அசுரன்1

வலிமிகுந்த சுக உணர்வுடன் துடித்து கொண்டிருந்தாள் அந்த அழகு மங்கை ..
என்வேலை சுகம் கொடுப்பதே என்பதை போல அவள் மேலே வேகமாய் இயங்கி 
கொண்டிருந்தான் அவன் .
அவன் மேல் இருந்த வியர்வை துளி சொல்லியது அவனது கடுமையான உழைப்பை ..
போதும்.. போதும் … டியர் .. காம் டவுன் ..
அதெல்லாம் அவனுக்கு எங்கு கேட்டது.
அவனது சீற்றம் குறைந்து சாந்தி நிலைக்கு வர சிறிது நேரம்எடுத்தது.
அதற்குள் பெண்ணவள் துடித்து போனால்,
பெண்ணவளுக்கு விடுதலை கொடுப்பத்திற்கே அங்கிருந்த அலைபேசி மணி 
ஒலித்தது அதில் விக்ரம் என்ற பேர் மின்னியது.. இரு முறை தவறி மூன்றாவது முறை 
ஒலிக்கும் போது எடுத்து காதில் வைத்தான் அதை ..
எங்க இருக்க…
கெஸ்ட் ஹவுஸ் ல….
நாளைக்கு கல்யாணத்த வச்சுக்கிட்டு இன்னைக்கு அங்க என்னடா பண்ற ..
சும்மா சுத்தி பாக்கலாம் னு வந்தேன் டா .. வாய் தான் பேசி கொண்டு இருந்தது 
கண்கள் மங்கை அவளை அளந்து கொண்டும் கைகள் அதன் வேலையை செவ்வனே 
செய்து கொண்டும் இருந்தன.. அதன் பலனாய் பெண்ணவளிடம் இருந்து மெல்லிய 
மோக முனங்கல் சத்தம் கேட்டது . அது போனில் இருப்பவனின் காதில் வில தவற 
வில்லை .
நல்லா தெரியுது டா நீ என்னத்த சுத்தி சுத்தி பாக்குறனு.. இதெல்லாம் நல்லதுக்கே 
இல்ல மச்சான்.. கொஞ்சமாச்சும் கட்டிக்க போற பொண்ணுக்கு உண்மையா இருடா ..
என்ன பொறுத்தவரைக்கும் இது உண்மையான கல்யாணமே இல்லனு சொல்லிட்டு 
இருக்கேன் . இதுல அவளுக்கு வேற உண்மையா இருக்கணுமா
என்ன சொன்னாலும் நீ திருந்த மாட்ட , எல்லாம் பட்டா தான் புரியும் …
நீ சாபம் குடுத்தது போதும் டா .. போய் வேலையை பாரு ..
நீ சல்லாபம் பண்ணது போதும் டா .. வீட்டுக்கு வந்து சேரு .. கல்யாணம் வரைக்கும் 
உன்ன ரெம்ப பத்திரமா பாத்துக்க சொல்லிருக்காங்க
சரிடா… வை…. வரேன்….
பேசி முடித்து மீண்டும் ஒருமுறை கூடி விட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான் ..
அவன் கூடலுக்கு கூட ஆக சிறந்த அல்ட்ரா மாடல் உயர் அழகிகளை மட்டும் தான் 
தேர்ந்த்தெடுப்பான். என்னை தொடவும் , நான் தொடவும் ஒரு தகுதி வேணும் என்பது 
அவனுடைய நினைப்பு … அப்படி இருக்கையில்………
————————
ஆள் அரவமற்ற பழமையான கோயில் ஆனால் உள்ளே ஒரு திருமணம் சத்தம் 
இல்லாமல் நடந்து கொண்டிருந்தது .. மிக எளிமையான திருமணம்.. எளியோரின் 
திருமணமா என்று கேட்டால் இல்லை.. பெரும் பணக்கார குடும்பத்தின் ஆண் 
வாரிசிற்கு தான் இவ்வளவு எளிமையான திருமணம்.. மணமக்களின் குடும்பத்தினர் 
மட்டுமே அங்கு இருந்தனர்.
மணமகன் மாங்கல்யத்தை எடுத்து மணப்பெண்ணின் கழுத்தில் தன் விரல் நுனி கூட 
படாமல் கட்டினான் அழுத்தமாக பார்த்துக்கொண்டே..
அந்த கண்களில் தெரிந்த ஏளனத்தை அவளும் உணர்ந்தாள்.
சுற்றி இருந்த அனைவரும் கடமைக்கே என அர்ச்சதை தூவினார்.
