💓அத்தியாயம் 《12》

கதிர் அவர்கள் அருகில் வந்ததும், அவர்கள் பேச்சு சட்டென்று நின்றுவிட்டது.

என்ன?” என்று கதிர் கேட்டான்.

ஒண்ணும் இல்ல மச்சான், சும்மா பேசிட்டு இருந்தோம்,” என்றான் கௌதம்.

கதிர் நிலாவைப் பார்க்க. நிலா தலையைக் குனிந்து நின்றிருந்தால்.

“கௌதம், என்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டுடு,” என்றாள் நிலா.

அதை கேட்ட ஆதிரை அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள்.

ஏய், உனக்கு என்ன பைத்தியமா? ஹாஸ்டலுக்குப் போறேன்னு சொல்ற? உனக்கு இப்போ கல்யாணம் ஆயிடுச்சு. நீ என்னோட அண்ணி, மறந்துடாத!” என்றாள்.

உடனே நிலா, “நீதானே சொன்ன, என்னை எங்க வீட்டிலிருந்து கூட்டிட்டு வரத்தான் இந்தக் கல்யாணம் நடந்துச்சுன்னு? இப்போ ஏன் மாத்திப் பேசுற?” என்று கேட்டாள். நிலா 

ஆதிரை ஏதோ சொல்ல வருவதற்குள் கதிர் பேசினான்.

ஆமா அம்மு, உன் பிரண்டு சொல்றது சரிதானே? அவளை அந்தப் பிரச்சினையிலிருந்து காப்பாத்தத்தான் இந்தக் கல்யாணம் நடந்தது. அதான் காப்பாத்திட்டோமே. இனிமே அவங்க அவங்க விருப்பப்படி இருக்கட்டும்.”

இதைக் கேட்ட கௌதத்துக்கும் ஆதிரைக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

நாம ஒன்னு நினைச்சு கல்யாணம் பண்ணி வச்சா, இவங்க என்னமோ பேசுறாங்களே!’ என்று இருவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டனர்.

என்ன அம்மு, அப்படியே நிக்கிற? நான் சொன்னது சரிதானே?” என்று கதிர் கேட்டான்.

அண்ணா… அது வந்து…” என்று ஏதோ சொல்ல வந்தாள் ஆதிரை.

போதும் அம்மு, நிறுத்து! இன்னும் எவ்வளவு பொய் சொல்லப் போறீங்க? நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணித்தானே இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சீங்க?” என்று கோபத்துடன் கேட்டான் கதிர்.

அவன் சொன்னதைக் கேட்ட நிலா அதிர்ச்சியுடன் கௌதத்தையும் ஆதிரையையும் திரும்பிப் பார்த்தாள்.

அவர்கள் இருவரும் அமைதியாக நின்றனர்.

என்னடி சொல்றாரு உங்க அண்ணா? நீங்க பிளான் பண்ணீங்களா? உங்க ரெண்டு பேருக்கும் என்ன பைத்தியமா?” என்று நிலா அதட்டினாள்.

ஆமா, பைத்தியம்தான்! உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சேன்,” என்றான் கௌதம்.

கதிர் மச்சான் கல்யாணமே வேணாம்னு சொன்னாரு. நீயும் உன் குடும்பம்தான் முக்கியம்னு இருந்த. உன் வீட்டுல உள்ளவங்க 

உனக்கு மாப்பிள்ளை பார்த்தாங்களே… அவன் ஒரு மனுஷனா, நிலா? பைத்தியக்காரன் மாதிரி இருந்தான். அவனைப் போய் உனக்குக் கட்டி வைக்க நினைச்சதுக்குக் காரணம், நீ சந்தோஷமா வாழணும்னு இல்லை. அப்படிப்பட்ட ஒருத்தனைக் கட்டி வெச்சா நீ வாழ்நாள் முழுக்க உங்க வீட்டுக்காக  சம்பாதிச்சுக் கொடுப்பேன்னு அவங்க கணக்கு போட்டாங்க. 

அவனும் உன்கிட்ட எதுவும் கேட்க மாட்டான்னு நினைச்சாங்க.

இந்தக் கல்யாணத்தை மட்டும்  நிறுத்திட்டு நாங்க போயிருந்தா, உங்க வீட்டில இருக்குறவங்க உன்னை அப்படியே விட்டிருப்பாங்களா? மறுபடியும் வேறொரு மாப்பிள்ளை பார்த்து உனக்குக் கட்டி வச்சிருப்பாங்க. 

இவர்கிட்ட கேட்டா முடியாதுன்னு சொல்லுவாரு. அதனால்தான் நாங்க இப்படி ஒரு பிளான் போட்டு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சோம்  இப்போ சொல்லு… இதுல நாங்க என்ன தப்பு பண்ணோம்?”

