அசுரன் 2

தேவாதித்யன் – அருண்தேவ் – விக்ரம்  

சக்ரவர்த்தியும் ராஜத்தேவன்னும் பால்ய கால நண்பர்கள் .. சக்ரவர்த்தியை தங்கள் 
குடும்பத்தில் ஒருத்தராகவே கருதினர் ராஜத்தேவன் குடும்பத்தினர் . 

சக்ரவர்த்தியின் தொழிலில்  இறக்கம் காணும் போதெல்லாம் பண உதவியுடன் 
தொழிலில் முன்னேற்றம் காணவும் உறுதுணையாய் இருந்தனர்.
ராஜத்தேவன் , தேவகி  என்ற பெண்ணை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு 
மணந்தார். 

சக்ரவர்த்தியை ருத்ராதேவி காதலித்து திருமணம் செய்து கொண்டார் . 
பணக்கார குடும்பத்தின் ஒரே மகள் என்பதால் அவரால் சக்ரவர்த்தியை எளிதில் 
அடையமுடிந்தது. 

ராஜத்தேவன் – தேவகியின் காதலின் அடையாளமாய் அடுத்த வருடமே மகன் 
பிறந்தான். சூரியனை போல அவனும் வாழ்க்கையில் பிரகாசிக்க வேண்டும் என 
குழந்தைக்கு தேவாதித்யன் என்று பெயர் சூட்டினர். 

தேவகி , தனது கணவனின் பெயர் கலப்படம் இல்லாமல் தனித்துவமாக 
அழைப்பதற்காக  குழந்தையை “ஆதி” என்றழைக்க பின்னாளில் அதுவே அவனது 
பெயராகி போனது. 

ருத்ராதேவியின் ஆதிக்கம் நிறைந்த குடும்பத்தில் சக்ரவர்த்தியின் நிதானத்தினாலும், 
பொறுமையினாலும் அவர்களது குடும்ப வாழ்கை யும் நிறைவாகவே சென்றது. அதன் 
பலனாய் அருண்தேவ் ஜனித்தான். 

தேவாதித்யன்னும் , அருண்தேவ்ம் ஒன்றாகவே தான் வளர்ந்தனர். 

ஒன்றாக வளர்ந்தாலும் குணம் ஒன்று போல் இல்லை. தேவாதித்யனனிடம் இருக்கும் 
நிதானம், நுண்அறிவு, மனித நேயம் அருணிடம் இருப்பதில்லை. 

ருத்ராதேவி யின் அறிவுரையின் படி வளர்ந்ததாலோ என்னவோ அருணிடம் ஆணவம், 
திமிர், தான் என்கிற அகந்தை அதிகம். மனிதர்கள் அனைவரையும் பணத்தை 
வைத்தே எடை போட்டான்.  

காலத்தின் இடையில் ருத்ராதேவிக்கு அகல்யாவும் பிறந்தாள். 

கூடவே வளர்ந்ததால் ஆதி , அகல்யாவுக்கு மற்றொரு அண்ணன் ஆகி போனான். 
தங்கை என்றால் மிக பிரியம் அவனுக்கு.  

அனைவரது வாழ்க்கையும் நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது. 

நாட்கள் அழகாக சென்றதால் இறைவனுக்கு பிடிக்க வில்லை போலும் ஒரு கொடிய 
விபத்தில் ராஜத்தேவன் குடும்பத்தினர் இறந்தனர். பள்ளியில் தேர்வு நாள் 
என்பதால், தேவாதித்யன் அவர்களுடன் பயணிக்க வில்லை. 

தேவாதித்யன், தனிமையில் நின்றான். சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க முன் 
வந்த சொந்தங்கள், அவனை பாதுகாக்க முன் வர வில்லை. 

தேவாதித்யனும் அவர்களுடன் செல்லவோ , அவர்களை தன்னுடன் தங்க சொல்லவோ 
முன் வரவில்லை. தன் பெற்றோர் இருக்கும் போது தேடி வந்து, பாசமழை பொழிந்த 
சொந்தங்களின் துரோக முகத்தை தெரிந்து கொண்டான். 

ஏற்கனவே அமைதியானவன், இப்போது அழுத்தம் ஆகி போனான். 

இதழ்களில் எப்போதும் இருக்கும் புன்னகை முற்றிலும் மறைந்து போனது. 

அவனின் இந்த நிலையை பார்த்த சக்ரவர்த்தி அவனை தனியே விட மனமில்லாமல், 
தனது வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார். 

இதில் ருத்ராதேவி க்கு  விருப்பமில்லை என்றாலும், வெறுப்பும்இல்லை. ஏன் என்றால் 
இப்போது அவனின் சொத்தும் அவர்களின் கீழ் வந்தது. 