வேற எந்த சடங்குகளும் அங்கு நடக்க வில்லை அதில் மணமகனுக்கு விருப்பமும் 
இல்லை. தாலி கட்டிய உடன் எனது கடமை முடிந்தது என்றிருந்தான். குடும்பத்தினரும் 
அதை வற்புறுத்த வில்லை. ஏன் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் கூட 
வாங்க வில்லை.
பக்கத்தில் நின்றிந்தவளை பாக்க பாக்க பற்றி கொண்டு வந்தது அவனுக்கு.. என் 
பக்கத்தில் இவளா.. என் வீட்டு வேலைக்கு கூட தகுதியில்லாத இவளா என் மனைவி .. 
நினைத்து பார்க்க கூட விரும்ப வில்லை ..
அப்படி இருக்கும் போது எப்பிடி அவளை தொட்டு, பொட்டு வைத்து,காலை தொட்டு, 
மெட்டி போடுவது.. அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை
மணமகன் அருண்தேவ் 
அழகின் இலக்கணம் தான் அவன் . நீங்க படித்த அத்தனை ஆன்டி ஹீரோ கதைகளின் 
வர்ணனையும் அவனுக்கு பொருந்தும். சக்ரவர்த்தி குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு.
ஆனால் அவனை ரசிக்கும் மனநிலையில் இல்லை அவள் . இங்கு நடக்கும் 
அனைத்தையும் பார்த்து மனதிற்குள் ஒரு வெறுமையுடன் நின்றிருந்தாள் 
நமது நாயகி தேன்மலர் . 
தாலி கட்டும் போது தனது அன்னையை நிமிர்ந்து ஒரு அழுத்தமான பார்வை 
பார்த்தால் அவ்வளவு தான். 
மணவாழ்க்கையை நினைத்து மனதிற்குள் வருத்தப்படுபவள் அல்ல அவள். 
அவள் பாக்காத கஷ்டம் இல்லை . இதுவும் அதில் ஒன்று .
நடுத்தர வர்க்க பெண்ணிற்கு , உரிய மிக எளிமையான தோற்றம். இடுப்பிற்கு கீழ் 
நீண்ட தலை முடி. முழு உடலையும் மறைத்து இலகுவான சில்க் காட்டன் புடவை கட்டி 
இரஇருந்த. கைகளில் கண்ணாடி வளையல். தலை குனிந்து நின்றிருந்தாள்.
அவளை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்து விட்டு, அவளை விட்டு இரண்டு அடி தள்ளி 
நின்றான்.
அவன் பக்கத்தில் நிற்க,அவளுக்கு தகுதி இல்லை என்பது அவனுடைய நினைப்பு .
அவளும் இதையெல்லாம் கண்டுகொண்டதாய் தெரிய வில்லை..
அனைவரும் கிளம்பும் நேரம் வந்தது .
தேன்மலர், தன் தாயிடம் சொல்லி விட்டு கிளம்ப தயாரானாள் ,. தொல்காப்பிய 
காலத்தில் இருந்து சொல்லப்பட்ட அனைத்து அறிவுரைகளும் சொல்லி அனுப்பினாள், 
பெற்றவள் வாசுகி . பொறுத்து போ , அடங்கி போ , மாப்பிளை குணம் அறிந்து 
நடந்துக்கோ!. கண்டிப்பா! அவர் உன்ன ஏத்துக்கிட்டு வாழ்வார்.
அதையெல்லாம் கேட்டு ஒரு நீண்ட பெரும் பெருமூச்சுடன் விடைபெற்றாள் தேன்மலர்.
அனைவரும் காரில் ஏறினர். அருணை மட்டும் ஏற்றி கொண்டு, அவனுடைய கார் 
புயல் வேகத்தில் கிளம்பி விட்டது. அதை பார்த்த வீட்டினர் இப்போது என்ன செய்வது 
என்று முழித்தனர். மற்றொரு காரில் அவன் தங்கை அகல்யா, அவளுடைய 
கணவர் விக்ரம் மற்றும் அவனை பெற்றவர்கள் அமர்ந்திருந்தனர் .
வேறு வழி இல்லாமல் திருமணத்திற்கு வந்திருந்த அருணின் நண்பனின் காரில் 
மணமகளை ஏற்றி கொண்டு, அங்கிருந்து கிளம்பினர்.
வாசுகி மனதில் கலக்கத்துடன், தான் வந்த ஆட்டோ வில் தனது வீட்டிற்கு கிளம்பினார்.
