பார்த்தவள், “நான் ப்ரெக்னன்ட் ஆகல” என்றாள்.
கஜனோ அவனை அதிர்ந்து பார்த்தவனோ, “கல்யாணம் பண்ணி ரெண்டு மாசம் தானே” என்று கேட்க, “எல்லாரும் கேக்கிறாங்களே, ஆனா” என்று அவள் தடுமாற, அவனோ பெருமூச்சுடன், “இதுக்கெல்லாமா ஃபீல் பண்ணுவாங்க? இப்போ தானே ரெண்டு மாசம், மினிமம் ஆறு மாசமாச்சும் அப்செர்வ் பண்ணனும், ரெண்டு பேருக்கும் நிறையவே வயசு இருக்கு, எதுக்கு சும்மா மனசை போட்டு குழப்பிக்கிற தனிஷா, ஆறு மாசம் கழிச்சு பார்த்துக்கலாம், புரியுதா? ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனா கூட கரு தங்காம போக வாய்ப்பிருக்கு, சோ மைண்டை ஹப்பியா வச்சுக்கோ” என்று சொன்னவன் நவநீதனிடம், “பார்த்துக்கோடா” என்று சொல்ல, அவனும், “ம்ம்” என்றபடி எழுந்து கொண்டான்…
தனிஷாவும் எழுந்து, “சரி அப்போ நாங்க வர்றோம்” என்று சொன்னபடி வெளியேற, நவநீதனுக்கோ ஆத்திரம்…
அவன் அவ்வளவு சொன்னானே…
அவன் சொன்னதை தானே கஜனும் சொன்னான்…
விறு விறுவென வண்டியில் வந்து ஏறி விட்டான்…
அவளும் ஏறிக் கொள்ள, “இப்போ என்னடி பிரச்சனை உனக்கு?” என்று எகிறிப் பாய்ந்தான்.
அவள் சற்று அதிர்ந்து விட்டாள்.
“இப்போ எதுக்கு இவ்ளோ கோபம்?” என்று கேட்டாள்.
“கோபப் படாம என்ன பண்ணுறது? அவ்ளோ சொன்னேன், கேட்கல, உன் அம்மா அப்பா வந்திருக்காங்க, சரியா பேசக் கூட இல்லை… எப்போ பார்த்தாலும் அவசரம் தான்…” என்று திட்டி விட்டான்…
கல்யாணம் செய்து இன்று தான் முதல் தடவை கொஞ்சம் கார சாரமாக சண்டை போட்டு இருக்கின்றார்கள்…
நவநீதனுக்கு தலைக்கு மேல் வேலை இருக்க, அந்த அழுத்தம் எல்லாம் சேர்த்து அவள் மீது வாரி இறைத்து இருந்தான்…
அவளோ ஏற்கனவே மாதவிடாய் வயிறு வலி ஒரு பக்கம், மனவலி இன்னொரு பக்கம் என்று இருந்தவளுக்கு அவன் பேசப் பேச, கோபம் வந்தது…
“இப்போ எதுக்கு இவ்ளோ கோபம் நவா?” என்று திட்டினாள்.
“நீ பண்ணுனதுக்கு கொஞ்சுவாங்களா? அண்ணா என்ன நினச்சு இருப்பார்?” என்று கேட்க, “அவர் என்ன நினைக்க போறார்?” என்று அவள் கேட்டாள்.
“அவசர குடுக்கைன்னு நினச்சு இருப்பார்” என்றான் பற்களை கடித்துக் கொண்டே..
“நான் அவசர குடுக்கையாவே இருந்து போறேன்” என்று சொன்னவள் விம்மி அழ அவனுக்கோ இன்னும் கோபம் தான் வந்தது…
“இப்போ எதுக்கு அழுதுட்டே இருக்க?” என்று திட்டியபடி வண்டியை கிளப்பினான்…
“என் ஃபீலிங்க்ஸை புரிஞ்சு கொள்ளவே முடியாத ஒருத்தனை கட்டி இருக்கேன், கல்யாணத்துக்கு முதல் யார் மாப்பிள்ளைன்னு பார்க்காம விட்டது என் தப்பு தான்” என்று வார்த்தைகளை விட்டாள்.
அவனுக்கோ ஆத்திரம், “நீ என்னடி என்னை வேணாம்னு சொல்றது, பொண்ணு யாருன்னு பார்த்து இருந்தா, நான் வேணாம்னு சொல்லி இருப்பேன்” என்றான்…
அவனை முறைத்தவளுக்கு இன்னுமே அழுகை…
வீட்டுக்கும் வந்து விட்டார்கள்…
கண்ணீரை துடைத்துக் கொண்டே இறங்கியவள், விறு விறுவென உள்ளே செல்ல, நவநீதனோ வாசலில் நின்று யாழினியுடன் பேச ஆரம்பித்து இருந்தான்.
