அவளோ, “நவா ப்ளீஸ்” என்று ஆரம்பிக்க, அவளை இழுத்து, அணைத்தவன் அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்தான்…
முரண்டு பிடித்தாள்,
முத்தமிட்டான்…
அவளது ஆடைகளுடன் அவன் ஆடைகளும் தொட்டிக்கு வெளியே கொண்டு வந்து விழுந்தன…
“என்ன பண்ணி இருக்கீங்க நவா?” என்று கேட்டுக் கொண்டே, தன்னை மறைத்துக் கொண்டவளின் கையை பற்றி பிடித்து, தொட்டியின் சுவரில் அவளை மொத்தமாக சாய வைத்தவன், அவள் அதரங்களை கடித்து விடுவித்தபடி, “திரும்ப ஆரம்பிக்கலாமா?” என்று அவள் காதினுள் கேட்டான்.
அவளுக்கோ வெட்கம் வேறு…
இருவரும் நீருக்குள் இருக்கும் நிலை அப்படி அல்லவா?
“இன்னைக்கு ரொம்ப ஹோர்னியா இருக்கீங்க” என்றாள்.
“முடியலடி, நான் என்ன பண்ணட்டும்?” என்று கேட்டவனோ, அவள் காதுக்குள், “காதல் யானை வருகுது ரெமோ” என்று படித்தான்.
“நவா” என்று அவள் சிணுங்க, அவளை மறுபக்கம் திருப்பி, அவள் கழுத்துக்குள் முகம் புதைத்து, மேனியை வருடிக் கொடுக்க, அவளோ, மொத்தமாக கிறங்கிப் போனாள்.
அதன் பிறகு, அவன் நினைத்தது எல்லாமே நடந்தேறியது.
அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி இரண்டரை மணி நேரம் கடந்து இருக்கும்…
மழையும் விட்டு இருந்தது…
“இப்போ எத்தனை மணி இருக்கும்” என்று கேட்டாள் அவள்…
“மூணு மணி இருக்கும் டி” என்றான் அவன்…
“தேங்க்ஸ் நவா, செம்ம ஃபீல், அதுவும் இந்த நேச்சர் ல ஆதாம் ஏவாள் போல” என்றாள் அவன் இதழில் இதழ் பொருத்தி, அவனும் அவள் இதழ்களை கவ்வி விடுவித்தவன் சிரித்துக் கொண்டே, “இப்படி உன்ன விழுந்து விழுந்து லவ் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லடி” என்றான்.
அவளும் வெட்கத்துடன் அவன் சைக்கிளில் ஏறிக் கொள்ள சைக்கிளும் புறப்பட்டது…
தோப்பு வீட்டை நெருங்கிய சமயம், எல்லா லைட்டுகளும் போடப்பட்டு இருந்தது…
“என்ன லைட் எல்லாம் போட்டிருக்காங்க, நம்மள தேடி இருப்பாங்களோ?” என்று தனிஷா அதிர, நவநீதனோ பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தான்…
அது உயிரற்று கிடந்தது…
‘ஷீட்’ என்று வாய்க்குள் முணுமுணுத்தவனுக்கு வேறு வழி இல்லை. வண்டியை வளாகத்தினுள் விட்டான்…
அங்கே வரிசையில் ஜீப்புகள் வேறு…
அர்ஜுன், விஜய், கஜன் என்று எல்லோரும் நின்று இருந்தார்கள்…
‘நாசமா போச்சு’ என்று அவன் வாய்க்குள் முணுமுணுக்க, தனிஷாவின் விழிகள் கீழே விழுந்து விடும் அளவுக்கு விரிந்து கொண்டன…
இருவரும் தொப்பலாக நனைந்து இருந்தது எல்லோருக்கும் தெரிந்தது…
வாசலில் வீரராகவன், நெடுஞ்செழியன், தனேஷ்வர், அக்ஷயா, கீர்த்தனா என்று அவள் வீட்டினரும் நின்று இருந்தார்கள்…
“என்ன சீன்னு தெரியலையே” என்று நவநீதன் முணுமுணுக்க, கஜனோ, “இந்த நேரத்துல, எதுக்கு அழைச்சுட்டு போன? இன்ஃபோர்ம் பண்ணி இருக்கலாம் ல, மாமா பயந்தே போய்ட்டார்… உனக்கு ஃபோன் எடுத்தா, ஃபோன் ஆஃப்” என்று சீறினான்.