மணமகனுக்கு பிடிக்க வில்லை , மணமகளுக்கு இங்கு நடக்கும் எதையும் 
ஏற்றுக்கொள்ள கூட முடிய வில்லை .. பெற்றவர்களுக்கும் பெரிய சந்தோசம் ஏதும் 
இல்லை..
அப்புறம் ஏன் இந்த திருமணம்.
—————————————————————-
மூன்று மாதங்களுக்கு முன்பு…..
உருண்டு சுற்றி , சுழலிய சோழியை கண்டு விறல் விட்டு ஆருடம் கணித்து பலன் கூறி 
கொண்டு இருந்தார், அந்த பிரபல ஜோதிடர்.
என்ன ஜோஷியரே சொல்றீங்க .. இன்னும் ஒரு வருஷத்துக்கு என் பையனுக்கு உயிர் 
போகும் கண்டம்மா.. ஏதாவது பரிகாரம் பண்ண முடியுமானு பாருங்க..
இல்லம்மா இதுக்கு பரிகாரம் பலன் அளிக்காது.. 
எப்பிடி நம்ம முன்னோர்கள் செய்த புண்ணியம் நமக்கு பலன் அளிக்குமோ அது 
போல அவங்க செய்த பாவமமும் நம்மள பின் தொடரும் .
இதை கேட்டு ருத்ராதேவியின் யின் முகம் வாடியது
இந்த ஒரு வருஷம் அவரு உயிர் தப்பிட்டா பின் ஆயுஷு கெட்டிதான்.
வேற ஏதாவது வழி இருந்த பாருங்க ஜோஷியரே
வேற வழி -ன ம்ம் ம்ம் …. திருமண பந்தம் மூலியமா இத சரி பண்ண வழி இருக்கு ..
என்ன சொல்றீங்க ..
நல்ல மாங்கல்ய பலம் உள்ள பொண்ணா பாத்து உங்க பையனுக்கு கல்யாணம் 
பண்ண அந்த பொண்ணோட பலன் உங்க பையன் உயிர காப்பாத்த வழி இருக்கு
ஆனா… அந்த மாறி பலன் உள்ள பொண்ண நாங்க எங்க பொய் கண்டு பிடிக்கிறது.. 
அதும் இல்லாம அந்த பொண்ண, என் பையனுக்கு புடிக்கணுமே.. என் பையன் 
ஸ்டேட்டஸ் கு ஏத்த மாரி பொண்ணு அமையனும் .. அதனால வேற வழி ஏதாவது 
சொல்லுங்க..
இல்லங்கம்மா இதுக்கு வேற வழி இல்ல .. உயிர் முக்கியமா இல்ல ஸ்டேட்டஸ் 
முக்கியமானு யோசிங்க..
ருத்ரா.. மொத நம்ம பையன் உயிர கண்டத்துல இருந்து காப்பாத்துவோம் அப்புறம் 
மத்தத பத்தி யோசிக்கலாம்
சரிங்க .. நீங்களும் நல்ல பலன் உள்ள பொண்ணோட ஜாதகம் வந்தா சொல்லுங்க! 
ஜோஷியரே.. நாங்களும் எங்களுக்கு பொருத்தமான ஜாதகம் வந்தா உங்களுக்கு 
அனுப்பி வைக்கிறோம், கூடி வந்தா கல்யாணம் பண்ணிரலாம்.
சரீங்கம்மா .. எல்லாம் நல்லபடியா முடியும், அதுவரைக்கும் தம்பிய ஜாக்கிரதையா 
இருக்க சொல்லுங்க ..
நன்றி சொல்லிவிட்டு தட்சணை குடுத்துவிட்டு சென்றனர் ருத்ராதேவி –
சக்ரவர்த்தி தம்பதியினர்

—————————————————————
இன்று காரில்..
என்ன அத்தை கல்யாணம் ஆன மொத நாளே இப்படி நடந்துக்குறான் மனைவியா 
மதிக்க வேணாம் ஒரு மனுஷியா மதிக்கலாம் ல. அந்த பொண்ணுக்கு என்ன குறை .. 
என்றான் விக்ரம்
என்ன குறையா …. எல்லாமே குறை தான்.. என்று முகத்தை சுளித்து கொண்டால் 
அகல்யா
அப்டி நினைக்குறவங்க எதுக்கு அந்த பொண்ண செலக்ட் பண்ணுணீங்க!
நாங்க எங்க செலக்ட் பண்னோம்,
அவ ஜாதகம் தானே பொருந்தி வந்துச்சு ..