சிறிது நேரத்தில் கையில் பையுடன் வந்தவளை சக்திவேல் யோசனையுடன் பார்க்க, “அப்பா கூட நிற்க ஆசையா இருக்கு மாமா” என்றாள்.
அவனும், “சரிம்மா, அதுல என்ன இருக்கு? ஆசைக்கு நின்னுடுட்டு வா” என்று சொன்னவரோ, “நவா” என்று அழைக்க, அவனும் உள்ளே வந்தான்.
கையில் பெட்டியுடன் நின்றவளைப் பார்த்து அவனுக்கு அதிர்ச்சி தான்.
முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை…
“சம்பந்தி கூட நிற்க ஆசைப்படுறா, கொண்டு விட்டுட்டு வா” என்று சொல்ல, அவனும், “ம்ம்” என்று சொன்னவன் வெளியேற, அவளும் வண்டியில் ஏறிக் கொண்டான்.
பேசவில்லை அவன்…
தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று ஆத்திரம்.
தோப்பு வீட்டில் அவளை விட, அவளும் இறங்கிக் கொண்டவள் அவனை பார்க்காமல் நடக்க ஆரம்பிக்க, அவனும் அவளை வெறித்துப் பார்த்து விட்டு வண்டியை கிளப்பி இருந்தான்…
கையில் பையுடன் வந்தவளைப் பார்த்த நெடுஞ்செழியனோ, “என்னம்மா வேலை இருக்குன்னு சொல்லிட்டு போன வேகத்துல வர்ற?” என்று கேட்க, “உங்க எல்லார் கூடவும் நிற்க ஆசையா இருந்திச்சு மாமா, அது தான் வந்துட்டேன்” என்று வலுக்கட்டயமாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.
அவளும் குடும்பத்துடன் ஒன்றி இருக்க, வீட்டுக்கு வந்த நவநீதன், கொஞ்ச நேரம் கட்டிலில் மல்லாக்க படுத்து இருந்தான்…
ஆத்திரமாக வந்தது…
எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டாளே, ‘அவ கூட இனி பேசுனா பாறேன்’ என்று திட்டியும் கொண்டான்…
அவன் கவனமோ ஹாலில் கேட்ட சத்தத்தில் கலைய, எழுந்து வெளியே வந்தான்.
“மாமா” என்று சொல்லிக் கொண்டே, ஆரண்யன் அவனிடம் ஓடி வந்தான்.
அன்றே, பார்த்தீபன் குடும்பமும் வந்து சேர, அர்ஜூனுடன் தான் நேரம் கழிந்தது…
இதே சமயம், விஜய்க்கு அழைத்த அர்ஜுனோ, “வரும் போது கல்யாண மாப்பிளையை அழைச்சிட்டு வாங்க அண்ணன், நமக்கு பொழுது போகும் ல” என்று சொல்ல, “கல்யாண மாப்பிள்ளை டா” என்றான் விஜய்…
“அது தான் அழைச்சிட்டு வாங்க” என்று அர்ஜுன் சிரித்தபடி சொல்ல, “பாவம் சின்ன பையன், வச்சு செய்ய போற போல” என்று அவன் சிரித்தபடி கேட்டவன் சொன்ன போலவே தனேஷ்வரை அழைக்க சென்று இருந்தான்.
தனேஷ்வருக்கு அர்ஜுன் அழைக்கின்றான் என்று தெரிந்ததுமே சங்கடம்…
ஹன்சிகா கர்ப்பமான விஷயம் அவன் காதுக்கு சென்று இருக்கும் என்று தெரியும்.
‘என்னை வச்சு செய்ய போறார்’ என்று முணுமுணுத்துக் கொண்டு தான் புறப்பட்டு இருந்தான்.
இதே சமயம் மொட்டை மாடியில் நின்று தான் நவநீதனும் அர்ஜுனும் பேசிக் கொண்டு இருந்தார்கள்…
தயங்கி தயங்கி தான் மொட்டை மாடிக்கு வந்தான் தனேஷ்வர். வைத்து செய்வார்கள் என்று அவனுக்கும் தெரியும்…
பிடரியை வருடிக் கொண்டே வந்தவனை பார்த்தபடி நின்று இருந்தார்கள் அர்ஜுனும் நவநீதனும்…
அர்ஜுனோ, “பச்சை புள்ள போல மூஞ்சை வச்சுட்டு வர்றத பாரேன்” என்றான் சிரித்தபடி.
“ஆமா மச்சான். நான் கூட இவனை பச்சை மண்ணுனு நினச்சேன்” என்றான் கிண்டலாக.
