💓அத்தியாயம் 《6》

ஆதிரை வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், அவள் யாரிடமும் பேசவில்லை. குழந்தைகளிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள். நிலாவும் ஆதிரையிடம் பேசுவதைத் தவிர்த்தாள், ஆனால் அவளுக்குத் தேவையான அனைத்தையும் நிலா அருகில் இருந்து கவனித்துக் கொண்டாள். 

இரவு தூங்கும்போதும் நிலா, ஆதிரையின் அருகிலேயே தங்கிக்கொண்டாள்.

​ஆதிரைக்கு அவர்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை. அவர்களிடம் பேசவும், அவர்களின் முகத்தைப் பார்க்கவும் ஒருவிதமான 

குற்ற உணர்ச்சி வாட்டியது. தான் ஒரு பாரமாகிவிட்டோமோ என்ற எண்ணம் அவளைத் துளைத்தது. கதிர்

அவளிடம் தானாகச் சென்று ஓரிரு வார்த்தைகள் பேசினான். அவளும் அவன் கேட்பதற்குப் பதில் கூறிவிட்டு அமைதியாகிவிடுவாள். இப்படியே இரண்டு நாட்களும் சென்றன.

 

​மறுநாள் காலை, ஆதிரன் எங்கோ செல்லத் தயாராகி கீழே வந்தான். “அம்மா, டிபன் எடுத்து வைங்க, நான் வெளியே போகணும்” என்று சொல்லிக்கொண்டே டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து விக்ரமும் கோகுலும் அங்கு வந்தார்கள். விக்ரமைக் கண்டதும் லக்ஷ்மி, “அஞ்சலிமா, இங்க வா. விக்ரம் தம்பிக்கு டிபன் எடுத்து வை” என்றார். அஞ்சலி அருகில் வந்ததும், விக்ரம் அவளைப் பார்க்காமலேயே, “வேணாம்மா, நான் எடுத்துக்கிறேன்” என்று கூறிவிட்டுத் தானே பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தான்.

 

​ஆதிரன் அங்கு நடப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அன்று கோகுல் சொன்னபோது அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது நேரில் பார்த்ததும் அவனுக்குச் சந்தேகம் வலுத்தது. ‘இவர்களுக்குள் என்ன நடக்கிறது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அருகில் அமர்ந்திருந்த கோகுல், தலையை மட்டும் ஆதிரன் பக்கம் திருப்பி, “பார்த்தீங்களா மச்சான்! அன்னைக்கு நான் சொன்னப்ப நம்பல தானே? இப்ப நீங்களே பாருங்க” என்றான். 

 

ஆதிரன் அமைதியா சாப்பிடுடா!” என்று அதட்டினாலும், அவன் மனதின் ஓரத்தில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டேதான் இருந்தது.,

​டிபன் சாப்பிட்டு முடித்ததும், “அம்மா, நான் கதிர் வீட்டுக்கு போறேன்” என்று கூறிவிட்டு ஆதிரன் கிளம்பினான். “சரிப்பா, போயிட்டு வா. கதிர் கிட்ட சொல்லு, நாளைக்கு வந்து அவன் தங்கச்சிய பார்க்கிறோம்னு” என்றார் லக்ஷ்மி.

​ஆதிரன் கதிர் வீட்டுக்குச் சென்றான். 

 

கதிர் அவனிடம், “என்னடா, ஆபீஸ் போகலையா? இங்க வந்திருக்க?” என்று கேட்டான். “இல்லடா, உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றான் ஆதிரன். இருவரும் சோபாவில் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள்.

​”எங்கடா நிலா? குழந்தைகளை யாரையும் காணோம்?” என்று ஆதிரன் கேட்டான். “நிலா, ஆதிரைக்குச் சாப்பாடு கொடுத்துட்டு இருக்காடா. 

 

குழந்தைகள் ரெண்டு பேரும் வேலைக்காரப் பெண்ணோட விளையாடிட்டு இருக்காங்க” என்றான் கதிர். ​”ஓகேடா, உன் தங்கச்சி இப்ப எப்படி இருக்கா?” என்று ஆதிரன் கேட்டான். “இப்ப நார்மலா இருக்காடா, ஆனா யார்கிட்டயும் சரியா பேச மாட்றா” என்றான் கதிர்.

