💓அத்தியாயம் 《7》

கதிர், ஆதிரையின் அறையிலிருந்து வெளியே வந்து ஆதிரனிடம் பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பின் ஆதிரனும் சென்றுவிட்டான். அவன் சென்றதும், “தன் தங்கை வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே!” என்ற யோசனையில் கவலையாக அமர்ந்திருந்தான் கதிர்.

அப்போது அவன் அருகில் வந்து அமர்ந்த நிலா, “என்ன கதிர், என்ன யோசிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

எல்லாம் ஆதிரையைப் பற்றித்தான். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு எதிர்பார்த்தேன். ஆனா, இப்ப அது எதுவும் நடக்காது போல. இவ்வளவு நாள் தான் இப்படியே இருப்பா?” என்று கவலையோடு சொன்னான் கதிர்.

“கவலைப்படாதீங்க, கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும். எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்ம எங்கேயாவது அவளை கூட்டிகிட்டு வெளியே போயிட்டு வரலாமா?” என்று நிலா கேட்டாள்.

 

இல்ல நிலா, அவ வேணாம்னு சொல்லிட்டா” என்றான் கதிர்.

“சரி, அவளை நான் பாத்துக்கிறேன். நீங்க உங்க வேலைய பாருங்க” என்றாள் நிலா.

“இல்ல நிலா, எனக்கு அவளைத் தனியா விட்டுட்டு போகவே பயமா இருக்கு” என்றான் கதிர்.

“ஏன், நான் பாத்துக்க மாட்டேனா? உங்க தங்கச்சிய!” என்று நிலா கேட்டாள்.

“ஐயோ, நான் அப்படி சொல்லலடி. அவதான் உன்கிட்ட பேச மாட்டேங்குறா, நீயும் அவகிட்ட பேச மாட்டேங்குற” என்றான் கதிர்.

 

அவகிட்ட என்ன பேச சொல்றீங்க? அவ பண்ண வேலைக்கு, இன்னும் எனக்கு அவ மேல கோபம் குறையல. கல்யாணம் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லணும். அதை விட்டுட்டு அப்படி ஒரு முடிவு எடுப்பாளா? கொஞ்சம் கூட நம்மள பத்தி அவ யோசிக்கல தானே?” என்று ஆதங்கமாகக் கேட்டாள் நிலா. கதிரோ, அவளை அணைத்து, “சாரிடி, விடு. அவன் நிலைமை அப்படி” என்று நிலாவையே சமாதானப்படுத்தினான்.

 

அடுத்த நாள் காலையில், ஆதிரனின் மொத்த குடும்பமும் கதிர் வீட்டுக்கு வந்தது. அனைவரையும் கண்டதும் கதிரும் நிலாவும் அவர்களை வரவேற்று அன்பாகப் பேசினார்கள். அவர்கள் வந்ததை அறிந்து அறையிலிருந்து வெளியே வந்தாள் ஆதிரை. அவளைப் பார்க்கவே அனைவருக்கும் பாவமாக இருந்தது. அவள் அவர்கள் முன் வந்து கை கூப்பி வரவேற்றாள்.

லட்சுமி அவளைப் பார்த்து, “வாமா, வந்து இங்க உட்காரு” என்று தன் பக்கத்தில் அமரவைத்துக் கொண்டார். 

 

ஆதிரையும் அவர் பேச்சை மறுக்க முடியாமல் அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். கோகுல் குழந்தைகள் இரண்டுடன் விளையாட ஆரம்பித்தான். அஞ்சலி நிலாவுடன் சேர்ந்து சமையலறைக்குள் சென்றுவிட்டாள். லட்சுமி, புஷ்பா என அனைவரும் ஆதிரையைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவளும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த நான்கு வருடத்தில், அவள் இவ்வளவு அதிகம் பேசியதே இல்லை என்று கூறலாம். 

 

வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு தன் அறைக்குச் சென்று விடுவாள். ஆனால், இவர்கள் அவளை அருகே அமர வைத்து கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்னொரு பக்கம், ஆதிரன், கதிர், விக்ரம், ஸ்ரீராம் நால்வரும் ஏதோ பிசினஸ் விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அஞ்சலியும் நிலாவும் அனைவருக்கும் ஜூஸ் கொண்டு வந்தார்கள். அனைவரும் ஜூஸ் எடுத்துக் கொள்ள, அஞ்சலி, “கோகுல் அண்ணா வாங்க, வந்து ஜூஸ் எடுத்துக்குங்க” என்றாள்.