என்ன சொன்னாலும், நீங்க பண்ணது தப்புதான் கௌதம்,” என்றாள் நிலா.

என்னடி தப்பு? கல்யாணம்தானே பண்ணி வச்சோம்!” என்றாள் ஆதிரை.

நீ பேசாத! நான் உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன்!” என்று நிலா அவளை முறைத்தாள்.

சரி, யாரும் யாரிடமும் பேச வேண்டாம். உங்களுக்கு நல்லதுன்னுதான் கல்யாணம் பண்ணி வச்சோம். நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசுறீங்க.

இனிமே நாங்க ரெண்டு பேரும் இங்க நிக்கிறதுக்கு அர்த்தமே இல்லை,” என்ற கௌதம், ஆதிரையைப் பார்த்து,

ஆதிரா, கார்ல ஏறு. இனி நமக்கு இங்க என்ன வேலை? அவங்க ரெண்டு பேரும் புருஷன்-பொண்டாட்டி. இனிமே அவங்களே பாத்துக்கட்டும். சேர்ந்து வாழ்ந்தாலும் சரி, பிரிஞ்சு போனாலும் சரி. நமக்குத் தேவையில்லை. வா!” என்றான்.

ஆதிரையைக் காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவர்கள் கார் செல்வதைப் பார்த்துக் கொண்டே அதிர்ச்சியுடன் நின்றாள் நிலா.

கார் கண்ணில் இருந்து மறைந்ததும், கதிர் அவள் அருகில் வந்து,

என்ன பாத்துட்டு இருக்க? அவங்க போயிட்டாங்க. நீ பேசுன பேச்சால என்னையும் விட்டுட்டு போயிட்டாங்க,” என்றான் கதிர்.  

நிலா அமைதியாகத் தலையைக் குனிந்து நின்றாள்.

சரி வா. இந்தக் கடையில கொஞ்ச நேரம் உட்காரு. நான் என் நண்பனுக்கு கால் பண்றேன். அவன் ஏதாவது கார் அரேஞ்ச் பண்ணுவான்,” என்றான் கதிர்.

அவன் சொன்னது போலவே அரை மணி நேரத்தில் ஒரு கார் வந்து நின்றது.

கதிர், நிலாவை அழைத்துக்கொண்டு காரில் ஏறி தனது வீட்டிற்குப் புறப்பட்டான்.

கதிரின் வீட்டின் வாசலில் கார் நின்றது.

இருவரும் இறங்கி உள்ளே செல்ல முயன்றபோது,

மச்சான், கொஞ்சம் இருங்க!” என்ற குரல் கேட்டது. வீட்டின் உள்ளே இருந்த கெளதம் வந்தான் 

என்ன?” என்பது போல் கதிர் அவனைப் பார்த்தான்.

உங்க தங்கச்சிதான் கொஞ்சம் இருக்கச் சொன்னா,” என்றான் கௌதம்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, ஆரத்தித் தட்டுடன் வெளியே வந்தாள் ஆதிரை.

அவளைப் பார்த்த நிலா,

இவங்க ரெண்டு பேரும் கோவிச்சுக்கிட்டு எங்களை விட்டுட்டுப் போனாங்க. இப்போ என்னடானா ஆரத்தி எடுக்குறாங்க!’ என்று மனதிற்குள் முணுமுணுத்தாள்.

ஆதிரை அவர்கள் முன் வந்து ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்தாள்.

இருவரும் உள்ளே சென்றனர்.

விருந்து சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணிட்டேன் அண்ணா. நீங்க ரெண்டு பேரும் போய் குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம்,” என்றாள் ஆதிரை.

கதிர் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அறைக்குள் சென்றான்.

நிலா என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றாள்.

அவள் அருகில் வந்த ஆதிரை,

என்னடி, நான் சொன்னது காதுல விழலையா? போய் குளிச்சிட்டு வா. உன் டிரஸ் எல்லாம் அண்ணா ரூம்ல இருக்கு. குளிச்சிட்டு வந்து சாமி ரூம்ல விளக்கேத்திட்டு வா. அதுக்கப்புறம்தான் சாப்பிடணும்,” என்றாள்.

இவளுக்கு என்ன பைத்தியமா?’ என்பது போல ஆதிரையைப் பார்த்தாள் நிலா.

ஆனால் ஆதிரை அவளை கண்டுகொள்ளாமல்,

சீக்கிரம் போடி!” என்று மிரட்டினாள்.

வேறு வழியில்லாமல்,கதிரின் அறையை நோக்கி நடந்தாள் நிலா.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top