அத்தியாயம் 20

அடுத்த நாள் காலையில் நவநீதன் கண்களை திறந்த நேரம் அர்ஜுன் அங்கே அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டு இருந்தான்…

நவநீதனுக்கோ அர்ஜுனை பார்க்க சங்கடம்…

அப்படியே நழுவி அங்கே உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த ஜீவிதனை நோக்கி செல்ல முயல, “டேய் இங்க வாடா” என்று அழைத்தான் அர்ஜுன்…

பிடரியை வருடிக் கொண்டே, “என்ன மச்சான் காஃபியா?” என்று தன்னை சகஜமாக்க முயன்றபடி அர்ஜுன் அருகே அமர, அவனோ, “புதுசா கல்யாணம் ஆனவன் பக்கத்துல படுத்தது என் தப்பு தான்… என்னடா இது? இப்படி கடிச்சு வச்சு இருக்க… பல்லா இது?” என்று கேட்க, அவனும், அர்ஜுனின் கழுத்தில் இருந்த பற்தடத்தை ஆராய்ந்து கொண்டே, “ரொம்ப ஆழமாயிடுச்சோ?” என்று கேட்டான்…

அப்போது தான் அர்ஜுன் நவநீதனின் கழுத்தில் இருந்த டாட்டூவை கவனித்தான்..

“நேத்தே கேட்கணும்னு நினச்சேன், இது பார்த்தா பல்லு பதிஞ்ச போல இருக்கே, என்னடா டிசைன்?” என்று கேட்க, “ஷ்ஷ்” என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு சொன்ன நவநீதனோ, “பல்லு தான், ஆனா யாருக்கும் தெரியாது” என்றான்.

“அடப்பாவி” என்று சொன்ன அர்ஜுன் நிஜமாகவே அதிர்ந்து விட்டான். 

“பேசாம நீங்களும் என் பல்லை டாட்டூ போட்டுக்கோங்களேன்” என்றவனை முறைத்தவன், “பொண்டாட்டி பல்லை போட்டா கூட நியாயம், உன் பல்லை போட்டு நான் என்னடா பண்ணுறது?” என்று கேட்க, நவநீதனோ சிரித்துக் கொண்டே, “அன்பு மச்சான் அன்பு” என்றான்…

அர்ஜுனோ, “ரொம்ப தான்” என்று சொல்லிக் கொள்ள, அதனை தொடர்ந்து எல்லோரும் சிரித்து பேசிக் கொண்டே கீழிறங்கி போனார்கள்…

அர்ஜுனோ குளித்து விட்டு, இடையில் டவலுடன் வெளியே வந்த நேரம், அங்கே தான் ராகவி நின்று தலையை வாரிக் கொண்டு இருந்தாள். 

அவளோ அர்ஜுனைப் பார்த்து, “நேத்து மொட்டை மாடில செம ஜாலி போல” என்று சொல்ல, “ஏன்டி பொறாமை படுற?” என்று அவன் சிரித்தபடி கேட்டுக் கொண்டே, தலையில் கையினால் துவட்ட, அவள் கண்ணில் அவன் கழுத்தில் இருந்த சிவந்த தடம் தென்பட்டது…

புருவத்தை ஏற்றி இறக்கியவள், “என்ன இது? பல்லு பட்ட காயம் போல இருக்கு, நான் கடிக்கலையே, யார் கடிச்சா, ஆரண்யானா? அவனுக்கு தான் கடிக்கிற பழக்கம் இருக்கு, இப்போ இல்லன்னு நினைச்சேன், திரும்ப கடிச்சு இருக்கானா? அவனை” என்று திட்டிக் கொண்டே நகரப் போக, அவள் கையை எட்டி பற்றி பிடித்தவன், “சும்மா இருடி, அவன் இல்ல” என்றான்.

“அப்போ யாரு?” என்றாள் இடையில் கையை வைத்துக் கொண்டே…

“ஆஹ் உன் தம்பி தான்” என்றபடி, அவள் அணிந்து இருந்த ஷாலினால் தலையை துவட்டினான்.

அவள் வாயில் கையை வைத்தவளோ, “அவனா?” என்று கேட்க, “புதுசா கல்யாணம் ஆனவனை  பிரிச்சு வச்சா அவனும் என்ன பண்ணுவான், நல்ல வேளை என் கற்பு தப்பிடுச்சு” என்று சொல்ல, “ச்சீ, என்ன பேச்சு இது” என்றவளோ, ஒரு கணம் நிறுத்தி, “கற்பு இருக்கா என்ன? அது தான் ஆல்ரெடி பறி போயிடுச்சே” என்றாள். 