அர்ஜுனோ, “டேய் தம்பி இங்க வா” என்று அழைக்க, “செத்தேன்” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி
“அப்புறம் அண்ணா எப்படி இருக்கீங்க??” என்று கேட்டபடி இருவரையும் அணைத்து விடுவிக்க, “என்னவோ எல்லாம் கேள்விப்பட்டேனே டா” என்றான் அர்ஜுன்…
குரலை செருமிக் கொண்டான். என்ன பதில் சொல்வது என்றும் தெரியவே இல்லை…
“உன் அப்பா கிட்ட கர்லா கட்டை இல்லையாடா?” என்று கேட்டான் நவநீதன்…
அர்ஜுன் சத்தமாக சிரிக்க , தனேஷ்வர் சிரிப்பை அடக்கிக் கொண்டே இல்லை என்று தலையாட்டினான்.
“அந்த தைரியம் தான். பேசாம நான் உங்க வீட்ல பிறந்து இருக்கலாம். அப்பாவாகிட்டு ஜாலியா தெரியுற… இப்படி ஒரு மேட்டரை நான் மிஸ்டர் சக்திவேல் கிட்ட சொல்லி இருந்தா என்ன நடந்து இருக்கும் மச்சான்?” என்று நவநீதன் கேட்க, “அவருக்கு முதல் டாக்டர் உனக்கு விஷ ஊசி போட்டு இருப்பார் டவ்” என்றான் அர்ஜுன்.
தனேஷ்வரோ, “எனக்கும் அப்பான்னா பயம்” என்று சொல்ல அவனை மேலிருந்து கீழ் பார்த்த அர்ஜுனோ, “பயந்தே நீ இந்தளவு பண்ணி இருக்கேன்னா , பயம் இல்லன்னா என்ன எல்லாம் பண்ணி இருப்ப” என்று கேட்க, “அது சும்மா மிஸ் ஆகி” என்று அவன் தடுமாற, “சரி சரி ஃப்ரீயா விடு” என்று சொன்ன அர்ஜுனோ, “கல்யாணத்துல ஃபன் பண்ணுறோம்… புரியுதா?” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, “அப்பா” என்று சொன்னபடி வந்து நின்றான் ஆரண்யன்.
“என்னடா??” என்று அர்ஜுன் கேட்க, “தனா சித்தப்பாவுக்கு என்ன பூ டேகேரேஷன்??” என்று கேட்டான்.
அர்ஜுன் விழி பிதுங்கி போக, “டேய் போடா… அப்புறம் சொல்றேன்” என்றான்.
“சொல்லுங்கப்பா அப்போ தான் போவேன்” என்றவனோ தனேஷ்வரிடம், “உங்களுக்கு என்ன பூ விருப்பம்.” என்று கேட்டான்.
“எதுக்குடா?” என்று கேட்டான் தனேஸ்வர்…
அவனோ, “நைட் கட்டிலில தூவுவாங்க தானே” என்று சொல்ல, நவநீதனுக்கு புரையேற, அவன் தலையில் தட்டிக் கொண்டே சிரிக்க ஆரம்பித்து விட, தனேஷ்வர் விழி பிதுங்கியவன், “என்ன அண்ணன் இது?” என்று கேட்டான்.
“ஏதாவது ஒரு பூவை சொல்லி அனுப்பி விடுடா, விட மாட்டான்” என்றான் அர்ஜுன் சங்கடமாக…
தலையை உலுக்கிய தனேஷ்வரோ, “ரோஜாப்பூ டா” என்று சொல்ல, “சேம் பின்ச்” என்று தனேஸ்வருக்கு கிள்ளி விட்டான் ஆரண்யன்…
“ஸ்ஸ், என்னடா கிள்ளுற?” என்று ஆரண்யன் கேட்க, “எனக்கும் அப்பா, ரோஜா பூ தான் தூவுறதா சொல்லி இருக்கார்” என்று சொல்லிக் கொண்டே, துள்ளி குதித்தபடி ஓடிச் செல்ல அவனை விழி பிதுங்க பார்த்தபடி நின்று இருந்தான் அர்ஜுன்…
அர்ஜுனை ஒரு மார்க்கமாக பார்த்த தனேஷ்வரோ, “நீங்க மார்டன் தான், ஆனா இந்தளவு மார்டன் எதிர்பார்க்கல” என்று சொல்ல, அர்ஜுனோ, “டேய் சும்மா இருடா, இவன் வளர்ந்து என்ன எல்லாம் பண்ணுவான்னு நினைக்க இப்போவே பதறுது” என்று சொல்ல, நவநீதனோ, “ரோஜாப்பூவோட தான் மச்சான் நீங்க அலைய வேண்டி இருக்கும்” என்று கிண்டலாக சொல்ல, “அடேய்” என்று அவன் தோளில் தட்டிய அர்ஜுனோ, “இவனை பேசாம உன் அண்ணன் கிட்ட தத்து கொடுத்துடவா? அவராச்சு, இவனாச்சு, அடிச்சுக்கட்டும்” என்று சொல்ல, “அப்போ ரோஜாப்பூ டெக்கரேஷன் பண்ணுறது யாரு? அப்படி எல்லாம் எஸ்கேப் ஆக முடியாது” என்று அவனை கலாய்க்க ஆரம்பித்து விட்டான் தனேஷ்வர்…