தேவாதித்யன் மற்றும் அருண்தேவ் நட்பும் வளர்ந்தது.  

ஆதி , ஆதி என்று பின்னால் சுற்றி திரிந்தான் அருண் , பள்ளியில் இவர்களுடன் 
விக்ரமும் சேர்ந்து கொண்டான். 

விக்ரமிடம் அதிரடி காட்டும் அகல்யாவை “அடாவடி அகல்யா” என்றே அழைப்பான். 
அவளிடம் வம்பு செய்து அழுக வைத்து , இரண்டு அண்ணன்களிடமும் நன்றாக 
வாங்கி கட்டி கொள்வான்.  

படிப்பில் முதல் மாணவன் ஆன ஆதி இருவருக்கும் ஆசானாகி போவான். 
அலட்சியத்துடன் வலம் வரும் அருணை முயற்சியெடுத்து அனைத்து பாடங்களிலும் 
தேறவைத்து விடுவான். 

மூவரின் பள்ளி வாழ்க்கையும் இனிமையாகவே சென்றது. 

நாளைடைவில் சக்ரவர்த்தி தேவாதித்யன் குணத்தோடு அருண்தேவை ஒப்பிட்டு 
கண்டிக்க ஆரம்பித்தார். இந்த நிலை நீடிக்கவே அருணின் மனதில் ஆதியின் மேல் 
மெல்லிய இனம் புரியா வெறுப்பு உண்டானது. அவனை விட தனக்கே அனைத்தும் 
சிறந்ததாக அமைய வேண்டும் என விரும்பினான். 

மூவரும் ஒரே கல்லுரியில் சேர்ந்தனர். படித்தனர் என்பதை விட சுற்றினர். அவர்கள் 
வீட்டில் பல வகையான கார்கள் இருந்தாலும், ஆளுக்கொரு இரு சக்கர வாகனத்தில் 
சுற்றி திரிந்தனர். 

மூவரும் ஆண் அழகன்கள் தான். 

ஆனால் சிங்க குரல், படிப்பில் முதல்வன், பெண்களை கண்டால் குழைந்து 
போகாத கம்பீரம், இது எல்லாம் சேர்ந்து ஆதியை, பெண்கள் மத்தியில் பேரழகனாய் 
காட்டியது. அவனை கடந்து போகும் பெண்கள் அவனை ஒருகணம் பார்த்துவிட்டே 
கடப்பர். 

இதற்காகவே அருண் தன்னை மேலும் மெருகேற்றி கொண்டான். தன் தோற்றத்திலும் 
வசீகரத்தை கூட்டினான். 

கல்லுரியின் ஆண் அழகன் என்றால், அது அருண்தேவ் என்றானது. அவனிடம் 
காதலை சொன்னவர்களை விரல் விட்டு என்ன முடியாது. கோபியர் கொஞ்சும் 
கண்ணன் ஆகி போனான். 

ஆதியிடம் காதலை சொல்ல பெண்களுக்கு துணிவு வரவில்லை, அதில் முரண் 
பட்டவர்கள் காதலை சொல்லி, ” படிக்கிற வயசுல உனக்கு இது தேவையா! ” என 
தலையில் கொட்டு வாங்கியவர்கள் அதிகம். இவனை எல்லாம் சைட் வேணா 
அடிக்கலாம் கூட சேர்ந்து வாழ முடியாது என்று.. ச்சீ ..ச்சீ… இந்த பழம் புளிக்கும் என்று 
சலிப்புடன் (நீண்ட பெருமூச்சுடனும்) கடந்து விட்ட பெண்கள் பலர். 

விக்ரமின் கலகல பேச்சிற்கு பெண் தோழிகள் அதிகம். சில நேரங்களில் ஆதி மற்றும் 
அருணிற்கு தூது போக சொல்லி கோரிக்கையும் வரும். 

இந்த பொண்ணுகளுக்கு என்ன மாறி நல்லவனை எல்லாம் புடிக்காது போல டா 
மச்சான். கோவக்காரனுங்க, கன்னிகழிஞ்சவனுங்க, சிரிக்கத்தெரியாதவனுங்க, 
இவனுங்களைத்தான் புடிக்குது. இந்த உலகத்துல நல்லவனா இருக்கிறதே தப்பு டா 
என்று நண்பர்களிடம் அலுத்து கொண்டு அவர்களிடம் இருந்து சில பல அடிகளையும் 
பரிசாக வாங்கி கொள்வான். 

ஏன்டா உன்ன சுத்தி தான் பொண்ணுங்க கூட்டமே இருக்கும். அவளுக கிட்டயே இத 
கேக்க வேண்டியது தான.. 

