அத்தியாயம் 19

இதே சமயம் குளித்து விட்டு வந்த கஜனையே பார்த்து இருந்தாள் பல்லவி…

“என்னடி?” என்று கேட்டுக் கொண்டே, அவன் தலையை துவட்ட, அவளோ எழுந்து வந்து, அவன் முன்னே நின்றவள், “உங்கள ஹக் பண்ணனும் போல இருக்கு, ஆனா  முடியலையே” என்று சொல்லி தனது மேடிட்ட வயிற்றைப் பார்க்க, இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே,  “இன்னும் ரெண்டு மாசத்தில் ஆசை தீர கட்டி பிடிச்சுக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே, குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்…

பல்லவியோ, “அவ்ளோ தானா?” என்று கேட்டாள்.

“என்னடி வேணும்?” என்று கேட்டான்.

“மொத்தமா வேணும்” என்றாள் அவனையே பார்த்துக் கொண்டு…

அவள் தேவை புரிந்தது…

“இப்போவா?” என்றான் அவளது மேடிட்ட வயிற்றை பார்த்துக் கொண்டே…

“உங்களுக்கு சேஃப் ஆஹ் ஹாண்டில் பண்ண தெரியாதா என்ன?” என்று கண் சிமிட்டி கேட்க, அவனோ, “ஹாண்டில் தானே, பண்ணிடலாம்” என்று சொல்லிக் கொண்டே, அவள் கழுத்தை பற்றி, இதழில் இதழ் பதித்தவன் சட்டென விலகி, “எங்க நம்ம மூணு பேரும்?” என்றபடி நேரத்தைப் பார்த்தான்…

“வெளிய விளையாடிட்டு இருக்காங்க, நைட்ல வாய்ப்பே இல்லை” என்று அவள் சிரித்தபடி சொல்ல, அவனும் சிரித்துக் கொண்டே, அவனும் அவள் இதழ்களை கவ்விக் கொண்டான்…

வீடே கல கலவென இருந்தது…

சக்திவேலின் மொத்த குடும்பமும் வந்து சேர்ந்து இருந்தார்கள்…

மாடியில் அர்ஜுன், நவநீதன், ஜீவிதன், விஜய், தனேஷ்வர், கேசவன் என்று எல்லோரும் அங்கே தான் பேசிக் கொண்டு இருந்தார்கள். 

தனது அறைக்குள் இருந்து வெளியில் வந்த கஜனின் இதழ்களுக்குள் மென் புன்னகை தேங்கி நிற்க, அப்போது தான் ராம்குமாரும் மாடி ஏறி சென்றான்…

“என்னடா? எல்லாரும் மேலே தானா?” என்று கேட்டுக் கொண்டே, அவன் தோளில் கையை போட்டுக் கொண்டே, கஜனும் மேலே ஏறி சென்றான்…

இருவரையும் பார்த்த அர்ஜுனோ,  “இது யூத் க்ளப், ரெண்டு குழந்தைகளுக்கு மேல பெத்தவங்களுக்கு இங்க இடம் இல்ல” என்று சொல்ல, ஜீவிதனோ, “ரெண்டு பேரும் ரெஸ் ல முன்னாடி நிக்கிறாங்க அர்ஜுன், நம்ம விட கூடாது” என்று சொல்ல, “க்கும்” என்று சொல்லிக் கொண்டான் அர்ஜுன்…

“டேய் கொஞ்சம் சும்மா இருங்கடா” என்று சொன்னபடி அங்கே வந்து அவர்களுடன் அமர்ந்த கஜனோ, “நானும் யூத் தான் டா, ஓவரா பேசுனா, உன் பையனை கூப்பிட்டு விட்ருவேன்” என்று அர்ஜுனிடம் சொல்ல, அவனோ கையை கூப்பியவன், “நீங்க யூத் தான் ஒத்துக்கிறேன், என்னை இப்படி எல்லாம் பழி வாங்காதீங்க” என்று சொல்ல, எல்லோரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்…

கஜனோ, கேசவனிடம், “அப்புறம் உனக்கு எப்போ டா கல்யாணம்? நம்ம பக்கம் நீ மட்டும் தான் எஞ்சி இருக்க” என்று கேட்க, அவனோ, “பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க, யாரும் இருந்தா சொல்லுங்க, தாலி கட்ட நான் ரெடி” என்று சொன்னவனோ அர்ஜுனிடம் “அண்ணன் உங்களுக்கு ஒரு முறை பொண்ணு இருக்குல்ல” என்று கேட்டான்…