 

அழைத்து வந்து ஜூஸைக் குடித்த கோகுல், அனைவரையும் பார்த்து, “சரி வாங்க, எல்லாம் வெளியில போய் தோட்டத்தில் விளையாடலாம்” என்றான்.

ஸ்ரீராம் அவனைப் பார்த்து, “ஏண்டா, விளையாடுறதா இருந்தா நீ போ, குழந்தைகளை கூட்டிக்கிட்டு! எங்களை எதுக்குக் கூப்பிடுற? விளையாடுற வயசாடா எங்களுக்கு?” என்றார் ஸ்ரீராம். 

மாமா, நீங்க அத்தை பொண்ணு பார்க்க வந்தீங்களே, அன்னைக்கும் இதே மாதிரி…” என்று அவன் ஏதோ சொல்ல வர, “அடேய்! ஏன்டா, எங்க போனாலும் நீ இதை விடமாட்டியா?” என்று ஸ்ரீராம் அதட்ட, “அதெல்லாம் விட மாட்டேன் மாமா. விளையாடுவதற்கு வயது தேவையில்லை மாமா, மனசுதான் வேணும். வாங்க எல்லாம் போய் விளையாடலாம்” என்றான்.

லட்சுமி அவனைப் பார்த்து, “ஏண்டா, அப்ப வீட்டுக்கு போறது இல்லையா?” என்று கேட்டார்.

 

வீட்டுக்கா? என்னத்த இப்படிச் சொல்றீங்க? நம்ம இன்னைக்கு இங்கதான் இருக்கிறோம். நைட் தான் வீட்டுக்கு போறோம். நம்மளுக்கு மதிய சாப்பாடு, நைட் சாப்பாடு எல்லாம் இங்கதான்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட கதிர், அவன் அருகில் வந்து அவன் தோள் மீது கை போட்டுக்கொண்டு, “ஆமாம் அங்கிள், கோகுல் சொல்றது சரிதான். நைட் கிளம்புங்க. இவ்வளவு நாளா இந்த வீட்ல நாங்க மூணு பேர் இருந்தாலும் ஏதோ ஒரு குறை இருந்துகிட்டே இருக்கும். 

 

ஆனா இன்னைக்கு நீங்க எல்லாம் வந்ததுல வீடு நிறைந்த மாதிரி இருக்கு. மனசுக்கு சந்தோசமாகவும் நிம்மதியாவும் இருக்கு. ப்ளீஸ் அங்கிள், இருந்துட்டு நைட் கிளம்புங்க” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் அனைவருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. உடனே புஷ்பாவின் கணவர், “ஆமா மச்சான், அங்க போய் என்ன வேலை இருக்கு? இங்க இருந்தே போவோம்” என்றார். பெண்களும் அதற்குச் சரி என்று சொல்ல, அனைவரும் ஒத்துக் கொண்டார்கள்.

 

பின்பு நிலா அனைவரையும் பார்த்து, “சரி, நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க, நான் சமைக்கிறேன்” என்றாள். கோகுல் உடனே, “ஐயோ அண்ணி! என்ன பேசுறீங்க? இப்பதானே ஜூஸ் குடிச்சோம். லேட் ஆகி சமைக்கலாம், அதுவரைக்கும் எல்லாம் தோட்டத்துக்குப் போய் விளையாடலாம் வாங்க!” என்றான். அவனிடம் மறுத்து பேசினாலும் அவன் கேட்க மாட்டான் என்று தெரிந்து, அனைவரும் அவனுடன் தோட்டத்திற்குச் சென்றார்கள்.

 

அனைவரயும்  சுற்றி நிற்க வைத்த கோகுல் நடுவில் நின்று கொண்டு, “என்ன விளையாடலாம்?” என்று கேட்டான். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், ஆதிரையையும் அவர்களுடன் இன்று இழுத்து வந்துவிட்டான். “அண்ணா சொன்னா தங்கச்சி கேட்கணும்” என்று கூறியவன், அவளையும் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தான். அவன் இந்த வீட்டுக்கு வந்தவுடனே அனைவரையும் கலகலப்பாக வைத்திருக்கப் பழகிவிட்டான். அஞ்சலி கோகுலிடம், “சரி அண்ணா, என்ன விளையாடனும்னு முதல்ல சொல்லு!” என்றாள்.