கேட்டேனே! உன்கூட சேர்ந்து ஊர் சுற்றலாம், அரட்டை அடிக்கலாம்.. பத்து நாள் 
உன்கூடவே தங்கலாம் …. பட்..நீ அந்த விஷயத்துக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டேன்னு 
சொல்லிட்டாளுக டா…. 

(இதை கேட்டு கொண்டே தண்ணீர் அருந்தி கொண்டிருந்த ஆதி அதை சரட்டென்று 
துப்பிவிட்டான்) 

நீ சொல்லுடா மச்சான் , நா எதுக்கு டா சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஆதியிடம் 
கேக்க, 

அவன் தன்னுடைய நோட் ஐ  எடுத்து கொண்டு , அவன் கிட்ட கேளு, அவன் தான் அதுல 
எக்ஸ்பர்ட்..  என்று சொல்லி விட்டு ஆதி வகுப்பிற்கு கிளம்பினான். 

மச்சான் ! நீ சொல்லு டா என்று அருணிடம் வினவ.. 

அருண் , விக்ரமை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒரு பொண்ணு உனக்கு 
நைட் போன் பண்ணி எங்க ஏரியால நல்ல மழை , ரொம்ப  குளிருது தூக்கம் 
வரலன்னு சொன்னா , நீ என்ன சொல்லுவ,  

பேன்-அ ஆப் பண்ணிட்டு கம்பளி பொத்தி படு குளிராதுனு சொல்லுவேன் டா.. சரி 
தானடா மச்சான். 

அவளுக, கரெக்ட் அ  தான் சொல்லிருக்காளுக.. நீ அதுக்கு மட்டும் இல்ல டா, 
எதுக்குமே சரி பட்டு வரமாட்ட.. 

என்ன இவனும் இப்டி சொல்லிட்டு போறான்…. என்று குழம்பி போனான். 

நண்பர்கள் வளர்ந்தனர், அவரவர் குடும்பத்தின் தொழிலை நன் முறையில் எடுத்து 
நடத்தினர். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய் இருந்தனர். ஆதி அவன் ஆசைப்படி 
வெளிநாட்டில் சென்று படிப்பு மேற்கொண்டான், தொழில் ஆயுத்தமானான். 

இந்நிலையில் அடிக்கடி அருணின் வீட்டிற்கு வரும் விக்ரமின் மேல் அகல்யாவுக்கு 
காதல் மலர்ந்து. அவனை யாருக்கும் தெரியாமல் சைட் அடிப்பதை வழக்கமாக 
கொண்டிருந்தாள் அகல்யா. இது ஒரு நாள் விக்ரமின் கண்ணில் பட .. அவளது 
பார்வையின் மாற்றம் புரிய , அவளிடம் நேரடியாக கேட்டு விட முடிவு செய்தான். 
அவனுக்கு இவளால், தங்களது நட்பிற்குள் ஏதாவது பிரச்சனை வந்து விட கூடாது என்ற 
எண்ணம். அதனால் உடனே பேசி முடித்து விட நினைத்தான். 

அவளை ஒரு காபி ஷாப்பிற்கு வர சொல்லிருந்தான். 

காபி ஷாப்பில் விக்ரம் காத்து கொண்டிருக்க, சாவகாசமாக வந்து, அவன் எதிரில் 
அமர்ந்தாள் அகல்யா. 

லுக் , அகல்யா நா ஸ்ட்ரெயிட் அ மேட்டர் க்கு வரேன்.. 

என்ன சொல்ல போற என்பது போல் பார்த்தாள். 

இப்போயெல்லாம் உன்னோட பார்வையே சரி இல்லாத மாறி இருக்கு.  