அவனோ, “சரி பறிபோன உன் கிட்டயே திரும்ப பறி கொடுக்க நினைக்கிறன்” என்று சொல்லிக் கொண்டே, அவள் கழுத்தை பற்றி, இதழில் இதழ் பதிக்க, “அம்மா” என்று அழைத்துக் கொண்டே, அவர்கள் அறைக் கதவு தட்டப்பட்டது. 

“வந்துட்டான் டா என் வில்லன்” என்று சொன்ன அர்ஜுன், ஷேர்ட்டை போட்டு ஆயத்தமாக, ராகவியோ சிரித்துக் கொண்டே, கதவை திறந்தவள், “என்னடா?” என்று கேட்டாள்.

“அம்மா, அகல்யா என் தங்கச்சி தானே, யாரை பிடிக்கும்னு கேட்டா என்ன தானே சொல்லணும், யாழினியை சொல்றாம்மா, அப்படியே அவ பின்னாடியே போறா, எனக்கு அப்படியே வயிறு பத்தி எரியுது” என்று சொல்ல, ராகவி அர்ஜுனை பார்த்தவன், “உங்க ஜீன் ரொம்ப ஸ்ட்ராங் போல அர்ஜுன், என் ஜீன் இவன் கிட்ட இல்லையே” என்று சொல்ல, அர்ஜுனோ, “கொஞ்சம் சும்மா இருடி” என்று சிரித்தபடி சொல்லி விட்டு, ஆரண்யனிடம், “நீ அவ கூட விளையாடல தானே, அப்புறம் அவளுக்கு நேத்து அடிச்ச தானே… அப்புறம் எப்படி உன்னை பிடிக்கும்னு சொல்லுவா? நீ அன்பா இரு, அப்போ சொல்லுவா” என்று சொல்ல, அவனோ, “எனக்கு இப்போ கோபமா வருதே” என்றான்…

“தண்ணியை குடிடா, கோபம் போயிடும்” என்றான்…

“ஐயோ அப்பா” என்று சொல்லிக் கொண்டே, அவன் வெளியேற, ராகவி சத்தமாக சிரித்துக் கொள்ள, அர்ஜுனோ, “நல்ல காலம் அகல்யா உன்னை போல” என்று பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டான்.

அதனை தொடர்ந்து, அன்று வீரராகவன் நெடுஞ்செழியன் என்று எல்லோருமே குடும்பத்துடன் சக்திவேல் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்… 

தனிஷாவும் ஹன்சிகாவும் வரவில்லை…

ஹன்சிகாவை அழைத்து வருவது இப்போது சரியாக இருக்காது என்று அவள் நின்று இருக்க, அவளுக்கு துணையாக தனிஷாவும் நின்று இருந்தாள்.

பல்லவியோ, “தனிஷா எங்க?” என்று தனேஷ்வரிடம் கேட்க, “ஹன்சாவுக்கு துணையா நிக்கிறா” என்று சொல்லிக் கொண்டான்… 

நவநீதன் ஒரு நாள் தான் தனிஷாவை பார்க்கவில்லை…

அவனுக்கோ என்னவோ போல .இருந்தது…

 அவனுக்கு  மட்டும் அல்ல, தனிஷாவுக்கும் தான்… 

நேற்று  ஏதோ உணர்ச்சிவசப்பட்டு என்னென்னவோ பேசி விட்டாள்.

இப்போது அவனைப் பார்க்க வேண்டும் போல, அணைக்க வேண்டும் போல, முத்தமிட வேண்டும் போல என்று என்னென்னவோ உணர்வுகள்…

அவளுக்கும் மட்டும் அல்ல, அவனுக்கும் தான்…

அடுத்தவர் பேசட்டும் என்று இருவருமே உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டார்கள்…

இருவருக்குமே கல்யாண வேலைகள் இருந்ததால் அதில் கவனத்தை திருப்பிக் கொண்டார்கள்…

இப்படியே நாட்கள் நகர, திருமணமும் நெருங்கி விட்டது.

அடுத்த நாள் மெகந்தி, அதற்கு அடுத்த நாள் திருமணம் என்கின்ற நிலை தான். 

நவநீதனுக்கு தூக்கமே வரவில்லை… அன்று மழை வேறு… எல்லோரும் வீட்டுக்குள் தத்தமது அறைக்குள் தான் படுத்து இருந்தார்கள். 

புரண்டு புரண்டு படுத்து தோற்றுப் போனான்…

அலைபேசியை எடுத்துப் பார்த்தான். ஒரு மெசேஜ் கூட இல்லை…

‘திமிர் பிடிச்சவ’ என்று திட்டிக் கொண்டே, எழுந்தவன் நேரத்தைப் பார்த்தான். 