“அதுவே ஆஃப் ஆயிடுச்சு” என்று தயக்கமாக சொன்னான்…
அர்ஜுனோ, “சொல்லிட்டு போடா, அவர் பயந்து கால் பண்ணுனதும் உன்னை தேடுனோம், நீயும் இல்லை சைக்கிளும் இல்லை… நீ தான் அழைச்சு போய் இருப்பன்னு தெரியும்… ஆனாலும் சொல்லிட்டு போ” என்று சொன்னான்…
விஜய்யோ, “ஆனாலும் இந்த நேரத்துல எதுக்கு வெளிய சுத்திட்டு இருக்க, தனிஷாவுக்கு தான் தெரியாது… உனக்கு தெரியும்ல, பாம்பு, யானைன்னு வயல் பக்கம் எல்லாம் திரியும்… சேஃப் இல்ல தானே” என்றான்…
யானை என்று சொன்னதுமே தனிஷாவுக்கு சிரிப்பு… கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொள்ள, நவநீதனோ, ‘சும்மா இருடி’ என்று சொல்லி விட்டு தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த வீரராகவனைப் பார்த்தவன், “சும்மா அவுட்டிங் மாமா” என்றான் தட்டு தடுமாறி…
அவரோ, “ஈரமா இருக்கீங்க ரெண்டு பேரும், உள்ளே வந்து ட்ரெஸ் மாத்திட்டு போங்க” என்றார்.
நவநீதனோ, “இல்ல நான் வீட்டுக்கு போய் பார்த்துகிறேன்” என்று சொல்ல, வீரராகவனோ, “அவளையும் அழைச்சுட்டு போங்க, இப்படி திருட்டு தனமா பார்க்கணும்னு என்ன அவசியம்?” என்று கேட்டார்…
அர்ஜுனோ, “அண்ணன் போல தம்பி, அதுல என்ன தப்பு?” என்று கேட்க, அவனை பார்த்த கஜனோ, “இப்போ யாரும் ஏதும் கேட்டாங்களா டா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
தனிஷாவுக்கோ சங்கடம்…
தயங்கி தயங்கி செல்ல, அக்ஷயவோ, “தலைமுடி எப்படி நனைஞ்சு இருக்கு பாரு, சீக்கிரம், குளிச்சுட்டு ட்ரை பண்ணிட்டு மாப்பிள்ளை கூட கிளம்பு” என்று சொன்னவரோ, அங்கே நின்றவர்களும், “டீ போடுறேன், குடிச்சிட்டு போங்க” என்றார்.
“சரி அத்தை, அப்பா கிட்ட சொல்லிட்டு வர்றேன், டென்ஷன் ஆஹ் இருப்பார்” என்று சொல்லி விட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டே, சக்திவேலுக்கு அழைத்தான் கஜன்…
இதே சமயம் அர்ஜுனோ, “சரி வாடா உள்ளே போகலாம்” என்று சொல்லி நவநீதனை அழைத்து செல்ல, தனேஷ்வரோ, “என் ட்ரெஸ் இருக்கு, வாங்க” எனறு அவனை அழைத்துக் கொண்டே அறைக்குள் சென்றான்…
இதே சமயம் அக்ஷயா எல்லோருக்கும் டீ போட்டு கொடுக்க, கஜனோ, நேரேத்தைப் பார்த்து விட்டு, “மூணு மணிக்கு உட்கார்ந்து டீ குடிச்சிட்டே பேசுற குடும்பம் நம்ம எல்லாருமா தான் இருப்போம்” என்று சொல்ல, சத்தமாக சிரித்த வீரராகவனோ, “இது கூட நல்லா தான் இருக்கு, ஒரு ஸ்ட்ரெஸ் லைஃப் ல இருந்து ரிலீஸ் ஆன ஃபீல், இங்கேயே வந்து செட்டில் ஆயிடலாமா செழியா?” என்று கேட்க, அவனும், “நானும் அதான் வீரா யோசிச்சேன், செமயா இருக்குல்ல” என்று சொல்லிக் கொண்டார்.
