காலையிலேயே மண்டபத்துக்கு எல்லோரும் விரைந்து இருக்க, நிகழ்வும் களை கட்டியது.
ஹன்சிகா ஊதா நிற பட்டு சேலையில் தேவதையாக மணமகள் அறைக்குள் இருக்க, தனேஸ்வர் வேஷ்டி சட்டை என்று ஆயத்தமாகி இருந்தான்…
“டேய் இதுலயும் நீ செமயா இருக்க டா” என்று நவநீதன் சொல்ல, தனேஸ்வர் சிரித்துக் கொண்டான்.
அர்ஜுனோ, “செம்ம ஹாண்ட்ஸம் ல இவன்” என்று சொல்ல, “ரொம்ப புகழாதீங்க, வெட்கமா இருக்கு” என்று தனேஸ்வர் கிண்டலாக சொல்லிக் கொண்டான்.
இதே சமயம் ஹன்சிகாவின் அறைக்குள் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த தனிஷாவோ, “நைட்டுக்கு தோப்பு வீட்ல தானே ரூம் ரெடி பண்ணுறாங்க அண்ணி?” என்று ராகவியிடம் கேட்டாள்.
அவளும், “ஃபெர்ஸ்ட் நைட்டுக்கா?” என்று கேட்க, தனிஷா கிண்டலாக, “எத்தனையாவது நைட்டோ தெர்ல” என்றாள்.
ஹன்சிகாவுக்கு சிரிப்பும் வந்து விட்டது, “ஐயோ அண்ணி ஃபெர்ஸ்ட் நைட் தான்” என்றாள் சிணுங்களாக…
“என்னடி சொல்ற?” என்று தனிஷா கேட்க, “ஃபெர்ஸ்ட் டே முடிஞ்சு, அப்போ இது தானே ஃபெர்ஸ்ட் நைட்” என்க, “அடிப்பாவி” என்று சொல்லி சிரித்துக் கொண்டாள் அவள்…
இதே சமயம் தனேஷ்வரனுக்கோ கஜனுடன் பேச வேண்டிய அவசியம்…
எப்போது அறைக்குள் வருவான் என்று காத்துக் கொண்டு இருக்க, அவனும், “டேய் சாப்பாடு எல்லாம் ஓகே தானே” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர, “உங்க கூட பேசலாமா?” என்று கேட்டான் தனேஷ்வர்…
அவனை புருவம் சுருக்கிப் பார்த்த கஜனோ, “என் கூடவா? என் கூட என்னடா பேசப் போற?” என்று கேட்க, அர்ஜுனோ, “ஐ க்னோ ஐ க்னோ” என்று சொல்ல, கஜனுக்கு புரிந்து விட்டது.
குரலை செருமிக் கொண்டே, “அதொன்னும் பிரச்சனை இல்லை” என்று சொன்னான்.
“நான் கேட்கவே இல்லையே” என்று தனேஷ்வர் சொல்ல, “நீ என் கூட பேசணும்னா என்னவா இருக்கும்னு சட்டுன்னு தெரியுது” என்று கிண்டலாக சொல்ல, அர்ஜுனோ, “மச்சான் இன்னொரு வார்த்தை சேர்க்க மறந்துட்டிங்க” என்று சொன்னான்.
“டேய் சும்மா இருடா” என்றான் கஜன்…
“அப்போ எனக்கு மட்டும் தான் அந்த வார்னிங் ஆஹ்? அவனுக்கும் கொடுங்க” என்றான்.
“உன்னோட முடியல” என்று சொன்ன கஜனோ குரலை செருமிக் கொண்டே, “பீ ஜெண்டில்” என்று சொல்லும் போதே சிரிப்பு வந்து விட்டது அவனுக்கு… தனேஷ்வரின் அதிர்ந்த முக பாவனை அப்படி இருந்தது…
இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே கஜன் வெளியேறி விட்டான்.
தனேஷ்வருக்கும் கொஞ்சம் வெட்கம்…
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே தலையை கோதிக் கொண்டான்.
அதனை தொடர்ந்து தனேஸ்வர் மணமேடையில் சென்று அமர, ஹன்சிகாவும் வந்து அமர்ந்து கொண்டாள்.
எல்லோரும் ஜோடி ஜோடியாக குழந்தை குட்டிகளுடன் நின்று இருக்க, ஐயர், மந்திரத்தை உச்சரிக்க, மங்கள நாணை எடுத்து, ஹன்சிகா கழுத்தில் கட்டிய தனேஷ்வர் அவளை சம்பிரதாய முறைப்படி மனைவியாக்கி இருந்தான்..