பன்னிரண்டு மணியாகி இருந்தது…

“தூங்கி இருப்பாளா? இல்லையான்னு தெரியலையே” என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்த நேரம், எல்லோரும் தூங்க சென்று இருந்தார்கள்…

யாரும் இருக்கவில்லை…

‘எல்லாரும் தூங்கிட்டாங்க, இல்லன்னா கேள்வி கேட்டு கொன்னு இருப்பாங்க’ என்று நினைத்தபடி, ஜீப் அருகே சென்றவனோ, “ஜீப் ஸ்டார்ட் பண்ணுனா கேட்டிடும்” என்று நினைத்தவனுக்கு அங்கே நின்ற சைக்கிள் கண்ணில் பட்டது…

‘மழையா வேற இருக்கு, பரவாயில்ல, சைக்கிள் ல போவோம்’ என்று நினைத்தபடி, சைக்கிளை மழைக்குள் ஓட்ட ஆரம்பித்து விட்டான்.

ஒரு வழியாக தோப்பு வீட்டையும் அடைந்து விட்டான்.

அவன் அணிந்து இருந்ததோ வேஷ்டி மற்றும் கட்டம் போட்ட சட்டை. 

தொப்பலாக நனைந்து இருந்தான். 

அங்கே ஓரமாக இருந்த மரத்தடியில் நின்று, தனிஷாவுக்கு மெசேஜ் அனுப்பினான்…

“வெளிய வாடி” என்று.

அவள் தூங்காமல் தான் விழித்து இருந்தாள்.

அவன் அணைப்பில்லாமல் தூக்கம் வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

அலைபேசியை எடுத்துப் பார்த்தான்…

நவநீதனின் நம்பரில் இருந்து ஒரு மெசேஜ்…

முகம் எல்லாம் அப்படி ஒரு பரவசம்.

‘வெளிய எதுக்கு?’ என்று நினைத்துக் கொண்டே, மெதுவாக எழுந்தவள். அடி மேல் அடி வைத்து ஹாலுக்குள் வந்தாள்.

எல்லோரும் தூக்கம் என்பதால் அவள் வெளியேறியது யாருக்கும் தெரியாது…

ஜன்னல் ஊடு எட்டிப் பார்த்தாள்.

மரத்தடியில் தலையை கோதிக் கொண்டே நின்று இருந்தான்…

‘இந்த மழைக்குள்ள வந்திருக்காரே, அதுவும் சைக்கிள் ல’ என்று நினைத்தபடி, குடையை எடுத்தவள், அதனை பிடித்துக் கொண்டே, வெளியேறி அவன் அருகே வந்து, “மழைக்குள்ள என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டு முடிக்க முதல், அவளை இழுத்து அணைத்து, இதழுடன் இதழ் பதித்துக் கொள்ள, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது…

கையில் இருந்த குடையும் விழுந்து விட, அவளும் மழையில் நனைய ஆரம்பித்து விட்டாள்.

அவள் அணிந்து இருந்த சுடிதாரும் மொத்தமாக நனைந்து விட்டது.

ஆழ்ந்த முத்தமிட்டு விலகியவன், அவள் விழிகளை பார்த்துக் கொண்டே, “நீ இல்லாம தூக்கமே வர மாட்டேங்குது, உனக்கு அப்படி ஒரு ஃபீல் இல்லையா என்ன?” என்று கேட்க, “யாரு அப்படி சொன்னது, கால் பண்ண இவ்ளோ நாள் ஆச்சு என? டெய்லி பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்துட்டே இருப்பேன்” என்றாள்.

“ஏன் நீ பண்ணுறதுக்கு என்ன?” என்று எகிறினான்…

“அங்க இருக்கிற ஈகோ தான் இங்கயும் இருக்கு” என்றாள் அவன் அணைப்பில் நின்றபடி.

“சரி சைக்கிள் ரைட் போகலாமா என்ன?” என்று கேட்டாள்.

“சைக்கிள் ரைட் ஆஹ்?” என்று அவள் அதிர, “ஆமாடி, என் பொண்டாட்டி” என்றான்…

“மழைக்குள்ளயா?” என்று அவள் மீண்டும் அதிர, “அது தான் ரெண்டு பேரும் மொத்தமா நனைச்சிட்டோம் ல” என்றான். 

அவளும் சிரித்துக் கொண்டே, “ஓகே” என்று சொல்ல, அவளை சைக்கிளின் முன்னால் ஏற்றிக் கொண்டே, சைக்கிளை ஓட்ட ஆரம்பித்து விட்டான்.

மழை அடித்துப் பெய்தது…

குளிர் காற்று ஜில்லென்று வீசியது.