தெரியுதுல நமக்கு உதவி செய்ய வந்த பொண்ண நாமளே தரக்குறைவா 
நடத்தலாமா…
இவன் நடந்துக்குறத பாத்தா, அந்த பொண்ண ஏத்துக்கிட்டு வாழுவான் னு தோணல
வாழாட்டி போறான் விடுங்க. அதுக்கு நீங்க ரெண்டுபேரும் எதுக்கு சண்டை 
போட்டுகிறீங்க . ஒரு வருசம் கழிச்சு ஒத்து வரலைனா, தாலிய கழட்டிட்டு வீட்டுக்கு 
அனுப்ப வேண்டியது தான். அதுனால தான் சட்டப்படி ரிஜிஸ்டர் பண்ணாம , 
சத்தமில்லாம கல்யாணத்த முடிச்சுட்டு வாரோம் !
அதுவும் சரி தான் என்றாள் அகல்யா..
இதை கேட்டு உறைந்தான் விக்ரம் . இப்டி பாவம் புடிச்ச குடும்பத்துல வாக்கப்பற்று 
இருக்கியா டா விக்கிரமா ..என மனதிற்குள் நினைத்து கொண்டான் .
எனக்கும் இந்த மாறி ரிட்டன் பாலிசி கிடைக்குமா! என்றான் கிசுகிசுப்பாக 
அகல்யாவின் காதருகில்..
(அவனை முறைத்து கொண்டே) நீங்க தான் தைரியமானவர் ஆச்சே .. இத சத்தமா 
எங்க அம்மா கிட்ட கேக்க வேண்டியது தான ..
எதுக்கு உங்க அம்மா கிட்ட வாங்கி கட்டிக்கவா..பண்றது பூரா பாவம் ஆனா 
ராஜமாதா சிவகாமி மாறி பில்டப் குடுக்க வேண்டியது
தெரியுதுல்ல.. அப்ப அமைதியா வாங்க .. எங்க அப்பா எப்படி வரார் .
அவர் எல்லாம் தெய்வம் டி .. என்று கூறி அகல்யாவின் முறைப்பை பரிசாக பெற்று 
கொண்டான்.
இங்கு நடக்கும் சம்பாஷணைகள், அனைத்தையும் கேட்டும் கேக்காத போல், எல்லாம் 
கடவுளின் சித்தம் . அவர்கள் சேர்ந்து இருப்பதும் , பிரிவதும் அவர்கள் கையில் தான் 
உள்ளது என நினைத்து கொண்டு பேரமைதியுடன் வந்து கொண்டிருந்தார் சக்ரவர்த்தி 
.
ஆனாலும் மகனின் குணம் தெரிந்து ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை 
சீர்குழைத்து விட்டோமோ என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்து கொண்டு தான் 
இருந்தது.
—————————————–
இவ்வளவு நடந்த பின்னும், காரின் பின் இருக்கையில் கற்சிலை போல் அமர்ந்து ஏதோ 
யோசித்து கொண்டு வருபவளை, கண்ணாடி வழியே பார்த்து கொண்டு வந்தான் 
அவன்.
இப்பயும் ஒண்ணும் கெட்டு போகல காரை , பஸ்ஸ்டாண்ட் ல நிறுத்துறேன். இறங்கி 
எங்கையாவது போய் நிம்மதியா வாழு! இந்த வாழ்க்கை -ல , இனி நீ நரகத்தை தான் 
பாப்ப.. ஏன்டா கல்யாணம் பண்னோம் னு பீல் பண்ணுவ என்றான் தனது சிங்க 
குரலில் (ஆமா இது தாலிகட்டுன ஆன்டி-ஹீரோ சொல்ல வேண்டிய டயலாக் ஆச்சே),
என்னால இங்க வாழ முடியும் எனும் விதமாக ஒரு நீண்ட பெரு மூச்சுடன் …
வேணாம் சார் .. நான் பாத்துக்குறேன் .. நன்றி சார் .. என்றாள் தனது தேன் குரலில்…
உங்கள மாறி பொண்ணுங்க எல்லாம் ஏன்தான் இப்டி இருக்கீங்களோ! என்று ஒரு 
பெருமூச்சுடன் உன் பேரென்ன என வினவினான்,
தேன்மலர்…
தேன்…மலர் … பொருத்தமான பெயர் தான் என மனதிற்குள் சொல்லிக்கொண்டே 
காரை இயக்கினான் .
இவன் தேவாதித்யன்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top