அதனை தொடர்ந்து, விருந்து களை கட்டியது…
விருந்து முடிய, புகைப்படம் எடுக்கும் நிகழ்வு…
சக்திவேலின் மொத்த குடும்பமும், பார்த்தீபனின் குடும்பமும், வீரராகவனின் குடும்பமும் புகைப்படம் எடுக்க நின்று இருந்தார்கள்…
மூத்த தலைமுறை அமர்ந்து இருக்க, அடுத்த தலைமுறை அவர்களுக்கு பின்னே நின்று இருக்க, வாண்டுகள் எல்லாம் கீழே உட்கார்ந்து இருந்தார்கள்…
புகைப்படக்காரரோ, “எல்லாரையும் உள்ளுக்குள்ள கொண்டு வர முடியல சார்” என்று சொல்ல, கஜனோ, “ஒருத்தர் கூட மிஸ் ஆகாம எடுக்கணும்… அது தான் உன் டாஸ்க்” என்று சொல்ல, எல்லோரும் சிரித்துக் கொண்டார்கள்.
அவனும் கஷ்ப்பட்டு அனைவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
அதனை தொடர்ந்து ஆட்டம் பாட்டம் என்று நிகழ்வு களை கட்டி ஓய்ந்திருக்க, எல்லோரும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
ஹன்சிகாவுக்கோ களைப்பு… கர்ப்பமாக இருப்பவள், இவ்வளவு நேரம் நின்று பிடித்ததே பெரிய ஆச்சரியம் தான்…
தனேஸ்வரின் அறை அலங்காரம் செய்யப்பட்டு இருக்க, அவனோ எல்லோரிடமும் பேசி விட்டு, அறைக்குள் வந்த நேரம், ஹன்சிகாவோ தூங்கிக் கொண்டு இருந்தாள்.
அவனும், “செம்ம டயர்ட் போல, பாவம்” என்று நினைத்துக் கொண்டே குளித்து விட்டு வந்தவன், அவள் அருகே படுத்து, இழுத்து அணைத்தபடி தூங்கி இருந்தான்…
நடு இரவு போல, அவனது கன்னத்தில் குறுகுறுப்பு…
ஹன்சிகா தான் முத்தமிட்டபடி இருந்தாள்.
“என்னடி?” என்றான் கரகரத்த குரலில்…
“இன்னைக்கு நமக்கு ஃபெர்ஸ்ட் நைட்” என்றாள்.
“நான் ரெடி தான், உனக்கு ஓகே யா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
“ஓகே இல்லாம தான் கிஸ் அடிச்சிட்டு இருக்கேனா?” என்று கேட்டு முடிக்க, முதல் இதழில் இதழ் பதித்தவன், அவளை கீழே போட்டு படர்ந்து, அவள் கழுத்துக்குள் முகம் புதைத்துக் கொள்ள, அவளோ மோகமாக கண்களை மூடிக் கொண்டே, தனது கையை அவன் வெற்று மேனியில் படர விட்டாள்.
அதன் பிறகு நடந்த சம்பவங்களுக்கு இருவருமே சம பொறுப்பு…
அடுத்த நாள் அவன் கண் விழித்த சமயம், ஹன்சிகாவோ புடவை அணிந்து, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டே நின்று இருக்க, “நேத்தே சொல்லணும்னு நினச்சேன், குங்குமம் வச்சா நீ செம்ம அழகு” என்று சொல்ல, அழகாக சிரித்துக் கொண்டவளோ, “சீக்கிரம் வாங்க, சாப்பிடலாம் பசிக்குது, உள்ள உங்க குழந்தையும் பாவம்” என்று வயிற்றை பார்த்தபடி சொல்ல, அவனும் மென் சிரிப்புடன் எழுந்து கொண்டான்.
அதனை தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே பல்லவி மற்றும் நேத்ராவுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு இடம் பெற்றது…
அதற்கும் நின்ற வீரராகவன் குடும்பம், அதனை தொடர்ந்து கிளம்பி விட்டார்கள்…
நாட்களும் வேகமாக நகர, பல்லவியோ இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று எடுத்தாள்.
இருவரையும் ஒன்றாக அணைத்து தூக்கிய கஜனோ, “இன்னும் குழந்தை வேணுமா என்ன?” என்று பல்லவியிடம் கேட்க, “நான் ரெடி தான்” என்றாள் அவள் சிரித்துக் கொண்டே…
“உன் ஹெல்த்துக்காக இத்தோட நிறுத்திக்கலாம்” என்று அவன் சொல்ல, “சரி அப்போ பேர்த் கண்ரோல் ஆப்பரேஷன் பண்ணிடுங்க” என்று சொல்ல, அவனும் சிரித்துக் கொண்டே, “அது பெட்டர், இல்லன்னா அடுத்த வருஷமும் வயித்தை தள்ளிட்டு நிற்ப, எனக்கு என் மேலயே நம்பிக்கை இல்ல” என்று சொல்லிக் கொண்டான்..
நேத்ராவும் அதற்கு அடுத்த வாரத்திலேயே பெண் குழந்தையை பெற்று எடுத்தாள்.
தனிஷாவுக்கு குழந்தைக்கான ஏக்கம் இருந்தாலும், அதனைக் காட்டி நவநீதனை தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை…
இப்படியே நாட்கள் நகர, யாழினியின் பிறந்த நாள்.
வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது…
எல்லோருமே வந்து சேர்ந்து இருந்தார்கள்…
எல்லாரும் குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்…
“பெரிய குடும்பம் வாங்க” என்று நவநீதன் அழைக்க, கஜனும் பல்லவியும் சிரித்துக் கொண்டே வர, அவனது இரு மகன்களையும் அவன் தூக்கி வைத்து இருந்தான்…
பல்லவியிடம் ஒரு குழந்தை…
யாழினியிடம் அடுத்த குழந்தை…
அவர்கள் புகைப்படம் எடுப்பதை பார்த்த சக்திவேலும் பார்த்தீபனும், “கண்ணுக்கு ரொம்ப நிறைவா இருக்குல்ல” என்று சொல்லிக் கொண்டார்கள்…
இப்படியே எல்லோரும் புகைப்படத்துக்கு நின்று இருக்க, தனிஷா மற்றும் நவநீதன் வந்து நின்று இருந்தார்கள்…
வழக்கம் போல, “எப்போ நல்ல சேதி சொல்ல போற?” என்று அங்கே இருந்த ஒரு பெண்மணி கேட்க, தனிஷாவோ, “ப்ரெக்னன்ட் ஆஹ் தான் இருக்கேன் பாட்டி” என்று சொல்ல, நவநீதன் அதிர்ந்து வாயில் கையை வைத்துக் கொண்டே “என்னடி சொல்ற?” என்று கேட்க, அங்கே புகைப்படம் எடுப்பவனோ, “மேடம், நீங்க சொன்ன போல சாரோட ரியாக்ஷனை வீடியோ எடுத்துட்டேன்” என்றான்…
நவநீதன் சத்தமாக சிரித்தவன், “அடிப்பாவி, அது தான் சொல்லவே இல்லையா?” என்று கேட்க, அவளும், “காலைல பல்லவி அக்காக்கும் அத்தைக்கும் சொன்னேன்” என்று சொல்ல, அங்கே எல்லோருக்கும் அப்படி ஒரு சந்தோசம்…
ராம்குமாரோ. “என்ன அண்ணா, பேஷண்ட்ஸ் சேருதுன்னு சந்தோசம் போல” என்று கஜனை கலாய்க்க, “உன்னை கொல்ல போறேன் பாரு” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்…
நவநீதனோ, “அப்போ எங்களையும் போட்டிக்கு சேர்த்துக்கோங்க, இப்போ தான் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்” என்று சொல்ல, ராம்குமாரோ, “முடிஞ்சா அண்ணாவை பீட் பண்ணி காட்டுடா” என்று சொன்னான்…
தனிஷாவோ, “அய்யய்யோ என்னால முடியாதுப்பா” என்று சொல்ல, எல்லோரும் சிரித்துக் கொண்டார்கள்…
அடுத்து அர்ஜுனும் ராகவியும் ஆரண்யனும் அகல்யாவும் வந்து நின்றார்கள்…
ராகவி சிரிக்கவே இல்லை.
“சிரிடி” என்றான் அர்ஜுன்…
“முடியல அர்ஜுன்” என்று சொல்ல, “என்னடி பிரச்சனை, அப்போ இருந்து முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்க?” என்று கேட்க, அவளோ, “ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேன் போதுமா?” என்று கேட்டான்.
அர்ஜுனோ, “எஸ்” என்று சொல்ல, ராகவி அவனை முறைத்துப் பார்த்தாள்.
ஆரண்யனும் அகல்யாவும் கூட, “தம்பி பாப்பா தான்”, “தங்கச்சி பாப்பா தான்” என்று சண்டை போட, அர்ஜுனோ, “என்னடி, முடியாதா?” என்று கேட்டான்…
அவள் ஏனோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பது, அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது…
அவன் இப்படி கேட்டதே, அவளுக்கு மனதுக்கு இதமாக, “பெத்துக்கலாம்” என்று சிரித்தபடி சொல்ல, கஜனோ, “அப்புறம் என்ன அர்ஜுன், பார்ட்டி ஏற்பாடு பண்ணிடலாம்” என்று சொன்னான்…
அதனை தொடர்ந்து, எல்லோரும் சேர்ந்து குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்…
ஒன்றாக சாப்பிட்டவர்கள், மாலை நேரம் போல, மொட்டை மாடியில் ஒன்று கூடி விட்டார்கள்…
ரேடியோ அருகே யாழினி நின்று இருக்க, அர்ஜுனோ, “பாட்டை போடுடி என் மருமகளே” என்றான்…
“மாமா ரெடியா?” என்று கேட்க, அவனும் பெருவிரலை தூக்கி காட்ட, அவளும் பெருவிரலை தூக்கி காட்டினாள்.
அதன் பிறகு கேட்க வேண்டுமா? ஆட்டம் பாட்டம் என்று அந்த இடமே களை கட்டியது.
எத்தனையோ வலிகளை கடந்த அவர்களது வாழ்க்கை, குழந்தை குட்டிகளுடன் குதூகலமாக நகர ஆரம்பித்து இருந்தது…
முற்றும்