​”டேய், அப்புறம் நாளைக்கு அம்மா உன் தங்கச்சிய பார்க்க வர்றேன்னு சொல்லிருக்காங்கடா” என்றான் ஆதிரன். “

உன் வீட்ல உள்ளவங்களுக்குத் தெரியுமா?” என்று கதிர் கேட்டான். “ஆமாண்டா, அன்னைக்கு நான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்த விஷயத்தை அம்மா கிட்ட சொன்னேன். அவங்க உன் தங்கச்சி நிலைமையைக் கேட்டு ரொம்பக் கவலைப்பட்டாங்க. அதான் கண்டிப்பா பார்த்துதான் ஆகணும்னு பிடிவாதமா இருக்காங்க. 

 

அப்பாவுக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை, அதான் நாளைக்கு எல்லாரும் வரோம்” என்றான் ஆதிரன்.

​அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே நிலா அங்கே வந்தாள். “வாங்க அண்ணா” என்றாள் நிலா. ஆதிரனும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அப்போது, “நீங்க பேசிட்டு இருங்க, நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று ஆதிரை சமையலறைக்குச் சென்றாள்.

 

​அவள் சென்றதும், “கதிர், வா! உன் தங்கச்சியைப் பார்த்துட்டு வருவோம்” என்றான் ஆதிரன். கதிர், ஆதிரனை ஆதிரையின் அறைக்கு அழைத்துச் சென்றான். ஆதிரை அவர்கள் வருவதைக் கண்டு எழுந்திருக்க முயற்சி செய்தாள். கதிர் அவள் அருகில் சென்று, “அம்மு, ஏன் எந்திரிக்கிற?” என்று கேட்டு, அவள் கையைப் பிடித்துக் கட்டிலில் அமர வைத்தான். 

அவனும் அவள் பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.

​அவர்களுடன் வந்த ஆதிரன், ஆதிரையைப் பார்த்து, “இப்ப எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான். அவள் நிமிர்ந்து பார்த்து, “இப்ப பரவாயில்லை, நல்லா இருக்கேன்” என்றாள். ஆதிரனும் அவளைப் பார்த்து, “ரொம்ப யோசிக்காதீங்க, எல்லாம் சரியாயிடும். சந்தோஷமா இருங்க” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

 

​அவன் சென்றதும், கதிர் அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு, “அம்மு, உனக்கு வீட்ல இருக்க போர் அடிச்சா சொல்லு, நம்ம வெளியில எங்கேயாவது போகலாம்” என்றான். “எனக்கு ஒன்னும் இல்லண்ணா, நான் நல்லாத்தான் இருக்கேன். உங்களுக்கு நிறைய வேலைய இருக்கும் அத  பாருங்க” என்றாள். “உன்னை விட எனக்கு வேலை எதுவும் முக்கியம் இல்ல அம்மு” என்றான் கதிர்.

​அவன் அப்படிப் பேசியதும் ஆதிரை அவன் தோளில் சாய்ந்தவாறே அழுதாள். 

 

“சாரி அண்ணா, என்னால உனக்கு ரொம்ப கஷ்டம்” என்றாள் ஆதிரை. “என்ன அம்மு இப்படிப் பேசுற? நீ என் செல்ல தங்கச்சி, நீ எனக்கு கஷ்டமா இருப்பியா?” என்றான் கதிர். அவன் தோளிலிருந்து தலையை நிமிர்த்தியவள், “அண்ணா, உன் ஃப்ரெண்ட் வெளியே தனியா இருக்காங்க, நீ போய் அவங்ககிட்ட பேசு” என்றாள். கதிர் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “சரி அம்மு, நீ தூங்கு, நான் போறேன்” என்று அவளைக் கட்டிலில் படுக்க வைத்துப் போர்வை போர்த்திவிட்டு வெளியே வந்தான்.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top