“என்னடா சுகன்யாவுக்கு ஏரியா போடுறியா?” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, “என் தங்கச்சிக்கு இவனா மாப்பிள்ளை? நான் சம்மதிக்க மாட்டேன்” என்றான் நவநீதன்…

“நீ ஏன் டா கழுத்து நரம்பு புடைக்க புடைக்க பேசுற?” என்று ராம்குமார் கலாய்க்க, கேசவனோ, “அவனுக்கு வயித்தெரிச்சல்” என்றான் சிரித்துக் கொண்டே…

கஜனோ, “சுகன்யா கிட்ட நம்பர் கேட்டனீ தானே” என்று நவநீதனிடம் கேட்க, தனேஷ்வரோ, “இதெல்லாம் வேற நடந்து இருக்கா?’ என்று கேட்டான்.

“டேய், அவ தங்கச்சி முறை டா, ஒரு பாதுகாப்பா இருக்கணும்னு கேட்டேன், உன் அக்கா கிட்ட சொல்லிடாதே” என்று நவநீதன் சொல்ல, அர்ஜுனோ, “பாசமலர் அண்ணன் பாரு” என்று கிண்டலடித்து விட்டு, கேசவனிடம், “அவளுக்கும் மாப்பிள்ளை தேடிட்டு தான் இருக்காங்க, அப்பா கிட்ட சொல்றேன்” என்று சொன்னான். 

கேசவன் மெலிதாக சிரித்துக் கொள்ள, “பாரேன், இப்போவே வெட்கப்படுறத?” என்று நவநீதன் சொல்ல, “கொஞ்சம் சும்மா இருடா” என்று சொல்லி சிரித்துக் கொண்டான் கேசவன்… 

இவர்கள் இப்படி பேசிக் கொண்டு இருக்க, கீழே பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். 

குளித்து விட்டு வந்த பல்லவி, கண்ணாடி முன்னே நின்று குங்குமம் வைத்துக் கொண்டு இருந்தாள்.

இதழ்களுக்குள் இன்னுமே புன்னகை… 

இத்தனை வருடங்கள் கடந்து, அவளுக்கும் கஜனுக்கும் இடையான காதலும் நேசமும் கூடியதே தவிர, கொஞ்சம் கூட குறையவில்லை…

இன்னுமே அவன் ஸ்பரிசிக்கும் போது, உண்டாகும் சிலிர்ப்பு அவளுக்கு ஆச்சரியம் தான்…

‘புது பொண்ணுன்னு நினைப்பு பல்லவி உனக்கு’ என்று தனக்கு தானே கிண்டலாக திட்டிக் கொண்டே வெளியே வர. அங்கே ராகவி, வந்தனா, நேத்ரா, சுகானா என்று எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்…

“தனிஷா மட்டும் மிஸ்ஸிங் ல” என்று சொன்னபடி பல்லவி அங்கே வந்து அமர, நேத்ராவோ, “நம்ம ரெண்டு பேருக்கும், அடுத்தடுத்த வாரம் டிலிவேரி டேட்” என்று சொன்னவளோ, அவள் வயிற்றை வருடிக் கொண்டே, “எப்படிக்கா, இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கீங்க, சத்தியமா ரொம்ப டயர்ட் ஆயிடுறேன் நான் லாம்” என்று சொன்னாள்.

ராகவியோ, “அது தான் நானுமே யோசிப்பேன் நேத்ரா… அர்ஜுன் அடுத்த குழந்தை வேணும்னு ஒரே அடம், நம்மளால முடியாதுன்னு சொல்லிட்டேன், எப்போவும் அண்ணியை சொல்லி தான் என்னை திட்டிட்டே இருப்பான், குழந்தை வேணும்னா இன்னொரு கல்யாணம் பண்ண சொல்லி இருக்கேன்” என்று சொல்ல,  எல்லோரும் சிரித்துக் கொண்டார்கள்…

சுகானாவோ, “அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாலும், ராகவின்னு சொன்னாலே, உருகிடுறானே” என்று சொன்னதுமே, ராகவியின் இதழ்களில் தன்னை அறியாமல் வெட்க புன்னகை…

“தனிஷா அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணி இருப்பா போல, அது தான் கிளம்பிட்டா” என்று வந்தனா சொல்லிக் கொண்டாள்.