இவர்கள் இப்படி பேசிக் கொண்டு இருக்க, குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டு இருந்த தனிஷாவிடம், “அண்ணி, இந்த நேரத்துல எல்லாம் ரொமான்ஸ் ஆஹ்?” என்று கேட்க, அவள் கன்னங்கள் சிவக்க, “ஜாலியா தான் இருந்திச்சு, ஜுரம் வரலைன்னா ஓகே” என்றபடி உடைகளை அடுக்கி வைத்தாள்.
நவநீதனும் குளித்து விட்டு தனேஷ்வரின் ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷேர்ட்டை அணிந்து கொண்டே வந்தவன், “அவன் கிட்ட எல்லாமே பிராண்டட் ஆஹ் தான் இருக்கு” என்று சொல்ல, தனேஷ்வரோ, “அப்படியே வாங்கி பழகிடுச்சு” என்றான்.
“பழகிடுச்சு இல்ல, அவங்க அப்பா பழக்கி விட்டுட்டார்” என்று அக்ஷயா சொல்ல, “இப்போ யாரும் ஏதும் கேட்டாங்களா?” என்று வீரராகவன் சிரித்துக் கொண்டே கேட்டார்.
அதனை தொடர்ந்து எல்லோரும் சிரித்துப் பேசி விட்டு, தனிஷாவை அழைத்துக் கொண்டே புறப்பட்டு விட்டார்கள்…
கஜன் ஜீப்பை ஓட்டிக் கொண்டு இருக்க, அவன் அருகே தான் விஜய் நின்று இருக்க, பின்னால் அர்ஜுன், அவனுக்கு அருகே நவநீதன் ஜன்னல் ஓரத்தில் தனிஷா என்று அமர்ந்து இருந்தார்கள்…
அர்ஜுனோ, “இங்க பாரும்மா, இனி இப்படி எல்லாம் அவனை விட்டுட்டு போகாதே, சுத்தி இருக்கிறவங்களுக்கு எவ்ளோ சேதாரம் பார்த்தியா?” என்று கேட்க, நவநீதனோ, “மச்சான்” என்றான் இழுவையாக…
தனிஷாவுக்கு சங்கடமாக இருந்தது…
ஆனாலும் இன்னுமே அவர்களது அந்த இனிமையான நினைவுகள் மனதில் ஓடிக் கொண்டு தான் இருந்தது…
கஜனோ, “வாழ்க்கையை ரசிக்கிறது தப்பில்லைடா, சேஃப்டியை கொஞ்சம் பார்த்துக்கோ…” என்றான் அக்கறையாக…
நவநீதனும், “சரி அண்ணா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அர்ஜுன், “இவனால ரொம்ப பாதிக்கப்பட்டது நான் தான்” என்றான்…
“என்னடா அது? நாங்களும் தான் நடு இரவுல உன் கூட வந்து இருக்கோம், உனக்கு என்ன எக்ஸ்டரா பாதிப்பு?” என்று கஜன் கேட்க, அர்ஜுனிடம் பெருமூச்சு…
நவநீதனோ, “ஐ ஆம் யோர் பெஸ்டு ஃபிரெண்டு” என்று அர்ஜுனின் காதில் கிசு கிசுக்கு, “சரி சரி ஃப்ரீயா விடு” என்றான் அர்ஜுன் சிரித்துக் கொண்டே.
மறுபக்கத்தில் இருந்து நவநீதனை சுரண்டினாள் தனிஷா.
“என்னடி?” என்று கேட்க, “என்ன மேட்டர் அது?” என்று கேட்டாள்.