ஓஹோ..  எப்படி இருக்கு…. 
பேசும்போதே கடிச்சி திங்கிறமாரி பாக்குற..
அப்டியெல்லாம் இருக்காதே….
இல்ல , அப்டி தான் இருக்கு..
இல்ல , பேசும் போதே இழுத்து வச்சு , கிஸ் அடிக்கணும் தான் இருப்பேன்.. உனக்கு 
தின்கிற மாறியா தோணுது..
இந்த பதிலை கேட்டவுடன் ஐயோ ! என்று தன் இரு கன்னத்தையும் தன் இரு கைகளால் 
மறைத்து கொண்டான். 
அதை பார்த்து அகல்யா, இதழுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டே ” கன்னத்துல 
இல்ல ” என்றாலே பாக்கலாம்… 
சிறிது யோசனைக்கு பின் ஐயோ! என்று தன் இதழை தன் கைகளால் மறைத்து 
கொண்டான். எ.. என்ன.. நீ … இப்பிடியெல்லாம் பேசுற, எனக்கு நீ ஒரு தங்கை மாறி , 
என்று கூறினான்.
அதை கேட்டு ஷாக் ஆகாமல், அவனை பார்த்து, “த்து… ” என்று சைகை செய்தாள்.
இல்ல….நிஜமாத்தான் என்றான், தலையை குனிந்து கொண்டே…
ஓஹோ … அப்போ நா ஏஜ்-அட்டன் பண்ணி ஒன் மன்த்(one month) உன் கண்ணுல 
காட்டாம , ஒன் மன்த் கழிச்சு, எனக்கு பங்சன் வைக்கும் போது வெறிச்சு, வெறிச்சு 
பாத்துகிட்டு இருந்தயே! அப்ப தங்கச்சியா நினைச்சு தான் பாத்த…. அப்டிதான… 
என்றாள் விக்ரமின் கண்களை பார்த்து கொண்டே.
அந்த நாளை நினைக்கும் போது விக்ரமின் மனதிற்குள் “மைனா.. மைனா.. 
நெஞ்சுக்குள்ள வம்பு பண்ற ” என்று பின் பாட்டு ஓடியது. ஆமா அது எப்படி உனக்கு 
தெரியும் என்றான் அப்பாவியாய்.
(இந்த பாவனையை பார்த்து, அகல்யாவிற்கு , அவன் கன்னத்தை கிள்ளி கொஞ்ச 
தோன்றியது) தெரியும்… நானும் உன்ன தான் பார்த்தேன்.
இல்ல , அது அறியா வயசுல தெரியாம பாத்தது, இப்போ அப்டி ஒரு எண்ணம் இல்ல.
எப்டி எண்ணம்? தப்பா ஏதும் நினைச்சியா என்ன ?
ஐயயோ! இல்ல, அகல்யா என்ன கொளப்பாத, இது நம்ம குடும்பத்துக்கு சரி பட்டு 
வராது.. இத இப்டியே விற்று.
விக்கி, நீ எதுக்காக இப்டி சொல்றன்னு எனக்கு தெரில. எங்க அண்ணன்கள் கிட்ட , என் 
குடும்பத்துகிட்ட சம்மதம் வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ உன் 
குடும்பத்துல சம்மதம் வாங்குறத பத்தி மட்டும் யோசி என்றாள்.
(அவங்க கிட்ட சம்மதம் வாங்க என்ன இருக்கு, சொன்னா கல்யாணம் பண்ணி வைக்க 
போறாங்க, சொல்லப்போனா கல்யாணத்துக்கு வரதே பெரிசு , என்று மனதிற்குள் 
நினைத்து கொண்டான்)
அப்புறம் நானா பாத்து உன்ன கல்யாணம் பண்ணி, நீ கன்னிகழிஞ்சாதான் உண்டு. 
இல்ல கடைசி வரைக்கும் நீ எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு தெரிஞ்சுக்காமலே 
உயிரை விற்றுவ. பரவாயில்லையா? என்றாள்.
அவளை அதிர்ந்து பாத்தவன், ஆமா…இது எப்படி உனக்கு தெரியும் என்றான். 
தெரியும் டா.. உன்ன பத்தி ஆல் டீடைல் ஐ னோ!  என்றாள் ஒற்றை கண் அடித்து.  ஓகே , 
வீட்ல தேடுவாங்க “கெட்  ரெடி பார் அவர் வெட்டிங் ” என்று விக்ரமின் கன்னத்தை 
ரெண்டு தட்டு தட்டி விட்டு சென்றாள்.
அடுத்து வந்த நாட்களில் , தங்களது காதலை ருத்ராதேவியிடம் சொல்ல மகளை பிரிய 
மனம் இல்லாதவர் , “விக்ரம நம்ம வீட்டோட இருக்க சொல்லு ” என்று மட்டும் கூறி 
விட்டு திருமணத்திற்கு சம்மதித்தார். (வாரத்தில் 5 நாட்கள் அருண் வீட்டில் 
தங்கியவன் இப்போது 7 நாட்கள் தங்க போறான் அவ்ளோதான் ) வீட்டில் 
அனைவருக்கும் விக்ரம் மாப்பிள்ளையாக வருவது பெரும் மகிழ்ச்சியே….
அடுத்த மூன்று மாதத்தில் , இரு வீட்டினர் சம்மதத்துடன் விக்ரம் – அகல்யா திருமணம் 
வெகு விமர்சையாக நடந்தேறியது.

———————————–
பிளாஷ்பேக் முடிந்தது, அடுத்த எபியில் நிகழ்காலம் வந்து விடும்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top