இதே சமயம் தனேஷ்வருக்கு ஹன்சிகாவிடம் இருந்து மெசேஜ்…

“இப்போ வர்ற தனா?” என்று அவள் கேட்டு இருக்க, “சாப்பிட்டுட்டு கிளம்புறேன்” என்று சொன்னான் அவன்… 

அதனை தொடர்ந்து ஆண்கள் ஒன்றாக தான் மொட்டை மாடியில் அமர்ந்து சாப்பிட்டு இருக்க, நவநீதன் தான் ஜீப்பை எடுத்துக் கொண்டே, தனேஷ்வரை ஏற்றிக் கொண்டான்.

போகும் வழியில் தனேஷ்வரோ, “என்ன மச்சான், அக்கா கூட சண்டை போல” என்று சொல்ல, “இல்லையே” என்றான் நவநீதன் அவசரமாக…

“அவ முகத்தை பார்த்தாலே தெரிஞ்சுது” என்று தனேஸ்வர் சொல்ல, நவநீதன் பெருமூச்சுடன், “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா” என்று சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டினான். 

இப்படியான நிலைமை அவர்கள் வீட்டில் இருக்கும் போது, சக்திவேல் அனுப்பிய உணவை தனிஷாவோ சாப்பிட்டு விட்டு, ஹன்சிகாவுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்.

“எங்கடி இன்னும் தனாவை காணோம்?” என்று கேட்க, “இப்போ தான் கிளம்பி இருக்கேன்னு மெசேஜ் போட்டார் அண்ணி” என்றாள்.

தனிஷாவோ, “நான் இங்க வந்தா, அவன் அங்க கிளம்பி போய்ட்டான்… வரட்டும்” என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது, ஜீப்பின் சத்தம் கேட்டது…

ஜன்னல் அருகே வந்த தனிஷா எட்டிப் பார்த்தாள்.

ஜீப்பை ஓட்டி வந்தது என்னவோ நவநீதன் தான்…

அவனிலேயே அவள் விழிகள் படிந்து இருக்க, அவனும் அவளை ஒரு கணம் பார்த்து விட்டு தனேஷ்வரைப் பார்த்தவன், “சரிடா, அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல, தனேஷ்வரும் புன்னகையுடன் ஜீப்பில் இருந்து இறங்கிக் கொண்டான்…

அதனை தொடர்ந்து, அவன் ஜீப்பை எடுத்துக் கொண்டே கிளம்பி விட, தனிஷாவோ பெருமூச்சுடன், “என்னடா சாப்பிட்டியா? அத்தையோட சமையல் செமயா இருந்து இருக்குமே” என்று கேட்க, “ப்பா, செம்ம கட்டு கட்டிட்டேன்… அந்த வீட்ல இருந்தா ரெண்டு சுத்து பெருத்துடுவேன் போல, ஆனா உன் கிட்ட எந்த மாற்றமும் இல்லையே, இன்ஃபாக்ட் இன்னும் மெலிஞ்ச போல தான் இருக்க” என்றான்…

அவள் மனமோ, ‘சாப்பிட்ட சாப்பாட்டுக்கு மேலால உன் மச்சான் என்னை வேர்க் அவுட் பண்ண விடுறானே’ என்று நினைத்தாலும், அதனை சொல்ல முடியாமல், “என்னன்னு தெரியலையே” என்று மட்டும் சொல்லிக் கொண்டாள்.

அன்று இரவு மொட்டை மாடியில் படுத்து இருந்த நவநீதனுக்கும் தூக்கம் இல்லை, தனிஷாவுக்கும் தூக்கம் இல்லை. காரணமே இல்லாத ஒரு பிரிவும் கோபமும்…

மாறி மாறி அணைத்தே படுத்து பழகி விட்டார்கள்… 

தனிஷாவோ தலையணையை இறுக அணைத்துக் கொண்டே தூங்க முயன்றாள்.

இதே சமயம், ஆண்கள் எல்லாம் பேசி சிரித்தபடி மொட்டை மாடியில் படுத்து இருக்க, நவநீதன் அருகே தான் அர்ஜுன் படுத்து இருந்தான்…

அர்ஜுனின் கைவளைவுக்குள் ஆரண்யன் படுத்து இருந்தான்… அவன் அருகே தான் ராம்குமாரின் இரு மகன்களும் படுத்து இருந்தார்கள். 