“குளிருது நவா” என்று சொல்லிக் கொண்டே, அவனை நெருங்கி அமர, அவனோ, அவள் கழுத்துக்குள் முகம் புதைத்து முத்தமிட்டு விட்டு சைக்கிளை மிதித்தான்…

அர்த்த ராத்திரியில் மழைக்குள் புது உணர்வு தான் இருவருக்கும்…

அவன் வண்டி கரும்பு காட்டுக்கு அருகே வந்து நின்றது…

அவளோ, “பயம் இல்லையா நவா?” என்று கேட்க, “பயந்தா லவ் பண்ண முடியுமா?” என்று கேட்டுக் கொண்டே, அவள் கையை பற்றியவன், அங்கே இருந்த மரத்தடிக்கு சென்றான்…

சுற்றி யாரும் இல்லை…

இருள் நேரம்…

மழையின் ஓசையை தவிர எந்த ஓசையும் கேட்கவில்லை….

அவளை மரத்தில் சாய வைத்துக் கொண்டே, ஒற்றைக் கையை மரத்தில் ஊன்றியவன், “உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் டி” என்று சொன்னான்.

அவளும், “நானும் நவா” என்று சொல்ல, அவள் கன்னத்துடன் கன்னம் வைத்து உரசியவன், “மொத்தமா வேணும்னு தோணுதே” என்றான்.

“இப்போவா?’ என்றாள் விழிகள் விரிய, “ஆமாடி என் அழகிய லைலா” என்று சொல்லிக் கொண்டே, அவள் கழுத்தைப் பற்றி இதழ்களை ஆழ்ந்து கவ்விக் கொண்டான்…

அவளும் அவன் முத்தத்துக்கு இணையாக முத்தமிட, இருவரின் மேனியும் பசை போல ஒட்டிக் கொண்டது…

அவன் கரமோ தடையின்றி அவள் மேனி முழுவதும் வலம் வர, சட்டென அவளை அணைத்து தூக்கிக் கொண்டே,  கரும்பு காட்டுக்குள் சென்றான்.

அவன் இதழில் இருந்து இதழ்களை அகற்றியவளோ, “எனக்கு இந்த சேத்துல படுக்க முடியாது” என்றாள், அவனோ இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே, “சரி நான் படுக்கிறேன், நீ எல்லாம் பார்த்துக்கோ” என்று சொல்ல, “நவா” என்று அவள் மார்பில் அடைக்கலமாகிக் கொண்டாள்.

நேரங்கள் நகர்ந்தன…

சற்று நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தார்கள்…

மேனி எல்லாமே சேறு…

“சார் என்ன சொன்னீங்க? என்ன பண்ணி வச்சு இருக்கீங்க?” என்று கேட்க, அவனோ கீழ் அதரங்களை கடித்து சிரித்துக் கொண்டே, “அது தான் மேடம் டயர்ட் ஆயிட்டிங்களே, நான் தானே முடிச்சாகணும்” என்று சொன்னவனோ  மேலும், “பக்கத்துல வாட்டர் பம்ப் இருக்கு, சின்ன வயசுல உள்ளுக்குள்ள நாங்க எல்லாரும் சேர்ந்து குளிச்சு இருக்கோம், நம்ம இன்னைக்கு குளிக்கலாமா?” என்று கேட்டான்…

“நடு சாமத்துல, இந்த மழைல எப்படி எல்லாம் ஆசை வருது உங்களுக்கு” என்று கேட்டு சிரித்தவளுக்கும் அதெல்லாம் பிடித்து இருந்தது…

சிங்கப்பூரில் வளர்ந்தவளுக்கு இப்படியான அனுபவங்கள் இல்லை…

அவளுக்கும் இயற்கை என்றால் கொள்ளை பிரியம்… 

ஆசையாகவும் இருக்க, “சேறா இருக்குடி, குளிச்சிட்டு போகலாம்” என்றான்…

அவனை செல்லமாக முறைத்தவளோ, “ஓகே” என்று சொல்ல, அவளை அழைத்துக் கொண்டே, அங்கே சென்றான்…

நீர் தொட்டி நடுவே இருக்க, வாட்டர் பம்பை திறந்து விட்டான்…

அவளோ, “சத்தம் கேட்டு யாரும் வந்துடாம” என்று சொல்ல, அவனும், “அது தான் மழை பெய்யுதுல” என்று சொல்லிக் கொண்டே, உள்ளே இறங்கினான்…

அவளும் அவன் கையை பற்றிக் கொண்டே இறங்கினாள்.

உள்ளே வந்து விட்டார்கள்…

அவளது கழுத்து வரை நீர் இருந்தது. 

அவன் உள்ளே மூழ்கி எழுந்தான். அவளும் மூழ்கி எழுந்து கொள்ள, “ட்ரெஸ் ல இருக்கிற சேறு போயிடுச்சி, சோ கழட்டிடு” என்றானே பார்க்கலாம்…

அவள் இதழ்கள் அதிர்ச்சியில் அதிர்ந்து விரிய, சட்டென அதில் முத்தமிட்டு விலகியவன், “கழட்டுடி” என்றான் மோகம் கலந்த குரலில்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top