 

கோகுல் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அனைவரையும் பார்த்து, “நம்ம எல்லாரும் கண்ணாமூச்சி விளையாடலாம்!” என்றான். உடனே விக்ரம், “என்ன மச்சான் சொல்ற? அந்த காலத்துல இருந்தே இந்த விளையாட்டை விளையாடிட்டு வர்றோம், நீ இன்னும் இதுல இருந்தே வெளியே வரலையா? இப்போ போய் கண்ணாமூச்சி விளையாடுவோம்னு சொல்ற, அதெல்லாம் ரொம்ப ஓல்ட்!” என்று கிண்டல் செய்தான்.

 

கோகுல் விடாமல், “என்ன மச்சான் ஓல்ட்? இப்போ இருக்குறவங்க எல்லாரும் செல்போனைப் பார்த்துக்கிட்டே உட்கார்ந்து இருக்காங்க. இந்த மாதிரி விளையாடுறதுல இருக்குற சுவாரஸ்யமே தனி!” என்றான்.

ஸ்ரீராம் தயக்கத்துடன், “டேய், எனக்கு கண்ணைத் திறந்துக்கிட்டே ஒழுங்கா நடக்கத் தெரியாது. இதுல கண்ணை மூடிக்கிட்டு எங்காவது போய்க் கீழே விழுந்து அடிபட்டுக்கப்போறேன்,” என்றார்.

 

கோகுல் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், “மாமா, நீங்க டெய்லியும் வேலைக்குத் தானே போறீங்க! ஒரு நாள் தானே விளையாடுறோம்? நாம என்ன மலை உச்சியிலயா விளையாடுறோம்? சாதாரணத் தோட்டத்துலதானே விளையாடுறோம். இதுக்கே இவ்வளவு பயப்படுறீங்களே!” என்று விடாமல் வற்புறுத்தினான். அவன் யாரைச் சொன்னாலும் கேட்கப்போவதில்லை என்று தெரிந்ததும், அனைவரும் சரி என்று ஒப்புக்கொண்டனர்.

 

அஞ்சலி, “சரி, யார் முதல்ல கண்ணைக் கட்டுறது?” என்று கேட்டாள். கோகுல் ஸ்ரீராமைப் பார்த்து, “மாமா, நீங்கதான் ஃபர்ஸ்ட்!” என்றான்.

“ஏன்டா இப்படி என் உயிரை வாங்குற?” என்று ஸ்ரீராம் புலம்பினார். “மாமா, நீங்கதான் வயசுல மூத்தவரு, எங்க எல்லாருக்கும் பெரியவர். நீங்கதான் ஆரம்பிக்கணும்,” என்று கோகுல் பிடிவாதமாகச் சொல்ல, ஸ்ரீராமும் சரி என்று கண்ணைக் கட்டிக்கொண்டார். அனைவரும் அவரைச் சுற்றி ஓடி, ஆளுக்கு ஒரு பக்கத்திலிருந்து சத்தம் கொடுத்துக் குழப்பினார்கள்.

 

சத்தம் கேட்ட திசையெல்லாம் அவர் திரும்பித் திரும்பிச் சென்றார்.

ஓட முடியாமல் தவித்த, புஷ்பாவின் கணவர் செந்திலை 

பிடித்துக்கொண்டு, “ஸ்ரீராம் அவுட்! அவுட்!” என்று கத்தினார். அவர் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர். கோகுல் உடனே, “அப்போ சித்தப்பா, நீங்கதான் இப்போ கண்ணைக் கட்டணும்!” என்றாவன்.

கோகுல் அவர் கண்ணைக் கட்டிவிட்டான். செந்தில் அனைவரையும் துரத்தத் தொடங்கினார். 

 

அப்போது பார்த்து, கோகுல் வேண்டுமென்றே விக்ரமைப் பிடித்து செந்திலின் மேல் தள்ளிவிட்டான். செந்தில் உடனே விக்ரமைப் பிடித்துக்கொண்டு, “அவுட்!” என்று கத்தினார்.

அனைவரும் அங்கு வந்து சேர, விக்ரம், “இத நான் ஒத்துக்கவே மாட்டேன் மச்சான்! நீதான் என்னைக் கீழே தள்ளிவிட்ட,” என்று கோகுலைச் சத்தமிட்டான்.

கோகுல், “ஐயோ, நான் எங்க தள்ளிவிட்டேன்? நான் ஓடும்போது நீ குறுக்க வந்த, அதனால ஓடுற வேகத்துல தள்ளிவிட்டிருப்பேன். வேணும்னே செஞ்சேன்னு சொல்லாதீங்க மச்சான்!” என்று கூறிவிட்டு, விக்ரமின் கண்களையும் கட்டிவிட்டான்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top