“அப்பா, ஸ்டார்ஸ் எண்ணலாம் வாங்களேன்” என்று அவன் அழைக்க, “சரிடா, எண்ணலாம் வா” என்று சொல்லிக் கொண்டே, ஐவரும் சேர்ந்து நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்து விட்டார்கள்…

இதே சமயம், கஜனோ ராம்குமாரின் மகளை தூக்கி வைத்துக் கொண்டே, “வெய்ட் போட்டு இருக்கா டா, நீ தான் சும்மா கவலைபட்டுட்டே இருந்த” என்று ராம்குமாரிடம் பேச, யாழினியும் கிருஷ்ணியும் அகல்யாவும் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள்…

இதனிடையே விஷ்ணு, யாழினியன் குழலினியன் என்று எல்லோரும் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்… அவர்களை மேய்த்துக் கொண்டு இருந்தது ஜீவிதனின் மகன் தான்…

நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு இருந்த மூவரும் தூங்கி விட, அர்ஜுனோ, “அப்பாடா, மூணு பேர் தூங்கியாச்சு” என்றான்…

ராம்குமாரோ, “டெய்லி வந்து ஸ்டார்ஸ் எண்ணுடா, அவனுங்க ரெண்டு போரையும் தூங்க வைக்க நான் படாத பாடு படுறேன்” என்று சொல்ல, அர்ஜுனோ, “டெய்லி ஸ்டார்ஸ் எண்ண அங்க இருந்து கிளம்பி வர்றேன் அப்போ” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டான்…

இதனிடையே கஜனோ, “உன் பொண்ணும் தூங்கிட்டா” என்று சொல்லிக் கொண்டே, “சுகானா” என்று அழைக்க, அவளும் அங்கே தான் வந்தனாவுடன் பேசிக் கொண்டு இருந்தவள், “மாமா” என்றபடி வந்தாள்.

“உன்னோடு மூணு பேரும் தூங்கியாச்சு, நீ இனி ஃப்ரீ தான்” என்று சொல்ல, ராம்குமாரோ, “சரி நான் அப்போ கீழ போறேன்” என்று எழுந்து கொள்ள, அர்ஜுனோ, “ஹெலோ, இங்க நாங்க வந்து இருக்கோம், உங்களுக்கு என்ன கீழ வேலை?” என்று கிண்டலாக கேட்க, சுகானா சிரித்துக் கொண்டே, “இங்கயே தூங்குங்க” என்று சொன்னபடி மகளை தூக்கிக் கொண்டே இறங்கி விட்டாள்.

கஜனோ, “சரி நான் அப்போ நம்ம ஆட்களை அழைச்சிட்டு கிளம்புறேன்” என்று சொன்னவன், “யாழ், குழல்” என்று அழைக்க, அவர்கள் அங்கே ஓடி வந்தார்கள்…

வந்தனாவிடம், “விஷ்ணுவையும் தூக்கிட்டு போகவா?” என்று கேட்க, “சரி அண்ணா” என்றாள் அவள்…

அதனை தொடர்ந்து, “யாழிம்மா, அப்பா கூட வர்றீங்களா? இல்லை, விளையாட போறீங்களா?” என்று கேட்டான்…

அவளோ, “நான், கிருஷ்ணி, அகல்யா எல்லாரும் ஒண்ணா படுத்துக்கிறோம்பா” என்று சொன்னாள்.

“என் கூட தூங்கட்டும் அண்ணா” என்று சொன்ன ராகவியும், மூவரையும் அழைத்துக் கொண்டே இறங்கி விட்டாள்.

ராம்குமாரோ, “என்னை மட்டும் இங்க படுக்க வைக்கிற, அண்ணாவை கூப்பிட மாட்டியா?” என்று அர்ஜுனிடம் கேட்க, “அவர் எத்தனை பேரை ஹாண்டில் பண்ணுறார். அதனால அவர் விதிவிலக்கு, நீங்க ஜாலியா தானே தூங்க போறீங்க, எங்க கூட தூங்குங்க, இல்லன்னா உங்க ரெண்டு சிங்க குட்டிகளையும் எழுப்பி விட்டுடுவேன்” என்றான்.