நவநீதன் குரலை செருமிக் கொண்டே, அவள் காதருகே குனிந்தவன், “வீட்டுக்கு போய் சொல்றேன்” என்றான் கஜனையும் விஜய்யையும் கண்களால் காட்டிக் கொண்டே…
அதனை தொடர்ந்து வீட்டுக்கும் வந்து விட்டார்கள்…
ஹாலில் தான் துளசியும் சக்திவேல் அமர்ந்து இருந்தார்கள்…
ஜீப் வந்ததுமே, “ஐயோ அப்பா திட்ட போறாரே” என்று நவநீதன் புலம்ப ஆரம்பித்து விட்டான்…
“சரி சரி, இதெல்லாம் புதுசா என்ன?” என்று கேட்டுக் கொண்டே அர்ஜுன் இறங்க, எல்லோரும் சிரித்தபடி இறங்கிக் கொண்டார்கள்…
உள்ளே நவநீதன் காலை வைத்ததுமே, “உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்கா?” என்று சக்திவேல் ஆரம்பிக்க, “மாமா நான் தான் கூப்பிட்டேன்” என்றாள் தனிஷா அவசரமாக…
நவநீதன் அவளை அதிர்ந்து பார்க்க, “இப்படி ஒரு பொண்டாட்டி இருக்கும் போது அப்புறம் என்னடா? வாழ்க்கை பூரா பிழைச்சுக்குவ” என்று கஜன் கிண்டலாக சொல்லி விட்டு நகர, நவநீதன் இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்…
சக்திவேலோ, “சரிம்மா, இந்த நேரத்துல வெளியே திரியுறது பாதுகாப்பு இல்லை, கொஞ்சம் பார்த்துக்கோ” என்று நிதானமாக சொல்ல, அவளும் தலையை ஆட்டிக் கொண்டாள்.
அதனை தொடர்ந்து, நவநீதனும் தனிஷாவும் அறைக்குள் நுழைந்து கொண்டார்கள்.
தனிஷாவை இழுத்து மடியில் வைத்துக் கொண்டான் நவநீதன்…
அவளும், அவன் கழுத்தை கட்டிக் கொண்டே, “செம்ம ஃபீல் நவா? இன்னுமே அந்த கரும்பு தோட்ட ஃபீல் உள்ளுக்குள்ள இருக்கு” என்றாள்.
அவனோ சிரித்துக் கொண்டே, அவள் மூக்குடன் மூக்கு வைத்து உரசியவன், “திரும்ப கிடைக்குமான்னு தெரியல, இவங்க பேசுறத பார்த்தா, செருப்பை கழட்டி அடிப்பாங்க போல” என்று சொல்ல, அவள் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, “அது சரி, அர்ஜுன் அண்ணா கிட்ட என்ன மேட்டர்?” என்று கேட்டாள்.
அவனோ, “அன்னைக்கு அவர் பக்கத்தில தான் படுத்தேன், கனவு முழுக்க நீ தான்… பாய்ஞ்சு அவர் கழுத்துல கடிச்சுட்டேன்” என்று சொன்னதுமே அதிர்ச்சியுடன் வாயை பிளந்தவள், “அடப்பாவி” என்றாள்.
“அவர் அதான் கலாய்ச்சுட்டே இருக்கார்” என்று சொன்னதுமே, “தூக்கத்துலயுமா?” என்று அவன் கன்னம் கிள்ள, “என்ன பண்ணுறது, மைண்ட் முழுக்க நீ தான் இருக்க, சம்பவம் வேற விஷயம், கட்டி பிடிச்சு படுக்க கூட ஆள் இல்லாம தவிச்சு போய்ட்டேன்” என்று சொன்னான்…
“நானுமே” என்று அவளும் அவன் நெற்றியில் முட்டிக் கொண்டே, “செம்ம டயர்ட் ஆஹ் இருக்கு, தூங்கலாமா?” என்று கேட்க, அவனும், “செமயா தூங்கணும் போல தான் எனக்கும் இருக்கு” என்று சொன்னவன், அவளை அணைத்துக் கொண்டே, தூங்க ஆரம்பித்து விட்டான்.