“அத மட்டும் பண்ணிடாதே, நான் இங்கேயே தூங்கிடுறேன்” என்று சொல்லிக் கொண்டே, அவன் அங்கே படுத்துக் கொள்ள, விஜய்யோ, அங்கே தயங்கி நின்ற வந்தனாவை பார்த்து விட்டு, குரலை செருமினான்…

அர்ஜுனோ, “அண்ணன் நீங்க போங்க, நாங்க ஒன்னும் சொல்லல்ல, வந்தனா நிறைய நேரமா உங்களையே பார்த்துட்டு நிக்கிறா” என்று சொல்ல, எங்கே என்று இருந்து இருப்பான் போலும், “தேங்க்ஸ் டா” என்று சொல்லி விட்டு அவன் கிளம்பி விட்டான்…

ஜீவிதனோ, “நான் போகலாம் ல அர்ஜுன்” என்று கேட்டுக் கொண்டே ராம்குமாரை கிண்டலாக பார்க்க, அவனோ, “நேத்ரா ப்ரெக்னன்ட் என்கிறதால உனக்கும் விலக்கு டா” என்று சொல்ல, அவனும், “என்ஜாய் ராம்” என்று சொல்லி விட்டு கீழிறங்கி விட்டான்.

ராம்குமாரோ, “அநியாயம் பண்ணுறீங்க டா, நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?” என்று கேட்க, நவநீதனோ, “எனக்கு துணை வேணாமா? இங்கேயே படுங்க” என்றான்…

“டேய், உன் பொண்டாட்டி அங்கே, நீ தனியா படுக்கிற, நான் ஏன் டா?” என்று கேட்க, “அதெல்லாம் தெரியாது படுங்க” என்று சொல்ல, அங்கே தனியாக வானத்தைப் பார்த்தபடி நின்ற கேசவனோ, “நானும் இப்படி எல்லாம் எப்போ பேசுவேன்னு ஆசையா இருக்கு” என்றான்.

நவநீதனோ அர்ஜுனிடம், “பாவமா இருக்கு மச்சான், சீக்கிரம் சுகன்யாவை செட் பண்ணிடுங்க” என்று சொல்ல, “அப்பா கிட்ட சொல்லிட்டேன் டா, சீக்கிரம் ஜாதக பொருத்தம் பார்க்க சொல்லிடலாம்” என்று சொல்ல, “அவ இப்போ எப்படி இருப்பா, பார்த்து நிறைய நாள் ஆச்சு” என்றான்…

“கல்யாணத்துக்கு வருவாங்க, நேர்ல பார்த்துக்கோ” என்று அர்ஜுன் சொல்ல, அவனும் வெட்கப் பட்டு சிரித்துக் கொண்டான்…

“மணிமேகலைக்கு வெட்கத்தைப் பாரேன்” என்று ராம்குமார் கலாய்க்க, “சும்மா இருங்க மச்சான்” என்று சொல்லிக் கொண்டே,  அவனும் வரிசையில் படுத்துக் கொண்டான்.

இப்படியே எல்லோரும் தூங்கிக் கொண்டு இருக்க, “ஐயோ அம்மா, டேய் விடுடா” என்று நடுசாமத்தில் கத்திக் கொண்டே பதறி எழுந்து அமர்ந்து இருந்தது என்னவோ அர்ஜுன் தான்…

அவனுடன் சேர்ந்து நவநீதனும் எழுந்து அமர்ந்தவன், அர்ஜுனை அதிர்ந்து பார்க்க, அர்ஜுனோ அவனை பார்த்து விட்டு, தனது கழுத்தடியில் இருந்த அவன் பற்தடத்தை வருடிப் பார்த்தான்…

நவநீதனுக்கு எங்காவது ஒளிந்து விடலாம் என்கின்ற எண்ணம் தான்…

இதனிடையே சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்து அமர்ந்து வேறு விட்டார்கள்…

ராம்குமாரோ, “என்னடா?” என்று கேட்க, நவநீதன் கண்களால் இல்லை என்று தலையாட்ட, அர்ஜுனோ, “ஒன்னும் இல்லை, ஏதோ கனவு” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் படுத்தவன், “காஜி பய, இந்த தலையணையை தாண்டி நீ வர கூடாது” என்று ரகசியமாக சொல்லி, தலையணையை தூக்கி இருவரின் நடுவே வைத்து இருந்தான் அர்ஜுன்…

நவநீதனோ, “தேங்க்ஸ்” என்று சொல்லி அர்ஜுனை சுரண்ட, “கொன்னுடுவேன், டோன்ட் டச் மீ” என்று சொல்லிக் கொண்டே விலகிப் படுத்தான் அர்ஜுன்… 

நவநீதனுக்கு இதழ்களுக்குள் வெட்கமும் சிரிப்பும் கலந்து வர, ‘சொதப்பிட்டேன்’ என்று நினைத்தபடி தலையணைக்குள் முகம் புதைத்துக் கொண்டான். 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top